பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கம் : அ.தி.மு.க கட்சியில் அதிரடி!!

அ.தி.மு.க கட்சியில் நீண்ட காலமாக பொருளாளராக இருந்து வந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நள்ளிரவில் அப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயாலலிதாவின் சமாதியில் நீண்ட நேரம் மௌன அஞ்சலி செலுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, பல பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த்தார்.

அத்துடன், முதலமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக இராஜினாமா செய்ய வைத்தனர் என ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முதலமைச்சரின் குற்றச்சாட்டை தொடர்ந்து இரவு போயஸ் தோட்டத்தில் ஒன்று கூடிய அ.தி.மு.க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், சற்று முன்னர் அ.தி.மு.க கட்சியில் நீண்ட காலமாக பொருளாளராக இருந்து வந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அ.தி.மு.க கட்சியின் புதிய பொருளாளராக திண்டுகல் சீனிவாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியாவில் வைத்திய சிற்றூழியர் கைது!!

வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட சிற்றூழியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் நான்கு பேரிடம் வைத்தியசாலையில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து 120,000 ரூபாவினைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை இது தொடர்பாக பணம் கொடுத்த ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து, பொலிசார் சூட்சுமான முறையில் இன்று மாலை குறித்த சிற்றூழியரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வலுக்கட்டாயமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர் : பன்னீர்செல்வம் பரபரப்புத் தகவல்!!

முதலமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக இராஜினாமா செய்ய வைத்தனர் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்னால் நீண்ட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மாவின் உந்து சக்தியால் தான் நான் இங்கு வந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது ஏன் மாற்று ஏற்பாடு என்றேன் அசாதாரண சூழ்நிலையில், ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்கள்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம், நான் அழுது புலம்பினேன். முதல்வர், பொது செயலாளர் என இரு பொறுப்பையும் என்னை ஏற்று நடத்த சொன்னார்கள். மாண்புமிகு அவைத் தலைவர் மதுசூதனனை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என சொன்னார்கள்.

எனினும், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் திவாகரன் போன்றோர். சசிகலாவை பொதுசெயலாளராக ஆக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் சசிகலாவிடம் இதை சென்று சொன்னபோது, அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

தமிழகத்தை காப்பாற்ற நான் தன்னம் தனியே போராடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களும், தொண்டர்களும் விரும்பினால் என்னுடைய ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். நான் செய்த நற்பணிகளில் சிலருக்கு பிடிக்கவில்லை.

இவ்வாறு பல பரபரப்புத் தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் குப்பைக்கு வைத்த தீயால் பற்றி எரிந்த வீடு!!

 
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் குப்பைக்கு வைத்த தீயால் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவமானது இன்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த உறவினர் ஒருவர், வீட்டினை முற்றாக சுத்தம் செய்துவிட்டு குப்பைக்கு தீ மூட்டியுள்ளார்.

இந்த தீயானது பற்றி ஏரியவே, அருகில் இருந்த வீட்டு மின் இணைப்பில் நெருப்பு பட்டு வீடு முழுமையாக சேதமடைந்ததுடன், அனைத்து உடமைகளும் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து தீயணைப்பு படையினர் தற்போது தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.

இருந்தாலும் வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், குறித்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரக்கமின்றி 6 பச்சிளம் குழந்தைகளை கொன்ற தாயார்: பதற வைக்கும் சம்பவம்!!

கனடாவில் பிறந்து சில நிமிடங்களே ஆன 6 பச்சிளம் குழந்தைகளை தாயார் கொலை செய்துள்ளது தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் Andrea Giesbrecht என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவர் 6 முறை கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், 6 முறையும் இவர் ஒருமுறைக் கூட மருத்துவரை சந்திக்கவில்லை.

ஒவ்வொரு முறை குழந்த பிறந்தபோதும், சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தையை தூக்கிச்சென்று பொருட்களை அடைத்து வைக்கும் லாக்கரில் வைத்து பூட்டியுள்ளார்.

இவ்வாறு அடுத்தடுத்து 6 பிரசவங்களில் பிறந்த 6 குழந்தைகளையும் லாக்கரில் போட்டு மூடியுள்ளார்.

கனடா நாட்டின் U-Haul நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லாக்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டபோது அதன் உள்ளே குழந்தைகளின் உடல் உறுப்புகள் அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்விவகாரத்தை தொடர்ந்து தாயாரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர். எனினும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

தாயார் குழந்தைகளை லாக்கரில் வைத்து பூட்டி கொன்றாரா? அல்லது குழந்தைகள் இறந்தே பிறந்ததா? என்பது மர்மமாக நீடித்து வந்துள்ளது.

மருத்துவ துறையின் பல்வேறுக் கட்ட சோதனைகளில் 6 குழந்தைகளும் உயிருடன் பிறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், குழந்தைகள் பிறந்ததும் அவற்றை தாயார் தான் லாக்கரில் போட்டு கொலை செய்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழந்தையின் உடலை மறைத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் என்ற மதிப்பீட்டில் ஒட்டுமொத்தமாக 12 ஆண்டுகள் வரை தாயாருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

72 பந்துகளில் 300 ஓட்டங்கள் : T20 போட்டியில் உலகசாதனை படைத்த வீரர்!!

 
இந்திய கிரிக்கெட் வீரர் டி20 போட்டியில் முச்சதம் அடித்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். டெல்லியை சேர்ந்த 21 வயதான துடுப்பாட்டகாரர் மோகித் அலாவத் என வீரரே இச்சாதனையை படைத்துள்ளார்.

ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் மோகித், டெல்லியில் லலிதா பார்க் மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் மாவி லெவன் அணிக்காக களமிறங்கி, பிரண்ட்ஸ் லெவன் அணிக்கு எதிராக இச்சாதனையை படைத்துள்ளார்.

தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய மோகித் 72 பந்துகளில் 14 பவுண்டரி, 39 சிக்சர் அடித்து ஆட்டமிழக்காமல் 300 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளிலும் சிக்சர் விளாசி இந்த மைல்கல்லை அவர் எட்டினார், அவரது அணி 20 ஓவர்களில் 416 ஓட்டங்களை குவித்தது.

டி20 போட்டியொன்றில் இதுவரை உலகில் எங்குமே முச்சத சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உயிர்களை பாதுகாக்க இலங்கை மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு!!

 
இலங்கையில் யானை – மனிதன் மோதல் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் மாத்தறை ராஹுல வித்தியாலயத்தில் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் சஞ்சுல கத்சர மற்றும் நதுன் நவாஞன் ஆகிய மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யானையில் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலான இயந்திரம் ஒன்றை இம்மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

யானை கிராமத்தை நெருங்கும் போது தானாகவே இயங்கி பாரிய சத்தத்தை ஏற்படுத்துவதோடு, யானைக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இயந்திரம் செயற்படும்.

அத்துடன் இது பன்றி மற்றும் மயில்களை விரட்டுவதற்கும், இந்த இயந்திரம் உதவும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த இயந்திரத்தை 1500 ரூபாய் என்ற சிறிய தொகையில் பெற்றுக் கொள்ள முடியும் என குறித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யானை வெடியினால் ஏற்படுகின்ற சுகாதார பாதிப்புகளை இந்த இயந்திரத்தின் ஊடாக கட்டுப்படுத்தவும், உயிர் ஆபத்துக்களை குறைப்பதற்கும் கூடிய வகையில் பயன்படுத்த முடியும் எனவும் அந்த மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி சிறுமி விவகாரம் : விளக்கம் கோரியுள்ளது கல்வி அமைச்சு!!

கனுசியாவை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளாமைக்கு கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த நாகராஜன் கனுசியா எனும் தரம் ஆறு மாணவியை 18 நாட்களாக பாடசாலைகளில் சோ்த்துக்கொள்ளாமை தொடர்பில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியிடப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த நிலையில் 18 நாட்களின் பின்னர் கிளிநொச்சி நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரி மத்திய கல்வி அமைச்சு வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் மேற்படி மாணவியை சேர்த்துக்கொள்ளப்படாமை தொடர்பில் விளக்கம் கோரக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக மாகாண கல்வி அமைச்சு கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.

வலயக் கல்வித்திணைக்களம் சம்மந்தப்பட்ட பாடசாலைகளுக்கு நேரடியாக கடிதத்தை கையளித்து மாணவி சேர்த்துக்கொள்ளப்படாமைக்கான உடனடியான விளக்கத்தை கோரியுள்ளது.

பெண்ணாக மாற ஆசைப்பட்டு வைத்தியரை நாடிய காலியைச் சேர்ந்த 28 வயது இளைஞர்!!

காலி பிரதேசத்திலுள்ள 28 வயதான ஆண் ஒருவர் பெண்ணாக மாற ஆசைப்பட்டு, அதற்காக பெண்கள் ஓமோன் வில்லைகளை உட்கொள்வ தற்காக உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியரிடம் ஆலோசனைகளை கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பெண்கள் ஓமோன் வில்லைகளை உட்­கொள்ளும் பொருட்டு குறித்த நபர் விசேட வைத்­திய நிபுணர் கொல்வின் குண­ரத்­ன­விடம் ஆலோ­ச­னை­களை கேட்­டுள்ளார்.

அதன்­போது, முறை­யற்ற விதத்தில் குறித்த ஓமோன் வில்­லை­களை உட்­கொள்ள வேண்டாம் என அவ்வைத்­தியர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

அத்­துடன் உட­ன­டி­யாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் மன­நல நிபுணர் ரவீன் ஹங்வெல்லவை சந்­திப்­ப­தற்கு நாளொன்றை ஒதுக்கிக் கொள்­வது இதற்கு மிக சிறந்த தீர்­வாகும் என ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இந்த மன­நி­லையின் கார­ண­மாக பெண்கள் ஆடை­களை அணிந்து கொள்ள­வி­ரும்­பினால், அதனை தங்­க­ளு­டைய அறை­யுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டும் என மேலும் அந்­ந­ப­ருக்கு வைத்­திய நிபுணர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இவ்­வாறு பெண்கள் ஆடை­களை அணிந்து கொள்ள விரும்­பு­வ­தனை அறை­யுடன் மட்­டுப்­ப­டுத்­து­மாறு கூறி­வ­தற்­கான காரணம், சமூகம் மற்றும் பாது­காப்பு பிரி­வி­ன­ரி­ட­மி­ருந்து ஏற்­படும் கெடு­பி­டி­களை நீக்கி கொள்­ள­வ­தற்­கே­யாகும் என அவ்­வைத்­தியர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

பாரிய சவர்க்கார நுரைக்குள் 275 மனிதர்கள் : செக் குடியரசில் புதிய கின்னஸ் சாதனை!!

பாரிய சவர்க்­கார நுரைக்குள் 275 மனி­தர் கள் கார் ஒன்­றுடன் நின்று புதிய சாதனை படைத்­துள்­ளனர். செக் குடி­ய­ரசின் மிலாடா பெலேஸ்லாவ் நகரில் அண்­மையில் இச்­சா­தனை நிகழ்த்­தப்­பட்­டது.

மெதேஜ் கோட்ஸ் என்­ப­வரால் கின்னஸ் சாத­னைக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­நி­கழ்வில், 11 மீற்றர் நீளமும் 7.5 மீற்றர் அக­லமும் கொண்ட பகு­தி­யொன்றில் 275 பேர் நின்­று­கொண்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு மத்­தியில் கார் ஒன்றும் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இம்­ ம­னி­தர்­க­ளையும் காரையும் மூடும் வகையில் பாரிய சவர்க்­கார நுரை தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. திரையை அகற்­றி­ய­வுடன் சில விநா­டிகள் மேற்­படி சவர்க்­கார நுரைக்குள் மனி­தர்கள் இருந்­த­னர்.

இதில் பங்­கு­பற்­றி­ய­வர்கள் குறைந்­த­பட்சம் 5 அடி 1 அங்­குலம் (156 சென்­ரி­ மீற்றர்) உயரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என நிபந்­தனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மெதேஜ் கோட்ஸ் 2008 ஆம் ஆண்­டி­லி­ருந்து இத்­த­கைய சாத­னை­களை நிகழ்த்தி வரு­கிறார். 2014 ஆம் ஆண்டு 214 பேரை சவர்க்­கார நுரை­யொன்­றுக்குள் அடக்­கி­ய மை கின்னஸ் சாத­னை­யாக பதிவுசெய்யப்­பட்­டி­ருந்­தது.

தற்போது 275 பேர் மற்றும் ஒரு காரை சவர்க்கார நுரைக்குள் அடக்கி புதிய சாத னை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சவூதியில் வரலாற்றுச் சம்பவம் : பெண்களுக்கு கிடைத்த கௌரவம்!!

ஆணாதிக்க சமூக முறையை கொண்டுள்ள மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில், வரலாற்றில் முதல் முறையாக மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

மகளிர் தின கொண்டாட்டத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பெண்களும், பங்குபற்ற உள்ளதாக அந்நாட்டு கலாச்சார மையம் தகவல் பகிர்ந்துள்ளது.

மேலும் குறித்த நிகழ்வில் பங்குகொள்ளும் மன்னர் குடும்பத்தினர் சார்பில், இளவரசி அல்-ஜவ்ஹரா பிண்ட் பஹத், கல்வித் துறையில் பெண்களின் பங்கு குறித்து பேசவுள்ளதாகவும், அத்தோடு கல்வி, கலாச்சாரம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சவூதி பெண்களின் சாதனைகள், பெண்களின் வளர்ச்சி பங்கு குறித்த கருத்தாடல்களுடன், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மகளிர் தினத்தை கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதியில் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சுதந்திரத்தை வலியுறுத்தி அந்நாட்டு அரசு மீது, கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் பாலின சமன்பாடு தொடர்பான 2015ஆம் ஆண்டு சர்வதேச அறிக்கையில் சவூதி 145 நாடுகளின் தரவுகளில் 134 ஆவது இடத்தை பெற்றிருந்தது.

உலகிலேயே சவூதி அரேபியாவில் மாத்திரமே பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பொது நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த தடைகளை நீக்கக் கூறி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் கலாச்சாரம் மற்றும் பொருளாதார விடயங்களில் சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசானது முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் குறித்த சீர்திருத்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அந்நாட்டு புனிதம் கெட்டுவிடும் எனவும், மத எதிர்ப்பு சிந்தனைகள் வளருமெனவும் அந்நாட்டு இஸ்லாமிய இயக்கங்கள் கூறிவந்த நிலையில் தற்போது முதலாவது மகளிர் தின கொண்டாட்டங்களை, அந்நாட்டு அரசே ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் : வடமாகாண தனியார் பேருந்து சங்கம்!!

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனின் உருவபொம்மை எரியூட்டப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் வடபகுதியிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் உருவபொம்மைகளை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை(09.02) இக் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ். இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

கடந்த 03 ஆம் திகதி வவுனியா உட்பட வடமாகாணத்திலுள்ள இ.போ.ச சாலைகளில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் உருவபொம்மை எரியூட்டப்பட்டுள்ளது.

இச் செயற்பாட்டினை முற்றிலும் வன்மையாக கண்டிப்பதுடன் எம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண மக்கள் பிரதிநிதிகளின் உருவபொம்மைகளை இனி வரும் காலங்களில் எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

குறித்தப் போராட்டம் வியாழக்கிழமை(09) காலை ஏழு மணிக்கு வவுனியாவிலிருந்து பேருந்தில் பேரணியாக யாழ்பாணம் வரை செல்லவுள்ளது.

பின்னர் புனித அடைக்கலமாதா ஆலய முன்றலில் வடமாகாண தனியார் பேருந்து சங்கங்கள் ஒன்றிணைந்து வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் அலுவலகங்களுக்கு பேரணியாகச் சென்று மனுக்கொடுக்க உள்ளோம்.

வடமாகாணத்திலுள்ள ஐந்து தனியார் பேருந்து உரிமையாளர்களும் ஒன்றிணைத்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ் கவனயீர்ப்புப் பேரணியில் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மேலும் நாம் மேற்கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகின்றோம்.

எமது நியாயமான இப் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

மெத்திவ்ஸ்க்கு நாலரை கோடி!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இலங்கை வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ் உட்பட 7 வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி இந்திய ரூபாயாக (இலங்கை பெறுமதி நாலரை கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 799 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

8 அணிகளும் தங்களுக்கு விருப்பமான வீரர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்துள்ளனர். இதில் எந்த அணிகளும் விரும்பி கேட்காத 8 நாடுகளை சேர்ந்த 160 வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தற்போது 639 வீரர்கள் உத்தேச தெரிவு பட்டியலில் உள்ளனர்.

இந்திய வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் அடிப்படை விலை 2 கோடி இந்திய ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் போட்டி தொடருக்கான வீரர்களின் அதிகபட்ச அடிப்படை விலையாகும்.

இதேபோல் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், இயான் மோர்கன், இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஜான்சன், கம்மின்ஸ் ஆகியோருக்கும் அடிப்படை விலையாக 2 கோடி இந்திய ரூபாய் (4 1/2 கோடி இலங்கை ரூபாய்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட், அவுஸ்திரேலிய வீரர்கள் பிராட் ஹாடின், நாதன் லயன், தென் ஆப்பிரிக்க வீரர் கைல் அப்போட், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

சர்வதேச போட்டியில் விளையாடிய 24 இந்திய வீரர்களின் அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். அணிகள் வீரர்களை தேர்வு செய்ய மொத்தம் ரூ.143.33 கோடியை செலவிட முடியும்.

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 9 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 27 பேர் இடம் பெறலாம். இந்த பருவகாலத்தில் மொத்தம் 28 வெளிநாட்டுக்காரர்கள் உள்பட 76 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!!

 
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கடந்த 04.02.2017 ஞாயிற்றுக்கிழமை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில் தங்களை புலனாய்வு பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம்,பூவரசங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை ( 38,22,45 வயதுடைய ஆண்கள்) வவுனியாவில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.02.2017) கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து புலனாய்வு பிரிவினரின் தொப்பி ஒன்று , கத்தி ஒன்று , தங்க நகைகள் , கருப்பு சட்டை ஒன்று, தொலைபேசி மூன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

15, 35500 ரூபா களவாடப்பட்டதாகவும் ஐந்து வீட்டில் தாங்கள் களவாடியதாகவும் சந்தேகநபர் ஒத்துக்கொண்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மூவரும் இன்று (07.02.2017 வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவுள்ளனர்.

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்துவைப்பு!!

 
வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் நேற்று (06.02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட இவ் வகுப்பறைக் கட்டிடத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்துவைத்தார்.

வவுனியா வடக்கு வலயத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் குறித்த பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடவசதி போதாத நிலையில் மாகாண கல்வி அமைச்சால் இக் கட்டிடம் வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலை அதிபர் திருமதி க.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, செ.மயூரன், வவுனியா வடக்கு வலயக் கலவிப் பணிப்பாளர் திரு.சிறிஸ்கந்தராஜா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, குறித்த பாடசாலைக்கு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் நிதியின் கீழ் பல்லூடக எறிகை (புறஜெக்ரர்) ஒன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக், கூகுள், மற்றும் அப்பிள் உள்ளிட்ட 100 நிறுவனங்கள் டிரம்பிற்கு எதிராக வழக்கு!!

பேஸ்புக், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் உள்ளடங்கலாக 100 நிறுவனங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவு திட்டத்திற்கெதிராக வழக்கு தாக்கலொன்றை செய்துள்ளனர்.

சான்பிரான்ஸிகோவிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பேஸ்புக், கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனங்கள உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி 100 நிறுவனங்கள், கூட்டாக இணைந்து டிரம்பின் அமெரிக்க பயணத்தடைக்கு எதிராக வழக்கொன்றை தொடுத்துள்ளனர்.

குறித்த மனுவில் தொழிநுட்பம் மட்டும் ஏனைய வர்த்தக முதலீட்டு நிறுவனங்களும் கையெழுத்திட்டு குறிப்பிட்ட 7 நாட்டவர்கள், அமெரிக்கா வருவதற்கான தடையை நீக்க கோரியே குறித்த வழக்கை தொடுத்துள்ளார்கள்.

மேலும் தற்போது தடையில் உள்ள ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்தும், அமெரிக்காவிற்கு வர விதிக்கப்பட்ட தடைஉத்தரவு ஆணையால் வெளிநாடுகளில் தங்களுடைய சேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைளை விரிவுப்படுத்துவதற்கு, தேவையான திறமைமிகுந்த ஊழியர்களை பெற்று கொள்வதில் மிகுந்த சிரமமப்படுவதாகவும், அதனால் கூடிய விரைவில் தடை உத்தரவை நீக்க வேண்டுமென கோரியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு முன்னணியான 500 நிறுவனங்கள், அமெரிக்காவிற்கு குடியேறிவந்த சந்ததியினராலேயே நிறுவப்பட்டுள்ளதாகவும், எனவே எதிர்கால தொழிநுட்ப, வர்த்தக முன்னேற்றங்கள் குறித்த கவனத்தினை கருத்திற் கொண்டு, குறித்த தடை உத்தரவு நீக்கப்பட வேண்டுமென குறித்த வழக்கில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.