வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

 
வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒன்றினைந்து இன்று (07.02.2017) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் தொழிற்சங்க கூட்டு முயற்சியில் சம்மேளனங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சரியான முறையில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் இன்றைய நாளில் அகில இலங்கை ரீதியாக உள்ள பல்கலைக்கழகங்கள் கல்விசாரா உழியர்கள் இணைந்து ஒரு அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த அடையாள வேலை நிறுத்தத்தில் அரசாங்கம் தமது தவறுகளை உணர்ந்து எங்களுக்கு உரிய தீர்வினை தராதபட்சத்தில் ஏற்கனவே அவர்கள் வாக்குறுதி அளித்த வாக்குறுதிகளை தவறவிட்ட காரணத்தினால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தொடர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து தவறும் பட்சத்தில் எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் நாங்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்த்தினை முன்னெடுக்கவுள்ளோம் என்று அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருபவரும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டுக்கான பாதீட்டில் உறுதியளித்தவாறு வேதன உயர்வு வழங்கப்படவில்லையென தெரிவித்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடுதழுவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தைப்பூச திருநாளும் அதன் சிறப்பும் – 09.02.2017

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைமாதம் உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.பூரணை தினத்தில்; சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க ”தைப்பூச திருநாள்” அமைகின்றது. இச் சிறப்பு மிக்க இத்தினம் இவ் வருடம்  09.02.2017 அன்று அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகவும் ஐதீகம். சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை என்று கூறபடுகின்றது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம். இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது.

இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பர். அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்களினூடாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள்.

உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்திற்கும் வாழ்வுக்கும் செயற்பாடுகளுக்கும் மறைவிற்கும் இயற்கையே காரணியாக அமைகின்றது. இயற்கையை மீறி எதுவும் செயற்ப்படமுடியாது. அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்படமுடியாது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இயற்கையே விதியாக அமைகின்றது. இதை வலியுறுத்துவதும் இத்தைப்பூச நன்னாளின் ஒரு அம்சமாகும்.

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.

அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத் தைப்பூச நன்னாளாகும்.

சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத் தைப்பூச நன்னாளானது முருகப் பெருமானுக்குரிய விசேட நாளாகவும் விளங்குகின்றது. சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும். முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது. சிவனின் அருளினால் தோன்றிய முருகன் அன்னையின் சக்தியையும் பெற்று சிவசக்தியின் பேரருள் மிக்கவராக இத் தைப்பூச நாளில் திகழ்வதால் முருகன் ஆலயங்களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.

முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்று வாழ்க்கையை நம்பிக்கையுடன் சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு எதிர்நோக்கும் நாம் தைப்புச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டிவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகின்றோம்.

இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும் இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் இத் தைப்பூச நன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது.

“தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன.

இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி. எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப் படைத்து, காத்து, அருளி, அழித்து, மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும்.

இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தியொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணைசெய்யும். எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கிவிட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச் செய்யும்.

உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்…

சுபம்

முருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம் என்ன?
தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் என்ன?

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் (பள்நீ) நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ”தனக்கே சொந்தம்” என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.

இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக முருகன் வரமளித்தார்.

இந் நிகழ்வு முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் கூறுகின்றார்கள்.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது.  மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது  என்பதே உண்மை.

 

இலங்கையில் மீண்டும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை!!

நாட்டின் பல இடங்களிலும் வறட்சியுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்.

அம்பாறை – மிதமான காலநிலை

அனுராதபுரம் – மிதமான காலநிலை

பதுளை – மிதமான காலநிலை

மட்டக்களப்பு – மிதமான காலநிலை

கொழும்பு – மிதமான காலநிலை

காலி – மிதமான காலநிலை

கம்பஹா – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை

அம்பாந்தோட்டை – மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை

களுத்துறை – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை

கண்டி – மிதமான காலநிலை

கேகாலை – மிதமான காலநிலை

கிளிநொச்சி – மிதமான காலநிலை

குருணாகல் – மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை – மிதமான காலநிலை

மாத்தறை – மிதமான காலநிலை

மொனராகலை – மிதமான காலநிலை

முல்லைத்தீவு – மிதமான காலநிலை

நுவரெலியா – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை

பொலன்னறுவை – மிதமான காலநிலை

புத்தளம் – மிதமான காலநிலை

இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை – மிதமான காலநிலை

வவுனியா – மிதமான காலநிலை

முகநூலை அதிகம் பயன்படுத்துவோருக்கு மனநலப் பாதிப்புகள் அதிகம்!!

முகநூலை (ஃபேஸ்புக்) அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு விபரங்கள் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி’ ஆய்வு இதழில் வெளியாகியுள்ளன.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சராசரியாக 48 வயதுடையவர்களின் முகநூல் பயன்பாடு குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 52,000 பேர் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதலில் அவர்களது உடல் மற்றும் மனநலன் குறித்து பரிசோதிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அடுத்தகட்டமாக, பங்கேற்பாளர்களின் அனுமதியுடன் அவர்களது முகநூல் நடவடிக்கைகளும் அலசி ஆராயப்பட்டன.

அந்த ஆய்வில், பிறரது பதிவுகளுக்கு அதிக அளவில் “விருப்பம்’ (Like) தெரிவித்தவர்களும், தங்களது எண்ணங்களை (Status) அடிக்கடி பதிவு செய்பவர்களும் உடல் மற்றும் மன நலன் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர்.

அதேநேரம், மிகக் குறைந்த அளவு விருப்பங்களையும் (Like), எண்ணங்களையும் (Status) பதிவு செய்தவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தனர்.

உடல்/மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் முகநூலை அதிக அளவில் நாடுவதாகவும், அது அவர்களது உடல்நலனையும், மனநலனையும் மேலும் மோசமடையச் செய்வதாகவும் ஆய்வில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் முகநூலை அதிக அளவில் பயன்படுத்துவதாகக் கூறும் ஆய்வாளர்கள், எனினும், அவர்களது உடல் பருமனுக்கு முகநூல் பயன்பாடு காரணமல்ல என்றும் தெளிவுபடுத்தினர்.

ஏற்கனவே, முகநூல் பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பல சுவையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

முகநூலில் அதிக எண்ணிக்கையில் நண்பர்களின் அழைப்புகளை ஏற்பவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றுள்ளதாகவும், அதிக எண்ணிக்கையில் புதிய நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் குறைந்த ஆயுளைக் கொண்டுள்ளதாகவும் ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அலங்கோலமாக அறையை வைத்திருந்த யுவதியின் பாதத்துக்குள் ஊடுருவிய தொலைபேசி சார்ஜர்!!

தனது அறையை அலங்கோலமாக வைத்திருந்த யுவதி ஒருவரின் காலில் தொலைபேசி சார்ஜர் கம்பியொன்று ஊடுருவிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

நெப்ரஸ்கா மாநிலத்தில் வசிக்கும் 18 வயதான ஜூலியான பெக்கர் எனும் இந்த யுவதியின் அறையில் ஆடைகள் மற்றும் பொருட்கள் தரையை மூடி யிருந்தன.

இந்நிலையில், ஜூலியா அண்மையில், கட்டிலிலிருந்து, அவசரமாக எழுந்து செல்ல முற்பட்டபோது தரையிலிருந்த தொலைபேசி சார்ஜரின் கம்பி யொன்று அவரின் பாதத்தில் குத்தி உள்ளே புகுந்தது.

அதன்பின் ஜூலியா வலியால் அலற, அவரின் தாயார் வந்து, சார்ஜரை பாதத்திலிருந்து எடுத்தாராம். இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்க ளையும் ஜூலியா வெளியிட்டுள்ளதுடன், தனது பாதத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இப் புகைப்படங்களை பார்த்த பலர், “இளைஞர் யுவதிகளே உங்கள் அறையை சுத்தம் செய்யுங்கள் இல்லாவிட்டால் இப்படி நடக்கலாம்” என அறிவுரை கூறியுள்ளனர்.

யுவ­தியை பாலியல் வல்­லு­ற­வுக்­கு­ட்­ப­டுத்­திய பின்னர் நாய் மூலமும் துஷ்­பி­ர­யோகம் செய்த நப­ருக்கு 13 வருட சிறை!!

யுவதி ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­துடன், தனது நாயின் மூலம் அந்த யுவ­தியை துஷ்பி­ர­யோ­கப்­ப­டுத்­திய நபர் ஒருவ­ருக்கு நீதி­மன்றம் 13 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

34 வய­தான, ஜேம்ஸ் ஆரோன் லெய்டி எனும் இந் ­நபர், ஸ்டபோர்ட்­ஷயர் நகரில் வைத்து, யுவதி ஒரு­வரை ஜேம்ஸ் ஆரோன் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தினார்.

அந்த யுவதி சுய­உ­ணர்­வற்று இருந்­த­போது, அவர் மீது பாலியல் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வ­தற்கு தனது நாயை நிர்ப்­பந்­தித்­துடன் அதை வீடி­யோ­விலும் பதி­வு­செய்தார் என ஜேம்ஸ் ஆரோன் மீது குற்றம் சுமத்தப்­பட்­டது.

இந்த குரூர நட­வ­டிக்­கை­யினால் பாதிக்­கப்­பட்ட யுவதி இது தொடர்­பாக கூறு­கையில், இச்­சம்­ப­வத்தால் தான் உடல் ரீதி­யாக மாத்­தி­ர­மல்­லாமல், பெரும் மன அழுத்­தத்­துக்கும் உள்­ளா­ன­தாகத் தெரிவித்துள்ளார்.

அவர் பார்ப்­ப­தற்கு மிக நல்ல மனிதர் போன்று தோற்­ற­ம­ளித்­த­துடன் ஒரு குழந்­தையின் அன்­பான தந்தை­போன்றும் காணப்­பட்டார். அவர் மீது நான் குற்றம் சுமத்­து­வதை அதி­கா­ரிகள் நம்ப மாட்டார் என எண்­ணினேன்.

பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று முறைப்­பாடு செய்­வ­தற்கு நான் முதலில் தயங்­கினேன். ஆனால், எனது முறைப்­பாடு வேறு பல­ருக்கும் இந்­நிலை ஏற்­ப­டு­வதை தடுக்­கு­மானால், அது பிர­யோ­ச­ன­மா­னது எனக் கருதி பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்றேன்.

உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என நான் விரும்­பினேன். அவர் மீது முறைப்பாடு செய்­தபின் எனக்கு அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டன. ஆனாலும் நான் மற்­ற­வர்­க­ளுக்கு உதவ முன்­வந்தேன்” எனவும் அந்த யுவதி கூறினார்.

ஜேம்ஸ் ஆரோனை பொலிஸார் கைது செய்­த­போது, இரவில் வெளியில் சென்­றி­ருந்­த­போது, மேற்­படி யுவ­திக்கு உத­வு­வ­தற்­காக அவரை தனது வீட்­டுக்கு அழைத்து வந்­த­தாக ஜேம்ஸ் ஆரோன் கூறினார்.

இரு­வரும் பரஸ்­பர சம்­ம­தத்­து­ட­னேயே பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தா­கவும் நாய் தொடர்­பான கதை மேற்­படி யுவ­தியின் கற்­பனை எனவும் ஆரோன் கூறினார்.

எனினும், ஸ்டபோர்ட் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது, பாலியல் வல்­லு­றவு மற்றும் குரூரமான ஆபாசப்படங்களை வைத்தி ருந்தமை தொடர்பான 5 குற்றச்சாட்டுகளை ஜேம்ஸ் ஆரோன் ஒப்புக் கொண்டார். அதையடுத்து, அவருக்கு 13 வருடகால சிறைத் தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லயாம்!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் தற்போது தொடர்ந்து நிலவிவருகின்றது. இந்தநிலையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, செய்தியாளர்கள் மருத்துவர்கள் குழுவினரிடம் சரமாரியாக பல்வேறு கேள்விகளை தொடுத்தனர்.

அப்போது தமிழகமே எதிர்பார்த்திருந்த போது சிகிச்சை குறித்தும் மரணம் குறித்தும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதற்கு, “ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. உலகின் உயர்தர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது.

சிகிச்சையில் யாரும் குறுக்கிடக்கிடவில்லை. நாங்கள் சுதந்திரமாகவே செயல்பட்டோம். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தகவலும் மறைக்கப்படவில்லை.

மாரடைப்பு ஏற்படும் வரை ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தார். மாரடைப்பு வராமல் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் வீடு திரும்பி இருக்கலாம்.

முறையான சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது” என்று மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

அத்துடன் “நான் அருகில் இருந்திருந்தாலும் உயிரிழப்பை தடுத்திருக்க முடியாது” என்று மருத்துவர் பீலே தெரிவித்தார்

ஒரே நாளில் நிகழவிருக்கும் மூன்று விண்வெளி அதிசயங்கள்!!

வரும் வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 3 விண்வெளி நிகழ்வுகள் ஒருசேர நிகழவிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. மட்டுமின்றி அன்றைய தினம் பிப்ரவரி மாத முழு நிலவும் மற்றும் வால் நட்சத்திரம் ஒன்றும் வானில் தோன்றும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது வெள்ளி இரவு 10:30 மணியளவில் நிகழும் எனவும் இது 12:43 மணி அளவில் தெளிவாக தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வானது ஐரோப்பா, பெரும்பாலான ஆசிய நாடுகள், வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களால் பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த நிகழ்வானது Snow moon எனப்படும் அதிக பனிப்பொழிவு நிறைந்த பிப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலா. குறித்த மாதத்தில் பனிப்பொழிவு காரணமாக பழங்குடியின மக்கள் உணவுக்கு அல்லல் படுவதால் இந்த மாதத்தில் தோன்றும் முழு நிலவை Hunger Moon எனவும் அழைக்கின்றனர்.

மட்டுமின்றி இந்த முழு நிலவானது அதிக நேரம் நீடிக்கும் என்பதும் இதன் சிறப்பாகும். மாலை 4.44 மணிக்கு தோன்றும் நிலவானது இரவு 7.30 மணியளவில் மறையும் என குறிப்பிடுகின்றனர்.

மூன்றாவது நிகழ்வாக வால் நட்சத்திரம் ஒன்று இதே நாளில் வானில் ஒளிர இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது சனிக்கிழமை மட்டுமே பொதுமக்களுக்கு வெறும் கண்களால் காண முடியும் எனவும் இது சீனர்களின் புத்தாண்டை ஒட்டி தோன்றுவதால் புத்தாண்டு வால் நட்சத்திரம் எனவும் கூறப்படுகிறது.

1948 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்த வால் நட்சத்திரத்தினை ஆய்வாளர்கள் தங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டனர். இந்த வால் நடசத்திரமானது ஐந்தேகால் ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் எனவும் அந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை சீனர்கள் மிக சிறப்பாக கொண்ட்டாடுவர் எனவும் கூறப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த நபர் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள West Sussex நகரில் மரினா ஆடம்ஸ்(44) என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில், இணையத்தளம் மூலமாக உக்ரைன் நாட்டை சேர்ந்த அலெக்ஸாண்டர்(39) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

பின்னர், இருவரும் நேரடியாக சந்திக்க எண்ணி அலெக்ஸாண்டர் சட்டவிரோதமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இதுமட்டுமில்லாமல், இருவரும் ஒரே அறையில் தங்கி வந்ததால் மரினா கர்ப்பம் அடைந்துள்ளார்.

சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலனின் ஆசைக்கு மரினா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நேரத்தில் மரினா 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஓர் நாள் மரினாவை அடைய நினைத்த அலெக்ஸாண்டர் அவர் மிரட்டி பார்த்துள்ளார். ஆனால், மரினா இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனை தொடர்ந்து, ‘நான் அடையாவிட்டால், வேறு யாரும் உன்னை அடையக் கூடாது’ என மிரட்டிய அலெக்ஸாண்டர் மரினாவை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளான்.

இச்சம்பவம் வெளியானதை தொடர்ந்து அலெக்ஸாண்டரை பொலிசார் கைது செய்து விசாரணை செய்து வந்துள்ளனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்தபோது அலெக்ஸாண்டருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், அவரை உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

சசிகலா வேலைக்காரி தான் : பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை!!

சசிகலாவுக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் எனவும், அவர் ஜெயலலிதாவின் வேலைக்காரி தான் என பிரபல நடிகை ரஞ்சினி கூறியுள்ளார்.

முதல் மரியாதை, கடலோர கவிதைகள் போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரஞ்சினி.

இவர் இன்று அளித்துள்ள பேட்டியில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வராக எப்படி ஏற்று கொள்ள முடியும்?

ஜெயலலிதாவுக்கு வேலைக்காரியாக இருந்ததை தவிர அவருக்கு வேறு என்ன தகுதி உள்ளது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடியதை போல சசிகலாவுக்கு எதிராகவும் போராட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா எல்லாரையும் ஏமாற்றியது ஊரறிந்த விடயம் எனவும் ரஞ்சினி கோபமாக கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கடந்த 31ம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற கேப்பாப்பிலவைச் சேர்ந்த 84 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்படாததையடுத்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை வரையில் அவகாசம் அளித்துள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் காணி விடுவிப்பதற்காக நடத்தப்படும் போராட்டத்திற்காகத் தமது உயிரையும் மாய்த்துக் கொள்ள தயங்கப் போவதில்லை என தெரிவித்திருக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெறுகின்ற போராட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அதன் அலுவல்களை முடக்கும் வகையில் மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள்.

கேப்பாப்பிலவு காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரச உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், இன்று அங்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பாம்பினை முத்தமிட சென்ற நபருக்கு நடந்த விபரீதம்!!

மும்பையில் தான் பிடித்த பாம்பிற்கு முத்தமிட முயன்ற நபர் பாம்பு கடித்து இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் சிபிடி பெலபூர் பகுதியை சேர்ந்த சோம்நாத் மாத்ரே என்பவர், பாம்பு பிடிப்பவர். சோம்நாத் தான் பிடித்த நல்ல பாம்பு ஒன்றிற்கு முத்தமிட்ட போது அந்த பாம்பு திருப்பி அவரை கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர், பெலபூர் பகுதியில் பாம்பு பிடிப்பதற்காக சென்றிருக்கிறார். அங்கு ஒரு காரில் இருந்து பாம்பு பிடித்தார். பின்னர் அங்கிருந்து மற்றொரு பகுதிக்கு பாம்பை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு எல்லோர் முன்பும் பாம்பின் தலையில் சோம்நாத் முத்தமிட முயன்றுள்ளார். அப்போது திடீரென பாம்பு அவரது கன்னத்தில் கடித்து விட்டது.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2ம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சோம்பாத் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபத்தான பாம்புகளை பிடித்துள்ளார்.

எதிர்பாராத விதமாக இலங்கையை முற்றுகையிடும் ஐரோப்பியர்கள்!!

இலங்கை வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் 13 சதவீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ள போதிலும், கடந்த மாதம் 219,360 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும், அது மிகப்பெரிய சாதனையாக உள்ளதென சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு தசாப்தங்களின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் விமான நிலையம் மூடப்படுவதோடு, இரவு நேரங்களில் மாத்திரம் விமான நிலையம் செயற்பாடுகிறது.

இந்த செயற்பாடு காரணமாக சுற்றுலா துறைக்கு பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க அச்சம் வெளியிட்டிருந்தார்.

அதிக குளிரான காலநிலையை கொண்ட காலப்பகுதியினுள் மேற்கு ஐரோப்பாவில் இருந்து மாத்திரம் கிட்டத்தட்ட 72,500 சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். கடந்த காலங்களை விட இந்தத்தொகை 14 வீத அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை சீனாவில் இருந்து 48,773 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும், அது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 26 வீத அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தது.

திடீரென ஒத்திவைக்கப்பட்ட சசிகலாவின் பதவியேற்பு விழா : பெரும் குழப்பத்தில் மன்னார்குடி தரப்பு!!

தமிழக முதலமைச்சராக அ.தி.மு.க கட்சியின் பொது செயலாளரான சசிக்கலா இன்று பதவியேற்றபார் என எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், பதவியேற்பு நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழக விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றை தினம் இடம்பெற்ற அ.தி.மு.க கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளரான சசிக்கலா முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் 9ஆம் திகதிக்குள் சசிக்கலா முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வருகிறதையடுத்து நாளைய தினமே சசிகலா பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது.

இதற்காக, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும், தற்போது பதவியேற்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்ட ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் தாக்கதல் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான வழக்கின் தீர்ப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சசிக்கலா முதலமைச்சராக பதவியேற்பதில் பிரச்சினை உருவாகலாம் என ஆளுநர் கருதுவதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டதையடுத்து மன்னார்குடி தரப்பு பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!!

நாட்டில் சுமார் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ வேல்ஸ்குமார கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் சுமார் அறுபதாயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவி வருகின்றது. எனினும் நாட்டில் சுமார் நாற்பதாயிரம் ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்படுகின்றனர்.

ஆசிரிய இடமாற்றங்கள் பாடசாலைகளுக்கு உரிய முறையில் நியமிக்கப்படாமையினால் இவ்வாறு நாற்பதாயிரம் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக சில பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.

பாடசாலை கட்டமைப்பில் அதிபர்களுக்கான பற்றாக்குறையை நீக்கும் நோக்கில் 3901 அதிபர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதேவிதமாக இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

காத்தான்குடி – மீராபாலிகா மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 01 ஆம் திகதி வகுப்பாசிரியரான சேகுதாவூத் ரஸீட் என்பவரால் 03 ஆம் தரத்தில் கல்வி பயிலும் ரி.ஸம்றி அஹமட் எனும் மாணவன் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அத்துடன், மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த ஆசிரியரை காத்தான்குடி பொலிஸார் தேடி சென்ற நிலையில் அந்த ஆசிரியர் திங்கட்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் ஆசிரியரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேலும், மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம். றிஸ்வி இந்த மாணவன் தாக்கப்பட்டு காயங்களுக்கான புகைப்படங்களையும் நீதவானிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.