கம்பஹா – வெலிவேரிய பியரத்ன மாவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று மதியம் அவரது வீட்டில் வைத்து குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொலை செய்த நபர் யார் என்பது இதுவரையில் அறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கொலை சம்பவம் தொடர்பில் வெலிவேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி நாளை (16.07.2016) காலை 8.00 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது .
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை வந்தடைந்து அங்கிருந்து A9 வீதி ஊடாக மணிக்கூட்டு கோபுரச் சந்திரய அடைந்து பின்னர் பசார் வீதியின் ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தான வீதி ஊடாக இலுப்பையடி,வைத்தியசாலை கடந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அணி புதிய பேருந்து தரிப்பிடத்தின் ஊடாக தாண்டிக்குளம் சந்தியை அடைகிறது .
சமநேரத்தில் பழைய மாணவர்களின் உந்துருளிப் பவனி மன்னார் வீதி ஊடாக குருமண்காடு காளிகோவிலை அடைந்து கோவில் வீதி ஊடாக தாண்டிக்குளம் சந்தியை அடைந்து ஒன்றிணைந்து வீதி ஊடாக பாடசாலையை அடையவுள்ளது. எனவே, மாணவர்கள் ஆசிரியர்களுடன் அனைத்துப் பழைய மாணவர்களையும் இம் மாபெரும் நடைபவனியில் ஒன்றிணையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கதிர்காமம் யாத்திரை செல்வோருக்கு நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேட்டையாடப்பட்ட மான், மரை போன்ற விலங்குகளின் இறைச்சி என்ற போர்வையில் யாத்திரீகர்களுக்கு நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக “அஹிங்சா ஸ்ரீலங்கா” என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
விலங்குகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஓர் அமைப்பாக இந்த அமைப்பு திகழ்கின்றது.
கதிர்கால எசல யாத்திரை காலத்தில் அங்கு செல்லும் யாத்திரீகர்கள் வேட்டையாடப்பட்ட இறைச்சிகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவ்வாறான நபர்களை இலக்கு வைத்து நாய் இறைச்சி விற்பனை மேற்கொள்ளப்படுவதாக அஹிங்சா ஸ்ரீலங்கா அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களிலும் அவ்வப்போது இவ்வாறு நாய்கள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போதிலும், இம்முறை திட்டமிட்ட அடிப்படையில் நாய் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செல்லக் கதிர்காமத்திற்கு அருகாமையில் ஒர் இடத்தில் நாய்கள் பிடித்துச் செல்லப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், யாத்திரீகர்கள் வேட்டையாடப்பட்ட மிருகங்களின் இறைச்சி வேண்டுமெனக் கோரினால் இந்த நாய்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் நாய்களின் தலைகளைக்கொண்ட பைகள் அண்மையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, மிருக வேட்டைக்காக விசம் கலந்த நீரைப் பயன்படுத்தி விலங்குகள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்கள் திறந்து நன்றாக பார்க்கும் போதே நமக்கு சில தடுமாற்றங்கள் வரும் அது இயற்கை.ஆனால் கண்களை கட்டிக்கொண்டு தடுமாறாமல் இயற்கையை மீறி அசத்தும் தமிழ் சிறுமி ஒருவரையே தற்போது காணப்போகிறோம்.
இதைப் போன்றே சமீபத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மூக்கால் முகர்ந்தும், காதருகே கொண்டு சென்றும் கையில் கொடுக்கும் பொருட்களை துல்லியமாக கண்டறியவும், கண்களைக் கட்டிக்கொண்டு ஓவியத்திற்கு வண்ணமும் கச்சிதமாக தீட்டி அசத்தினார்.
தற்போது சிறுமி ஒருவர் அதே போன்று கண்களை மூடிக்கொண்டு அனைத்தையும் அசறாமல் சொல்கிறார். முயற்சி திருவினையாக்கும் என்று யாரும் சும்மா ஒன்றும் சொல்லவில்லை.
கூகுள் தனது நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தை சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி விதிகளை மீறுகிறதா என்று அந் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தனது விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.
கூகுளால் வழங்கப்படும் விளம்பரங்கள் போட்டியாளர்களை நஷ்டம் அடையச் செய்யும் வகையில் இணையத்தால் நியாயமற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அது குற்றம் சாட்டியுள்ளது.
இணைய வழி தேடலுக்கான விளைவுகளில் கூகுள் நிறுவனத்தின் சொந்த இணைய சேவைகள் வருவதாக கூறப்பட்ட தனது முந்தைய குற்றச் சாட்டுகளையும் வலுப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
தனது சந்தை ஆதிக்கத்தை மீறுவதான குற்றச் சாட்டில், கூகுள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்தி வருகிறது.
வரும் வாரங்களில் இந்த புகார் குறித்து பதிலளிக்க போவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
பிறந்த குழந்தையை கொலை செய்து கழிவறைக் குழிக்குள் வீசி பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேராதனை பிரதேசத்தில் இன்று மதியம் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே 12 மற்றும் 8 வயதான இரண்டு பிள்ளைகள் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தனக்கு குழந்தை உண்டாகி இருப்பதை இந்த பெண் தன் கணவனுக்கு மட்டுமல்லாமல் குடும்ப சுகாதார தாதியிடம் மறைத்துள்ளார்.
பஸ் உரிமையாளரான இந்த பெண்ணின் கணவர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, கடந்த 11 ஆம் திகதி இந்த பெண் வீட்டில் குழந்தையை பிரசவித்து, அதனை கழிவறை குழியில் போட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனக்கு ஏற்பட்ட அதிக இரத்த போக்கு காரணமாக பெண் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாகவும் தான் அதனை கழிவறை குழியில் போட்டு விட்டதாகவும் பெண் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த பெண் தவறான உறவின் மூலம் இக்குழந்தையை பிரசவித்து அதனை கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த குழந்தையின் பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொண்ட மனைவியை வீட்டில் இருந்து விரட்டி விட்டு கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திக்கொண்டு மற்றுமொரு யுவதியை திருமணம் செய்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவதாக திருமணம் செய்த யுவதியின் தந்தை கத்தியால் குத்தியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் கள்ள காதலியுடன் குடும்பம் நடத்தியதில் அவருக்கு ஒரு பிள்ளை இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை எல்ல உடஹராவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட யுவதியின் தந்தை, இந்த இளைஞனை தேடி அவர்களின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டுக்கு சென்று சுமூகமாக உரையாடிக்கொண்டிருந்த யுவதியின் தந்தை திடீரென தான் கொண்டு வந்திருந்த ரம்போ கத்தியால், இளைஞரை குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இளைஞன் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி நான்கு நாட்களில் உயிரிழந்துள்ளார்.
23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கத்தியால் குத்திய யுவதியின் தந்தை ஒரு அரச ஊழியர் எனவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மானாமதுரை அருகே கொலை செய்யப்பட்ட காளீஸ்வரி கடைசியாக தனது தாயிடம் எங்கே இருக்கேனு எனக்கு தெரியலம்மா என கதறிய செய்தி தற்போது தெரிய வந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கணபதியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் (யூலை 11) பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்த காளீஸ்வரியை அவரது உறவினர் கார்த்திக் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வருமாறு அழைத்துள்ளார்.
அப்பொழுது விக்னேஷ் என்ற மாணவனும் உடன் வருவதாக கூறியுள்ளார். ஆனால் இதை கார்த்திக் மறுத்து காளீஸ்வரியை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து, நீண்ட நேரமாகியும் காளீஸ்வரி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாய் ஜெயா காளீஸ்வரி குறித்து அவரது நண்பர்களிடம் கேட்ட பொழுது விக்னேஷ் கார்த்திக் அழைத்து சென்றதை கூறியுள்ளார்.
உடனே ஜெயா கார்த்திக்கிற்கு போன் செய்து கேட்ட பொழுது, கார்த்திக் நண்பர் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளான், இரவு அதிக நேரமாகியும் அவர்கள் வராததால் காளீஸ்வரியின் தாய் மறுபடியும் போன் செய்துள்ளார்.
அப்பொழுது காளீஸ்வரி எங்கே இருக்கிறேன் தெரியலம்மா என கதறியுள்ளார். இதை தொடர்ந்து, கார்த்திக் சித்தி என்னை மன்னித்து விடு நான் காளீஸ்வரியை கொலை செய்ய போகிறேன் என்று கூறிவிட்டு போனை ஆஃப் செய்து விட்டார்.
இதனால் பதற்றமடைந்த காளீஸ்வரியின் தாய் அப்பகுதி மக்களுடன் சென்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்பு பொலிசார் உதவியுடன் அப்பகுதி மக்கள் அனைவரும் டார்ச் விளக்குகளைக் கொண்டு தேடியுள்ளனர்.
அப்போது கழுத்தை அறுத்த நிலையில் கார்த்திக் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை மீட்டு மானாமதுரை மருத்துவமனையில் சேர்த்து அவரிடம் காளீஸ்வரி எங்கே என கேட்ட போது அவரை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதன் பின்பு இரவு முழுவதும் காளீஸ்வரியை தேடி மறுநாள் காலையில் சடலமாக கண்டெடுத்தனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சந்தி, துணைத் தலைவர் மணியம்மா ஆகியோர் காளீஸ்வரி வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி நடந்ததை கேட்ட பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், காளீஸ்வரி கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து செல்லோ டேப், நூல் கயிறு, மது பாட்டில் ,பிஸ்கெட் பாக்கெட் கவர் போன்றவற்றை கண்டெடுத்துள்ளனர். இதனால் கார்த்திக் முன்கூட்டியே திட்டமிட்டு தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த ரத்த மாதிரிகள், ரத்தம் தொய்ந்த கத்தி, செல்போன், அருகில் இருந்த கண்மாயில் நிறுத்தபட்டிருந்த கார்த்திக் பைக் முதலியவற்றை பொலிசார் சேகரித்துள்ளனர்.
கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் Mississauga, ஸ்கார்பரோ மற்றும் பிராம்ரன்திரையரங்குகளில் நடந்த மிளகு பொடி தாக்குதல்களை தொடர்ந்து தமிழ்திரைப்படங்கள் Cineplex திரையரங்குகளில் எதுவும் காண்பிக்கப்படவில்லை
இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்த்த திரைப்படமான கபாலி திரைப்படம் முதல் காட்சி கனடாவில் தான் காண்பிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று Cineplex செய்தி தொடர்பாளர் சாரா வான் லாங்கே CityNews செய்திக்கு கபாலி படத்துக்கு Cineplex நிர்வாகம் தடை விதித்து இருப்பதாக தெரிவித்தார் .
ஆனாலும் இது விடயமாக Cineplex நிர்வாகத்தினர் மேலதிக தகவல்களை வழங்க மறுத்துவிட்டார்கள் .எனினும், கிருஷ்ணன் மற்றும் விநியோகஸ்தர் இருவரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்கள் .
இந்நிலையில் ஏனைய தமிழ் திரையரங்குகளில் கபாலி படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். கபாலி படத்தின் டீசர் முதலில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பொறியியலாளர் சுவாதி படுகொலை வழக்கில் மர்மங்கள் பல நிறைந்துள்ள நிலையில் சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் 24ம் திகதி சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் ராம்குமார் என்பவரை கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்கள் குறைவாக இருப்பதால் ராம்குமாரிடம் எந்த கேள்விகளை கேட்க வேண்டும் என்று பொலிஸார் ஏற்கனவே முடிவு செய்து அதை தயாராகவும் வைத்துள்ளனர்.
ராம்குமாரிடம் நேற்று முதலே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணை விவரங்கள் வெளியாகிவிடக்கூடாது என்பதில் பொலிஸார் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
ராம்குமாரின் விசாரணை விவரங்களை வெளியிடக்கூடாது என பொலிஸ் உயர் அதிகாரிக்ளுக்கு வாய்மொழியாக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “ராம்குமாரிடம் சில கேள்விகளை கேட்டோம்.
அதற்கு அவர் அளித்த பதில்கள் எங்களுக்கு திருப்தியாகவும், விசாரணைக்கு உதவியாகவும் இருந்தது” என்று மாத்திரமே கூறியிருந்தார்.
இன்னும் சில அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், “விசாரணை நடத்திய பிறகு ராம்குமார் சோர்வடைந்து விட்டார். இதனால் ஒருசில கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு நாங்களும் அங்கிருந்து சென்று விட்டோம்.
இன்று காலை பிலால், ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருவரின் பதில்களில் சில ஒரே மாதிரியாகவே உள்ளன.
ராம்குமாரிடம் தனியாக சில கேள்விகளை கேட்டோம். ‘சுவாதியை முதல் முதலில் எப்போது பார்த்தீர்கள்? என்று கேட்ட போது ராம்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
மேன்சனில் இருந்த சமயத்தில் அவ்வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்லும் போது சுவாதியை பார்த்தேன்.
அவரது பெயர் சுவாதி என்று அப்போது எனக்குத் தெரியாது. சுவாதியை பார்த்தவுடன் தனக்கு ஒருவித இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரிடம் பேச பல நாட்கள் முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.
அதற்காக அவரை பின்தொடர்ந்தேன். எங்கள் ஊரில் அழகான பெண்கள் இப்படி யாரிடமும் பேசமாட்டார்கள்.
ஆனால் சுவாதி என்னிடம் பேசியதால் அவரை காதலிக்கத் தொடங்கினேன். ஆனால் என் காதலை அவர் நிராகரித்து விட்டார்.
அதோடு அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறினார். இருப்பினும் அவரை என்னால் மறக்க முடியவில்லை.
அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது. அவரை மிரட்டவே அரிவாளால் வெட்டினேன். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என கூறியதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுவாதியை எதற்காக கொலை செய்தீர்கள்? என்று கேட்டதற்கு, “சுவாதி மீது ஆத்திரம் ஏற்படுவதற்கு ஒரே காரணம் அவர் என்னை திட்டிய அசிங்கமான வார்த்தை தான்.
என் காதலை அவரிடம் சொன்ன போது அதை ஏற்று கொள்ளவில்லை என்று அமைதியாக சொல்லி இருக்கலாம்.
ஆனால் அதற்கு மாறாக அவர் என்னை அசிங்கமாக திட்டினார். குறிப்பாக என்னைப் பார்த்து தேவாங்கு என்று சொன்னார்.
இதுபோல என் வாழ்நாளில் யாரும் பேசியது இல்லை. பொதுவாகவே நான் யாரிடமும் பேச மாட்டேன். அமைதியாகவே இருப்பேன்.
புத்தகங்களைப் படிப்பேன். என்னை அவர் அவ்வாறு பேசியதால் அதை நினைத்து மனசுக்குள் வருந்தினேன்.
யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ள முடியாததால் பல இரவுகள் தூங்காமல் இருந்தேன். அவரது பேச்சு எனக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது’ என்று தெரிவித்துள்ளார்.
சுவாதி உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கிறாரா? என்ற கேள்விக்கு ‘ஆமாம்’ என்று பதில் அளித்துள்ளார் ராம்குமார்.
‘பேஸ்புக் மூலம் நிறைய பேசி இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். சுவாதி கொலை செய்த பிறகு யாரிடம் பேசினீர்கள்? என்ற கேள்விக்கு,
“மேன்சனில் தங்கி இருந்த என்னுடைய அத்தை மகன் மதனை பார்த்தேன். ஆனால் அவரிடம் எதையும் சொல்லவில்லை.
ஊருக்கு செல்வதாக மட்டும் சொன்னேன். ஊருக்கு சென்ற பிறகு என்னுடைய கவனம் முழுவதும் சுவாதி தொடர்பான செய்திகளிலேயே இருந்தது.
மேன்சனில் அவசரத்தில் இரத்தம் படிந்த சட்டையை வைத்து விட்டு வந்ததால் என்னை கண்டுபிடித்து விட்டனர்’ என ராம்குமார்” தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், ராம்குமாரிடம் நடந்த விசாரணை முழுவதையும் பொலிஸார் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
சுவாதியை எப்படி கொலை செய்தார் என்பதை நடித்து காட்ட, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கும் அவர் தங்கியிருந்த மேன்சனுக்கும் ராம்குமாரை பொலிஸார் அழைத்து செல்லவுள்ளனர்.
கனடா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த இலங்கை தமிழர் உட்பட இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓண்டாரியோ மாகாணத்தை நிரஞ்சன் கலைச்செல்வம்(32), ஷாகிலே ஹென்றி(20) மற்றும் ரஷீட் அஹம்த்(25) ஆகிய மூவர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இவர்களில் நிரஞ்சன் கலைச்செல்வம் இலங்கை தமிழர் என கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 2014 முதல் டிசம்பர் 2015ம் ஆண்டு வரை மூவரும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக, நகை கடைக்காரர்களின் வீட்டு முகவரியை தெரிந்துக்கொண்டு அவர்களது வீட்டில் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.
பொலிசாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக, இவர்கள் மூவரும் போலியான பிளாஸ்டிக் முகமூடிகளை அணிந்த பின்னரே கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர்.
நகைக்கடைக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களது கார்களில் GPS கருவியை பொருத்தி அவர்களை பின் தொடர்ந்து நூதனை முறையில் கொள்ளைகளை செய்துள்ளனர்.
இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் பெரியவர்கள், குழந்தைகள் என பலர் இவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொள்ளையர்களில் ஒருவரான நிரஞ்சன் கலைச்செல்வம் கடந்த 2007ம் ஆண்டில் துப்பாக்கி முனையில் நிகழ்த்தப்பட்ட கொள்ளைகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் Brampton நகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், மூவரில் நிரஞ்சன் கலைச்செல்வம் மற்றும் ஷாகிலே ஹென்றி ஆகிய இருவரை தற்போது பீல் நகர பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மூவரில் ஒருவரான ரஷீத் அஹமத் தலைமறைவாக உள்ளதால் அவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பல்வேறு கொள்ளைகளில் ஈடுப்பட்டு வந்த மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது Ontario மாகாண பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 41 வயதான இளங்குமார் சாந்தமலர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் உயிரிழந்த பெண் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அயல் வீட்டாருக்கு வட்டிக்குக் பணம் பெற்றுக்கொடுத்துள்ளார்.
எனினும், குறித்த பணத்தை மீள பெற்றுக்கொள்ள முடியாத அந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்ட நாள் முதல் அயல் வீட்டுப்பெண்ணுக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் முறன்பாடு தோன்றியுள்ளது.
இந்த முறன்பாடு இன்று கைகலப்பாக மாறிய நிலையில், இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2016 ஆம் ஆண்டிற்கான அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட், கடந்த வருடத்தில் 1141 கோடி வருமானம் ஈட்டி முதல் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவர் இரண்டாவது இடத்தையும், எழுத்தாளர் ஜேம்ஸ் பீட்டர்சன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நடிகர் ஜாக்கிசான் 409 கோடி வருமானம் ஈட்டி 21 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து ஆண்டிற்கு 221 கோடி வருமானம் ஈட்டி ஷாருக்கான் 86 ஆவது இடத்தையும், 211 கோடி வருமானத்துடன் அக்ஷய் குமார் 94 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பிரபலங்களின் பட்டியலில் இசைக்கலைஞர்கள் முதல் இடம் பிடித்துள்ளனர்.
சிலாபம் முந்தல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை பூட்டினால் தாக்கிய நிலையில் குறித்த மாணவன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை நேரத்தில் நாடக பயிற்சியில் ஈடுபட்டமைக்காவே ஆசிரியர் தன்னை தாக்கியதாக மாணவன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலில் மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 73 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நைஸ் நகரத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொலிஸாருக்கும் ஆயுததாரிகளுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இரு ஹோட்டல்கள் மற்றும் உணவகமொன்றை ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவிக்கின்றனர்.
லொறியொன்றில் வந்த ஆயுததாரிகள் சனநடமாட்டம் நிறை பகுதியில் குறித்த லொறியை மோதிவிட்டு, அதிலிருந்து இறங்கி தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் இடம்பெற்ற வானவேடிக்கையை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோதே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் சடலங்கள் வீதிகளில் வீசப்பட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மும்பையில் எலிகளை கொல்ல 29 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று கொண்ட எலிகள் தண்ணீர் குழாய்கள்களில் சுற்றித் திரிவதால் அவற்றின் சிறுநீர் மூலம் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நகராட்சி எலிகளை கொல்ல தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக எலிகளை கொல்ல 29 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இவர்களின் வேலை இரவில் கம்பால் 100ல் இருந்து 150 எலிகளை அடித்து கொல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு எலிக்கு ரூ.10 முதல் ரூ.18 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அவர்கள் ஒருநாள் இரவில் ரூ.1800 முதல் ரூ.2700 வரை சம்பாதிக்கின்றனர்.
மேலும் அதிக ஆட்களை வேலைக்கு எடுத்து, பல நகரங்களில் எலிகளை முற்றிலும் ஒழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.