சந்தானம் என்னை கைவிட்டுட்டார் : நடிகை பரபரப்புப் பேட்டி!!

சந்தானம் தன்னை கைவிட்டு விட்டதாகவும் சூரி கை கொடுத்துள்ளதாகவும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

மதுமிதாவா யாரு அது என்று யோசிக்கிறீர்களா? ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜாங்கிரி பூங்கிரி என்று கொஞ்சுவாரே அந்த ஜாங்கிரி தான்.

உதயநிதி ஸ்டாலினின் சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ளார் மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் நடித்தேன். அவருடன் சேர்ந்து நடித்ததாலேயே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.

சந்தானம் தற்போது ஹீரோவாகிவிட்டார். ஹீரோவான பிறகு சந்தானத்துடன் தொடர்பில் இல்லை. அவரின் செல்போன் எண் கூட எனக்கு தெரியாது. ஹீரோவான பிறகு அவர் என்னை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டார் என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.

சந்தானம் கைவிட்டாலும் சூரி எனக்கு கை கொடுத்து உதவி வருகிறார். ஜில்லா, வெள்ளைக்கார துரை ஆகிய படங்களில் சூரியுடன் சேர்ந்து நடித்தேன்.

தற்போது சரவணன் இருக்க பயமேன் படத்திலும் அவருடன் நடித்துள்ளேன் என மதுமிதா கூறியுள்ளார்.

தனக்கு மட்டுமே பெயர் கிடைக்க வேண்டும் என்று நினைக்காதவர் சூரி. அதனால் அவருடன் நடிக்கும்போது என்னால் நன்றாக நடித்து பெயர் வாங்க முடிகிறது என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள்!!

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு அவசர கூட்டம் ஒன்றை நடத்தி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

மத்திய செயற்குழுவினால் இன்று எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விளக்கமளித்த அந்த சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஹேரத், 110 இணை சங்கங்களின் பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக கூறினார்.

குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்காவிட்டால், ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அது தொடர்பான திகதிகளை பின்னர் அறிவிப்பதாகவும் வைத்தியர் நலிந்த ஹேரத் கூறினார்.

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபில் மரணம், சிறார்கள் காயம்!!

பிலியந்தலையில் வங்கி ஒன்றுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபில் மரணமானார். மரணமடைந்தவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு சென்றுள்ளனர்.
பொலிஸ் வாகனத்தை செலுத்தி அலுவலரே சம்பவத்தில் பலியானமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வாகனத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காயம் ஏற்படாத போதும், அருகில் கடையொன்றின் உரிமையாளரின் பிள்ளைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சிறார்கள் தற்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (09.05.2017 செவ்வாய்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை ஏழுமணிளவில் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து எட்டுமணியளவில் எம்பெருமான் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வரரும் திருத்தேரில் ஆரோகணித்தனர்.
தொடர்ந்து எட்டரை மணியளவில் ரதோற்சவம் இடம்பெற்று காலை ஒன்பதரை மணியளவில் ரதம் இருப்பிடத்தை வந்தடைய அர்ச்சனைகள் இடம்பெற்றன.

இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தல் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்தி கடன்களை நிறைவு செய்தனர்.
இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் காலை பதினொன்றரை மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது .

6 மாத குழந்தையும் தாயும் குத்திக் கொலை!!

கொஸ்கொட தெற்கு பொரலுகெடிய பகுதியில் 6 மாத குழந்தையும் தாயும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த தாயின் வயது 38 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் யார் என்பது தொடர்பில் தற்போது வரையில் எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

எனவே,சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் கணவர், மனநலக் குறைபாடு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வெசாக் பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!!

 
வவுனியா போதி தக்ஸினாராம விகாரையில் 25 வெளிச்சக் கூடுகளை காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் A9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து ஒமந்தை வரையிலும் 30க்கும் அதிகமான கூடுகள் வீதி ஓரங்களில் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரின் பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெசாக் அலங்கார வெளிச்சக் கூடுகளை பார்வையிட வரும் பொதுமக்களுடைய பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் நகரில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வேடிக்கை பார்க்கச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : லிப்டில் தலை நசுங்கிய கொடூரம்!!

இந்திய மராட்டிய மாநிலம் பாந்திராவில் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த போது லிப்ட் தலையில் மோதி 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். குன்னத் ஜவேரி என்ற 12 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் வசித்து வந்த கட்டிடத்தில் உள்ள லிப்ட் வழிப்பாதையில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்து இருந்து உள்ளது. அந்த துளை வழியாக நேற்று சிறுமி தனது தலையை நுழைத்து பார்த்துள்ளார். அந்த நேரத்தில் லிப்ட் மேல் மாடியில் இருந்து கீழே வந்துள்ளது. இதை அவர் கவனிக்கவில்லை. இதனால் கண்இமைக்கும் நேரத்தில் லிப்ட் அவரது தலையில் மோதியது.

இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். லிப்டும் அந்தரத்தில் நின்றுள்ளது. நடுவழியில் நின்றதால் லிப்டில் இருந்தவர்களும் அலறியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் லிப்டில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

மேலும் சிறுமியின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகநூல் காதலால் இளம் பெண்ணிடம் பணமோசடி செய்த நபர்!!

முகநூலின் மூலம் காதல் வலை வீசி இளம் பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜை கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போது, 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்சன் டென் என்ற குறித்த நபர் கொழும்பு – மாலபே பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் பதுளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முகநூலின் மூலம் காதல் செய்துள்ளார்.

இந்த பெண்ணிடமிருந்து 4,365,000 ரூபாவை பெற்றுக்கொண்டு அந்தப் பெண்ணுடன் முழுத் தொடர்பையும் துண்டித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நைஜீரியப்பிரஜை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போர் பதற்றத்தில் திடீர் திருப்பம் : சீனா மீது அணு குண்டு வீச அமெரிக்கா முடிவு?

வட கொரியாவுடனான போர் பதற்றத்தை திசை திருப்பி சீனா மீது அமெரிக்கா ஆணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியா சில தினங்களுக்கு முன்னர் தங்களை எதிர்க்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தகர்ப்போம் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அந்நாடு சீனா மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சர்வதேச பிரச்சனை விடயங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் James Petras கூறுகையில், போர் பதற்ற சூழலை டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு எதிராக மாற்ற திட்டமிட்டுள்ளார்.

சீனாவை கட்டுபடுத்த அவர்கள் மீது அணு ஆயுதங்கள் மற்றும் அணு குண்டுகள் வீச அவர் திட்டமிட்டுள்ளார்.

வட கொரியாவை வீழ்த்துவோம் என டிரம்ப் கூறுவது தங்களின் ராணுவ பலத்தை அதிகரித்து கொள்வதற்காக தான் என James கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் தான் சீனாவின் ஜனாதிபதியை டிரம்ப் புகழ்ந்து பேசிய நிலையில், சீனாவுக்கு எதிராக அவர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் 75ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் கடந்த 75 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (09.05.2017) 75ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்!!

 
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 அன்று பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (09.05.2017) ஆறாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடமையாற்றி பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா? , நீண்ட காலமாக சேவை ஆற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வெயில் மழை பாராமல் ஊதியம் இல்லாமல் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்திய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பேருந்து நிலையத்தை அமைக்க கோரிக்கை!!

வவுனியா பேருந்து நிலையத்தினை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நகரசபைக்குச் சொந்தமான இடத்தில் அமைத்துத்தருமாறு கோரி வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனுக்கு வவுனியா வர்த்தக சங்கம் இன்று கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாவணைக்கு ஏற்ற இடங்களைத் தெரிவு செய்து திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை. பல கட்டங்கள் திறந்துவைக்கப்பட்டும் மக்கள் பாவனையற்றுக்கிடக்கின்றது.

எனவே வவுனியா இ.போ.ச பேருந்துகள் தற்போது இருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை மேற்கொள்ள முடியும்.

தனியார் பேருந்து நிலையத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நகரசபைக்குச் சொந்தமான இடத்தில் அமைத்து தருமாறு வடமாகாண போக்குவரத்து அமைச்சரிடம் வவுனியா வர்த்தக சங்கம் கோரியுள்ளதுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!!

வவுனியாவில் நேற்று (08.05) மாலை 7 மணியளவில் இ.போ.ச சாலை நடத்துனர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து பூவரசங்களம் ஊடாக செட்டிகுளம் செல்லும் இ.போ.ச. பேருந்தில் குளுமாட்டுச்சந்தியில் பேருந்தில் ஏறிய 4பேர் கொண்ட குழுவினர் சண்முகபுரம் பகுதியில் இறங்கும்போது நடத்துனரை தகாதவார்த்தைகளினால் பேசியதுடன் நடத்தனர் மீது தாக்குதலும் மேற்கொண்டள்ளனர்.

இதையடுத்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் தாக்குதலுக்குள்ளான நடத்துனர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகமெங்கும் முடங்கிய பேஸ்புக்!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பல நிமிடங்கள் முடங்கியுள்ளது.

தொழில்நுட்ப சிக்கல் காரணமாக சுமார் 40 நிமிடங்கள் வரையில் பேஸ்புக் தளம் முடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஏதோ தவறாகி விட்டது” சரிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் விரைவில் பேஸ்புக் வழமைக்கு திரும்பும் எனவும் அதன் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தீவிரமாக செயற்பட்ட பேஸ்புக் தொழில்நுட்ப குழு, சமூக வலைத்தளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

தற்போது பேஸ்புக் தளம் வழமைபோன்று செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவன உரிமையாளருக்கு எதிராக ஏனைய சமூக வலைத்தளங்களினால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!!

 
வவுனியாவில் ஓமந்தை பிரதான கண்டி வீதியைக் கடந்து நேற்று முன்தினம் இரவு (07.05) இரவு மாணிக்கர்வளவு பகுதிக்குள் யானை ஒன்று புகுந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியுள்ளது.

குறித்த யானை மாணிக்கர்வளவிலுள்ள இரண்டு வீடுகளையும், பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இதேவேளை, காயன்குளம் பகுதிக்கு சென்று அங்கு யாரும் அற்ற வீட்டின் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்திவிட்டு காட்டுப்பகுதியை நோக்கி சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீரில் இருந்து பீர் தயாரித்த நிறுவனம்!!

டென்மார்க்கை சேர்ந்த பீர் நிறுவனம் மனித சிறுநீரிலிருந்து பீர் தயாரித்துள்ளது.

பிஸ்னர் என்ற பீர் நிறுவனம், மனிதர்கள் பீர் அருந்துகையில் அதில் நிலைத்திருக்க புதுவகை யுத்தியை கையாள வேண்டும் என திட்டமிட்டனர்.

பொதுவாக பார்லி சாகுபடியில், மாட்டுச்சாணம் அல்லது உரத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களே பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்ட பார்லியை கலந்து பீர் தயாரித்துள்ளனர்.

இதற்கு பிஸ்னர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பீர் தயாரிப்பதற்காக வடக்கு ஐரோப்பாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெர்ற பிரமாண்டமான இசை திருவிழாவில் இருந்து மனிதர்களின் சிறுநீர் சேகரிக்கப்பட்டது.

50 ஆயிரம் லிட்டர் சிறுநீர் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்ட பார்லியில் இருந்து, அறுபதாயிரம் பீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2015 ஆண்டு நடைபெற்ற ரோசிக்ளே இசைத் திருவிழாவில் கலந்துகொண்ட ஆண்ட்ரெஷ் ஸ்ஜோக்ரென், ”இந்த புது ரக பீரை நான் சுவைத்தேன். ஆனால் அதில் சிறுநீரின் சுவை சிறிது கூட இல்லை” என்று தெரிவித்துள்ளார்.