வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் விசேட கலந்துரையாடல்!!

Puthukkulam

வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 66ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 16வது தடவையாக வடக்கு கிழக்கு இணைந்ததாக நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

இடம் : சித்தி விநாயகர் திறந்த வெளியரங்கு
காலம் : 01.05.2016 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : 4.00 பி.ப

எனவே அனைத்துக் கழக உறுப்பினர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், கிராம மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பித்து தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிப்பதுடன் புலம்பெயர் உறுப்பினர்கள் முகப்புத்தகத்தின் ஊடாக தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

நிர்வாகம்
சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகம்

வவுனியாவில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா!!

 
வவுனியா பொலிஸ் தலைமையகம் தலைமையில் நெஸ்டமோல்ட் இன் பிரதான அனுசரனையில் இன்று (23.04.2016) வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா நடைபெற்றுவருகின்றது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த எக்க நாயக்க , வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசூரிய பனாண்டோ, தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப் புத்தாண்டு நிகழ்வில் சைக்கிள் ஓட்டப் போட்டிகள், மரதன் ஓட்டப் போட்டி, கயிறு இழுத்தல், சறுக்கு மரம், தலையணைச் சண்டை, விநோதஉடைப் போட்டி , குழந்தை ராணி, பெருநாள் ராணி போட்டிகள் என பல போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

-வவுனியா நகரசபை மைதானத்திலிருந்து எமது செய்தியாளர்-

20160423_094206 20160423_094208 20160423_094224 20160423_094422 20160423_095259 20160423_100641 20160423_100647 20160423_100704 20160423_100728 20160423_100738 20160423_100750 20160423_100804

வவுனியாவில் யானைத் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!!

Ele

வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த இரத்தினம் இராசலிங்கம் (58 வயதுடைய 5 பிளைகளின் தந்தை) பெரியகுளம் பகுதியிலிருக்கும் வயலில் வயல் காவலுக்குச் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை 2மணியளவில் வயலில் படுத்திருந்தபோது எதிர்பாரதவிதமாக வந்த காட்டு யானை குறித்த குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்திச் சென்றுள்ளது. யானையின் தாக்குதலில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதுடன் நாடிப்பகுதியிலும் காயம் எற்பட்டதையடுத்து குறித்த நபரின் கூக்குரலையடுத்து பக்கத்து வயலில் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரின் உதவியுடன் உடனடியாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 100 பேரின் பெறுபேறுகளில் மாற்றம்!!

AL

கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 100 பேரின் பெறுபேறுகளின் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 61,106 பரீட்சார்த்திகள் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீடு செய்யுமாறு கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவ்வாறு மீள்மதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பித்த 100 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!!

 
பேசாலை உதயபுரத்தை சேர்ந்த 5ம் ஆண்டு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்தற்கு உட்படுத்தியமைக்கு எதிராக குறித்த கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அதிகாலை 4 மணிமுதல் வங்காலைபாடு சந்தியில் வீதிதடைகள் ஏற்படுத்தபட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்நிமலநாதன் பாதிக்கப்பட்ட கிராம மக்களின பிரச்சினைகள் தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டதுடன், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு விடயம் தொடர்பாக அறிவித்ததுடன் மக்களையும் சமரச படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

இன்று சனிக்கிழமை அதிகாலை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்கபட வேண்டும்.

பெண்கள், சிறுவருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகங்களை தடுப்பதுடன் பாதிக்கப்பட்ட உதயபுரம் சிறுமிக்கு நீதிகிடைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..

உதயபுரம் கிராமத்தை சேர்ந்த துள்ளுகுடியிருப்பு சென்.மேரிஸ் பாடசாலையின் 5ம் ஆண்டு மாணவி ஒருவர் தனியார் வகுப்பிற்கு பேசாலை 5ம் வட்டாரத்திலுள்ள வீடோன்றில் டியூசன் வகுப்பிற்கு சென்றுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு குறித்த டியூசன் வகுப்பிற்கு சென்றிருந்தபோது அங்கு ஆசிரியர் இருந்திருக்கவில்லை.

இந்நிலையில் சிறுமி அப்பகுதியில் நின்றுள்ளார். அதனை அவதானித்த குறித்த டியூசன் ஆசிரியரின் வீட்டிற்கு அருகிலுள்ள இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியின் பக்கத்திலுள்ள அவரது வீட்டிற்கு சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.

குறித்த இளைஞனின் சொந்த விடான பாழடைந்த வீட்டிற்கு சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து தப்பித்துள்ள சிறுமி அருகிலுள்ள கடை ஒன்றிற்கு ஓடிசென்று தனக்கு நடந்தவிடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டு அதனுடாக சிறுமியின் பெற்றோர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபரை பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரி வங்காலை பாடு சந்தியில் அதிகாலை 4 மணிமுதல் வீதிதடைகள் ஏற்படுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும் அங்கு வந்திருந்த பொலிசார் சமரசப் படுத்தி வீதித் தடையை அகற்றுமாறு தெரிவித்தனர்.

ஆனால் ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்தபகுதிக்கு சிறுவர் நன்நடத்தை பிரிவு அதிகாரி மற்றும் பகுதி கிராமசேவகருக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக தகவல் வழங்கியும் அவர்கள் வராததை ஆட்சேபித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்.

வாகன போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்திருந்தனர். ஆதனால் தலைமன்னார் பிரதான வீதியூடாக பயணித்த அனைத்து வாகனங்களும் செல்லமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே அங்குவந்த கிராசேவகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிசாரும் ஆர்ப்பாட்டகாரர்களிடம் சமரபேச்சு நடத்தபட்டு குறித்த பாலியல் துஸ்பிரயோக சந்தேக நபருக்கு கடுமையான தண்டனை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

1 2 3 4 5 6

பொலிஸாரின் காதைக் கடித்த நபர் தப்பியோட்டம்!!

Pol

மஹியங்கனை – சேனார பிரதேசத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபான நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் காதை நபர் ஒருவர் கடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாரின் காதை கடித்த நபர் தப்பியோடி உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.

தப்பியோடிய சந்தேக நபரினை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத மதுபான மோசடி தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு சந்தையில் ஒரு கிலோ மீன் 400 ருபாய் : மக்கள் கவலை!!

FIsh

பெரும்கடல் வளத்தைக்கொண்டுள்ள முல்லைத்தீவு நகரில் மீன் விலை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்தலைமை தாங்கும், 7 அங்கத்தவரை கொண்ட ஒரு குடும்பத்துப் பெண் இன்று காலை 400 கிராம் மீனை 160 ருபாய் விலை கொடுத்து வாங்கிச்சென்றதை அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பாக குறித்த பெண்ணிடம் வினவியபோது, தங்கள் குடும்பத்தில் 4 சிறியவர்களும் ஒரு முதியவரும், அடங்குகின்றார்கள்.

400கிராம் மீனை துண்டுகளாக வெட்டினால் 50 கிராம் கழிவாகிவிடும். மீதி 350 கிராம் மீன்துண்டுகளை பகிர்ந்துண்பதாகவும், ஆடைகள் தைப்பதன் மூலம் ஒரு நாளைக்கு சராசரி 250 ருபாய் வருமானத்தை தான் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக கூடாது : ஒபாமா வலியுறுத்தல்!!

Obama

பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க மக்கள் ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதன் மூலம் அதிபர் ஒபாமா பிரிட்டன் ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார்.

பிரிட்டனுக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள அதிபர் ஒபாமா, அதில் ´´பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றும் உலகெங்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது போன்றவற்றில் பிரிட்டன் மேலும் செயற்திறனுடன் செயற்படுவதற்கு அது ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதே சிறந்தது’ என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இங்கிலாந்து தொடர்ந்து இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, அந்த நாட்டில் ஜூன் மாதம் 23ம் திகதி கருத்து வாக்கெடுப்பு நடக்கிறது.

இந்த கருத்து வாக்கெடுப்பில் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க மக்கள் ஆதரவுகரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார்.

பிரிட்டன் எந்த பாதையில் செல்வது என்று எடுக்கும் முடிவு, இன்றைய அமெரிக்கர்களின் எதிர்காலத்தில் பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தும் என்பதால், இதில் தமக்கும் ஆர்வங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்று கூறி வருகிற லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக இருக்க அமெரிக்கர்கள் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என சாடி உள்ளார்.

இரு வேறு இடங்களில் இரண்டு கொலைகள்!!

Murder

முந்தளம், ரத்மல்கஸ்வெவ பிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹகும்புக்கடவல, ஜயராஜபுர பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் புத்தளம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று முந்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதவிர, ஊரகஸ்மங்ஹந்திய, பெலிகஸ்வெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மிதிபலகையில் சென்ற வயோதிபர் கீழே விழுந்து உயிரிழப்பு!!

Foot

பஸ் வண்டியின் மிதிபலகையில் நின்றுகொண்டு பயணம் செய்த 82 வயதுடைய நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.லத்துவ – வெலிமட வீதியில் அம்பகஸ்தோவ சந்தி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊவபரணகம பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தங்காளை – மாத்தறை பிரதான வீதியில் பெலியத்த பிரதேசத்தில் பஸ் ஒன்று மோதியதில் 72 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு காரணமான பஸ் வண்டி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா குட்செட் வீதியில் கைக்குண்டு மீட்பு!!(படங்கள்)2ம் இணைப்பு

 
வவுனியா குட்செட் வீதியில் இன்று (23.04.2016) காலை கைக்குண்டு மற்றும் அடையாள அட்டை ஒன்று வவுனியா பொலிசாரினால் மிட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா குட்செட் வீதி அமைதி அகத்திற்கு அருகே காணப்படும் சிறிடெலோ இளைஞர் அணியின் தலைவரின் இல்லத்திற்கு முன்பாக காணப்படும் மதகிக்கு அருகே சிறிய பையினுள் சந்தேகத்திற்கு கிடமான பொருள் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு தெரிவித்தமையை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அந்த சந்தேகத்திற்கு கிடமான பையினை திறந்தபொழுது கைக்குண்டு மற்றும் அடையாள அட்டை ஒன்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

கடந்த சில வாரங்களாக வடக்கு மாகாணத்தில் தற்கொலை அங்கி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

13046151_473058282887492_2111498131_n 13059528_473058459554141_1325647008_n 13081631_473058356220818_900184651_n 13081996_473058489554138_1958860912_n 13082007_473058512887469_1279540330_n 13084060_473058476220806_1446043157_n 13090079_473058346220819_628678657_n 13090118_473058316220822_1865462890_n 13090532_473058439554143_1594050732_n 13090539_473058389554148_2050951287_n

வவுனியா குட்செட் வீதியில் கைக்குண்டு மீட்பு!!

Bomb

வவுனியா குட்செட் வீதி அமைதி அகம் இல்லத்திற்கு அருகே காணப்படும் வீதிக்கு அருகே கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்..

குறித்த பகுதியில் மதகை அண்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் அடையாள அட்டை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொதுமகன் ஒருவரினால் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த அழைப்பை அடுத்து அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிசார், சந்தேகத்திற்கு இடமான அப் பொருளை திறந்து பார்வையிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய சித்திரா பௌர்ணமி விழா!!

 
வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த சித்திரைப் பௌர்ணமி உட்சவம் நேற்று ஆலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நேற்றயதினம் பல அடியவர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று அடியவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

13020498_1030016163750151_1862310897_n 13022268_1030017153750052_1635102058_n 13022313_1030013587083742_2016776943_n 13045475_1030016413750126_493525377_n 13045629_1030014190417015_1577544076_n 13059765_1030018010416633_1767003122_n 13077193_1030015753750192_1763518919_n 13081661_1030015127083588_532918290_n 13081716_1030015883750179_277611539_n 13081898_1030016270416807_1772299607_n 13081923_1030015693750198_510832432_n 13082033_1030013687083732_1084242953_n

 

முல்லைத்தீவு அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய சித்திரா பௌர்ணமி விழா!!

 
முல்லைத்தீவு அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரைப் பௌர்ணமி உட்சவம் நேற்று ஆலயத்தில் வெகு விமர்சயாக இடம்பெற்றது.

நேற்றயதினம் பல அடியவர்கள் காவடி, தூக்குக்காவடி, தீச்சட்டி, பால்செம்பு உள்ளிட்ட பல நேர்த்திக் கடன்களை பல அடியவர்கள் நிறைவேற்றினர்.

இதேவேளை எம்பெருமான் உள்வீதி வெளிவந்து அலங்கரிக்கப்பட்ட முத்துச்சக்கரத்திலே வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

DSC00961 DSC00962 DSC00963 DSC00964 DSC00965 DSC00966 DSC00967 DSC00968 DSC00969 DSC00970 DSC00972 DSC00973 DSC00974 DSC00975 DSC00980 DSC00983 DSC01001 DSC01002 DSC01009 DSC01011 DSC01012 DSC01013 DSC01015 DSC01016 DSC01017 DSC01021 DSC01022 DSC01031 DSC01033 DSC01034

வவுனியா கருப்பனிச்சங்குளம் நாவலர் பாலர் பாடசாலைக்கு ம.தியாகராசா உதவி!!

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா கருப்பனிச்சங்குளம் நாவலர் பாலர் பாடசாலை உதவி வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா கருப்பனிச்சங்குளம் நாவலர் பாலர் பாடசாலை மின் இணைப்பிற்கான நிதி வழங்கி வைக்கப்பட்டது.

01 IMG_1973 IMG_1975 IMG_1980

பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமணம்!! (படங்கள்)

 
நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி மேனன் ஆகியோரின் திருமணம் இன்று திருப்பதி கோவிலில் நடைபெற்றுள்ளது.

பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கிய படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் விரைவில் காதலர்கள் ஆனார்கள். பிறகு இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிலையில், இருவருக்கும் திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள்.

ஏப்ரல் 24 ஆம் திகதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

1 2 3 4 5