கட்டுப்பாட்டு விலையை விட 5 ரூபா அதிகமாக விற்க முடியுமான பொருட்கள் இவைதான்!!

Price

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுப்பாட்டு விலைகள் நேற்று (14.07.2016) முதல் அமுலுக்கு வருவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கூறியுள்ளது.

எவ்வாறாயினும் இந்தப் பொருட்களுக்குள் குறிப்பிட்ட சிலவற்றிற்கு மாத்திரம் 05 ரூபா அதிகமாக விற்பனை செய்வதற்கு வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிவப்பு பருப்பு, நெத்தலி (டுபாய் மற்றும் தாய்லாந்து), கடலை, பயறு, கோதுமை மா, சீனி, காய்ந்த மிளகாய், கருவாடு (கட்டா மற்றும் சால), மாசி ஆகிய பொருட்களை கட்டுப்பாட்டு விலையையும் விட மேலும் 05 ரூபா அதிகமாக விற்பனை செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அனுமதிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிபாரசபை கூறியுள்ளது.

தங்கச் சட்டை அணிந்து பிரபலமான தொழிலதிபர் மகன் முன்னிலையில் கல்லால் அடித்துக்கொலை!!

Datta-Phuge

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து ஊடக கவனத்தை பெற்றவர் புனேவை சேர்ந்த தொழிலதிபர் தத்தாபுகே.

புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர் இவர், சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர். 1.2 கோடி செலவில் 3.2 கிலோ தங்கத்தை உருக்கி, அதை சட்டையாக அணிந்து 2013ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்றார். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களிலும் ஊடகத்திலும் வைரலாக பரவியதால், இந்தியா முழுவதும் பரவலாக தத்தா புகே அறியப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது அங்குள்ள கும்பலால், தனது சொந்த மகன் கண்முண்ணே புகே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில் மகனுடன் திறந்தவெளி மைதானம் ஒன்றிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது 12 பேர் அடங்கிய கும்பல் புகே மீது கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண பரிவர்த்தனை தொடர்பான பிரச்சினையில் தொழிலதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

GOLD MINGER Wealthy Datta Phuge has splashed out 14,000 GBP on a solid gold shirt to make sure he's a 24 karat hit with women in central India. Money-lender Datta, 32, from Pimpri-Chinchwad, says the shirt took a team of 15 goldsmiths two weeks to make working 16 hours a day creating and weaving the gold threads. It comes complete with its own matching cuffs and a set of rings crafted from left-over gold. "I know I am not the best looking man in the world but surely no woman could fail to be dazzled by this shirt?" he explained. (ends)Golden Dress1

வவுனியா வைரவர்புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பத்தாம் நாள் உற்சவம்!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில்  10 ஆம் நாளான (14.07.2016)நேற்று  அழகிய  அலங்கரிக்கபட்ட  அன்ன வாகனத்தில்  விநாயக பெருமான்  முருகபெருமான் சகிதம்  முத்துமாரி  அம்பாள் எழுந்தருளி வீதி வளம் வந்த நிகழ்வு  இடம்பெற்றது.

13631435_1844890535731921_1249141332875787622_n 13631481_10208616024617074_956390920288047580_n (1) 13631481_10208616024617074_956390920288047580_n 13669551_1844890432398598_2902422264932645298_n 13680615_1844890425731932_9011132578830923707_n 13680792_1844890379065270_2745974231860488152_n 13686563_1844890485731926_5076500348411893544_n 13700036_10208616024817079_7490659131965133621_n 13709919_1844890469065261_8739701513508493618_n 13718619_1844890552398586_3762254015307919265_n

 

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: காதலனை தேடி வீட்டை விட்டு ஓடிய பெண்!!

facebook-性别

தமிழகத்தில் பேஸ்புக் காதலனை தேடிச் சென்ற பெண்ணை தீவிர தேடுதலை வேட்டைக்கு பின்னர் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.விருதுநகரை சேர்ந்த ராமர் என்பவரின் மகள் கவிதா(21) நர்ஸிங் டிப்ளமோ படித்து வருகிறார்.இவருக்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த நெடுங்கல்லை சேர்ந்த லொறி டிரைவரான பிரபாகரன்(24) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பிறகு காதலிக்க தொடங்கினர்.

இதற்கு கவிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த மாதம் 31ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய கவிதா வீடு திரும்பவில்லை.எங்கு தேடியும் கிடைக்காததால் கவிதாவின் பெற்றோர், பிரபாகரன் தன் மகளை கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட விருதுநகர் பொலிசார் கவிதாவின் செல்போன் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.தொடர்ந்து விசாரணை நடத்தியதில் நேற்று நெடுங்கல் கிராமத்திற்கு சென்று கவிதாவை மீட்டனர்.இதற்கு அங்கிருந்த நபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இருவருக்கும் கோயிலில் திருமணம் நடந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.எனினும் கவிதாவின் பெற்றோர் கடத்தல் புகார் அளிப்பதால் இருவரையும் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 4 வயதுக் குழந்தை!!

four year baby

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் தான் அதிக அளிவில் பாதிக்கப்படுகிறார்கள்,

இந்நிலையில், சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள சந்தைப் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 300 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பாடுகாயமடைந்தனர். இஸ்லாமிய பண்டிகை விடுமுறை நாளில் ஷாப்பிங் செய்வதற்காக தனது தாயாருடன் வந்திருந்த ஆசல் அஹமது என்ற 4 வயது சிறுமியும் இதில் படுகாயமடைந்தார்.

வணிக வளாகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தாலும், அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் தீ பரவியதால் இவ்வளவு பேர் உயிரிழக்க நேரிட்டது.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் பலர் திரண்டு அப்பகுதியில் அஞ்சலி செலுத்தினர். அப்போது தீக்காயத்தில் கடுமையாக பாதித்த சிறுமி ஆசல், முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றப்பட்ட நிலையில் தனது தந்தையுடன் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அந்த சிறுமியைப் பார்த்த மற்றவர்கள் கண்கலங்கினர்.

அழகான முகம் தீயில் கருகியதால் பேண்டேஜ் சுற்றிய நிலையில் அஞ்சலி செலுத்த வந்த 4 வயது சிறுமியின் இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு, அகதியாக செல்லும் போது, கடலில் விழுந்து துருக்கி கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய சிரியா நாட்டு சிறுவன் அய்லலின் புகைப்படம் முதல் தற்போது வெளிவந்திருக்கும் இந்த 4 வயது சிறுமியின் புகைப்படம் வரைக்கும் உள்நாட்டு போரால் அவதிப்பட்டு வரும் நாடுகளில் வழும் மக்களின் துயரங்களை இந்த உலகிற்கு தெளிவாக உணர்த்தியும், அவர்களின் வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சரவணன் மீனாட்சி தொடரில் அடுத்த சரவணன் யார் தெரியுமா?

saravanan_meenatchi001

டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடர் 1000வது எபிசோடுகளை தாண்டி இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தெரிகிறது.

எனவே இத்தொடரை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற பெயரில் புதிய தொடர் ஆரம்பமாக இருக்கிறது.இதில் மீனாட்சி என்ற வேடத்தில் ரட்சிதாவே நடிக்க, சரவணன் வேடத்தில் பிரபல தொகுப்பாளர் ரியோ நடிக்க இருக்கிறார்.இதனை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாவிற்கு நடந்த திருமணம்- பரபரப்பு செய்தி!!

sreya001
திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் பின் மார்க்கெட் இழந்து தமிழ் படங்களில் நடிப்பதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.இந்நிலையில் மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸை சிம்பு நடிக்கும் AAA படத்தின் மூலம் தொடங்கிவுள்ளார்.

இந்த படத்தில் இவருக்கும் சிம்புவிற்கும் திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி உள்ளது.ஸ்ரேயா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் நேற்று வெளிவர, சமூக வலைத்தளங்களில் இவருக்கு உண்மையாகவே திருமணமாகிவிட்டது என்பது போல் கருத்துக்கள் கூறி வந்தனர், பின் அது படத்திற்கான ஷுட்டிங் என்பது தெரிய வந்தது.

இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வட்ஸ் அப் : அதிர்ச்சித் தகவல்!!

1 (64)
வட்ஸ் அப் நிறுவனம் சில ஸ்மார்ட் போன்களில் இந்த ஆண்டோடு தங்களின் சேவையை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் செயலி இல்லாத ஸ்மாட்போன்களே கிடையாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. அந்த அளவு வட்ஸ் அப்தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களில் தங்களின் சேவை நிறுத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகியது. தற்போது இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதியோடு சில பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் செயல்படாது. அதற்கான சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று வட்ஸ் அப்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு படி, பழைய ஆண்ராய்டு போன்கள், விண்டோஸ் போன்கள், Symbian, BlackBerry ஆகியவற்றில் வட்ஸ் அப் வேலை செய்யாது.BlackBerry, Nokia S40, Nokia Symbian S60, Android 2.1, Android 2.2, Windows Phone 7.1, iPhone 3GS/iOS 6 இந்த போன்களில் வட்ஸ் அப் வசதி இந்த ஆண்டோடு முடிவுக்கு வருகிறது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றீர்களா : அப்படி என்றால் இது உங்களுக்குத் தெரியுமா?

hands-phones
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒருவர் அனைத்து விதத்திலும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,617 முறை ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் 94 நபர்களை ஒரு குழுவாக பிரித்து கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் 5 நாட்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி சாதாரணமாக போன் பயன்படுத்தும் ஒரு நபர் அனைத்து விதத்திலும் ஒருநாளைக்கு சராசரியாக 2,617 முறை பயன்படுத்துவதாகவும், அதே சமயம் அதிகமாக போன் பயன்படுத்தும் நபர் 5,427 முறை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண நபர் ஒருநாளில் போனின் தொடுதிரையை 2.42 மணி நேரமும், அதிகமாக போன் படுத்தும் நபர் 3.75 மணி நேரமும் பயன்படுத்துகின்றனர்.

அதிகமாக போன் பயன்படுத்தும் நபர் ஒரு வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக போனை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. தவிர, காலை 7 மணிக்கு போனை தொடும் நபர் இரவு உணவு சாப்பிடும் வரை போனை பயன்படுத்துகிறார் என்றும், இவர் காலை 5 மணிக்குள் ஒரு முறையாவது தனது போனை சோதனையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மன் சிலையில் இருந்து கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு.!!

Amman

ராணிப்பேட்டை காரையை அடுத்த புளியங்கண் கிராம குளக்கரையில் கருமாரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் அம்மன் சன்னதி முன்பு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் தற்செயலாக அம்மன் முகத்தை பார்த்தபோது அம்மன் கண்களில் இருந்து கண்ணீர் போன்று வருவதை பார்த்துள்ளனர். உடனே சிறுவர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அம்மன் கண்களில் இருந்து கண்ணீர் போன்று வருவதை பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த தகவல் காட்டு தீபோல கிராமம் முழுவதும் பரவியது. அதைத்தொடர்ந்து பக்தர்களும், பொதுமக்களும் கோவிலுக்கு சென்று பார்த்துவிட்டு சென்றனர். 2 கண்களிலும் கண்ணீர் போன்று வந்தது. காலை 11 மணிக்கு பிறகு அம்மனின் ஒரு கண்ணில் மட்டும் அதுபோன்று வந்தது. பின்னர் பகல் 12.30 மணிக்கு பின்னர் அது நின்று விட்டது.

ஒரு நாள் மேயராக நியமனம் பெற்ற நாய்!!

dog-governer-seithyulgam

அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு நாள் மேயராக ‘ஃப்ரீடா’ என்ற நாய் நியமிக்கப்பட்டுள்ளது.சென் பிரான்சிஸ்கோ நகரில் ஏ.சி.சி. என்ற விலங்குகள் பராமரிப்பு மற்றும் காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நாடு முழுவதும் உள்ள ஆதரவற்ற வீட்டு விலங்குகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஏ.சி.சி. அமைப்பு இந்த வருடம் 25ஆம் ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது.

இந்த நிலையில், சென் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டீன் க்ளார்க் என்ற வீட்டு விலங்குகள் ஆர்வலர் ஏ.சி.சி. அமைப்புக்கு நிதியுதவி வழங்கினார்.இதனிடையே வீதியில் இருந்த ஆதரவற்ற நாய் ஒன்றை அவர் தத்தெடுத்து அதற்கு ‘ஃப்ரீடா’ என்று பெயர் சூட்டி ஆர்வத்துடன் வளர்த்து வருவது ஏ.சி.சி. அமைப்புக்கு தெரியவந்தது.

அது மட்டுமல்லாமல், ஃப்ரீடாவிற்கு அழகான ஆடைகளை அணிவித்தும் ஃபேஸ்புக்கில் பிரபலமடைய செய்துள்ளார். இதுதான் செல்லப் பிராணிகள் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், டீன் க்ளார்க்கின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், ‘ஃப்ரீடா’ சென் பிரான்சிஸ்கோ நகரின் இன்றைய ஒரு நாள் மேயராக தெரிவாகியுள்ளது.

காலை முதலே ஃப்ரீடாவை புகைப்படம் எடுக்க கூட்டம் கூட்டமாக அங்கு பத்திரிகையாளர்களும் பொது மக்களும் சென் பிரான்சிஸ்கோ மேயர் அலுவலகத்துக்கு விரைந்தனர். இதனால் இன்றைய தினம் ஃப்ரீடாவிற்கான தினமாக கொண்டாடப்படுகிறது.

பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணங்கள்!!

528239773
ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.பெண்கள் சில சமயங்களில் ஆண்களை பற்றி தவறாகவும் நினைப்பதுண்டு. ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.

* நண்பர்களுடன் வெளியே சென்றால் ஆண்கள் மதுவருந்த தான் செல்கிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் எப்போதும் பெண்கள் முன்பு எளிதாக புலம்பவோ, கலங்கவோ மாட்டார்கள், நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.

* எதையாவது பற்றி ஆண்கள் ஆழ்ந்து சிந்தனை செய்தால், தட்டிக்கழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கருதுவது. ஆண்கள் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முற்படுவதில்லை என்பதை பெண்கள் பெருமளவில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

* ஷாப்பிங் செல்ல அழைத்து ஆண்கள் வர மறுத்தால், தங்கள் மீது அன்பு குறைந்துவிட்டது, நாட்டம் இல்லை என்று எண்ணுவது. காலை முதல் மாலை வரை கணினி முன்பு உட்கார்ந்து அலுத்து போய் வருபவனை மாலை வெளியே அழைத்தால் அவன் வர மறுப்பது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால் தான். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சில சமயங்களில் பெண்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்

* அலுவலகத்தில் இருந்து நேர தாமதமாக வந்தால், நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் பெண்களின் மனதில் சந்தேகம் எழுகிறது. டார்கெட், டேட்லைன் போன்றவை பற்றி பெண்களுக்கு பெரிதாய் தெரிவதில்லை என்பதால் தான் இந்த எண்ணங்கள் எழுகின்றன.

* வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஆண்கள் தப்புத்தண்டா செய்வார்களோ என்ற எண்ணம் சில பெண்களுக்கு எழுவது இயல்பு. சில ஆண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக மொத்தமாக எல்லா ஆண்களையும் குறை சொல்ல கூடாது.

– எப்போதும் சந்தேக கண்ணுடன் பெண்கள் ஆண்களை பார்ப்பதால் தான் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள். மேலும் பொய் சொல்லவும் செய்கிறார்கள். இதனால் தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நான் தான் கொன்றேன் : மீண்டும் ராம்குமார் வாக்குமூலம்!!

Ramkumar

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் 24ம் திகதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்பவரை பொலிசார் கைது செய்தனர். இவரை பொலிசார் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சுவாதியின் நண்பரும், இந்த வழக்கின் முக்கிய சாட்சியுமான பிலாலிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வழக்கை பொறுத்தவரையில் ராம்குமார் தான் குற்றவாளி, ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போதே அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்.

அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டி இருந்ததால் காவலில் எடுத்து விசாரணை நடத்தினோம். மருத்துவமனையில் என்ன சொன்னாரே அதையே தான் மீண்டும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

அவரை ஒருதலையாக காதலித்ததும், தேவாங்கு என அசிங்கமாக திட்டியதும் தான் காரணம், அவர் தான் குற்றவாளி என்பதற்கு தேவையான சாட்சிகள் எங்களிடம் உள்ளன.

ராம்குமாரின் அறையிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தகறை படிந்த சட்டையை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து பார்த்ததில், சுவாதியின் ரத்தம் தான் என உறுதியாகியுள்ளது.

மேலும் அரிவாளிலும் ராம்குமாரின் கைரேகை உள்ளது, இன்னும் 15 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒரே நேர்க்கோட்டில் புகழான எட்டு சிவாலயங்கள் – புரியாத மர்மங்கள்!!

625.0.560.320.500.400.194.800.668.160.90
இந்தியாவில் பஞ்சபூத தலங்கள் என அழைக்கப்படும் புகழான ஐந்து சிவாலயங்களும் தீர்க்க ரேகையில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது உலகின் பல பகுதிகளில் கிடைக்கும் ஆச்சரியங்களில் வியந்து வரும் இந்தியர்களை தங்கள் முன்னோர்களின் ஞான சித்தியை இதுவரை அறியாதிருந்ததை நினைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.இதுதான் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்த ஆன்மீக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், மேலும், மூன்று சிவாலயங்களும் ஒரே நேர்க்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்திலிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்க்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

பஞ்சபூத ஸ்தலம்

நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

நீர் – திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்

ஆகாயம் – சிதம்பரம் நடராசர் கோயில்

காற்று – திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை

சிவனின் இந்த பஞ்சபூத தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத்

இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

ஆயிரம் மைல்கள்

கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.

தீர்க்கரேகை நிலை

1) கேதார்நாத் – கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் – காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)

3) ஸ்ரீ காளஹஸ்தி – ஸ்ரீ காளஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் – ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் – நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

8) ராமேஸ்வரம் – ராமநாத சுவாமி கோயில் (9.2881, 79.3174)

ஏனைய சிவாலயங்கள்

கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்க்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது ஆச்சரியம் கலந்த செய்தியாக இருந்தாலும் எல்லா கோயில்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்படவில்லை. ஒரே திட்டத்தின் படியோ, ஒரே ஆட்சியின் கீழோ, ஒரே வேலையாட்களாலோ கட்டப்படவில்லை. அதனால், இது இயல்பாக அமைந்திருப்பதுதான். இதிலும் திருவானைக்காவல், திருவண்ணாமலை, கோயில்கள் நேர்க்கோட்டில் சற்று விலகியும் காணப்படுகின்றன.

ஆகமவிதிப்படி கட்டியதில் அப்படி அமைந்ததாக சொல்லமுடியாது நேர்க்கோட்டில் இல்லாத எல்லா கோயில்களும் கூட அவ்விதிப்படிதான் கட்டப்பட்டுள்ளது.

இது மனித முயற்சியை மீறி அமைந்ததுதான் இதற்கான பெருமையும் கடவுளையே சேருவதுதான்.

14 வயது சிறுமியை திருமணம் செய்த 48 வயது இளைஞன்!!

indian-wedding-big-image-1_1427799751_725x725
தமிழகத்தில் 48 வயதுடைய விவசாயி ஒருவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தென்கனிக்கோட்டை கோடாங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன்(48), அப்பகுதியை சேர்ந்த உளி வீரப்பா என்பவரின் மகள் முனியம்மாவை(14) திருமணம் செய்துள்ளார்.

மேலும் இந்த திருமணத்திற்காக மாதப்பன் முனியம்மாவின் தந்தைக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் 2-ஆவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார், தற்போது 3-வது தடவையாக திருமணம் செய்துள்ளார்.

இதையறிந்த, கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல சங்க தலைவர் வின்சென்ட் கோடாங்கியூர் கிராமத்திற்கு ஒரு குழுவை அனுப்பி விசாரணை நடத்த போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அந்த கிராம பகுதியில் குழந்தை திருமணம் சாதாரணமாக நடத்தப்படுகிறது, இதுவரை 9 குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைத்துள்ளோம்.

விசாரணை முடிந்த பின் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளரிடமும், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் பலி!!

bcyE9RgBi
நுவரெலியா – ஹங்குராங்கெத்த பிரதேச பிரிவிற்கு உட்பட்ட லூல்கந்துர அப்பர் கோனாவ தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடந்த மோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு 7 மணியளவில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக உருவெடுத்து கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். சம்பவங்கள் இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த 54 வயதான அய்யாக்கண்ணு என்பவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 6 பேரில் இருவர் ரிகில்ல கஸ்கட வைத்தியசாலையிலும் நால்வர் கண்டி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஹெங்குரங்கெத்த பொலிஸார் சம்பவம் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.