உலகளவில் முன்னிலை வகிக்கும் இலங்கை : ஐரோப்பிய நாடுகள் பின்னடைவு!!

உலக அளவில் இலங்கை தீவிர மதப்பற்றுடைய நாடுகள் பட்டியலில் முன்னணி வகிப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது..

99 வீதமான இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய சர்வதேச ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய ஊடகமான Telegraph கடந்த 2008, 2009 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளுக்கமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டின் மக்களும் தங்கள் மத ரீதியான உணர்வுகளை கொண்டுள்ளார்களா என்ற கேள்வியின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆய்விற்கமைய, 5 நாடுகள் இந்த பட்டியலில் ஒரு இடத்தில் காணப்படுகின்றது. இலங்கை, எத்தியோப்பியா, மலாவி, நைஜர் மற்றும் யெமன் ஆகிய நாடுகள் இவ்வாறு ஒரே இடத்தில் உள்ளன. இந்த நாட்டினரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 99 வீதமானவர்களின் பதில் ஆம் என்றே காணப்பட்டுள்ளது.

புருண்டி ட்ஜிபவ்ட்டியால், மவுரித்தேனியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் 98 வீதமானோர் ஆம் என பதிலளித்துள்ளனர்.

ஆய்வின் முடிவிற்கமைய பல தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நம்பிக்கை முக்கியமாக காணப்படுகின்றதெனவும், இத்தாலி நாடு இந்த ஆய்விற்கமைய 74 வீத மத உணர்வை கொண்டுள்ளதாகவும், கிரேக்கம் 71 வீத உணர்வையும் கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் போலத்து அதிகளவான மத நம்பிக்கையை கொண்டுள்ளது. அங்கு 86 வீதமானோர் அங்கு ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

பிரித்தானியாவில் மூன்றில் 10 வீதமானோரே மத ரீதியான உணர்வுகளை கொண்டுள்ளனர்.

இந்த பட்டியலில் ஆக குறைவான மத ரீதியான உணர்வை கொண்ட நாடுகளில் ஜப்பான், எஸ்டோனியா, சுவீடன், நோர்வே மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் காணப்படுகின்றது. அவை 7 வீதமான உணர்வை கொண்ட நாடுகளாகும்.

வெளிநாடொன்றில் 15 வருடங்களாக கொடுமைகளை அனுபவித்த இலங்கைப் பெண்!!

வெளிநாடொன்றில் பல வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்த பெண்ணொருவர் நாடு திரும்பியுள்ளார். தனது பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு தேடி பணிப்பெண்ணாக லெபனான் சென்ற பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஹஸசல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே பல கொடுமைகளை அனுபவித்த பின்னர் நாடு திரும்பியுள்ளார். பல எதிர்பார்ப்புகளுடன் லெபனானுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் 15 வருடங்களின் பின்னர் வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளார்.

15 வருடங்களாக பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக இநோக்கா உதயங்கனி கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி இலங்கை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு அதன் பின்னர் அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

அதற்கமைய இநோக்காவின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் வாக்குறுதியளித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் பணம் சம்பாதிக்கும் கனவுடன் வெளிநாடு சென்றவர் 15 வருடங்களின் பின்னர் வெறும் கையுடன் நாடு திரும்பியிருந்தார்.

இரவில் பஸ்ஸை வழிமறித்து பயணி மீது தாக்குதல்!!

முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த முல்லைத்தீவு டிப்போவுக்குச் சொந்தமான இ.போ.சபை பஸ் மீது பொலனறுவை செவனப்பிட்டிய என்னுமிடத்தில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் அதில் பயணம் செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை 15.04.2017 இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த பஸ் பொலனறுவை, செவனப்பிட்டியை நெருங்கும்போது முச்சக்கரவண்டியொன்று கொழும்பு பொலனறுவை நெடுஞ்சாலைக்குக் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

அவ்விடத்தில் பஸ் நிறுத்தப்பட்டதும் சடுதியாக பஸ்ஸு க்குள் ஏறிய கும்பலொன்று பஸ்ஸிலிருந்த குறித்த பயணியை பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி சரமாரியாகத் தாக்கியதுடன் அவரை வீதியில் தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்கப்பட்டு உணர்வற்ற நிலையில் இரத்தவாறாக வீதியில் வீசப்பட்ட அவரை சக பயணிகள், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் மீட்டு வெலிக்கந்தை வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

பின்னர் அவர், மேலதிக சிகிச்சைக்காக பொலனறுவை வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.

தாக்குதலை மேற்கொண்ட கும்பல் APK 6097 இலக்க முச்சக்கரவண்டியிலேயே தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டு திகிலடைந்த சக பயணிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தாக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பிரயாணிக்கும் இடையில் வவுனியாவில் வைத்து பஸ்ஸுக்குள் ஏற்பட்ட சிறியதொரு வாக்குவாதத்துக்கு பழி தீர்க்கப்பட்டதாக தாக்குதல் நடத்தியவர்கள் உரக்கக் கூச்சலெழுப்பி விட்டுத் தப்பிச் சென்றனர் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பிரயாணிகள், சாரதி, நடத்துனர் ஆகியோர் வெலிக்கந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்ததன் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை பயணி சென்னை விமானநிலையத்தில் திடீர் மரணம்!!

சென்னை விமான நிலையத்தில் இலங்கை செல்ல இருந்த பயணி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த 26 வயதான இலங்கை பயணி இளவன் சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, சென்னை விமான நிலையத்தில் இன்று (16.04.2017) ஒரு நாள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் விமானத்தை கடத்தலாம் என்ற உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பன்னாட்டு முனையத்தில் இன்று ஒரு நாள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூடிப் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்!!

அமெரிக்காவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், திருமணத்துக்கு பிறகு தாங்கள் இரட்டையர்கள் என்னும் தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவர் ஜாக்சன் என்பவரிடம் ஒரு காதல் தம்பதி குழந்தை பேறு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

ஜாக்சன் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளார். அவர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் ஜாக்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அந்த காதல் தம்பதி இரட்டையர்கள் அதாவது ஒன்றாக பிறந்தவர்கள் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து Mississippi Herald என்னும் நாளிதழில் வெளியான செய்தியின் விவரங்கள் பின்வருமாறு..

மிசிசிப்பியில் 1984ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்து விட்டார்கள்.

அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரட்டை குழந்தைகள் விபத்தில் பிழைத்து கொண்டன.

அந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தையை ஒரு குடும்பமும், பெண் குழந்தையை மற்றொரு குடும்பமும் தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.

இருவருக்குமே தாங்கள் யார் என்பது தெரியாது. அப்படி இருக்க ஒரே கல்லூரியில் இருவரும் சேர்ந்து படிக்கும் சூழல் ஏற்படுகிறது.

தாங்கள் இரட்டையர்கள், ஒரே பெற்றோருக்கு பிறந்தவர்கள் என்பது தெரியாமலேயே இருவரும் காதலிக்க தொடங்கி விட்டனர்.

திருமணமும் முடிகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதால் ஜாக்சன் என்னும் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கின்றனர்.

ஜாக்சன் இருவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்த போது இருவரும் அவர்கள் இரட்டையர்கள் என்பது தெரிய வருகிறது.

மருத்துவ முடிவை அந்த ஆண் தனது மனைவியிடம் கூறிய போது, அந்த பெண் அதனை நம்ப மறுத்து விட்டார்.

இந்த வினோதமான சம்பவத்தை ஊடகங்களிடம் மருத்துவர் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

அந்த தம்பதியின் பெயர்கள் மற்றும் புகைப்படத்தை குறிப்பிடாமல் இந்த சம்பவத்தை மட்டும் விவரித்துள்ளார் ஜாக்சன்.

தற்போது அந்த தம்பதியினர், இணைந்து வாழ்வதா பிரிவதா? என்னும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : மக்களுக்கு அதிர்ச்சி!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் நிலையால், மூன்றாவது உலகப் போர் ஒன்று உருவாகும் என்ற நிலையிலேயே இவ்வாறு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1288 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் விரைவில் 1300 அமெரிக்க டொலராக உயர்வடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு சவரன். இது சொக்கத் தங்கம், 24 கரட் தங்கம்.

எதிர்வரும் 28ஆம் திகதி அட்சயதிருதியை வர இருக்கின்றது. இதனால் தங்கம் வாங்குவதற்கு காத்திருக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஆணும், பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் இருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்னர். வடமராச்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட புலோலி திகிரி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையும், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட அல்வாய் பகுதியை சேர்ந்த 19 வயது யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

புலோலியில் உயிரிழந்தவர் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணையை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

அல்வாயில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணையை மேற்கொண்டு பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இருவரது சடலங்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் குறித்த இருவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து உயிருக்குப் போராடும் நான்கு யானைகள்!!

 
வவுனியா ஓமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று(16.04.2017) காலை வயல் வெளியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த இரண்டு யானைகளும் இரண்டு குட்டி யானைகளும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றன.

தற்போது சம்பவ இடத்திற்கு ஓமந்தை பொலிஸார் விரைந்துள்ளதுடன் வன விலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

வவுனியாவில் கோர விபத்து : ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

 
வவுனியா கலுகுன்னாமடுவ பகுதியில் இன்று (16.04.2017) காலை 11 மணியளில் இடம்பெற்ற வாகன விபத்து ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கலுகுன்னாமடுவ பகுதியில் பாதையில் அருகே தரித்து நின்ற கார் வீதியினை விட்டு கிழே இறங்க முற்ப்பட்ட சமயத்தில் புத்தளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் காருடன் மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் இரு வாகனமும் வீதியை விட்டு மதகுக்குள் பாய்ந்ததில் வானில் பயணித்த சாரதி உட்பட அறுவரும் காரின் சாரதியும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மரணஅறிவித்தல் : சின்னக்குட்டி இளந்தளைசிங்கம்!!

சின்னக்குட்டி இளந்தளைசிங்கம்

கோகுலன் ஸ்ரோஸ் (இல 19, பஸ்நிலையம், வவுனியா) உரிமையாளர்

காரைநகர் களப்பூமி பொன்னாவளையை பிறப்பிடமாகவும், இல 36A வைரவபுளியங்குளம் வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கோகுலன் ஸ்ரோஸ் (இல 19 பஸ்நிலையம், வவுனியா) இன் உரிமையாளருமான சின்னக்குட்டி இளந்தளைசிங்கம் அவர்கள் 13.04.2017 அன்று காலமானார்.

அன்னார் சிவபூபதிமலரின் அன்புக்கணவரும், சின்னக்குட்டி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், ஆறுமுகம் அன்னம்மாவின் மருமகனும் கோகுலதாசன், வித்தியா (பொறியிலாளர்), வைகுந்தன் (உரிமையாளர் -கோகுலன் ஸ்ரோஸ்), சுவேந்தன் (பொறியிலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

பொன்னுத்துரை சிவபாலனின் (போதனா வைத்தியசாலை குருநாகல் ) அன்பு மாமனாரும், அமரர்களான செல்லாச்சி, சிவகாமன் தெய்வானை, சுந்தரம்மா, சிவசுப்பிரமணியம், சிவயோகம் மற்றும் திருமதி அன்புபூரணத்தின் அன்புச்சகோதரனும்,

அமர்களான ஆறுமுகம் கந்தையா, காசிப்பிள்ளை கந்தையா, இராசநாயகம் கந்தையா, இராசா கந்தையா, சுப்பிரமணியம் சண்முகலிங்கம் மற்றும் திரு.ஆறுமுகம் சிவபாதசுந்தரலிங்கம், ஆறுமுகம் கனகலிங்கம் (ஆதிவிநாயகர் ஸ்ரோஸ்) ஆண்டி ஜயா அம்பலவி முருகர், திருமதி தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

காலம்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னுத்துரை, திருமதி பொன்னுத்துரை சரஸ்வதியின் சம்பந்தியும், திருமதி சிவதேவி (ஓய்வுநிலை சேவை உத்தியோகத்தர் -வவுனியா வைத்தியசாலை ) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.04 .2017 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று காலை 9.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இல 36A
வைரவபுளியங்குளம்
வவுனியா

தகவல் -குடும்பத்தினர்

வவுனியா வைத்தியசாலையில் ஒருவயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம்!!

 
வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று (15.04.2017) பிற்பகல் 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளுக்கு முதல் குழந்தை கடந்த வருடம் கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் குறித்த பெண் குழந்தைக்கு வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இக் குழந்தைக்கு பிறந்ததிலிருந்து இருதயம் சரியாக இயங்கவில்லை. இதன் காரணமாக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சத்திரசிச்சை மேற்கொள்ளப்பட்டும் குணமடையவில்லை.

தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் 6ம் விடுதியில் குறித்த குழந்தை உயிரிந்துள்ளது.

குறித்த பெண் குழந்தை எதிர்வரும் 22ம் திகதி ஒருவயதினை பூர்த்திசெய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வைரவ புளியங்குளம்  ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி  வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது.

வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு  இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும். மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன்  அங்கபிரதட்சினை  மற்றும் கற்பூரசட்டி  ஏந்தியும்  தங்களது நேர்த்திகடனையும் நிறைவு செய்திருந்தனர்.

 

 

வவுனியா பூந்தோட்டம் வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

 
இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென குடைசாய்ந்ததில் சாரதி படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான ஆர்.றஸ்வான் என்ற 25வயது இளைஞரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

விரைவில் அறிமுகமாகின்றது கூகுள் ஏர்த்தின் புதிய பதிப்பு!!

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் கூகுள் ஏர்த் சேவை பற்றி அறிந்திராதவர்கள் அரிது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பயணங்களின் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக விளங்குகின்றது.

இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டு ஏறத்தாழ 15 வருடங்கள் ஆகின்றன. அதாவது 2001ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் திகதி இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ம் திகதி கூகுள் ஏர்த்தின் புதிய பதிப்பு ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் Virtual Reality தொழில்நுட்பம் இணைக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

அறிமுகமாவதற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் புதிய தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடகொரியா அணுகுண்டு சோதனை : தாக்குதலுக்கு தயாராக அமெரிக்கா!!

வடகொரிய நிறுவனர் கிம் இரண்டாம் ஜங்கின் 105வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வடகொரியா அணுகுண்டு சோதனை அல்லது ஏவுகணை சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வடகொரியா சோதனை நடத்தினால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா படைகள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது.

வடகொரிய நிறுவனர் கிம் இரண்டாம் ஜங்கின் 105வது பிறந்த தினம் இன்று கொண்டாப்படுகிறது. வழக்கமாக அவரது பிறந்தநாளில் பிரம்மாண்ட ராணுவ ஒத்திகை அல்லது ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொள்ளும்.

இந்த முறை அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் இறங்கியதை அமெரிக்காவின் செயற்கைகோள் படங்கள் உறுதி செய்தன.

இதையடுத்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் தலைமையிலான போர் குழுவை அனுப்ப அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த கப்பல் தற்போது தாக்குதலுக்கு தயாராக உள்ளது.

திட்டமிட்டபடி வடகொரியா இன்று அணு ஆயுத சோதனையோ, ஏவுகணை சோதனையோ நடத்தினால், அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது நிச்சயம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் எந்த அணு ஆயுத தாக்குதலுக்கும் பதிலளிக்க வடகொரியா தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய இரு மரணங்கள் : திவ்யாவை சந்தித்த கெளசல்யா!!

ஆசையாக காதலித்து ஜாதி காரணமாக உயிரிழந்த சங்கர் மற்றும் தர்மபுரி இளவரசன் ஆகிய இருவரின் மரணங்களையும் தமிழகம் அவ்வளவு எளிதில் மறக்காது.

கடந்த 2013 ஆம் ஆண்டு தர்மபுரியை சேர்ந்த இளவரசனுக்கும் அவரது மனைவி திவ்யாவுக்கு இடையே ஜாதி பிரச்சனை மற்றும் சட்டரீதியான வாக்குவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் இளவரசன் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் திகதியன்று, உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் எதிரில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், புதுமண ஜோடிகளான கவுசல்யா மற்றும் சங்கரை பட்டப்பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில், சங்கர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார், கவுசல்யாக அறுவை சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.

இந்த இரண்டு சம்பவங்களும் தமிழக மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

தங்கள் மனதுக்கு பிடித்தவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்தால் இந்த இரு பெண்களும் தற்போது ஒருவித போராட்டத்தோடு தங்கள் வாழ்க்கைளை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கவுசல்யா, திவ்யாவை சந்தித்தது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இன்று என்னை அறிமுகமில்லாத ஒரு தோழரை, அவங்க வீட்டுக்குப் போய் சந்திச்சேன். ஆனா? அவங்களப்பத்தி எனக்கு நெறையா அறிமுகமிருக்குது. அந்த தோழரை சந்திச்சுப் பேசற வரைக்கும், அவங்கமேல இருந்த “எண்ணம்” வேற.

எங்களுக்கு முன்னாடி தமிழ்நாடே ஒட்டுமொத்தமா, அந்த கொடூர நிகழ்ச்சியத் திரும்பிப் பாத்தாங்க. ரெண்டு பேரு, மனசுக்குப் புடுச்சவங்கள காதலிச்சலிச்சுக்கிட்டதுக்காக!

எங்க சாதிப் பொண்ணை காதலிச்சுட்டான்னு, தன்னோட அவங்க ஊர்ல இருக்கற, தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கற, 300 ருக்கும் மேற்பட்ட வீடுகளை கொழுத்துனாங்க. கலவரம் நடந்துச்சு. ஏராளமான, பொதுமக்கள் அதுல பாதிக்கப்பட்டாங்க.

இவங்களுக்கான வழக்கு நீதிமன்றத்துல நடந்துட்டு இருக்கும்போதே, இவங்க ரெண்டுபேரையும் பிரிச்சு வச்சுட்டாங்க. அவங்களுடைய, காதலனும் “மர்மமான” முறையில…

ஆனா? இன்னைக்கு அவங்கள சந்திச்சு பேசனதுக்குப் பிறகு, அவங்கமேல ஏற்பட்ட மரியாதைங்கறது வேற… ஆமாம். நான், “திவ்யா இளவரசனை” சந்தித்தேன். அவங்களும், அவங்க அம்மாவும் மட்டுந்தா அந்த வீட்டுல இருக்காங்க.

இப்ப கல்லூரிக்கு போய்ட்டு, வந்துட்டு இருக்காங்க. வீட்டவிட்டு வெளில எங்கேயுமே வருவதில்லை. அக்கம், பக்கம் உள்ளவங்க “எல்லாரும்” அவங்களோட ஒவ்வொரு அசைவையும், “இந்த நிமிசம் வரைக்கும்” கண்ணு காது வச்சு பேசிக்கிட்டுதான் இருக்காங்கங்கறதால!

ஒரு “பொட்டு” வச்சுக்கிட்டு சாதரணமா வெளில வந்தாக்கூட, “இவளுக்கென்ன பழசெல்லாம் மறந்துட்டு நல்லாதா இருக்கா” ன்னு அவங்க வீட்ட சுத்தி உள்ளவங்க சொல்றாங்க.

இப்படி, நிறைய விசயத்துல அவங்க மனசளவுல பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனால, வீட்டுக்கு வெளில நடக்கற செய்தி எதுவும் அந்த தோழருக்கு தெரியறது இல்ல. அவங்ககிட்ட நான் ரொம்ப நேரமெல்லாம் பேசறதுக்கு வாய்ப்பு கிடைக்கல.

அவங்களால மனசுவிட்டும் எங்கிட்ட பேசமுடியல. அவங்க அம்மா பக்கத்துலேயே நின்னுட்டு இருந்ததாலன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். கிடைச்ச நேரத்துல பேசிக்கிட்டு இருக்கும் போது, நான் ஒரு கேள்வி கேட்டேன். “உங்களால எப்படி இயல்பா இருக்க முடியுது?”னு கேட்டேன்.

அதுக்கு அவங்க “நான் ரசித்து ரசித்து காதலித்த ஒருவனின் நினைவையும், நிகழ்வையும் என்னால் எப்படி எளிமையாக மறந்துவிட முடியும்”னு சொன்னாங்க” எனப் பதிவிட்டிருக்கிறார்.