ஐ.பி.எல் அனுபவத்தை சம்பியன் லீக்கில் பயன்படுத்துவேன்: நரைன்!!

Sunil Narine

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா அணி சார்பில் பங்கேற்றார்.

தவிர கடந்த 2012ல் 24 விக்கெட் வீழ்த்தி அணி சம்பியன் பட்டம் வெற்றிபெற கைகொடுத்தார். வரும் செப்டம்பர் 21ல் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் T20 தொடருக்கு கொல்கத்தா அணி தகுதி பெறவில்லை.
எனவே, மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண்டு டுபாகோ அணியில் விளையாடுகிறார்.

இது குறித்து நரைன் கூறுகையில் கொல்கத்தா அணிக்காக விளையாடியதன் மூலம், அதிகம் கற்றுக் கொண்டேன். இதை சம்பியன்ஸ் லீக் தொடரில் பயன்படுத்திக் கொள்வேன்.
தவிர, கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்கெதிராக ராஞ்சியில் நடந்த லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினேன். இந்த அனுபவத்தை கொண்டு பேத் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர் கொள்வேன் என்றார்.

கதாநாயகனாகும் சந்தானம்!!

santhanam

தமிழ் சினிமாவில் மன்மதன் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சந்தானம். அதன்பிறகு தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருகிறார். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் சேர்ந்து துணை கதாநாயகன் போன்றே நடித்து வருகிறார்.

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தை தயாரித்து பவர் ஸ்டார் உடன் சேர்ந்து நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

நகைச்சுவை நடிகர்கள் முன்னணியாக திகழும்பொழுது அவர்களுக்கு கதாநாயகனாக நடிக்கும் ஆசை வருவது புதிதல்ல. நாகேஷ் எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். வடிவேல் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திலும், கருணாஸ் திண்டுக்கல் சாரதி படத்திலும் கதாநாயகனாக நடித்தனர்.இப்படங்கள் வெற்றி பெற்றது.

இந்த வரிசையில் சந்தானமும் இணைகிறார். அவர் கதாநாயனாக அறிமுகமாகும் படத்துக்கு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என பெயரிட்டுள்ளனர். ஸ்ரீநாத் இயக்குகிறார்.

 

வவுனியா பிரதேச கலை இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் “தமிழ் மாமன்றம்”!!(படங்கள்)

வவுனியா பிரதேச கலை இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் தமிழ் மாமன்றம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இம் மன்றத்தின் தலைவர் இது சம்பந்தமாக எமக்கு கருத்து தெரிவிக்கையில்..

இம் மன்றத்தின் மூலம் எதிர்காலத்தில் எமது பிரதேச மாணவர்களின் திறன் விருத்திக்கு எம்மால் முடிந்தவரை பங்களிப்பதுடன், எமது ஆர்வத்துக்கும் வெளிப்பாட்டுக்கும் எம்மாலேயே களம் அமைக்கும்
முயற்சிகளிலும் ஈடுபட முடியும் என்பது எம் நம்பிக்கையாகும்.

எமது முதற்கட்ட நடவடிக்கையாக எமது வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்களிற்கு விவாதப் பயிலரங்குகளினை ஒழுங்கு செய்து அதன் மூலம் மாணவர்களின் விவாதத் திறமையை வளர்க்க எம்மாலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இது வரை எம்மால் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம், கந்தபுரம் வாணி வித்தியாலயம், பூவரசங்குளம் மகாவித்தியாலயம், பூந்தோட்டம் மகாவித்தியாலயம், சி.சி.த.க.பாடசாலை, இந்துக் கல்லூரி, பெரிய கோமரசங்குளம் ம.வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு இரண்டு கட்டமாக எம்மால் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதனை சிறப்பாகச் செய்தும் முடித்துளோம்.

மேலும் ஏனைய பாடசாலைகளுக்கும் விரைவில் எமது விவாதப் பயிலரங்குகளினை நடாத்த இருக்கிறோம். அனைத்துப் பாடசாலைகளுக்கும் விவாதப் பயிலரங்குகளினை நிறைவு செய்ததும் அனைத்து பாடசாலைகளும் பங்குகொள்ளும் ஒரு மாபெரும் விவாதப் போட்டி அடுத்த மாத நிறைவில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

மேலும் எமது மன்றத்திற்கான இலச்சினை மற்றும் மகுடவாசகம் என்பவற்றினை வவுனியா பாடசாலை மாணவர்களின் மத்தியில் ஒரு போட்டியாக வைத்துள்ளோம். மாணவர்களின் கை வண்ணத்திலேயே எமது மன்றத்திற்கான இலச்சினை மற்றும் மகுட வாசகம் உருவாகவுள்ளது.

போட்டிக்கான திகதி முடிவில் எமக்கு பல சித்திரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. விரைவில் இலச்சினை மற்றும் மகுட வாசகம் என்பவற்றை தெரிவு செய்து வெற்றியாளர்களுக்கு பரிசில்களையும் வழங்கக் காத்திருக்கிறோம்.

தொடர்ந்து கவிதைக்கான பயிலரங்குகளினையும் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். எமக்கான ஆதரவுகளை வழங்குமாறு கலை ஆர்வலர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.

1 2 3 4 8 9 10 11 12 13

நவம்பரில் விஸ்வரூபம் 2!!

kamal

கமலின் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. தற்போது ரீ ரெக்கோடிங் விறுவிறுப்பாக நடக்கிறது. அத்துடன் படத்தை ரிலீஸ் செய்யும் திகதி பற்றியும் ஆலோசிக்கிறார்கள்.

அனேகமாக நவம்பர் 22ம் திகதி வெளியாகலாம் என தெரிகிறது. தீபாவளிக்கு நிறைய படங்கள் வருவதால் தியேட்டர்கள் குறைவாகவே கிடைக்கும். எனவே தீபாவளி முடிந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு விஸ்வரூபம் வருவதால் போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

இம்முறை தேர்தலில் பிளாஸ்டிக் பெட்டிகள் அறிமுகம்!!

ele

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகளும் பயன்படுத்தப்படுவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
பயிற்சித்து பார்க்கவென 250 பிளாஸ்டிக் பெட்டிகள் இம்முறை தேர்தலில் பயன்படுத்தப்படுவதாக தேர்தல் செயலக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கண்டி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சில வாக்களிக்கும் நிலையங்களுக்கு இந்த பெட்டிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதுவரை பயன்படுத்தப்பட்ட பெட்டிகள் சில சேதமடைந்துள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய வாக்கு பெட்டி தயாரிக்க அதிக செலவு ஏற்படுவதால் பிளாஸ்டிக் பெட்டிகளை பயன்படுத்த தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.

சிம்பு- ஹன்சிகா திருமணம் தள்ளிப்போகின்றது!!

simbu

சிம்பு- ஹன்சிகா வாலு என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றன. அப்போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இதை இருவரும் முதலில் மறுத்து வந்தனர். பிறகு இருவரும் காதலிப்பதை ஒத்துக்கொண்டனர். இதனால் அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்கள் திருணம் தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.
ஹன்சிகா மோத்வானி அம்மா ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது..

துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் ஹன்சிகா முன்னாள் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கையால் விருதை வாங்கும்போது நாங்கள் மெய்சிலிர்த்து போனோம். ஹன்சிகா தற்போது 9க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் முதல் சுந்தர் சி. இயக்கும் அரண்மனை படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் நடித்து முடித்த பிறகு மற்ற படங்களில் நடிக்க வேண்டும். இதனால் அவருக்கு சினிமாவில் நடிப்பதை விட திருமண எண்ணம் ஏதும் இல்லை என்றார். இதனால் அவர்கள் திருமணம் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

வடக்கு தேர்தல் இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்ல சந்தர்ப்பம் : பான் கீ மூன்!!

pankimoon

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இடம்பெறும் வட மாகாண சபைத் தேர்தல் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒன்று என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து பான் கீ மூன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி இடம்பெறவுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் 1987ம் ஆண்டுக்குப் பின் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலானது அரசியல் நல்லிணக்கம் மற்றும் இலங்கையர்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் மிக முக்கிய வாய்ப்பாக அமையும்.

அனைத்து கட்சிகளும் தேர்தலில் அமைதியான முறையில் பங்குபற்ற வேண்டும். யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஒன்றிணைந்து கூட்டாக, ஆக்கபூர்வமாக பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என பான் கீ மூன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா : நேரு விளையாட்டு அரங்கில் நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள்!!

cinema

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்காக சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. தியேட்டர்களில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. பூங்காக்கள் தினமும் இலவச படங்கள் திரையிடப்படுவதால் களைகட்டி உள்ளன. வண்ண வண்ண போஸ்டர்கள் நகரமெங்கும் அலங்கரிக்கிறது. பதாதைகளும் பேனர்களும் வைக்கப்படுகின்றன.

21ம் திகதி மாலை 5.30 மணிக்கு விழா துவங்குகிறது. முதல் அமைச்சர் ஜெயலலிதா இதில் பங்கேற்று துவக்கி வைக்கிறார். அப்போது தமிழ் நடிகர், நடிகைகள் மேடையில் நடனம் ஆடுகிறார்கள். முன்னணி நடிகர், நடிகைகள் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

22ம் திகதி காலை கன்னடநடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23ம் திகதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

24ம் திகதி நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்–மந்திரி கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா, கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சிவி, நாகார்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கின்றனர்.

சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி சத்யம், அபிராமி, உட்லண்ட், 4 பிரேம்ஸ் தியேட்டர்களில் பழைய படங்கள் இலவசமாக திரையிடப்பட்டு சினிமா படப்பிடிப்புகளும் 24ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 4 மாநில நடிகர், நடிகைகளும் சென்னையில் குவிகிறார்கள். தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையினர் அரசுடன் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

100 கன்னிப் பெண்களின் இரத்தம் வேண்டும் : சீனாவில் வினோத விளம்பரம்!!

blood

சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் இரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சீனாவில் உள்ள பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை தான் இப்படி ஒரு வினோத விளம்பரம் அளித்து பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

பாலியல் உறவு மூலம் பரவும் எச்.பி.வி வைரஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக இவ்வாறு கன்னிப் பெண்களின் இரத்தம் கேட்டு இணையத்தில் விளம்பரம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
விளம்பரத்தில் 18 வயது முதல் 24 வயது வரையிலான 100 கன்னிப் பெண்களின் இரத்தம் தேவை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கன்னிப் பெண்களின் இரத்தம்தான் தேவையா, ஆண் பிரம்மச்சாரிகளின் இரத்தம் தேவை இல்லையா, என்ன விஞ்ஞானம் இது என விளம்பரத்தைப் பார்த்து பலர் கிண்டலோடு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அத்தோடு இப்படி கன்னிப் பெண்களின் இரத்தத்தை கேட்டதன் மூலம், மருத்துவமனை நிர்வாகம் பெண்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.

ஆனால் கன்னிப் பெண்களின் இரத்தத்தில் எச்.ஐ.வி தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு. அத்துடன் கன்னிப் பெண்களின் இரத்தத்தை கேட்பது சர்வதேச நடைமுறைதான். எனவேதான் இந்த கோரிக்கையை விடுத்தோம் என விளக்கம் கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

காமெடி படங்களை குறைக்கும் சிவ கார்த்திகேயன்!!

siva

சிவ கார்த்திகேயன் மெரினா படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அதன்பின் மனம் கொத்தி பறவையில் நடித்தார்.
எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

தற்போது நடித்து வெளிவந்துள்ள வருத்தப் படாத வாலிபர் சங்கம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் நடிக்கும் படங்கள் அனைத்து கமெடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக அமைகிறது. இதுவே அவரது வெற்றிக்கும் காரணமாகவும் அமைகிறது.

எதிர்நீச்சல் வெற்றியின் மூலம் தற்போது காமெடி படங்களை குறைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறார். சிவ கார்த்திகேயனை காமெடி கலந்த கதையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் அவரை மற்ற ரோலில் ஏற்றுக்கொள்வார்களா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பெண் ஊழியரிடம் சேஷ்டை செய்த தொழிலதிபரை வித்தியாசமாக தண்டித்த நீதிபதி!!

judge

பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு வித்தியாசமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் குர்கானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் நிறுவனத்தில் ஆர்கே புரத்தில் வசித்து வரும் பெண்ணொருவர் கடந்த 2012 டிசம்பர் முதல் வேலை செய்து வந்தார்.

இவரிடம் அந்த தொழிலதிபர் அடிக்கடி தவறாக நடந்துகொள்ள முயன்றதை தொடர்ந்து 2013 மார்ச் மாதம் அந்நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார். இதையடுத்து குறித்த பெண் வேறொரு நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 29ம் திகதி வீட்டில் அந்தப் பெண் தனியாக இருந்த நேரம் பார்த்து தொழிலதிபரும் வந்தார். அவளின் ஆடைகளை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தார்.

அநதப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதைக்கண்ட தொழிலதிபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுபற்றி அந்தப் பெண் பொலிசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த பொலிசார் தொழிலதிபரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர் பிணையில் வெளியே வந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி விசாரித்து வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது,

பெண் வீட்டில் தனியாக இருந்தபோது தொழிலதிபர் அத்துமீறி உள்ளே நுழைந்து சில்மிஷம் செய்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல் செய்ததற்கு நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கடிதமும் வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ6 லட்சம் நிவாரண தொகை தருவதாக தொழிலதிபர் நீதிமன்றத்துக்கு வெளியே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சமரசம் எற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் செய்த குற்றத்துக்காக 2 லட்சம் அபராதம் விதிக்கிறேன்.

அந்த தொகையை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்களுக்கான நூலகம் மற்றும் டெல்லி பொலிஸ் நலவாழ்வு சங்கத்துக்கு பிரித்து தரவேண்டும். இதுமட்டும் அல்லாது ஒரு பாடசாலையில் உள்ள வகுப்பறைகளுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான அறைவாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை அவர் வாங்கித்தர வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

இசை கேட்ட காதலனுக்கு கத்திக்குத்து : காதலி கைது!!

arrest1

குடிவெறியில் ஆண் நண்பரை கத்தியால் பலமுறை குத்திய காதலியை பொலிஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை சேர்ந்தவர், வெர்னட் பாடர் 54). சம்பவத்தன்று, இவரது ஆண் நண்பருடன், இங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அவரது ஆண் நண்பர் தொலைக்காட்சியில் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சிப்பெட்டியை நிறுத்தும்படி பாடர் கூறினார். ஆனால், இதை பொருட்படுத்தாமல் அவரது நண்பர் இசையை ரசித்துக் கொண்டிருந்தார்.

இதில் ஆத்திரமடைந்த பாடர், கத்தியால் அவரது ஆண் நண்பரை பல இடங்களில், சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்தபோது, பாடர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். இந்த பெண்ணை கைது செய்த பொலிஸார், குடும்ப சண்டை தொடர்பான வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் மர்ம நபர்களால் பூசகர் வெட்டிக்கொலை!!

MURDER

கிளிநொச்சி, அம்பாள்குளம் பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் 18ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது வீட்டிலேயே கோயில் அமைத்து பூஜை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பூசாரி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 69 வயது மதிக்கத்தக்க ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலைச் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமரின் மகளை துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள்!!

england

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மகள் கத்ரின். வழக்கறிஞரான இவர் தனது நண்பருடன் திங்கட்கிழமை இரவு மத்திய லண்டன் மேரிலீபோன் நகரில் உள்ள ஐவோர் பிளேசில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது துப்பாக்கியுடன் வந்த இரண்டு வழிப்பறி ஆசாமிகள் கத்ரினை மிரட்டி பணம் மற்றும் நகையை கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்களிடம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் வெறுங்கையுடன் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதேபோல் மற்றொரு நபரிடமும் வழிப்பறி செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை உறுதி செய்த ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் இரவு 8.30 மணிக்கு இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்ததாக தகவல் கிடைத்து பொலிசார் உஷார்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு செய்தி தொடர்பாளர் கூறுகையில், கொள்ளையர்கள் யாரையும் தாக்கவில்லை. இரண்டு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. ஒரு சம்பவத்தில் எந்த பொருளும் திருடப்படவில்லை. மற்றொரு சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியதாகவும் கேத்ரினும், அவரது நண்பரும் தெரிவித்தனர்.

தாய்-தந்தையை நிர்வாணமாக்கி படுகொலை செய்த கொடூரனுக்கு மரண தண்டனை!!

marana

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் பெற்றோரை நிர்வாணமாக்கி அவர்களை படுகொலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் மான் பாதூர்(60). அவரது மனைவி பார்வதி (56). அவர்களின் மகன் ஓம் பர்காஷ்(25). அவர்கள் அனைவரும் இமாச்சல பிதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் பகுதியில் வசித்து வந்தனர்.

பாதூரும் அவரது மனைவியும் வயலில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓம் பர்காஷ் தனது தந்தையை நிர்வாணமாக்கி அவரது மர்ம உறுப்பை அறுத்து அவரை கொடூரமாகக் கொன்றார்.

பின்னர் தாயையும் நிர்வாணமாக்கி கொன்றார். இதை பார்த்து அதிர்ந்த தனது மனைவியையும் உறவுக்காரப் பெண்ணையும் அவர் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டார். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து தகவல் கிடைத்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது இரண்டு உடல்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தது.

இதையடுத்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து பர்காஷை கைது செய்தனர். அவர் எதற்காக கொலை செய்தார் என்பது கடைசி வரை தெரியவில்லை. இந்த வழக்கு சிம்லாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பல்தேவ் சிங் பர்காஷுக்கு மரண தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டார்.

நைஜீரியாவில் 150 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

nig

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கெதிரான தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் போக்கோஹராம் என்ற இடத்தில் உள்ள காட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 150 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் 16 வீரர்கள் கொல்லப்பட்டனர். 9 ராணுவ வீரர்களை காணவில்லை.

அவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் தாக்குதல் நடந்து வருகிறது.