உரிமையாளர் இறுதிச்சடங்கில் கதறி அழுத குதிரை : நெஞ்சை உருக வைக்கும் புகைப்படங்கள்!!

பிரேசிலில் உரிமையாளர் இறுதிச்சடங்கில் அவரின் குதிரை கண்கலங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க செய்துள்ளது.

வாக்னர் டே லிமா பிகுயிரோடோ (34) என்ற நபர் செரினோ என்ற குதிரையை வளர்த்து வந்தார். அவர் தனது குதிரை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 1ம் திகதி ஒரு விபத்தில் சிக்கி பிகுயிரோடோ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இவரது இறுதிச்சடங்கில் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு வந்த குதிரை செரினோ உரிமையாளர் பிகுயிரோடோவின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் குதிரையின் பாசத்தை கண்டு கலங்கினர். அப்போது எடுக்கப்பட்ட உருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காரை திருடியதாக பெண் மீது புகார் : வழங்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா?

பொலிவியா நாட்டில் காரை திருடியதாக பெண் ஒருவர் மீது தவறாக குற்றம் சுமத்தி அவரை கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிவியா நாட்டை சேர்ந்த 52 வயதான தாயார் ஒருவர் 22 மற்றும் 28 வயதான பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். குடும்பம் வறுமையில் வாடியதாலும், கடன் அதிகமாக உள்ளதால் Caranavi என்ற நகருக்கு குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், நகருக்குள் அடிக்கடி கார்கள் திருடுபோயுள்ளது. இடம்பெயர்ந்து வந்துள்ள இக்குடும்பத்தினர் தான் திருட்டிற்கு காரணம் எனக் கூறி மூவரையும் ஒரே மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர், மரத்தின் மீது விஷத்தன்மை வாய்ந்த எறும்புகளை விட்டு மூவரையும் கடிக்க வைத்துள்ளனர்.

இவ்விவகாரம் காவல் துறைக்கு தெரியவந்ததும், உடனடியாக சென்று மூவரையும் மீட்டுள்ளனர். ஆனால், தாயாரின் தொண்டனை பகுதியை எறும்புகள் கடித்து குதறியுள்ளதால் அவரால் மூச்சு விடமுடியவில்லை.

தாயார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.

இரண்டு பிள்ளைகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இவ்விவகாரத்தில் மூவரையும் மரத்தில் கட்டிப்போட்ட நபர்களில் ஒருவரை மட்டும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

நகரில் உண்மையாக கார்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

காரை திருடியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அவலம் : அம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மகளின் சடலத்தை தோளில் தூக்கிச் சென்ற தந்தை!!

இந்தியாவில் உயிரிழந்த தன் மகளின் சடலத்தை வைக்க சவப்பெட்டியும், மயானத்துக்கு கொண்டு செல்ல அம்புலன்ஸ்ம் மருத்துவமனை தர மறுத்ததால் தோளில் சடலத்தை தூக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தந்தை ஒருவர் தள்ளப்பட்டார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள பெச்சமுண்டி கிராமத்தை சேர்ந்த ஒரு நபருக்கு Sumi Dhibar (5) என்னும் மகள் உள்ளார்.
கடுமையான காய்ச்சல் காரணமாக Sumi வை அவர் தந்தை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார், அங்கு சிகிச்சை பலனில்லாமல் Sumi Dhibar உயிரிழந்துள்ளார்.

பின்னர் தன் மகளின் சடலத்தை வைக்க சவப்பெட்டியும், மயானத்துக்கு கொண்டு செல்ல அம்புலன்ஸ் வசதியையையும் அவரின் தந்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

ஆனால் நிர்வாகம் அதை தர மறுத்ததால் மயானம் இருக்கும் 15 கிலோ மீட்டருக்கு மகள் சடலத்தை தோளில் வைத்து தந்தை எடுத்து சென்றுள்ளார்.

இதே ஒடிசாவில் சில மாதங்களுக்கு முன்னர் அம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் தன் மனைவி சடலத்தை ஒருவர் தன் தோளில் சுமந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் சிறையில் கைதிகளிடையே மோதல் : 33 பேர் உயிரிழப்பு!!

பிரேசில் நாட்டின் ரூராய்மா பகுதியில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் 33 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் சிறையில் ஒரே வாரத்தில் கைதிகளிடையே இடம்பெற்ற இரண்டாவது மோதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

முன்னதாக கடந்த 2 ஆம் திகதி அமேசான் மாநிலத்தில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், ரூராய்மா மாநிலத்தில் உள்ள சிறையில் வெள்ளிக்கிழமை இரு பிரிவு கைதிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 33 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் கைதிகளின் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரைக் குறிவைத்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

ஒரு மணி நேரம் நீடித்த மோதலில் இரு தரப்பினரும் கத்திகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிறைக்காவலர்கள் கடுமையாகப் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கைதிகளிடம் இருந்து துப்பாக்கிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடிப்படை வசதிகளின்றி அடைக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், இந்த மோதல் சம்பவங்கள் அரசாங்கம் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்கள் கத்தியை வைத்திருக்க அனுமதி!!

டெல்லி மெட்ரோ தொடரூந்துகளில் பயணிக்கும் பெண்கள் சிறு கத்திகளைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடரூந்துகளிலும், தொடரூந்து நிலையங்களிலும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசின் அனுமதியுடன், டெல்லி மெட்ரோ தொடரூந்து வலையமைப்பின் பாதுகாப்புக்குப் பொறுப்பான மத்திய தொழில் பாதுகாப்புப் படையே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, பாதுகாப்பு அமைப்புக்கும், யாருடைய உயிருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாத நான்கு அங்குல நீளமுள்ள கத்தியை பெண்கள் வைத்திருக்கலாம். தமக்கோ, தமது உடமைக்கோ ஆபத்து ஏற்படக் கூடிய நிலையில் குறித்த கத்தியைப் பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கத்திகளைப் பயன்படுத்துவோர், தொடரூந்து நிலையத்தில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டெல்லி மெட்ரோ தொடரூந்துகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களில் 91 சதவீதமானவை பெண்களாலேயே பெண்களிடமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய அனுமதியின்படி, திருட்டுகளில் ஈடுபடும் பெண்களும் கத்திகளைப் பயன்படுத்த முடியுமே’ என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

விசித்திரமான சிற்பங்களை உருவாக்கும் பனித்திருவிழா!!

 
பல்வேறு விசித்திரமான சிற்ப உருவாக்கங்களுடன் 8 இலட்சம் சதுர அடிப்பரப்பில் சீனாவின் ஹார்பின் நகரில் பனிச் சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. அதனால் தனித்துவ மிக்கப் பனிச் சிற்பங்கள் பல்வேறு கலைஞ்சர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஹார்பின் நகரிற்கு அருகில் இருக்கும் சோங்ஹுவா பணியாற்றிலிருந்து பனிக்கட்டிகள் வெட்டப்பட்டு சிற்பங்களாக வடிக்கப்படுகின்றன. அதில் விலங்குகள், கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற சின்னங்கள், கேலிசித்திர கதாபாத்திரங்கள் என விதவிதமான சிற்பங்களும், கட்டிடங்களும் பார்வையாளரை பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஹார்பின் நகரில் தற்போது -25 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இந்நிலையில் சுமார் 500 சிற்ப கலைஞ்சர்களின் உழைப்பில் இந்தப் பனிச் சிற்பங்கள் உருவாகியிருக்கின்றன.

இவ் பனிச் சிற்பத் திருவிழா, மார்ச் மாதம் வரை நடைபெறும். மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து பனிச் சிற்பங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 1.5 கோடி பேர் வரை வரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என் தந்தைக்கு கிடைத்த சிறந்த பரிசு : உதயநிதி ஸ்டாலின்!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவர் பதவி மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருப்பதை – என் தந்தையின் உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘‘பொதுவாக என் மனசு தங்கம்’’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் மத்தியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய, உதயநிதி ஸ்டாலின் இந்த கருத்தை வௌியிட்டார்.

சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. ஓய்வின் போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- எனது தந்தை மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவருடைய உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு.

கேள்வி:- நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்?

பதில்:- என்னுடைய படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கமோ, நடிகர் சங்கமோ இதுவரை எந்த உதவியும் செய்தது கிடையாது. இதனால் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

கேள்வி:- ஜல்லிக்கட்டு பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- அரசியல் ரீதியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. எனது தந்தை தலைமையிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

கேள்வி:- பொதுவாக எம்மனசு தங்கம் படம் குறித்து?

பதில்:- நான் முதன் முதலாக வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். நானும் சூரியும் ஏற்கனவே ´சரவணன் இருக்க பயமேன்´ என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம்.

அதன் பின்னர் இந்த படத்தில் மீண்டும் ஒன்றாக நடிக்கிறோம். தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். முதன்முதலாக அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய நடிப்பில் வழக்கமாக இருக்கும் நக்கல் இந்த படத்திலும் நிறையவே எதிர்பார்க்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சாதனையாளர்கள்!!

வெளிவந்துள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வட்டக்கச்சி மகா வித்தியாலமும், கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியும், வணிக்கப் பிரிவில் சென்திரேசா பெண்கள் கல்லூரியும், கலைப்பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயமும், தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியும் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளன.

கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலய மாணவி காசிலிங்கம் தனுசா இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையை பெற்றுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி சிம்மேந்திரன் சஜீபா இரண்டு ஏ,பி பேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் இராமமூர்த்தி செந்தீபன் இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்கள்.

கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களான சந்திரகேசரன் சோபனபிரியன், 3ஏ பெறுபேறுகளை பெற்று முதலாம் நிலையையும், நாகேந்திரன் கேசவராஜ் இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி சௌந்தரராஜா யோகதர்மினி ஏ, இரண்டு பி பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, உயிரியல் தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் ஏ,இரண்டு பி பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலையையும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி தர்மகுலபாலசிங்கம் டிலோஜன் மூன்று பி பெறுபேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சிவகுமாரன் தர்சிகா இரண்டு பி,சி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளனர்.

வணிகப்பிரிவில் கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி கந்தசாமி டிலக்சிகா மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று முதல் நிலையிலும், பளை மத்திய கல்லூரி மாணவி அண்ணாவிப்பிள்ளை ஆன்நிலக்சனா மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையினையும், கலைப்பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் இரவீந்திரன் துவாகரன் மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையையும் பெற்றுள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மைதான எல்லை வேலி கொங்கிறீட் தூண்கள் நாட்டும் நிகழ்வு!!

 
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மைதான எல்லை வேலி கொங்கிறீட் தூண்கள் நாட்டும் நிகழ்வு இன்று (07.01.2017) நடைபெற்றது.

கடந்த 30 வருடங்களாக விமானப்படையினர் எல்லைக் குட்பட்டிருந்த மைதானம் மீண்டும் பாடசாலையிடம் ஒப்படைக்கப்பட்டு, எல்லை வேலி கொங்கிறீட் தூண்கள் இடும் பணி இன்று புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை அருள்தந்தை சத்தியராஜ் அடிகளாரின் இறை ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலை 125 ஆண்டுகளுக்கு முன்பாக கத்தோலிக்க குருக்களால் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அவர்களால் வழிநடத்தப்பட்டு தற்போது திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளாள் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நீ உருப்பட மாட்டாய்’ என்றாா் அதிபா் : கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற மாணவன்!!

தனது பாடசாலை அதிபரின் கண்டிப்பான வார்த்தைகளே தனக்கு கற்க வேண்டும் என்ற சவாலை ஏற்படுத்தியதாக உயிரியல் தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்ற கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் தெரிவித்துள்ளார்.

இவா் கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவா். இவர் ஒரு கூலித் தொழிலாளியின் புதல்வராவார்.

ஊடகவியலாளரிடம் செவ்வியளித்த போது, ஆரம்ப கல்வி கற்ற பாடசாலையில் எள்ளுகாட்டில் இருந்து செல்பவா்களை ஏளனமாகவே பார்ப்பது வழமை. எள்ளுக்காட்டில் உள்ளவா்கள் படிக்கத் தெரியாதவா்கள் என்றெல்லாம் கூறுவார்கள்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு உயிரியல் தொழிநுட்ப பிரிவில் உயா்தரம் கற்பதற்காக இந்துக் கல்லூரிக்கு செல்வதற்காக புறப்பட்ட போது அதிபா் ஏளனமும் கண்டிப்பும் நிறைந்த வார்த்தைகளையே கூறி அனுப்பி வைத்தார்.

அதுவே எனக்கு சவாலக அமைந்தது. ஆனாலும் அந்த வார்த்தைகள் தனக்கு இன்னமும் அழுத்தத்தை கொடுப்பதாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பின்தங்கிய பிரதேச மாணவர்களை ஏளனமாக பார்ப்பதை அனைவரும் கைவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் முதல் இடங்களை பெற்ற மாணவர்களின் முழுவிபரம் இதோ!!

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை மாத்தறை ராஹுல வித்தியாலயத்தின் ஆர்.ஏ.நிசால் புன்சர பெற்றுக்கொண்டார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் இரண்டாவது இடத்தை கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.ரொஸான் அக்தாரும், மூன்றாவது இடத்தை கல்முனை கார்மேல் பாத்திமா வித்தியாலயத்தின் ஜே.கிலெரின் தில்ஸானும் அடைந்துள்ளனர்.

பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலாம் இடத்தை குருணாகலை மலியதேவ மகளீர் பாடசாலையின் கே.டி.எம்.அமாயா தர்மசிறி பெற்றார்.

இரண்டாவது இடத்தை காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தின் யூ.ஜி.சத்துர ஜயசிங்க மற்றும் மூன்றாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரியின் எம்.பி.சவிந்து திமால் தானுக என்பவர் பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வர்த்தக பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அகலங்க ராஜபக்ஸ நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கொழும்பு புனித ஜோசப் வித்தியாலயத்தின் விந்துல பெரேரா அந்த பிரிவில் இரண்டாம் இடத்தையும், ஹிங்குராக்கொட ஆனந்த மகளீர் கல்லூரியின் நிபுனி ரூபசிங்க என்ற மாணவி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கலைப்பிரிவு முதலாம்6 இடத்தை கண்டி மகளீர் உயர் பாடசாலையின் இந்தீவரி கவரம்மன பெற்றுள்ளார்.

அந்த பிரிவில் இரண்டாம் இடத்தை மானிப்பாய் இந்து கல்லூரியின் பீ.குருபரேஸன் பெற்றுக்கொண்டுள்ளார்.

மூன்றாம் இடத்தை கிரிபத்கொடை விஹாரமகாதேவி பாடசாலையின் ஏ.பாரமி என்ற மாணவி பெற்றுள்ளார்.

இதுதவிர, இயந்திரவியல் தொழினுட்ப பிரிவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன் ஜே.கனகசுந்தரம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை மாத்தளை விஞ்ஞான கல்லூரியைச் சேர்ந்த நிஸல் கொப்பேகடுவை அடைந்துள்ளார்.

அந்தபிரிவில் மூன்றாம் இடத்தை கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த ஏ.ரனதுங்க என்பவர் பெற்றுள்ளார்.

உயிர்முறை தொழினுட்ப பிரிவுவில் கேகாலை சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயத்தின் மலிதி தில்ரங்கி நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அதேவேளை, அந்த பிரிவில் இரண்டாம் இடத்தை கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தின் எம்.தத்சரணி அடைந்துள்ளார்.

மூன்றாம் இடத்தை ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தின் இல்யாஸ் பாதிமா பெற்றுக்கொண்டுள்ளார்.

பொது பாடநெறிகளுக்கு அமைய நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை கொழும்பு மியுஸியஸ் வித்தியாலயத்தின் திலார ஏக்கநாயக்;க பெற்றுள்ளார்.

பொது பாடநெறி பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை தனிப்பட்ட முறையில் பரீட்சைக்கு தோற்றிய தும்மோதர, பெல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தனஞ்ஜய விமுக்தி கருணாரத்வும்.

காலி, உலுவிட்டிகே பிரதேசத்தைச் சேர்ந்த லஹிரு சசங்க ஆகியோரும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அகில இலங்கை ரீதியாக ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்த மாணவர்கள் விபரம்!!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாவட்ட ரீதியாக, மாகாண ரீதியாக, பாடசாலை மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஒவ்வொரு துறையிலும் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வர்த்தகப்பிரிவு (Commerce) – கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அகலங்க ராஜபக்ஸ முதலிடம் பெற்றுள்ளார்.

கலைப்பிரிவு (Arts) – கண்டி உயர்தர மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் இன்டிவரி கவரமன்ன முதலிடம் பெற்றுள்ளார்.

உயிரியல் (Biology) – மாத்தறை, ராஹூல பாடசாலையில் ல்வி கற்றும் நிசல் புன்சர முதலிடம் பெற்றுள்ளார்.

பௌதீகவியல் (Physics) – குருணாகல் மலியதேவ மகளிர் பாடசாலையில் கல்வி கற்றும் அமாயா தர்மசிறி முதலிடம் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பம் (Engineering technologies) – யாழ்ப்பாணம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கனகசுந்தரம் சதுர்ஸஜான் முதலிடம் பெற்றுள்ளார்.

உயிரி அமைப்புகள் தொழில்நுட்பங்கள் (Bio Systems technologies) – கேகாலை கோல்டன் ஜூபிலி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கே. மலினி சசிகலா தில்ரங்க முதலிடம் பெற்றுள்ளார்.

குறித்த பெறுபேறுகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவன் கனகசுந்தரம் சதுர்ஸஜான் பொறியியல் தொழில்நுட்பத்தில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தாயின் விடா முயற்சியால் மாவட்டத்தில் நான்காம் இடம் பெற்ற மாணவன்!!

இணையத்தளம் மூலம் இன்று(07.01.2017) வெளியாகியுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில் தோற்றிய கல்குடா வலய வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவன் ஸ்ரீமோகன் ஸ்ரீலக்சன் மூன்று ஏ தர சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க உப தலைவர் வ.பிரியராஜ் கூறுகையில், தந்தையை இழந்தும் வறிய நிலையில் தாய் மற்றும் சகோதரர்களின் விடா முயற்சியாலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பாலும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த மாணவன் தனது குடும்பத்திற்கும் கல்விச் சமூகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் பெருமையைச் சேர்த்திருக்கின்றார். அதற்காகப் பாராட்டுகின்றேன் எனத் தெரிவித்தார்.

இம்மாணவனின் தாயார் வே.உமாதேவி கருத்துக் கூறுகையில், எனது கணவர் மகன் ஐந்தாம் தரம் கல்வி பயிலும் போதே கடந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இறந்து விட்டார். அதனால் எனது மகனை படிப்பிப்பதற்காக பெரும் கஷ்டப்பட்டேன். எனது மகனின் இச்சாதனையை காண்பதற்கு எனது கணவர் இப்போது இல்லை என மன வேதனையுடன் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

யாழில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர் விபரம்!!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் பெற்ற புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் – மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய யாழ்ப்பாணம் – சுன்னாகம் – ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன், கனகசுந்தரம் சதுர்ஸஜான் முதலிடம் பெற்றுள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதாயக் கல்லூரியில் முதன்முறையாக தொழில்நுட்பத் துறையில்இந்த மாணவன் தோற்றி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை அதிபர் அவர்களுக்கும் எனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் இந்தவேளையில் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எங்கள் பாடசாலையில் தொழில்நுட்பப் பிரிவிற்கு ஆசிரியர்கள் இல்லாத போதும் வெளிவாரியான ஆசிரியர்களைக் கொண்டு எமது அதிபர் எமக்குக் கல்வி போதித்தார்.

இதற்குக் கனடா பழைய மாணவர் சங்கமும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என கூறினார். மேலும், எதிர்காலத்தில் நான் மின்னணுத் தொழில் நுட்பவியலாளராக உருவாக வேண்டுமென ஆசைப்படுகிறேன் என சதுர்ஸஜான் இதன்போது தெரிவித்தார்.

மேலும் அதே பாடசாலையில் இந்த வருடம் கணிதத்துதுறையிலும் ஒரு மாணவன் 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 25 ஆவது இடத்தைப்பெற்றுள்ளமையும், பொறியியல் துறையில் செல்வன்.ஜோய் மாவட்ட மட்டத்தில் ஏழாவது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளமையும் எமது கல்லூரிக்குப்பெருமையளிப்பதாக உள்ளது என பாடசாலை அதிபர் மு.செல்வஸ்தான் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர் தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தின் இல்யாஸ் பாத்திமா அரோச மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, உயிரியல் பிரிவில் கிண்ணியா மத்திய மகா வித்தியால மாணவன் எம். ரோஷேன் அக்தார் இரண்டாமிடம் பெற்றுள்ளதுடன், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் க்லேரின் திலுஜான் உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளார்.

வறுமை சாதனைக்கு ஒரு தடையல்ல : வரலாற்றுச் சாதனை படைத்த மாணவி!!

வரலாற்றில் முதல் தடவையாக கல்குடா கல்வி வயத்திற்குப்பட்ட சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்ற மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட குடும்பிமலை பிரதேசத்தை சேர்ந்த கோவிந்தமூர்த்தி பிரசாளினி எனும் குறித்த மாணவி வர்த்தகப் பிரிவில் இம்முறை 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 44வது இடத்தினைப் பெற்றுள்ளார்.

வரலாற்றில் முதல்தடவையாக சந்திவெளி விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக பிரிவில் 4 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். குறித்த பாடசாலையில் கலைப் பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவு மாத்திரம் உள்ளது.

மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மாணவியின் தந்தை சைக்கிளில் விறகு எடுத்து விற்று தங்களின் குடும்பத்தையும் தனது படிப்புக்குரிய செலவுகளையும் செய்து வந்தாக தெரிவித்தார்.

எனது குடும்பிமலை பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பிரதேசம், அங்கு உயர்தரம் படிப்பதற்குரிய பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் பல கஸ்டத்தின் மத்தியில் சந்திவெளி பாடசாலையில் படித்தோம்.

எனது தங்கைகளில் ஒருவர், இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கும், மற்றையவர் 5ம் தர புலம்மைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

எனது பிரதேசம் கல்வி நிலையில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற பிரதேசம், கல்வியைத் தொடர துடிக்கும் மாணவர்கள் அதிகமானவர்கள் தங்களின் வாழ்க்கையை இடை நடுவில் விட்டுவிட்டு இளவயது திருமணம் மற்று பெண்கள் பல்வேறுபட்ட துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர்.

இவ்வேளையில் நான் எதிர்காலத்தில் உயர்தரப் படிப்பினை தொடர்ந்து எனது குடும்பிமலை பிரதேசம் மற்றும் சந்திவெளி பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்குரிய சேவைகளைச் செய்வேன்.

இன்றைய நிலையில் ஊடகங்கள் உயர்தரத்தில் உயர் நிலையை அடைந்த மாணவர்களை மாத்திரம் இலக்கு வைத்து செய்திகளைப் பரப்புகின்றார்கள்.

என்னைப்போன்ற பல்வேறு நின்னல்களை சந்தித்த பிரதேசங்களில் இருந்து வெளியில்வரும் மாணவர்களை கண்டுகொள்ளாமை மனவேதனை அளிப்பதுடன் எதிர்காலத்தில் ஊடகங்கள் அவற்றை செவ்வனவே செய்வார்கள் என நினைக்கின்றேன்.

எனது குடும்ப நிலையினை நான் கூறியிருக்கின்றேன், எனது குடும்பிமலை பிரதேசத்தை மையப்படுத்திய எனது எதிர்கால கல்வி நகர்வுகள் இருப்பதினால் எனது உயர் கல்வியைத் தொடர எமது புலம்பெயர் வாழ் தமிழர்கள், அத்துடன் எமது நாட்டு நல்ல உள்ளம்படைத்தவர்கள் எனக்கு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டுமென தயவாக கேட்டுக்கொள்கின்றேன் என மாணவி பிராசாளினி தெரிவித்தார்.

இன்றைய கல கட்டத்தில் எனது குடும்பத்தின் வாழ்வாதார நிலைமை ஒரு சைக்கிள் விறகுடன்தான் செல்கின்றது.

எனது மூன்று பெண் பிள்ளைகளையும் படிக்கவைக்க வேண்டும், அதிலும் வர்த்தக பிரிவில் மூத்த மகள் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறாள், உயர்கல்வியைத் தொடர எனது மகளின் கல்விக்கு உதவி செய்ய விரும்பியவர்கள் முன்வந்து உதவியைச் செய்யவேண்டுமென மாணவயின் தயார் தெரிவித்தார்.

தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு காதல் ஜோடி!!

கனடாவை சேர்ந்த பிலிப்- பாராஹா ஜோடி தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கனடாவை சேர்ந்தவர்கள் பிலிப்- பாராஹா, கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகியவர்கள் இடையே காதல் மலர்ந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் வந்த போது, தமிழ் முறைப்படி திருமணம் நடந்ததை பார்த்துள்ளனர்.

தமிழ் கலாச்சாரத்தால் ஈர்க்கப்படவே, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இதன்படி திருவண்ணாமலையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நண்பர்களின் புடைசூழ நேற்று திருமணம் வெகு விமர்சையாக நடந்தது.

இதுகுறித்து மணமகள் பாராஹா கூறியதாவது, தமிழ்நாட்டில் நடந்த திருமண சடங்குகளைப் பார்த்து வியந்து போனேன். எனக்கும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.

சுற்றலா சென்றதால் உரிய திருமண வயதை நாங்கள் கடந்து விட்டோம். எனினும் இருக்கிற காலத்திலாவது தம்பதியாக வாழ்வோம் என முடிவு செய்து எனது ஆசையை பிலிபிடம் தெரிவித்தேன்.

அவரும் சம்மதம் தெரிவித்ததால், எங்களது திருமணம் தமிழ் கலாச்சாரப்படி இனிதாக நிறைவேறியது, இந்த தருணம் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத தருணம் என்று தெரிவித்துள்ளார்.