காதல் விவகாரம் : 15 ஆவது மாடியில் இருந்து குதித்த இளைஞர்!!

கொழும்பில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தற்கொலை முயற்சியானது காதல் தோல்வி காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞர் கொழும்பு 15 பகுதியை சேர்ந்தவர் என்றும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவின் முன்னாள் தூதுவரின் புதல்வர் கொழும்பில் தற்கொலை

கொழும்பில் உலக வர்த்தக மையத்தின் 15ஆம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நபர் மலேசியாவின் முன்னாள் தூதுவர் இப்ராஹிம் அன்சாரின் புதல்வர் என்று தெரிய வந்துள்ளது.

மலேசியாவுக்கான முன்னாள் தூதுவர் இப்ராஹிம் அன்சாரின் புதல்வர் முஹம்மத் முனீஸ் என்பவர் யூனியன் பிளேஸ் இல் உள்ள தனியார் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் 24 வயதான குறித்த இளைஞர் நேற்று மத்தியானம் கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்ற போதும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், கொலையாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் முன்னாள் தூதுவர் இப்ராஹிம் அன்சார் குடும்பம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இருந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்க்கலாம் கூகுள் புதிய கருவி அறிமுகம்!!

உலகை இருந்த இடத்திலிருந்தே சுற்றிப் பார்க்க கூகுளின் புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்த கருவியினை நேற்று புதிய அறிமுகமாக வெளியிட்டுள்ளது.

உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப்பார்க்க கூகுளின் புதிய அறிமுகம் உங்களுக்கு உதவும். ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்தக் கருவி ஒரு நிமிடத்தில் உங்களை அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கூட்டிச் செல்லும்.

ஆற்றுப் படுகையிலிருந்து, கல் பாலங்கள் வரை சுதந்திரதேவி சிலையிலிருந்து உள்ளூர் கோயில்கள் வரை அத்தனையையும் கூகுள் டூல் கருவியில் பார்க்க முடியும்.

குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு விளையாட்டாகவே இதில் விளையாடலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது

இளம் யுவதி தற்கொலை!!

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தினை சேர்ந்த இளம் யுவதி கிருமிநாசினியை அருந்தி உயிரிழந்துள்ளார்.

சின்னவத்தை கிராமத்தினைச் சேர்ந்த இராமச்சந்திரன் விதுசியா (வயது-17) எனும் இளம் யுவதியே இவ்வாறு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

சின்னவத்தையில் உள்ள வீட்டில் யாரும் இல்லாத வேளையில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் நஞ்சினை குடித்துவிட்டு வீட்டின் அறைக்குள் நித்திரை கொண்டுள்ளார்.

வெளியே சென்ற தாய் வீட்டுக்கு வந்துள்ளார். தனது மகள் வாந்தி எடுப்பதை தாயினால் அவதானிக்கப்பட்டது. அயலவர்களின் உதவியுடன் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளம் யுவதி நஞ்சினை அருந்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையிலே சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதுகளை பயன்படுத்தி சாதிக்கும் கண் தெரியாத நீச்சல் வீராங்கனை!!

 
இந்தியாவைச் சேர்ந்த காஞ்சனமாலா வரும் 2020-ஆம் ஆண்டு டோக்கியாவில் நடக்கும் பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்துவேன் என்று உறுதிபட கூறியுள்ளார்.

இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் காஞ்சனமாலா பாண்டே. இவர் தன்னுடைய 10 வயதில் இருந்தே நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர் சர்வதேச போட்டிகள் உட்பட 110 பதக்கங்களை நீச்சல் போட்டிகளில் பங்கேற்று குவித்துள்ளார்.

இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 6 பதக்கம், ஆசிய போட்டிகளில் 9 பதக்கம் என வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து காஞ்சனமாலா கூறுகையில், மற்ற நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கு அடியில் செல்லும் போது தெளிவாக பார்க்க வேண்டும் என்பதற்காக, கூகுள் கண்ணாடிக்களை பயன்படுத்துவார்கள்.

ஆனால் எனக்கு பிறவியில் இருந்தே கண் பார்வை கிடையாது. தண்ணீருக்குள் சென்ற பின் என்னால் பார்க்க முடியாது என்பதால், அருகில் நீந்தும் சக போட்டியாளர்களின் நீச்சல் சத்தத்தை பின் தொடர்ந்து முந்துவேன். இதே உக்தியை பயன்படுத்தி பாராலிம்பிக், மற்றும் ஆசிய போட்டிகளிலும் சாதிப்பேன் என்று கூறியுள்ளார்.

குடியை விடு படிக்க விடு : மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய 2ம் வகுப்பு சிறுவன்!!

தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி தனியாக நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது படூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடக் கோரி அக்கிராமமக்கள் சில தினங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி மதுக்கடைகளை அடித்தும் நொறுக்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்தக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஆகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவன் குடியை விடு படிக்க விடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டான்.

அச்சிறுவன் கடை அமைந்திருக்கும் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பதாகையை ஏந்தியபடி நடந்தே சென்றான்.

பள்ளிச் சீருடையுடன் சென்ற அந்தச் சிறுவன் அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தான். மதுக்கடை அருகே சென்ற சிறுவனிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடை மூடியிருப்பதை சுட்டிக் காட்டி ஆகாஷை பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னரே சிறுவன் பள்ளிக்குச் சென்றுள்ளான்.

இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!!

 
மயிலம்பாவெளி, விபுலாநந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர்மைலம்பாவெளி, விபுலாநந்தபுரத்தில் “யோகதிராவிடகுமார் யோகேட்குமார்(20) என்ற இளைஞரே தனது வீட்டு வளையில் சீலையொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்று முந்தினம் காலை குறித்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

சம்பவ இடத்துக்கு ஏறாவூர் பொலிஸாருடன் ஏறாவூர் மரண விசாரணை அதிகாரி சகிதம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச தமிழ் கிராமங்களில் இதுவரை 20வது தற்கொலைச் சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

குறிப்பாக இந்த வருட தொடக்கத்திலிருந்து தற்போது வரையான காலப்பகுதியில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர் : உதவி செய்தால் 10 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசு!!

 
இந்தியர் ஒருவரை அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க காவல்துறை அமைப்பான பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அறிவித்துள்ளது.

குறித்த இந்தியரை கைது செய்ய உதவி செய்தால் 10 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று எப்.பி.ஐ அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உணவு விடுதியின் சமையல் அறைக்குள் வைத்து இந்தியர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்திருந்தார்.

26 வயதான பத்ரேஷ் குமார் சேட்டன்பாய் படேல் என்ற இளைஞர் தனது மனைவியான பாலக் பத்ரேஷ்குமார் படேலை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து தலைமறைவாகியுள்ள பத்ரேஷ் குமாரை கடந்த 2 வருடங்களாக அமெரிக்க காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், பத்ரேஷ் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் அவரை கைது செய்ய உதவினால் 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 64 இலட்சம்) பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

50 மணித்தியாலங்களாக தொடர்ந்து முத்தம் : அமெரிக்காவில் கார் வென்ற இலங்கைப் பெண்!!

 
அமெரிக்காவில் 50 மணித்தியாலங்களாக கார் ஒன்றுக்கு முத்தம் கொடுத்து இலங்கை பெண்ணொருவர் பெறுமதியான பரிசொன்றை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஆஸ்டின் பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய டிலினி ஜயசுரிய என்ற இலங்கை பெண்ணொருவர் தொடர்ந்து 50 மணித்தியாலங்களுக்கு முத்தம் கொடுத்து கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளார். Kia Optima LX என்ற காரினை அவர் பரிசாக வென்றுள்ளார்.

தென்கிழக்கு கியாவின் ரவுன்ட் ரொக் பகுதியில் 96.7 KISS FM என்ற வானொலியினால் நடத்தப்பட்ட “Kiss a Kia” என்ற போட்டியில் பங்குபற்றியதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

இலங்கை பூர்வீகத்தை கொண்ட ஜயசூரிய மாநில சுகாதார ஆய்வகம் ஒன்றில் கடமையாற்றுகின்றார். அவரும் அவரது கணவரும் 1998 Toyota Camry என்ற ஒரு காரை பயன்படுத்தி வந்ததாகவும், அந்த கார் பழுதடைந்து விட்டதால் அதனை கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக டிலினி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

கார் ஒன்றினை பரிசாக வென்று தனது கணவருடன் கடற்கரைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இதுவொரு ஆச்சரியமான வெற்றி. பல முறை போட்டியை விட்டு கொடுப்பதற்கு எண்ணினேன. போட்டியின் இடையில் தனது கண்ணில் ஏதோ சென்று விட்டது போன்று உணர்வு ஏற்பட்டது. எனினும் சமாதானப்படுத்திக் கொண்டு போட்டியை தொடர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

போராடி வெற்றி பெற்றமைக்காக 23108 அமெரிக்க டொலர் பெறுமதியான காரை அவர் பரிசாக வென்றுள்ளார்.
இறுதி வரை அவருடன் போராடிய மேலும் 6 பேர் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர்.

இந்த போட்டியில் மொத்தமாக 20 பேர் போட்டியின் இறுதி வரை பங்குப்பற்றியுள்ளனர். எனினும் ஏனைய பலர் தூக்க நிலையை அடைந்தமையினால் போட்டியை விட்டு கொடுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மணித்தியாலமும் 10 நிமிட இடைவேளை வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 பேர் போட்டியில் கலந்து கொண்ட போதிலும் 20 பேர் மாத்திரமே இறுதி வரை போராடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்களை கலங்க வைக்கும் சம்பவம் : எஜமானுக்காக பல நாட்கள் காத்திருக்கும் நாய்!!

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரை 33 உயிர்கள் பலியாகி உள்ளன. மேலும் 50 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் புதைந்த வீட்டின் மீது 14ஆம் திகதி முதல் இன்று வரை அமர்ந்திருக்கும் நாய் ஒன்றின் புகைப்படமே இவ்வாறு வெளியாகியுள்ளது.

தனது எஜமானை காணாமல் இந்த நாய் தவித்து வருகிறது. பல நாட்களாக உணவு, நீரின்றி இந்த நாய் அங்கு அமர்ந்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தனது எஜமான் உயிரோடு மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இந்த நாய் காத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரில் தண்ணீர் திருவிழாவில் 285 பேர் பலி, 1073 பேர் காயம்!!

 
மியன்­மாரில் நடை­பெற்ற தண்ணீர் திரு­வி­ழாவில், 285 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 1,073 பேர் காய­ம­டைந்­துள்ளனர்.

மியன்­மாரில் புத்­தாண்டு திரு­நாளை முன்­னிட்டு, பல்­வேறு கொண்­டாட்­டங்­க­ளுக்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இதற்­காக 5 நாட்கள் விடு­முறை விடப்­பட்­டது. அதில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளை­யாடும் தண்ணீர் திரு­வி­ழாவும் அடங்கும்.

அவ்­வாறு செய்­வ­தன்­மூலம் தங்கள் மீதான பாவங்கள் நீங்கும் எனவும், குறைகள் போக்­கப்­பட்டு புதிய வாழ்வு மலரும் எனவும் நம்­பு­கின்­றனர். இந்த ஆண்டு புத்­தாண்டு கொண்­டாட்­டங்­களில் பொது­மக்கள் மிகுந்த மகிழ்ச்­சி­யுடன் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில், கடந்த வியா­ழக்­கி­ழமை தொடக்கம் ஞாயிற்­றுக்­கி­ழமை வரை 4 நாட்­க­ளாக தண்ணீர் திரு­விழா கொண்­டாட்­டத்­தின்­போது ஏற்­பட்ட விபத்­துக்­களால், 285 பேர் மியன்மாரின் பல பாகங்களிலும் உயி­ரி­ழந்­தனர்.

யாங்கூன் பகு­தியில் 44 பேரும், மண்­டாலே பகு­தியில் 36 பேரும் நய் பி டோ பகுதியில் 10 பேரும் சகைங் பகுதியில் 26 பேரும் தனின்­தர்யி பகு­தியில் 11 பேரும் பகோ பகுதியில் 37 பேரும் மக்வே பகுதியில் 11 பேரும் மொன் மாநிலத்தில் 20 பேரும் ரகின் பகு­தி யில் 17 பேரும் ஷன் மாநிலத்தில் 29 பேரும் அயெ­யா­வட்டி பிராந்தியத்தில் 28 பேரும் இறந்துள்ளனர்.

அதே­நேரம் கொலை, கார் விபத்து, போதைப் பொருள் பயன்­பாடு, ஆயு­தங்கள் பயன்­பாடு, கல­வரம் என 1,200 வழக்­குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்தில், 272 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,086 பேர் படுகாயமடைந்தனர்.

வட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பிய மெசேஜை அன்சென்ட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!!

வட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்கள் என்றால் ஐந்து நிமிடத்திற்குள் அது தவறான மெசேஜ் என்று கண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பிய தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி விடலாம்.

உலகில் பல கோடி வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ள வட்ஸ்அப், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது மெசேஜ் அன்சென்ட் செய்யும் புதிய வசதியை அப்டேட் செய்துள்ளது.

அண்மையில் ஜிப், போட்டோ, வீடியோ போன்றவற்றை ஸ்டேட்டஸில் வைக்கும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியது வட்ஸ் அப். தற்போது மெசேஜ் அனுப்புவதிலும், எழுத்துக்களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.

இந்த புதிய அப்டேடில் ஒருவருக்கு நாம் அனுப்பும் மெசேஜை தேவை இல்லையெனில் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக அன்சென்ட் மற்றும் எடிட் செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மெசேஜ் அனுப்பும் போது அதில் சில குறிப்பிட்ட எழுத்துகளை மேற்கோள் செய்து காட்டுவதற்கு இட்டலிக் மற்றும் போல்ட் ஸ்டைலில் டைப் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போது சோதனையில் உள்ள இந்த பதிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்ட்ரொய்ட் மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற வேர்ஷனை அப்டேட் செய்து இந்த புதிய வசதியை பெறலாம்.

ஆற்றில் கவிழ்ந்த பஸ் : 44 பேர் உயிரிழப்பு!!

இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் சிம்லாவிற்கு அருகே, குறுகிய பாதையில் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்திற்குள்ளான பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணித்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இமாலய மலைப்பகுதிகளில் அபாயகரமான, குறுகிய சாலைகளில் இது போன்ற விபத்துகள் அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தில் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து 8 மம்மிகளும் 1000 சிலைகளும் கண்டெடுப்பு!!

 
எகிப்தின் தெற்கில் அமைந்துள்ள லக்சார் நகரின் அருகே தொல்லியல் துறையினர் முன்னெடுத்து வந்த ஆய்வுகளின் போது, சுமார் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மம்மிகளுடன் மரத்தினாலான வண்ணப் பெட்டிகள், இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள், பாண்டங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அங்கு தொடர்ந்தும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், மேலும் பல மம்மிகள் கண்டெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிப்தில் பிரபலம் வாய்ந்த ”Valley of the Kings” என்ற பகுதி அருகேயுள்ள கல்லறையிலேயே மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் 3 வயதுக் குழந்தையும் 9 வயது சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகம்!!

திருகோணமலை – தோப்பூர், அல்லை நகர் பகுதியில் 3 வயது குழந்தையும் 9 வயது சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமது சகோதரரே பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

32 வயதான சந்தேகநபர் கொழும்பில் பணிபுரிவதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைகளை அண்மித்து 500 மீற்றர் தொலைவிற்குள் சிகரெட் விற்கத் தடை!!

பாடசாலைகளை அண்மித்து 500 மீற்றர் தொலைவிற்குள் சிகரெட் விற்பனை செய்ய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் புதிதாக சிகரெட் கம்பனிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறினார்.

புகைத்தல், மதுபான பாவனையால் நாட்டில் வருடாந்தம் 25,000 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியது.

சீறிப்பறந்த காரினால் சிதறிய உயிர்கள் : வீதியில் நடந்த கோர விபத்து!!(வீடியோ)

வீதியைக் கடப்பதற்காக வீதியின் நடுவில் இடப்பட்டிருந்த தடுப்பின் நடுவில் காத்திருந்த மக்களின் மீது கண்மூடித்தனமாக மோதிய காரினால், மூன்று வயது குழந்தையும் அதன் தாயாரும் இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேயில் உள்ள பானேர் பகுதியில் கடந்த திங்கள் அன்று மதியம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள போக்குவரத்துக்கு நெருக்கடி மிகுந்த வீதியொன்றில் மதியம் 2.45 மணியளவில், ஐந்து பேர் வீதியை கடக்கும் பொருட்டு, ஒரு முனையில் இருந்து வீதியில் மத்தியில் உள்ள தடுப்புக்கு வந்து நின்று கொண்டிருந்தனர். போக்குவரத்து குறைவதற்காக அவர்கள் காத்திருந்த பொழுது, வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.

இதில் மூன்றே வயது நிரம்பிய இஷா எனும் பெண் குழந்தை சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதன் தாயார் பூஜா என்பவரும் நேற்று மரணமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்த சஜித், அவருடைய சகோஹரி நிஷா, நிஷாவின் மகன் சையத் அலி ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வாகனத்தினை செலுத்தி வந்த சுஜாதா ஷெராப் என்னும் பெண் கைது செய்ப்பட்டுள்ளார். வாகன ஒட்டி வந்த பொழுது திடீரென்று கண்ணயந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன.