யாழ். மாவட்ட அதிபர்களுக்கான, பாடசாலை சட்டம் குறித்த அறிவுறுத்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பாடசாலை நேரத்தில் ஏதேனும் குற்றச்செயல்கள் இடம்பெறுமாயின், அதற்கு முதலில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அதிபர்கள் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது தெரிவித்தார்.
சமுதாயம் திருந்தவேண்டுமானால் தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தெரிவித்தார்.
மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் மீண்டும் ராம்குமாரை காவலில் எடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது காவல்துறை.
ஆதாரத்தை அழிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது பொலிஸ் என்கின்றனர் ராம்குமாரின் வழக்கறிஞர்கள்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், தனியார் நிறுவன மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. கொலையில் சந்தேகப்படும் ராம்குமார் என்ற நபரை, நெல்லையில் கைது செய்தது தனிப்படை.
இந்த வழக்கில், ‘ ராம்குமார் மட்டும்தான் குற்றவாளியா? அவருக்குப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார்? காவல்துறையில் சுவாதியின் நண்பர் கொடுத்த வாக்குமூலத்தை வெளியிட மறுப்பது ஏன்?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர் அவரின் வழக்கறிஞர்கள்.
இந்நிலையில், புழல் சிறையில் குற்றவாளியை அடையாளம் காட்டும் அணிவகுப்பு, மூன்று நாட்கள் பொலிஸ் காவல் என அடுத்த கட்டத்தை நோக்கி வழக்கு நகர்ந்து வந்தது.
தற்போது, மீண்டும் ராம்குமாரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது காவல்துறை.
இதை ராம்குமாரின் வழக்கறிஞர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புழல் சிறையில், விசாரணை கைதிகளுக்கான பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராம்குமார்.
கழுத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள் நன்கு ஆறிவிட்டதால் இயல்பாகப் பேசும் நிலைக்கு வந்திருக்கிறார். அவரைத் தனியாக அடைத்து வைக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. அவருடன் இரண்டு கைதிகள் தங்கியுள்ளனர். அவர்கள் கைதிகள் அல்ல. கைதிகள் போர்வையில் இரண்டு பொலிஸ் தங்கியுள்ளனர்.
யாருடனும் அவர் விரிவாகப் பேசிவிடக் கூடாது என்பதற்காக, தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருக்கிறது பொலிஸ். இது வழக்கின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது என்கிறார் வழக்கறிஞர் ராமராஜ்.
மேலும் அவர் தொடர்ந்து, சிறையில் ராம்குமாரை சந்திக்கச் செல்பவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். சிறைக்குள் அவரைச் சுற்றியுள்ள பொலிஸாரால் மனரீதியான அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்.
ஏற்கெனவே மூன்று நாட்கள் பொலிஸ் காவல் முடிந்து புழல் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களும் அவரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நடித்துக் காட்ட வைத்து வீடியோ பதிவு எடுக்க பொலிஸார் முயற்சி செய்தனர்.
அப்போதைக்கு முடியாததால், தற்போது மீண்டும் ஒருநாள் விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் பொலிஸார்.
சம்பவ இடத்தில் இந்தக் கலர் சட்டை அணிந்திருந்தார்; இந்தக் கைப்பையில்தான் ஆயுதம் எடுத்துச் சென்றார்’ என வீடியோ பதிவு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
படுகொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை முற்றிலும் அழித்துவிட்டு, புதிய வீடியோ பதிவின் மூலம் குற்றவாளி இவர்தான் என உறுதிப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டனர்.
இந்த அக்கறையை வேறு ஏதாவது வழக்கில் இவர்கள் காட்டியிருக்கிறார்களா, மறு விசாரணை என்ற பெயரில் உண்மைக் குற்றவாளிகளை திசை திருப்பிவிடும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம். பொலிஸ் காவலுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றார் விரிவாக.
இது தொடர்பாக பொலிஸ் தரப்பில் விசாரித்தபோது, நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்திற்குள் தேவைப்படும் அளவுக்கு ஆதாரங்களைத் திரட்டிவிட்டோம். இன்னமும் விசாரணை முடியவில்லை.
எனவேதான், மீண்டும் காவல் விசாரணைக்கு அனுமதி கோருகிறோம். வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
புழல் சிறையில் அவரைச் சுற்றியும் பொலிஸார் உள்ளனர் என்பது சுத்தப் பொய் என்று தெரிவித்தனர் காவல்துறை அதிகாரிகள். .
பிரேசிலில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் கணபதி வேகநடை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவரது சகோதரர் திருப்பதியும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ராணுவ வீரர் கணபதி அடுத்த மாதம் பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 20 மீற்றர் வேகநடை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இவரது குடும்பத்தினர் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ளனர். இருப்பினும் அவரது தந்தை பிரேசில் செல்லும் தனது மகனுக்காக 3 லட்சம் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கணபதி ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவரது குடும்பத்தினர், அவர் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கவுள்ள விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஜார்கண்டில் சிறுவன் ஒருவனுக்கு 6 வருடமாக நாய் பால் கொடுத்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் தனாபாத் பகுதியில் சுபேந்திர சிங்- பிங்கி குமாரி ஆகிய தம்பதியினர், சாலையோரமாக பழரசக் கடை ஒன்று நடத்தி வருகின்றனர். இவரது மகன் மோகித் குமாருக்கு (10), அவன் நான்கு வயது இருக்கும்போது , அப்பகுதியில் உள்ள நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது.
இந்த சம்பவம் இவரது பெற்றோர்களிடையே பயத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சிறுவன் பக்கத்து குடியிருப்பில் உள்ள ஒரு நாயிடம் பால் குடிப்பதற்கு முயன்றுள்ளான், அப்போது அந்த நாய் மோகித்தை கடித்து விட்டது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, நாய் கடித்ததற்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் நாயிடம் பால் குடிக்கும் செயலுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து மருத்துவரிடம் வினவிய போது, நாய் பால் குடிப்பதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது, ஆனால் தொற்றுநோய் பரவும் ஆபத்து தான் உள்ளது எனக் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குறித்து குமார் சங்கக்கார பாராட்டு வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்படவுள்ளார். இது தொடர்பில் பலரும் பலவிதமாக கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் சங்ககார இவ்வாறு பாராட்டு வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த விக்கட் காப்பாளருமான குமார் சங்கக்கார முரளி தொடர்பில் மிகவும் உன்னதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளமையானது சங்கக்காரவின் சிறந்த குணத்திற்கு எடுத்துக்காட்டாகவுள்ளது.
முத்தையா முரளிதரன் இலங்கைக்கு புகழையும், பெருமையையும் தேடித்தந்த ஒருவர். அத்துடன், முரளி இலங்கையை என்றும் நேசிக்கும் ஒருவர் என சங்கக்கார தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, முத்தையா முரளிதரன் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தனது நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கும் ஒருவர் என குறிப்பிட்டு முரளியை சங்கக்கார பாராட்டியுள்ளார்.
வேதாராண்யம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேதாராண்யம் அருகே கரும்புலத்தில் உள்ள சீதாள மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் 4ஆம் நாள் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் தேரை இழுத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் சரவணக்குமார்(15) என்ற சிறுவன் தேரின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது பொது மக்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தேர் சக்கரத்தின் அடியில் சிக்கி கொண்டான்.
தேர் சிறுவன் மேல் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
தகவலறிந்த அப்பகுதி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பின்பு இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவட்டை என்ற குக்கிராமத்தில், பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கோடாரியால் கொத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் மாத்திரமன்றி படுவான்கரை பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காக்காச்சிவட்டை 1 ஆம் வட்டாரம், பாடசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றிலே இந்தத் துயரச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர்களில், ஒரு வயதும் 6 மாதங்களேயான பிரசாந்தன் சஸ்னிகா என்ற குழந்தையும் அவருடைய தாயான பேரின்பம் விஜித்தா என்ற 24 வயதுடைய பெண்ணும், வீட்டு வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, சடலங்களாக மீட்கப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட விஜித்தாவின் தந்தையான 56 வயதுடைய கந்தையா பேரின்பம், கடும் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி குற்றுயிராய்க் கிடந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக, மட்டக்களப்பு போதனா, வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு எடுத்துச் செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
வீட்டின் சமையலறை உள்ளிட்ட அறைகள் இரத்தத்தினால் தோய்ந்து இருந்த நிலையில், கிணற்றின் சுவர் பகுதிகளில், ஆங்காங்கே இரத்தக்கறைகள் படிந்திருந்தன. குழந்தை மற்றும் தாயினது சடலங்கள், குப்புறக் கவிழ்ந்த நிலையில், கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்ததுடன், மோப்ப நாயுடன் சென்றிருந்த மட்டக்களப்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள், சுமார் ஒன்றை மணிநேரத்துக்குள், கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பேரின்பம் விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் என்ற 25 வயதுடைய நபரை பொலிஸார் கைதுசெய்தனர்.
தனது தந்தையின் வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்துக்கு அப்பால் வசித்து வந்த பிரசாந்தனைத் திருமணம் முடித்த விஜித்தா, தன்னுடைய தந்தையின் வீட்டிலே, பிரசாந்தனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இருவருக்கும் முதலாவது குழந்தையொன்று பிறந்து இறந்துள்ளது. இந்த நிலையிலேயே பின்னர், இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளன.
சண்டை போட்டுவிட்டு பிரசாந்தன் தலைமறைவாகிவிடுவதுடன், குடும்பத்துடன் சில நாட்களுக்கு தொடர்பைப் பேணுவதே இல்லை என்றும் அறியமுடிகின்றது.
இரண்டாவது குழந்தையின் பிறப்பில் சந்தேகம் கொண்டே பிரசாந்தன் தன்னுடைய மனைவியுடன் ஒவ்வொரு நாளும் சண்டையிட்டுள்ளார். மதுபோதையில் வரும் அவர், சில நாட்களில் மனைவியையும், ஏன், குழந்தையும் கூட கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார் என்றும் அறியமுடிகிறது.
கணவனின் கட்டுக்கடங்காத செயற்பாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாத விஜித்தா, இது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸில் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் இவ்விருவரையும் கடந்த 22ஆம் திகதியன்று அழைத்த பொலிஸார், விசாரணை நடத்தியுள்ளனர். பிரசாந்தனின் அட்டகாசமும் கொடுமைகளும் தாங்கிக்கொள்ள முடியாதவை என்பதனால், அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்த முடியாது என்றும் தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும், மனைவியான விஜித்தா, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், விஜித்தாவுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு விருப்பம் என்று, பிரசாந்தன் அன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இவ்விருவரும் கலந்துபேசி, 28 ஆம் திகதியன்று அறிவிக்குமாறு சமரசம் செய்து, இவ்விருவரையும் அவரவரின் வீடுகளுக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர்.
கணவனின் அச்சுறுத்தல் காரணமாக, பக்கத்து வீடுகளில் வசிக்கும் உறவுக்காரப் பெண்களை, பாதுகாப்புக்காக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து தங்க வைப்பதை விஜித்தா வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
சம்பவ தினமான சனிக்கிழமையும், அவ்வாறே இரண்டு பெண்கள், விஜித்தாவின் வீட்டில் உறங்குவதற்காக வந்துள்ளனர். தந்தையான பேரின்பம், அருகிலுள்ள மற்றொரு வீட்டில் உறங்குவதற்காகச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், இரவு 9 மணியளவில் விஜித்தாவின் கைத்தொலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்திய பிரசாந்தன், தான் இன்றிரவு வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாதுகாப்புக்காக வந்திருந்த பெண்களை அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு, விஜித்தா காத்திருந்துள்ளார்.
சுமார் 10 மணியளவில் போதையில் வந்த பிரசாந்தன், ‘நாமிருவரும் இணைவதா, இல்லையா என்பது தொடர்பில், இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தான் முடிவு தெரியும்’ என்று கூறியுள்ளார்.
வாக்குவாதத்திலும் ஈடுபட்டதனை, இவற்றையெல்லாம், அக்கம் பக்கத்து வீட்டார் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரத்தில், அவ்வீட்டில் மயான அமைதி நிலவியுள்ளது. அப்படியாயின் அவ்விருவரும் சமாதானமாகச் சென்றுவிட்டனர் என்று எண்ணிய தாங்கள், நித்திரைக்குச் சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்து வீட்டார் தெரிவித்தனர்.
அன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில், தன்னுடைய வீட்டுக் கிணற்றில், பாரமான பொருட்கள் விழும் சத்தம், பக்கத்து வீட்டில் படுத்திருந்த கந்தையா பேரின்பத்தின் காதுகளுக்குக் கேட்டுள்ளது.
சத்தத்தில் சந்தேகம் கொண்ட அவர், தன்னுடைய வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அங்கு கோடாரியுடன் நின்றுகொண்டிருந்த மருமகனான பிரசாந்தன், அவரையும் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
அவரின் அபயக்குரல் கேட்டு ஓடோடி வந்த அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள், இரத்தம் ஒழுக, ஒழுக அவரை ஆட்டோவில் ஏற்றி, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு அன்றிரவே, எடுத்துச்சென்றுள்ளனர். போகும் வழியிலேயே, அவர் தனக்கு நேர்ந்ததை கூறி, மரண வாக்குமூலத்தையும் அளித்து விட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த வெல்லாவெளி, பொலிஸார், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த சடலங்கள் தொடர்பில் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
எனினும், கொலைகளைச் செய்தார் என்று சந்தேகிக்கப்படும் பிரசாந்தனும், தனக்கு எதுவுமே தெரியாதது போல அங்கு, குழுமியிருந்த கூட்டத்தோடு கூட்டமாக நின்று உலாவுவதை, பொதுமக்களும், ஏனையவர்களும், அவதானித்து கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், இரத்தம் தோய்ந்திருந்த தலையணையை நுகர்ந்த மோப்பநாய், பிரசாந்தன் நின்றுகொண்டிருந்த இடத்துக்குச் சென்று, அவர்மீது தாவியுள்ளது. சந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்த வெல்லாவெளிப் பொலிஸார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்தனர்.
இந் நிலையில், களுவாஞ்சிகுடி சுற்றுலா, நீதவான் நீதிமன்ற நீதிபதி யு.எல்.எம்.றிஸ்வி மற்றும், மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் எச்.எம்.ஏ.தர்மசேன ஆகியோரின், முன்னிலையில் கிணற்றிலிருந்த சடலங்கள் இரண்டும் மீட்கப்பட்டு, நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள் இன்று (25.07.2016) பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீமான் ஆ.நடராஜன் ( இந்திய துணைத்தூதர்) சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், வடமாகண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் கௌரவ விருந்தினராக தி.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர்) , கு.சிதம்பரநாதன் (பீடாதிபதி- தே.க.கல்லூரி வவுனியா), ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அறிவொளி நூற்றாண்டு மலர் நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய சம்பவங்கள் சமாதானத்தை நேசிக்கும் அனைவருக்கும் கவலை தரக்கூடியவை. சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அவாவிநிற்கும் நிலையில் உயர்கல்விப் பீடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வு சந்தோசம் தரக்கூடியதல்ல வெட்கப்படவேண்டியவை.
ஆனால் தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகமான சக்திகளுக்குத் தீனி போடக்கூடியது. பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற இவ்வாறான சம்பவங்கள் முதல் முறையானவையல்ல.
தென்னிலங்கையில் தமிழ் மாணவர்களுக்கெதிராக பல்வேறு சம்பவங்கள் நடந்தேறியிருந்தன. அதற்கு இத்தகைய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதற்காக இதனையாரும் நியாயப்படுத்த முடியாது.
1977ல் தென்னிலங்கையில் தமிழர்களுக்கெதிராக இனவாத செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது இங்கிருந்த சிங்கள மாணவர்கள் ஒரு கீறலுமின்றி தென்னிலங்கைக்கு அனுப்பிவைத்த பெருமை இப் பல்கலைக்கழக சமூகத்தினருக்குண்டு.
பழையன கழிதலும் புதியன புகுதலும் தொல்லியல் மரபு. பன்மைச் சமூகத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடனும் கலாச்சார பாரம்பரியங்களை பரஸ்பரம் புரிந்து மதித்து ஏற்றுக்கொள்வதன் மூலமே நல்லிணக்க சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப முடியும்.
மாணவ சக்தி மகத்தான சக்தி என்பதனை புரிந்து கொண்டு நல்லிணக்க சமூகத்தின் பங்காளிகளாகவும் பயிற்றுவிப்பாளர்களாகவும் புடம்போடப்படல் வேண்டும். மாறாக இதனை ஒரு இனப்பிரச்சினையாக க் காட்டி அரசியல் ஆதாயம் தேடும் இனவாதிகளின் வேசத்தை புரிந்து கொண்டு இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப சகலரும் பாடுபடவேண்டும்.
பல்கலைகழகத்திற்குள் மட்டுமல்ல தேசிய ரீதியாக செயற்பாடுகளை உளப்பூர்வமாக செயற்படுத்தப்படல் வேண்டும். அதனை விடுத்து வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களின் அத்துமீறிய சட்டரீதியற்ற செயற்பாடுகள் -குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை அமைத்தல் போன்றன அரசினதும் படையினரதும் ஆசிர்வாதத்துடன் தொடர்ந்தும் நடைபெறுவது சிறுபான்மை மக்களின் மனதில் கலக்கம் ஏற்பட வழிசமைக்குமேயன்றி சமாதானத்திற்கான திறவுகோலாக அமையாது என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
குழந்தைகளுக்கு சொக்லேட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.ஒரு சிட்டுக்குருவியின் முன்னால் நாலைந்து தங்க மோதிரங்களையும், சிறிது தானியங்களையும் வீசி எறிந்தால், அது தானியங்களின் பக்கம்தான் திரும்பும்.
நமக்கு வேண்டுமானால் தங்க மோதிரம் பெரிதாக இருக்கலாம். ஆனால் சிட்டுக்குருவிக்கு தங்க மோதிரம் ஒரு பொருட்டே அல்ல; அதற்கு தேவை தானியம். அதுதான் அதற்கு உணவு.இதேபோல் தேவைகள், விருப்பங்கள் என்பது உயிரினங்களுக்கு இடையே மட்டுமின்றி, மனிதர்களுக்கு இடையேயும் மாறுபடக்கூடியது.குறிப்பாக வயதுக்கு ஏற்ப தேவைகளும், விருப்பங்களும் மாறுபடுகின்றன. 8 வயது சிறுமியை கடைக்கு அழைத்துச் சென்று உனக்கு தேவையானதை வாங்கிக் கொள் என்றால், அவளுடைய முதல் தேர்வு சொக்லேட் ஆகத்தான் இருக்கும்.
ஏனெனில் சொக்லேட் குழந்தைகளின் விருப்பமான தின்பண்டம். சொக்லேட் பிடிக்காத சிறுவர்-சிறுமிகளே கிடையாது. இதனால்தான் உணவுப்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான சொக்லேட் விதவிதமான வடிவங்களிலும் வண்ணங்களிலும், சுவைகளிலும் தயாரிக்கின்றன.
சொக்லேட் மீதான குழந்தைகளின் இந்த மோகத்தை சிலர் தங்கள் வியாபார உத்திக்காக தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.சொக்லேட்க ளில் கஞ்சா போன்ற போதை வஸ்துகளை கலந்து விற்பனை செய்து, சிறுவர்களை அதற்கு அடிமை ஆக்குகிறார்கள்; நாட்டின் வருங்கால தூண்களை நாசமாக்குகிறார்கள்.இந்த போதை சொக்லேட் விவகாரம் சமீபத்தில் இந்தியாவின் தமிழகத்தை உலுக்கி எடுத்துவிட்டது. பள்ளிக்கூட மாணவர்களை குறி வைத்தே இந்த வகை சொக்லேட் விற்கப்படுகின்றன.
சென்னை நகரில் சில பள்ளிக்கூடங்களின் அருகே உள்ள கடைகளில் கஞ்சா அல்லது போதை மருந்து கலந்த சாக்லெட்டுகள் விற்கப்பட்டதும், அவற்றை மாணவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததும் சமீபத்தில் அம்பலமானது.கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மூளை நரம்புகளை கடுமையாக பாதிக்கும். போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், அதில் இருந்து மீள்வது கடினம். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவேண்டும்.
குழந்தைகள் நாட்டின் வருங்கால தூண்கள். அவர்கள் சொக்லேட் விரும்பி சாப்பிடுவதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கலந்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை அரசாங்கம் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.
எனவே பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது பணம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே நல்ல சத்தான தின்பண்டங்களை பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்பவேண்டும். கூடுமானவரை சொக்லேட் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் அழுது அடம்பிடித்து கேட்கும்பட்சத்தில் நல்ல தரம்வாய்ந்த கம்பெனியின் சொக்லேட்களை வாங்கிக்கொடுங்கள். அவ்வாறு சொக்லேட் வாங்கும்போது தயாரிப்பு திகதி குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனமாக பார்த்து வாங்குங்கள். அதற்கும் மேலாக சொக்லேட் அதிக நிறமேற்றப்பட்டிருந்தால் அதை வாங்காதீர்கள்.அப்படி இல்லையெனில், அந்த சொக்லேட்டை நுகர்ந்து பார்க்கும்போது போதை பாக்கு வாசனை தெரியும். அதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். இதுபற்றியெல்லாம் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருந்து தங்கள் பிள்ளைகளுக்கு புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பேஸ்புக்கை விட போக்கிமான் கேம் விளையாடுவதற்காக இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட “போக்மான் கோ” எனும் கேம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஜிபிஎஸ் கொண்டு விளையாடப்படும் இந்த கேம் உலகம் முழுவதும் ஏராளமானவர்களை அடிமையாக்கிவிட்டது.
இந்நிலையில், வேகமாக அதிகரித்து வரும் போக்கிமான் கேம் பயன்பாடு குறித்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த ‘7 பார்க் டேட்டா’ என்ற நிறுவனம் நடத்தியுள்ளது. பேஸ்புக் பார்ப்பதற்கு 35 நிமிடங்கள் செலவிடுபவர்கள் போக்கிமான் கோ விளையாடுவதற்காக 75 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்.பேஸ்புக்கில் கழிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு நேரத்தை போக்கிமான் கோ விளையாடுவதற்காக செலவிடுகிறார்கள். போக்கிமான் கோ விளையாட செலவிடும் நேரம் மற்ற பிரபலமான அப்ளிகேஷன்களான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்டவற்றை விடவும் அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
போக்கிமான் கோ கேம் பல விபரீத சம்பவங்களுக்கும் காரணமாகி வருகிறது. அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடிக் கொண்டிருந்த பெண் சுடுகாட்டில் ஒரு மரத்தில் சிக்கி, பின்னர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டிருக்கிறார்.கனடாவை சேர்ந்த இருவர் போக்கிமான் கோ கேம் விளையாடிக்கொண்டே கனடா நாட்டின் எல்லையைத்தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களை எல்லையில் ரோந்து பணியிலிருந்த காவலர்கள் கைது, எச்சரிக்கைக்குப் பின் விடுதலை செய்திருக்கின்றனர். இப்படி, போக்கிமான் விளையாட்டு விபரீத விளைவுகளையும் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எமி ஜாக்சன் ரஜினியுடன் 2.0 படத்திலும், இந்தியில் அலி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து தனது சொந்த மொழியான ஆங்கிலத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், ரஜினியுடன் 2.0 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி, எனது வாழ்நாள் பெருமை.தற்போது எனது தாய்மொழியான ஆங்கிலத்தில் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு என கூறியுள்ளார்.
நயன்தாரா தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி. இவர் நடித்தாலே ஹிட் என்ற நிலைமை ஆகிவிட்டது, இந்நிலையில் இவர் தற்போது தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார்.இவர் ரூ 2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது,
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் இவரை அடுத்த படத்தில் கமிட் செய்ய வர, ரூ 4 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என கூறினாராம்.இதைக்கேட்ட அந்த தயாரிப்பாளர் அதிர்ச்சியாகி அப்படியே நடையை கட்டிவிட்டாராம், நயன்தாரா உடனே ரூ 2 கோடி சம்பளம் ஏற்றியது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பிரபல இயக்குனர் விஜய், நடிகை அமலா பாலை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருக்கும் விரைவில் விவாகரத்து ஆகவுள்ளதாக ஒரு செய்தி பரவியது.இதை இரண்டு தரப்பில் இருந்து இதுவரை மறுக்கவும் இல்லை, இந்நிலையில் அமலா பால் திருமணமாகியும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இதுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது, அமலா பால் படங்களில் நடிப்பது விஜய்க்கு பிடிக்கவில்லை, அவர் கூறியும் அமலா பால் கேட்காதது தான் பிரச்சனைக்கு காரணம் என கூறி வருகின்றனர்.
டெல்லியில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று கூட்ட வன்புணர்வுக்கு பின்னர் அமிலம் கலந்த பொருளை குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கூட்ட வண்புணர்வுக்கு ஆளான டெல்லி சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல் உறுப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அதிர்ச்சியுற்ற டெல்லி மகளிர் ஆணையம் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பில் மீண்டும் அலட்சிய போக்கையே இரு அரசுகளும் இன்னமும் கடைபிடித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.
கூட்ட வன்புணர்வுக்கு பின்னர் அமிலம் கலந்த பொருளை குடிக்க வைத்து சித்திரவதை செய்துள்ளதால், அந்த சிறுமியின் உடல் உறுப்புகள் சிதைந்து மிகுந்த துயரத்துடன் உயிர்ழந்துள்ளதை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.இன்னும் எத்தனை நிர்பயாக்களை இந்த நாடு எதிர் பார்க்கிறது என மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அமைச்சர்கள் அளவில் ஒரு குழுவினை உருவாக்கி ஆவன செய்ய வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.14 வயது சிறுமி பாலியல் கூட்ட வன்புணர்வுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளதற்கு இந்த சமூகமே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அவர், இதுபோன்று உதவியற்ற நிலையை எப்போதும் உணர்ந்ததில்லை எனவும் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் 101 வயது பாட்டி ஒருவர் கருப்பை மாற்றத்தின் மூலம் 17வது குழந்தையைபெற்றெடுத்துள்ளார்.இத்தாலியை சேர்ந்த Anatolia Vertadella(101) என்ற பாட்டிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளன, இந்நிலையில்இவருக்கு 48 வயது இருக்கையில், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சைமூலம் இவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
ஆனால், இவருக்கு மீண்டும் கருத்தரித்து குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது, தான் பயன்பாடற்று இருப்பதாக உணர்ந்த இவர், எப்படியாவது 17 வது குழந்தையை பெற்றெடுத்திடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.அதன்படியே, தனது 101 வயதில், துருக்கியில்உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியுடன் கருப்பை மாற்றம் செய்து, 9 பவுண்ட்ஸ் எடைகொண்ட குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து பாட்டியார் அவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது, மருத்துவரீதியில் எனக்கு உதவிய மருத்துவ குழுவினரை நினைத்து பெருமையடைகிறேன்,அதுமட்டுமின்றி கடவுளின் ஆசிர்வாதத்தால் எனக்கு 17 வது குழந்தை பிறந்துள்ளது என கூறியுள்ளார்.