வவுனியாவில் வாகன விபத்து!!

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (10.05.2017) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளானார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மீது அதே பாதையில் பயணித்த சொகுசு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி சிறு காயங்களுக்குள்ளானார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் சூரியன் மறைவு,சந்திரோதயம் : அபூர்வக் காட்சியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள்!!

சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும்.

இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியிலும் இன்று (புதன்கிழமை) ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டும் தான் காண முடியும்.

ஆபிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது.

கன்னியாகுமரியில் இன்று மாலை 6.32 மணிக்கு மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் சூரியன் மறையும்.
அதே நேரத்தில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் சந்திரன் நெருப்புப்பந்து போல மேலே எழும்பும்.

இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்வையிடுவார்கள்.

இந்த நிலையில் இதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இன்றும் கன்னியாகுமரியில் கூடவுள்ளனர்.

வயிற்று வலியென சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு ஆண் குழந்தை!!

வயிறு வலியென வைத்தியசாலைக்கு சென்ற மாணவி குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தெஹிஅத்தகண்டிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபர் தெஹிஅத்தகண்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவுக்காரரான விஜயலத் விதுரகே சோமவீர என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி குழந்தையை பெற்றெடுக்கும் வரையில் தாம் இதனை அறிந்திருக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தில் மூத்த பிள்ளையான சிறுமிக்கு மற்றுமொரு சகோதரி உள்ளார். அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தொழிலுக்கு சென்ற பின்னர் வீட்டிற்கு வரும் சந்தேகநபர், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஒகஸ்ட் மாதம் வரை தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையை வயிற்றில் சுமந்தவாறு பாடசாலை சென்ற சிறுமி கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தர பரீட்சை எழுதியுள்ளதுடன் நான்கு பாடங்களில் சித்தியடைந்துள்ளார்.

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை பொதுவான முறையில் நடத்தி செல்கின்ற அவர் எவ்வித நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்ளவில்லை.

தற்போது தாய் மற்றும் குழந்தை நலமாக உள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெஹிஅத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவியின் சடலம் குளியலறையிலிருந்து மீட்பு!!

 
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் குளியலறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக இறுதி ஆண்டில் கல்வி கற்றுவரும் மாணவியின் சடலம், நேற்றைய தினம் பிலியந்தல மதபத்த பகுதியில் அமைந்துள்ள அவரின், வீட்டில் உள்ள குளியலறையிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் கணவரே சடலத்தை நேற்றைய தினம் மீட்டுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ ஓடும் மோட்டார் சைக்கிள் : பிரேசில் முதியவர் அசத்தல்!!

பெட்ரோலுக்கு பதிலாக ஒரு லிற்றர் தண்ணீரில் 500 கிலோ மீற்றர் ஓடும் பைக்கை பிரேசில் முதியவர் உருவாக்கி அசத்தியுள்ளார்.

பிரேசிலில் அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ரிக்கார்டோ அஸேவெதோ என்பவரே இந்த பைக்கை உருவாக்கியுள்ளார்.

அவர் உருவாக்கியுள்ள பைக்கிற்கு டி பவர் ஹச்20 மோட்டார்பைக் என பெயரிட்டுள்ளார். இந்த பைக்கில் ஒரு லிற்றர் தண்ணீரை எரிபொருளாக செலுத்தினால் 500 கி.மீ வரை பயணிக்கலாம்.

மின்னாற் பகுப்பு முறையை அடிப்படையாக் கொண்ட இவரது கண்டுபிடிப்பு, கார் பேட்டரியின் உதவியுடன் தண்ணீரிலுள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளை பிரித்தெடுத்து, இருசக்கர வாகனத்தை இயக்க உதவுகிறது. மேலும் இதனால் பெட்ரோலைப் போல சுற்றுச்சூழலும் மாசுபடுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

இவரின் கண்டுபிடிப்பு ஆட்டோமொபைல் துறையையே முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிக விலை கொடுத்து பெட்ரோல் உபயோகிக்கத் தேவையில்லை என்பதால் இது மக்களுக்கும், புகையை வெளியேற்றாததால் சுற்றுச்சூழலுக்கும் சேர்த்தே நன்மையைத் தருகிறது.

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய அரசியல்வாதி : குவியும் பாராட்டுகள்!!

அவுஸ்திரேலிய செனட்டர் ஒருவர் பாராளுமன்ற அவைக்குள் குழந்தைக்கு பாலூட்டியதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளதாக பலதரப்பு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான Larissa Waters பாராளுமன்ற அவையில் பசுமைக்கட்சி மேற்கொண்ட வாக்கெடுப்பு ஒன்றின்போது பிறந்து ஒருவாரமேயான தமது குழந்தைக்கு பாலூட்டியுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து பெருமை பொங்க தமது பேஸ்புக் பக்கத்தில் கருத்திட்ட செனட்டர் Larissa Waters, பாராளுமன்ற அவையில் பாலூட்டப்படும் முதல் குழந்தை தமது மகள் Alia Joy என்பது பெருமைப்படும் விடயம் என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி இதுபோன்ற குடும்பங்களுக்கு ஆதரவான பணியிடங்கள் மற்றும் தாங்கிக்கொள்ளும் வகையில் அமைந்த குழந்தைகள் காப்பகங்கள் என நாட்டில் அதிகமாக அமைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகப்பேறுக்கான 10 வாரகால விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்ற அவைக்கு திரும்பிய செனட்டர் Larissa Waters, தாய்மார்களுக்கான இந்த சிறப்பு சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

பாராளுமன்ற அவையில் அலுவல் நேரத்தில் பாலூட்டுவதை அனுமதிப்பது குறித்து கடந்த ஆண்டு நடைபெற்ற விவாதத்தின் போது ஆதரவளித்து குறித்த சட்ட வரைவில் திருத்தம் கொண்டு வரவும் பாடுபட்ட Larissa Waters, இதே சட்டத்தில் ஆண்களுக்கும் சிறப்பு சலுகை பெற்றுத்தர முனைப்பு காட்டினார்.

அவுஸ்திரேலிய பாராளுமன்ற அவையில் அலுவல் நேரத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான சட்டம் அமுலில் இருந்தவையே. ஆனால் Larissa Waters உள்ளிட்ட செனட்டர்கள் ஒன்றிணைந்து அதற்கான கால அவகாசத்தை நீட்டித்தனர். மட்டுமின்றி 8 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் முக்கிய அம்சங்களின் மீது தற்போது திருத்தம் கொண்டுவந்துள்ளனர்.

இதே பசுமைக்கட்சியின் செனட்டராக இருந்த Sarah Hanson-Young என்பவரின் 2 வயது குழந்தையை 8 ஆண்டுகளுக்கு முன்னர் அவையில் இருந்து வெளியேற்றிய சம்பவத்தை அடுத்து பலதரப்பட்ட விவாதங்களுக்கு பின்னர் தற்போது சட்ட திருத்தம் கொண்டு வந்ததுடன் சட்டமாகவும் நிறைவேற்றியுள்ளனர்.

7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றேன் : சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

கன்னியாகுமாரில் 17 வயது சிறுவன் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி வாரியூர் பகுதியை சேர்ந்த வீரலெட்சுமி (63) என்பவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி மர்மான முறையில் மாயமானார்.

இதுகுறித்து பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் நடத்திய விசாரணையில் கடந்த 6 ஆம் திகதி, கண்ணுபொத்தை மலைப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த வீரலெட்சுமியின் உடலை பொலிசார் கைப்பற்றினர்.

இதில், 7 பேர் கொண்ட கும்பல் வீரலெட்சுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த குற்றவாளிகளில் ஒருவரான 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

வீரலெட்சுமி மட்டுமின்றி இதற்கு முன் 6 பெண்களை இதே பாணியில் இந்த காட்டு பகுதிக்கு கொண்டு வந்து பலாத்காரம் செய்ததாக பகீர் தகவல்களை சிறுவன் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து தனிப்படை பொலிசார் மலைப்பகுதியில் முகாமிட்டு பெண்களின் உடல்களை தேடி வருகின்றனர்.

இதில், இளம்பெண்களின் ஆடைகள், சில எலும்பு துண்டுகளும் சிக்கின. தடயவியல் சோதனைக்கு பிறகே இது மனித எலும்புதானா என்பது தெரியவரும். கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்கள் வன விலங்குகளுக்கு இரையாகி இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது என்று பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள.

தற்போது இந்த வழக்கில் கைதாகி உள்ள 17 வயது சிறுவனை, நாங்குநேரி சிறார் காப்பகத்தில் பொலிசார் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் மேலும் 3 பேர் பொலிஸ் பிடியில் இருப்பதாகவும், இன்னும் 3 பேரை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் சாதித்த இலங்கை மாணவன்!!

உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த மாணவன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

கொழும்பு நாலந்தா கல்லூரியில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ரகிந்து ரன்திவி விக்ரமரத்ன இந்த சாதனையை படைத்துள்ளார்.

40 நாடுகள் பங்குபற்றிய உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் முதற்தடவையாக இலங்கைக்கு ரகிந்து ரன்திவி விக்ரமரத்ன வெள்ளிப் பதக்கத்தை ஈட்டித்தந்துள்ளார்.

இவர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இதன்போது மாணவனின் திறமையைப் பாராட்டி பரிசொன்றை வழங்கிய ஜனாதிபதி, அவரது எதிர்காலத்துக்காக தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

உலக இளம் விஞ்ஞானிகள் மாநாடு ஏப்ரல் 16 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி வரை ஜெர்மன் ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது.

ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற முக்கிய நாடுகளிலிருந்து 300 பேர் பங்குபற்றியிருந்தார்கள்.

மாணவர் ரவிந்து ரன்திவி சுற்றாடல் விஞ்ஞான பிரிவில் தயாரித்த சுற்றாடல் நிலமைகளால் மரங்களிலுள்ள மகரந்தங்களில் படியும் மாசடைந்த வளியினால் ஆஸ்த்மா நோய் மேலும் தீவிரமடைவது தொடர்பில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இந்த வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மேலும் ஒரு இளம் பெண்ணை காணவில்லை!!

கொழும்பில் காணாமல் போன இளம் பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த மாணிக்கராஜா மொனிகா என்ற 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது குறித்து கிரேன்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் 011 – 2421414 என்ற இலக்கத்துக்கு அழைத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது பொலிஸ் நிலைய பொது மக்கள் தொடர்புகள் பிரிவின் 011 – 2436161 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னால், கொழும்பில் காணாமல் போன மகேஷா சந்தமாலி குணதிலக என்ற இளம் பெண் ஒருவரை தேடி பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்!!

33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

அயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984 ஆம் ஆண்டு காணாமற்போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென தோன்றிய அதிசயம் அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அயர்லாந்தில் உள்ள அசில் தீவிலுள்ள சிறிய கிராமமே டூவாக், இங்கு 300 மீட்டர் நீளத்தில் அழகான கடற்கரை இருந்தது.

இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்று கொண்டிருந்தனர், ஹோட்டல், சுற்றுலா விடுதிகள், கஃபே போன்றவைகளுடன் கடற்கரை அழகாக காட்சியளித்தது.

கடந்த 1984 ஆம் ஆண்டு திடீரென வசந்த கால சூறாவளி புயல் அடித்ததில் கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கடற்கரையில் உள்ள டன் கணக்கான மணல் காணாமல் போயுள்ளது.

கடற்கரையும் இருந்த இடம்தெரியாமால் போயுள்ளது, பெரிய பெரிய பாறைகள் மட்டும் இருந்துள்ளன, ஆனால் ஆங்காங்கே குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடந்துள்ளன இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையத் தொடங்கியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் கடற்கரை அருகில் இருந்த ஹோட்ல், கஃபே, விடுதிகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்களாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில், கடலில் வழக்கத்திற்கு மாறான அலை எழுந்துள்ள.

இந்த அலையானது, டன் கணக்கில் மணல்களை கரைக்கு கொண்டு வந்து குவிக்கத் தொடங்கியது, இதன் காரணமாக காணாமற்போன கடற்கரை மீண்டும் உருவாகத் தொடங்கியுள்ளது.

இந்த ஆச்சர்யமான சம்பவத்தை கண்டு அங்குள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர், மேலும் இந்த கடற்கரை நீண்ட ஆண்டுகளாக இப்படியே இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி : வீடியோ கொன்ஃபரன்ஸிங் மூலம் நடந்த திருமணம்!!

தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியின் அடையாளமாக, திருமணத்திற்கு வர இயலாமற்போன மாப்பிள்ளைக்கும் மணமகளுக்கும் வீடியோ கான்ஃபரன்ஸிங் முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முஹம்மது ஆபித். இவர் சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.

இவருக்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் திருமண நாளான கடந்த 5 ஆம் திகதி மணமகன் முஹம்மது ஆபித் இந்தியாவிற்கு செல்ல இயலாமற்போனது. இதனால், பெண் வீட்டார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை குறித்த நேரத்தில் நவீனகால வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடத்திவிட மணமகனின் தந்தையான ரேஹான் தீர்மானித்தார்.

இதையடுத்து, மணக்கோலத்தில் முஹம்மது ஆபித் சவுதி அரேபியாவில் தனது நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் காட்சியுடன் அங்குள்ள மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் இந்த திருமணத்திற்கு அவரது சம்மதம் பெறப்பட்ட காட்சியும் ஷாம்லி மாவட்டத்தில் இருக்கும் மணமகள் வீட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது.

அதேவேளை, இன்னொரு கெமரா மூலம் மணமகள் சம்மதம் தெரிவிக்கும் காட்சி ஒளிபரப்பானது. இந்த திருமண விழாவிற்கு வந்திருந்த நண்பர்களும், இந்த ‘ஹைடெக்’ திருமணத்தைக் கண்டு வியந்ததுடன், மணமக்களை மனம் குளிர வாழ்த்தினர்.

ஒரு சாமானியன் பிரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த அதிபரானது எவ்வாறு?

இமானுவல் மக்ரோன் 39 வயதான பிரான்ஸின் இளம் அதிபர். பிரான்ஸ் சார்பாக உலக அரங்கில் இவரது செயற்பாடுகள் கவனம் ஈர்த்துள்ளன. இத்தனைக்கும் இம்மானுவல், பிரான்ஸ் அரசியல் களத்தில் பெரிய, பெரிய தேசியக் கட்சிகளின் வலிமையான பின்புலங்களைக் கொண்டவரல்ல.

பிரான்ஸ் அரசாங்கத்தில் சிவில் அதிகாரியாக தன் பணியைத் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக பல மில்லியன் டொலர்கள் வர்த்தகம் நடக்கும் வங்கியொன்றின் முதலீட்டு வங்கியாளராக மாறி அங்கிருந்து பிரான்ஸின் பொருளாதார அமைச்சராகி இன்று அதிபராகிவிட்டார்.

பிரெஞ்சு அரசியல் களத்தில் நடுநிலைவாதியான மக்ரோனை நான்கு வருடங்களுக்கு முன்பு வரை பிரான்ஸ் மக்களுக்கு யாரென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்றோ பிரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த, உலகின் இளமையான அதிபர்களில் ஒருவராகி இருக்கிறார்.

தேர்தலின் போது எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் கூறியவாறு, மக்ரோனுக்கு எந்த விதமான அரசியல் முன் அனுபவங்களோ, பயிற்சிகளோ கிடையாது. மரபார்ந்த புகழ்மிக்க பிரான்ஸ் தேசிய கட்சிகளின் பின்புலமும் இல்லை. இதற்கு முன்பு இவர் எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவும் பிரான்ஸில் தேர்தல்கள் எதுவொன்றிலும் கலந்து கொண்டதே இல்லை.

இவருக்கென ஓட்டு வங்கியும் கிடையாது. ஆனால் திடீரென பிரான்ஸ் நாட்டின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு, மக்கள் நலனுக்காக பல திட்டங்களை முன்னிறுத்தி, ”என் மார்ச்” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவரின் திட்டங்கள் அனைத்தும் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் அவை மக்களுக்குப் பிடித்தமானவையாக, மக்களது நலன் நாடும் திட்டங்களாக அமைந்ததால் அவருக்கு கிடைத்த ஏகோபித்த மக்கள் ஆதரவில் இன்று அவர் பிரான்ஸின் அதிபராகி இருக்கிறார்.

39 வயதான இம்மானுவல் மக்ரோன் மணந்து கொண்டது தன்னை விட 24 வயது மூத்தவரான பிரிகிட் ட்ரோனியக்ஸை. முன்னாள் ஆசிரியையான பிரிகிட் மக்ரோனைச் சந்திக்கும் போது அவருக்கு வயது 15. திருமண வயது வரும் வரைக்குமான மூன்று ஆண்டுகள் காத்திருந்து மக்ரோனுக்கு 18 வயதானதும் இருவரும் மணம் செய்து கொண்டனராம். தனது மனைவி குறித்துப் பேசும் போது தேர்தல் நேரத்தில் தனது பிரசார உரைகளைத் தயாரித்து உதவியதில் பெரும்பான்மையான பங்கு மனைவிக்கே இருப்பதாக மக்ரோன் குறிப்பிட்டார்.

ஒரு சிவில் சேவையாளராக இருந்து, சடாரென பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தேர்வானது மக்ரோனின் அரசியல் கவர்ச்சிகளில் ஒன்று. திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போலவே ஒரு சாமனியன் அதிபராவதை பிரான்ஸ் மக்களும் விரும்பினர். ஏனெனில், மக்ரோன் தனது பிரசார உத்திகளில் முன் வைத்தது பெரும்பாலும் முரட்டுத்தனமான ஃப்ரெஞ்சு அரசியல் கொள்கைகளுக்கு எதிரான வாதங்களையே. எனவே, தான் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பொருளாதார அமைச்சராக அனுபவம் பெற்று, பெரிதாக ஃப்ரெஞ்சு அரசியலில் அறிமுகமற்றிருந்த போதிலும், மக்ரோன் மக்களின் நம்பிக்கையை வென்று அதிபராகி இருக்கிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தை 7% க்கும் குறைவாகக் குறைப்பது அவரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. முந்தைய பிரான்ஸ் அதிபரான ஃப்ரங்கோயிஸ் ஹோலண்ட் தோல்வி கண்ட விவகாரம் இது. ஐரோப்பியச் சந்தையில் பிரான்ஸ் இழந்த இடத்தை மீண்டும் உருவாக்கி, பிரான்ஸை மட்டுமே மையப்படுத்தும் ஒற்றைச்சந்தை முறையை உருவாக்குவதே தனது லட்சியமாக மக்ரோன் அறிவித்துள்ளார்.

மக்ரோன் பொருளாதார ரீதியாக தாராளவாதத் தன்மை கொண்டவராக தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டுள்ளார். சார்புடைய அல்லது சார்பற்ற என எந்த மாதிரியாக இருந்தாலும் பொருளாதாரப் பிரச்சினைகளில் தாராளவாதத் தன்மையைப் பின்பற்றினாலும் சமூகப் பிரச்சினைகளில் இடது சார்புடையவராகவும் மதச்சார்பற்ற பிரான்ஸ் தேசத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் அனுமதி அளித்து, சமத்துவம் மற்றும் குடியேற்ற விதிமுறைகளில் முற்போக்குத் தன்மையைக் கடைப்பிடிக்கும் மக்கள் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்புகிறார். அதுவே அவரது வெற்றிக்கான காரணமாகக் கூட இருக்கலாம்.

அதுமட்டுமல்ல, மக்ரோன் 120,000 பொதுத்துறை வேலைகளைக் குறைக்க விரும்புகிறார், பொது செலவீனங்களை 60 பில்லியன் யூரோக்கள் (65 பில்லியன் டொலர்) ஆகவும் குறைக்க விரும்புகிறார், மேலும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறார். அதோடு மட்டுமல்ல; தோல்வியுற்ற மற்றும் வீணான பிரெஞ்சு அரசியல் அமைப்புகளை மாற்றுதல், தொழிலாளர் சட்டங்களை நிதானப்படுத்துதல், சமூக இயக்கத்தை ஊக்குவித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் ஒரு யூரோ அரசாங்கத்தை ஸ்தாபித்தல் ஆகியவையும் மக்ரோனின் அரசியல் வியூகங்களில் அடங்கும்.

ஃப்ரெஞ்சுப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸின் சார்பாக ஒலிக்கும் குரல்களை வலுப்படுத்தவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான வணிக நட்பு நடவடிக்கைகளை மக்ரோன் தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணம் இருப்பதை ஆரோக்கியமானதாக ஃப்ரெஞ்சு மக்கள் கருதுகின்றனர்.

தனது பரந்த வெளியுறவுக் கொள்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும், ரஷ்யா, ஈரான், துருக்கி மற்றும் சவுதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்திக்கொண்டு, சிரியா மற்றும் வேறு இடங்களில் நீடிக்கும் போர் விவகாரங்களை முடிவுக்குக்கொண்டு வரத்தக்க அரசியல் தீர்வைக் கொண்டு செயலாற்றுவதற்கு உறுதியளிப்பதாகக் கூறும் மக்ரோன், உலக நாடுகளிடையே பிரான்ஸ் அதிபராகத் தனது செயற்பாடுகளில் ஒரு இராஜதந்திர தொனியை பின்பற்றுகிறார்.

மக்ரோன் டிசம்பர் 21, 1977 அன்று பிரான்ஸின் வடக்கு நகரமான அமியென்ஸில் ஃபிராங்வா நோஜூஸ் என்ற மருத்துவர் மற்றும் நரம்பியல் பேராசிரியரான ஜீன்-மைக்கேல் மக்ரோன் ஆகியோருக

இத்தாலி செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல் : குடியேறும் அனைவருக்கும் 2000 யூரோ!!

இத்தாலி என்பது நேரடியாக அல்லது சட்டவிரோதமாக அதிகளவானோர் செல்லும் நாடாக உள்ளது. இந்நிலையில் இத்தாலிக்கு செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்தாலியின் Bormida என்ற கிராமத்தில் குடியேறினால் மாதாந்தம் 2000 யூரோ வழங்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் வீட்டு வாடகைக்கு மாதாந்தம் 50 யூரோவும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் கிராமத்திலுள்ள பலர் தொழில் வாய்ப்புகள் மற்றும் வேறு தேவைகளுக்காக பிரதான நகரங்களுக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் Bormida கிராமத்தை விரிவுபடுத்தி மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் நகர மேயர் சிறப்பு தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி அந்தக் கிராமத்தில் குடியேறும் ஒவ்வொருவருக்கும் 2000 யூரோ வழங்க தீர்மானித்துள்ளார்.

தற்போது Bormida கிராமத்தில் 394 பேர் மாத்திரமே வாழ்ந்து வருகின்றனர். கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள மிகவும் அழகான ஒரு இடமாக கருதப்படுகின்றது. Bormida கிராமத்திற்கு அருகில் Genoa என்ற நகரம் உள்ளது.

இலங்கையர் பலர் இத்தாலியில் தொழில் புரிந்து வருகின்றனர். அத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கான தளமாக இத்தாலி நாட்டை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முற்றுமுழுதாக தண்ணீருக்குள் எடுக்கப்படவுள்ள அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்!!

அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் முற்றுமுழுதாக தண்ணீருக்குள் எடுக்கப்படவுள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கெமரூன் அறிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் அவதார். ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 2.8 பில்லியன் டொலர்களை வசூலித்து பொக்ஸ் ஒபிஸில் வரலாற்று சாதனை படைத்தது.

மேலும், டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையையும் அவதார் முறியடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவதார் படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கெமரூன் அறிவித்திருந்தார்.

அதன்படி, அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது.

அவதார் 2 – டிசம்பர் 18 2020, அவதார் 3 – டிசம்பர் 17 2021, அவதார் 4 – டிசம்பர் 20 2024, அவதார் 5 – டிசம்பர் 19 2025 ஆகிய திகதிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் `ஃபியர் தி வாக்கிங் டெட்’ படத்தில் நடித்த பிரபலம் கிளிஃப் கர்ட்டிஸ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கர்ட்டிஸ் டோனாவோரி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம். மேலும், மெட்கயினா இனத்தின் தலைவரும் இவர் தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பது போல காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அதற்காக, ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாக ஜேம்ஸ் கெமரூன் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சித் – ரஜினி கூட்டணியின் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பம்!!

இயக்­குநர் ரஞ்சித் மற்றும் தயா­ரிப்­பாளர் தாணு, ரஜி­னிகாந்த், பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்­பி­டிப்பு எதிர் வரும் 28 ம் திகதி சென்­னையில் ஆரம்பமா­கி­றது.

கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜி­னி­காந்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க ரஞ்சித் ஒப்­பந்­த­மானார். இப்­ப­டத்தை நடிகர் தனுஷ் தயாரிப் பதாக அறி­விக்­கப்­பட்­டது.

இதைத்­தொ­டர்ந்து கோவாவில் தங்­கி­யி­ருந்து படத்தின் கதை தயா­ரிப்பு பணியில் ரஞ்சித் ஈடு­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் சில வாரங்­க­ளுக்கு முன்பு ரஞ்சித் இயக்­கத்தில் ரஜி­னிகாந்த் நடிக்­க­வி­ருக்கும் படத்தின் படப்­பி­டிப்பு மே மாதம் ஆரம்பமாகும் என்று தனுஷ் தெரி­வித்­திருந்தார். அதற்­கான பணிகள் தற்­போது ஆரம்பமாகியள்­ளன.

கதையின் பெரும்­ப­குதி மும்பை தாராவி பகு­தியில் நடப்­பது போல அமைந்­துள்­ளது. இதற்காக தாரா­வியின் செட்டை சென்­னையில் அமைக்கும் பணியில் படக்­கு­ழு­வினர் இறங்­கி­யுள்­ளனர்.

தற்­போது இந்தப் பணிகள் நிறை­வ­டையும் தரு­வாயில் உள்­ளன. இந்­நி­லையில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் சென்னையில் இப்­ப­டத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றுவதற்காக எவரெஸ்ட்டில் ஒளிந்திருந்தவர் கண்டுபிடிப்பு!!

பெருந்தொகைப் பணத்தைக் கட்டணமாக செலுத்த முடியாததால், உரிய அனுமதியைப் பெறாமலேயே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஒருவரை நேபாள அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

ரயான் சீன் டேவி என்பவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர். மலையேறுவதில் இவருக்கு ஆர்வம் இருக்கின்றபோதிலும் அதற்கான பயிற்சிகள் எதையும் இவர் பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில், உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏறிச் சாதனை படைக்க விரும்பினார். இதற்காக நேபாளம் வந்த இவர், மலையேறுவதற்கான கட்டணமான 11 ஆயிரம் டொலர்களைச் செலுத்த முடியாததால் அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மலையேற ஆரம்பித்துவிட்டார்.

சுமார் இருபதாயிரம் அடி உயரம் வரை ஏறிய இவர், அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, மலையின் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு குகையில் தங்கியிருந்தார். எனினும், இவரது நடமாட்டத்தைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அவர் தங்கியிருந்த குகைக்குச் சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும், அவரது கடவுச் சீட்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது ரயானுக்கு பதினேழாயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த பத்து வருடங்களுக்கு எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.