டெங்கு நோய் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து கவனம்!!

Dengu

டெங்கு நோய் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் டெங்கு நோய்க்கு எதிரான ஊசி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது, இந்த ஊசிமருந்து இலங்கையில் பயன்படுத்த முடியுமா, பொருந்துமா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

இது தொடர்பில் ஆய்வு செய்யுமாறு தொற்று நோய் தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் போசாக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன இது குறித்து பணிப்புரைவிடுத்துள்ளார்.

இந்த ஊசி மருந்து, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு இந்த மருந்து பொருத்தமாக இருந்தால் அதனை தேசிய மருந்து பொருள் தரநிர்ணயஅதிகாரசபையினால் பதிவு செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னாரில் 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞனுக்கு விளக்கமறியல்!!

Mannar

மன்னார், உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞரை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரான இளைஞனை நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் பொலிஸார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இளைஞனை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவர், அயல் கிராமமான பேசாலை கிராமத்தில் மாலை நேர வகுப்பிற்கு சென்றுள்ளார். எனினும் ஆசிரியர் அங்கு இருக்கவில்லை. அதனால் மாலை நேர வகுப்புக்கள் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியை, அந்தப் பகுதியிலிருந்து பாழடைந்த வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞரிடம் இருந்து தப்பிய, சிறுமி பேசாலை பகுதியில் உள்ள சிலரிடம் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து உடனடியாக மாணவியின் பெற்றோரினூடாக பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

பேசாலை பொலிஸார் உடனடியாக குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறித்த சம்பவத்தை கண்டித்தும் உதயபுரம் கிராம மக்கள் நேற்று காலை 5 மணிமுதல் 6.30 மணி வரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வங்காலைபாடு சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் பாதாள அறைக்குள் பெருந்தொகை தங்கம்!!

Elisabeth

இங்கிலாந்து நாட்டில் உள்ள பாதாள அறையில் 5,134 டன் எடையுள்ள தங்கக் கட்டிகளை அந்நாட்டு அரசாங்கம் இரகசியமாக பாதுகாத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள திரெட்நீடில் சாலையில் இங்கிலாந்து வங்கி (Bank of England) இயங்கி வருகிறது. இந்த வங்கி அமைந்துள்ள நிலப்பரப்பிற்கு கீழே உள்ள பாதாள அறைகளில் தான் 5,134 டன் எடையுள்ள தங்க கட்டிகள் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உலகில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் இருப்பை ஒப்பிடும்போது, இங்குள்ளது சுமார் ஐந்தில்ஒரு பகுதி ஆகும். சுமார் 3 இலட்சம் சதுரடி பரப்பளவில் உள்ள இந்த இரகசிய அறையில் உள்ள தங்கத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 172 பில்லியன் பவுண்ட் ஆகும்.

இதுமட்டுமின்றி, லண்டன் நகர வீதிகளின் நிலப்பரப்பிற்கு கீழ் ஆங்காங்கு சுமார் 1,000 டன் எடைக்கும் அதிகமான தங்கக் கட்டிகளும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1930-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த இரகசிய பாதாள அறைகளுக்கு ஒரு சிலர் மட்டுமே செல்ல முடியும். அதுமட்டுமில்லாமல், இந்த அறைகளை திறப்பதற்கு குறிப்பிட்ட உயர் அதிகாரி ஒருவரின் ‘குரல் ஒலி’ மற்றும் 3 அடி நீளமுள்ள சாவியும் பயன்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 2012-ம் ஆண்டு கடைசியாக இந்த இரகசிய பாதாள அறையை ஆய்வு செய்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை : ஜெயலலிதா!!

Jeya

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா கடந்த 9ம் திகதி முதல் மண்டலம் வாரியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

அதன்படி திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு ஜெயலலிதா பேசியதாவது:-

இலங்கை பிரச்சினையில் தி.மு.க. நாடகம் ஆடியது. இலங்கைத் தமிழர்களை தி.மு.க. ஏமாற்றியது. தமிழர் படுகொலைகளை தடுக்கவில்லை. இலங்கை அரசுக்கு மத்திய அரசு இராணுவ உதவி வழங்கியதை தி.மு.க. தடுக்கவில்லை. எனது ஆட்சியில் இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படுகின்றன. அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு எனது அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவாம். மேலும், இலங்கையில் நிலைமை முழுமையாக சீரடைந்த பிறகே இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். பூரண மதுவிலக்கில் தி.மு.க.வுக்கு உடன்பாடில்லை. தனியார் மூலம் மது விற்பனையை தொடர தி.மு.க. திட்டமிட்டுள்ளது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும், இவ்வாறு அவர் பேசினார்.

பிரபல நடிகை செய்த பாரிய நிதி மோசடி!!

Hema

பிரபல நடிகையும் பா.ஜ., எம்.பி.,யுமான ஹேமமாலினி தனது நடன பள்ளிக்காக ரூ.70 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.1.75 இலட்சத்திற்கு (இந்திய ரூபாய்) வாங்கியதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் இந்த பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்திற்காக ஹேமமாலினி முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அரசு சார்பில் ரூ.8.25 இலட்சம் அவரிடமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் பலி!!

Pali

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கைவேலி மருதமடு குளத்தில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று மதியம் ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2ம் வட்டாரம், கைவேலி புதுக்குடியிருப்பில் வசித்தவரும் தற்போது புளியம் பொக்கனையில் வாழ்ந்து வருபவருமாகிய யோகேஸ்வரன் முரளிதரன் (வயது 32) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியும் ஒரு கொடூரமான விபத்து நிகழுமா?

 
சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு விபத்துக்களை ஏற்படுத்தி ஓட்டுனரான முதியவர் ஒருவர் உடல் நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் லூசெர்ன் மாகாணத்தில் உள்ள Mehlsecken என்ற நகரில் நேற்று மாலை 5.15 மணியளவில் A2 சாலையில் பெயர் வெளியிடப்படாத முதியவர் காரில் பயணம் செய்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு நீண்ட தூரத்தில் ரயில் வருவதற்காக வாகனங்கள் வரியில் காத்துக்கொண்டு இருந்துள்ளது.அப்போது, கட்டுப்பாட்டை இழந்த முதியவரின் கார் மற்ற வாகனங்களை முந்திக்கொண்டு தண்டவாளத்தில் ஏறி விபத்துக்குள்ளானது.

ஆனால், அப்போதும் நிற்காத அந்த கார் தண்டவாளத்தில் இருந்து விலகி மற்றொரு கார் மீது மோதி, பின்னர் நின்றுக்கொண்டு இருந்த பெரிய லொறியின் பின்புறத்தில் அசுர வேகத்தில் மோதி அப்பளம் போல் நொருங்கியுள்ளது.

இந்த விபத்தில் காரை ஓட்டிய முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றொரு காரில் பயணம் செய்திருந்த 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக 2 ஹெலிகொப்டரில் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், முதியவரின் கார் எதனால் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாராக ஓடியது என்பது குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 4 1 2

100 ரூபாய்க்கு குழந்தையை விற்க முயன்ற தாய்!!

baby

ஆந்திராவில் பெற்ற பிள்ளையை 100 ரூபாய்க்கு தாய் ஒருவர் விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவின் சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.

நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தவர், திடீரென கடைக்கு சென்று குழந்தையை வைத்துக் கொண்டு ரூ.100 தருமாறும், தனது வறுமையை போக்க உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மனநிலை பாதிக்கப்பட்ட நபர் என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்த பொலிசார், பெண்ணையும், குழந்தையையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலால் பாகுபலி–2 படப்பிடிப்பு நிறுத்தம்!!

Bhabali

ஐதராபாத்தில் வெயில் காரணமாக பாகுபலி–2 படத்தின் படப்பிடிப்பு 2 வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் நேற்று 113 டிகிரி வெயில் கொளுத்தியது. பல மாவட்டங்களில் 110 டிகிரியை தாண்டியதுடன் அனல் காற்று வீசியது. இன்னும் 4 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை தகவல் மையம் எச்சரித்து உள்ளது.

வெயில் காரணமாக ராஜமௌலி இயக்கி வரும் பாகுபலி–2 படத்தின் படப்பிடிப்பு 2 வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபாஸ், ரானா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள். வெயிலில் படப்பிடிப்பு நடப்பதால் நடிகைகள் சோர்ந்துபோய் விடுகிறார்கள். இதன் காரணமாக நடிகைகள் பங்கேற்கும் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் படத்தின் மற்ற பணிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் பிரபாஸ், ரானா ஆகியோரின் உடற்பயிற்சி தினமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாகுபலி–2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட இயக்குனர் ராஜமௌலி திட்டமிட்டுள்ளார்.

மாணவனை முரட்டுத்தனமாக தாக்கிய ஆசிரியர்!!(காணொளி)

thumb_we

அமெரிக்காவின் மில்வோகீ பிரதேசத்தின் உயர் பாடசாலையொன்றில் 14 வயதுடைய மாணவர் ஒருவரை கண்மூடித்தனமாக ஆசிரியர் ஒருவர் தாக்கும் காணொளியொன்று இணையத்தில் பரவியுள்ளது.

குறித்த தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய்,அஜித்தை பின்தள்ளி முதல் இடத்தைப் பிடித்த தனுஷ்!!

Danush

தமிழ் சினிமாவின் மிகவும் பிடித்த நடிகர்கள் பட்டியல் ஒன்று இருக்கும், இதில் பெரும்பாலும் அஜித், விஜய்யே மாறி மாறி முதல் இடத்தை பெறுவார்கள்.

ஆனால், இந்த வருடம் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்கள் யார் என பிரபல ஆங்கில நாளிதழ் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதன் பெருபேறு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த அஜித் 4வது இடத்திற்கு வந்துள்ளார். இவை அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் 5 இடங்களையும் பிடித்த நடிகர்களின் பட்டியல் இதோ…

1. தனுஷ்
2. சூர்யா
3.விஜய்
4. அஜித்
5. விக்ரம்

இலங்கையில் பேஸ்புக் ​தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

FB

பேஸ்புக் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் தொடர்பில் சுமார் 650 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவருடைய நிழற்படத்தைப் பயன்படுத்தி மற்றுமொருவர் போலி கணக்கு திறந்துள்ளமை குறித்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக கணனி துரித நடவடிக்கைப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேஸ்புக் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்வதன் ஊடாக போலிக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

இதுதவிர இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவிற்கும் முறைப்பாடு செய்வதன் ஊடாக உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் சிக்கிய இராட்சத திருக்கை!!

Thirukkai

திருகோணமலை – மனையாவெலி பகுதியில் 600 கிலோகிராம் எடையுள்ள இராட்சத திருக்கை மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திருக்கை மீன் நேற்று பிடிப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகின்றது. இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான பெரிய மீன் ஒன்று பிடிப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுடன் இணைகிறார் நடிகை நமீதா!

Namitha

பிரபல நடிகை நமீதா இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் திருச்சியில் அதிமுகவில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நமீதா அதிமுகவில் இணைய விரும்பி எழுதிய கடிதம் இன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவர் எப்போது இணையப் போகிறார், இதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புக் கொண்டாரா போன்ற கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

நடிகை நமீதா இப்போது திருச்சியில் முகாமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இன்று பிற்பகல் திருச்சி பொன்மலையில் நடக்கும் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் அதிமுகவில் சேரப் போவதாகவும், முதல்வர் அவருக்கு அந்த மேடையிலேயே அதிமுக உறுப்பினர் அட்டை தருவார் என்றும் தெரிய வந்துள்ளது.

அதிமுகவில் சேர்ந்த கையோடு அவர் இந்தத் தேர்தலில் அக்கட்சியை ஆதரித்து சூறாவளிப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆக, இனி அதிமுக மேடைகளில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிருக்காது!

ஒற்றைப் பனை

13059539_1071721552869428_1556249757_n

ஒற்றைப் பனை நீ
ஒராயிரம் கவிதை நீ.

தட்டத்தனியே தவிப்பாய்
என் கண்களில் நீரை நிறைக்கிறாய்.

மண் ஆண்ட உறவுகள்
மனம் ஆண்ட வாசனையில் நிறைகிறாய்.

முன்னோர் எழுதிய அரிச்சுவடியில் நீ.
புறாவைத் தூது அனுப்பும் கவியிலும் நீ.

என் பாட்டன் எல்லைக்குள் வேலி நீ.
அவர் போட்ட வீட்டிற்கு முகடுமாய் நீ.

வயற்காட்டில் உழுத களைப்பில்
வரப்பு மேட்டு கயிற்றுக் கட்டில் பதநீர் நீ.

ஊர் முழுவதும் கூவி அழைத்து, அந்நாள்
கூடிக்காச்சிய கூழ் சுவையிலும் நீ.

பள்ளிப் பாடமதில் நான்
கொண்டாடிய ஒடியற் கூழ் நீ.

பனம் பழமாய் பதமாய் தணலில் சுட்ட களியதில் அம்மாவின் பலகார
வாசனை அதில் நீ.

யுத்தம் சிதைத்த சிதைவுகளின்
சாட்சி அது நீயே.

மாண்டு போன உறவுகளின்
எச்சங்கள் எங்கே ?

ஒற்றைச் சொல் பேசாது
மறைந்து போன உணர்வுகளின்
வலிகள் எங்கே?

சிதைந்து போன சொந்த
மெல்லாம் எங்கே?

எரிந்து விட்ட நம் தோப்புகளின்
அடையாளம்தான் எங்கே?

கட்டிய அழ யாரும் இல்லை
ஆறுதல் கூற உன்னால் முடியவில்லை.

நீ மட்டும் சொல்லி விடாதே…
“நான் வெற்று மரம்”
“ஒற்றைப் பனை” என்று.

குமுதினி ரமணன்
ஜேர்மன்.

வவுனியா விளக்குவைத்தகுளம் பொதுநோக்கு மண்டபத்திற்கு ம.தியாகராசா உதவி!!

 
வடமாகாணசபை உறுப்பிணர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா விளக்குவைத்தகுளம் பொதுநோக்கு மண்டபத்திற்கு உதவி வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா விளக்குவைத்தகுளம் பொதுநோக்கு மண்டபத்திற்கு கேற் மற்றும் வேலி வேலைகளை செய்வதற்காக நிதிவழங்கி வைக்கப்பட்டது.

IMG_1940 IMG_1945 IMG_1946 IMG_1949