பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் விதமாக யாசகம் பெற்ற பெண் ஒருவருக்கு 20 ரூபா அபராதம்!!

beggars

தனது சிறு வயது மகள்மார் இருவர் மற்றும் 6 வயது மக­னுடன் களுத்­துறை போதிக்கு அருகில் கடந்த போயா தினத்­தன்று வாக­னங்­க­ளுக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடை­யூறை ஏற்­ப­டுத்தும் வகையில் யாசகம் பெற்ற குற்­றத்தை ஏற்றுக் கொண்ட 38 வய­தான மூன்று பிள்­ளை­களின் தாய்க்கு களுத்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் உதேஷ் ரண­துங்க 20 ரூபா அப­ராதம் விதித்துத் தீர்ப்­ப­ளித்தார்.

இப்­பெண்ணின் 9 வயது மற்றும் 8 வயது மகள்மார் மற்றும் 6 வயது மக­னையும் பெண்ணோ அல்­லது அவ­ரது கண­வனோ பொறுப்­பேற்க முன்­வ­ரா­ததால் இம் மூன்று பிள்­ளை­க­ளையும் சிறுவர் இல்­லத்தில் அனு­ம­திக்கும் படி நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இப்­பெண்ணின் 9 வயது மகள் பண்­டா­ர­கம பிர­தேச பாட­சாலை ஒன்றில் கல்வி பயில்­வ­தா­கவும் விடு­முறை தினங்­களில் பொரு­ளா­தாரப் பிரச்­சினை கார­ண­மாக தாயுடன் யாசகம் பெறச் செல்­வ­தா­கவும் பொலிஸ் நிலை­யத்தில் தெரிவித்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தினை முடக்கிய மாணவனுக்கு கிடைத்த அதிஷ்ரம்!!

11

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை நேற்று (17.11.2016) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார்.

அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து நேற்று பிற்பகல் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் பின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் திறமையுடைய இளைஞர்களை ஊக்குவிப்பது எங்கள் கடமையென பதிவிட்டுள்ளார்.

12 13

ஹெரோயின் குளிசைகளை விழுங்கிவந்த நபர் கைது!!

heroin

இந்தியாவில் இருந்து ஹெரோயின் குளிசைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இந்தியாவின் சென்னையில் இருந்து நேற்று மதியம் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய குறித்த சந்தேகநபர் விழுங்கி வந்த ஹெரோயின் குளிசைகளை அகற்றுவதற்காக, நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விழுங்கியிருந்த ஹெரோயின் குளிசைகளில் 5 ஹெரோயின் குளிசைகள் தற்போதைய நிலையில் அகற்றப்பட்டுள்ளதாக விமானநிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கான முன்னாள் தூதுவர் கைது!!

jj

மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் வடக்கில் தற்கொலையை தடுக்கும் அமைப்பு உதயம்!!

vavuniya

வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர் யுவதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் ‘கை கொடுக்கும் நண்பர்கள்’ எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எடுப்பவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இவ் அமைப்பானது மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தனிமையில் பிழையான முடிவுகளை எடுக்காமலிருப்பதற்காக 024-324 4444 என்கிற தொலைபேசி இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

அரசியல், மத சார்பு அற்ற அமைப்பாக இயங்கும் இவ்வமைப்பானது பல பொது அமைப்புக்களை இணைத்து செயற்பட்டு வருகிறது. அத்துடன் வவுனியாவில் தொண்டராக சேர்ந்து சேவையாற்ற விரும்புகிறவர்களையும் உள்வாங்க காத்திருக்கிறது.

தொண்டர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20.11.2016 காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை நடைபெறவுள்ளதால் தொண்டராக சேர விரும்புவோர் 18.11.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல்3.00மணிக்கு முன் 0774409313 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

வவுனியா பாரதி முன்பள்ளியின் கலைவிழா!!

 
வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் கடந்த 13.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரதி கலைவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதி அரசாங்க அதிபர், வடமாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர் முன்பள்ளி வவுனியா, வவுனியா பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை கீதத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்புரை,கௌரவ விருந்தினர் உரை, கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

1 image-0-02-03-0dd611343526b9d1359e0c5706fc3fd1cb28b8ea19fabd3f9c3446d337738327-v image-0-02-05-4dc3dc7a7de0d0c8b0a786a08fcb22060d8d2ea4b6b3a55c6e5fa2741c536d4d-v image-0-02-05-8d59e575068e4f83597bdf5579b681517ba5efb31f79b99b4fcf5263b2018aaf-v image-0-02-05-50d5d98461ecf604729623f0ef6ab1db763acb571ce8f7982178b3f7786216ad-v image-0-02-05-64f9da5578bca280518d5d5fe58ab8f67af4fd287b634a1ee7024ab95ba2a316-v image-0-02-05-86e799338e412bd2830a0ef329960e7103191b2943a898b809c57c5887db362d-v image-0-02-05-181c863ca46a3a9540b6747282a56fd638770f7dec43443d93340554bfb976a5-v image-0-02-05-397f0d92a14de7cb96f50255a7574a2fc987f2d4bb642a33848e5f967a3ac8da-v image-0-02-05-461be3ec1d78f3eca6b8987d6c4a5c444f07cdc5bea141568b51244a28ba16a3-v image-0-02-05-05490be1b97feb5915bfcd0751cd72d4d420cc50db6b2a757ed2fcc1e2358de4-v image-0-02-05-31050f9f2c13a27f9e96121ada5b247f603d79032d087f321ac7e4c8a34c51d6-v image-0-02-05-8514769998acd3760d6735cc2dc736b23a52f61d0263cb51c6c7d787f103c3bd-v image-0-02-05-a2b8e170ea82d67f4fae2e236ea0f97b613c5f3566adb5ed150e919d1708034c-v image-0-02-05-a36a5088fef629f6c6be639661d99c23b30fe6dbdf2b9a7416de6109bd59d661-v image-0-02-05-aa8e2688a818babd69cf1dce2b266ccb2c8b90aa7147fd1822af510218d7d093-v image-0-02-05-d00025a609c1dab1df6e7c7683e73617fef84d4f88be5194e941b90d946c9886-v image-0-02-05-f691c6ac8d20f1fbc394eecad765c56ed081a07d7247dea69624ad025764da41-v image-0-02-05-fe2f2bff11f8c497487691e0cbd9ec053dc56ffc3b33acbb94875a328b5b3131-v

உலகின் அழகான குட்டி தம்பதி : மொத்தமே 70 இன்ச் தான்!!

untitled-1

உலகின் மிக குட்டியான தம்பதியாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் Paulo Gabriel மற்றும் Katyucia Hoshino.

பிரேசிலில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று முதன்முறையாக மக்களுக்கு தோன்றியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்நெட் வழியாக இருவரும் சந்தித்தாகவும், ஒருவரை ஒருவர் பிடித்து போகவே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று லண்டனில் இருவரின் உயரமும் அளக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இருவரின் உயரமே சேர்த்து 70 இன்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனிலியாவின் புதிய அவதாரம்!!

genilia

கடந்த 2003ல் கௌதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான காக்க காக்க 2011 ஆம் ஆண்டு ஹிந்தியில் ‘ஃபோர்ஸ்’ (Force) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

சூர்யாவின் கதாபாத்திரத்தில் ஜோன் ஆப்ரஹாமும், ஜோதிகா கதாபாத்திரத்தில் ஜெனிலியாவும் நடித்திருந்தனர்.

இதன் இ2 ஆம் பாகம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது, முதல் பாகத்தில் ஜெனிலியா இறப்பது போல படம் முடிந்திருக்கும். எனவே அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் அவர் ஆவியாக நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

என்னை நோக்கி பாயும் தோட்டா உருவான விதம்!!

film

என்னை நோக்கி பாயும் தோட்டா உருவான விதம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துவரும் இப்படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய விடயங்களில் மட்டும் இரகசியம் காத்து வருகிறது படக்குழு.

இப்படம் உருவான விதம் குறித்து கெளதம் மேனன்..

”என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படம் 80% முடிந்து வைத்திருந்த கதைதான். என்னிடம் தனுஷும் 2017 இறுதியில் தான் திகதிகள் இருக்கிறது என்றார். ஒ.கே ப்ரதர்… இக்கதையை படித்துப் பாருங்கள், உங்களுக்குப் பிடித்திருந்தால் இக்கதையில் நான் கொஞ்சம் பணியாற்ற வேண்டும் என்றேன்.

அக்கதையை படித்து முடித்தவுடன் “உடனே படப்பிடிப்புக்குப் போக முடியுமா?” என்று கேட்டார். அதில் நாயகன் வேடத்துக்கு தனுஷ் எப்படியிருப்பார் என்று சிறுசிறு சந்தேகங்கள் எல்லாம் இருந்தது.

ஒரு நாள் நாயகி தேர்வுக்காக டெஸ்ட் ஷூட் வைத்திருந்தேன். அப்போது “ப்ரோ.. ஒரே ஒரு காட்சி மட்டும் தான். உங்களுக்காக இல்லை. நாயகிக்காகதான்” என்றவுடன், “இதில் என்ன இருக்கிறது.. இதோ வருகிறேன்” என்றார். நான் சொன்ன லுக்கில் வந்து நடித்துக் காண்பித்தார். அப்போதே இவர் வேற லெவல் நடிகர் என்று முடிவு செய்துவிட்டேன்.

ஒரு பெண்ணை ஒரு இடத்திலிருந்து காப்பாற்றி அழைத்து வர வேண்டும். அப்புறம் ஒரு அண்ணன் கதாபாத்திரம் இருக்கும். இவர்கள் இருவரையும் தேடும் ஒரு பயணம் தான் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.” என்று தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.

வவுனியா செட்டிகுளம் பாடசாலைகளுக்கு அமைச்சர் சத்தியலிங்கத்தினால் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கல்!!

 
வீரபுரம் பிரிவிற்குட்பட்ட அரசடிக்குளம் அ.த.கபாடசாலை, பெரியபுளியாலங்குளம் பிரிவிற்குட்பட்டகக்காரங்குளம் இளங்கோ வித்தியாலயம், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் மற்றும் முதலியார்குளம் றோ.க.பாடசாலை என்பவற்றிற்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்குமாகாண சுகாதார அமைச்சருமாகிய DR.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2016ம் ஆண்டுக்கான நிதியில்இருந்து நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15.11.2016 செவ்வாய்க்கிழமை குறித்த பாடசாலைகளுக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக மாணவர்களிடம் குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதிகள் கையளிக்கப்பட்டது.

இதன்போது அமைச்சரின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், மாணவர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

சிறுநீரக பாதிப்பின் தாக்கம் அதிகம் கொண்ட பிரதேசம் என்ற வகையில் சிறுவயதிலிருந்தே மாணவர்கள் சுத்தமான குடிநீரை பருகுதலை ஊக்குவித்தல் என்னும் அமைச்சரின் விசேட செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சரின் நிதியில் இருந்து குறித்த நீர் சுத்திகரிப்புஇயந்திரத்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 img_6730 img_6736 img_6755

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணியும் நிகழ்வு!!

 
ஐயப்பன் விரத்தினை முன்னிட்டு நேற்று வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று பத்திற்கு மேற்ப்பட்ட பக்த அடியவர்கள் மாலை அணிந்தனர்.

1 image-0-02-06-1f7126ed656d4628e29812d953bb9da18f3cf3d367fecdbee63f7300913a708d-v image-0-02-06-2e0917574ff0f5f8d5eb374e290fc0665ac1f43b0e51e3733f7f981e8d9016c6-v image-0-02-06-8111f7377ca621d180346e2144f1ec542c6c3a879e4fa33af221a62b0b7e028e-v image-0-02-06-002877120c89593881474f1ca4b074ae99f96f4cd37eea851588216ffbcd73a1-v

கருப்பினத்தவரை உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த மனித மிருகங்கள் : அதிர்ச்சி வீடியோ!!

african

தென் ஆபிரிக்காவில் இரண்டு வெள்ளை ஆபிரிக்கர்கள், கருப்பினத்தவரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Willem Oosthuizen, Theo Martins Jackson என்ற இரு வெள்ளையர்கள் இனவெறியை தூண்டும் வகையில் 20 வயதான Victor Mlotshwa என்ற கருப்பின இளைஞரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்துள்ளனர்.

பின்னர், பெட்ரோல் ஊற்றுவோம், சவப்பெட்டியில் பாம்பை விடுவோம் என மிரட்டி குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதைக்கண்ட பலர் இக்கொடூர செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், குறித்த வீடியோ நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட Victor Mlotshwa நியாயம் வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2017 ஜனவரி 25ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

மேலும், அதுவரை குற்றவாளிகள் இருவரையும் விசாரணை காவலில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவில் சரிந்து விழும் நிலையில் மின்கம்பம் : அச்சத்தில் மக்கள்!!

 
வவுனியா சாந்தசோலை, கிறசர் வீதியிலுள்ள மின்கம்பம் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு மேல் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இவ்விடம் தொடர்பாக பல தடவைகள் வவுனியா மின்சார சபைக்கு அப்பகுதி மக்கள் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை.

நேற்று முன்தினம் (15.11.2016) மாலை 6.38 மணிக்கு வடமாகாண மின்சாரசபை மக்கள் தொடர்பகம் (021 2024444) தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டவர் தெரிவிக்கையில்,

முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு நான்கு மணித்தியலாயத்தில் திருத்தப்பணிக்கு வேலையாட்கள் செல்வதாக தெரிவித்திருந்தார். எனினும் நேற்று 16.11.2016 பிற்பகல் ஒரு மணிவரை மின்கம்பத்தில் திருத்தவேலைகள் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக இம் மின்கம்பம் வீதியிலிருந்து சரிந்துள்ளதுடன் அருகிலுள்ள வீட்டிற்கு மேல் விழும் நிலையில் உள்ளது. இவ்வீதியிலுள்ள 5 வீடுகளுக்கு மின்கம்பம் கிழே விழுந்தால் சேதம் ஏற்படுவதுடன் உயிரிழப்பும் ஏற்படவாய்ப்புகள் உள்ளதையும் அவ்வீதியால் பொதுமக்கள் பயணம் செய்வதையும் தெரிவித்தும் அதிகாரிகள் திருத்தப்பணிகள் மேற்கொள்ள முனவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

dsc05312 dsc05313 dsc05314

அவதானம் : எதிர்வரும் 48 மணிநேரத்திற்கு கடும் மழை!!

rain

வங்காளவிரிகுடாவின் தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு, சப்ரகமுவ, மத்திய, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 48 மணிநேரத்திற்கு கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வவுனியா பொலிசாரால் பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது!!

 
வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் கொள்ளை, வீட்டிற்குள் புகுந்து பொதுமக்களை கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தியதாக தெரிவித்து வவுனியா பொலிசாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் வடமாகாணங்களில் குறிப்பாக சிலாவத்துறை, மன்னார், செட்டிகுளம், கோவில்குளம், இராசேந்திரகுளம், பொன்னாவரசங்குளம், அடம்பன், தச்சன்குளம், மாங்குளம், கனகராயன்குளம், ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுடன் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

நெடுங்கேணி, செட்டிகுளம், கிளிநொச்சி, இளவாளை போன்ற பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேரை வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உதவி பொறுப்பதிகாரி பிரசாத் சிறிவர்த்தன தலைமையில் செயற்பட்ட குழுவினரின் தீவிர கண்காணிப்பின் பின்னர் இவர்களைக் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், கொள்ளையில் ஈடுபடுத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கரவண்டி, பல்சர் ரக மோட்டார் சைக்கில், கத்திகள் போன்ற பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் வடமாகாணத்தில் பல காலமாக கொள்ளை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுடதுடன் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து பொதுமக்களை அச்சுறுத்தி இரவு வேளைகளில் முகத்தை துணியால் கட்டி வீடுகளுக்குள் சென்று தங்க நகைகள், பணம், பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளதுடன் இவர்கள் கொள்ளையடித்த நகைகளை யாழ். நகைக்கடை ஒன்றிலிருந்து பன்னிரண்டு இலட்சம் ரூபா பெறுமதியானவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகளில் இவர்கள் அளித்த வாக்குமூலங்களையடுத்து பல கோணங்களில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுக்கு வேறு குழுக்களுடன் மற்றும் ஆவா போன்றவற்றுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற கோணத்திலும் மேலதிக விசாணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

dsc_0698 dsc_0699 dsc_0701 dsc_0702 dsc_0704 dsc_0708 dsc_0709 dsc_0711 dsc_0713 dsc_0714 dsc_0716 dsc_0718 dsc_0719 dsc_0721 dsc_0722 dsc_0723 dsc_0724 dsc_0730 dsc_0733 dsc_0735

மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சி : இலங்கை மக்களின் வரைபடத்தை வெளியிட்டது பேஸ்புக்!!

fb

பல்வேறு நாடுகளின் உயர் தீர்மான மக்கள் தொகை வரைபடங்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மலாவி, தென்னாபிரிக்க, கானா, ஹெய்டி மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும்.

எதிர்வரும் மாதங்களில் இன்னும் பல தரவுகள் வழங்கப்படும் என பேஸ்புக் இணைப்பு ஆய்வகம் வாக்குறுதி அளித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள கிராம பகுதிகளில் கம்பியில்லா தொடர்பு சேவைகள் தொடங்கும் திட்டத்தில் ஆர்வம் கொண்டுள்ளது.

அதன் முயற்சியின் ஒரு பகுதியாக மக்கள் தொகை வரைபடங்களை பேஸ்புக் இணைப்பு ஆய்வகம், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் உலக வங்கி இடையே ஒரு கூட்டு முயற்சியாக வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் மற்றும் நண்பர்கள் வணிக ரீதியாக கிடைக்கும் செயற்கைக்கோள் படங்களின் மூலம் கட்டிடங்களை அடையாளப்படுத்தி மென்பொருள்கள், கணக்கெடுப்பு தரவு மற்றும் ஒரு சில பிற ஆய்வு திட்டங்களை பயன்படுத்தி மக்கள் தொகை மதிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பேஸ்புக் அதன் பூர்வாங்க கண்டுபிடிப்புக்களை, 23 நாடுகளில் ஆய்வு செய்வதற்கு பரிந்துரைத்துள்ளது. குறித்த 23 நாடுகளிலும் நகரத்திற்கு 63 கிலோ மீற்றர் அருகில் 99 வீதமான மக்கள் தொகை வாழ்வதாகவும், 43 வீதமான மக்கள் நகரத்திற்குள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே, போதியளவு உயர் தரவு விகிதங்களில் 63 கிலோ மீற்றருக்குள் தகவல் தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும் என்றால், இந்த 23 நாடுகளில் 99 சதவீத மக்களை இணைக்க முடியும் என Tiecke என்பவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் செயற்கைக்கோள் உதவியுடன் கிராமப்புறங்களில் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப முயற்சியை கையாண்டு வருகின்றது. அதற்கமைய மக்கள் தொகை வரைபடங்கள் பேஸ்புக்கின் வடிவமைப்பு ஓட்டத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.