றியோ டி ஜெனிரோ நகரில் காட்சிப்படுத்தப் பட்டுள்ள அந்த விளம்பரப் பலகையானது லக்ரிக் அமில கலவையொன்றை வெளியிடுகிறது. அந்தக் கலவை மனித வியர்வையின் வாசனையையும் மனித சுவாசத்தின் போது வெளியிடப்படும் காபனீரொட்சைட்டையும் கொண்டுள்ளது.
மேற்படி விளம்பரப் பலகை, அது ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து சுமார் 2.5 கிலோமீற்றர் தூரம் வரையுள்ள நுளம்புகளை தன்பால் கவர்ந்திழுத்து கொல்லும் வல்லமையைக் கொண் டது என அந்த விளம்பரப் பல கையை வடிவமைத்த போஸ் டர்ஸ் கோப் மற்றும் என்.எஸ்.பி. ஆகிய நிறுவனங்கள் உரிமை கோரியுள்ளன.
பிரேசிலில் நுளம்புகளால் பரவும் ஸிகா வைரஸ் நோய் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இந்த விளம்பரப் பலகை அந்நோயின் பரவலை தடுக்க உதவும் என அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்தத் திறந்தவெளி விளம்பரப் பலகை மக்கள் செறிந்து வாழும் மேற்படி பிராந்தியத்திற்கு மேலும் நுளம்புகளை கவர்ந்திழுக்கும் அபாயமுள்ள தாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிசில்லா ச்சான், ஒஸ்கார் விருது வென்ற லியனார்டோ டிகாப்ரியோ, போப் பிரான்ஸிஸ், ஹிலரி கிளின்டன், ஆங் சான் சூ கி, பராக் ஒபாமா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பதுடன், டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின் ஒன்றில் பிரியங்கா சோப்ராவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.
மேலும், சானியா மிர்சா, சுந்தர் பிச்சை, ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜன், சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நரைன், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சச்சின் பன்சால்- பின்னி பன்சால் ஆகிய இந்தியர்களும் இடம்பிடித்துள்ளார்கள்.
முழுப்பட்டியல் இதோ… Pioneers
Aziz Ansari
Caitlyn Jenner
Laura Esserman and Shelley Hwang
Palmer Luckey
Sunita Narain
Roy Choi
Felix Kjellberg (a.k.a. PewDiePie)
Hope Jahren
Dan Carder
Nadia Murad
Lee Berger
Mussie Zerai
Marc Edwards and Mona Hanna-Attisha
Christiana Figueres
Alan Stern
Raj Panjabi
Ibtihaj Muhammad
Gina Rodriguez
Kathy Niakan
Kip Thorne
Lin-Manuel Miranda
Titans
Tim Cook
Binny Bansal and Sachin Bansal
Yuri Milner
Mohammed bin Nayef
Katie Ledecky
Dwayne Johnson
Pope Francis
Sundar Pichai
Wang Jianlin
Kathleen Kennedy
Eli Broad
Stephen Curry
Priscilla Chan and Mark Zuckerberg
Artists
Kendrick Lamar
Gael García Bernal
Taraji P. Henson
Melissa McCarthy
Elena Ferrante
Riccardo Tisci
Ryan Coogler
Ariana Grande
Idris Elba
Bjarke Ingels
Oscar Isaac
Ta-Nehisi Coates
Guo Pei
Julia Louis-Dreyfus
Mark Rylance
Charlize Theron
Yayoi Kusama
Priyanka Chopra
Leaders
Kim Jong Un
Recep Tayyip Erdogan
Vladimir Putin
Paul Ryan
Diana Natalicio
Lori Robinson
Lester Holt
Queen Máxima
Ted Cruz
François Hollande
Darren Walker
James Comey
Raghuram Rajan
Hillary Clinton
Aung San Suu Kyi
Sergio Moro
Justin Trudeau
Xi Jinping
Barack Obama
Mauricio Macri
Jaha Dukureh
Reince Priebus
Tsai Ing-wen
Sean MacFarland
Bernie Sanders
Nikki Haley
Jin Liqun
Donald Trump
Angela Merkel
John Kerry
Christine Lagarde
Icons
Nicki Minaj
Lewis Hamilton
Usain Bolt
Marilynne Robinson
Karlie Kloss
Jordan Spieth
Alejandro González Iñárritu
Adele
Tu Youyou
Denis Mukwege
Sania Mirza
Ronda Rousey
Leonardo DiCaprio
கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் ஓமன் நாட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் அங்கமாலியை சேர்ந்தவர் சிக்கு ரொபட்(28). இவரது கணவர் கேரள மாநிலம் சங்கனாசேரியை சேர்ந்த லின்சன். இருவரும் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், காலை பணி ஒதுக்கப்பட்டதால் லின்சன் அதிகாலையிலேயே பணிக்கு சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் தனது மனைவி பணிக்கு வராததால் லின்சன் அவருக்கு போன் செய்துள்ளார். போனை சிக்கு எடுக்காதததையடுத்து வீட்டுக்கு சென்ற லின்சன் மனைவின் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு சிக்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரது காதுகள் அறுக்கப்பட்டிருந்ததை பார்த்த லின்சன் அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அடுத்த அறையில் இருந்த பாகிஸ்தானியர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட சிக்கு கர்ப்பமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கொளுத்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டும்வரும் ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்தில் மினி பார், தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய கிட் போன்றவை வழங்கப்படுகின்றன.
காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம்அருகே உள்ள வாரணவாசியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்துள்ளார்.
இந்த கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு, ஜெயலலிதா படம் போட்ட பச்சைத்தொப்பி, குளிர்பானம், தண்ணீர் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய ‘கிட்’ அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
முன்பக்கத்தில் வயதானவர்களே அதிகம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெரிதும் அவதிப்பட்டனர்.
இக்கூட்டத்திற்கு அம்மா வருகையில், வேட்பாளர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ஒத்திகையும் பார்க்கப்பட்டது.
இதில் பற்றாக்குறைக்கு சில தொண்டர்கள் மது அருந்தினர், முதல்வர் ஜெயலலிதா மதுவிலக்குப் பற்றிப் பேசிய போது, நிதானமாகக் குடித்துக் கொண்டே எல்.இ.டி திரையில் பார்த்துக்கொண்டிருந்தனர்.
போதை தலைக்கு ஏறிய நிலையில் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதை காவல் துறையினர் கண்டுகொள்ளவே இல்லை. முதல்வர் பேசஆரம்பித்த 15வது நிமிடத்தில் இருந்தேகூட்டம் கலையத் தொடங்கிவிட்டது.
இதனால் காலி நாற்காலிகளை ஒன்றன்மீது ஒன்றாக உயரமாக அடுக்கி அதன் மீதுஏறி தொண்டர்கள் பிரசாரத்தைப் பார்க்கத் தொடங்கினர். பின்பக்கத்திலிருந்து தொண்டர்கள் வெளியேறியதை காவல் துறையினராலும், கட்சியினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு மணி நேரம் கழித்தும் முதல்வர் பேசிக்கொண்டே இருந்தார். முதல்வர் பிரசாரத்தை முடிக்கும் முன்பே 75 சதவிகித தொண்டர்கள் வெளியேறிவிட்டார்கள்.
யாழ்.பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 4 இடங் களில் ஒரே இரவில் 4 வீடுகளில் இளைஞ ர்குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானவீடுகள் கடுமையான சேதமடைந்திருக்கின்றன.
நேற்றய தினம் இரவு அரியாலை, மாம்பழ ம் சந்தி, சோமசுந்தரம் அவனியூ, யாழ்.இந்துக் கல்லூரி அருகாமை ஆகிய 4 இடங்களில் 4 வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள் ப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் களவு நோக்கத்தில்மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றபோதும், இளைஞர் குழு ஒன்றினால்விசமத்தனமாக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தரப்பினர் கூறியிருக்கின்றார்கள்.
நேற்றய தினம் நள்ளிரவு தாண்டி 3 மோட்டார்சைக்கிள்களில் வந்த 6 இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர்கள் வீடுகளின் கதவுகள், ஐன்னல்கள் போன்றவற்றைஅடித்து உடைத்து அட்டகாசம் புரிந்திருக்கின்றார்கள். இவ் விடயம் தொடர்பாக தாக்குதல் இடம்பெற்ற பகுதியை சேர்ந்தபகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
சுமார் ஒரு மணி நேரம் தங்கள் பகுதியில்சுற்றி திரிந்து தாக்குதல் நடத்தியதாகவும் இது குறித்து தாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தபோதும் பொலிஸார் உடனடியாக சம்பவஇடத்திற்கு வரவில்லை எனவும் குறித்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல.
மாறாக கொஞ்சம் நேரத்தைச் செலவிட்டார் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.
நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ்..
நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (அன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படு த்தவது நல்லது. மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும்.
பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவிகிதம் கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை விட ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும். ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.
தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும் போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, இளஞ்சூடான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.
ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய அன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பொதி செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.
மேலும் பசலை கீரை, அவுரி நெல்லிகள், கரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப் பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட் டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமா னோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.
இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடிக்கொண்டே போகும்.
வளிமண்டலத்தின் உட்புற மாற்றத்தால் நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று(22.04) பிற்பகல் வேளையில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களிலும் குறிப்பாக 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் மழை வீழ்ச்சியின் அளவு 50 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் மேல் மற்றும் தென் கடலோரங்களில் காலை வேளையில் மழைக்கான சாத்தியம் நிலவுகின்றது எனவும் இடியுடன் கூடிய மழையின் போது அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹிக்கடுவை சுற்றுலா விடுதி கடற்பிரசேத்தில் பெண் ஒருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். இன்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
61 வயதான குறித்த பெண் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இவர் இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் என்றும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் கடலில் மூழ்கிய சந்தர்ப்பத்தில் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு ஹிக்கடுவை-ஆராய்ச்சிக்கந்த கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை நடைபெறும் மாதத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் ஓகஸ்ட் மாதமே உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில், இதனை ஏப்ரல் மாதம் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்ததும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்காக அதிக காலம் காத்திருப்பதாகவும், இதனை குறைப்பதற்காகவே இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் எண்ணிக்கையானது 10 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் பெரும்பாலான மக்கள் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் முதலில் செல்லும் தளம் கூகுள் தான்.நம்பர்1 தேடுபொறியான கூகுள் எண்ணற்ற சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்தவகையில் இணையத்தில் பயனாளர்களின் வங்கிக் கணக்கு, கிரிட்டிட் கார்டு போன்ற தகவல்களை திருடி பணத்தை ஏமாற்றும் பல போலி தளங்கள் உள்ளன. அது போன்ற தளங்களை ஆராய்ந்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை தரும் சேவையை கூகுள் வழங்கியுள்ளது.
Google Safe Browsing Technology என்ற Tool மூலம் நாம் ஆபத்தான இணையதளம் தானா என்பதை கண்டறியலாம். ஆனால் இதில் கூகுள் இணையதளமே பாதி ஆபத்தானது என்ற தகவலை காட்டியது. ஆனால் தற்போது இது சரி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கடற்கரையோரம் கட்டப்பட்ட மிதிவண்டி பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேசிலில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை முன்னிட்டு ரியோ டி ஜெனிரோவில் கடற்கரையை ஒட்டி மிதிவண்டி பாலம் கட்டப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் திறந்துவைக்கப்பட்ட இந்த பாலம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாலம் இடிந்து விழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக பாலத்தில் பயணம் செய்த 2 பேர் இறந்துபோயினர். 3 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை மீட்க ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பாலம் இடிந்து விழுந்ததற்காக காரணம் உடனடியாக தெரியவில்லை.
எனினும் பெரிய அலைகள் வந்து மோதியதால் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டபோதே துரு பிடித்த இரும்பினால் பாலத்தின் பாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பாலத்தின் குறுகிய வளைவுகள் வாகன ஓட்டிகளுக்குஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, ஜிகா வைரல் காரணமாக ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் , தற்போது பாலம் இடிந்து விழுந்திருப்பது பிரேசில் அரசாங்கத்துக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமாரை அனுகியுள்ளனர்.அவரும் இப்படத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கான காட்சிகள் தினமும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் அவருக்கு தினமும் இவ்வளவு சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு நாள் நடித்து முடித்தவுடன் அவர் கையில் சம்பளம் கொடுக்க, நான் 3 மணி நேரம் தானே நடித்தேன், பாதி சம்பளம் போதும் என கூறி கிளம்பிவிட்டாராம். இதைக்கண்ட சிவகார்த்திகேயன் இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா என்று ஆச்சரியத்தில் டுவிட் செய்துள்ளார்.
நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல் அறிவிப்பு குறித்து, நடிகர் சங்க செயற்குழுவில் விவாதிக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக சிம்பு அறிவித்திருக்கிறார். விலகலுக்கான காரணம் குறித்து சிம்பு “பீப் பாடல் குறித்து பெரிய சர்ச்சை உண்டானது. ஆனால், அப்பாடலை நான் வெளியிடவே இல்லை. அது குறித்து எனக்கு பிரச்சினையானபோது இந்த நடிகர் சங்கம் எங்கே போனது?
நான் வெளியிடாத பாடலுக்கு பிரச்சினையானபோது நடிகர் சங்கம் ஒரு உறுப்பினருக்கு துணையாக நின்றிருக்க வேண்டும். அதை பண்ணவில்லை.
தற்போது நட்சத்திர கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் அனைத்து முன்னணி நடிகர்களை அழைத்து கேவலப்படுத்தி விட்டார்கள். இப்படி கேவலப்படுத்தும் நடிகர் சங்கத்தில் நாம் ஏன் உறுப்பினராக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆகவே நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல் அறிவிப்பு குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது , “பீப் பாடல் பிரச்சினை குறித்து சிம்பு தரப்பினரிடம் அப்போதே பேசப்பட்டது. ஆனால், அவர்கள்தான் பிரச்சினையை சட்ட ரீதியாக பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். இப்போது இந்த பிரச்சினை ஏன் மீண்டும் வெடிக்கிறது என்று தெரியவில்லை.
நடிகர் சங்க வரலாற்றில் முதல் முறையாக சிம்பு விலகுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். ஒருவர் விலகுகிறேன் என்றவுடன் உடனடியாக கடிதம் வாங்கிக் கொண்டு விலக்குவதற்கு இது பொழுதுபோக்கு கூடம் அல்ல.
மேலும், சிம்புவின் விலகல் கடிதம் இன்னும் வரவில்லை. அக்கடிதம் வந்தவுடன் செயற்குழு கூட்டத்தில் பேசியவுடன் தான் இது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்றைய நிலநடுக்கம் 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளது.
போர்ட்டோவிஜோ நகரில் இருந்து நூறு கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதற்கிடையே நேற்று முன்தினமும் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஈக்வேடார் நாட்டை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் சிறுவர் கட்டாய திருமணம் அதிகரித்துள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் வடக்கு யார்க்ஷையர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 40 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு, பெரும்பாலும் 18வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
எட்டு வயதே நிரம்பிய சிறுவன் கட்டாய திருமண அச்சுறுத்தலுக்கு இரையாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் நடைபெற்றுள்ள 51 சிறுவர் கட்டாய திருமணத்தில் 5 சம்பவங்கள் மட்டும் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மிட்லாண்ட்ஸ் வடக்கு பகுதியில் நடைபெற்ற 31 சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் கூடதண்டிக்கப்படவில்லை.
இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்டறிந்த போதும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து போதிய ஆதரவு கிட்டாத காரணத்தால் நடவடிக்கை எடுப்பதில் முடக்கு ஏற்படுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சிறுவர் கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள 67 வழக்குகளில் சிறுமிகளே பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும். இதில் ஒன்பதே வயதான சிறுமியும் அடங்குவர்.
இந்த வழக்கினை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மொழியை வைத்தே வழக்கினை முன்னெடுத்து செல்வதாகவும், தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமா என்பதை அவர்களது முடிவுக்கு விடுவதாகவும் யார்க்ஷையர் பொலிஸ் அதிகாரி மின்றன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்படுபவர்கள் ஒருபோதும் தங்களது குடும்பத்தினர் மீது விசாரணை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை எனக் கூறும் பொலிசார், பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளிப்பதே தங்களது முக்கிய நோக்கம் எனவும் கூறுகின்றனர். சிறுவர் கட்டாய திருமண விவகாரத்தில் புது திருமணச்சட்டத்தின் அடிப்படையில் கார்டிஃப் பகுதியில் உள்ள வணிகர் ஒருவர் தண்டிக்கப்பட்டதே பிரித்தானியாவில் முதன் முறை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உலகில் பல நாடுகளில் கடலுக்கடியில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் முதன்முறையாக இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையே கடலுக்கடியில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.
508 கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் 21 கி.மீ வரையிலான பாதை மட்டும் கடலுக்கடியில் அமைக்கப்படவுள்ளது. 97,636 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த இத்திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 81 சதவிகிதம் கடன் பெறப்பட்டுள்ளது.
இந்த சேவைக்கான கடன் ஒப்பந்தத்தின் படி மின் சாதனங்கள், சிக்னல் சாதனங்கள் உள்ளிட்டவைகள் ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புல்லட் ரயில் தொடர்பாக ஜப்பான் நாட்டுடனான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்தாக உள்ளது. கடலுக்கு அடியிலான புல்லட் ரயில் சேவை திட்டம் கட்டுமான பணிகள் 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக இத்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை தானே கடற்பகுதி வழியாக அமைக்கப்படவுள்ள இந்த சேவை மூலம் தற்போது 7 மணி நேரத்தில் கடக்கும் 500கி.மீ தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்கமுடியும்.