காதலியையும் அவளது தம்பியையும் படுகொலை செய்த காதலன்!!

MURDER

சென்னையை அடுத்த சேலையூர் அருகே மாடம்பாக்கத்தில் கல்லூரி மாணவியும் அவரது தம்பியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அந்த மாணவியின் காதலனை பொலிசார் தேடி வருகிறார்கள்.

சென்னையை அடுத்த சேலையூர் அருகேயுள்ள மாடம்பாக்கம் தேனுகாம்பாள் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள இரு சக்கர வாகன ஷோருமில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்து பாலா கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கனணி பயிற்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களது மகள் சாதுஷினி (19) பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகன் யுகேஷ் (11) சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை வாசுதேவனும், அவரது மனைவி இந்து பாலாவும் வேலைக்கு சென்று விட்டனர். சாதுஷினி அவரது தம்பி இருவரும் கல்லூரி மற்றும் பள்ளிக்கு கிளம்பிச் சென்று விட்டனர்.

யுகேஷிற்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து விட்டார். சாதுஷினியும் மாலையில் வீட்டிற்கு வந்து மாலை 5.30 மணிக்கு தாயார் இந்து பாலாவிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வேலை முடிந்து இந்து பாலா வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் இரத்த வெள்ளமாக இருந்தது.

வீட்டின் படுக்கை அறையில் தலை முடி அறுக்கப்பட்டு கழுத்து, நெற்றி, தலை பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் சாதுஷினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டின் ஹாலில் தலையில் சிலிண்டரால் அடிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் யுகேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தான்.

இதை பார்த்த இந்து பாலா அலறினார். உடனே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் தலைமையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை தொடர்பாக வாசுதேவன் குடும்பத்தினரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

சாதுஷினி, மேடவாக்கம் ரங்கராஜன் நகரைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபரை காதலித்து கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு பின்னர் சாதுஷினி காதலனை விட்டு வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முகேஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்து சாதுஷினியை தன்னுடன் வருமாறு மிரட்டி வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த சாதுஷினியை கொலை செய்யும் திட்டத்தோடு முகேஷ் வந்து அவரை கொன்று இருக்கலாம் என்றும், அதை சிறுவன் யுகேஷ் பார்த்ததால் அவனையும் தீர்த்துக் கட்டி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தனிப்படை பொலிசார் முகேஷை தேடி வருகின்றனர். முகேஷ் பிடிபட்டால் தான் கொலை பற்றிய விவரங்கள் தெரியவரும் என பொலிசார் தெரிவித்தனர்.

பறவை மோதிய விமானம் திருச்சியைச் சுற்றி ஒரு மணிநேரமாக வட்டமிட்டதால் பரபரப்பு!!

AirAsia

திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்ட எயார் – ஏசியா விமானத்தின் வலது பக்க இன்ஜின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை 4.30 மணிக்கு எயார் ஏசியா விமானம் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 124 பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்தின் வலது பக்க இன்ஜின் மீது, பறவை ஒன்று மோதியது. அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை தரையிறக்க முடிவு செய்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து தரையிறக்க சிக்னல் கிடைக்க தாமதமானதால் நடு வானிலேயே விமானம் வட்டமிட்டது. ஒரு மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம் 5:30 மணிக்கு தரையிறக்கப்பட்டு, விமானத்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டனர்.

இன்ஜினில் ஏற்பட்ட சிறிய அளவிலான பாதிப்பு சரி செய்யப்பட்ட பின் பயணிகள் ஏற்றப்பட்டு இரவு 7:15 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. எரிபொருள் தீர்வதற்காக திருச்சியைச் சுற்றி விமானம் ஒரு மணி நேரமாகப் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்-அமைச்சரின் 10 கோடி நிதி உதவி மகிழ்ச்சி அளிக்கிறது : பிலிம் சேம்பர் தலைவர்!!

jeyalalitha

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது..

வருகிற 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நடத்தும் இந்த விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

நூற்றாண்டு விழாவையொட்டி நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான ஒத்திகை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினமும் நடைபெறுகிறது. விழாவுக்காக, இதுவரை பார்த்திராத அளவில் மிகப்பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சினிமா நூற்றாண்டு விழா பற்றி தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் விவாதித்து வருகிறார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்களையெல்லாம் அழைத்து பேசினார். சினிமா நூற்றாண்டு விழாவுக்காக எவ்வளவு செலவு ஆகும் என்று விசாரித்தார். ஏறக்குறைய 30 கோடி செலவாகும் என்று தெரிவித்தோம்.

உடனே தமிழக அரசு சார்பில் அவர் 10 கோடி நிதி உதவி வழங்கினார்.
சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சிகளுக்கு சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த விழாவில் கலந்துகொண்டால்தான் சினிமாவில் அவர்கள் இருப்பது தெரியும். அல்லது சினிமாவிலேயே இல்லாததுபோல் ஆகிவிடும் என்று கல்யாண் கூறினார்.

அப்போது ஒரு நிருபர் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அழைக்கப்படுவாரா என்று கேட்டார். அதற்கு பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண் சினிமா துறையை சேர்ந்த அனைவரும் அழைக்கப்படுவார்கள் என்று பதில் அளித்தார்.

பேட்டியின்போது இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பிலிம் சேம்பர் செயலாளர் ரவி கொட்டா ரக்கரா, பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார், பொருளாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தலைவர் அபிராமி ராமநாதன், திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் அருள்பதி, செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன், எடிட்டர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தோழியை காப்பாற்ற சென்ற மாணவிகள் பரிதாப மரணம்!!

diகோவை மாவட்டம் பொள்ளாச்சி மரபோட்டையை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கோகிலா(6). இவர் பொள்ளாச்சி அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவரும் உடுமலை தோட்டம்பட்டி பழனிசாமி என்பவரின் மகள் பிரேமேஸ்வரி (12) என்பவரும் தோழிகள்.

பிரேமேஸ்வரி உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். தோழிகள் 2 பேரும் ஓணம் பண்டிகையை யொட்டி கொழிஞ்சாம்பாறையில் வசிக்கும் தங்களது தோழிகளான சுஜித்ரா(17), மலர் (18) என்பவரது வீட்டுக்கு சென்றனர்.

மாணவிகள் கொழிஞ்சாம்பாறை பள்ளசேனாவிலுள்ள குளத்தில் குளித்து மகிழ தோழிகள் முடிவெடுத்தனர். அதன்படி அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளித்தனர். மலர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிக்கிக்கொண்டார். உயிருக்கு போராடிய மலர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினார்.

அதிர்ச்சியடைந்த தோழிகள் 3 பேரும் மலரை காப்பாற்ற குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றனர். ஆனால் தோழிகளும் நீரில் சிக்கிக் கொண்டனர். 4 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். குளத்தில் மூழ்கிய சுஜித்ரா மற்றும் மலரை காப்பாற்றினர். கோகிலா மற்றும் பிரேமேஸ்வரியை காணவில்லை.

சுமார் ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் கோகிலாவையும், பிரேமேஸ்வரியையும் பிணமாக மீட்டனர். இது குறித்து கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து கோகிலா, பிரேமேஸ்வரி பிணங்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காதல் ஜோடி கடலில் குதித்து தற்கொலை மாத்தறையில் சம்பவம்!!

seaமாத்தறை – ரன் தீவுக்கு அருகில் உள்ள பாலத்தின் மேலிருந்து கீழே கடலில் குதித்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது.

குறித்த ஜோடி குதித்தவுடன் அவர்களை காப்பாற்ற முடியாது போனதாகவும் கடல் அலையின் வேகம் அதிகரிப்பே அதற்கு காரணம் தெரியவந்துள்ளது.

இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை பட்டுதா வீதியில் வசிக்கும் 19 வயதான மொஹமட் அஸ்தான் மற்றும் காலி – மயிட்டிபே பகுதியில் வசிக்கும் கரிஸ்மா தேவதா என்ற யுவதியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தந்தைக்கு எமனான மகள்!!

body

கந்தான – நாகொட பகுதியில் கார் ஒன்றை இயக்க முற்பட்ட வேளை காரின் சாரதி தடுப்புக்கு பதிலாக வேக அதிகரிப்பு பகுதியை அழுத்தியதால் காருக்கு முன் நின்ற ஒருவர் அதில் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த காரின் சாரதியாக பெண் ஒருவர் செயற்பட்டுள்ளார்.
காருக்கு முன் நின்ற பெண்ணின் தந்தையே காரில் மோதுண்டு ஆபத்தான நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து 27 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

8000க்கும் அதிக கண்காணிப்பாளர் தேர்தல் பணிகளில்!!

ele

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களைக் கண்காணிப்பதில் 8000ற்கும் அதிகமான உள்ளூர் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான பவ்ரல், கபே மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் ஆகிய அமைப்புக்களின் சார்பில் தேர்தல் நடைபெறும் 10 மாவட்டங்களிலும் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பவ்ரல் அமைப்பு 10 மாவட்டங் களிலும் 4800 கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தியிருப்பதாக அந்த அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சிறிதரன் தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் தினத்தில் 175 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண சபைத் தேர்தல் குறித்துத் தமது அமைப்பு கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்த அவர் தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் இலங்கை வந்திருக்கும் எமது ஆசிய வலைப்பின்னல் அமைப்பைச் சார்ந்த 8 சர்வதேச கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்கள் வடக்கில் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் கூறினார்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து நீதியான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியிருப்பதுடன் வாக்காளர்களைக் கூடியளவு வாக்களிக்கச் செய்வதே தமது பிரதான இலக்காக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் சார்பில் தேர்தல் நடைபெறவிருக்கும் 10 மாவட்டங்களிலும் 300 பேர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசங்க ஹரிச்சந்திர தெரிவித்தார்.

வடக்குத் தேர்தல் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதால் 150 கண்காணிப்பாளர்கள் வடக்கில் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும், தேர்தல் நடைபெறும் தினங்களுக்கு தேர்தல் செயலகங்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்வதற்கு தேர்தல் ஆணையாளர் தமது அமைப்புக்கு விசேட அனுமதி வழங்கியிருப்பதாகவும் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்துக்கும் விரும்பிய நேரத்தில் செல்வதற்கு தனக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுஇவ்விதமிருக்க கபே அமைப்பின் சார்பில் 10 மாவட்டங்களிலும் 3750 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக அந்த அமைப்பின் பிரதம அதிகாரி கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் 750 கண்காணிப்பாளர்களும், குருநாகல் மாவட்டத்தில் 460 கண்காணிப்பாளர்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் 44 நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள் தேர்தல் தினத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் இலங்கை வந்திருக்கும் 30 சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளனர். பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினரும் வடக்கில் தமது கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

தந்தையைப் போல் ஆடமுயன்று காயமடைந்த ஸ்ருதி ஹாசன்!!

sruthi

நடிப்பிலும் நடனத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் கமலஹாசன். அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் கமலைப் போலவே தன்னை எதிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பவர்.

சென்ற வாரம் துபாயில் சினிமாத்துறையினருக்கான விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. அதில் நடிகர் கமலஹாசன் படங்களில் இருந்து கலந்து எடுக்கப்பட்ட சில பாடல்களுக்கு ஸ்ருதிஹாசன் மேடையில் நடனமாடினார். அந்தப் பாடல்கள் சிலவற்றின் நடன அசைவுகள் வேகமாகவும், செய்வதற்குக் கடினமாகவும் இருந்தன.

அவை அனைத்தையும் மேடையில் செய்து காட்டி ஸ்ருதிஹாசன் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆனால், இதன் விளைவாக அவரது கால் முட்டி பாதிக்கப்பட்டதால் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப்ட்!!

ie

இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய உலாவியே Microsoft Internet Explorer ஆகும்.

உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் ஒன்றான இதன் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Microsoft Internet Explorer 11 எனும் இப்பதிப்பானது முன்னைய பதிப்புக்களை விடவும் 30 சதவீதம் வேகம் கூடியதாகக் காணப்படுகின்றது.

எனினும் இந்த உலாவியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடியவாறே வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

5000 பெண்களை திருமணம் செய்த நபர்!!

hindi

இந்திய மாநிலம் சட்டீஸ்கரில் 5000க்கும் மேற்பட்ட திருமணம் புரிந்ததாக 47 வயது ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கஜ்பையா(47).

இவர் கலப்பு திருமணம் புரிந்தால் அரசாங்கம் தரும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் அரசாங்கம் 50 000 திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜய் பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார்.
மேலும் கிடைக்கும் பணத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 25 ஆயிரமும், தனக்கு 25 ஆயிரமும் என பங்கிட்டு கொண்டுள்ளனர்.

ராஜ்நண்டன் பகுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள விஜய் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 420, 467 மற்றும் 468ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது விஜயிடம் நடத்தி வரும் விசாரணையில், அவரது திருமணங்களின் எண்ணிக்கை கூடவும் குறையவும் வாய்ப்பிருப்பதாகத் பொலிசார் தெரிவித்துள்ளனர்..

முஸ்லிம் உலக அழகி போட்டியில் நைஜீரிய பெண்ணுக்கு பட்டம்!!(படங்கள்)

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகிப்போட்டி புதன்கிழமை நடந்தது. உலகிலேயே அதிகம் முஸ்லிம்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில் நடந்த இப்போட்டியில் உலக முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் இருந்து அழகிகள் வந்து கலந்துகொண்டனர்.

இஸ்லாம் மதக்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியின் இறுதியில் 20 அழகிகள் தேர்வு செய்யபட்டனர். அதில் நைஜீரியாவை சேர்ந்த ஒபாபியி ஆயிஷா அஜிபோலா என்ற 21 வயது பெண் உலக முஸ்லிமா 2013 என்ற இந்த பட்டத்தை வென்றார்.

ஒன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 500 பேர்களில் இருந்து நைஜீரியாவின் அஜிபோலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2200 அமெரிக்க டொலர் பரிசளிக்கப்படுகிறது. மேலும் அவர் மக்கா மற்றும் இந்தியா சென்று வர விமான சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியை நடத்தக்கூடாது என்று முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 3 4 5

பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் : ஆய்வில் தகவல்!!

earth

பூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி அண்ட்ரூ ரஷ்பி பூமியின் சுற்றுப்புறச் சூழல் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.

அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியில் மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாம் என்பது தெரியவந்துள்ளது. இது பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானி அன்ட்ரூ ரஷ்பி கூறியது,

நமது பூமி சூரியனின் வெப்ப மண்டல பகுதிக்குள் செல்லும்போது பூமியின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும். இதன் காரணமாக கடல் முழுவதும் ஆவியாகி விடும். இந்த கால கட்டத்தில்தான் உயிரினங்கள் பூமியில் வாழ முடியாத நிலை ஏற்படும்.

எங்களது ஆய்வின் மூலம் பூமியில் உயிரினங்கள் இன்னும் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழ முடியும் என்பதை கண்டறிந்துள்ளோம். சூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை பயன்படுத்தி கிரகங்கள் வாழ்க்கை நடத்த சாத்தியமானதா என்பது பற்றி கண்டறிந்துள்ளோம்.

கிரகத்திற்கும் அதன் நடசத்திரத்திற்கும் உள்ள தூரம் மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள தண்ணீருக்கு உகந்த வெப்பநிலையைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. விண்மீன்களின் வெப்ப அலை மாதிரிகள் மூலம் கிரகங்களின் வாழத் தக்க நாட்களை கணக்கீடு செய்தோம்.

கிரகங்களில் வசிக்கத்தக்க காலம் எவ்வளவு என்பதை அளக்கும் அளவீடானது மற்ற கிரகங்களில் எவ்வளவு நாள்கள் வசிக்க முடியும் என்பதை அளவிட பெரிதும் உதவியாக இருக்கிறது. ஒருவேளை இந்த ஆய்வு முடிவு துல்லியமாக இல்லாவிட்டாலும் கூட பூமியானது 75 சதவீத வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது. பூமிக்கு இன்னும் 25 சதவீத ஆயுள்தான் உள்ளது.

சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 1000 க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகங்களை வைத்துத்தான் விஞ்ஞானிகளால் கிரகங்களில் வசிக்கத்தக்க கால கட்டத்தை கணக்கிட முடிந்தது.

நாங்கள் இதேபோன்ற 8 கிரகங்கள் மற்றும் செவ்வாய்கிரகத்தின் தற்போதைய வசிக்கத்தக்க கால கட்டத்துடன் பூமியை ஒப்பீடு செய்துள்ளோம். எங்களது ஆய்வில் சிறிய கூட்ட நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் நீண்ட காலம் வசிக்கத்தக்கதாக இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்று அன்ட்ரூ ரஷ்பி தெரிவித்தார்.

அனந்தி வீட்டின் மீது சுற்றிவளைப்பு தாக்குதல் : பலர் படுகாயம்!!

ananthi

சுழிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தியின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் அடித்து நாசமாக்கியுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 8ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய உடையில் இந்திய அணி!!

india

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான புதிய உடைகளை நைக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மிகவும் எடை குறைவான இந்த ஆடைகள் பொலிஸ்டர் இழைகளால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரர்களின் உடல் அமைப்பிற்கு தகுந்தபடி கனகச்சிதமாக ஆடை உள்ளது.

உடலை ஒட்டியபடி உள்ள இந்த ஆடையில் முதுகு பகுதியையொட்டிய கை பகுதியில் காற்று செல்வதற்காக சிறிய நுண் துளைகள் உள்ளது. பின்கழுத்து தோள்பட்டையில் மூவர்ணக் கொடியின் நிறம் பொறிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் அணித்தலைவர் டோனி உட்பட இந்திய அணி வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கெதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் போட்டி தொடரில் களமிறங்குகின்றனர்.

பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க தயார் : அப்ரிடி!!

afridi

பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக மிஸ்பா உல்-ஹக் உள்ளார். 20 ஓவர் போட்டிக்கு முகமது ஹபீஸ் தலைவராக பணியாற்றி வருகிறார்.

சிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் அணி ஒரு ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டெஸ்டில் தோற்று இருந்தது. பலவீனமான சிம்பாவே அணியிடம் தோற்றதால் மிஸ்பா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் தலைவராக இருக்க அப்ரிடி விருப்பம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது..

நான் 17 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடி உள்ளேன். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் பதவியை மீண்டும் வழங்கினால் அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். சவால் நிறைந்த பதவி என்றாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறேன்.

தென் ஆப்பிரிக்க தொடரில் மூத்த வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடுவது முக்கியமானதாகும் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆபிரிக்காவுடன் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த போட்டி நடக்கிறது. மிஸ்பாவுக்கு இந்த தொடரில் கடைசி வாய்ப்பு வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் டெஸ்டுக்கு மட்டும் அவர் தலைவராக நீடிப்பார் என்று தெரிகிறது. ஒரு நாள் போட்டிக்கு அப்ரிடி தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. முகமது ஹபீஸ் 20 ஓவர் போட்டிக்கு தலைவராக இருப்பார். கடந்த உலக கோப்பை போட்டியில் அப்ரிடி பாகிஸ்தான் அணி தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

200 கோல்களை அடித்து சாதனை படைத்த ரூனி!!

rooney

மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் வீரர் வைன் ரூனி, மன்செஸ்டர் அணிக்காக 200 கோல்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
சம்பியன்ஸ் லீக் தொடரில் பெயார் லெவர்குசென் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி வெற்றது.

இதில் ரூனி இரண்டு கோல்களை பெற்றதன் மூலம் மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக 200 கோல்களை கடந்தார்.