அசிங்கமாக திட்டினார்கள்: கடைசியாக் கூட பார்க்க விடவில்லை : கதறும் நந்தினி!!

பிரபல சின்னத்திரை நடிகை மைனா நந்தினி தனது கணவர் கார்த்திக் தற்கொலை தொடர்பாக வலைதள ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

பிரபல தொலைகாட்சி நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். தன் மரணத்துக்கு தனது மாமனார் தான் காரணம் எனவும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து நந்தினி கூறுகையில், கார்த்திக் இப்படி ஒரு நிலைக்கு ஆனதை என்னால் தாங்கிகொள்ளமுடியவில்லை. அவர் குடும்பத்தை என் குடும்பமாக தான் பார்த்தேன், கார்த்திக்கை கடைசியாககூட பார்க்க அவர் குடும்பம் என்னை அனுமதிக்கவில்லை. அசிங்கமாக திட்டி என்னை அனுப்பி விட்டார்கள்.

வெண்ணிலா என்பவருக்கு ஏற்கனவே ஜான் என்பவருடன் திருமணமாகியுள்ளது. வெண்ணிலாவுக்கும் கார்த்திக்கும் தொடர்பு இருந்துள்ளது.

வெண்ணிலா தற்கொலைக்கு காரணம் இவர் தான் என சொல்லப்படுகிறது. அவர் சேலம் அபிநயாவை காதலித்தார் என இப்போது தான் எனக்கு தெரியவந்தது.

நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள். என் அப்பாவும், அம்மாவும் வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள், அவர்களை நான் விட்டு கொடுக்க மாட்டேன், நான் அவர்களை பார்த்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

இ-விசா மூலம் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

இ-விசா என்று அழைக்கப்படும் மின்னணு விசாக்கள் பெற்று இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் வெளிநாட்டினர்கள் இனிமேல் இரண்டு மாதங்கள் வரை தங்கலாம் என மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இ-விசா மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு ஒரு மாத காலம் மட்டும் தங்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த விதிமுறை கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டு தற்போது இரண்டு மாதங்கள் வரை தங்குவதற்கு மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், இ-விசா மூலம் சுற்றுலா மற்றும் வர்த்தகம் காரணமாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர்கள் இரண்டு முறை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ சிகிச்சைக் காரணமாக இ-விசா பெற்று வருபவர்கள் மூன்று முறை இந்தியாவிற்குள் நுழைய இந்த புதிய விதிமுறை அனுமதி அளிக்கிறது.

இந்த இ-விசாக்கள் e-tourist visa, e-business visa மற்றும் e-medical visa என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு வெளிநாட்டினர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டினர்களுக்கு உதவும் வகையில் மும்பை, டில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராத்பாத் ஆகிய 6 விமான நிலையங்கள் ‘உதவி மையங்கள்’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 161 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர்கள் இ-விசா மூலம் 24 விமான நிலையங்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழையலாம் என மத்திய அமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா விடுதலையாக வாய்ப்பு : சுப்பிரமணியன் சுவாமி அதிரடி!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விடுதலை ஆவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அந்த வழக்கின் முதல் புகார் தாரரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என கூறப்பட்ட ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தற்போது உயிருடன் இல்லாததால் அவருக்கான தண்டனை நீக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இருப்பினும் அவருக்கான அபராதம் 100 கோடியை வசூலிப்பது எப்படி என்பது குறித்து மறு சீராய்வு மனு போட்டு நீதிமன்றத்தை நாடியது கர்நாடக அரசு.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கான தண்டனை நீக்கப்பட்டு விட்டது, சட்டத்தின் படி அவர் குற்றவாளி இல்லை என்பது போன்ற கருத்தை கூறி கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதா குறித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு செய்து தவறு செய்துள்ளது. இதனால் தற்போது சசிகலா விடுதலை ஆவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுவிட்டது என கூறியுள்ளார்.

அதாவது சசிகலா மீது கூட்டு சதி என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் முக்கிய குற்றவாளி உயிருடன் இல்லை, குற்றவாளி இல்லை, அவர் விடுதலை என்றால் அங்கே எப்படி கூட்டு சதி நடந்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

விலங்குகள் போன்று நடந்துகொள்ளும் சிறுமி!!

உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுமி, விலங்குகள் போன்று நடந்துக் கொள்வது அதிகாரிகளை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஜங்கிள் புக் திரைப்படத்தில் வரும் மோக்லி என்ற சிறுவன், காட்டில் விலங்குகளோடு சேர்ந்து செய்யும் செயல்கள் வியப்பில் ஆழ்த்தும். அதேபோன்ற செயல்களுடன் ஒரு சிறுமி உத்தரபிரதேச காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பராய்ச் மாவட்டம் காதர்நியாகாட் வனப்பகுதியில் இரு மாதங்களுக்கு முன்னர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 8 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.

அந்த சிறுமியின் நடவடிக்கையானது விலங்குகளை போன்று காணப்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில தலைமை மருத்துவ அதிகாரி டிகே சிங் பேசுகையில், ‘இரு மாதங்களுக்கு முன்னதாக சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள். அந்த சிறுமி விலங்குகளை போன்று சாப்பிடுகிறாள்.

நடக்கிறாள், விலங்குகளை போன்றே ஓடுகிறாள், மனிதர்களை கண்டு விலகுகிறாள். அவள் தோலில் அடிபட்டதற்கான காயங்கள் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

சிறுமிக்கு நடப்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இருந்தாலும் விலங்குகளை போன்றே கை கால்களை பயன்படுத்துவதாகவும் அவளை கவனித்து வரும் டாக்டர்கள் கூறுகின்றனர். அதேசமயம், அவளால் பேசவோ எழுதவோ முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட அந்த சிறுமி காட்டில் குரங்குகளுடன் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பொம்­மையின் சேலை என நினைத்து பெண்ணின் சேலையை தொட்டுப் பார்த்­த இளைஞன்!!

கட­வத்தை பிர­தே­சத்­தி­லுள்ள ஆடை­யகம் ஒன்றில் இளைஞரொருவர் தனது தாய்க்­காக சேலை ஒன்றை வாங்­கு­வ­தற்­காக சென்­றி­ருந்­த­போது, கடை­களில் சேலை­அ­ணி­வித்து வைக்கப்­பட்­டி­ருக்கும் மாதிரி பொம்­மை­களின் சேலையை தொட்டுப் பார்த்துக் கொண்டு சென்ற நிலையில் பொம்­மை­யென நினைத்து உண்­மை­யான பெண் ஒரு­வரின் சேலையை பிடித்து இழுத்து சங்கடத்தக்கு சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

இந்தச் சம்­பவம் பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது, கட­வத்தை பிர­தே­சத்தை சேர்ந்த இளை­ஞ­ரொ­ருவர் புத்­தாண்­டுக்­காக தனது தாயுடன் ஆடை­ய­க­மொன்­றுக்கு ஆடை கொள்­வ­னவு செய்­வ­தற்கு சென்­றுள்ளார்.

அதன்­போது, அவர் தனது தாய்க்கு சேலை தெரிவு செய்­வ­தென முடிவு செய்து அங்­கி­ருந்த ஒவ்­வொரு புட­வை­க­ளாக எடுத்து காட்­டி­யி­ருந்த போதிலும் அவ­ரது தாய்க்கு அவை­களில் எவையும் பிடித்­தி­ருக்­க­வில்லை.

இந்­நி­லையில், அந்த ஆடை­ய­கத்­தி­லி­ருந்த மாதிரி பெண் பொம்­மைகள் அணிந்­தி­ருந்த சேலையின் முந்­தா­னையை எடுத்து தனது தாயின் தோளில் போட்டு இளைஞர் பொருத்தம் பார்த்­துள்ளார்.

அவ்­வா­றாக அங்­கி­ருந்த இரண்டு பொம்­மை­களின் சேலைகளை பொருந்தி பார்த்த போதிலும் தாய் திருப்தி அடைந்­தி­ருக்­கா­மை­யினால் மூன்­றா­வ­தாக நின்­றி­ருந்த பெண்ணின் சேலையை இழுத்­துள்ளார். அதன்­போதே அது பொம்­மை­யல்ல உண்­மை­யான பெண் என தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து அவ­ரிடம் மன்­னிப்பு கோரி­யுள்ளார்.

எனினும், பொது­வான இட­மொன் றில் வைத்து தன்னை அசௌ­க­ரி­யத்­துக்­குள்ளாக்கிய மையினால் அப்பெண் குறித்த இளைஞனை கடுமையாக திட்டியிருந்த நிலையில் அவமானத் துக்குள்ளான தாயும் மகனும் அங்கிருந்து வெளியேறியதாக தெரியவந்துள்ளது.

17 வயது மாணவனின் வீட்டுக்கு சென்று வல்லுறவுக்குட்படுத்திய 21 வயது காதலி!!

17 வயதான மாணவன் ஒருவனை பேஸ்புக் மூலம் காதலித்த பெண் ஒருவர், குறித்த மாணவனை வீடு புகுந்து பாலியல் வல்லுற வுக்குட்படுத்திய சம்பவமொன்று இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் கண்ணங்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மெடில்டா (21). அந்தப் பகுதியில் உள்ள அழகுக் கலை நிலையத்தில் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோட்டை அருகே ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் வன் படிக்கும் 17 வயது மாணவனுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெடில்டா, மாணவன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற மெடில்டா, மாணவன் இருந்த அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் கதவைத் தட்டியும் அவர்கள் திறக்கவில்லை. கதவைத் திறக்க முற்பட்டால் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மாணவனின் பெற்றோர் ராமாபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸாரும் கதவைத் தட்டியுள்ளனர். மீண்டும் கதவைத் திறக்க முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வதாக இருவரும் மிரட்டியதால் செய்வதறியாது திகைத்ததுடன் பொலிஸார் திரும்பிச் சென்றுவிட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாணவனின் பெற்றோர் மீண்டும் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இந்நிலையில் பெற்றோர் மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எஸ்.ஐ. லாலு தலைமையில் பொலிஸார் விரைந்து சென்று, அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து பெற்றோரின் முறைப்பாட்டின் பேரில் சிறுவனை பலாத்காரம் செய்ததாக மெடில்டாவை பொலிஸார் கைது செய்து ராமாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

மாணவனை எர்ணாகுளம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. எனினும் பெற்றோரு டன் செல்ல விருப்பமில்லை என மாணவன் கூறியதால் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அதிக வியர்வையா?

 

இளம் பெண்கள் ஏனைய பருவ காலங்களைக் காட்டிலும் கோடை காலத்தில் அதிக வியர்வையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட இடத்தை தேடுவது, சந்தன குளியல் என நிவாரணங்களைத்தான் தேடுகிறார்கள். ஆனால் வியர்வை அதிலும் அதிகப்படியான வியர்வை ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்தால், அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வர்.

அதிகட்சமாக வியர்வை வெளியாவதற்கு காரணம், போதிய அளவிலான உறக்கமின்மை, பதற்றம், பயம், பயத்தின் காரணமாக அதிகரிக்கும் இதயத்துடிப்பு, உடல் எடை குறைவது, அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, சீரற்றமாதவிடாய், உடல் இரவிலும் சூடாக இருப்பதாக உணர்வது போன்றவைகள் தான்.

இயல்பான மனநிலையின் போது புற மற்றும் அகச் சூழலால் ஏற்படும் அழுத்தம் காரணமாக மனத்தின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நரம்பு மண்டலம் அதிகளவில் தூண்டப்பட்டு வியர்வை சுரந்து வெளியாகிறது. ஒரு சிலருக்கு ரைரொய்ட் பிரச்சினை காரணமாக உள்பகுதியின் இயக்கத்தில் சீரற்ற தன்மை உருவாகிறது. இதன் காரணமாகவும் அதிகளவிலான வியர்வை வெளியேறும், மாதவிடாய் பருவத்தின் போது சுரக்கும் ஈஸ்ட்ரோஜேன் என்ற ஹோர்மோன் குறைபாட்டாலும் அதிகளவிலான வியர்வை ஏற்படும்

தினமும் தவறாமல் யோகா அல்லது தியானம் செய்வது தான் இதற்கான சரியான தீர்வு. அத்துடன் சமச்சீரான சத்தான உணவை நேரம், அளவு ஆகியவற்றுடன் சாப்பிட்டு வருவதை பழக்கப்படுத்திக் கொண்டு மனதை இயல்பாக வைத்திருக்கவேண்டும்.

ரமித் ரம்புக்வெல்லவின் பேஸ்புக் பதிவால் புதிய சர்ச்சை!!

பல சர்ச்சைகளில் சிக்குண்ட பலராலும் பேசப்பட்ட கிரிக்கெட் வீரரான ரமித் ரம்புக்வெல்ல அவரது காதலி நடாலியா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியுள்ளார்.

இவர் தனது காதலியுடன் இணைந்து எடுத்த படங்களை முதல் முறையாக பேஸ்புக் தளத்தில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நடாலியா ரமித்துடன் பல வருடங்களாக காதல் தொடர்பில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் 45 ஓட்டங்களால் அபார வெற்றி : தொடர் சமனிலையில்!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

177 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் சாமர கபுகெதர 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரஹ்மான் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இரு போட்டிகள் கொண்ட தொடரை பங்களாதேஷ் அணி 1-1 என சமநிலையில் முடித்துக்கொண்டது.

நாடு திரும்பிய பணிப் பெண் விமானத்திலேயே மரணம்!!

இன்று காலை குவைத்தில் இருந்து விமானத்தில் வந்த இலங்கை பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

அம்பாறையில் உணவு விஷமானதில் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதி : 3 பேர் உயிரிழப்பு!!

 
அம்பாறை பகுதியில் உணவு விஷமானமையினால் மூவர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை – தமன – வானேகமுவ பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவே இவ்வாறு விஷமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவு விஷமானமையினால் மேலும் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் 120 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பாறை, சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை – இறகாமம் பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.ஹலீமா (45), மொஹமட் காசிம் (53) மற்றும் கலன்தர் மாரியன் (63) ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று நடாத்தப்படவுள்ளதுடன், அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், உணவு விஷமானமையினால் மேலும் 29 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அம்பாறை வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் 600 மாணவர்கள் ஒன்றிணைந்து சித்திரம் வரையும் நிகழ்வு!!

 
வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (06.04.2017) காலை 9 மணியளவில் வவுனியா பிரதான பொலிஸ் நிலைய கட்டடத் தொகுதியில் வன்னி பிராந்திய பாடசாலை 600 மாணவர்களை ஒன்றிணைத்து மாபெரும் சித்திரம் வரையும் நிகழ்வு ஒன்றினை வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் மேற்கொண்டார்.

இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தினூடாக நாட்டின் அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் தரம் 7,8,9,10 மாணவர்களை ஒன்றிணைத்து இச்சித்திரப்போட்டி நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹக புஸ்பகுமார, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வகே, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, வவுனியா வடக்கு கல்வி வலயப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வீரசிங்கம், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வு மதியம் 12.30 மணியளவில் நிறைவடைந்தது.

வவுனியா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி!!

 
வவுனியாவில் 42 வது நாளாக நடைபெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (06.04) வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.

வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட வவுனியா இளைஞர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு மன்னார் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுர சந்தியை வந்தடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக வவுனியா கண்டி வீதியில் உணவுத் தவிர்ப்ப்பில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் போன்ற கோசங்களுடன் தீர்க்கமான பதிலை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியிருந்தனர்.

வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!!

முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் வவுனியா பசார் வீதி முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு சென்ற இருவர் தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டி ஒன்றை சிதம்பரபுரம் பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் மயிலங்குளம் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானம் ஒன்றை குடிக்கக் கொடுத்துள்ளனர்.

குளிர்பானத்தை குடித்ததும் சாரதி மயக்கமடைந்ததை தொடர்ந்து சாரதியின் கையிலிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றை கொள்ளையிட்டதுடன், சாரதியை அவ்விடத்திலேயே விட்டு பிறிதொரு முச்சக்கர வண்டியில் வவுனியா நகரிற்கு வந்தடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த சாரதியின் நண்பர்கள் சுதாகரித்து சாரதியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தேடுதலை நடாத்தி கொள்ளையர்கள் இருவரையும் கண்டுபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பிடிபட்ட இருவரும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.

பாதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியான தெற்கிலுப்பைக்குளம் பகுதியைசேர்ந்த காண்டீபன்(27) என்பவர் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் 11ம் நாள் “கைலாச வாகனகாட்சி திருவிழா”!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதினோராம் நாளான நேற்று(05.04.2017)  புதன்கிழமை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.

கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில் இராவணன் தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளேயாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன்.

அப்போது அந்த தேர்பாகன் அதை கண்டு பொறுக்காது இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான்.

இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசியுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான்.

இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து கைலாச வாகன காட்சி திருவிழா கொண்டாடப்படுகிறது .

வழமை போன்று மாலையில் அபிசேகங்கள் பூஜைகளின் நிறைவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கைலாச வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த காட்சி கயிலைதரிசனத்தை பக்தர்கள் கண்டு ஆனந்தம் கொண்டனர்.

வவுனியாவில் வெளிச்சம் அறக்கட்டளையால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

 
வவுனியா சண்முகானந்தா வித்தியாலயத்தில் தரம் 1 மற்றும் 2ல் கல்விகற்கும் வறிய 25 மாணவர்களுக்கு நேற்று (05.04.2017) வெளிச்சம் அறக்கட்டளையால் ஒருதொகை கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரன் , செயலாளர் தி.கார்த்திக் , பொருளாளர் எஸ்.மேனதாஸ் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துள்ளனர்.

வெளிச்சம் அறக்கட்டளையால் வவுனியா மண்ணில் பல்வேறு திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.