செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை!!

iStock_000017225992Medium

நியூ­ஸி­லாந்­தி­லுள்ள வங்­கி­யொன்று வளர்ப்புப் பிரா­ணி­களை வளர்க்கும் தனது பணி­யா­ளர்­க­ளுக்கு ஊதி­யத்­துடன் கூடிய விநோ­த­மான விடு­மு­றையை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.பெற்­றோர்கள் தமது புதி­தாக பிறந்த பிள்­ளை­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கு வழங்­கப்­படும் விடு­ மு­றையை ஒத்­த­தாக இந்த விடு­முறை உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன் பிர­காரம் ஆரம்ப கட்­ட­மாக மேற்­படி ஏ.என்.எஸ். வங்­கியில் பணி­பு­ரியும் வளர்ப்புப் பிரா­ணி­களை வளர்க்கும் 21 பணி­யா­ளர்கள் தமது செல்லப் பிரா­ணி­களை கவ­னித்துக் கொள்­வதற்­காக ஊதி­யத்­துடன் கூடிய விடு­மு­றையைப் பெற­வுள்­ளனர்.இது தொடர்பில் அந்த வங்­கியின் பேச்­சா­ள­ரான சோனியா பெல் தெரி­விக்­கையில், செல்லப் பிரா­ணி­களின் விசு­வாசம் பணி­யா­ளர்­க­ளிடம் செல்­வாக்குச் செலுத்தும் ஒன்­றா­க­வுள்­ளதால் தமது வங்கி மேற்­படி நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ள­தாக கூறினார்.

வங்­கியின் கிளை­க­ளுக்கும் பணி­யா­ளர்­களின் வசிப்­பி­டங்­க­ளுக்கும் உள்ள தூரம் மற்றும் வளர்ப்புப் பிரா­ணி­களின் நிலைமை என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும் ஊதி­யத்­துடன் கூடிய விடு­முறை சில மணி நேர­மா­கவோ அன்றி சில வாரங்களாகவோ அமையலாம் என அவர் தெரிவித்தார். ஏ.என்.எஸ். வங்கித் தலைமை அலுவலகம் மற்றும் கிளைகளில் சுமார் 9,000 பேர் பணியாற்றுகின்றனர்.

 

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(PLOTE) எட்டாவது தேசிய மாநாடு!!

DPLF 1

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) எட்டாவது தேசிய மாநாடு எதிர்வரும் 22ம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ள இம் மாநாட்டில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து கலந்து கொள்ளவுள்ளதோடு, அமைப்பின் சர்வதேச கிளைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் தற்கால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் மாநாட்டினை நடாத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்),
வவுனியா மாவட்ட இணைப்பாளர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)

DPLF 3

ஆவி மகனுக்கு பெண் சடலத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!

Ghost-Marriages

சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் சடலத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல உலக நாடுகளிலும் மூட நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

இப்படியான நிலையில், சீனாவில் இறந்து போன தமது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் பிணத்திற்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சீனாவில் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த பெற்றோரின் மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார்.

தமது மகன் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் உயிரிழந்ததால், மகனது ஆன்மா சாந்தியடையவில்லை என பெற்றோர் கருதினர். இதனால், இறந்து போன மகனது ஆவிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் மரணம் அடைந்து விட்டார். உடனே அந்த பெண்ணின் பிணத்துக்கும் தமது மகனது ஆவிக்கும் திருமணம் செய்ய பெற்றோர் எண்ணினர்.

இது குறித்து பெண்ணின் குடும்பத்தினருடன் பேசி சம்மதிக்க வைத்தனர். பின்னர் முறைப்படி மகனது ஆவிக்கும், இறந்த பெண்ணின் பிணத்துக்கும் கோலாகலமாக திரு மணத்தை செய்து வைத்தனர்.

மணப் பெண்ணான இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆவி மணமகனது பெற்றோர் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை வரதட்சணையாக கொடுத்துள்ளன.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியான 4 புதிய கருத்துக் கணிப்புகள்!!

Tamilnadu Next CM

தமிழகத்தில் 232 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் பெரும்பான்மை முடிவுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று கருணாநிதி முதல்வராக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை

இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 124 முதல் 140 தொகுதிகள் வரை கைபற்றும் என்றும், அதிமுக 89 முதல் 101 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஐக கட்சி 3 தொகுதிகள் வரையிலும், பிற கட்சிகள் 4 முதல் 8 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் நேஷன்:

நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பில்,திமுக 114 முதல் 118 தொகுதிகளிலும், அதிமுக 95 முதல் 99 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு 27 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி நியூஸ்:

ஏபிபி நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திமுக 135 தொகுதிகளிலும், அதிமுக 95 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் மற்ற கட்சிகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்- சீ வோட்டர்:

டைம்ஸ் நவ்-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஆளுங்கட்சியான அதிமுக 139 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக 78 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 17 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். பாஜக.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பின் வெளியான நான்கு கருத்துக்கணிப்புகளில் 3 கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி வெற்றி பெற்று கருணாநிதி அடுத்த முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால். திமுக-வினர் உற்சாகத்தில் உள்ளனர்.

எனினும், தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார்? என்பது மே-19ம் திகதி உலகிற்கு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கலை முன்னிட்டு இடம்பெற்ற தீர்த்தமெடுக்கும் நிகழ்வு!!

 
எதிர்வரும் 23.05.2016  திங்கட்கிழமை  இடம்பெறவுள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு  தீர்த்தமெடுத்தல் நிகழ்வு நேற்று(16.05.216) சிறப்பாக நடைபெற்றது.

காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான தீர்த்தக்குடம் தாங்கிய குழுவின் நடைபவனி பெருந்தெரு வீதி வழியாக அம்மன் சந்தியை அடைந்து புதறிகுடா ஊடாக ஊற்றங்கரையை அடைந்து பின் முல்லைத்தீவு பிரதான வீதியூடாக சிலாவத்தை சந்தியை அடைந்து சிலாவத்தை தீர்த்தக்கரை புனித பிரதேசத்தில் தீர்த்தமெடுத்தல் பி.ப 6.15 மணியளவில் நடைபெற்றது.

நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தபோதும், தீர்த்தமெடுத்தலின்போது மழை முற்றாக ஓய்ந்து கடல் கடும் அலைகொண்டு புனித தீர்த்தகுடம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

தீர்த்தமெடுத்தல் கிரியை

அன்று இப்பகுதி மக்கள் விரத அனுட்டானங்களுடன் இருந்து பிற்பகல் ஒருமணியளவில் முள்ளியவளைக் காட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுக்கச் செல்லும் வைபவத்தில் கலந்து கொள்வர். பாக்குத்தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வர்.

தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருப்பர். சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்படும். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர். குடலில் இறங்கி வாயூறு நீர்வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் நீரால் நிறைந்துவிடும். நீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசனை புரிந்தபின் மாலை ஆறுமணியளவில் அங்கிருந்து புறப்படுவர்.

அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்ததக்குடம் வரும் வழிநெடுகிலும் மக்கள் பந்தரிட்டு மாவிலைத் தோரணம் இட்டு, நிறைகுடம் வைத்து வரவேற்பர். இங்ஙனம் வரிசையதக வைக்கப்பட்ட நிறைகுடப் பந்தரில் தரித்து நின்று இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் காட்டுவிநாயகர் ஆலயத்துக்குத் தீர்த்தக்குடம் விநாயகர் ஆலயத்தை அடைந்ததும் அங்கு விசேட பூசை நடைபெறும்.

இத்தருணம் அடிக்கப்படும் ஆலயமணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெயசிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10 மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில், கொண்டுவரப்பட்ட உப்புநீரை நிரப்பி, அதனைக் கடற்கறை மண்மீது வைத்துத் திரியிட்டு விளக்கேற்றுவர். கடல்நீரில் விளக்கெரியும் அற்புதம் தொடர்ந்து ஏழு தினங்கள் காட்டுவிநாயகர் அம்மன் மண்டபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

1625771_1249869421707909_6937988764516664102_n 13177355_1249869991707852_9183257615162770625_n 13177628_1249868568374661_6368331476141644760_n 13177946_1249870175041167_4754096802289555258_n 13178788_1249870108374507_1628536396306328116_n 13178803_1249869841707867_4549330318607986988_n 13179218_1249867975041387_5330535515020340910_n 13179385_1249868378374680_7856700517565109169_n 13239180_1249869651707886_5429591050381078381_n 13244828_1249870391707812_5047117462639908018_n 13245422_1249868368374681_8223880221908293625_n 13254062_1249869435041241_74903986067493951_n 13254373_1249867958374722_1555038638650248566_n 13260198_1249869895041195_5657919643989978609_n 13260204_1249870441707807_7425264187246921478_n

வவுனியாவில் 11 வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : 64 வயது முதியவர் கைது!!

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 64 வயது முதியவர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்திமிஸ்ரகம பிரதேசத்தில் வசிக்கும் 11 வயதுச் சிறுமி ஒருவரை அயல் வீட்டில் வசித்து வந்த 64 வயது முதியவர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி அயல் வீட்டுக்கு சென்ற சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் அயல் வீட்டில் வசித்து வந்த 64 வயது முதியவர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்

எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை : இலங்கை கொமர்ஷல் வங்கி!!

Attack

கடந்த மே 12ம் திகதி கொமர்ஷல் வங்கியின் கணனி வலையமைப்பின் மீது ஹெக்கர்களால் (Hackers) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஹெக்கர் தாக்குதல், துருக்கியை மையமாக வைத்து இயங்கும், பொஸ்கர்ட்லா (Bozkurtla) எனும் குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மே 10ம் திகதி, ஐந்து தெற்காசிய வங்கிகளிலும், ஐக்கிய இராச்சியத்தை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கி ஒன்றை கடந்த மே 07ம் திகதியன்றும் ஹெக் செய்து, தகவல்களை திருட முயற்சி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும், இவ்வாறான பல்வேறு ஹெக்கர் தாக்குதல்களை அக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும், தாம் உடனடியாக செயற்பட்டதாக தெரிவித்த கொமர்ஷல் வங்கி, இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் எவ்வித தகவல்களோ, பெறுமதிமிக்க கடவுச்சொற்களோ (Passwords) திருடப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

இது தவிர நேபாளத்தின் சனிமா வங்கி, பங்களாதேஷை மையமாகக் கொண்ட டச் பங்களா வங்கி, கத்தார் தேசிய வங்கி போன்றவற்றையும் ஹெக்கர்கள் ஊடுருவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையினால் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்!!

Vegatables

சீரற்ற காலநிலையினால் நாட்டில் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிக மழை காரணமாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறி வகைகளின் தொகை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர் சங்க முன்னாள் தலைவர் யூ.பி. ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறி வகைகளின் தொகை 90 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களிலிருந்து வழமையாக காலையில் வரும் மரக்கறி லொறிகள் மாலை வரையில் வரவில்லை. சீரற்ற காலநிலையினால் அறுவடை செய்ய முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் மரக்கறி வகைகளின் விலைகள் உயர்வடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. மரக்கறி வகைகளுக்கு காணப்படும் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சியில் அடைமழையினால் 7000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

 
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 274 குடும்பங்களை சேர்ந்த 934 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 75 குடும்பங்களை சேர்ந்த 242 பேர் இடம்பெயர்ந்த நிலையில் அவர்கள் ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்று மாலை கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களிலே இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் கரைச்சி, மற்றும் கண்டாவளையை சேர்ந்தவர்கள் எனவும் கரைச்சியை சேர்ந்த 49 குடும்பங்களை சேர்ந்த 152 பேர் மருதநகர் பொதுநோக்கு மண்டபம் மற்றும் தாரணி குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கண்டாவளையை சேர்ந்த 26 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் சிவபுரம் முன்பள்ளி, புன்னைநீராவி பொது மண்டபம் மற்றும் நாதன் குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

நான்கு பிரதேச செயலர் பிரிவுகளில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு வீடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 106 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

இதேவேளை, மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருப்பதனால் இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1 2 3 4 5 6

கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண் சரிவு : 6 பேரைக் காணவில்லை!!

mansarivu

கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடுகண்ணாவ, இலுக்வத்த பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மண்சரிவு காரணமாக ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காணமல் போனவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு ரயில் சேவைகள் பாதிப்பு!!

Train

வடக்கு புகையிரத மார்க்கத்தில் தலாவ மற்றும் தம்புத்தேகமவிற்கும் இடைப்பட்ட பகுதி நீரில் அடிப்பட்டு சென்றுள்ளதால் வடக்குப் பகுதிக்கான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து செல்லும் புகையிரதங்கள் தம்புத்தேகம வரை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வடக்கில் இருந்து புறப்படும் ரயில்கள் தலாவ வரை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

நேற்றிரவு புறப்பட்ட இரண்டு தபால் ரயில்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா நோயினால் கடந்த வருடம் 2935 பேர் பலி!!

Asthma

கடந்த வருடம் மாத்திரம் ஆஸ்துமா நோயால் 2953 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆஸ்துமா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் எந்தவொரு சிகிச்சைகளும் பெறாத நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

நேற்று “உலக ஆஸ்துமா தினம்”அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அதில் கலந்துக் கொண்டபோதே சுகாதார பணிப்பாளர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் முறையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஆஸ்துமா நோயிலிருந்து சுகமடையலாம் என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடமையை நிறைவேற்றி விட்டேன்: வாக்களித்தபின் நடிகை திரிஷா!!

Trisha

சென்னையில் இன்று வாக்களித்த நடிகை திரிஷா, தனது கடமையை நிறைவேற்றியிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

நடிகை திரிஷா கோட்டூர்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் வெளியே வந்த அவர், தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நீண்ட யோசனையுடன் வாக்களித்த விஜய்!!

v1

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் தனது வாக்கை பதிவு செய்ய வந்த நடிகர் விஜய், வாக்கு பதிவு எந்திரத்திற்கு முன் சிறிது நேரம் யோசித்துவிட்டு பின் வாக்களித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய நேரம் முதல் பல்வேறு நடிகர், நடிகைகளும் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அஜித், ரஜினி ஆகியோர் காலையிலேயே முதல் ஆளாக வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

மேலும், பல நடிகர், நடிகையரும் தங்களது வாக்கை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்ய நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு காலை 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை பார்ப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது.

பொலிசார் அவரை பத்திரமாக வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் தனது ஆவணங்களை அலுவலர்களிடம் ஒப்படைத்து, தனது வாக்கை பதிவு செய்ய வாக்கு எந்திரத்திற்கு முன் வந்தார். சில நிமிடம் யோசித்த அவர் பின்னர், தனது வாக்கை பதிவு செய்தார்.

அங்கிருந்து புறப்படும்போதும் ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்துகொண்டனர். பின்னர், அவரை பாதுகாவலர்களும், பொலிசாரும் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

v2v2

அமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்!!

China

சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்பரம் நம்பிக்கையை சிதைத்துவிட்டது. சீன பாதுகாப்பு கொள்கைகள் பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது என்று அமெரிக்காவுக்கு சீனா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இராணுவம், பாதுகாப்பு வளர்ச்சி பற்றிய ஆண்டறிக்கையை அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தயாரித்துள்ளது. அந்த அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “சீனா தனது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் படைகளை குவித்து வருகிறது. மேலும் சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் தனது ராணுவ முகாம்களை விரிவுப்படுத்தி வருகிறது. தென் சீன கடல் பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு இராணுவ தளவாடங்களை குவிப்பதன் மூலம் மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

அதன்மூலம் தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. சீன இராணுவ கொள்கையில் வெளிப்படைதன்மை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு சீனா அரசு நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் யாங் யூஜுன் கூறியதாவது:

சீனா – அமெரிக்காவின் பரஸ்பர நம்பிக்கையை அமெரிக்கா சிதைத்து விட்டது. சீனாவின் இராணுவ கொள்கைகளை திரித்து கூறி மதிப்பிழக்க செய்துள்ளது. பென்டகனின் அறிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. இரு நாட்டு உறவு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேம்பட செய்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள், பாதுகாப்பு துறை கொள்கைகள்தான் சந்தேகத்துக்கிடமாகவே உள்ளன. அமெரிக்காதான் சீன கடல் பகுதிக்கு அத்துமீறி போர் விமானங்களையும் போர்க் கப்பல்களையும் அனுப்பி வருகிறது.

தென் சீன கடல் பகுதியில் நான்ஷா தீவுகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சீனா உருவாக்கி வருகிறது.

தென் சீன கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் போன்ற நாடு கள் உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

T20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை முட்டாள்தனமானது!!

Stephen Fleming

டி20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்படுவது முட்டாள்தனமானது என்று ரைசிங் புனே சுப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சாடியுள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ஓட்டங்களை மாத்திமே குவிக்க, மழை காரணமாக கொல்கத்தா அணிக்கு 9 ஓவர்களில் 66 ஓட்டங்கள் இலக்கு டக்வர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.

இதில் உத்தப்பா, கம்பீர் ஆகியோரை அஸ்வின் முதல் ஓவரிலேயே வீழ்த்தினாலும் யூசுப் பதான் 18 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 37 ஓட்டங்களை விளாச கொல்கத்தா அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களை எடுத்து வென்றது.

இது குறித்து புனே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “டக்வர்த் லூயிஸ் முறை மிக மோசமானது. டக்வர்த் லூயிஸ் முறை நடைமுறைப்படுத்திய உடன் ஆட்டம் முடிந்து விடுகிறது. நான் இதனைப் பற்றி பல ஆண்டுகளாக விமர்சித்து வந்துள்ளேன், மற்றவர்களும் விமர்சனம் வைத்துள்ளனர்.

இந்த முறையை மாற்ற விருப்பம் இல்லாமல் உள்ளது. டக்வர்த் லூயிஸ் முறை டி20 போட்டிகளுக்கானதல்ல. இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும், இது முட்டாள்தனமானது” என்றார்.