மொடல் அழகி கெளரவக் கொலை : சகோதரர் பரபரப்பு வாக்குமூலம்!!

625.0.560.350.160.300.053.800.668.160.90
பாகிஸ்தானின் சர்ச்சை மொடல் அழகி குவாந்தீல் பலூச்சை கெளரவ கொலை செய்த அவரது சகோதரர் வசீமை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த குவாந்தீல் பலூச் (26). இவர் பாகிஸ்தானின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மொடலிங் துறையிலும் ஜொலித்து வருபவர்.

மேலும், சமூக வலைதளங்களில் ஏடாகூடமாக செல்ஃபி, அரைநிர்வாண புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருவார். இதற்காகவே இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும்.தொலைக்காட்சி தொடர், மொடலிங் துறை ஆகியவற்றில் அவர் புகழ் பெற்றாலும், சமூக வலைதளங்களில் அவரது இந்த செயல் குடும்பத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் மொடலிங் துறையில் தொடர்ந்து இருக்க அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மொடலிங் தொழிலை விட்டு விலகும்படி அவரது சகோதரர் மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்பகிறது.ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத குவாந்தீல் பலூச் தொடர்ந்து அடாவடி செல்ஃபிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குவாந்தீல் பலூச்சை அவரது அவரது சகோதரர் வசீம் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.இதனையடுத்து அவரை தீவிரமாக தேடிய பொலிசார் நேற்று இரவு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் அவரது சகோதரர் வசீம் கூறியதாவது, சமூக வலைதளங்களில் குவாந்தீல் பலூச்சின் நடவடிக்கைகள் எங்கள் குடும்பத்திற்கு தீராத அவப்பெயரை உண்டாக்கி விட்டது.

இதில் அவள் மதகுரு முஃதி காவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான் அவளை கொன்றது அவளுக்கே தெரியாது. அவளுக்கு நான் மயக்க மருந்தை கொடுத்து விட்டு அவள் உறங்கும் பொழுது தான் கழுத்தை நெறித்துக் கொன்றேன் என்று கூறியுள்ளார்.

6 வயதுச் சிறுவன் அடித்துக் கொலை!!

625.0.560.320.500.400.194.800.668.160.90
ஹைதராபாத்தில் சக மாணவர் ஒருவன் தாக்கியதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் கார். இவர் கார் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவரது மகன் இப்ராகிம். இவனுக்கு 6 வயதாகிறது. இவன் ஐ.ஏ.எஸ். காலனியில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த 12ம் திகதி பள்ளிக்கு சென்ற இப்ராகிமை மதிய உணவு இடைவேளை நேரத்தில் 3ம் வகுப்பு மாணவன் ஒருவன் பயங்கரமாக தாக்கியுள்ளான்.இதில் இப்ராகிமுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது இடுப்பு, வயிறு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சக மாணவர் தாக்கியதை ஆசிரியரிடம் இப்ராகிம் கூறாமல், மாலையில் வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அவன் பலத்த காயமடைந்து இருப்பதை பார்த்த பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள நில்லோபர் மருத்துவமனையில் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள், வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து சிறுவனுக்கு இரு அறுவை சிகிச்சை செய்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இப்ராகிம் பரிதாபமாக உயிரிழந்தான்.இதுகுறித்து பொலிசார் சிறுவனின் தந்தை அப்துல் முஜீப், பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சிளம் குழந்தையை தெருவில் வீசி சென்ற கொடூர பெற்றோர்: நாய்களுக்கு உணவான பரிதாபம்!!

dog-saves-baby
சென்னையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் வீசிச் சென்ற இரக்கமற்ற பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.சென்னை தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் கடந்த 11ம் திகதி பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தையின் உடல் துப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில் சாலையோரத்தில் கிடந்தது.

அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகளை நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார், இறந்த நிலையில் சிதைந்து போய் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார், குழந்தையை சாலையில் வீசிச்சென்றது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சிட்லபாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரியும் ராம் பகதூர் (26), அவரது மனைவி சாந்தி(25) ஆகியோர் தான் குழந்தையை தெருவில் வீசிச் சென்றுள்ளனர்.ராம் பகதூருக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் தனக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையை ரோட்டில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர்கள் இரக்கமற்ற நிலையில் சாலையில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொலைபேசி கட்டணங்களில் வற் வரி சேர்க்கப்படாது!

2-tax
தொலைபேசி கட்டணங்களுக்கு வற் வரி சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசி கட்டணங்களில் வற் வரியை சேர்க்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி வற் வரி அதிகரிப்பின் அடிப்படையில் தொலைபேசி கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது என நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி எனப்படும் வற் வரியை அரசாங்கம் உயர்த்தியதன் பின்னர், தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசிக் கட்டணங்களை உயர்த்தியிருந்தன.இதன்படி தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் 49.5 வீதத்தினால் உயர்த்தப்பட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பாவனையாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் அதிகரிக்கப்பட்ட வற் வரி கட்டணத்தில் சேர்க்கப்படாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் சுனில் எஸ் சிறிசேன தெரிவித்துள்ளார்.

வற் வரிக்கு எதிராக கடைகளில் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.அரசாங்கத்தினால் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வற் வரி திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் கடைகளில் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. சுமார் 2500 எதிர்ப்பு பதாகைகள் கடைகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக களனிவெலி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கங்கானாத் ஜயசிங்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

வெலிகடை, ராஜகிரிய, மாலம்பே, அதுருகிரிய, கொடகம, ஹோமாகம, கொட்டாவ, மஹல்வராவ, ஹோகந்தர மற்றும் விதயால சந்தி ஆகிய இடங்களில் காணப்படும் வர்த்தக நிலையங்களின் அனைத்து கடைகளிலும் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நாளையும் நாளை மறுதினமும் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.அரசாங்கம் வற் வரி திருத்தச் சட்டத்தை நீக்காவிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரத்தினபுரியில் தாய், மகள் படுகொலைச் சம்பவம்! சந்தேக நபர் கைது!!

arrest (1)

இரத்தினபுரியில் வேவல்வத்த தோட்டத்தில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேவல்வத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரஞ்சித் மனிபுர உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கொலையுண்ட லெச்சுமி சசிகலா என்ற 37 வயதான பெண்ணின், கள்ளக் காதலனான 43 வயதான ஆணகவுண்டர் பாலகிருஸ்ணன் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் ஓர் தோட்டத்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற போதிலும், உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளின் பின்னர் பிரதேசத்தில் சஞ்சரிப்பதாக பிரதேச மக்கள் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.சந்தேக நபர், கொலையுண்டர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அடிக்கடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேவல்வத்த பலங்கொட வீதியில் லொறி ஒன்றை மறித்து அதில் ஏறிய இனந்தெரியாத நபர் பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

வர்த்தகர்களைக் கண்காணிக்க 200 புலனாய்வாளர்கள் களத்தில்!!

store_2199250f
கட்டுப்பாட்டு விலைக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யாத வர்த்தக நிலையங்களை சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் 200 புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.டி.டி.டி. அரந்தர தெரிவித்துள்ளார்.நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும், இவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்தவுடன் சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாத வியாபாரிகளையும் வர்த்தக நிலையங்கள் குறித்தும் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு எந்தவொரு தொலைபேசியிலிருந்தும் அறிவித்து முறைப்பாடு செய்ய முடியும்.இதேவேளை,சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் பயணிக்கும் வாகனங்களில் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், தலைமையகத்திலிருந்தே நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு அதிகாரசபை உரிய நட வடிக்கை எடுத்துள்ளது என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பரத் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 17.07.2016 ஞாயிற்றுகிழமை   சப்பர திருவிழா இடம்பெற்றது .

வசந்தமண்டப  பூஜையின் பின் இரவு ஒன்பது மணியளவில்  அலங்கரிக்கபட்ட சப்பரத்தில்  முத்துமாரியம்பாள்  முருகபெருமான்  விநாயகப்பெருமான்  சமேதராக  எழுந்தருளி வீதி  வந்த நிகழ்வு இடம்பெற்றது.

13645224_1846200108934297_2316819769891070209_n 13692567_1846200012267640_1065681476200782342_n 13707668_1846200178934290_4669942870934895274_n 13710033_10208640710634209_368125143026056130_n 13716123_1846200298934278_7758358074815243396_n 13716198_1846200195600955_970074919943670902_n 13718687_1846200292267612_5701169562619379301_n 13726665_1846200082267633_2330128234052144089_n 13726766_10208640710474205_6002606648455598022_n 13728968_1846200215600953_355089551367463282_n 13754150_10208640710914216_5950190441745023498_n 13754184_10208640710154197_5057763124329164163_n (1) 13754184_10208640710154197_5057763124329164163_n 13769468_10208640711114221_2300889426486086597_n 13775471_1846199992267642_384547771349648107_n 13775787_1846200238934284_3006189395871804935_n 13775841_1846200358934272_6452709044231473589_n 13776019_1846200342267607_7840084874699109055_n

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக பலி!!

Accident

காலி-மாத்தறை பிரதான வீதியில், ஹபராதுவ பகுதியில் பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் பலியாகியுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலியாகியவர்கள் காலி பிரதேசத்தை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,குறித்த விபத்தில் பலியாகிய இருவரும் சுற்றூலா பயணிகளுக்கு வழிகாட்டிகளாக செயற்படுபவர்கள் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது : தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

Student attack 1

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் தொடர்பிலும், முன்னெச்சரிக்கையாக சில மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியியேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவலையடைவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு டுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சமூகங்களுக்கு இடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக நாட்டில் இவ்வாறான விடயங்களை தடுக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவங்கள் மீள ஏற்படுவதை அனுமதிக்க கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்களை வரவழைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஏனைய மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தடை செய்யப்பட்ட உணவு சுவையூட்டி சந்தையில் இரகசியமாக விற்பனை!!

Ajino Moto

தடை செய்யப்பட்ட உணவு சுவையூட்டிப் பதார்த்தமொன்று இரகசியமான முறையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்.எஸ்.ஜீ எனப்படும் மொனோசோடியம் க்ளுடாமேட் எனப்படும் உணவு சுவையூட்டியே இவ்வாறு இரகசியமாக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அஜினோ மோட்டோ என்ற பெயரில் இலங்கையில் இந்த உணவு சுவையூட்டி விற்பனை செய்யப்பட்டது.

எனினும் இந்த ஆண்டு மார்ச் மாதம் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால இந்த உணவு சுவையூட்டி இலங்கையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்திருந்தார்.

இந்த உணவு சுவையூட்டி உடலுக்கு தீங்கானது எனவும் புற்று நோயை ஏற்படுத்தும் எனவும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இலங்கை வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தைகளில் பகிரங்கமாக அஜினோ மோட்டோ விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது.

சுமார் நாற்பது ஆண்டுகளாக இலங்கையில் இந்த உணவு சுவையூட்டி பயன்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹோட்டல் உணவு வகை தயாரிப்பின் போது இந்த உணவு சுவையூட்டி இன்றியமையாத ஒன்றாக காணப்பட்டது.

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி, டெவல் போன்ற பல்வேறு உணவு வகைகளுக்கு அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட இந்த உணவு சுவையூட்டி வேறு வழிகளில் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் இரகசியமாக தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு மூடை சுமார் பத்தாயிரம் ரூபாவிலிருந்து அதற்கும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த உணவு சுவையூட்டி பயன்பாட்டை தடை செய்யவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஊடகங்களில் அறிவித்த போதிலும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு விடுக்கவில்லை என சில இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மோதல் : தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கண்டனம்!!

jaffna-university

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினை தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் கண்டித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் செயலாளர் கலாநிதி சன்ன ஜயசுமனவின் கையொப்பத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், விரிவுரையாளர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் எதிரில் இந்த தாக்குதல் திட்டமிட்ட வகையில், இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

தமிழ் மாணவர்களுக்கு இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் சென்று சுதந்திரமாக கல்வி பயில உரிமை உண்டு.இந்த உரிமை சிங்கள மாணவர்களுக்கும் அதேவிதமாக இருக்க வேண்டும்.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பீடங்களில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இவ்வாறான இனவாத செயற்பாடுகள் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.

எனவே வடக்கின் எந்தவொரு இராணுவ முகாமினையும் அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு!!

shops

கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்பனை செய்யாத 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.டி. அரந்தர கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, பதுளை, மொனராகல், குருணாகல், புத்தளம், மாத்தளை, நுவரெலியா, கண்டி, வவுனியா, பொலனறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இவ்வாறு சுற்றி வளைப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தோல் உரிக்கப்படாத கோழி இறைச்சி விற்பனை செய்வதனை சில வர்த்தக நிலையங்கள் தவிர்த்துக் கொண்டு, சுப்பர் மார்க்கட்டுகளில் போன்று கோழி இறைச்சியின் பாகங்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் : முரளிதரன்!!

Muralitharan

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையுடன் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை என்று இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு மெல்பேர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர், முரளிதரன் பந்தை வீசி எறிவதாக குற்றம் சாட்டினார்.

இது முரளிதரன் கிரிக்கெட் வாழ்க்கைக்கே பெரிய அச்சுறுத்தலாக முடிந்து விட்டது. அப்போது இருந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹவ்ர்ட் கூட முரளிதரன் பந்தை வீசி எறிவதாக வெளிப்படையாக விமர்சித்தார்.

இந்த சம்பவம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை எல்லாம் தகர்த்தெறிந்த முரளிதரன் கிரிக்கெட்டில் உச்சக்கட்ட சாதனைகளை படைத்தார்.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முரளிதரனை சுழற்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது.

பழைய சம்பவம் பற்றி பேசிய முரளிதரன், எனக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையுடன் எந்த பிரச்சனையும் கிடையாது. முன்பு இருந்த வீரர்கள் இப்போதும் கூட எனக்கு நல்ல நண்பர்களாக உள்ளனர்.

ஊடகங்கள் தான் அந்த விடயத்தை வேறுவிதமாக கொண்டு சென்றுவிட்டன. முடிந்தது முடிந்த விடயமாகவே இருக்கட்டும். பழையதை பற்றி பேசிக் கொண்டிருந்தால் எதிர்காலத்தை கவனிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு நாள் என்னைப்பற்றி அறிவீர்கள் : பிரான்ஸ் தாக்குதல் குற்றவாளி அனுப்பிய குறுஞ்செய்தி!!

Nice-attack-main

பிரான்சின் நைஸ் நகர தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சிலருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

84 பேரை பலி கொண்ட இந்த தாக்குதலை நடத்திய Mohamed Lahouaiej Bouhlel என்ற நபர் துனிசியா நாட்டை சேர்ந்தவர் ஆவார், இவர் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் தனது சகோதரனுக்கு செல்பி புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

அதில், பிரான்சில் உள்ள கடற்கரையோரம், வாய் நிறைய சிரிப்புடன் நின்றுகொண்டு செல்பி எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் மற்றொரு இரண்டு நபர்களுக்கு, நிறைய ஆயுதங்கள் கொண்டு வாருங்கள்…..இது நல்லது, என்னிடமும் உபரகணங்கள் உள்ளன என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

தற்போது இந்த இரண்டு நபர்களையும் பொலிசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 200 பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Mohamed Lahouaiej Bouhlel குறித்து இவனது வீட்டிற்கு அருகில் வசித்த நபர் கூறியதாவது, நான் பயனற்றவன், ஆனால் ஒரு நாள் என்னைப்பற்றி உங்களுக்கு தெரியவரும் என கூறியுள்ளான், மேலும் அல்கஹால், மாட்டிறைச்சி, போதை மருந்து போன்றவற்றிற்கு அடிமையான இவனுக்கு தான் என்ன செய்யப்போகிறோம் என்பதை தெளிவாக அறிந்துதான் செய்துள்ளான் என கூறியுள்ளார்.

இதுபோன்ற பாதகச்செயலில் ஈடுபட்ட Bouhlel, தன்னைத்தானே தீவிரப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் அல்லது யாரேனும் ஒருவரால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்க கூடும், மேலும் தான் ஒரு இஸ்லாமியராக இருந்தபோதும் ஒரு நாள் கூட மசூதிக்கு சென்று தொழுகை செய்தது கிடையாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

T20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த பிராவோ!!

Bravo

மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான வெய்ன் பிராவோ, T20 போட்டிகளில் 1,000 ஓவர்கள் வீசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் ஏராளமான லீக் தொடர்களில் விளையாடி வரும் சகலதுறை வீரரான பிராவோ பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 தொடர்களில் ஆடி வரும் பிராவோ, தற்போது நடக்கும் கரீபியன் பிரீமியர் லீக்கில் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் அவர் T20 போட்டிகளில் 1000வது ஓவரை வீசி சாதனை படைத்தார்.

இதற்கு முன் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும், 5 ஆயிரம் ஓட்டங்களுடன் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

2050ம் ஆண்டில் பத்தில் ஒன்பது பேருக்கு தண்ணீர் கிடைக்காது!!

Water

எதிர்வரும் கால கட்டங்களில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு வரும். 2050ம் ஆண்டில் இந்தியாவில் உயிர் வாழும், பத்து பேரில், ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்காது என மத்திய சிறு மற்றும் குறுந்தொழில் இணை அமைச்சர் கிரிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள கெட்டிசெவியூர் அருகே பனை சீனி மற்றும் பனை பொருட்கள் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் பதனீரை கொள்முதல் செய்து, பனை சீனி (சர்க்கரை) தயாரிக்கிறது. மத்திய சிறு மற்றும் குறுந்தொழில் இணை அமைச்சர் கிரிராஜ் சிங், இந்நிறுவனத்தை நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தினால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இவற்றை மதிப்பு கூட்டி, சீனி உற்பத்தியும் செய்யலாம். இயற்கையாக நமக்கு மழை நீர் மூலம் கிடைக்கும் தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்த கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

வரும் கால கட்டங்களில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு வரும். 2050ம் ஆண்டில் இந்தியாவில்,உயிர் வாழும், பத்து பேரில், ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்காது.

அந்தளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வரும். சர்க்கரை ஆலைகளில், தண்ணீர் அதிகமாக செலவாகும். ஆனால், பனை சார்ந்த பொருட்களில், சர்க்கரை தயாரிக்க அதிகம் தேவைப்படாது. காமராஜர் முதல்வராக இருந்தபோது, 1967-இல் குன்னத்தூரில் பதனீர் மற்றும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்தினார்.

இன்றைய சூழலில், கரும்பு சர்க்கரை ஆலைகளின் ஆதிக்கத்தாலும், மக்களின் மோகத்தாலும், பனை தொழில் நலிவடைந்து விட்டது. இந்த தொழிலை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். பனை தொழில் குறித்து விரிவான அறிக்கை தயாரித்து, தமிழக முதல்வரிடம் கூறி இத்தொழில் புத்துயிர் அளிக்க பரிந்துரை செய்வேன் என கூறியுள்ளார்.