இஷாந்த் ஷர்மாவின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்ன??

CRICKET-WIS-IND-ODI-4இந்திய அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் அபாரமான பந்துவீச்சால் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, கடந்த 2007ம் ஆண்டில் தனது 19 வயதில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார்.

தொடக்கத்தில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் போகப் போக ஏமாற்றினார். இதன் உச்சக்கட்டமாக மொகாலி போட்டியில் ஒரு ஓவரில் 30 ஓட்டங்களை வழங்க இந்திய அணி கடைசி நேரத்தில் வீழ்ந்தது.

இவரது பந்துவீச்சு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் கூறுகையில் இஷாந்த் குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இவரது பந்துவீச்சில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. தனது தவறுகளை சரிசெய்ய அவர் தனது சொந்த பயிற்சியாளர் ஷரவண் குமாரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இஷாந்த் சர்மாவை பொறுத்தவரை டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு மிக அருகில் வசிக்கும் ஷரவண் குமாரை சந்திப்பதே கிடையாதாம்.

2007க்குப் பின் கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட சந்தித்து ஆலோசனை பெறவில்லை. டெல்லியில் சொந்தமாக கிரிக்கெட் அகாடமி வைத்துள்ள இஷாந்த் அங்கு வந்து பயிற்சி செய்து கொள்வாராம்.

இதுகுறித்து ஷரவண் குமார் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய பின் அவர் இங்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மனப்பாங்கு விருத்தி தொடர்பான செயலமர்வு!!(படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மனப்பாங்கு விருத்தி தொடர்பான செயலமர்வு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன், உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலன் ஆகியோருடன் மனிதநேய பணியாளர் வி. நவநீதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் நவநீதனின் சேவையை பாராட்டி பிரதேச செயலாளர் நினைவு பரிசில் ஒன்றையும் வழங்கினார்.

v1 v2 v3

நாடு முழுவதிலும் இடி மின்னல் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!

lightநாடு முழுவதிலும் இடி மின்னல் தாக்குதல் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பருவப்பெயர்ச்சி காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மிகவும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இடி மின்னல் தாக்குதல் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திறந்த வெளிகளில் சஞ்சரிப்பது, மின்சார மற்றும் உலோகப் பொருட்களை பயன்படுத்துவது போன்றன ஆபத்தானது என தெரிவித்துள்ளது.

மாலை வேளையில் நாட்டின் அநேக பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.

5000 அம்பியர் வலுவுடைய இடி மின்னல் தாக்குதல் மண் மீது விழும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறப்பாக நடைபெற்ற வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கம் நடாத்திய சர்வதேச முதியோர் தினவிழா!!(படங்கள்)

வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா இன்று (22.10) பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய விழாவிற்கு கூமாங்குளம் முதியோர் சங்கத் தலைவர் திரு.பிலிப்பு வரப்பிரகாசம் தலைமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக வவுனியா அரசாங்க அதிபர் திரு.M .K.பந்துல ஹரிச்சந்திர அவர்கள் கலந்து கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான திரு.கிஷோர், முன்னாள் நகரபிதா எஸ்.ஐ.நாதன், பண்டாரிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி S.M.P.B.சமரகோன், திரு.கோணேஸ்வரலிங்கம் (பண்டாரிகுளம் கிராம அலுவலர்), வைத்தியர் க.இராமச்சந்திரன் (தலைவர் வவுனியா மாவட்ட முதியோர் சமாசம்), திருமதி.துசிதா புஸ்பராஜா (கிராம அலுவலர்) வைத்தியர் மு.மதிதரன் (கிசான் மெடிக்கல் சென்டர் கூமாங்குளம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய நிகழ்வில் இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவான சுப்பையா சுதர்சன் அவர்களையும் தேசிய மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பல சாதனைகளை பெற்ற குமார் நவநீதன் அவர்களையும் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் தர்மலிங்கம் தர்மகடாச்சம் அவர்களையும் முதியோர் சங்க தலைவர் பிலிப்பு வரப்பிரகாசம் அவர்களையும் அரசாங்க அதிபர் கௌரவித்தார்.

மேலும் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்திலிருந்து 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களான ஈஸ்வரன் ஜதுர்சன் ,ஜெயகுலேந்திரன் வினோஜன் ஆகியோருக்கு அரச அதிபர் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.

-பிரதீபன்-

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 13 15 1617 25

பவர் ஸ்டார் சீனிவாசனை நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவு!!

power starமோசடி வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் பிணை பெறுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கார் எண்ணை மாற்றி விற்று மோசடி செய்துள்ளதாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அதிகாரி திருத்தங்கல் பொலிஸில் அளித்த முறைப்பாட்டின் பேரில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், ஜோதிராஜன், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சிவகாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகாததால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து முன்பிணை கேட்டு சீனிவாசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், மனுதாரர் மீது சிவகாசி நீதிமன்றத்தில் பிடியாணை நிலுவையில் உள்ளது.

இதனால் மனுதாரர் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அங்கு பிணை கேட்டு அவர் மனுத்தாக்கல் செய்யலாம். அப்படி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனுவை நீதிமன்று விசாரித்து, அன்றே உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

விண்வெளியில் உருவான டைனோசர் : மகனுக்காக தாயின் அன்புப் பரிசு!!

Dinoஅமெரிக்க விண்வெளி வீராங்கனை ஒருவர் விண்வெளியில் இருந்தபடியே அழகிய டைனோசர் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை கேரன் நைபர்க்.

இவர் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி ஆராய்ச்சி செய்து வருகிறார். விண்வெளியில் இருந்தாலும் தனது மகனுக்காக கழிவுப் பொருட்களை பயன்படுத்தி டைனோசர் பொம்மை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

விண்வெளிக் கழிவுகளில் உருவான முதல் பொம்மை என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த டைனோசர் ஸ்பேஸ் ஜங் எனப்படும் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய உணவு கொள்கலன்களில் ஒட்டப்பட்டு வரும் கொக்கி பட்டைத் துணி மாதிரியான துணி வகையைக் கொண்டு இந்த டைனோசரை உருவாக்கியிருக்கிறார் கேரன்.

பொம்மையின் உள்ளே பயன்படுத்திய பழைய டி-சேட்டின் கிழிசல்களை அடைத்துள்ளாராம். இந்த டைனோசர் பொம்மைக்கு பிளஸ்சி எனப் பெயரிட்டுள்ளார்.

வருகிற நவம்பர் மாதம் பூமி திரும்பும் போது இந்த டைனோசர் பொம்மையை தனது 3 வயது மகன் ஜாக்குக்கு கொடுக்கத் தீர்மானித்துள்ளார்.

வவுனியாவில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடமாடும் சேவை!!

2வவுனியா நகரசபையினால் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கோவில்குளம் சிறுவர் பூங்காவில் நடமாடும் சேவை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

உள்ளூராட்சி வாரமானது 21ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் வவுனியா கோவில்குளம் பிரதேச மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக நடமாடும் சேவை வவுனியா நகரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள், வரி அறவீடு, நூலக சேவைகள், காணி தொடர்பான வரிச் சேவைகள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவில்குளம் சிறுவர் பூங்கா வவுனியா நகரசபையால் கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தினருக்கு பராமரிப்புக்காக வழங்கப்பட்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த இளங்கோ அடிகளாரின் சிலைக்கும் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன், பிரதேச செயலாளர் கா.உதயராசா, மாவட்ட விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஏ.சகிலாபானு, சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுரேந்திரன் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி முற்றுகை : ஒன்பது பெண்கள் கைது!!

brothel-sri-lankaகொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

குற்றம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்த விபச்சார விடுதி நேற்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது அந்த நிலையத்தை நடத்திச் சென்ற பெண் ஒருவரும் அங்கிருந்த பெண்கள் எண்மரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் கந்தானை, மீகொட, வெள்ளவத்தை, ஜா-எல, தெஹியோவிட்ட மற்றும் தங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 24 தொடக்கம் 40 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஒரே இரவில் பத்து வீடுகளில் திருடர்கள் கைவரிசை!!

roவடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் நேற்றிரவு 10 வீடுகளில் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் நேற்று இரவு 10 வீடுகளில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.

நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் உட்புகுந்த திருடர்கள் 8 வீடுகளில் பெறுமதியான பொருட்கள் மற்றும் நகைகள் பணம் என்பனவற்றைத் திருடியுள்ளனர் . சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவ்வீடுகளில் இருந்த இலத்திரனியல் பொருட்களை திருடிச் சென்ற திருடர்கள் அருகிலுள்ள பற்றைகளுக்குள் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். இச் சம்பவங்கள் குறித்து பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 10 வயது பொருத்தமானதா என விசாரணை நடத்த தீர்மானம்!!

grade 5இலங்கையில் இடம்பெறும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 10 வயது மாணவர்களுக்கு பொருத்தமானதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விசாரணையினை நடத்த உள்ளது. புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டப்படுகின்றார் எனின் இந்த முறைமை எந்தளவு சிறந்தது, வினாத்தாள் தயாரிக்கப்படும் முறை பிள்ளைகளுக்கு பொருத்தமானதா, புள்ளியிடும் முறை சரியானதா என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இவ்விசாரணைகளின் போது சிறுவர் உளநல வைத்தியர்கள், கல்வி விஞ்ஞானம் தொடர்பான நிபுணர்கள் குழுவொன்றும் இதற்காக அழைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச சிறுவர் தினத்தில் புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கால் நேர்ந்த கதி!!

facebook-fake-profileபேஸ்புக் மூலம் தவறான முகவரிகளை உருவாக்கி பெண் போலவே சில ஆண்கள் போலி அடையாளம் தயாரித்து சபலம் பிடித்த ஆண்களை வலையில் வீழ்த்தி முடிந்தவரை சுருட்டுவது என்பது தற்போது அதிகரித்து வருகிறது.

டெல்லியில் மற்றுமொரு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்துவரும் மாணவர் ஒருவருக்கே இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேஸ்புக் வைத்துள்ள இவர் திவ்யா என்ற ஒரு பெண்ணிடமிருந்து நட்பு வேண்டுகோள் கிடைக்க அதனை ஏற்றார். இருவரும் சிறிது காலம் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

திவ்யா என்ற அந்தப் பெயர் தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தவுடன் மனிதருக்கு தலைகால் புரியவில்லை. சரோஜினி நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூட பகுதியில் திவ்யாவை சந்திக்க இந்த நபர் புறப்பட்டுச் சென்றார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற அந்த மாணவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு திவ்யாவும் இல்லை ஒருவரும் இல்லை. மாறாக 4 வாலிபர்கள் தடதடவென வேனில் வந்து இவரை பிடித்து வசைமாரி பொழிந்து 1000 ரூபாய் பணம் கையடக்க தொலைபெசி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு சென்றனர். பொலிசில் புகார் கொடுத்த நபர் இப்போது திருதிருவென விழித்துக் கொண்டு காத்திருக்கிறார்.

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு வவுனியா ஊடாக மட்டுமொரு வாகன பேரணி!!

CHOGM Motor Rallyநவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு வாகன பேரணி இன்று யாழிலும் திஸ்ஸமஹாராகமயிலும் ஆரம்பமாகவுள்ளது.

யாழிலிலிருந்து ஆரம்பமாகும் பேரணி சாவகச்சேரி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மிஹிந்தலை, கெக்கிராவ, பலபத்வல, அக்குரன, கேகாலை, நிட்டம்புவ போன்ற பிரதேசங்களுடாக சென்று இம்மாதம் 30ம் திகதி காலி முகத்திடலை சென்றடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை திஸ்ஸமஹாராமயிலிருந்து ஆரம்பமாகும் பேரணி ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, அம்பலாங்கொடை, களுத்தறை, மத்துகம, பாணந்துறை, இங்கிரியாவ, ஹங்வெல்ல, பியகம, கடுவெல, மாலம்பே, ஹோமாகம, கொட்டாவ, பிலியந்தல, மொரட்டுவ, மஹரகம, பத்தரமுல்லை, நுகேகொடைபோன்ற பிரதேசங்களினூடாக சென்று காலி முகத்திடலை சென்றடைவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!

pimples

முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. முகப்பருக்கள் எதனால் வருகிறது?

தூசிகள், பக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து பருக்களாக வெளிப்படுகின்றன.

அதுமட்டுமின்றி வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும்.
இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கிவிடும்.

அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும் ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.

01. ஆவி பிடித்தல்
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும்.

இதனால் ஆவிப்பிடித்தப் பின் பருத்தி துணி கொண்டு முகத்தை துடைத்தால் பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.

02. கராம்பு
கராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

03. அடிக்கடி முகத்தை கழுவுதல்
அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.

04. சந்தன பொடி
சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

05.  தேன்
தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் கழுவினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

06. எலுமிச்சை சாறு
எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், பருக்கள் நீங்கிவிடும்.

07.  பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.

08. தக்காளி
தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

09. வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

10. தண்ணீர் குடிக்கவும்
சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில் உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.

கனடாவில் மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் தமிழ் இளைஞன் பலி!!

kavuthamகனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்ட மோதலில். மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்துள்ளார். மேலும் ஐவர் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பலியான இளைஞர் அடையாளம் தெரிந்து விட்டதாகவும் அவர் ரொறொன்ரோவிலிருந்து படிப்பதற்காக வந்த மாணவர் கௌதம் (கெவின்) குகதாசன் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

படிப்பதற்காக வந்த இந்த மாணவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்தின் அருகே வாழ்ந்து வந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதால் விரைவில் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்ய இருப்பதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்பிக்கப்படுகிறது!!

parliament2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகிறது.

இதன்போது பிரதமர் டி. எம்.ஜயரத்தினவினால் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
2014 வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 29 வரை இடம்பெறும். குழு நிலை விவாதங்கள் டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெற்று இறுதி வாக்கெடுப்பு அன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்காக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக துறையினர், பொதுமக்கள் அடங்கலான பல்வேறு துறையினரதும் கருத்துகள் பெறப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தரப்பினரையும் சந்தித்து இது தொடர்பில் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

சரவணன் என்கிற சூர்யா பெயரில் படம் எடுக்க எதிர்ப்பு : நடிகர் சங்கத்தில் புகார்!!

Saravananசரவணன் என்கிற சூர்யா என்ற பெயரில் புது படம் தயாராகிறது. இதை ராஜா சுப்பையா இயக்குகிறார். இப்படத்துக்கு நடிகர் சூர்யா தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைப்பை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.

சூர்யாவின் நிஜப்பெயர் சரவணன். சினிமாவுக்கு வருவதற்கு முன் இந்த பெயரில்தான் அழைக்கப்பட்டார். நடிகரான பிறகு சூர்யா என மாற்றிக் கொண்டார். எனவே சரவணன் என்கிற சூர்யா பெயரை விளம்பரத்துக்காக படத்தின் தலைப்பாக்கியுள்ளனர் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.

சூர்யா ரசிகர்களும் தலைப்பை மாற்றும்படி நிர்ப்பந்தித்து வருகின்றனர். இது குறித்து சூர்யா தரப்பில் கூறும்போது தலைப்பை மாற்றும்படி வற்புறுத்தி நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். நடிகர் சங்கமும் இதனை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றனர்.

ஆனால் இயக்குனர் ராஜா சுப்பையா தலைப்பை மாற்ற முடியாது என மறுத்துவிட்டார். அவர் கூறும்போது எங்கள் படத்துக்கு சரவணன் என்கிற சூர்யா தலைப்பு பொருத்தமாக இருந்ததால் வைத்தோம். படத்தில் நடிகர் சூர்யாவை இழிவு படுத்துவது போல் காட்சிகள் இல்லை. இதே தலைப்பில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. நிறைய செலவில் விளம்பரங்களும் செய்துவிட்டோம். தலைப்பை மாற்றினால் எல்லாம் வீணாகிவிடும் என்றார்.