குத்து பாடல்களுக்கு ஆடுவது தவறில்லை : சர்மி!!

sharmi

இளம்வயதில் திரைப்படத்துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது எல்லோராலும் முடியாது. ஆனால் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆன நிலையில் கிட்டத்தட்ட 50 படங்கள் முடித்துள்ள சர்மி தன்னை அழகாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

25 வயதாகும் இந்த அழகுப்பெண் ஒரு நடிகையாகவும் தன்னுடைய தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். சர்மி கூறும்போது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்கிறேன். படத்தின் வெற்றி, தோல்வி என்னை பாதிப்பதில்லை.

எனக்கு வரும் வாய்ப்புகள் குறித்து குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து பின்னர் என்னுடைய விருப்பப்படி முடிவெடுக்கிறேன். சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததற்கு ரசிகர்களின் விருப்பமே முக்கிய காரணம். குத்து பாடல்களில் ஆடுவதில் எந்தத் தவறும் இல்லை.

பிரியங்கா சோப்ரா கூட இதுபோன்ற பாடல்களுக்கு ஆட விருப்பம் தெரிவித்திருக்கிறார். நான்கு மொழிப் படங்களிலும் நடித்து வந்தாலும் அனைத்து மொழிகளையும் எளிதில் கற்றுக் கொண்டேன். என்னுடைய படத்தின் டப்பிங்கை நானே பேசுகிறேன்.

ஆயினும் இது ஒரு சவாலான வேலை. சர்மி நடிக்கும் பிரதிகாதனா படத்திற்காக கடந்த இரண்டு மாதங்களில் ஏழு கிலோ எடை குறைத்துள்ளார். இன்னும் 5 கிலோ குறைக்க உள்ளார். ஆயினும், தன்னுடைய இத்தனை முயற்சிகளுக்கும் அவருடைய தாயாரே உறுதுணையாக உள்ளாராம்.

வடக்கு மக்கள் ஆரம்ப வாழ்க்கையை மறந்து விட்டனர் : பசில் ராஜபக்ச குற்றச்சாட்டு!!

basil_rajapaksa

அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் ஊடாக வட மாகாண மக்கள் தமது ஆரம்ப வாழ்க்கையை மறந்து செயற்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கின் வசந்தத்தை பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு செயற்படுத்தியதாக தெரிவித்தார்.

மக்களுக்காகவே வடக்கின் வசந்தம். அரசாங்கத்திற்கோ, ஆளும் கூட்டமைப்பு கட்சிக்கோ வசந்தத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது வாக்குகளை பெறுவதற்கோ அல்ல என்று பசில் கூறுகிறார்.

ஆனால் சிலர் கேட்கிறார்கள் வடக்கின் வசந்தத்தை நடைமுறைப்படுத்தி ஏன் மக்கள் வாக்களிக்க வில்லை என்று. அது வடக்கு மக்களின் தீர்மானமாகும். அவர்களுக்கு ஆரம்பம் மறந்து போயுள்ளது என்றால், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை மறந்து விட்டதென்றால் அது ஜனாதிபதியின் தவறு அல்ல.

அடிப்படைவாதம், உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள், தனியாட்சி என்பனவற்றை மீள ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை செவிமடுத்த பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

படம் பார்த்து அதிகமாக சிரித்த வாலிபர் மரணம்!!

heart

மும்பையில் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). இவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார்.

படத்தில் ஏராளமான கொமடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மங்கேஷ் படத்தை பார்த்து பயங்கரமாக சிரித்ததாக அவர் அருகில் அமர்ந்திருந்தவர்கள் தெரிவித்தனர். சிரித்து சிரித்து ஒருவர் மரணம் அடைந்தது திரையரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த சர்ச்சை வீரர் பனேசர்!!

monty panesar

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில், சர்ச்சைக்குரிய சுழற்பந்துவீச்சாளர் மொன்டி பனேசர் தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்த மாதம் அவுஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டிக்கான 17 பேர் கொண்ட வீரர்களை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.

இதில் சுழற்பந்துவீச்சாளர் மொன்டி பனேசருக்கு இடம் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் இரவு நேர கிளப் ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டார். இந்த சர்ச்சையை கடந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.

புதுமுக வீரர்களாக கரி பாலன்ஸ், பென் ஸ்டோக்ஸ், போய்ட் ரான்கின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இத்தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி, அடுத்த மாதம் 25ம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு புறப்படுகிறது.

இங்கிலாந்து அணி விபரம்: அலெஸ்டர் குக் (அணித்தலைவர்), ஜோ ரூட், ஜோனாதன் டிராட், கெவின் பீட்டர்சன், இயன் பெல், ஜொனி பேர்ஸ்டோவ், மட் பிரையர், ஸ்டூவட் பிராட், சுவான், ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டீவன் பின், ரான்கின், பென் ஸ்டோக்ஸ், மொன்டி பனேசர், கரி பாலன்ஸ், கிறிஸ் டிரம்லட், மைக்கல் கார்பெரி.

விஸ்வரூபம் 2வில் கமலுக்கு அம்மாவாக நடிக்கும் வஹீதா ரஹ்மான்!!

kamal

விஸ்வரூபம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடும் மும்முரத்தில் கமலஹாசன் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் முதல்பாகத்தில் நடித்த பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பழம்பெரும் இந்தி நடிகையான வஹீதா ரஹ்மானும் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இவர் நாயகனின் அம்மாவாக நடிக்க உள்ளாராம். வஹிதா ரஹ்மான் கடந்த 1971ம் ஆண்டில் வெளிவந்த ரேஷ்மா அவுர் சேரா என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவர்.

இவர் கடைசியாக அபிஷேக் பச்சனுடன் டெல்லி 6 என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தில் கமலுடன் நடிக்கிறார். விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. இந்த படம் இந்தி, தமிழ் என்று இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. வரும் நவம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

கூட்டத்தில் உளறிய விஜயகாந்த் : அதிர்ச்சியில் மக்கள்!!

vijayakanth

தூத்துக்குடியில் தேமுதிகவின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜய்காந்த் உளறி தள்ளியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக துவங்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து 9வது ஆண்டு விழா கொண்டாட்ட பொதுக் கூட்டம் தூத்துக்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த் உளறு, உளறு என்று உளறியுள்ளார். டாட்டா ஆதரித்த டைட்டானியம் டை ஒக்சைட் பிளாண்ட் குறித்து பேச நினைத்த அவர் டாட்டா நனோ என்று தெரிவித்துவிட்டார்.

டாட்டா நனோ பிளாண்ட் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் வந்திருந்தால் 3 000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும் என்றார்.

மேலும் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரிக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பட்டப்பெயர் உண்டு. இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் விஜயகாந்தோ அழகிரியின் அண்ணன் மு.க.முத்துவை அஞ்சாநெஞ்சன் என்று தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மணல் கடத்தலை தட்டிக்கேட்டு சஸ்பெண்டான ஐஏஸ் அதிகாரியின் பெயர் துர்கா சக்தி நாக்பால். ஆனால் விஜயகாந்தோ துர்கா சக்தி என்பதற்கு பதில் துர்கா தேவி என்று கூட்டத்தில் பேசினார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் என்னவென்றால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை அனல் மின் நிலையம் என்று தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் உளறுவது தெரிந்தாலும் கட்சியினர் யாரும் அதை திருத்த முன்வர மாட்டார்கள். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஏ.பாஸ்கரனின் பெயரை பிரச்சாரத்தின்போது விஜயகாந்த் தவறாகக் கூறினார்.

உடனே அவர் நீங்கள் என் பெயரை தவறாகக் கூறிவிட்டீர்கள் என்று விஜயகாந்திடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் பாஸ்கரனை அறைந்துவிட்டார்.

கவர்ச்சி நடிகைகள் மீது மகிமா பாய்ச்சல்!!

mahima

சாட்டை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மகிமா. தற்போது ஜீவன் இயக்கும் மொசக்குட்டி, விஜய் வசந்த் ஜோடியாக ராஜபாண்டியன் இயக்கும் என்னமோ நடக்குது, வெங்கட் இயக்கும் புறவி 150 சிசி ஆகிய படங்களில் நடிக்கிறார்.

கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளை மகிமா கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது..

நடிகைகள் சிலர் கவர்ச்சியாக நடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கவர்ச்சியை மட்டும் வைத்து சினிமாவில் நிலைக்க முடியாது. திறமை வேண்டும். கவர்ச்சி நடிகைகளை ரசிகர்கள் ஓரம் கட்டிவிடுவார்கள்.

சினிமாவில் போட்டி இருப்பதால்தான் நடிகைள் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள். ஆனால் அது நிரந்திரமாக உதவாது. நான் ஆபாசமாக நடிக்க மாட்டேன். தமிழில் 3 படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கு படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளேன் என்று கூறினார்.

லலித் மோடிக்கு வாழ்நாள் தடை!!

modi

டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததையடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் பணத்தில் முறைகேடு செய்த லலித் மோடிக்கு நாளை வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த 2008ல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது தலைவராக இருந்தவர் லலித் மோடி. இந்த பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதால் மூன்றாவது ஆண்டு ஐ.பி.எல் தொடர் (2010) முடிந்தவுடன் இவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவரை நீக்கியது.

தற்போது லண்டனில் வசிக்கும் இவரது ஊழல் குறித்து விசாரித்த 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பி.சி.சி.ஐயிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க இன்று பொதுக்குழு கூட்டத்துக்கு பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்தது.

இதை நடத்தக் கூடாது என்று கடந்த 21ம் திகதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தடை பெற்றார் மோடி. இதனிடையே, பொதுக்குழுவை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி தந்தது.

இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் தலைமையில் சென்னையில் நாளை பொதுக்குழு கூடுகிறது. இதில் லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கபடும் எனத் தெரிகிறது.

மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு (21) இருக்கும் பட்சத்தில் மோடியின் தடை உறுதியாகும்.

13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த அதிசயம்!!

baby

இந்திய கர்நாடக மாநிலத்தில் 7ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்திஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா(13). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்கு முன் கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார்.

இதனைப் பார்த்த பெற்றோர் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உடனடியாக மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அழகான ஆண் குழந்தையை ஸ்வேதா பெற்றெடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது தனது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியாது என்றனர்.

பின்பு மயக்கம் தெளிந்த சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது மாமா நவீன்(23) தான் கர்ப்பத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இதனை கேள்விபட்ட பெண்கள் அமைப்பினர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நவீனை கைது செய்த பொலிசார் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!!

abuse

வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதான சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமி மூன்று பேர் கொண்ட குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வான் ஒன்றில் சென்ற மூவர் சிறுமியை கடத்திச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர்கள் மீண்டும் வவுனியாவின் நகர்ப் பகுதி ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

சிறுமிக்கு நடந்த சம்பவத்தை அறிந்த பிரதேசவாசிகள் சிறுமியை வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாலியல் ஊக்க மருந்து விற்பனை குறித்து விசாரணை!!

Medicine

வைத்திய ஆலோசனை இன்றி பாலியல் ஊக்க மருந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது பாலியல் பலவீனமுடையவர்களுக்கு வழங்கப்படும் மருந்து எனவும் சுகாதார ஆலோசனையின்றி பயன்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த மருந்தினை பயன்படுத்துவோர் பெண் வன்முறை மற்றும் பாலியல் வல்லுறவுகளுக்கு தள்ளப்படுவதாக தெரியவந்துள்ளதென சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

உயர் குருதி அழுத்தம் உடைய ஒருவர் இந்த மருந்தை பயன்படுத்தினால் மரணம் ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அனுமதி இன்றி குறித்த மருந்தை விற்பனை செய்யும் நிலையங்கள் குறித்து விசாரணை செய்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. .

உறங்கிய சாரதி : மடு விபத்தில் ஐவர் காயம்!!

ACCIDENT_logo

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று மடு வீதி பரயனாலன் குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் விபத்திற்குள்ளாகியதில் அதில் பயணித்த ஐவர் காயமடைந்து முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி குறித்த பஸ் சென்றுகொண்டிருந்த போது இன்று காலை 5 மணியளவில் மடு வீதி பரயனாலன் குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மதகு ஒன்றுடன் போதி அருகில் உள்ள வாய்க்கால் பகுதில் வீழ்ந்துள்ளது. இதன் போது குறித்த பஸ்ஸின் சாரதி உற்பட ஐவர் காயமடைந்து முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் சாரதி உட்பட மூன்று பேர் கடுங் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த பஸ்ஸின் சாரதியான மதவாச்சியைச் சேர்ந்த பியந்த காமினி (25) மற்றும் புத்தளத்தைச் சேர்ந்த எம்.ரி.எம்.ரவுப் (24), கே.ஜெயின்ஸ் (56) ஆகிய மூன்று பேருமே தற்போது முருங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாரதி நித்திரை தூக்கத்தில் இருந்தமையினாலேயே குறித்த விபத்து இடம் பெற்றதாக பஸ்ஸில் இருந்த மக்கள் தெரிவித்தனர். மேலதிக விசாரனைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சினிமா நூற்றாண்டு விழாவில் இயக்குனரால் ஏற்பட்ட பரபரப்பு!!

cinema

சென்னையில் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின்போது இயக்குனரால் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. முதல்நாளன்று முதல்வர் ஜெயலலிதா விழாவை தொடக்கி வைத்தார்.

இரண்டாம்நாளான ஞாயிறன்று கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சியும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தினார்.

பின்னர் மாலையில் நடைபெற்ற தெலுங்கு திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், கே.பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பங்கேற்ற ஜுகல்பந்தி நடைபெற்றது. பழைய பாடல்கள் முதல் சமீபத்தில் வெளியான பாடல்கள் வரை பாடப்பட்டது.

பாடகர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அரங்கத்தில் இருந்த தெலுங்கு திரையுலகின் புரட்சிகர இயக்குனர்களில் ஒருவரான ஆர்.நாராயணமூர்த்தி திடீரென மேடையேறினார்.

இது சினிமா நூற்றாண்டு விழாவா? இசைக் கச்சேரி நிகழ்ச்சியா? என்று சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர் அவரை மேடையை விட்டு கீழே இறக்கினர்.

பின்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடத் தொடங்கவே, மீண்டும் மேடையேறிய நாராயணமூர்த்தி, எஸ்.பி.பி கையில் இருந்த மைக்கை பிடுங்க முயன்றுள்ளார்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த விழாக்குழுவினர் அவரை மேடையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அரங்கை விட்டு வெளியேற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு ஏற்பட்ட அவமானம்!!

vijay

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை.

இது ஒருபுறமிருக்க அழைப்பிதழ் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் அமர இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர்.

முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய வீடியோ க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது.

இதில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகரான அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகர் விஜய்யின் வீடியோ க்ளிப்பிங்ஸ்கள் மட்டும் திட்டமிட்டு புறக்கணிப்பட்டது. அது மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த நடிகர், நடிகைகளுக்கு கூட முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் நடிகரான விஜய்க்கு வி.ஐ.பி இருக்கைகளின் கடைசி வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்ற விஜய் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அவரைப் பார்த்த பல முண்ணனி நடிகர்கள் அனைவரும் அமைதி காக்க இளம் நடிகர்கள் மட்டும் அவரை முன் பக்கம் வந்து உட்காருமாறு அழைத்தனர். ஆனால் யாரும் அவர் பக்கத்தில் வரவில்லை.
இருப்பினும் சைகையால் இங்கேயே அமர்ந்து கொள்வதாக கூறியுள்ளார் விஜய்.

இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரம் மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் சென்று விஜய்க்கு அருகில் அமர்ந்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்பு விழா முடியும் போது விக்ரமிடம் மட்டும் சொல்லி விட்டு தானாகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றாராம் விஜய்.

ஈழப் பெண்ணை மணந்த மணிவண்ணனின் மகன்!!

manivannan son

மறைந்த இயக்குனர் மணிவண்ணன் மகன் ஈழப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். மறைந்த இயக்குனர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

மணிவண்ணன் உயிரோடு இருந்த போதே கடந்த மார்ச் முதல் வாரத்தில் ரகுவண்ணன்– அபி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமைதிப் படை 2 வெளியான பிறகு யூன் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த யூன் மாதத்தில்தான் மணிவண்ணன் மரணமடைந்தார்.

அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார். இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரகுவண்ணன்– அபி திருமணம் சென்னையில் நடந்தது.

நடிகர் சத்யராஜ் முன்நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். நடிகர் விவேக், ஆர்.கே செல்வமணி உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டாரா திசார பெரேரா?

Thisara Perera

இலங்கை வீரர் திசார பெரேரா உள்ளிட்ட நான்கு பேர் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதனை இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.

கடந்த பிரிமியர் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவானுக்கு, இந்திய கிரிக்கெட் சபை சார்பில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே மும்பை பொலிஸார் குற்றப்பத்திரிகை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி மும்பை பொலிஸார் சிக்கிய சந்திரேஷ் ஷிவ்லால் படேல் என்ற தரகர் ஐதராபாத் அணியின் நான்கு வீரர்களை புனேயில் சந்தித்து சூதாட்டம் தொடர்பாக 6 கோடி வரை பேசியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கடந்த ஜூன் 17ல் மும்பை பொலிஸார் சந்திரேஷ் ஷிவ்லால் படேல் என்ற அளித்த வாக்குமூலத்தின் விவரம்..

லீ மெரிடியன் ஹோட்டலின் ஆமிரின் நண்பர் சுனில், ஐதராபாத் அணியின் வீரர்களான இலங்கையின் திசார பெரேரா, இந்தியாவின் ஹனுமா விகாரி, கரண் சர்மா, ஆஷிஸ் ரெட்டி மற்றும் இவரது சகோதரர் பிரீதம் ரெட்டியை அறிமுகம் செய்தார்.

அப்போது பிரீதம் என்ன வேண்டும் என கேட்டார். இதற்கு நான் புனே அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி, 10 ஓவரில் 60 ஓட்டங்களை தாண்டக் கூடாது. 20 ஓவரில் 140 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க வேண்டாம். போட்டியில் ஐதராபாத் தோற்க வேண்டும். தவிர, பிக்சிங் செய்ய வசதியாக சில சிக்னல்கள் வேண்டும் என கேட்டேன். மறுநாள் என்னை தொடர்பு கொண்ட ஆமிர் இரண்டாவது ஓவரில் ஐதராபாத் வீரர் அவுட்டாகி சிக்னல் தருவார் என்றார்.

இதன்படி ஏப்ரல் 17ல் புனே அணிக்கு எதிரான போட்டியில் 2வது ஓவரில் ஐதராபாத் வீரர் (குயின்டன் டி காக்) அவுட்டானார். முதல் 10 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 42 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. இதனால் தரகர்களுக்கு 3.5 கோடி ரூபா கிடைத்தது.

ஆனால் போட்டியில் தோற்பது (9 கோடி) குறித்து ஒப்பந்தம் இல்லை. கடைசியில் ஐதராபாத் அணி வெற்றிபெற இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு சந்திரேஷ் ஷிவ்லால் படேல் தெரிவித்துள்ளாக தெரிகிறது.

மும்பை பொலிஸில் சந்திரேஷ் ஷிவ்லால் படேல் தெரிவித்த நான்கு வீரர்கள் புனே (கடந்த ஏப்., 17) அணிக்கு எதிராக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், திசார பெரேரா (2 ஓட்டங்கள்), ஹனுமா விகாரி (1), கரண் சர்மா (7) ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆஷிஸ் ரெட்டி 19 ஓட்டங்கள் எடுத்தார்.

சூதாட்ட தகவல் குறித்து பிரீதம் ரெட்டி சகோதரர் ஐதராபாத் வீரர் ஆஷிஸ் ரெட்டியை தொடர்பு கொண்ட போது, எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதேபோல ஹனுமா விகாரியும் பதில் தெரிவிக்கவில்லை.

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில் திசார பெரேரா குறித்து வெளியான தகவல் குறித்து, இந்திய தரப்பில் இருந்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எங்கள் வீரர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.