சமாதானத்தை தேடும் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில்!!

Maithiri

2016ஆம் ஆண்டில் இருக்கக்கூடிய சர்வதேச நிறுவனங்களின் அறிக்கையின் படி சர்வதேசத்தின் மத்தியில் சமாதானத்திற்கு முன்னின்று தேடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா இதனை தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, உள்நாட்டிலே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பல நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.

அந்நாடுகளிலே முக்கியமாக மூன்று நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அந்த மூன்று நாடுகளின் பட்டியலில் இலங்கை இருக்கின்றது என்பதை கூறுகின்றேன்.

கடந்த காலங்களை விட தற்போது நாட்டில் சமாதனத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் பல விதமாக சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

இதன் காரணமாகவே, 18ஆவது நிலைமையில் இருந்த இலங்கை சமாதனத்திற்காக இன்றைய காலகட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

சர்வதேச நிறுவனங்களின் அறிக்கையின் படி, 18 நாடுகளைக் கடந்து இலங்கை இன்று முன்னிலையில் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களும், ஒரே இன மக்களாக சேர்ந்து வாழவேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்!!

Katunayake

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு சட்டத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வான் படையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வான்படை அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் மத்தியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மேலோங்கியுள்ளது. குறிப்பாக தீவிரவாதிகளின் தாக்குதல் அண்மையில் அதிகரித்துள்ளது.

அத்துடன், அண்மைய நாட்களில் தீவிரவாதிகள் ஆசிய நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டு வருக்கின்றனர்.

எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தலை நீக்கிகொள்வதற்காக இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக யூரோ கிண்ணத்தை கைப்பற்றிய போர்த்துக்கல் அணி!!

Portugal

யூரோ கிண்ணம் 2016 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்த்துக்கல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

செயின்ட் டெனிஸில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் – போர்த்துக்கல் அணிகள் மோதின.

இந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அபாரமாக வீழ்த்தி முதல் முறையாக யூரோ கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், கூடுதல் அவகாசமாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டன. ஆட்டம் மிகவும் விறுவிறுப்படைந்த நிலையில் முதல் 15 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் சிறிய இடைவேளைக்குப் பிறகு அடுத்த 15 நிமிட ஆட்டம் தொடங்கியது.

இந்த நேரத்தில் போர்த்துக்கல் அணி வீரரான எடர் அபாரமாக ஒரு கோலை அடித்து போர்ச்சுக்கல் ரசிகா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதனையடுத்து அரங்கம் முழுவதிலும் இருந்த போர்த்துக்கல் ரசிகர்கள் ஆரவாரக் குரல் எழுப்பினர்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து பாதியில் விலகிய நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். பின்னர் அடுத்த 12 நிமிட ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்ய பிரான்ஸ் வீரர்கள் துடித்தனர்.

எனினும் போர்த்துக்கல் வீரர்களின் கடைசி நிமிட ஆட்டம் காரணமாக அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்கள் மற்றும் அதற்கும் கூடுதலாக அளிக்கப்பட்ட 2 நிமிடங்கள் ஆக மொத்தம் கூடுதல் நிமிடங்களான 32 நிமிடங்களில் போர்த்துக்கல் அணி அடித்த 1 கோல் காரணமாக யூரோ கிண்ணத்தை முதல் முறையாக கைப்பற்றி அந்த அணி சாதனை படைத்துள்ளது.

கெக்கிராவையில் பிடிப்பட்ட பாரிய விலாங்கு மீன்!!

 
அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து 5 அடி நீளமான சுமார் 12 கிலோ கிராம் எடைகொண்ட விலாங்கு மீன் பிடிப்பட்டுள்ளது.

திப்பட்டுவாவே பகுதியில் மகாவலி ஆற்றில் இந்த மீனை தான் நேற்று பிடித்ததாக கெகிராவ கொரசகல்ல பிரதேசத்தை சேர்ந்த் தினுஷ சம்பத் ஜயவர்தன என்பவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அளவு பெரிய விலாங்கு மீனை நான் என் வாழ்நாளில் பார்த்தில்லை. இவை எமது சுற்றாடலில் வாழும் அப்பாவி உயிரினங்கள்.

விலாங்கு மீன் நல்ல உடல் நிலையை கொண்டுள்ளதுடன் இதன் எடை சுமார் 12 கிலோ கிராமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குளத்திலோ அல்லது ஆற்றிலேயே விட்டால் எவராது கொன்று சாப்பிட்டு விடுவார்கள். அப்படி நடந்தால், பெரும் அநீயாயம்.

இந்த பகுதிகளில் தற்போது விலாங்கு மீன்களை அதிகமான காணமுடிவதில்லை.

நாட்டில் உள்ள அனைவரும் இதனை பார்ப்பதற்காக தெஹிவளை விலங்கியல் பூங்காவில் இதனை ஒப்படைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால சந்ததிக்காக இந்த உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என சம்பத் மேலும் கூறியுள்ளார்.

1 2

வவுனியாவில் கிஷானா பிரதீபனால் பெருன்பான்மை இன மாணவர்களுக்கு உதவி!!

 
கனடாவில் வசிக்கும் கிஷானா பிரதீபன் தனது 15 ஆவது பிறந்தநாளை ஒட்டி தான் சேமித்த பணத்தை கொண்டு தனது பிறந்த நாளான நேற்று (09.07.2016) வன்னி பட்டறை ஊடாக தமிழ் விருட்சம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தந்தை இல்லாத மற்றும் வறிய சிங்கள மாணவ மாணவியர் 15 பேருக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பைகள், பல்கலைக்கழக மாணவிக்கு பணமும், மாகாண மட்டத்துக்கு நீளம் மற்றும் உயரம் பாய்தலில் தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு பாதணியும் என்பவற்றை கச்சேரி மாநாட்டு மண்டபத்த்தில் வைத்து வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதம கணக்காளர் திரு.பாலகுமார், மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி லலித் ஜயசேகர, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) வன்னி பட்டறை அமைப்பின் லது, கச்சேரி அலுவலர்கள் கு.மோகனதாஸ் ஜெய்ஸ் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

1 13589115_1226932837350936_1525246147_o 13616280_1226932920684261_498844955_o 13616299_1226932087351011_195457205_o 13616335_1226947637349456_1749753862_o 13621341_1226930594017827_598033729_o 13621501_1226931804017706_737455424_o 13621552_1226934687350751_1145334641_o 13621871_1226932000684353_2027673544_o 13639419_1226931594017727_1494393178_o 13639742_1226947500682803_221311555_o 13639800_1226931954017691_2130523187_o 13646675_1226932864017600_127893692_o 13646773_1226930374017849_1506701165_o 13646982_1226931607351059_388175201_o 13647093_1226932810684272_685412231_o 13647125_1226933017350918_2061376553_o

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 18 வது பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்!!

 
வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 18 வது பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் நேற்று (09.07.2016) நடைபெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், தர்மபால, புதிதாக அன்றைய தினம் வடமாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட செந்தில்நாதன் மயூரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் வடக்கு இணைப்பாளர்,

வவுனியா நகரபகுதி, கிராம சேவகர், இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பிரதிநிதிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளத்தின் தலைவர், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் மற்றும் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் பா.டெனிஸ்வரன் மிக விரைவாக சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நடவடிக்கையில் உரிமையாளர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்றும் அவர்களின் அசமந்த போக்கினாலேயே கூடுதலான விபத்துக்களும் பயணிகளுக்கு அசோகரியங்களும் ஏற்படுவதாகவும், போட்டித்தன்மையில் ஒரு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் பேருந்துகளை இயக்குவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் அமுலாக்கப்படவிருக்கின்ற நியத்திச்சட்டத்தில் ஓட்டைகள் இல்லையெனவும் இருந்தும் ஏதேனும் ஓட்டையூடாக எவரேனும் உள்நுழைந்தால் அவர் அதிலிருந்து வெளியில் வர முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் தனது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயலாற்றிய புதிதாக வடமாகாண சபை உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள செந்தில்நாதன் மயூரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து சம்பந்தமான பொறுப்புக்களை வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மிகவும் நல்லமுறையில் ஒற்றுமையோடு செயற்படுவதாகவும் மேலும் பல சேவைகளை அவர்கள் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள நிர்வாக உறுப்பினர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

13590284_10209773615366242_6087143969545033617_n[1] 13592243_10209773636246764_5554524408078753393_n[1] 13592340_10209773613926206_678292819984404050_n[1] 13600049_10209773618326316_8522176268254159364_n[1] 13600323_10209773594325716_8278503148114352554_n[1] 13615326_10209773599565847_6677247891824005803_n[1] 13620219_10209773596645774_1670446930190680875_n[1] 13626983_10209773592325666_7137855267916215487_n[1] 13659062_10209773606566022_8305498228110984583_n[1]

தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் : பிரித்தெடுக்க பெற்றோர் விருப்பம்!!

Twin Head babies

தெலுங்கானாவில் தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளை பிரித்தெடுக்க 12 ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் முரளி மற்றும் நாகலட்சுமி தம்பதியருக்கு 2003 ஆம் ஆண்டு, இரட்டை பெண் குழந்தைகள் தலை ஒட்டிப்பிறந்தன.

அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் ஐதராபாத் ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள நிலோபர் அரசு மருத்துவமனையில் வைத்து பராமரிக்கப்படுகிறார்கள்.

அவர்களை பிரித்தெடுப்பதற்கு சுமார் 10 கோடி செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அந்த அறுவைசிகிச்சை வெற்றி பெறுமா என்று உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பிரித்தானியா, சிங்கப்பூர் என சர்வதேச அளவில் பல நாடுகளில் இருந்து மருத்துவர்கள் வந்து வீணா, வாணி என்னும் இந்த இரட்டை சகோதரிகளை பார்த்து சென்றுள்ளனர்.

ஒட்டிப்பிறந்த தங்கள் மகள்களை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு தேவையான நிதி உதவி அளித்து உதவுமாறு தெலுங்கானா மாநில அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் நிலோபர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடவுள்தான் இப்படி அவர்களை படைத்து விட்டார். வீணா, வாணிக்கு லண்டனிலோ, அவுஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ அறுவைசிகிச்சை செய்து, அவர்களை பிரித்தெடுத்து, தங்களிடம் ஒப்படைத்து உதவுமாறு அரசாங்கத்தை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம் என கூறி உள்ளனர்.

“உதவி செய்யுங்கள்” படுகொலை செய்யப்பட்ட தமிழரின் மனைவி கதறல்!!

Bharin Murder

பக்ரைனில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை தமிழகம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த உலகளந்தான்வயல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன்(வயது 38). இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இவர் கடந்த 12 ஆண்டுகளாக பக்ரைனில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு கடந்த 7ம் திகதி முதல் 10 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் 8ம் திகதி மாலை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள சிட்டி சென்டருக்கு சென்றதுடன் மனைவிக்கும், உறவினர் ஒருவருக்கும் போன் செய்து பேசியுள்ளார்.

அன்றிரவு சாலையில் நடந்து சென்றவரை, அங்கு வந்த வங்கதேசத்தை சேர்ந்த நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நாராயணன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பலியானார். எதற்காக கொலை செய்தார்கள் முன்பகை ஏதும் காரணமா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

எனவே இவரது உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீண்டும் ராம்குமார் தற்கொலை முயற்சி? தீவிர கண்காணிப்பில் பொலிசார்!!

Ramkumar

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமாரை பொலிசார் கைது செய்ய சென்ற போது பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் தீவிர சிகிச்சை அளித்த பொலிசார் நீதிமன்ற உத்தரவின் பேரில், புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

புழல் சிறையில் கைதிகளாக உள்ள நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை வாட்டில் தனி அறையில் ராம்குமார் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு யாருடனும் பேசாமல் மன இறுக்கத்தில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் ராம்குமார் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் என கருதிய பொலிசார், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ராம்குமார் தங்கி இருக்கும் அறையில் அவருடன் 2 பொலிசார் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் தூங்காமல் ராம்குமாரையே கண்காணிக்கிறார்கள்.

சிறைக் கைதிகள் எந்த மாதிரியெல்லாம் தற்கொலை செய்வார்கள் என்பது பற்றி இரண்டு பொலிசாருக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மேலும் இரண்டு பொலிசார் அந்த அறைக்கு வெளியே அமர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கண்ணீர் வரிகள்!!

Nadia-Murad

ஈராக், சிரியாவின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை, யாஷிதி பெண்களை கற்பழித்தல் என பல்வேறு கொடூரங்களை செய்து வருகின்றனர்.

அங்குள்ள மக்கள் தாங்கள் விதிக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் வாழ வேண்டும் என கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
மீறினால் அவர்களுக்கு மரணம் நிச்சயம், அதுவும் மற்றவர்கள் கண்முன்னே அடுக்குமாடிகளில் இருந்து உயிருடன் தள்ளிவிடுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் யாஷிதி இன பெண்களை கடத்தி சென்று மிக கொடூரமாக பலாத்காரம் செய்கின்றனர்.

இவர்களிடமிருந்து தப்பி பிழைத்தவர்களில் ஒருவர் தான் Nadia Murad. இவரது கண்முன்னே சகோதரர்கள் ஆறு பேர் உட்பட யாஷிதி இன ஆண்களை கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து Nadia கூறுகையில், கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டேன்.மொசூல் நகருக்கு என்னை கொண்டு சென்றார்கள், அங்கே 150க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கும் அறையில் என்னை அடைத்து வைத்தனர்.

தினமும் இரவு பகல் பாராமல் எத்தனையோ தீவிரவாதிகள் வந்து என்னை தொடர்ந்து பலாத்காரம் செய்தனர்.

மூன்று மாதங்களாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்த பின், அங்கிருந்து அகதிகள் முகாமுக்கு தப்பி வந்தேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இது ஒரு இனப்படுகொலை என கூறியுள்ள Nadia, பிரித்தானியா அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்பெயினில் மாடு பிடி விளையாட்டில் ஒருவர் பலி : வைரலாகும் வீடியோ!!

Spain

ஸ்பெயினின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் வீரர் ஒருவரை மாடு முட்டிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று மாடு பிடி நிகழ்வு(Bull Fight). இந்நிலையில் நேற்று டெருவெல் என்ற இடத்தில் நடந்த விளையாட்டில் 29 வயதான விக்டர் பேரியோ என்ற நபர் மாடால் முட்டிக் கொல்லப்பட்டார்.

குறித்த விழாவினை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. அப்போது, பாய்ந்து வந்த மாடு விக்டரை குத்தி தூக்கிய வீசிய பின்னர், வலதுபுறமாக நெஞ்சில் குத்தியது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது, கடைசியாக 1985ம் ஆண்டில் தான் மாடுபிடி வீரர் பலியானார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பன்றியின் ரத்தம் வேண்டும் : நேரலை நிகழ்ச்சியில் அதிர்ச்சியூட்டிய பேய் நடிகை!!(காணொளி)

ghost_

தாய்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை Thippawan Pui Chaphupuang, இவர் சமீபத்தில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது, தன் உடலில் Pop என்ற ஆவி இருப்பதாக கூறிய நடிகை திடீரென கத்தியதுடன் பேய் போன்று நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.
உடனடியாக நிருபர், ஏன் ஆவி உங்களை விட்டு விலக மறுக்கிறது என கேட்டுள்ளார்.

இதற்கு நடிகை மிக உரத்த குரலில், ஒருவர் என்னை இங்கு அனுப்பி வைத்துள்ளார் என பதிலளித்துள்ளார்.

மேலும் தனக்கு பன்றியின் ரத்தம் வேண்டும் என கேட்டதுடன், அழகாக இருப்பதால் தனது உடலை ஆவி சாப்பிட நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Pop என்பது தாய்லாந்தின் பாரம்பரியான ஆவிகளில் ஒன்று, இளம்பெண்களின் உடலில் புகுந்து அவர்களது உடல் உள்உறுப்புகளை சாப்பிடும் என நம்பப்படுகிறது.

பேருந்தின் சில்லுக்கு இரையாகிய தாய்நாடு திரும்பிய இளைஞன்!!

Accident

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கு சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்தின் சக்கரங்களினுள் நசியுண்டதால் படுகாயமுற்றிருந்த இளைஞனை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சிங்கைநகர் புலோலி தெற்கைச் சேர்ந்த 26 வயதுடைய மினிஸ்வரன் விஜிதரன் என்ற இளைஞர் என்றும் குறித்த நபர் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் அண்மையில் இங்கு வருகை தந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்த நபர் கைது!!

Arrest

அறநெறி பாடசாலை மாணவிகள் 3 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரொருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.

காலி வெலிவத்தை விஜயாநந்த விகாரையில் அறநெறி பாடசாலையில் 5 ஆம் வகுப்பில் கற்கும் மாணவிகள் 3 பேர் இன்று காலை கழிவறைக்கு சென்ற போது அங்கு மறைந்திருந்த நபரொருவர், அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்த சில பெற்றோர் குறித்த நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர், காலி, கபுஹேம்பலவை சேர்ந்த 30 வயதான நபர் என தெரிவந்துள்ளது.

அவர் ஒரு மிதி வண்டியில் வந்து அந்த விகாரையின் பாதுகாப்பு சுவற்றில் ஏறி பாய்ந்து சென்று கழிவறையில் மறைந்திருந்துள்ளமை விசாரணையின் பின்னர் தெரியவந்துள்ளது.

வவுனியா கோவில்குளம் சிவன் கோயிலில் இடம்பெற்ற ஆனி உத்தரம் !!(படங்கள்,வீடியோ)

இன்று 10.07.2016  வவுனியா‬ ‪‎கோவில்குளம்‬‪ அருள்மிகு‬ ‪‎ஸ்ரீ‬ அகிலாண்டேஸ்வரி‬ ‪ ‎சமேத‬‪ அகிலாண்டேஸ்வரர்‬ திருக்கோவிலிலில் ஆனி உத்தரநிகழ்வு இடம்பெற்றது .

 இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான  நடராஜபெருமானுக்கு ‪ ஆனி‬உத்தரத்தினை முன்னிட்டு  விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று  பின்‪ நடராஜப்பெருமான்‬ பார்வதி‬ சமேதராய் ‪‎ஆடியாடி‬ வீதிவலம் வந்த  நிகழ்வு இடம்பெற்றது.

புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற்

கனிக்குந் திருக்கூத்துக்கண்டவர்க்கு எல்லாந்

துளிக்குந் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள்

ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே” –திருமந்திரம்

 

13567402_1250775131609104_1561076292000553402_n

13567402_1250775131609104_1561076292000553402_n 13592624_1250775261609091_7034903627364916342_n 13606652_1250775191609098_6582452575307550188_n 13620752_1250775738275710_7223910287073169394_n 13626570_1250775644942386_1198445828700762950_n 13654316_1250775531609064_8803320487636528292_n 13658914_1250775584942392_1877079485521130334_n 13658984_1250775454942405_3363700830176746853_n

இந்திய கடவுச்சீட்டில் ஐரோப்பா செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் கைது!!

Kattunayake Airport

போலி இந்திய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐரோப்பா செல்ல முயன்ற யாழ். இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து ஓமான் சென்று அங்கிருந்து துருக்கி ஊடாக ஐரோப்பா செல்ல முயற்சித்துள்ளனர். போலி இந்தியக் கடவுச்சீட்டுக்காக ஆயிரம் யூரோக்கள் வீதம் செலுத்துவதற்கு அவர்கள் உடன்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துருக்கிய விமான நிலையத்தில் வைத்து குறித்த இளைஞர்களின் கடவுச்சீட்டு குறித்த சந்தேகம் காரணமாக கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.