ஈரானிடம் இருந்து மீண்டும் மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதோடு, எண்ணெய் இறக்குமதி நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஈரான் அமைச்சருடன் இலங்கை இலங்கையின் பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி நேற்று விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். 2012ம் ஆண்டு முதல் ஈரானுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டமையால் இலங்கை அரசாங்கம் அந்த நாட்டிடம் இருந்து மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி – கொகாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்சுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதான கணவன் மற்றும் 23 வயதான அவரது மனைவியுமே பலியாகியுள்ளனர்.
மேலும், இவர்களது இரண்டு வயதான குழந்தை சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிப்பவர்களால் புகையிரதங்களில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைக்காக அறவிடப்படும் தண்டப் பணத்தை மூவாயிரம் ரூபாவாக அதிகரிக்க புகையிரத திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புகையிரத மிதிபலகையில் பயணித்தல், புகையிரதம் நிறுத்தும் முன்னர் இறங்குதல், புகையிரதத்திற்குள் புகைத்தல், மது அருந்துதல் மற்றும் ஏனைய பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட தவறுகளுக்கே தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புகையிரதத்தில் யாசகம் செய்வோர் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் குறித்த தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.இதுவரை குறித்த தவறுகளுக்காக 100 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும், பயணிகளால் கிடைத்து வரும் அதிக முறைபாடுகள் காரணமாக இந்த தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, யாழ்.வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக உறவினர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளார்.வடமராட்சி கிழக்கு, வத்திராயன் வடக்கைச் சேர்ந்த கந்தப்பு ஜெயபாலு (52 வயது) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவராவர்.
வவுனியாவுக்கு தொழில் நிமித்தம் சென்ற இவரை 08–10–2010 அன்று ஹெரோயின் விற்பனை மற்றும் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் வைத்து இவர் விசாரணை செய்யப்பட்ட பின்னர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இவர் மீதான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணைகள் பூர்த்தியடைந்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், கைதியின் மனைவி அங்கு சென்றிருந்தார்.
வவுனியா நீதிமன்றத்திற்குச் சென்றிருந்த கைதியின் மனைவி, அங்கு கணவர் ஆஜராக்கப்படாத நிலையில் அங்கிருந்து அனுராதபுரம் சிறைக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் கணவரைப்பற்றி விசாரித்த போது, அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என சிறைச்சாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணவரைப் பார்ப்பதற்காக மனைவி அனுராதபுரம் வைத்தியசாலைக்குச் சென்றபோது, கைதி மாரடைப்பால் மரணமானதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மனைவி அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த கணவரின் சடலத்தை பொறுப்பேற்றுக்கொண்டார். கைதியின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் இடம்பெற்றது.
வவுனியா சிந்தாமணி ஆலய வீதியில் இன்று(25.072016) காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வாகன சாரதி உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று காலை 7 மணியளவில் பணிக்கு மோட்டார் சைக்கிலில் சென்றுகொண்டிருந்த தவசீலன்(34 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சிந்தாமணிகோவில் வீதியிலுள்ள சந்தியில் எதிரே வந்த மோட்டார் கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் படுகாயமடைந்த குறித்த நபர் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் காரை செலுத்தி வந்த சாரதியை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
பெற்ற தந்தையை இரண்டு புதல்வர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அனுராதபுரம் கெபிற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புதல்வர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
கடந்த 22ம் திகதி புதல்வர்களின் தாக்குதலுக்குள்ளான தந்தை பதவியா மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்து குறித்த நபரைவைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். பதவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் பின்னர்; அனுராதபுரம்மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அனுராதபுரம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் நேற்று சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் கயாமடைந்ததாக தெரிவித்த போதிலும் பிரேதப் பரிசோதனையின் போதுதாக்குதலுக்கு இலக்காகியே காயமடைந்தமை தெரியவந்துள்ளது.
தமது தாயை தொடர்ச்சியாக தந்தை துன்புறுத்திய காரணத்தினால் புதல்வர்கள் தந்தையைதாக்கியுள்ளதாக விசரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குவைத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உலகளவில் அங்கு அதிகபட்சமாக 129.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
வளைகுடா நாடுகளில் எப்போதுமே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். கோடைக் காலத்தில் சொல்லவே வேண்டியதில்ைல. ஆனால் இந்த முறை வழக்கத்துக்கும் அதிகமாக குவைத் நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
உலக வரலாற்றிலேயே கடந்த வியாழக்கிழமை, குவைத்தில் உள்ள மித்ரிபா பகுதியில் 54 டிகிரி செல்சியஸ் (129.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது.
வெயிலின் கோர தாக்குதலால், குவைத் மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 1913ம் ஆண்டு ஜூலை 10ல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 56.7 டிகிரி செல்சியசாக (134.06 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகி இருந்தது.
ஆனால் இந்த பதிவின் உண்மைத்தன்மை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால், இப்போது குவைத்தில் பதிவாகி உள்ள வெப்பநிலை, உலகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனின் தந்தை கணேசன் (வயது 73) நேற்று காலமானார்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறைக்காவலர்களை பணயமாக வைத்து போராட்டம் நடத்தியதாக விசேட அதிரடிப்படையினரால் தாக்குதலுக்குள்ளாகி அனுராதபுரம் சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு யூன் மாதம் 29 ஆம் திகதி மரணமாகிய க.நிமலரூபனின் தந்தையான கணேசனே காலமாகியுள்ளார்.
புற்றுநோயால் சில காலமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் யாழ் போதனா வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமாகியுள்ளார்.
இவரது சடலம் தற்போது வவுனியா, நெளுக்குளம் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நிமலரூபனின் தயார் தெரிவித்தார்.
யாழ். இணுவில் பகுதியில் பாதசாரிகள் கடவையில் வைத்து மோட்டார் சைக்கிளில் மோதுண்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் முதியவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை பொலிஸார் காப்பாற்ற முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி 60 வதான தி.செல்வராசா என்பவர் இணுவில் பகுதியில் பாதசாரிகள் கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றுள்ளார்.
இதன் போது வேகமாக மோட்டார் சைக்கில் வந்த இளைஞர் ஒருவர் முதியவர் மீது மோதியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் முதியவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.
எனினும், பொது மக்களின் அழுத்தம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் முதியவர் அனுமிதிக்கப்பட்டார்.
குறித்த வைத்தியசாலையில், அவருக்கு 13 மணித்தியாலங்களாக சிகிச்சை வழங்கப்படாமல் இருந்த நிலையில் அந்த முதியவர் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் காலை 7.30 மணிக்கு குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரிடம் மரணம் தொடர்பான விசாரணைக்கு உறவினர்கள் சென்றபோது சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறமுடியாது என கூறியுள்ள பொலிஸார், உறவினர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
எவ்வாறாயினும், பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையே முதியவரின் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமாரின் விசாரணைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
டெல்லியில் கைதான விபசார தரகருடன் இந்திய கிரிக்கெட் வீரர்களான டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் வசிப்பவர் பிரீதிந்திரநாத் சன்யால், 62 வயதான இவருக்கு வசந்த் கஞ்ச் மற்றும் லக்னோ நகரிலும் சொந்தமாக வீடுகள் உள்ளன.
திடீர் பணக்காரராக உருவெடுத்த இவருடைய வீடுகளில் அண்மையில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, சப்தர்ஜங் என்கிளேவ் வீட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவரை அவர்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து பெண்களை இந்தியாவுக்கு கடத்தி வந்து அவர்களை சன்யால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து சன்யால் கைது செய்யப்பட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணை இவருக்கு அஜய் அகலவாட் என்பவர் தான் சன்யாலுக்கு அறிமுகம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கும் 2 கிரிக்கெட் வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. தற்போது அவர்கள் டோனியும், சுரேஷ் ரெய்னாவும் என கூறப்படுகிறது.
டோனியும், சுரேஷ் ரெய்னாவும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டோனியின் பிறந்த நாளை அஜய் அகலவாட்டின் குர்கான் பண்ணை வீட்டில் கொண்டாடிய போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவருடன் என்ன தொடர்பு என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றிப்பெற்று அசத்தியுள்ளது.
தமிழக வீரர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி இரண்டாவது இன்னிங்சில் மட்டும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விவி ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் கடந்த 21ம் திகதி தொடங்கியது.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 566 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, உமேஷ் யாதவ் மிராட்ட, முதல் இன்னிங்சில் 243 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, பாலோ ஒன் பெற்றது மேற்கிந்ததிய தீவுகள்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய மேற்கிந்திய தீவுகள், மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ஓட்டங்கள் எடுத்தது.
நான்காவது நாள், தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய மேற்கிந்திய தீவுகள், 231 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.
இதன் மூலம் இந்திய அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. தற்போது 4 போட்டிகள் டெஸ்ட கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்நிலைபெற்றுள்ளது.
சீனா வனவிலங்கு பூங்காவில், புலியிடம் சிக்கிய தனது மகளை மீட்க சென்ற தாய் வேறொரு புலியிடம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தலைநகர் பிஜிங்கில் உள்ள சபாரி வனவிலங்கு பூங்காவிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பூங்காவில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவான குறித்த காட்சி தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில், பூங்காவில் சைபீரியன் புலி உள்ள பகுதியில் பார்வையாளர்கள் பயணித்து வந்த கார் ஒன்று நிறுத்தப்படுகிறது.
பின்னர், காரிலிருந்து ஒரு இளம் பெண் கிழே இறங்கி சாலையில் நிற்கின்றார். அப்போது திடீரென புலி ஒன்று தாவி வந்து அவரை இழுத்துச் செல்கிறது.
உடனே காரில் இருந்த அவரது தாய் மற்றும் மற்றொரு நபர், அப்பெண்ணை மீட்க புலியை துரத்தி செல்கின்றனர்.
இதன்போது, மகளை மீட்க சென்ற தாயை வேறொரு புலி கடுமையாக தாக்கியுள்ளது, இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு இளம் பெண், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூங்காவில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதை Yanqing மாவட்ட அரசு உறுதி செய்துள்ளது.
சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகம் கூறியதாவது, பார்வையாளர்கள் சொந்த வாகனத்தில் பூங்காவை சுற்றி பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பயணத்தின் போது வாகனத்திலிருந்து கிழே இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பிரபல இந்து கோவிலுக்கு பாதுகாப்பு அதிகாரியாக முஸ்லீம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள புனே லோனாவாலா வை சேர்ந்தவர் ஜாவேத்கான்.இவர் கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்க சென்று, 2001 ம் ஆண்டு இண்டியானாவில் நிரந்தரமாக குடியேறியுள்ளார். மேலும் அங்குள்ள உள்ளூர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.
டெக்வான்டா என்ற தற்காப்பு கலையில் 8 முறை கருப்பு நிற பெல்ட்கள் மற்றும் கிக்பாக்ஸிங்கில் சம்பியன் பட்டம் வென்ற இவர், தற்போது அமெரிக்காவின் இண்டியான பொலிஸ் நகரில் உள்ள பிரபல இந்து கோயிலின் பாதுகாப்பு பணியை கவனிக்கும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜாவேத் கூறியதாவது:எங்கள் குடும்பத்தில் சில பேர் இந்துக்கள்,மேலும் இந்து,முஸ்லீம் மதங்கள் வேறுபாட்டில் நம்பிக்கை கிடையாது.
இதையும் மீறி நாம் அனைவரும் இந்தியர்கள், இதனால் நான் வேறு எதுவும் சிறப்பாக செய்யவில்லை,என்னுடைய வேலையைதான் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
சீனாவில் தற்போது பெய்து வரும் கன மழையில் 225 பேர் பலியாகிவுள்ளதாகவும் மத்திய ஹீ பெய் மாகாணத்தில் 2.5 இலட்சம் பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மற்றும் மத்திய சீனாவில் இடைவிடாது பெய்த மழையில் ஹ_பெய், ஹெனான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரமும், தகவல் தொடர்பும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இதேவேளை மழை காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கும் என சீன அரசு அறிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் ஒரு மாத விடுமுறையினை கழிப்பதற்காக கடத்த 8 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்கீழ் சுற்றூலா பயணிகள் பிச்சையெடுப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.அன்றாட நடவடிக்கைகளுக்கு பணம் போதாமையினாலே தான் பிச்சையெடுத்தாக கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிவுட் நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த சுல்தான் திரைப்படம் கடந்த 6ம் திகதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியான சுல்தான் முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி ரூபாயை வசூலித்தது.
வெளியான மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்த இந்தப்படம் ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’, ‘ஃபேன்’ மற்றும் சல்மான் கானின் ‘பிரேம் ரடன் தன் பாயோ’ ஆகிய படங்களின் முந்தைய வசூல் சாதனையை முறியடித்தது.
முதல் நான்கு நாட்களில் 142 கோடியே 62 லட்சம் ரூபாயை சம்பாதித்ததன் மூலம், ‘ஹவுஸ் புல்’ (ரூ.107 கோடி), ‘ஏர்லிப்ட்’ (ரூ.127 கோடி) ஆகிய இந்த ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனைகளை ‘சுல்தான்’ முறியடித்தது.
விரைவில், உலகளாவிய பொலிவுட் பட வசூல் சாதனையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் “தூம் 3” (542 கோடி) என்ற இலக்கையும் கடந்து பல்வேறு புதிய சாதனைகளை சுல்தான் உருவாக்கும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி வெளியான இரண்டே வாரங்களில் இந்தியாவில் மட்டும் 388.96 கோடி ரூபாயும், இதர உலக நாடுகளில் 21.5 மில்லியன் அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்புக்கு சுமார் 145 கோடி ரூபாய்) வசூலித்ததன் மூலமாக உலகளாவிய அளவில் 534 கோடி ரூபாயை சுல்தான் வசூலித்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் தூம் 3 படத்தின் வசூல் சாதனையான 542 கோடி ரூபாயை சுல்தான் முறியடித்துவிடும் என்றும் யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.