ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி பஸ் கட்டணங்கள் நூற்றுக்கு 6 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த கட்டணமாக 9 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையாலே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக,கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கூறியுள்ளார்.
எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது எனவும், யாழ்ப்பாண சம்பவம் தொடர்பில் சட்டத்தை பிழையின்றி செயற்படுத்தவுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்க நேற்று அமைச்சர் தேசிய வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு மேலும் கூறியதாவது,
யாழ் பல்கலைக்கழக தாக்குதல் சம்பவத்தில் வௌியில் இருந்து வந்த குழுக்கள் தொடர்புபட்டுள்ளனர். வருடக் கணக்காக புதிய மாணவர்களை வரவேற்கும் முறையிலேயே இம்முறை நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
ஆனால் இங்கு ஏற்பட்ட சிறு மோதலை தேவையற்ற முறையில் திரிவுபடுத்தி பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தை நாம் விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும். சிசிடிவியை பார்த்து தேவையானவர்களை அடையாளம் காணுமாறு நான் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளேன், என்றார்.
வவுனியா நெளுக்குளம் கூமாங்குள வீதியில் இன்று (18.07.2016) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கூமாங்குளம் பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் கிரிஷாந்தன் (22) விதுஷன்(21) ஆகிய இருவருமே காயமடைந்த நபர்களாகும். மேலதிக விசாரணைகளை நெளுக்குள பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாதி கொலையில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். இவரது தந்தை பரமசிவத்தை நெல்லை மாவட்டம், மீனாட்சிப்புரத்தில் சந்தித்தனர் ராம்குமாரின் வழக்கறிஞர்கள் ராம்ராஜ், ரவீந்திரன் குழுவினர்.
அப்போது ராம்குமாரை ஜூன் 30ம் திகதி நள்ளிரவு கைது செய்ய வந்தபோது, பொலிசார் எப்படி நடந்து கொண்டனர். ராம்குமார் எந்த நிலையில் இருந்தார் என்பது குறித்து வழக்கறிஞர்களிடம் ராம்குமார் தந்தை நடித்து காண்பித்தார்.
ராம்குமாரின் தாயும், சகோதரியும் வழக்கறிஞர்களிடம் நடந்தவைகளை கூறி விளக்கினர். பின்னர் வழக்கறிஞர்களோடு ராம்குமாரின் தந்தை இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், எனது மகன் ராம்குமார், தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொள்ளவில்லை. போலீசார்தான் செய்திருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது.
ராம்குமார் பிடிபட்டத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் நாங்கள், சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.
இதைத் தொடர்ந்து ராம்குமார் வழக்கறிஞரான மார்க்ஸ் ரவீந்திரன், சுவாதிக்கும், ராம்குமாருக்கும் பேச்சு பழக்கம் உண்டு என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
ராம்குமாரை சிறையில் சந்தித்த நான், அவரது பேஸ்புக் பாஸ்வேர்டை வாங்கி வந்து சரிபார்த்தேன். அவர்கள் சொன்னதுபோல் எதுவும் இல்லை. கொலை நடந்தவுடன் ஒரு பைக்கில் ஏறி ராம்குமார் தப்பிச் சென்றார் என கூறுகின்றனர். அந்த பைக்கை ஓட்டி வந்தது யார் என்பது பற்றியும் பொலிசார் சரியாக விசாரிக்கவில்லை.
ராம்குமாரின் நண்பரான சூர்ய பிரகாஷ் என்பதை பற்றியும் பொலீஸ் விசாரிக்கவில்லை. ராம்குமார் நீதிமன்ற காவலில் இருந்ததால், மன அழுத்தம், வேதனையில் அவரிடம் வாங்கிய ஸ்டேட்மண்டை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றனர்.
முற்றிலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் அரிதான சில பணிகளில் பெண்கள் ஈடுபடுவது உண்டு. அவற்றில் ஒன்று மயானத்தில் சடலங்களை எரிப்பது. தமிழகத்தில் காஞ்சிபுரம் சேலம் உள்ளிட்ட சில இடங்களில் சடலங்களை எரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும், இதுவரை மின் மயானங்களின் பக்கம் பெண்கள் தலை காட்டியதில்லை.
இப்போது மின்மயானப் பணியிலும் பெண் ஒருவர் காலடி வைத்துள்ளார். அவர், பிரவீனா சாலமன். சென்னை வேலங்காடு மின்மயானத்தின் பொறுப்பாளராக பணியாற்றிவரும் பிரவீனா சாலமன் ஒரு பட்டதாரி என்பதும் ஆச்சர்யமான தகவல். சென்னையில் இயங்கிவரும் 38 மின்மயானங்களில் இந்த ஒரு மின்மயானத்தில் மட்டும்தான் பெண் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
ஏதோ ஒரு சம்பளப் பணிக்காக இந்த வேலையில் பிரவீனா சேரவில்லை. சிறுவயதிலிருந்தே சமூக அக்கறை கொண்ட பெண்மணியாக வளர்ந்த அவர், சென்னை பல்கலையில் பி.ஏ ஆங்கிலம் பட்டம் பெற்று பின்னர் ‘இந்தியன் கம்யூனிட்டி சர்வீஸ்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஏழைச் சிறுமிகள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி சொல்லித்தரும் பணியை அங்கு மன நிறைவுடன் செய்திருக்கிறார்.
கடந்த 2014ம் ஆண்டு பிரவீனா சாலமனின் பணி மாறியது. அவர் சேவையாற்றி வந்த தொண்டு நிறுவனம் வேலங்காடு மின் மயானத்தை ஏற்று நடத்த முன்வந்தது. அப்போது அதை நிர்வகிக்கும் பொறுப்பு பிரவீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்கள் போகவே யோசிக்கும் மயானத்தில் எந்த நெருடலும் இன்றி பணியாற்ற புகுந்தார் பிரவீனா. அண்ணா நகரையொட்டி சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் இந்த மின்மயானம் அமைந்துள்ளது.
பிரவீனா பணியில் சேர்ந்த புதிதில், ஒரு பெண் மின்மயானத்தை நிர்வகிப்பதா என கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது சிலரிடமிருந்து. அப்பகுதி மக்களே பிரவீனாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தொடர்ந்து இந்த பணியைச் செய்தால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவதாக கூட சிலர் மிரட்டிப்பார்த்தனர். ஆனால் உறுதியாக நின்றார் பிரவீனா.
துர்நாற்றம் வீசிக் கொண்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்த மின்மயானத்தின் சுற்றுப்புறத்தை முதலில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவரது முயற்சியால் மயான வளாக சுவர்களில் அழகிய ஓவியங்கள் இடம்பெற்றன. வளாகத்தில் இருந்த மரங்கள் மீது தனிக்கவனம் செலுத்தினார். வளாகத்தில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இப்போது பார்த்தால் அது ஒரு மின்மயானம் போலவே தெரியாது: அழகிய பூங்கா போல காட்சியளிக்கிறது. இப்போது பிரவீனா அந்தப் பகுதி மக்களின் பாராட்டுக்குரிய பெண்மணியாக மாறியிருக்கிறார்.
ஒரு உடலை எரிப்பதற்கு மாநகராட்சி சார்பில் பிரவீனா குழுவினருக்கு 750 ரூபாய் வழங்கப்படுகிறது. சென்னை பெரு வெள்ளத்தின் போது,வேலங்காடு மின் மயானம் சிறப்பாக பணியாற்றியிருக்கிறது. மற்ற பகுதிகளில் மயானங்கள் முடங்கியபோது, பல உடல்கள் இங்கே கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டன. அந்த சமயத்தில் ஓய்வின்றி நாளொன்றுக்கு 4 முதல் 5 சடலங்களை பிரவீனா குழுவினர் எரித்திருக்கின்றனர்.
பிரவீனாவின் இந்த பணி, மற்றொரு பெண்ணை ஈர்க்க, கடந்த 6 மாதங்களுக்கு முன், திவ்யா என்ற அந்த இளம்பெண்ணும் பிரவீனாவுடன் கரம் கோத்திருக்கிறார்.
“சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த பணியில் சேர்ந்தேன். எப்போது வேலை வருமென்று தெரியாத பணி இது. அதனால் எந்த நேரத்திலும் நாங்கள் தயாராகவே இருப்போம். மனதுக்கு திருப்தி தருகிறது” எனக் கூறும் பிரவீனா இரண்டு குழந்தைகளின் தாயும் கூட.
ஹரியான மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்,மீண்டும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோடெக் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் அங்கிருந்த கல்லூரி ஒன்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத ஐந்து நபர்களால் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, இக்குற்றத்திற்காக பணம் தருகிறோம் என அப்பெண்ணின் குடும்பத்தினரை, இவர்கள் மிரட்டியுள்ளனர், ஆனால் அதற்கு இக்குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை.
இதுதொடர்பான வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது, இந்நிலையில் தனது மகளின் படிப்பை கருதி அப்பெண்ணின் தாயார், பிவானி நகரத்தை விட்டு ,ரொடெக் நகரத்தில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோடெக் நகரில் வைத்து மீண்டும் அப்பெண்ணை, இவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ரோடெக் பொலிசார் கூறியதாவது, இச்சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.இதை பற்றிய தகவல்கள் அனைத்தும் பிவானி பொலிசாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சிகிச்சைக்காக அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இணுவையூர் சக்திதாசன் எழுதிய தொட்டுவிடும் தூரத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று(17.07.2016) மாலை 4.00 மணியளவில் வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் வவுனியா கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் வீ.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதுடன் ‘தொட்டு விடும் தூரத்தில்’ கவிதை நூலை வெளியிட்டு வைத்ததுடன் முதற்பிரதியை வவுனியா அறிவாலயம் புத்தகசாலை உரிமையாளர் ஜெ.கோபிநந்தன் பெற்றுக்கொண்டார்.
வரவேற்புரை செல்வி ஜெசிதா ஆனந்தமூர்த்தி நிகழ்த்தியதுடன் நூலாசிரியர் அறிமுகவுரை வே.முல்லைதீபன் அவர்களும் நிகழ்த்தினர்.
நயப்புரை முல்லைத்தீவு மேலதிக காணிப்பதிவாளர் ஜெகதீசன் கோபிநாத் அவர்களும் கவியுரையை கலைஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களும் ஏற்புரையை நூலாசிரியர் இணுவையூர் சக்திதாசன் வழங்கினார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் மணி கே.கே. அருந்தவராஜா, வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் வித்தியாரத்னா நா.பார்த்தீபன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம் அதிபர் மதுரக் குரலோன் சி.நாகேந்திரராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 20 வருட டெஸ்ட் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 4 ஆவது இடத்திலிருந்த யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் அஸ்வின், என்டர்ஸன் மற்றும் போர்ட் ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளனர்.
இந்நிலையில் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கட்டுகளை கைப்பற்றிய 20 வருட சாதனையினையும் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லொஹமன் 1996 ஆம் ஆண்டு 100 விக்கட்டினை கைப்பற்ற 16 போட்டிகளை எடுத்துக்கொண்டுள்ள நிலையில் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 13 போட்டிகளில் 100 விக்கட்டை கைப்பற்றி 20 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
இதேவேளை இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் 10 விக்கட்டுகளை கைப்பற்றிய முதல் இடது பக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் பேஸ்புக் தொடர்பில் 1,100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார்.
போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பேஸ்புக்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்ற புகைப்படங்களை நண்பர்கள் மாத்திரம் பார்வையிடக்கூடிய வகையில் பதிவேற்றம் செய்வதன் மூலம் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
ரஜினி அமெரிக்காவுக்கு ஓய்வெடுப்பதற்காக சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், அவர் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது பற்றிய எந்த செய்திகளும் இதுவரை வெளிவரவில்லை.
இதற்கிடையில், ரஜினிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. ஆனால், அவரது குடும்பத்தினர் இது வெறும் வதந்திதான். அவர் நலமாக உள்ளார் என்று கூறி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
சமீபத்தில் கபாலி படத்திற்காக தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு யாகம் செய்ய வந்திருந்த, ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா, ரஜினி சிகிச்சைக்காகத்தான் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல்களை தெரிவித்தார். சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் கூறினார். இதனால், மீண்டும் ஊடங்கங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ரஜினியின் உடல் நிலை குறித்து பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் ஆசிரம் ஒன்றிற்கு ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் சென்று வழிபட்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. மேலும், ஆசிரமத்தை சேர்ந்த ஒருவருடன் ரஜினி சிரித்துக் கொண்டே உரையாடி வருவதுபோலவும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் எல்லாம் ரஜினியின் உடல்நிலை குறித்து மறுபடியும் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது எனலாம்.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படம் வருகிற ஜுலை 22ம் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. கபாலி படம் வெளிவரும்போது ரஜினி, சென்னை திரும்பிவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் ஆகஸ்ட் மாதத்தில்தான் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பியதும் ஷங்கரின் ‘2.ஓ’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னத்திரை என்றாலே பெரும்பாலும் அழுகை என்பதை தாண்டி சில நிகழ்ச்சிகள் தான் மகிழ்ச்சியை தரக்கூடியவை. அந்தவகையில் சிரிப்புக்கான கலக்கப்போவதுயார் என்ற நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மூலம் வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன், ரோபோஷங்கர் போன்றோரும் கலந்து கொண்டனர். இதில் குரேஷி வெற்றி பெற்றார்.
ஆனால் அனைவரையும் கவர்ந்தவர் நவீன். ஏனென்றால் இவர் வழக்கம்போல அஜித், விஜய் குரலில் பேசினாலும் கடைசியாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் குரலில் பேசி அசத்தினார். அனைவரும் எழுந்து நின்றி கைதட்டினர். சிவகார்த்திகேயன் எழுந்து வந்து பாராட்டினார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் 21ம் திகதி தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடி விட்டது.
இந்த தொடருக்கான இந்தியா அணி கடந்த 6ம் திகதி இந்தியாவில் இருந்து புறப்பட்டது. தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளே வீரர்களுக்கு அதிக அளவு நெருக்கடி கொடுக்காமல் சுதந்திரமாக விட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் மிகச்சிறந்த சுற்றுலா தளம் என்பதால் வீரர்கள் கடற்கரையில் பீச் வொலிபோல், கடலில் டைவிங் என பொழுதை சந்தோசமாக கழித்து வருகின்றனர்.
ஆனால் இந்த பொழுதுபோக்கு அளவுக்கு அதிகமாகிவிட்டது. மேற்கிந்திய தீவுகள் என்றாலே பியர் போத்தல்களுடன் கடற்கரையில் பொழுது போக்குவது பிரபலம். அந்த பழக்கம் இந்திய வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் பியர் போத்தல்களுடன் சுற்றியுள்ளனர். அத்தோடு மட்டுமல்ல, அதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளர்.
இந்த படம் குறித்த விவகாரம் பி.சி.சி.ஐ. யின் கவனத்திற்கு தெரியவந்தது. உடனடியாக, அணியின் முகாமையாளர் ரியாஸ் பவான் மூலம் வீரர்களுக்கு அறிவுரை கூற வலியுறுத்தியது. அப்போது வீரர்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என்ற வலியுறுத்த கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
வீரர்கள் வெளியிட்டுள்ள படத்தில் லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி உள்ளனர். ஆனால் படம் குறித்த எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. ‘‘இதுபோன்ற படங்களை வெளியிட்டு மோசமான உதாரணமாக இருக்கக்கூடாது என்று முகாமையாளர் கேட்டுக்கொண்டதாக பி.சி.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.
கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கும் ஏராளமான குழந்தைகள் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர்களுக்கு பிடித்த வீரர்களின் செயல்பாடுகளை அப்படியே பின்தொடர் விரும்புவார்கள். ஆகவே, இதை மனதில் கொண்டு வீரர்கள் செயல்பட வேண்டும். ரசிகர்களின் உணர்வுகளை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லைக்குள்ளான அரசு பெண் ஊழியர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது..
பாலியல் தொல்லைக்குள்ளான பெண்கள், மிரட்டப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தடுக்கப்படும். உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவது, ஆபாச படங்களை காண்பித்து துன்புறுத்துவது ஆகியவற்றின் கீழ் பாதிக்கப்படும் பெண்களுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அவர்களின் விடுப்பு கணக்கில் சேராது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் பேறுகால விடுமுறையை இனி 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது இது தொடர்பான புதிய மசோதாவை வருகிற 18ம் திகதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் இன்று 14ஆம் நாள் 18.07.2016 திங்கட்கிழமை காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது .
இன்று அதிகாலை கிரியைகள் ஆரம்பமாகி பின்னர் எட்டுமணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து அம்பாள் ஒன்பது மணியளவில் தேரில்ஆரோகணித்து அதனை தொடர்ந்து தேர் திருவிழா இடம்பெற்றது.
நூற்றுகணக்கான அம்பாளின் பக்தர்கள் பங்குகொண்ட தேர் திருவிழாவில் சிலர் அடியடித்தும் காவடி பாற்குடம் கற்பூர சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவு செய்திருந்தனர் .
தொடர்ந்து மதியம் பன்னிரண்டு மணியளவில் பச்சை சாத்தும் நிகழவும் இடம்பெற்றது .
வவுனியா தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞர் தனது பற்களால் 50 கிலோ எடைகொண்ட சீமந்துப் பையை மிகவும் சாதாரணமாக தூக்குகின்றார்.
இவரது திறமையை அறிந்த வவுனியா நெற் குழுவினர் அவருடன் தொடர்புகொண்ட போது, தான் கட்டட வேலை செய்வதாகவும் இது போன்று 2 நிமிடங்களில் 10 சீமந்துப் பைகளை தூக்கி சாதனை படைக்கவுள்ளதாகவும், மேலும் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதே தனது இலக்கு என்றும்,
இமயமலையில் ஏறிய முதல் தமிழன் என்ற சாதனையை தான் படைக்க விரும்புவதாகவும் அதற்கான பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் எம்மிடம் தெரிவித்தார்.
இவரது சாதனைப் பயணம் தொடர எமது வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக இவருக்கு வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாம் குடிக்கும் தண்ணீருக்கு உடல் எடை அதிகரிப்புடன் போராடும் ஆற்றல் உள்ளதென ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. ஆய்வின்படி குடி தண்ணீர் மாப்பொருளை கொண்டிருப்பதில்லை, அத்துடன் இலிப்பிட்டு, புரதங்களையும் கொண்டிருப்பதில்லை.இவ்வகை மாப்பொருள், இலிப்பிட்டு, புரதங்களே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றது.
ஆகையால் தண்ணீரை அருந்துவதன் மூலம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்து ஆரோக்கியமாக எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என சொல்லப்படுகிறது. மேற்படி ஆய்வில் அதிக BMI, எடையுள்ளவர்களில் நீரேற்ற அளவு குறைவாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.அதேபோல் குறைந்தளவு நீரருந்துபவர்களில் அதிக BMI, எடை அவதானிக்கப்பட்டது.
இதிலிருந்து அதிகம் நீரருந்துதல், நீர்த்தன்மையான பழங்கள், காய்கறிகளை உள்ளெடுத்தல் போன்றன உடல் எடையை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க உதவும் எனப்படுகிறது. ஆனாலும் அதிக எடையுள்ளவர்களும் நீரை அதிகம் வேண்டுகிறார்கள். இது அவர்களில் நீரேற்றத்தின் அளவு குறைவாக இருப்பதால் தான் என மேற்படி ஆய்வுகள் சொல்கின்றன.