குளத்திலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு!!

நுவரெலியா பகுதியில் உள்ள குளத்தில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி 16 வயதுடைய பாடசாலை மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த சிறுமியின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சிறுமி நேற்றைய தினம் காணாமல் போயிருந்தார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் புதிய புரட்சி : முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் திறந்து வைப்பு!!

 
இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் கொழும்பு டவுன்ஹோலில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகில் பயன்படுத்தப்படும் இணைய தொடர்புகளுடனான “ஸ்மார்ட் நகரம்” என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேசிய தொலைப்பேசி வலையமைப்பான மொபிடெல் கண்டுபிடிப்பு பிரிவினால் இந்த பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு இடத்தில் இருந்தும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்தி இணையத்துடன் இணைய கூடிய Internet of Things என்ற தொழில்நுட்பத்தின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தை ஸ்மார்ட் நகரமாக்கும் நோக்கில் மொபிடெல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது நடவடிக்கை இதுவாகும்.

இந்த ஸ்மார்ட் பேருந்து நிலையத்தில் அதிவேக இணையத்தள வசதிகள் வழங்கப்படுகின்றது. நிலையத்திலுள்ள பொருள் வழங்கும் இயந்திரத்தின் ஊடாக பண பயன்பாடின்றி குளிர் பானங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக நீர் தேவைப்பட்டால், பேருந்து நிலையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்திற்கு ‘water’என குறுந்தகவல் ஒன்றை அனுப்பி வைத்து, அதற்கு பதிலாக கிடைக்கும் இலக்கத்தை இயந்திரத்தில் உள்ளடக்கினால் அந்த இயந்திரம் தனது சேவையை வழங்கும்.

இதற்கு மேலதிகமாக அருகில் உள்ள ஏ.டி.ம் இயந்திரங்கள், பேருந்துகள், ரயில் நிலையங்கள் தொடர்பான தகவல்களையும் இங்கு பெற்றக் கொள்ள முடியும்.

இதேபோன்று பல ஸ்மார்ட் பேருந்து நிலையங்களை இலங்கை முழுவதும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

காதல் திருமணம் செய்துகொண்ட இலங்கைப் பெண்ணுக்கு குவைத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

கையடக்க தொலைபேசிக்கு வந்த தவறான அழைப்பினால் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது.

குறித்த இளம் பெண்ணின் தொலைபேசிக்கு தவறாக வந்த அழைப்பினால் ஏற்பட்ட நட்பு, திருமணத்தில் முடிந்துள்ளது.
இதனால்,ஆசை வார்த்தைகள் காட்டி, குறித்த இலங்கைப் பெண்ணை ஆண் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆறு மாதங்களாக நீடித்த தொலைபேசி மூலமான நட்பு திருமணத்தில் முடிந்ததும், இருவரும் குவைத் நோக்கி சென்றுள்ளனர். இவ்வாறு குவைத் சென்ற இலங்கைப் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

குறித்த ஆணுக்கு குவைத்தில் ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எனினும் திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய ஆணிடம் குறித்த பெண் நீதியை கேட்டுள்ளார்.

ஆனால் அந்த ஆண் விடுத்த கொலை அச்சுறுத்தல் காரணமாக, இந்த விடயங்களை வெளியில் சொல்லாமல் அந்த இலங்கைப்பெண் மூடி மறைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான பயணம் ரத்து : ரஜினிகாந்தின் திடீர் முடிவு!!

தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள விடயமாக ரஜினிகாந்தின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் காணப்படுகின்றது.

அரசியல் தரப்பில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள குறித்த பயணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் யாழ்ப்பாணம் செல்லப்போவதில்லை” என தனது திட்டவட்டமான முடிவை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரஜினிகாந்த் உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்காக லைக்கா நிறுவனம் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு ரஜினியும் சம்மதம் வெளியிட்டிருந்த நிலையில், பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளிவந்திருந்தன.

குறிப்பாக திருமாவளவன், வைகோ ராமதாஸ், வேல்முருகன் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், இலங்கை தரப்பிலிருந்தும் சில எதிர்ப்புகள் வெளிவந்திருந்தன.

இந்த நிலையின் ரஜினிகாந்த் தனது முடிவை மாற்றிக்கொண்டு இலங்கை விஜயத்தை ரத்து செய்துள்ளார்.

இலங்கை சென்று பூமிக்குள் புதைந்திருக்கும் மாவீர மண்ணை வணங்கி, மாவீரர்கள் நடமாடிய இடங்களை பார்வையிட்டு, அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.

ஆனால் இவை அனைத்தும் கனவாகி விட்டன. அரசியல் காரணிகள் இதை பெரிதுபடுத்தி விட்டதால் இதை நான் தவிர்த்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்படுமானால் தயவு செய்து அதையும் தடுத்து விடாதீர்கள் எனவும் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு ஆயுத கிடங்கு வெடிப்பு!!(வீடியோ)

உக்ரேனின் கார்கோவ் பிராந்தியத்தில் உள்ள பாரிய ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான ஆயுதங்கள் வெடித்துச் சிதறியுள்ளன.

குறித்த ஆயுதக் கிடங்கு பாலக்லேயா நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

அங்கு வெடித்துச் சிதறிய வெடிப்பொருட்களும், ஆயுதங்களும் பல மைல் தொலைவிற்கு தெறித்து செல்லும் காட்சி ஆளில்லா விமானம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடும் வெயில் : அதிகளவாக விற்பனையாகும் இளநீர், தர்ப்பூசணிப் பழம்!!

 
வவுனியாவில் தற்போது கடும் வெயிலுடன் கூடிய காலநிலையே நிலவுகின்றது. வெளியில் செல்ல முடியாத அளவில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது.

அந்த வகையில் வவுனியாவில் மக்கள் உடல் சூட்டினை தணித்து கொள்வதற்காக பலரும் இளநீர், தர்ப்பூசணிப் பழம் போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

வவுனியாவில் இளநீர் ஒன்று எண்பது ரூபா தொடக்கம் நூறு ரூபா வரைக்கும், தர்ப்பூசணிப் பழம் ஒரு கிலோ எண்பது ரூபாவிற்கும் விற்பனையாகின்றது.

செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல உடல் நலத்தையும் கெடுத்துவிடும். இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க குளிர்பானங்கள் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே அது தரும் பலன்களும் அதிகம்.

இளநீரில் இருக்கும் இனிப்பான விடயங்கள் யாதெனில் இளநீர் நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. விட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.

வவுனியாவில் யுத்தத்தின் பின்னர் மக்களிடையே நட்புறவை ஏற்ப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!!

 
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்ப்பாட்டில் ‘பலதரப்பு செயற்பாட்டின் ஊடாக மோதல் திரிபுக்கான முனைப்பு’ எனும் செயற்றிட்டத்தினை வவுனியா மாவட்டத்தில் ஆரம்பதற்குறிய தேவையான நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

இச் செயற்றிட்டத்தினை செயற்றிட்டத்தினை அறிமுகப்படுத்தல், அதன் நோக்கத்தையும் பெறுபேற்றையும் இனங்காணுதல், எதிர்கால செயல்கள் தொடர்பாக தொடர்பான கலந்துரையாடல் இன்று ( 25.03.2017) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா சுவர்க்கா விடுதியில் நடைபெற்றது.

மூன்று தசாப்தமாக நடைபெற்ற இனரீதியான யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட அதனால் ஏற்பட்ட பல சிக்கல்கள் இன்னும் தீர்க்க வேண்டியுள்ளது.

யுத்தத்தின் காரணமாக வட கிழக்கில் வாழும் பல குடும்பங்கள் சிதறிப் போயுள்ளன. குடும்பத்தின் பிரதான உழைப்பாளர்கள் இழந்து போனதால் தற்போதுள்ள உறுப்பினர்களின் வாழ்க்கை நிலை குறித்து பல சிக்கல் ஏற்பட்டுள்ளன.

காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் வாழ்வுத் தகவல்களை உறுதிசெய்துகொள்வது பிரதாக பிரச்சனையாகும். அதுபோல தனிமைப்பட்டுள்ள பிள்ளைகள் மற்றும் பெண்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு ஆளாகும் இடம்பாடுகளும் உள்ளன.

குறிப்பாக எமது நாட்டில் வாழும் பல்லின மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் அதிகமாக வளர்ந்த நம்பிக்கையீனம், சந்தேகம், அச்சம், மனவிரிசல் முழுமையாக நீங்கி விடவில்லை.

மேற்படி பல விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக தீர்க்கமான செயல்முறைகள் கொண்ட ‘பலதரப்பு செயற்பாட்டின் ஊடாக மோதல் திரிபுக்கான முனைப்பு’ எனும் செயற்றிட்டத்தின் ஆரம்ப கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சமயத்தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் வீதிகளில் 30ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

 
வவுனியாவில் கடந்த 30 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (25.03.2017) 30வது நாளாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்கை திருமணத்தினால் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர்!!

தமிழ்நாடு லால்குடி அருகே திருமணத்தின்போது மனைவி வீட்டில் கொடுத்த நகை, பணத்தை தங்கைக்கு செலவு செய்தது தொடர்பாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவரை பொலிஸார் கைது செய்தனர்.

லால்குடியை அடுத்த பச்சாம்பேட்டை முத்தியூர் பகுதியைச் சேர்ந்த பூமிபாலன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நவமணி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

திருமணத்தின்போது நவமணிக்கு, அவருடைய வீட்டில் கொடுத்த நகை மற்றும் பணத்தை பூமிபாலன் அவருடைய சகோதரியின் திருமணத்துக்கு செலவு செய்துவிட்டாராம். இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கணவன்- மனைவி இடையே மீண்டும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பூமிபாலன் நவமணியை தாக்கியதோடு, அவரது காதையும் கடித்து துப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் அடிப்படையில் லால்குடி பொலிஸார் வழக்கு பதிவு செய்து பூமிபாலனையும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவருடைய தாயார் செண்பகவள்ளியையும் (65) பொலிஸார் கைது செய்தனர்.

வவுனியாவில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டி!!

 
வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Quality Supply நிறுவனத்தின் அனுசரணையுடன் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (24.03) மாலை 4 மணியளவில் வைரவர்புளியங்குளம் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.

இப்போட்டியில் வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக்கழமும், புதுக்குளம் ஈஸ்வரன் விளையாட்டுக்கழகமும் பலபரீட்சையில் ஈடுபட்டன.

இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் யங்ஸ்ரார் அணியை சேர்ந்த வீரரான குகன் யங்ஸ்ரார் அணி சார்பில் கோல் ஒன்றை போட்டு 1:0 என்ற கோல்கணக்கில் யங்ஸ்ரார் அணியை முன்னிலைப்படுத்தினார்.

அடுத்த பாதி ஆட்டத்தில் ஈஸ்வரன் அணியினர் கடுமையாக போராடியும் துரதிஷ்ரவசமாக எந்தவித கோல்களையும் போட முடியவில்லை போட்டி நிறைவில் யங்ஸ்ரார் அணியினர் 1:0 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்று சம்பியன் பட்டத்தை தமதாக்கிக் கொண்டனர்.

இப்போட்டியிற்கு ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் திரு.யோகராசா தலைமைதாங்க பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.ரவீந்தர சில்வா மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சார்பில் வடமாகாணசபை உறுப்பினர் திரு.புவனேஸ்வரன் அவர்களுடன் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் திரு.ஜனகன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் சிறீரெலொ கட்சியின் இளைஞரணி தலைவர் ப.கார்த்திக், வவுனியா துடுப்பாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.ரதீபன் மற்றும் வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.யோன்சன், செயலாளர் திரு ராஜன், பொருளாளர் திரு லரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

இந்நிகழ்வில் உரையாற்றிய வினோ நோதாரலிங்கம் போட்டிகளின் வெற்றி தோல்வியை வீரர்கள் சமனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற கைகலப்புக்களை அரசியல் ஆக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கடந்த நாட்களில் இடம்பெற்ற வீரர்களின் கைகலப்பில் அரசியல்வாதிகளை ஒரு பக்க சார்பாக அழைத்திருந்தது தவறு என்றும் அவ்வாறு ஒரு பக்கமாக அரசியல்வாதிகள் வருவார்களாயின் ஏனையவர்களும் தாமும் மறுபக்கமாக வரவேண்டிய சூழ்நிலை வரும் என்றும் எனவே விளையாட்டுக்குள் அரசியல் வேண்டாமென்றும் கடுமையாக கூறியதுடன் வவுனியாவில் சிறந்த ஒரு மைதானத்தை அமைப்பதற்கு தாம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்

இந்நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்றவர்கட்கு காசோலையும் கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரான்சில் பயங்கரம்..மர்ம நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூடு : 3 பேர் படுகாயம்?

பிரான்சில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் லில்லி பகுதியில் உள்ள Porte d’Arras என்ற இடத்திற்கு அருகில் பொதுமக்கள் பலர் இருந்த நேரத்தில் இரவு 9.45 மணி அளவில் மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்திய நபர், தாக்குதல் நடத்திய பின் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாகவும், மற்ற இருவருக்கும் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அப்பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இச்சம்பவத்தால் காயமடைந்திருப்பவர்களை பொலிசார் உடனடியாக Saint-Vincent-de-Pau என்ற மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டால் பிரான்சில் உள்ள முக்கியமான பகுதிகளை பொலிசார் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்

சமீபத்தில் தான் பிரித்தானியாவின் லண்டன் நகரில் தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டினி கிடந்தால் உடல் எடை குறையுமா?

உடல் எடை அதிகரிப்பது அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். அதிக உடல் எடை கொண்டவர்களை நோய்கள் எளிதாக தாக்கும் என்பதால், உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும்.

பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது. எடையை குறைக்க சில எளிய வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது.

உடல் பருமனை குறைக்க முயற்சிப்பவர்கள் முதலில் மேற்கொள்ளும் பழக்கம் உணவுக்கட்டுப்பாடு. வழக்கமாக சாப்பிடும் சாப்பாட்டின் அளவை குறைத்து தீவிர உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பார்கள்.

ஒருசிலர் பட்டினியும் கிடப்பார்கள். இது தவறான பழக்கம். பட்டினி கிடந்தோ, சாப்பாட்டு அளவை குறைத்தோ எடையை குறைக்க முயற்சிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தராது.

உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது முக்கியமல்ல. என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். கொழுப்புச்சத்து, அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.

அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் பச்சைக்காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது உடல் எடையை
வேகமாக குறைக்கும்.

தினமும் மூன்று வேளைதான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக 6-7 முறைகூட உணவை பிரித்து சாப்பிட்டு வரலாம். சாப்பிட்ட உடனே உட்கார்ந்தோ, படுத்தோ ஓய்வெடுக்கக்கூடாது. சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். டீ, காபி குடிப்பதற்கு பதிலாக தண்ணீரை அதிகம் பருகுவதும் உடல் எடையை குறைக்க உதவும்.

தமிழகத்தில் விழுந்து நொறுங்கிய ஏலியன்ஸ் விண்கலம்? உயிருக்கு போராடும் பெண்!!

தமிழகத்தில் வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் வானியம்பாடி அருகே துருங்கி குப்பம் கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. இதில், புவனேஷ்வரி என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லொறி ஓட்டுநரான புவனேஷ்வரியின் கணவர் வெங்கடேசன் வெளியூர் சென்றுள்ளார். சம்பவத்தின் போது இரவு புவனேஷ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அதிகாலை 4 மணியளிவில் பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் ஒன்று அவரது வீட்டின் மேல் விழுந்துள்ளது. இதில் வீடு பயங்கர சேதமடைந்துள்ளது.

ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து தீக்காயத்துடன் போராடிய புவனேஷ்வரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விண்வெளி ஆய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சக்தி வாய்ந்த எரிகல் ஏதேனும் வீட்டின் மீது விழுந்ததா என்றும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அப்பளம்போல் நொறுங்கிய வாகனம் : உடல் சிதைந்து பலியான மாணவிகள் : கதறிய உறவினர்கள்!!

தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதால், 4 மாணவிகள் அந்த இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தமிழகத்தின் நாகா்கோவில் அருகே சுங்கான்கடையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 18 போ் வழக்கம் போல் இன்று மாலை கல்லூரியில் இருந்து தனியார் வேனில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக வேகமாக வந்த வேன் கட்டுபாட்டை இழந்து புலியூா்குறிச்சி என்ற இடத்தில் திடீரென்று எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியுள்ளது.

இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியதில் வேனில் இருந்த மாணவிகள் நான்கு போ் வேனுக்குள்ளே உடல் சிதைந்து பலியாகியுள்ளனர்.

மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்து மற்ற மாணவிகளும் இறந்து போன மாணவிகளின் உறவினா்களும் சம்பவ இடத்தில் வந்து கதறி அழுதனா்.

கல்லூரி மாணவிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய வேன் டிரைவரையும் போலிசார் தேடி வருகின்றனா்.

பெண் ஒருவரின் காணாமல்போன பணப் பையை கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸார்!!

பெண் ஒருவரின், 38 ஆயிரம் ரூபா பணத்துடன் காணாமல் போன, பணப் பையை கண்டெடுத்து பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் சுபியான் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

கடந்த 17ம் திகதி மட்டக்களப்பு பிரதான வீதியில் குறித்த பணத்தொகை, கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.ரீ.எம்.சுபியானினால் வங்கி ஏ.டி.எம். பண வரவு அட்டை என்பவற்றுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பணப் பை யாருடையது என்பதை கண்டுபிடித்து ஒப்படைப்பதற்கு எந்த தகவலும் பணப் பையில் கிடைக்காத காரணத்தால் பணப் பையில் இருந்த வங்கி ஏ.டி.எம். பண வரவு அட்டையை வங்கியில் கொடுத்து பணப் பை உரிமையாளர் தொடர்பிலான தகவலை அறிந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை, தேவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த கணேசன் சுகந்தினி என்ற பெண்ணின் தகவலைப் பெற்று அப் பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பணப் பை உரிமையாளரான அவர் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு வருகை தந்து 38 ஆயிரம் ரூபா பணம், வங்கி ஏ.டி.எம். பண வரவு அட்டை என்பவற்றுடன் தனது பணப் பையை சந்தோஷமாக எடுத்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய வானில் தோன்றிய இராட்சத கை மற்றும் கால்கள்!!

பிரித்தானியாவின் வான்பரப்பில் இரு வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றிய இராட்சத வடிவங்களைக் காண அநேகமானவர்கள் வருகை தந்தனர்.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் வான்பரப்பில் தோன்றிய வடிவங்கள் கடவுளின் கை உருவம் மற்றும் கால்கள் எனக் கூறப்படுகின்றது. அத்தோடு இது தொடர்பில் தற்போது வெளிநாட்டு ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் 6 விரல்களுடன் இராட்சத கை அமைப்பினை கொண்ட வடிவம் ஒன்று வான்பரப்பு மேகங்களில் தோன்றியதால் அதனை பார்ப்பதற்காக அநேகமானவர்கள் ஒன்று கூடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வடிவம் நேற்று மாலை சூரியன் மறையும் வேளையில் தோன்றியதாகவும், தங்க நிறத்தில் அழகான தோற்றத்துடன் காணப்பட்டதாகவும், அதன் காரணமாக அது கடவுளின் கையை ஒத்ததாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், நோர்த் யோக்சேர் பகுதியில் கால்கள் இரண்டு நடந்து செல்வது போன்ற மாபெரும் வடிவமும் அந்த வான்பரப்பில் தோன்றியுள்ளது.

அந்தவகையில், குறித்த முகில் வடிவமைப்பானது சர்வதேச உலக வானிலை தினத்தின் 11 புதிய வானிலைகள் பட்டியலில் (international Cloud Atlas) சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.