வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசௌகரிப்படுத்த இடமளிக்கப்படாது : ருவான் விஜேவர்தன!!

வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசெகளரியப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எமது இராணுவத்தினரை விமர்சிக்கின்றனர். அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் இராணுவத்தினரின் சேவையை பாராட்ட வேண்டிய அளவிற்கு அவர்கள் பொறுப்புடன் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கத்துடன் ஐந்து பேர் சுற்றி நின்று, விளக்கேற்றி இராணுவத்தினரை விமர்சிக்கின்றமை தொடர்பில் நாம் கவலையடைகின்றோம்.

ஆனால், முப்படையினர் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தின் காரணமாகத்தான் அவரால் அவ்வாறு செயற்பட முடிகின்றது என அவருக்கு நினைவுகூர வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பெறவே அவர் இப்படியான நாடகத்தை நடத்துகிறார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பெற்ற பிள்ளையை கையில் ஏந்தி கதறி அழுத தாய் குரங்கு!!

மத்தியபிரதேசத்தில் அவினாஷ் என்ற புகைப்படக்கலைஞர் ஒரு தாயின் பாசப்போராட்டத்தை புகைப்படம் எடுத்துள்ளார்.

ஜபல்பூரில் உள்ள குரங்குகளை அவினாஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு உள்ள ஒரு தாய்குரங்கு அவினாஷின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தாய் குரங்கு ஒன்று தனது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருக்கிறது, அப்போது குட்டி குரங்கு சுயநினைவை இழந்து விடுகிறது.

இதனை தாங்கிகொள்ள முடியாத தாய் குரங்கு கதறி அழுகிறது, இந்த காட்சியை புகைப்படம் எடுத்த அவர் சில நிமிடங்கள் வரை புல்லரிப்பில் பூரித்துபோய் நின்றுள்ளார்.

இந்த புகைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டாலும், தற்போது தான் இது வைரலாகியுள்ளது.

கணவன் படுகொலை : கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்!!

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேற்குவங்கத்தை சேர்ந்தவர் விவேக் பிரசாத், இவர் மனைவி ஜெயந்தி, தொழிலதிபரான விவேக் கடந்த ஒரு வருடமாக புதுச்சேரியில் தங்கியிருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 1ஆம் திகதி தனது கணவரை காணவில்லை என ஜெயந்தி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், விவேக் பணிபுரியும் குடிநீர் சுத்தரிப்பு நிலையத்தில் அவர் சடலமாக புதைக்கப்பட்டுள்ளதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

மேலும், விவேக்கின் உதவியாளர் பாபு தலைமறைவானதை உறுதி செய்த பொலிசார் அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது, விவேக்கின் மனைவி ஜெயந்திக்கும், பாபுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதையறிந்த விவேக் கண்டித்துள்ளார், இதையடுத்து விவேக்கை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த பாபுவும், ஜெயந்தியும் அதன்படி அவரை கொலை செய்துள்ளனர்.

பின்னர் விவேக்கின் சடலத்தை குடிநீர் நிலையத்தில் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு!!

 
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று (14.05.2017) மாலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், விந்தன் கனகரத்தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜனா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததின்போது உயிரிழந்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததின்போது உயிரிழந்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

வவுனியாவில் 11வது நாளாக இடம்பெறும் சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம்!!

 
வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் வடமாகாண சுகாதாரத் தொண்டர்களின் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.

இவர்களின் போராட்டம் இன்று (14.05.2017) 11ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி போன்ற பகுதிகளிலுள்ள சுகாதாரத் தொண்டர்கள் ஒன்றிணைந்து வவுனியா போராட்டக்களத்துடன் இணைந்து நேற்று முதல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 20 சுகாதாரத் தொண்டர்களும் வவுனியாவில் தங்கியிருந்து போராட்டகளத்தில் தமது ​
நியமனத்திற்காக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் போராட்ட களத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியதுடன் சுகாதாரத் ​
தொண்டர்களின் போராட்டம் ​
நியாயமானது என்று தெரிவித்து நியமனம் வழங்குவதற்கு வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

நியமனம் கிடைக்கும் வரையில் தமது போராட்டத்தினை ​
மேற்கொள்ளுவதாகவும் யாழ்ப்பாணத்தில் தம்மால் மேற்கொண்ட போராட்டத்திற்கு ஆதரவு வழங்க எவரும் முன்வரவில்லை எனவே வவுனியாவிலுள்ள போராட்ட களத்தில் இணைந்துகொண்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்து போராட்டகளத்திலுள்ள சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புளியங்குளத்தில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா!!

 
வவுனியா புளியங்குளம் புரட்சி விளையாட்டு மைதானத்தில் இன்று (14.05.2017) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாபெரும் கலாசார விளையாட்டு விழா நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்காக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன. விளையாட்டுப்போட்டிகளை பிரதம,சிறப்பு விருந்தினர்கள் ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வடக்கு கலாசார உத்தியோகத்தர் செ.விஜிதா, புளியங்குளம் இந்துக்கல்லூரி அதிபர் சபரமேஸ்வரன், புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானகே

கௌரவ விருந்தினர்களாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பா.சிந்துஜன், வவுனியா மாவட்ட சம்மேளனத் தலைவர் காண்டீபன், முன்னாள் வவுனியா மாவட்ட சம்மேளனத் தலைவர் தே.அமிர்தராஜ் , வவுனியா வடக்கு விளையாட்டு உத்தியோகத்தர் வி.பிரிட்டோ, வவுனியா வடக்கு இளைஞர் விளையாட்டு உத்தியோகத்தர் இப்ராஸ், புளியங்குளம் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் பெ.நாகேந்திரா, வவுனியா தெற்கு ஒய்வுநிலை கிராம சேவையார் நா.யோகராசா மற்றும் கிராம, மாதர் சங்க அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் ஆலய நிர்வாகங்கள், வர்த்தகசங்கம், கமக்கார அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்ட களத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்!!

 
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (14.05.2017) 80வது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பொருட்படுத்தாது தற்காலிக தகரக்கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி ஆகியோர் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது தீர்வு கிடைக்கும் வரை இச் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தை பாவனைக்கு விடவேண்டும் : மக்கள் கோரிக்கை!!

பெரும் நிதிச் செல­வில் வவு­னி­யா­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் பாழ­டை­வ­தற்கு முன்­னர் மாற்று ஏற்­பா­டு­களை மேற்கொண்டு அதை மக்­கள் பயன்­பாட்­டுக்கு விட வேண்­டும் என்று மாவட்ட மக்­கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறையான திட்­ட­மி­ட­லின்மை கார­ண­மா­க­வும், ஒத்­து­ழைப்பு இன்மையாலும் 195 மில்­லி­யன் நிதிச் செல­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யம் கால்­ந­டை­க­ளி­ன­து கூடா­ர­மா­க விளங்குகின்­றது. மாவட்­டத்­தின் அபி­வி­ருத்­திக்கு உகந்த வகையில் பயன்­ப­டுத்த ஆவன செய்ய வேண்­டும்.

மக்­க­ளின் வரிப்பணத்­தில் அமைக்­கப்­பட்ட இந்­தத் திட்­டம் வீணா­காத வகை­யில் பொருத்­த­மான முடிவை மேற்­கொள்ள வேண்­டும். பேருந்து நிலை­ய­மா­கவோ அல்­லது பொருத்­த­மான செயல்­பாட்டையோ மேற்­கொண்டு கட்­ட­டம் பாதிப்படையாதவாறு பாதுகாக்க முன்­வர வேண்­டும் என்று அவர்­கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட கரப்பாந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி!!

 
வவுனியா இளைஞர் கழகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான நான்கு அணிகள் கொண்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

சிறி சுமன விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இன்று (14.05.2017) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கரப்பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.

இப் போட்டியில் சிறி சுமன விளையாட்டு கழகத்தினை 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கூமாங்குளம் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

சிறி சுமன விளையாட்டு கழகம் 20 புள்ளிகளையும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் 24 புள்ளிகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கூமாங்குளம் கிராமத்திற்கு மட்டுமன்றி வவுனியா மாவடத்திற்கே பெருமையினை தேடித்தந்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதி உயிரிழப்பு!!

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியோருவருக்கு நேற்றுமுன்தினம் (12.05.2017) ஏற்ப்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலுள்ள சிறையில் விளக்கமறியிலில் வைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சி.சாமுவேல் என்ற 66 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்த சிறைக்கைதியே சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று(13.05.2017) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கோபுரத்தின் மீது விழுந்த மின்னல்! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அமைக்கபட்டு வரும் இராஜகோபுரத்தின் மீது  நேற்று (12.05.2017) வெள்ளிகிழமை பிற்பகல் 4.30மணியளவில்   இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தபோது கோபுரத்தின் உச்சியில் இடிமின்னல் தாக்கியது . இதனால் உச்சியில் அமைக்கபட்டிருந்த பொம்மை ஒன்றுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.

கிராம மக்களை இடி மின்னல்  தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கே  கோவில் கோபுரங்களை அமைத்து அதன்மீது  இடிதாங்கும் சக்திபடைத்த கலசங்கள் வைக்கபடுவது வழமை  எனினும் இது புதிதாக அமைக்கபட்டு வரும் கோபுரம் ஆகையால்  மேற்படி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டிருக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பலமான கடவுச்சீட்டு : முன்னிலையில் ஜேர்மன் – இலங்கைக்கு பின்னடைவு!!

2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்துள்ளது. 91 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.

ஜேர்மன் மற்றும் சிங்கப்பூர் அந்த பட்டியலில் உலகின் மிக பலமான கடவுச்சீட்டு கொண்ட நாடுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நாடுகளின் வெளிநாட்டு கடவுசீட்டுகளை பயன்படுத்தி, விசா இன்றி 159 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டில் விசா இன்றி 37 நாடுகளுக்கு மாத்திரமே பயணிக்க முடியும்.

குறித்த சுட்டெண்ணில் சுவீடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த கடவுசீட்டை பயன்படுத்தி 158 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.

இந்த சுட்டெண்ணில் டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நோர்வே, ஐக்கிய ராஜ்ஜியம், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி விசா இன்றி 157 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுட்டெண்ணிற்கமைய எத்தியோப்பியா, நைஜீரியா, மியான்மர் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இலங்கையை விடவும் முன் இடத்தில் காணப்படுகின்றது.

குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் 84வது இடத்தை பிடித்துள்ள எத்தியோப்பியா கடவுச்சீட்டில் விசா இன்றி 38 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அந்த சுட்டெண்ணில் 80வது இடத்தை பிடித்து நைஜீரியா கடவுச்சீட்டில் விசா இன்றி 43 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

82 இடத்தை பிடித்துள்ள மியன்மார் கடவுச்சீட்டில் விசா இன்றி 41 பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த சுட்டெணில் 53வது இடத்தை பிடித்துள்ள மாலைத்தீவு கடவுச்சீட்டில் விசா இன்றி 53 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த சுட்டெண்ணில் சுவீடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த கடவுச்சீட்டை பயன்படுத்தி 158 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.

கேக் துண்டால் உயிரிழந்த சிறுவன்!!

கேக் துண்டு ஒன்று அடைத்து, 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மாத்தறை – தெனியாய பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன், கேக் துண்டொன்றை உட்கொண்ட பின்னர், தொண்டையில் கேக் அடைத்து தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

உலக மக்களை வியக்க வைத்த இலங்கையர் : அவுஸ்திரேலியாவில் செய்த சாதனை!!

 
இலங்கையில் வாழ்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவில் பிரபலமடைந்துள்ளதுடன் அனைவராலும் கவரப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

சிக்காகோவில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் சமயல் நிபுணரான ரேய் சில்வாவே இவ்வாறு பிரபலமடைந்துள்ளார்.

நிகரில்லா அழகு மற்றும் இயல்பான தன்மை காரணமாவே குறித்த நபர் பிரபலமடைந்துள்ளார்.

சில்வா தனது சமையல் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடாமல், வேறொரு செயலிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

அழகான இளமை தோற்றம் கொண்ட இவர் சமையல் நிபுணருக்கு மேலதிகமாக வைத்தியராகவும் செயற்படுகின்றார். தற்போது அவருடைய வயது 42.

கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் இருந்து வெளியேற்றபடும் போது அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், 42 வயதுடையவர் என்ற உண்மையும் தெரியவந்துள்ளது.

அவருடைய வயது 42 என தெரியவந்தவுடன் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்ததுடன் டுவிட்டர் தளத்தில் அவரது வயது 24 அல்லது 15 என்றே எண்ணினோம் என தெரிவித்துள்ளனர்.

ரேய் சில்வா அவுஸ்திரேலியா செல்வதற்கு முன்னர் சிக்காகோ மற்றும் இலங்கையில் வாழ்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சமையலில் ஆர்வம் கொண்டவர் மருத்துவ கல்லூரி ஒன்றில் இணைந்து மருத்துவ கற்கைநெறிகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் சமையல் கல்வியை தொடர்ந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கழிப்பறைகளை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு!!

இந்­தி­யாவின் சத்­தீஸ்கர் மாநி­லத்தில் பெண்­ணொ­ருவர் தனது வீட்டில் கட்­டப்­பட்ட கழிப்­ப­றை­களை காண­வில்லை அவற்றை கண்­டு­பி­டித்து தர வேண்டும் என பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

சத்­தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்­டத்தில் அமர்பூர் என்ற கிராமம் உள்­ளது. இந்த கிரா­மத்தை சேர்ந்த 70 வயது வயோ­திப பெண் பெலா பாய் பாட்டீல். இவ­ரது மகள் சந்தா (40). இரு­வரும் வறு­மையில் வாழ்க்­கையை நடத்­து­ப­வர்கள்.

‘சுவச் பாரத் அபியான்’ திட்­டத்தின் கீழ் தங்கள் வீட்டில் கழிப்­பறை கட்­டித்­தர கோரி, 2015 –-16ஆம் ஆண்டில் பஞ்­சா­யத்து அலு­வ­ல­கத்தில் விண்­ணப்பம் செய்­தனர்.

ஆனால், இது­வரை கழிப்­ப­றைகள் கட்­டப்­ப­ட­வில்லை. இது குறித்து பஞ்­சா­யத்தில் கேட்ட போது, ‘கழிப்­ப­றைகள் கட்­டப்­பட்டு விட்­டன. அதற்­கான செலவு தொகையும் அளிக்­கப்­பட்டு விட்­டது’ என தெரி­வித்­துள்­ளனர்.

தகவல் அறியும் சட்­டத்தின் கீழ் தகவல் கேட்ட போது, கழிப்­ப­றைகள் கட்­டப்­பட்டு விட்­ட­தாக ஆவ­ணங்கள் மூலம் தெரிய வந்­துள்­ளது. இதை­ய­டுத்து இரண்டு பெண்­களும் கழிப்­ப­றை­களை காண­வில்லை என்றும் கண்­டு­பி­டித்து தர வேண்டும் என்றும் பிலாஸ்பூர் மாவட்ட பொலிஸில் முறைப்பாடு செய்து ள்ளனர்.

பிறந்து பதினெட்டே மாதங்களில் 31 கிலோ : அரிய நோயால் பாதிக்கப்பட்ட யாகிஸ்!!

துருக்கியில், பிறந்து பதினெட்டே மாதங்களான குழந்தை அதிகூடிய எடையால் அவதிப்பட்டு வருகிறது. மேலும், மாதந்தோறும் ஏறக்குறைய 2 கிலோ எடை வீதம் அதிகரித்துவருவதால், அதன் பெற்றோர் கடும் நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

யாகிஸ் பெக்த்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழந்தை பிறக்கும்போதே அரிய வகை மரபணுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிறக்கும்போது சாதாரண எடையுடனேயே பிறந்த இந்தக் குழந்தை, நாளாக நாளாக வெகு வேகமாக அதீத உடல் எடையைப் பெற்றுள்ளது.

தற்போது இந்தக் குழந்தையின் அளவுக்கு ஏற்ற தொட்டிலையோ, நடைவண்டியையோ, டயப்பர் எனப்படும் கீழாடையையோ வாங்க முடியாமல் இருக்கிறது.

குறிப்பிட்ட இந்த நோயினால் இந்தக் குழந்தை தொடர்ச்சியாக உணவு உண்டு வருகிறது. இதனாலேயே அதீத உடல் எடையை எதிர்நோக்குகிறது.

இந்த நிலையில், இந்தக் குழந்தையை குணப்படுத்த தொடர்ந்தும் உதவ முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்ததால், அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர் இந்தக் குழந்தையின் பெற்றோர்.