தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையான பலன் கிடைக்கும் என தெரிந்துகொள்ளுங்கள்..
நெய் தானம் – பினி நீங்கும்
அரிசி தானம் – பாவம் அகலும்
தேங்காய் தானம் – காரிய வெற்றி
ஆடை தானம் – ஆயுள் விருத்தி
தேன் தானம் – புத்திர விருத்தி
அன்னதானம் – ஆண்டவன் அருள்
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் கணவனால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு மூன்று மாதங்களாக இரகசியமான முறையில் வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
கணவனால் தாக்கப்பட்டு தீயினால் சுடப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக இரகசியமான முறையில் நாட்டு வைத்தியம் செய்துகொண்டு வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தாயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவராவார். முதலாவது திருமணத்தின் மூலம் ஐந்து வயதுப் பிள்ளையும்ம் தற்போதைய கணவன் மூலம் 11 மாதக் கைகுழந்தையும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பெண்ணின் வலது கை கடுமையாகப் பாதிக்கப்பட்டள்ளதாகவும் கணவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. கணவன் மஹியங்கனைப் பகுதியைச் சேர்ந்தவராவார்.
முடி கொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்..
புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.
கண்ணில் கருவளையம் மறைய..
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
முகத்தை பாதுகாக்கும் முறை..
ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு கரண்டி தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
உதடு உலர்வதை தடுக்க..
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 கரண்டி இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.
கழுத்தில் உள்ள கருவளையம் மறைய..
சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்.
இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க..
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
காது அழகு பராமரிப்பு..
பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.
உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும் 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ் பெக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.
சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.
சம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது இலங்கையின் கந்துரட்ட மரூன்ஸ்.
கந்துரட்ட மரூன்ஸ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற நியூசிலாந்தின் ஒட்டாஹோ அணி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் 155 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஒட்டாஹோ அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
ரெயான் டென் டோசெட்டே 64 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நிசாம் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். டில்ஹார லொக்குஹெட்டிகே மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கந்துரட்ட மரூன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில் வவுனியா நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி தலைமையிலான குழுவினர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
வவுனியாவிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காரியாலயத்தில் வைத்து சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்னிலையில் வவுனியா நகர சபை உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி தலைமையிலான ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புளொட் அமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குமாரசுவாமி 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை வவுனியா நகர சபை உறுப்பினராக இருந்த அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு 2009ம் ஆண்டு முதல் வவுனியா நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா நகர சபை உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் வவுனியா நகர சபை இயங்கி வருகின்ற போதிலும் 2009ம் ஆண்டு முதல் மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்க முடியாது போயுள்ளது. இந்த காலகட்டத்தில் எமது பகுதிக்கான அபிவிருத்திகள் எதனையும் சாதிக்க முடியாது உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் தற்பொழுது வடக்கில் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளது.
எனவே தான் அரசுடன் இணைந்து தமிழ் பகுதிகளுக்கான அபிவிருத்தி மற்றும் மேம்பாடு என்பவற்றை கருத்திற் கொண்டே நாம் அரசுடன் இணைந்து செயற்பட தீர்மாணித்தோம். மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் எதிர்கட்சிக்கு கிடைத்தாலும் பிரயோக அடிப்படையில் மத்திய அரசுடன் கைகோர்த்து செயற்படாவிட்டால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது போய்விடும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து செயற்படும் கட்சியல்ல, மாறாக ஜனாதிபதி அவர்கள் நாட்டுக்கு சமாதானத்தை வழங்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நேர்மையான தலைவராவார். எனவேதான் நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டோம் என்றும் வவுனியா நகர சபை உறுப்பினர் குமாரசுவாமி தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளின் திருமண நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சி – முல்லைத்தீவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
இதன்போது 3 திருமணங்கள் நடைபெற்றதுடன் அவை முறையே இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க சமய சம்பிரதாயப்படி நடைபெற்றுள்ளது.
விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்து தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள பேரின்பநாதன் வர்மன் மற்றும் நடராசா சுகிர்தா ஆகியோர் இந்து சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இதேபோல் சகோதர இனத்தவரான சிவில் பாதுகாப்பு படை வீரர் ஹர்ஷ நூவான் தனது காதலியான சுகந்தினியை சிங்கள முறைப்படி திருமணம் செய்துகொண்டார். எனினும் இங்கு நடைபெற்ற மற்றுமொரு திருமணம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.
விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த மிகவும் உயரம் குறைந்த முன்னாள் உறுப்பினரான முருகையா சசிகுமார் மேரி பபிலாவை கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
சம்சங் நிறுவனம் கலக்ஸி நோட் 3 மற்றும் கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த கலக்ஸி நோட் 3யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்றாகும். சம்சங் கலக்ஸி நோட் 3யின் விலை 49 990 இந்திய ரூபாய் ஆகும்.
கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தின் விலை 22 990 இந்திய ரூபாய் ஆகும். 5.7 இன்ஞ் 1080p சூப்பர் அமோலட் பனல் கொண்ட கலக்ஸி நோட் 3, 1.9GHZ எக்ஸ்னோஸ் அக்டா கோர் பிரசஸர் உடன் வந்துள்ளது.
13 மெகாபிக்சல் கமரா, 2 மெகாபிக்சல் Front கமெரா உள்ளன. அன்ரொய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்டுள்ள கலக்ஸி நோட் 3யில் 3ஜிபி ரம் உள்ளது.
கேலக்ஸி நோட் 3யில் 4K வீடியோக்களை படம்பிடிக்கலாம். இது 32 GB மற்றும் 64GB சேமிப்பு அளவுகளில் கிடைக்கிறது.
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் சிறுமியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபரை அடையாளம் காட்டுபவர்களுக்குத் தமது சொந்தப் பணத்தில் ஒரு லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் அறிவித்துள்ளார்.
கோணாவில் பகுதியில் நேற்று முன்தினம் ஏழு வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
இதுவரை சுமார் 510 சிறுமிகள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது பாரிய ஒரு கலாசாரச் சீரழிவாகும்.
இவ் வாறானவர்களை அடையாளம் கண்டு சமூகத்தில் வெளிக்கொணரப்பட வேண்டும். ஆகவே சந்தேக நபரை யாராவது அடையாளம் காட்டினால் அவரை சட்டத்தில் முன்நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அடையாளம் காணபிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என்று கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
ஜேர்மனியில் 25 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கொலை செய்த குற்றவாளியை பொலீசார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் ஒஸ்னாபிரியூக் நகரை சேர்ந்த ஒன்பது வயது பெண் பள்ளியிலிருந்து வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொலீசில் புகார் செய்தனர்.
25 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி எவ்வித ஆதாரமும் சிக்காததால் வழக்கை கை விட்டனர். அண்மையில் அந்நாட்டின் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும், குற்ற சம்பவம் தொடர்பான தொடரை பார்த்த பொலீஸ் அதிகாரி ஒருவர், அதே பாணியில் வழக்கை விசாரிக்க முயற்சித்தார்.
அதன்படி பொலீஸ் வசமிருந்த 25 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடைகள் மற்றும் அதில் படிந்திருந்த கொலையாளியின் தடயங்களை சேகரித்தார். இந்த கொலையில், சந்தேகப்படும் நபர்களிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. அதில், 45 வயதுடைய நபரின் மரபணு ஒத்துப்போனது.
இதையடுத்து அந்த நபர், கைது செய்யப்பட்டார். கடந்த 1987ம் ஆண்டு 19 வயதுடையவராக இருந்த குற்றவாளி ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது சிறுமி தன் பெற்றோரிடம் புகார் தெரிவிப்பதாக மிரட்டியதை அடுத்து அவளை கொலை,இந்த நபர் செய்துள்ளான் என போலீசார் கூறினர்.
பிரித்தானிய பிராட்போட் நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு 4 1/2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து பிராட்போட் கிரவுன் நீதிமன்றத்தில் அவனது தாயார் அமந்தா குட்டன் மீது விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த விசாரணையில், கடந்த 2009ம் ஆண்டு நான்கரை வயது இருந்தபோது அவன் பட்டினியால் இறந்து இருக்கிறான். அவனது உடலை அந்த அறையின் கட்டிலிலேயே சுமார் 2 ஆண்டுகள் வரை வைத்திருந்துள்ளார் அந்த பெண்மணி எனத் தெரியவந்துள்ளது.
மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான அமந்தாவின் அறையானது மிகவும் துர்நாற்றத்துடன் இருப்பதையும் அந்த குழு உறுதி செய்தது. ஆனால் தான் கொலை செய்யவில்லை என்று அமந்தா தரப்பில் மறுக்கப்படுகிறது. ஆனால் அமந்தா அந்த குழந்தையை பட்டினி போட்டு மருத்துவ உதவியும் செய்யாமல் கொன்றார் என்று தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. அமந்தாவின் கணவர் அப்டாப் கான் அவரை விட்டு முன்னரே பிரிந்து சென்று வேறு எங்கோ வசித்து வருகிறார்.
டுபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற இரு இலங்கையர்கள் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயிலிருந்து மும்பை வழியாக நேற்று கோவா பனாஜி விமான நிலையத்தை சென்றடைந்தது. அப்போது விமானப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்தே விமானத்தில் உள்ளே சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஆசனத்திற்கு அடியில் கார்பன் பேப்பர் சுற்றி மறைக்கப்பட்டிருந்த இரு பைக்கற்றுக்களை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அதன் ஒவ்வொரு பைக்கற்றுகளில் இருந்தும் ஒரு கிலோ எடையுள்ள ஆறு தங்கக்கட்டிகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் பெறுமதி இந்திய ரூபாவில் 3.60 கோடி என தெரியவந்துள்ளது.
இதை துபாயிலிருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த இருவரை அதிகாரிகள் கைதுசெய்தனர். இதுபோன்று கடந்த மாதம் இரு பயணப் பையில் கடத்திவரப்பட்ட தங்ககட்டிகளை இலங்கையை சேர்ந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய முறைகளில் கடத்திவரப்படும் பொருட்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி அதிகாரி தெரிவித்தார்.
யாழ். பண்ணை பாலத்துக்கு அருகில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாதவர்களால் தாக்கபட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் எரியூட்டப்பட்டுள்ளது.
பண்ணைப்பாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த சுயேட்சை குழு 7 இன் வேட்பாளர்களான மண்கும்பானை சேர்ந்த சு.பிரகலாதன்(29) ச. தேவரஞ்சித்(29) ஆகிய இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக காயமடைந்த பிரகலாதன் தெரிவிக்கையில்,
நாம் இருவரும் மண்கும்பான் பிரதேசத்தில் இரவு சுவரொட்டிகளை ஒட்டி விட்டு யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த போது பண்ணைப்பாலத்திற்கு அருகில் இரவு 12.30 மணியளவில் நான்கு மோட்டார் வந்த இனம் தெரியாத நபர்கள் எம்மை வழிமறித்து தாக்க தொடங்கினர்.
நாம் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடினோம் அப்போது அவர்கள் எம்மை விட்டு விட்டு நாம் பயணித்த ஆட்டோவை அடித்து உடைத்தனர் பின்னர் அதனை கீழே தள்ளி விழுத்தி கொளுத்தி விட்டு சென்று விட்டனர்.
நாம் இரவு சுவரொட்டி ஒட்டி கொண்டு இருந்த போது அந்த பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நால்வர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார்கள்.
அதனால் நாம் சுவரொட்டி ஒட்டுவதை நிறுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். அதன் பின்னர் நாம் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே இத் தாக்குதல் நடைபெற்றது என தெரிவித்தார்.
நடிகை அஞ்சலி வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சித்தி வீட்டில் இருந்து மாயமான பிறகு முதல் தடவையாக போலீஸ் நிலையத்தில் தலை காட்டினார். அதன் பிறகு யாரும் அவரை பார்க்க வில்லை.
அஞ்சலி எங்கு இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. தெலுங்கு படங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்தன. ஆனாலும் அதை உறுதிபடுத்த முடியவில்லை. அந்த படப்பிடிப்புகளில் கூட அவரை பார்க்க முடிய வில்லை என்கின்றனர். அரசியல்வாதி உறவினர் ஒருவரை அஞ்சலி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இதற்கு அஞ்சலி தரப்பில் இருந்து மறுப்பு அதிகமாக வந்தது.
அப்போதும் அவர் தன்னை வெளிப்படுத்தவில்லை. அஞ்சலி மீது இயக்குனர் களஞ்சியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் நேரில் ஆஜராகுமாறு அஞ்சலிக்கு பலதடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் வரவில்லை. இறுதியில் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
அஞ்சலி எங்கு இருக்கிறார் என்று மர்மம் நீடிப்பதாக திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர். தமிழ் படங்களில் அவரை நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் பலர் விரும்புகிறார்கள். ஆனால் அஞ்சலியை தொடர்பு கொள்ள முடிய வில்லை. அவர் ஜேர்மனியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்த இந்திய அணியின் சச்சின் 198 டெஸ்டில் 15,837 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க மண்ணில் சச்சின் தனது 200 டெஸ்ட் போட்டியை விளையாடும் நிலை இருந்தது.
ஆனால் சொந்த மண்ணில் விளையாடும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை புதிய ஏற்பாடுகளை செய்தது. இதன்படி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வருமாறு மேற்கிந்திய தீவுகள் அணியை அழைத்தது.
இப்போட்டிகள் கொல்கத்தா (ஈடன் கார்டன்), மும்பையில் (வான்கடே) நடக்கவுள்ளன. ஆனால் இரண்டு கிரிக்கெட் சங்கங்களும் தங்களது மண்ணில் தான் சச்சினின் 200 வது டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
இது குறித்து ராஜிவ் சுக்லா கூறுகையில் இந்தியாவிலுள்ள பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் வரலாற்று சிறப்பு மிக்க சச்சினின் 200 வது டெஸ்ட் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து வருகின்றன. இதில் கொல்கத்தா மும்பை கடும் போட்டியில் உள்ளன.
இதில் ஈடன் கார்டனில் ஒரு லட்சம் பேர் வரை காணலாம். வான்கடே மைதானத்தில் 65 000 பேர் வரை பார்க்க முடியும். இதனால், போட்டியை எங்கு நடத்துவது என பி.சி.சி.ஐ இன்னும் முடிவு செய்யவில்லை.
அதேநேரம் கான்பூரில் 30 000 ரசிகர்கள் மட்டும் தான் அமரமுடியும் என்பதால் இங்குள்ள கிரீன் பார்க் மைதானத்தில் டெஸ்ட் நடத்துவதில் விருப்பம் இல்லை என்றும் இதற்குப் பதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியை நடத்த அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.
இணைய தளங்களில் நடிகர், நடிகைகள் பற்றிய ரகசியங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. நடிகர்– நடிகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் இணையத்தளங்களில் அவர்களே சொன்னதாக வெளியாவதும் பின்னர் அவர்கள் அவற்றை மறுப்பதும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
சில சமூக விரோதிகளே போலியாக நடிகர்கள்– நடிகைகள் பெயரில் வெப்சைட்களை தொடங்குகிறார்கள். அதில் நடிகர்கள், நடிகைகள் சொல்வது போன்ற கருத்துக்களை வெளியிடுகிறார்கள். படங்களையும் போடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பிரபல நடிகர்– நடிகைகள் பெயரில் போலியாக தொடங்கப்பட்டுள்ள வெப்சைட்கள் எத்தனை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை திரிஷா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி வெப்சைட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
திரிஷா பெயரில் மட்டும் 80க்கும் மேற்பட்ட போலி வெப்சைட்கள் இருக்கின்றன. அதில் அவர் தனது வாழ்க்கையை பற்றி சொல்வது போன்ற கருத்துக்களும் படங்களும் வெளியாகின்றன. அவரது தீவிரரசிகர்கள் சிலரே இதை தொடங்கி இருப்பது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதவிர தமிழ் திரை உலக பிரபல நடிகர்கள்– நடிகைகள் பலருடைய பெயரில் எத்தனை போலி வெப்சைட்கள் உள்ளன என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
திரிஷாவுக்கு அடுத்தபடியாக ஆர்யா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி வெப்சைட்கள் உள்ளன. இவரது பெயரில் இருக்கும் போலி வெப்சைகளின் எண்ணிக்கை 63.
நடிகர் சூர்யா பெயரில் 62, நடிகை சமந்தா பெயரில் 55, விஜய் பெயரில் 55 போலி வெப்சைட்கள் இருக்கின்றன. கமலஹாசன் பெயரில் 45, அவரது மகள் நடிகை சுருதி பெயரில் 42, நடிகை ஸ்ரேயா பெயரில் 40 போலி வெப்சைட்களும் இருக்கின்றன.
ரஜினிகாந்த் பெயரில் 31, தனுஷ் பெயரில் 23 வெப்சைட்கள் உள்ளன. இந்த போலி வெப்சைட்களில் அவ்வப்போது வெளியிடப்படும் கருத்துக்களும், புகைப்படங்களும், போலி வீடியோகாட்சிகளும் நடிகர், நடிகைகளை பெருமளவில் பாதிக்கின்றன.
தேவை இல்லாத கருத்துக்களால் நடிகர்– நடிகைகள் மறுப்பு தெரிவிக்கவும் திரை உலகினர் சைபர்கிரைம் போலீசாரை நாட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. போலி வெப்சைட்கள் குறித்து நடிகை திரிஷா கூறியதாவது..
இதுபோன்ற போலி வெப்சைட்கள் மூலம் தவறான தகவல்களால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனது ரசிகர்கள் என்னைப் பற்றி நன்றாக அறிவார்கள். அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நான் அளிக்கும் பேட்டிகளில் சரியான கருத்துக்களை மட்டுமே தெரிவிக்கிறேன்.
வேலையற்ற சிலர் போலி வெப்சைட்டுகளை வைத்திருக்கிறார்கள். இதில் வெளியாகும் கருத்துக்கள், படங்களால் தேவை இல்லாத பிரச்சினைகள் உருவாகலாம். எனவே இதுபோன்ற வெப் சைட்களை உடனே நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
நடிகர் ஆர்யா இதுகுறித்து கூறும்போது, இதுபோன்ற மோசடி வெப்சைட்களால் வெளியாகும் செய்திகளை கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. பலர் இதுபோன்ற போலி வெப்சைட்கள் பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.
நான் இதுவரை பேஸ்புக், டுவிட்டர் எதிலும் இல்லை. ஆனால் பல வெப்சைட்களில் என் பெயரில் கருத்துக்களை, படங்கள் வெளியாகின்றன. அவர்கள் இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என விரும்புகிறேன் என்று ஆர்யா கூறினார்.
இந்திய, ராஜஸ்தான் மாநிலம் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் பாபு லால் நகர் என்பவர் பண்ணை மற்றும் கிராமப்புற தொழில்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.
இவர் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் தன்னை தாக்கி கற்பழித்து விட்டதாக காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ம் திகதி மந்திரி பாபுலால் நகரை சந்திக்க சென்றேன். அப்போது என்னை ஒரு அறையில் அடைத்து துன்புறுத்தி என்னை அவர் கற்பழித்து விட்டார் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னரே அப்பகுதி காவல்துறையில் புகார் தெரிவித்தபோது அவர்கள் அதை பதிவு செய்யவில்லை.
பிறகு அவர் நேரடியாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதையடுத்து நீதித்துறையின் அறிவுரைப்படி மந்திரி பாபுலால் நகர் மீது கற்பழிப்பு மற்றும் துன்புறுத்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்பு தாதி ஒருவரை கொலை செய்தது உள்ளிட்ட இரு வழக்குகளில் அசோக் கெலாட் அரசை சேர்ந்த இருமந்திரிகள் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் புதிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஒரு பொதுக்கூட்டத்தின் போது அந்த பெண்ணை சந்தித்தது உண்மை. ஆனால் இதில் அரசியல் சதி நடந்து இருக்கிறது என்று இந்த புகாரை மந்திரி பாபுலால் நகர் மறுத்து இருக்கிறார். அந்த பெண் இதுபோன்று முன்பு ஒருவரை மிரட்டி பணம் பறித்து சென்று இருக்கிறார் என்றும் மந்திரி அப்போது தெரிவித்தார்.