மழை தொடர்ந்து நீடிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!!

Malai

தற்போது பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடிக்கும் எனவும், பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதைய சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருட்டு டிவிடியால் பொசுங்கிய பென்சில்!!

Pencil

திருட்டு டிவிடியின் தாக்கத்தால் தமிழ் சினிமா பெரும் ஆபத்தை எதிர்கொண்டு வருகிறது. சமீப நாள்களில் திருட்டு டிவிடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

24 படம் வெளியான மறுநாளே அப்படத்தின் திருட்டு டிவிடி வெளியானது. அந்த டிவிடி பெங்களூருவில் உள்ள திரையரங்கில் வைத்து எடுக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இந்நிலையில் சென்ற சனிக்கிழமை வெளியான பென்சில் படத்தின் திருட்டு டிவிடியும் மறுநாளே வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது. படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ் கமிஷனர் அலுவலகம் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அம்மா மீண்டும் ஆட்சி அமைக்கவில்லை என்றால் எனது நாக்கை அறுத்துக் கொள்கிறேன்!!

AIADMK leader Jayaram Jayalalitha greets the audience during her swearing-in-ceremony as the Chief Minister of Tamil Nadu state in Chennai, India, Saturday, May 23, 2015. An appeals court acquitted the powerful politician in southern India of corruption charges earlier this month, clearing the way for her to return to public office. She was forced last year to step down as the highest elected official in Tamil Nadu after a Bangalore court in September convicted her of possessing wealth disproportionate to her income and sentenced her to four years in prison. (R. Senthil Kumar/ Press Trust of India via AP)

தனது விருப்பத்திற்குள்ளான கட்சி ஆட்சியை பிடிக்கவேண்டும் என பல தொண்டர்கள் மொட்டை அடிப்பது, அலகு குத்துவது என வேண்டுதல் வைப்பது ஒவ்வொரு தேர்தலின்போதும் நிகழ்வது வழக்கம் தான்.

ஆனால், அதிமுக தொண்டரான எஸ்.சதீஷ் என்பவர் விளம்பர பலகை ஒன்றை அமைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதில், ‘2016 மீண்டும் எங்கள் அம்மா ஆட்சிதான். இல்லையெனில் எனது நாக்கை அறுத்துக்கொள்கிறேன்.இப்படிக்கு அம்மாவின் அடிமட்ட தொண்டன்’ என வாசகங்களை எழுதியுள்ளார்.

பெயிண்டர் தொழில் செய்யும் இந்த வாலிபரின் விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகபரவி வருகிறது.எனினும்,வாலிபரின் இந்த விளம்பரம் கண்டிக்கத்தக்கது என்றும், இளைய சமுதாயத்தினருக்கு ஒருதவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என அதிமுக இணையத்தளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலகம் அழியப்போவதாக கூறி 5 நண்பர்களை கொன்ற மாணவர்!!

Untitled
கனடா நாட்டில் உலகம் அழியப்போவதாக கூறி 5 நண்பர்களை கொலை செய்த மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் மேத்தியூ டி க்ரூட்(24) என்ற வாலிபர் அங்குள்ள பல்கழைக்கழகம் ஒன்றில் அறிவியல் மற்றும் உளவியல் பயின்று வந்துள்ளார்.

இவரது தந்தை காவல் துறையில்உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். ஆனால், இந்த மாணவர்போதை மருந்து பழக்கத்திற்கு ஆளானதால் மன உளைச்சல் பிரச்சனைகளும் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளன.இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டில் சமூகவலைத்தளத்தில் பரபரப்பான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இந்த உலகம் விரைவில் அழியப்போகிறது. இந்த அழிவிற்கு காரணமாக இருக்கும் சில ரத்தக் காட்டேறிகளை கொல்ல வேண்டும்.மேலும், அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா கிறித்துவ மதத்திற்கு எதிரானவர்’என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த தகவலை வெளியிட்ட சிலதினங்களுக்கு பிறகு நண்பர்களுடன் கல்லூரி வளாகத்திற்கு அருகே உள்ள ஒரு குடியிருப்பு ஒன்றில் பார்ட்டிக்கு ஏற்பாடுசெய்துள்ளார்.இந்த பார்ட்டியில் ஒரு பெண் உள்பட 22 முதல் 27 வயதுடைய நண்பர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் பொலிசாருக்கு பரபரப்பு தகவல் ஒன்று வந்துள்ளது.தகவல் பெற்ற பொலிசார் அங்குசென்று பார்த்தபோது, 5 பேரில் மூவர் ஏற்கனவே ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்துள்ளனர். மேலும், பெண் உள்படஇருவர் உயிருக்கு போராடியுள்ளனர்.ஆனால்,இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக மேத்தியூவை பொலிசார் கைது செய்து சோதனை செய்தபோது, அவரது உடுப்பிற்குள் சமையல் செய்யப்பயன்படுத்தப்படும் ‘கிராம்பு மற்றும் பூண்டு’ ஆகியஉணவு பொருட்களை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது, ‘கிராம்பு மற்றும் பூண்டு’ ஆகியவற்றை நம்முடன் வைத்திருந்தால் ரத்தக் காட்டேறிகள் நம்மை நெருங்காது’என மேத்தியூ விளக்கம் அளித்துள்ளார்.மேலும், 5 பேரும் ரத்தக் காட்டேறிகள் என்பதால்அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் ’என மேத்தியூ கோபத்துடன் பேசியுள்ளார்.

அல்பேர்ட்டா மாகாணத்தை உலுக்கிய இந்த கொலை நிகழ்ந்த2 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்குநேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.‘கொலையைதான் செய்யவில்லை’என வாக்குவாதம் செய்த மேத்தியூ இறுதியில் தனது குற்றங்கள் அனைத்தையும் நீதிபதி முன்னால் ஒப்புக்கொண்டுள்ளார்.இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாய ஊதியம்: கின்னஸ் சாதனை படைத்த சுவிஸ்!!

SUISSE AFFICHE RBI GUINESS BOOK GENEVA

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சுவிஸ் பிரசாரக் குழுவினர் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.உலக நாடுகளிலேயே முதன் முறையாக சுவிஸில் உள்ள குடிமகன் ஒவ்வொருவருக்கும் அடிப்படை ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளது.

இந்த புதிய சட்டம் மூலம் பணிக்கு செல்லும் அல்லது பணி இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு சுவிஸ் குடிமகனுக்கும் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை அரசு மாதந்தோறும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால், இந்த புதிய சட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அதனை நடைமுறைப்படுத்தப்படும்.

இது தொடர்பாக அடுத்த மாதம் 5ம் திகதி பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த புதிய சட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி Basic Income Switzerland என்ற பிரசாரக் குழுவினர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் உலகிலேயே அதிக நீளமுள்ள விளம்பர பலகையை உருவாக்கியுள்ளனர்.இந்த விளம்பரமானது 87,350 சதுரடி பரப்பளவு கொண்டதால், இது தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த பிரசாரக் குழுவை சேர்ந்த நபர்கள் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு அரசு 2,500 பிராங்க் (3,74,900 இலங்கை ரூபாய்) வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு விடுத்துள்ளனர்.இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், இளைஞர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு குறிப்பிட்ட ஊதியம் அரசு சார்பாக வழங்கப்படும்.எனினும், இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் அடுத்த மாதம் நடைபெற உள்ள பொது வாக்கெடுப்பில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா!(அறிவித்தல்)

 
ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா எதிர்வரும் 21.05.2016 அன்று ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக, பிரதேச செயலாளர் திரு.உதயராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் திரு.தியாகராசா மற்றும் பலர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

எனவே அனைத்து முருகப்பெருமான் அடியார்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறார்கள் ஆலய நிர்வாக சபையினர்.

13221489_1005231472858647_3963617180754674225_n 13230210_1005231392858655_359571645659701750_n

வவுனியாவில் 3 நாட்களாக தொடர்மழை : 2689 பேர் பாதிப்பு : 77 வீடுகள் சேதம்!!(படங்கள்)

 
வவுனியாவில் மூன்றாவது நாளாக தொடரும் மழையினால் 689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 3வது நாளாகத் தொடரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்ப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மழை காரணமாக 306 குடும்பங்களைச் சேர்ந்த 1134 பேரும், வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் 391 குடும்பங்களைச் சேர்ந்த 1508 பேரும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருமாக 711 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 689 பேர் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் 55 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வவுனியா வடக்கு பகுதியில் 21 வீடுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன.

உக்குளாங்குளம், திருநாவற்குளம், தாண்டிக்குளம், பாரதிபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் மக்கள் இடம்பெயர்ந்தது தங்களது உறவினர்களின் வீடுகளில் குடியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

P1200489 P1200491 P1200492 P1200493 P1200494 P1200495 P1200496 P1200497 P1200498 P1200500 P1200501 P1200502 P1200504 P1200506 P1200507 P1200508 P1200509 P1200510 P1200512 P1200513

இலங்கைக்கு மேல் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் இந்தியா நோக்கி நகர்வு!!

Rain

இலங்கைக்கு மேல் வளிமண்டலத்தில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இந்தியா நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நேற்று பெய்த மழைவீழ்ச்சியினளவுடன் ஒப்பிடுகையில் இன்று குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கடந்த இரண்டு தினங்களாக நாடு முழுவதும் பெய்த அடைமழையினால் எட்டுப் பேர் உயிரிழந்திருப்பதுடன், 31,062 குடும்பங்களைச் சேர்ந்த 1,28,428 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெய்த அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 7 மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வௌ்ளம், மண்சரிவு, மரம் முறிந்து விழுதல், திடீர் வௌ்ளம், மின்னல் தாக்கம், அதிக மழையுடன் வீசிய கடும் காற்று ஆகிய இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

இயற்கை அனர்த்தம் காரணமாக 1858 குடும்பங்களைச் சேர்ந்த 5,196 பேர் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து 32 தற்காலிக இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 11 மாவட்டங்களிலும் இடி, மின்னல் தாக்கம், மண்சரிவு, வௌ்ளத்தினால் 8 பேர் உயிரிழந்ததோடு 3 பேர் காணாமல் போயிருப்பதாகவும் இருவர் காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரை பற்றி பேசாதீங்க – கிண்டலாக பதிலளித்த வடிவேலு!!

vadivelu

நேற்று நடை பெற்ற சட்டமன்ற வாக்கு பதிவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வந்த நிலையில், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் வாக்களித்தனர்.இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் நடிகர் வடிவேலு தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் பேசுகையில், மிக அற்புதமாக தேர்தல், பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருப்பது போல் உள்ளது, யார் பாஸ் ஆவார்கள் என்று தெரியவில்லை.மிகவும் குழப்பமாக இருக்கும், ஓட்டுச் சாவடிக்கு சென்று தலையை செம்மறி ஆடு போல நன்றாக 3 முறை சிலுப்பி விட்டு தெளிவா ஓட்டுப் போடுங்கள்.நன்கு சிந்தித்து நம்ம நாட்டுக்கு நல்லது செய்பவர்களுக்கு உங்கள் வாக்கினை அளியுங்கள். 100% எல்லோரும் ஓட்டுப் போட வேண்டும். ஓட்டுப்போட்டு அனைவரும் நமது ஜனநாயக் கடமையை ஆற்ற வேண்டும். கள்ள ஓட்டு தவிர என்று ரிவித்துள்ளார்.பத்திரிக்கையாளர் ஒருவர் விஜயகாந்த் பற்றி கேட்டதற்கு ‘அந்தக் கடையை மூடுங்க’ என்று கூறிய வடிவேலு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் வாக்குரிமை இல்லை!!

Dhanush-Wife-Aishwarya-latest-Pic

தமிழக சட்டசபை தேர்தலில் நட்சத்திரங்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.அஜித், விஜய், ரஜினி, கமல், சிம்பு என அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்

சூர்யா மட்டும் வெளிநாட்டில் உள்ளதால் வாக்களிக்க முடியவில்லை என்று தனது அறிக்கையை வெளியிட்டார்.ஆனால் வாக்கு இல்லாததால் தனுஷ் இத்தேர்தலில் வாக்களிக்கமுடியவில்லை . அடிக்கடி வீடு மாறி மாறி குடியிருக்க நேர்ந்ததால் தனுஷுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் வாக்குரிமை இல்லையாம்.

 

பார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3D ஸ்மார்ட் கிளாஸ்!!

3D Glass

போலந்து நாட்டைச் சேர்ந்த பார்ஸி என்ற தொண்டு நிறுவனம் உருவாக்கியுள்ள மொபைல் அப்ளிகேசன் உடன் இணைந்த 3D ஸ்மார்ட் கிளாஸ் பார்வையற்றவர்கள் வாசிக்க உதவுகிறது.

இந்த ஸ்மார்ட் கிளாஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள கமரா, அவர்கள் வாசிக்க வேண்டியவற்றை புகைப்படமாக எடுத்து மொபைல் அப்ளிகேசனுக்குள் இணையத்தள இணைப்பு மூலமாக அனுப்புகிறது.

புகைப்படங்களில் உள்ள எழுத்துகள், வடிவங்கள் மற்றும் உருவங்களைத் தனித்தனியாகப் பிரித்து ஸ்மார்ட் கிளாசுடன் இணைக்கப்பட்ட ஹெட் போன் மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கேட்டல் முறை மூலமாக இந்த மொபைல் அப்ளிகேசன் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கபப்ட்டுள்ளது.

தானியங்கி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது MBW!!

84lbyob

உலகத் தரம் வாய்ந்த கார்களை உற்பத்தி செய்வதற்கு பெயர் போன நிறுவனம்BMW ஆகும்.இந் நிறுவனம் தானியங்கி கார்களையும் உற்பத்தி செய்து அறிமுகம் செய்யவுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இப் புதிய காருக்கு i NEXT எனும்பெயர் சூட்டப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டில் வீதிகளில் பயணிக்கும் என அவர் உறுதிபடக்கூறியுள்ளார்.இதேவேளை கூகுள், Tesla மற்றும் Volvo உட்பட சில நிறுவனங்கள் ஏற்கனவே தானியங்கி கார்களை வடிவமைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றன.

Volvo நிறுவனம் சீனா மற்றும் ஐக்கி இராச்சியத்தில் தானியங்கி கார்களுக்கான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தியுள்ளது.இப்படியானது நிலையில் BMW நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது தானியங்கி கார் வடிவமைப்பில் மேலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

 

மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை நாடாளுமன்றம்!!

Parliment

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக நாடாளுமன்றத்தை அண்மித்து அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தியவன்னா வாவியின் நீர்மட்டம் தற்போதைக்கு 1.8 மீட்டரை அண்மித்துள்ளது. இன்னும் ஓரிரு அடிகள் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நாடாளுமன்றத்தினுள் முற்றாக வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் நாடாளுமன்றத்தை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற மைதானம் அதனை அண்மித்த பாதைகள் அனைத்தும் தற்போது வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி!!

angry wife

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர்.குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்

உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்.முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்.

வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், ஏதேனும் சில நாட்கள வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.

மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.கணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.

எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு

மரம் முறிந்து விழுந்ததில் கணவர் பலி : மனைவி படுகாயம்!!

Maram

மாதம்பே – ஏகொடவத்தை வீதிக்கருகில் உள்ள வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

38 வயதான வர்ணகுலசூரிய ரக்சான் பிரணாந்து என்ற நபரே பலியாகியுள்ளதாகவும், இவரது மனைவியான 36 வயதையுடைய தம்மிக பியசீலி காயமடைந்நு மாதம்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வீட்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யானைத் தாக்குதலுக்கு அஞ்சி ஆற்றில் குதித்த இருவர் உயிரிழந்த பரிதாபம்!!

Dead Bodies

யானை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் விழுந்த இரு இளைஞர்களின் சடலங்கள் ஹபரண பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

அம்பகஸ்வேவ ஆற்றிற்கு ஆறு இளைஞர்களை கொண்ட குழு ஒன்று மீன் பிடிக்கசென்றுள்ளனர், இந்தநிலையில் ஒரு காட்டு யானை இவர்களை துரத்தியுள்ளது.

இந்தநிலையில் தங்களின் பாதுகாப்பிற்காக இவர்கள் ஆற்றில் குதித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழுவில் இருந்த இருவர்கள் காணாமல் போயுள்ளதுடன், இவர்களின்சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எயிரிகோயா பகுதியை சேர்ந்த 17 மற்றும் 22 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.