குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் : 68 குழந்தைகள் பலி : கதறிய குழந்தைகள்!!

 
சிரியாவில் பேருந்துகளை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 68 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் இடையே உள நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இது 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சிரியாவின் அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அப்பகுதியை அவர்களிடம் இருந்து மீட்பதற்காக, அதிபர் படையினர் கடந்த மாதம் அவர்களுடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக அங்கிருந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மக்களும் அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், அலெப்போ நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பேருந்துகள் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்துகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 126-பேர் பலியாகியுள்ளனர். அதில் 68 பேர் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இட்லிப் மாகாணத்தின் அல்-பவுயா மற்றும் கெப்ரயா கிராமங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த தாக்குதலின் விபத்துக்குள்ளான குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, அங்கு சிகிச்சை அளித்த நேரத்தில் வலி தாங்கமுடியாமல் சத்தம் போட்ட சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

தனுஷ் தரப்பு குளறுபடியை வெளியிட்ட எதிர்தரப்பு : கலக்கத்தில் கஸ்தூரி ராஜா!!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறப்படும் வழக்கில் தனுஷ் தரப்பில் சம்ர்ப்பிக்கபட்ட ஆவணங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு பல மாதங்களாக நடந்து வரும் நிலையில் கடந்த 10ஆம் திகதி நடந்த விசாரணையில், கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்துள்ள பிறப்பு சான்றிதழ் போலியானது. தனுஷின் தந்தை கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் பெறப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழ் வேறொருவருக்காக வழங்கப்பட்டது

மேலும், நாயக்கர் ஜாதியான கஸ்தூரி ராஜா தனுஷ் பள்ளி சான்றிதழ்களில் எஸ்.சி என குறிப்பிட்டுள்ளார். இதை விசாரிக்க வேண்டும் என கூறினார்.

இது குறித்து தற்போது பேட்டியளித்த அவர், தனுஷ் கதிரேசன் தம்பதியின் மகன் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம்,

ஜாதியை மாற்றி எழுதியுள்ளார்களா அல்லது வேறு ஒருவரின் சர்டிபிகேட்டை காட்டுகிறார்களா என விசாரிக்க சொல்வோம்
இந்த வழக்கின் வக்காலத்தில் போடப்பட்டிருக்கும் கையெழுத்து தனுஷுடையதுதானா என்ற சந்தேகமும் உள்ளது.

இது அனைத்துக்கும் பின்னர் உண்மை வெளிவரும் என அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.

ஜெயலலிதாவின் உயிரைப் பறித்த அந்த பழச்சாறு : வெளிவராத அப்பல்லோ ரகசியம்!!

 

அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் தேறிவந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட பழச்சாறு தான் அவரது உயிரை பறித்ததாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளன. ஓபிஎஸ் அதிமுக, திமுக உள்ளிட்டவை ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரி முழக்கமிட்டது ஆர்கே நகர் தேர்தல் ரத்தோடு முடிந்துபோய்விட்டது.

ஜெயலலிதாவின் நினைவிடமும் அவர் வசித்த போயஸ் கார்டன் பங்களாவும் ஏதோ ராசியில்லாத இடம்போல கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளைத் தெரிந்தவர்கள் எவரும் இதுதான் நடந்தது என பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.

அதேநேரத்தில் டெல்லியோ, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது சசிகலாவின் அடியாள் போல வலம் வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து இப்போது வருமான வரித்துறை மூலம் வளைத்துக் கொண்டிருக்கிறது. விஜயபாஸ்கரை மீண்டும் வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்தும் உள்ளது.

மேலும் விஜயபாஸ்கர் விவகாரத்தை கிளறியபோது அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது நடந்த கூத்துகளும் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. ஆனால் ஜெயலலிதா கைரேகையைப் பதிவு செய்த மருத்துவர் பாலாஜியோ இதை நிராகரித்துள்ளார்.

தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நல்ல உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்தாராம். அப்போது மருத்துவர்கள் அனுமதியின்றி வழக்கமாக ஜெயலலிதா அருந்தும் பழச்சாறு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பழச்சாறை கொடுக்கக் கூடாது என செவிலியர்கள் கண்டித்தும் அதைக் கண்டுகொள்ளாமலேயே வழக்கமாக சாப்பிடுவதுதானே என கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதுதான் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட காரணமாம்… அந்த பழச்சாறு மட்டும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படாமல் இருந்தால் எந்த சிக்கலும் இருந்திருக்காது என அப்போதே மருத்துவர்கள் கூறியிருந்தனராம். இந்த தகவல் இப்போது பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.

ஏழு நாட்களில் 16 கோடி வருமானம்!!

கடந்த வாரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக சுமார் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக நெடுஞ்சாலை முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 7ம் திகதி முதல் 13ம் திகதி வரை இந்த வாகன போக்குவரத்து இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் 160 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 12 சிறு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இன்றும் நாளையும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு கஹதுடுவ, கொட்டாவ, கொத்தலாவல மற்றும் கடுவெல ஆகிய நுழைவுப் பாதைகளில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படடுள்ளது.

இதேவேளை கடந்த வருடத்தில் இடம்பெற்ற விபத்துக்களுடன் ஒப்பிடுகையில், இந்த 3 தினங்களில் விபத்துக்கள் காரணமாக சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 2.4 சதவீதமான நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளன. இவ்வருடத்தில் தொழில் ரீதியான விபத்துக்கள் 23 பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் இத்தொகை 20 ஆகும்.

விளையாட்டுக்களின் மூலம் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவடைந்துள்ளது. இருப்பினும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சிறிய அளவில் அதிகரித்துள்ளது. முச்சக்கர வண்டி விபத்துக்களின் காரணமாகவே இவை இடம்பெற்றன.

முச்சக்கர வண்டிகளை குறுகிய தூரத்திற்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும். இருப்பினும் பெரும்பாலானோர் இதனை யாழ்ப்பாணம், கதிர்காமம் போன்ற நீண்ட தூர பயணங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.

வீதிகளில் வாகன நெரிசலுக்கு முக்கிய காரணம் முச்சக்கர வண்டிகளாகும். வன்முறைகளால் ஏற்படும் அனர்த்தங்களின் எண்ணிக்கை இம்முறை குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளன. 5 சதவீதமாக இவை குறைவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி ஒரு மாதத்தில் திடீரென உயிரிழந்த இளம் பெண்!!

கண்டியில் திருமணமான இளம் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்ததாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அழகு கலை நிபுணரான லக்மினி என்ற பெண் ஒருவரே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அவர் தனது துறை மூலம் பலரது மனங்களை வென்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி லக்மினியின் திருமணம் நடந்துள்ளது. அவரது கணவர் புகைப்பட கலைஞராக செயற்பட்டு வருகின்றார்.

திருமணம் நடந்து ஒரு மாதத்திற்குள் திடீரென அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி அதிகரித்தமையினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள் சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அவரது நோய் தீவிரமடைந்துள்ளது.

அவரது நுரையீரலில் கிருமி நுழைந்துள்ளமையினாலே அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக லக்மினியின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்டி பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றவர். அவரது துறையில் மிகவும் பிரபலமான ஒருவராக செயற்பட்டுள்ளார் என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பெண் ஊழியர்களின் தலை முடியை கத்தரித்த நைஜீரிய வீதிப் பாதுகாப்புப் படையணியின் உயரதிகாரி!!

 
நைஜீ­ரிய வீதிப் பாது­காப்புப் படை­ய­ணியின் உயர் அதி­காரி ஒருவர், அப்­ப­டையின் பெண் ஊழி­யர்­களின் தலை­ம­யிரை கத்­த­ரித்­தமை தொடர்­பாக ஒழுக்­காற்று விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

நைஜீ­ரி­யாவின் வீதிப் பாது­காப்பு மற்றும் முகா­மைத்­து­வத்­துக்கு வீதிப் பாது­காப்புப் படை­யணி பொறுப்­பாக உள்­ளது.

அப்­ப­டை­ய­ணியின், சிரேஷ்ட தள­ப­தி­களில் ஒரு­வ­ரான அன்ட்ரூ குமா­பயி, அப்­ப­டை­ய­ணியின் பெண் ஊழி­யர்கள் பலரின் தலை­ம­யிரை கத்­த­ரித்தார்.

வீதிப் பாது­காப்புப் படை­ய­ணியின் வீதி­களை மீறும் வகையில் சிகை­ய­லங்­காரம் செய்­தி­ருந்த, பெண் ஊழி­யர்­களைத் தண்­டிக்கும் வித­மாக அன்ட்ரூ குமா­பயி இந்­ந­ட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தாக தெரி­விக்கப்­ப­டு­கி­றது.
நைஜீ­ரி­யாவின் தென் பிராந்­தி­யத்­தி­லுள்ள ரிவர்ஸ் மாநி­லத்தின் வீதிப் பாது­காப்புப் படை­ய­ணியின் தள­ப­தி­யாக அன்ட்ரூ குமா­பயி பதவி வகிக்­கிறார். அம்­மா­நி­லத்தின் போர்ட் ஹார்கோர்ட் நகரில் கடந்த திங்­கட்­கி­ழமை அவர் பெண் ஊழி­யர்­களின் தலை­ம­யிரை கத்­த­ரித்தார்.

இந்­ந­ட­வ­டிக்கை தொடர்­பாக அன்ட்ரூ குமா­ப­யிக்கு எதி­ராக நைஜீ­ரியா அதி­கா­ரிகள் ஒழுங்கு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இச்­சம்­ப­வத்தில் தொடர்­பு­டைய வேறு சில அதி­கா­ரிகள் குறித்து பிராந்­தி­யத்­தி­லி­ருந்து திருப்பி அழைக்­கப்­பட்­டுள்­ளனர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணை­களின் பின்னர் பொருத்­த­மான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என நைஜீ­ரிய வீதிப் பாது­காப்புப் படை­ய­ணியின் பேச்­சாளர் பிசி கஸீம் தெரி­வித்­துள்ளார்.

அன்ட்ரூ குமா­ப­யியின் நட­வ­டிக்­கையை நைஜீ­ரிய ஜனா­தி­பதி முஹம்­மது புஹா­ரியின் உத­வி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான லொராட்டா ஒனாச்சி கண்­டித்­தள்ளார். இது பெண்­களை அவ­ம­திக்கும் நட­வ­டிக்கை என அவர் விமர்­சித்­துள்ளார்.

நைஜீ­ரிய வீதிப் பாது­காப்புப் படையணியின் பெண் ஊழியர்கள் தமது தலைமயிரை உத்தியோகபூர்வ தொப்பிக்குள் அடக்கிக்கொள்ள வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், அவ்வூழியர்கள் நீளமாக தலைமயிர் வளர்ப்பது தடைசெய்யப் படவில்லை.

முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!!

 

உலகில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

டெங்கு வெக்சியா என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, இருபது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் தென்கிழக்கு ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தடுப்பூசி 70 வீதம் வெற்றியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெக்சிக்கோ, பிறேசில், எல்சல்வடோர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயதைக்கடந்த ஒருவருக்கு வருடத்திற்கு மூன்று தடவைகள் இந்த தடுப்பூசியை ஏற்றமுடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வைரஸில் காணப்படும் குழப்ப நிலை காரணமாக டெங்கு காய்ச்சலுக்கான உறுதியான தடுப்பூசியை கண்டுபிடிக்க மருத்துவ துறையினால் இதுவரை முடியவில்லை.

120 நாடுகளில் வருடாந்தம் 390 மில்லியன் மக்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுகின்றனர்.

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கையில் டெங்கு காய்ச்சலால் 53 பேர் உயிரிழந்துள்ளடன், 29,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ள தடுப்பூசியை இலங்கையில் பயன்டுத்துவதற்குள்ள இயலுமை தொடர்பில் ஆராய்ந்து வருவமாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்கிரம நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.

விஜய்யுடன் இணைந்து நடிக்க கண்டிஷன் போடும் சூப்பர் ஸ்டார்!!

விஜய்யுடன் இணைந்து நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சில நிபந்தணைகளை விதித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு – ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்து வரும் படம் `ஸ்பைடர்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23ஆம் திகதி ரிலீசாக உள்ளது.

மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் மகேஷ் பாபுவுடனான சந்திப்பின் போது, விஜய்யுடன் நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் மனம் திறந்துள்ளார். சென்னையில் பிறந்து, வளர்ந்த மகேஷ் பாபு இங்குள்ள பிரபல தனியார் கல்லூரியில் படித்தவர். படித்து முடித்த பிறகு மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து மகேஷ் பாபு நடிக்கவிருந்தார். ஆனால் இப்படத்திற்கான திரைக்கதை அமைக்க முடியாமல் போனது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்படம் தொடங்காமலேயே ரத்து செய்யப்பட்டது.

எனவே, விஜய்யுடன் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்று மகேஷ் பாபுவிடம் கேட்டதற்கு மகேஷ் அளித்த பதிலாவது,

விஜய்யுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு சில நிபந்தணைகள் உண்டு என்று கூறியுள்ளார். அந்த நிபந்தணைகளாவது, எனக்கும், விஜய்க்கும் சமமான கதாபாத்திரம் அமைய வேண்டும். அந்த கதையை திரையுலகின் திறமையான இயக்குநர் இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு இருவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸால் முடியும் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு ஒரு நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் விஜய்யுடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இரத்தக் கண்ணீர் சிந்தும் கன்னி மரியாள் சிலை!!(வீடியோ)

ஆர்ஜென்டீனாவில் லொஸ் நரான்ஜொஸ் நகரில் வீடொன்றிலுள்ள கன்னி மரியாள் சிலையின் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாக தகவல் பரவியதையடுத்து அந்த சிலையை தரிசிக்க பெருமளவான கிறிஸ்தவர்கள் அந்நகருக்கு படையெடுத்த வண்ணமுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி மரியாள் சிலையின் கண்களிலிருந்து இரத்தம் என நம்பப்படும் சிவப்பு நிறமான திரவம் வடிய ஆரம்பித்ததையடுத்து அந்த சிலையிருந்த வீடு ஒரு வணக்க ஸ்தலமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிராந்திய திருச்சபையானது மேற்படி மரியாள் சிலை குருதிக் கண்ணீர் சிந்துவது உண்மையிலேயே அற்புதம் ஒன்று தானா என்பதைக் தொடர்பில் கண்டறிய ஆய்வை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பூநகரி விபத்தில் ஒருவர் பலி, இருவர் காயம்!!

பூநகரி – முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி – பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், இதன்போது காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரதான பாதையிலிருந்து முட்கொம்பன் வீதிக்கு திரும்ப முற்பட்ட வாகனத்தை முந்திச் செல்ல மோட்டார் சைக்கிள் சாரதி முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது என, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஆசிகுளம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி!!

 
வவுனியா ஆசிகுளம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கழகத்தின் தலைவர் பி.ரஞ்சித்குமார் தலைமையில் நேற்று (16.04.2017) வெகுசிறப்பாக விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகரபிதாவும் வட மாகாண சபை உறுப்பினருமான G.T.லிங்கநாதன்(விசு) அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரும்,

கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் சி.வையாபுரிநாதன், பெரிய கோமரசன்குளம் ம.வி அதிபர் சி.வரதராசா,ஆசிகுளம் அ.த.க.பாடசாலை அதிபர் கே.கணேசன், சிதம்பரபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தார்கள்.

இன் நிகழ்வுகள் ஆசிகுளம் கிராம சேவகப்பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுடன் ஆரம்பமானது. தொடர்ந்து பொதுமக்களுக்கான நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதி போட்டியில் சல்லி அணியினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

தொடர்ந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் சாள்ஸ் அணியினர் செவ்வானம் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

இறுதி நிகழ்வாக பரிசளிப்பு நிகழ்வுகள் வெகுசிறப்பாக நடைபெற்றதுடன். அதிதிகளின் உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

வவுனியாவில் கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு : அதிகாரியை தாக்க முயன்ற யானை சுட்டுக்கொலை!!

 
வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நேற்று (16.04.2017) காலை 8.30 மணிமுதல் இரண்டு குட்டியானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்து உயிருக்குப் போராடி வந்தன.

ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவரசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கினார்கள்.

ஆனால் மாலை 4 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் சழூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர்.

இதன் போது மீட்டெ டுக்கப்பட்ட குட்டியானையொன்று அவ்விடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் தாக்க முற்ப்பட்டது. இதன் போது இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்பு பணியினை தொடர முடியாமையினால் தற்போது இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் இம் மீட்புப் பணி இன்று (17.04.2017) காலை தொடர்ந்தது.

இம் மீட்புப் பணியில் மேலும் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு யானை காப்பாற்ற முயன்ற அதிகாரியை தாக்கியதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்த யானை பரிதாபமாக பலியானதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வவுனியாவில் 52வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 52 ஆவது நாளாகவும் இன்று (16.04) தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் புத்தாண்டை மாற்றிஅமைத்த யுரேனஸ் இளைஞர் கழகம்!!

 
யுரேனஸ் இளைஞர் கழக இளைஞர் யுவதிகளினால் நேற்றுமுன்தினம் புத்தாண்டு தினத்தை விசேட புகைத்தல் விழிப்புணர்வு தினமாக மாற்றி உள்ளனர் .

கிராமங்களில் உள்ள மக்களிடம் இது தொடர்பாக கலந்துந்துரையாடி வீடுகள் கடைகள் பொது இடங்கள் போன்றவற்றில் புகைத்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், சிகரட் விற்பனை செய்யாத சில்லறை வியாபாரிகளின் விற்பனை நிலையங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்து செய்தியை தெரிவித்ததுடன் சிநேக பூர்வமான எமது வர்த்தகர்கள் எனும் அடையாளத்தையும் வழங்கிவைத்துள்ளனர்.

இன் நிகழ்வு இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் இடம்பெற்றத்துடன் சிந்துஜன், குணாலன், சரண்ராஜ், ஜில்டாஸ், ரூபன், புவிகரன், திலுக்சிகா, சுலோஜினி ஆகிய கழக உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஒமந்தையில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா!!

 
வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா நேற்று (15.04.2017) காலை 10.30 மணியளவில் ரி.ஆர்.ரி இன் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திருமதி சிவசக்தி அருந்ததி தலமையில் நடைபெற்றது.

சுமார் எட்டு லட்சம் ரூபாவில் கட்டப்பட்ட பெரியம்மா முன்பள்ளியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் வைபவ ரீதியாக திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு கையளித்தார்.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராஜா, இ.இந்திரராஜா, ஒமந்தை கிராம சேவையாளர் அனுஜா, வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் இராஜேஸ்வரன், வேப்பங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கருணாநிதி மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முன்பள்ளி மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தங்கள் வழங்கப்பட்டதுடன் ஞாபகார்த்தமாக முன்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!!

 
மன்னார் அடம்பன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மாந்தை மேற்கு பிரதேசச்செயலக தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான 32 வயதுடைய துரைரெட்னம் ரட்னகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளம் குடும்பஸ்தரான தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் நேற்று இரவு அடம்பன் பகுதியில் இருந்து மன்னாரில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே அடம்பன் பகுதியில் மரம் ஒன்றுடன் மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு அடம்பன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட பதில் நீதவான் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.