HALL OF FAME பதவிக்கு முத்தையா முரளிதரன் தெரிவு!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படுகின்ற HALL OF FAME பதவிக்கு இலங்கையில் முதல் தடவையாக முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவி முத்தையா முரளிதரனுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் பிரித்தானியாவில் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் விளையாட்டிற்காக ஆற்றிய சேவைக்காக வழங்கப்படுகின்ற உயரிய பதவியாக HALL OF FAME பதவி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஸ்திரமற்ற தன்மையினால், 2016ம் ஆண்டில் 669 பேர் உயிரிழப்பு!!

2016ஆம் ஆண்டு எத்தியோபியாவில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மையினால் 669 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்க கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எத்தியோபியாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையொன்று, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் எத்தியோபியாவின் ஓரோமியா பகுதியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 462 பேர் பொதுமக்கள் எனவும், 33 பாதுகாப்பு பிரிவினரும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார உரிமை பறிப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே போராட்டங்கள் நடாத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமாரா பிராந்தியத்தில் 110 பொதுமக்களும், 30 பாதுகாப்பு பிரிவினரும் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் அந்த நாட்டில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அமலாபால் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வடசென்னை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. விசாரணை படத்தை ஒஸ்கர் பரிந்துரைக்காக அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்ததாக இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் கூறியிருந்தார்.

ஆனால் இப்படத்தில் நடிப்பதாக கூறி முன்னதாக கால்ஷீட் கொடுத்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அமலாபாலும் கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அமலாபால் விட்ட இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வடசென்னை படத்தில் அமலாபால் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும் 10 ஆயுர்வேத குறிப்புகள்!!

கோடைக் காலத்தில் உடல் உஷ்ணம் ஆகாமல், குளுமையாக வைத்துக் கொள்ள உதவும் ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகள் பற்றி இங்கு காணலாம்.

வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும். இதனால் உடலில் நீர்வறட்சி உண்டாகி, உடல் சோர்வு அதிகரிக்கும். மேலும், இதன் காரணத்தால் உங்கள் செயற்திறன் மற்றும் ஆரோக்கியம் வெகுவாக குறைந்து காணப்படும். இந்த வகை உடல் உஷ்ணத்தில் இருந்து உங்கள் உடலை காப்பாற்றிக் கொள்ள உதவும் சிறந்த பத்து ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் பற்றி இங்கு காணலாம்.

#1 மாதுளை பழசாற்றுடன் கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் உடல் குளுமையாகும்.

#2 நொச்சி இலைகளாய் பனை வெல்லத்துடன் சேர்த்து இரண்டு டம்ளர் நீருடன் நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#3 செவ்வந்திப்பூ கசாயம் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#4 விளக்கெண்ணையுடன் துண்டுதுண்டாக அறுத்த பேயன் வாழைப்பழம் மற்றும் பனகற்கண்டு சேர்த்து, நன்கு ஊறிய பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#5 கள்ளிமுளையான் தண்டுப்பகுதியை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு குளிர்ச்சி அடையும்.

#6 சாதம் வடித்த கஞ்சியுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#7 செம்பருத்தி, சீரகம், நெல்லிவற்றலுடன் நீர் சேர்த்து இரவு முழுதும் ஊற வைத்து, பிறகு அடுத்த நாள் அந்த நீரை குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

#8 வெந்தயத்தை வறுத்து, வறுத்த கோதுமை சேர்த்து பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

#9 தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

#10 ஜாதிக்காய் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

இந்த இளம் பெண்ணை தெரிந்தால் உடனடியாக அறிவியுங்கள்!!

மினுவாங்கொட பிரதேசத்தில் பணமோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை தேடி பொலிஸால் வலை வீசியுள்ளனர்.

குறித்த பெண் பல்வேறு தொலைபேசி விற்பனை நிலையங்களில் தொலைபேசிகளை காசோலைகள் மூலமாக வாங்கி 3,264,740 ரூபா வரை மோசடி செய்துள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பெண் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார் இவரை அடையாளம் தெரிந்தால்அறிவிக்குமாறு மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பெயர் – லக்மாலி பிரியதர்சினி

அடையாள அட்டை இலக்கம் – 915502717 V

பிறந்த திகதி – 1991.02.19

விலாசம் – மல்கடுவாவ, குருணாகல்

இந்த பெண் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 077 – 3890959 அல்லது 077 – 3741661 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் புதையல் தோண்டிய 9 பேருக்கு நேர்ந்த அவலம்!!

வவுனியா, பெரிய உலுக்குளம் புதுமடு குளம் காட்டு பகுதியில் புதையல் தோண்டிய 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெரிய உலுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனுராதபுரம், கொல்லன்னாவ, மதவாச்சி் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களை பெற்றோர்களுடன் வாழும் சூழலை ஏற்படுத்துங்கள் : அமைச்சர் சத்தியலிங்கம்!!

 
சிறுவர்கள் அவர்களின் பெற்றோருடன் வாழுவதற்கான சூழலை ஏற்படுத்துங்கள். அதுவே சிறுவர்களுக்கான சிறந்த சூழலாகும் என வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது..

யுத்தத்திற்கு பின்னர் பல சிறார்கள் தங்களது தாய், தந்தையர்களை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். இது மிகவும் கொடுமையானது. நாங்கள் எவ்வாறான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தாலும் அவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் வாழுவதைபோன்றதொரு சந்தோசம் இருக்காது.

சிறுவர்கள் வாழ்வதற்கான சிறந்த சூழல் அவர்களது வீடுகள்தான் எனினும் சிலபெற்றோர்கள் பிள்ளைகளை சுமைகளாக கருதி சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும். ஆகவே நீங்கள் இயலுமானவரை பிள்ளைகளை அவர்களின் பெற்றோர்களுடன் வாழுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்

இன்று (19.04.2017) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 07 சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது. இவர்களில் வவுனியா மாவட்டத்திற்கு ஒருவரும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 02 பேரும், மன்னார் மாவட்டத்திற்கு 04 பேரும் முதற்கட்டமாக நியமனம் பெற்றுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், உதவிச்செயலாளர் சுஜீவா, சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் விஸ்வறூபன் உட்பட அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் 55வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 55வது நாளாகவும் இன்று (19.04.2017) தொடர்கின்றது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் தங்களுக்க பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று (19.04) காலை 10.30 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இப்போராட்டமானது வடக்கு,கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஸ்குமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிசார் தங்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்றையும் பதிவுசெய்தனர்.

இலங்கை முழுவதும் 3500 ஊழியர்களும் வடமாகாணத்தில் 450 ஊழியர்களும் புகையிரதக் கடவை காப்பாளர்களாக கடந்த நான்கு வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் நாளொன்றுக்கு 250 ரூபா கூலிக்கு கடமையாற்றிவரும் நிலையில் தங்களுக்கு அரசாங்கம் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 10.04.2017 தொடக்கம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள்!!

தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2. பொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப் பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம்.

3. காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். மேலும், அதன்பின்னர் காப்பி, டீ போன்ற தேனீர் குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது.

4. காலை எழுந்த உடன் நமது கைப்பேசியிலோ அல்லது, கணிணியிலோ வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்ற சொடுக்குகளை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது. காலை பொழுதில் நமது சிந்தனைகளை மிக முக்கிய வேலைகளிலே செய்வது பலனாகும். இதில் நாம் 20:20:20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். அவை 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும் எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.

5. காலை உணவை தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது, அதனை சரி செய்யவே காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படும்.

இது நம் முன்னோர்கள் கூறும் முக்கியமான உணவுப் பழமொழி ‘காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும்’ மதியம் இளவரசனைப் போல சாப்பிட வேண்டும்’ ‘இரவில் பிச்சைக்காரரர்களை போல சாப்பிட வேண்டும்’ என்று கூறியுள்ளனர். காலையில் தானிய வகைகள், பாண் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

6. பொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே கடும் அவதிகளுக்குள்ளாகி அலுவலகத்திற்கு செல்வது உண்டு. இவ்வாறு செல்வதால் மனிதர்களின் நேற்மறை ஆற்றலை இழக்கக் கூடும். 10 மணிக்கு முன்னாள் இயற்கையான சூழலை பார்ப்பதும், பறவைகளின் சத்தம், கடலின் ஓசை கேட்பது போன்றவை சிறந்த செயலாகும்.

7. நமது உணவுகளை தயார் செய்வது பற்றி முன்கூட்டியே முடிவெடுத்து அதனை இரவே
தயார் செய்து கொள்வது என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.

8. பொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயல், எனவே அதனை தவிர்ப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதற்கு முன் மற்றவைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்.

அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்க முடிவு : காரணம் என்ன?

அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம். தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம்.

தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது. அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

தொண்டர்கள் விருப்பப்படி குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கட்சியை வழி நடத்த குழு அமைப்போம். தொடர்ந்து 4 ஆண்டு கால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம். ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவருடன் பேச்சு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

பூமியைக் கடந்து செல்லும் இராட்சத விண்கல் : பூமிக்கு ஆபத்தா?

பாரிய ஒலியை ஏற்படுத்தியவாறு இராட்சத விண் கல் ஒன்று நாளைய தினம் பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dwayne “TheRock” Johnson எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் ஆனது பாரிய ஒலி எழுப்பியவாறு செல்லும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இதனை தொலைகாட்டியின்ஊடாக அவதானிக்க முடியும் எனவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இவ்விண்கல்லிற்கு முதலில் உத்தியோகபூர்வமாக 2014 JO25 என்றே பெயரிடப்பட்டிருந்தது.இக் கல்லானது 650 மீற்றர்கள்நீளம் உடையது என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

அத்துடன் இது பூமியிலிருந்து1.8 மில்லியன் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் பயணிக்கவுள்ளது. அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தைப் போன்று 5 மடங்கு தூரத்தில் பயணிக்கவுள்ளது.

விமானம் தரையிறங்க முயன்றபோது மயக்கமான விமானி : அடுத்து நிகழ்ந்த அதிசயம்!!

கனடாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது அதன் விமானி திடீரென மயக்கமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள புளோரிடா நகரில் இருந்து ரொறன்ரோவிற்கு Air Canada Rouge என்ற பயணிகள் விமானம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகரில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

விமானத்தை இயக்கிய விமான சில கிலோ மீற்றர் தொலைவில் திடீரென மயக்கமாகி விழுந்துள்ளார். இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த துணை விமான ஒரு வினாடி செய்வது அறியாமல் திகைத்துப்போய் அமர்ந்துள்ளார்.

பின்னர், தைரியத்தை வரவழைத்துக்கொண்ட துணை விமானி விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஓடுபாதையில் இறக்கியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக விமான பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தகவல் அறிந்து தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் விமானியை தூக்கிச்சென்று சிகிச்சை அளித்ததும் அவருக்கு நினைவு திரும்பியுள்ளது.

எனினும், விமானிக்கு திடீரென என்ன நிகழ்ந்தது என்ற தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

மிகவும் நெருக்கடியான சூழலில் தனியாகவும் திறமையாகவும் செயல்பட்டு பயணிகள் அனைவரின் உயிரையும் காப்பாற்றிய துணை விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வவுனியாவில் யானை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை!!

வவுனியாவில் காட்டு யானையொன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குழப்பம் விளைவிக்க முயற்சித்த யானை ஒன்றை வனவளத்துறை உத்தியோகத்தர் ஒருவர்துப்பாக்கியினால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து வவுனியா வனவளத்துறை காரியாலயத்தில்அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும்வனவளத்துறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – ஓமந்தைப் பகுதியில் உள்ள கொம்புவைத்த குளத்துக்கு அருகில் உள்ள பாரிய குழி ஒன்றில் சில யானைகள் சிக்குண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய குழி ஒன்றில் வீழ்ந்த நான்கு யானைகளை மீட்கும் போது, யானையொன்று உயிரிழந்தது.

அவற்றை மீட்ட போது, ஆண் யானை ஒன்று வனவளத்துறை அதிகாரிகளை தாக்க முற்பட்டது. இதன்போது வனவளத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில் யானைஉயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் தேடி வந்த யானைகளே இவ்வாறு குழியில் வீழ்ந்ததாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

கணனி தகவல்களை அழிக்கும் வைரஸ் : இலங்கை கணனி அவசர பிரிவு எச்சரிக்கை!!

மின்னஞ்சல் மூலம் தற்போது கணனி வைரஸ் ஒன்று இணையத்தளங்களில் வேகமாக பரவி வருவதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

தங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே இந்த வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கை என அந்த பிரிவின் பிரதான தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் Ransomware வைரஸ் என அடையாளப்படுத்தப்படுகின்ற நிலையில் தங்களுக்கு கிடைக்கும் மின்னஞ்சல் இணைப்பினை (attachment) திறக்கும் போதும் தங்கள் கணனி வைரஸ் தாக்குதலுக்குள்ளாக கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓடியோ கோப்புகள், செய்தி வீடியோக்கள் போன்று இணைப்புகளாக கிடைக்கும் இந்த போலி மின்னஞ்சல்கள் சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணனியில் இந்த வைரஸ் தாக்கினால் கணனியில் உள்ள அனைத்து ஆவண தகவல்களின் தரவுகள், புகைப்படங்கள், மின்னஞல்கள் ஆகியவைகள் கண்டுபிடிக்க முடியாத ஒன்று போன்றாகிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் கணனிகளில் உள்ள ஆவண தகவல்களின் தரவுகள், புகைப்படங்கள் மற்றும் ஏனையவைகளை இன்னும் ஒரு இடத்தில் காப்பு பிரதி (backup) எடுத்து வைப்பது பாதுகாப்பான விடயமாக இருக்கும் எனவும், கணனியில் உள்ள வைரஸ் காடினை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருப்பது நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் கணனி வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

www.cert.gov.lk இணையத்தளத்தினை பார்வையிடுவதன் ஊடாக இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் முழு குடும்பத்தையும் இழந்து தவிக்கும் சிறுவன்!!

கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

14 வயதுடைய பசிந்து சன்கல்ப பத்திரண என்ற இந்த மாணவன் குறித்த அனர்த்தத்தில் தனது முழு குடும்பத்தயும் இழந்துள்ளார்.

“புதுவருட உணவு பொதி ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் போது, வீட்டு பக்கத்தில் இருந்து கூச்சலிடும் சத்தம் கேட்டது. மண் மேட்டினால் வீடு முழுமையாக மூடப்பட்டிருந்தனை கண்டேன். எனது வீடு இருந்த இடத்தை நான் மீண்டும் வந்து பார்க்கும் போது மண் மேடு ஒன்றையே காண முடிந்தன.

நண்பர் வீட்டிற்கு உணவு கொண்டு சென்றமையினால் எனது உயிர் தப்பியது, எனினும் எனது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தின் பலரது உயிர் காப்பற்றப்படவில்லை என பசிந்து என்ற மாணவன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட, வேழுவன வித்தியாலயத்தில் தரம் எட்டில் குறித்த மாணவன் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பசிந்துவின் தந்தை, தாய், இரண்டு சகோதரர்கள் மற்றும் குறித்த பகுதியை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்.