எறும்பு கடித்து 12 வயது மாணவன் பரிதாப பலி!!

ants

காற்பந்து பயிற்சியின் போது விஷ எறும்பு கடித்ததில் அலர்ஜி ஏற்பட்டு 12 வயது சிறுவன் பலியானான். அமெரிக்காவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் வருடத்திற்கு இதுபோன 40 பேர் விஷப்பூச்சிகளால் கடிக்கப்பட்டு உயிரிழப்பதாக தரவுகள் கூறுகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் தென் பகுதியில் உள்ள பள்ளியில் படித்த மாணவன் கேமரூன் எஸ்பினோசா (12).கால் பந்தாட்ட வீரர். தினமும் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு மைதானத்தில் எஸ்பினோசா பயிற்சிக்கு போகும் போது தண்ணீர் போத்தல் எடுத்து சென்றான்.

அதை மறதியாக தரையில் வைத்து விட்டான். விளையாடும் போது தண்ணீர் தாகம் எடுத்ததும் தண்ணீர் போத்தலை எடுக்க வந்துள்ளான். அப்போது அதில் ஏராளமான எறும்புகள் இருந்தன. அவற்றை கையால் தட்டி விட்டு தண்ணீரை குடித்துள்ளான்.

அப்போது எபினேசரை எறும்பு கடித்தது. இதில் உடம்பில் பல இடங்களில் அவனுக்கு வீக்கம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி எஸ்பினோசா இறந்தான்.

இதுகுறித்து மாணவனுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் கூறுகையில், எஸ்பினோசனை எறும்பு கடித்ததில் அலர்ஜி ஏற்பட்டு இறந்துவிட்டான் என்றார். இறந்த மாணவனின் தாய் ஜோஸ்பின் லிமோ கூறுகையில், கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரனாக வேண்டும் என்று கனவு கண்டான். இப்போது எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டான் என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதுகுறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். மைதானத்தில் உள்ள எறும்புகள் விஷத் தன்மை உள்ளவை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மூன்று நாயகிகளை இயக்கவிருக்கும் பிரபுதேவா!!

prabhu deva

பொலிவுட்டில் பிசியாகிவிட்ட பிரபுதேவா தற்போது ஷாகித் கபூர் நடிப்பில் ராம்போ ராஜ்குமார் என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஆக்ஷன் ஜாக்சன் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இப்படத்தில் அஜய் தேவ்கானுடன் மூன்று நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபுதேவா தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ராம்போ ராஜ்குமார் படத்திலும் நடித்து வருகிறார். இன்னொருவர் யாமி கௌதம். மூன்றாம் கதாநாயகியின் தேர்வு நடந்து வருகிறது.

ராம்போ ராஜ்குமார் படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தின் பணிகள் முடிவடைந்ததும ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் வேலைகளில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபிநயாவுக்கு ஆதரவு கொடுக்கும் அஜீத்!!

abi

ஆரம்பம் படத்தை தொடர்ந்து அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், விதார்த், அபிநயா ஆகியோரும் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார். படத்தை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா நடிக்கிறாராம். படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்தாலும், தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறாம் அபிநயா. இவரின் நடிப்பைப் பார்த்து அஜீத் அசந்து போனாராம்.

இதனால், இயக்குனரை அழைத்து அபிநயா சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகப்படுத்த சொல்லி இருக்கிறாராம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் அபிநயாவுக்கு ஆதரவாக அவருடன் நீண்ட நேரத்தை செலவிடுகிறாராம் அஜீத்.

சீனாவில் 2 வயது ஆண் குழந்தை 6வது மாடியிலிருந்து வீசிக் கொலை!!

child-murder

சீனாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் ஆறு மாடிக் கட்டிடம் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். குற்றவாளியைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணமான குவாங்ஸி ஷுயாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 6வது மாடியில் இருந்து நேற்று 2 வயது சிறுவன் ஒருவன் வெளியே தூக்கி வீசப்பட்டான்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுவன் பரிதாபமாக பலியானான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குற்றவாளியைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் லூ என்பதும் கொலை செய்யப்பட்ட சிறுவனது தாய்க்கும் லூ வுக்கும் இடையே முன்பு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், லூவிற்கும் சிறுவனின் தாயாருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த லூ சிறுவனைத் தூக்கி 6 மாடியிலிருந்து வீசிக் கொலை செய்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதலில் 75 பேர் பலி!!

Pakistan-church-bombing

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெஷாவர் நகரில் நடந்த இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

பிரார்த்தனை முடிந்து தேவாலயத்தில் இருந்து மக்கள் திரும்பிச் செல்லுகையில் இரு தற்கொலை குண்டுதாரிகள் தாம் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது இதற்கு முன்பு நடைபெற்ற பல தாக்குதல்களுக்கு இஸ்லாமியக் குழுக்கள் மீதே பழி போடப்பட்டிருந்தது.
அதே நேரம், அங்கே ஷியாக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

70 வயது முதியவரின் கண்கள் 7 வயது சிறுவனுக்கு!!

kan

பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசி நகரில் பட்டாசு மொத்த விற்பனையாளராக இருந்து வருகிறார் மருத்துவர் கணேஷ்.
இவரின் மறுபக்கமோ இறந்தவர்களின் கண்களை உறவினர்களின் சம்மதத்துடன் தானமாக பெற்று பிறருக்கு ஒளி கொடுப்பதுதான்.

கடந்த 8 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் மொத்தம் 623 கண்தான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். இதுவரை மொத்தம் 2560 ஜோடி கண்களை உறவினர்களின் சம்மதத்துடன் தானமாக பெற்று 5120 பேர் பார்வை பெற காரணமாக இருந்திருக்கிறார்.

கண்தான விழிப்புணர்வுக்காக மட்டும் மொத்தம் 172 விருதுகள் பெற்றுள்ள இவர் ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில், இறந்து விட்டால் கண்களைத் தானம் செய்யலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஓரளவேனும் ஏற்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

கண்ணாடி போட்டிருப்பவர்கள், கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களும் கண்தானம் செய்யலாம்.

70 வயது முதியவரின் கண்களைக் கூட தானமாக பெற்று 7 வயது சிறுவனுக்கும் பொருத்தி ஒளி கொடுக்கலாம். பிறவியிலேயே பார்வையிழந்தவர்களுக்கு மட்டும் கண்களைப் பொருத்தி பார்வை கொடுத்து விட முடியாது.

கருவிழியில் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் வேறு கண்களைப் பொருத்தி வாழ்வளிக்க முடியும்.

ஒருவர் இறந்து விட்டால் இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை தானமாக பெற வேண்டும். கண்தானம் செய்யும் நபர்,பதவி ஆகியன குறித்து நாங்களே எங்கள் சொந்த செலவில் நன்றி அல்லது கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டி விடுவோம். ஒருவரிடம் கண்களைத் தானமாகப் பெற ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.

ஒருவர் இறந்து விட்டால் அவரது சடலம் வைக்கப்பட்டிருக்கும் வீட்டின் முன்பாக இருக்கும் அடையாளங்களைத் தெரிந்து கொண்டு அந்த வீட்டுக்குச் சென்று முக்கிய உறவினர்களைச் சந்தித்து கண்தானத்தின் அவசியத்தைப் பக்குவமாக விளக்கி சம்மதம் பெறுவோம்.

ஆட்டோ,ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள்,மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்பவர்கள், செவிலியர்கள், ஈமச்சடங்கில் ஈடுபடுவோர் போன்றவர்களும் நண்பர்களாக இருப்பதால் இறப்புத் தகவல்களை இவர்கள் மூலமாகவும் உடனுக்குடன் தெரிந்து கொள்வோம்.

பெரும்பாலும் விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்ற மாணவ,மாணவியர்களே பக்கத்து வீட்டில் யாராவது இறந்து விட்டால் உடனடியாக செல்போன் மூலம் எங்களிடம் சொல்லி விடுவார்கள். அதிகமான இறப்புத் தகவல்கள் பள்ளி மாணவ,மாணவியர்களால் தான் வந்துள்ளது.

நாங்கள் நடத்தும் கண்தான விழிப்புணர்வு முகாம்களில் கண்களின் அமைப்பு,செயல்படும் விதம்,கண்நோய்கள் வரக் காரணங்கள்,கண்களில் நோய் வராமல் பாதுகாக்கும் விதங்கள்,கண்தானத்தின் முக்கியத்துவம் ஆகியன குறித்து கதை போல சொல்லப்படும்.

கண்தானம் செய்த பிறகு இறந்தவரின் முகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை குறுந்தகடு மூலம் திரையிட்டுக் காட்டப்படுகிறது. திரைப்பட நடிகர்கள் விளக்கம் அளிக்கும் குறுந்தகடுகளையும் போட்டுக் காட்டுகிறோம் என்று கூறியுள்ளார்.

மன்னாரில் 75 வாக்குகள் வித்தியாசத்தில் 2 வது ஆசனத்தை இழந்த முஸ்லிம் காங்கிரஸ்!!

ridad

இலங்கையின் வடமாகாண சபை தேர்தலின் மன்னார் மாவட்ட முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு,

இலங்கை தமிழரசுக் கட்சி – 33118 (3 ஆசனம்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15104 (1 ஆசனம்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4571(1 ஆசனம்)
ஐக்கிய தேசியக்கட்சி – 187

75 வாக்குகள் வித்தியாசத்தில் 2 வது ஆசனத்தை இழந்தோம் – அமைச்சர் றிசாத் பதியுதீன்

தம்மை இலக்குவைத்து தமிழ் அரசியல்வாதிகளும் அவை சார்பு ஊடகங்களும் இன,மத வெறி பிரச்சாரங்கைள மேற்கொண்டதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், மன்னார் மாவட்டத்தில் தாம் 75 வாக்குகளினால் 2 ஆவது ஆசனத்தை இழந்ததாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் ஊடகங்கள் திட்டமிட்டு எனக்கு எதிராக செயற்பட்டன. தமிழ் எம்.பி.க்கள் வெளிப்படையாக இனவாதம் பேசினர். மதகுருமார் எனக்கெதிராக செயற்பட்டனர். எமது சமூக சில சகோதரர்களும் தமிழ் தேசிய அமைப்பின் பிரச்சாரங்களுக்கு ஏமாந்துவிட்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடமாகாண சபையில் 2 ஆசனங்களை பெற்றுள்ளது. முல்லைத்தீவில் ஜனுவர் வெற்றி பெற்றுள்ளார். மன்னாரில் றிப்கான் பதியுதீன் வெற்றி பெற்றுள்ளார். நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போதிலும் 75 வாக்குளினால் ஒரு ஆசனத்தை இழந்தமை கவலைக்குரியது. இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தினருக்கான எனது சேவைகள் தொடரும் என்றார்.

சந்திரிக்காவின் சாதனையை முறியடித்த தயாசிறி ஜயசேகர!!

dayasiri-main

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வடமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதுவரை மாகாணசபைத் தேர்தலில் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர் என்ற சாதனையை சந்திரிக்கா பண்டாரநாயக்க நிலைநாட்டியிருந்தார். 1993ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி நடைபெற்ற மேல் மாகாணசபைத் தேர்தலில் சந்திரிக்கா 298 000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

எனினும், இந்த சாதனை இம்முறை வடமேல் மாகாணசபைத் தேர்தலின் போது முறியடிக்கப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர இம்முறைத் தேர்தலில் 336 000 ற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தயாசிறி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து இம்முறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பிடம் முக்கிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன : பசில் ராஜபக்ச!!

basil

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முக்கிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வடக்கு மாகாண மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை கூட்டமைப்பு கட்டிக் காக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார். குறிப்பாக மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கூட்டமைப்புடன் செயற்படத் தயார். மாகாணத்தின் இளைஞர் யுவதிகளின் அபிவிருத்தியை கூட்டமைப்பு உறுதி செய்ய வேண்டும்.

தேசிய நலன்களையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்..!

northern_map

இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட,

1. சி.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர்) – 132,255 வாக்குகள்
2. அனந்தி எழிலன் – 87,870 வாக்குகள்
3. சித்தார்த்தன் – 39,715 வாக்குகள்
4. பா.கஜதீபன் – 29,669 வாக்குகள்
5. இ.ஆர்னோல்ட் – 26,888 வாக்குகள்
6. கந்தையா சிவஞானம் – 26,747 வாக்குகள்
7. கே.சிவாஜிலிங்கம் – 22,660 வாக்குகள்
8. ஐங்கரநேசன் பொன்னுத்துரை – 22,268 வாக்குகள்
9. எஸ்.சுகிர்தன் – 20,541 வாக்குகள்
10. கே.சயந்தன் – 20,179 வாக்குகள்
11. விந்தன் கனகரத்தினம் – 16,463 வாக்குகள்
12. ஏ.பரம்சோதி – 16,359 வாக்குகள்
13. கந்தையா சர்வேஸ்வரன் – 14,761 வாக்குகள்
14. வி.சிவயோகன் – 13,479 வாக்குகள்

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட

1. கமலேந்திரன் – 13,632 வாக்குகள்
2. அங்கஜன் இராமநாதன் – 10,034 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஊர்வலங்கள் கூட்டங்களுக்குத் தடை!!

pro

தேர்தல் நடைபெற்ற மாகாணங்களில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் ஊர்வலங்கள் நடத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நிறைவுபெற்றதன் பின்னர் இதுவரையான காலப் பகுதியில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி தோல்வி!!

a.sangary

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.அனந்தசங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது!!

child-abuse

கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் உள்ள லொண்டரிவத்தை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரே இந்த குற்றத்தை புரிந்துள்ளார். சந்தேக நபர் தூக்க மாத்திரையை கொடுத்து நீண்டகாலமாக சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக நீதிமன்ற மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் : மூவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது!!

northern_map

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக
1.பசுபதி அரியரத்தினம் – 27264 விருப்பு வாக்குகள்
2.தம்பிராசா குருகுலராசா – 26427 விருப்பு வாக்குகள்
3.சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை – 26132 விருப்பு வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக
பசுபதி அரியரத்தினம் – 27264
தம்பிராஜா குருகுலராஜா – 26427
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை – 26132
கந்தசாமி திருலோகமூர்த்தி – 4199
கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி – 2953
வீரசிங்கம் ஆனந்த சங்கரி – 2896
பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம் – 1188

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக..
வை.தவநாதன் – 3753
அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன் – 3531
கந்தசாமி பிரகலாதன் – 3435
வேணுகோபால் கீதாஞ்சலி – 1866
பொன்தம்பி தர்மசிறீ – 1533
அருணாசலம் விஜயகிருஷ்ணன் – 977
மாரிமுத்து மகாதேவன் – 404

முல்லைத்தீவு மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்!!

northern_map

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்த வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக
அன்ரனி ஜெகிநாதன் – 9309 விருப்பு வாக்குகள்
சிவப்பிரகாசம் சிவயோகன் – 9 296 விருப்பு வாக்குகள்
துரைராஜா ரவிகரன் – 8868 விருப்பு வாக்குகள்
கனகசுந்தரம் சுவாமி வீரபாகு – 8 702 வாக்குகள்

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக
அகமட்லெப்பை காசீம் – 1 726 விருப்பு வாக்குகள்

 

வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்!!

northern_map

வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக
ப.சத்தியலிங்கம் – 19 656 விருப்பு வாக்குகள்
G.T.லிங்கநாதன் – 11901 விருப்பு வாக்குகள்
ம.தியாகராசா – 11 681 விருப்பு வாக்குகள்
ஐ.இந்திரராசா – 11 535 விருப்பு வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக
தர்மபால செனவிரத்தின – 5 148 விருப்பு வாக்குகள்
ஏ.ஜயதிலக – 4 806 விருப்பு வாக்குகள்