இந்திய நடிகைகளில் அதிக கவர்ச்சியாக இருக்கும் நடிகை யார் என்பது பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தி நடிகை கத்ரீனா கைப் அதிக ஓட்டுகள் பெற்று முதலாவதாக வந்தார். உடல் அமைப்பு, தோற்றம், வசிகரம் அனைத்திலும் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகையாக அவர் இருக்கிறார்.
வெளிநாட்டு கடற்கரையில் கத்ரீனா கைப் நீச்சல் உடையில் சுற்றி திரிந்த ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த படங்களை யாரோ திருட்டுத்தனமாக எடுத்து பரவ விட்டதாக கூறப்பட்டது.
இரண்டாவது இடம் பிரியங்கா சோப்ராவுக்கும் மூன்றாவது இடம் தீபிகா படுகோனேவுக்கும் கிடைத்துள்ளது. கரீனா கபூரும் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளார்.
இந்தியாவில் தினமும் 4700க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. World Vision India என்ற தன்னார்வ நிறுவனமே இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த நிறுவனம் ஒரு நாட்டில் மக்கள் மருத்துவத்துக்காக செய்யும் செலவு, அவர்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதிகள், அவர்களின் வாழ்வியல் எதிர்பார்ப்பு, இனப்பெருக்க விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்டு உலகளவில் ஆய்வு நடத்தியது.
இந்த அறிக்கையின் முடிவில் குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில் 176 நாடுகளில் இந்தியா 135 இடத்தில் உள்ளது.
இந்தியாவில் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு 7க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர்.
இந்தியர்கள் தங்கள் சேமிப்பில் 62 சதவிகிதத்தை மருத்துவத்துக்காக செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். 1000 பெண்களில் 86 பேர் வரை 15-19 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இந்தியா முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 4700 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். மருத்துவத்தில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி பெரிய அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் கதாநாயகனாக நடித்து, சுந்தர் சி. இயக்கிய படம் மதகஜராஜா. இதில் விஷாலுக்கு ஜோடிகளாக அஞ்சலியும், வரலட்சுமியும் நடித்து இருக்கிறார்கள். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படம் முடிவடைந்து 8 மாதங்களாக வெளிவராததால் படத்தை வெளியிட விஷால் முன்வந்தார்.
இதற்காக ஒரு பெரும் தொகை கொடுத்து அந்த படத்தை வாங்கி தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
ஜெமினி நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்த 3 படங்களில் வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நஷ்டத்தை சரி செய்த பிறகே படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று வினியோகஸ்தர்கள் கூறினார்கள். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த பிரச்சினை காரணமாக கடந்த 3 நாட்களாக தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையில் அவுஸ்ரேலியாவை சேர்ந்த சந்தானம் மதகஜராஜா படத்துக்காக தன்னிடம் வாங்கிய 60 லட்சம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதகஜராஜா படத்தை வருகிற 10ம் திகதி வரை வெளியிட தடை விதித்தார். மதகஜராஜா படத்துக்கு பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த படத்தை தயாரிப்பாளரிடமே விஷால் திருப்பிக்கொடுத்து விட்டார்.
வருகிற 13ம் திகதி படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு ஜெமினி நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து திருட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் காவல் கட்டமைப்புக்களை மீறி பாதுகாப்பு வேலியை ஏறிக் குதித்து கடந்த திங்கள் கிழமை இரவு ஒரு நபர் உட்புகுந்துள்ளார்.
அரண்மனையில் உள்ளே இருக்கும் அரசத் தலைவர் சமூகமளிக்கும் தர்பார் அறையில் இந்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். பொதுவாக பகல் நேரத்தில் இந்த அறை பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும்.
இந்த நபரோடு வந்த மற்றொருவர் அரண்மனைக்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது அரச குடும்பத்தினர் யாரும் அரண்மனையில் இல்லை.
கடந்த 1982ம் ஆண்டு மைக்கல் பாகன் என்ற ஒரு நபர் ராணியின் படுக்கையரை வரை உள்ளே புகுந்து ராணியுடன் பேச முயன்றார். ராணியார் தனது காவலாளிகளை உஷார் படுத்தியவுடன் அவரும் கைது செய்யப்படார்.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற மாட்டார் என ரவிசாஸ்திரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், 200வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்று விடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சச்சின் கடந்த 2014ம் ஆண்டு லோட்ஸ் டெஸ்ட் போட்டி வரை விளையாடுவார் என்று முன்னாள் அணித் தலைவரும், வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில் சச்சின் எந்நேரத்திலும் ஓய்வு பெற மாட்டார் தொடர்ந்து விளையாடுவார்.
அடுத்த ஆண்டு லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்திய கிரிக்கெட் சபையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனது ஓய்வு குறித்து அவசரப்படவில்லை என சச்சின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் தாய் ஒருவர் கதவை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். இங்கிலாந்தை சேர்ந்த 2 வயது குட்டிப் குழந்தையின் பெயர் லூயிஸ் ஹிஸ்டன்.
இவர் செஷைர் நகரில் உள்ள ரன்கான் என்ற பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகின்றார். இக்குட்டிப் குழந்தையை ஆரம்பப் பள்ளியில் சேர்த்து விட்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அரை மைல் தூரம் உள்ளது.
லூயிஸின் தாயார் சமந்தா கானர் தன் மகளை முதல் நாள் பள்ளியில் சேர்த்து விட்டு வந்துள்ளார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அவரது மகள் திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
அப்படியே அதிர்ச்சியான சமந்தா என்னவென்று விசாரித்த போது தன் மகள் பள்ளியிலிருந்து தானாகவே வந்தது தெரியவந்துள்ளது. பள்ளியில் சமந்தா விட்டு வந்ததும் மெதுவாக வெளியே வந்து அப்படியே நடையாக வீட்டுக்கு வந்துவிட்டார்.
வழியில் ஒரு கால்வாய், பாலம், போக்குவரத்து நிறைந்த சாலைகள், சுரங்கப்பாதை, குறுகிய வனப்பகுதி என அனைத்தையும் நிதானமாக வேடிக்கை பார்த்தபடி போயுள்ளார் இந்தச் சிறுமி.
பத்திரமாக வீடு வரை வந்து விட்ட அவளைப் பார்த்து அவளது அம்மாதான் பயந்து போய் விட்டார். இதுகுறித்து சமந்தா கூறுகையில் எனது மகள் காணாமல் போனது பள்ளியை விட்டு வெளியேறியது எதுவுமே பள்ளிக்கூடத்தி்ல் யாருக்கும் தெரியவில்லை.
அவ்வளவு கவனக்குறைவாக இருந்துள்ளனர். அத்தனை பேரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும என்று கோபமாக கூறியுள்ளார்.
லூயிஸின் தந்தை ஜான் ஹில்டன் கூறுகையில் எனது மகள் தவறானவர்கள் கையில் சிக்கியிருந்தால் என்னாகியிருக்கும்.. நினைக்கவே பயமாக இருக்கிறது.
வழியில் இருந்த கால்வாயில் இறங்கியிருந்தால் நினைக்கவே படபடப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
தங்கள் ஜனாதிபதியின் தகவல்களை ஒட்டுக் கேட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டுமென பிரேசில் அதிரடியாக அறிவித்துள்ளது.
பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப்பின் டெலிபோன் பேச்சு மின்னஞ்சல் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் என்எஸ்ஏ ஊடுருவி உளவு பார்த்ததாக பிரேசில் குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து பிரேசில் உளவுத் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப் மற்றும் மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நியோட்டோ ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை என்எஸ்ஏ ஒட்டுக் கேட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் மின்னஞ்சல்களையும் அமெரிக்க உளவு நிறுவனம் உளவு பார்த்துள்ளது. இவ்வாறு செய்தது ஏன்? என்பதற்கு அமெரிக்கா முழு விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அடுத்த மாதம் 23ம் திகதி ஜனாதிபதி ஒபாமாவை சந்திப்பதாக இருந்த திட்டத்தையும் ஜனாதிபதி தில்மா ரத்து செய்து விட்டதாக பிரேசில் ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதேபோன்று மெக்சிகோவும் விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கணவருடன் வசித்த பெண் தற்போது தனக்கொரு மனைவியை தேடி வருகிறார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள காசியாபாத்தை சேர்ந்தவர் நகினா. இவரது கணவர் காலீத். ஸ்பெயின் நாட்டில் காலீத் பணிபுரிகிறார்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மனைவி நகினாவை வந்து பார்த்து செல்வார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் நகினாவுக்கு குழந்தை இல்லை. மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் படி கணவர் காலீத் வற்புறுத்தினார்.
இதையடுத்து மகப்பேறு மருத்துவரை அணுகினார் நகினா. இவரை பரிசோதித்த உள்ளூர் டாக்டர் நகினாவை பெரிய மருத்துவமனைக்கு செல்லும் படி அறிவுறுத்தினார். கராச்சி மருத்துவமனையில் நகினாவை பரிசோதித்த டாக்டர்கள், அவரிடம் ஆண் தன்மை அதிகம் உள்ளதாக தெரிவித்தனர். எனவே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் படி அறிவுறுத்தினர். இதற்கு ஏற்றார் போல் நகினாவின் முகத்தில் முடிகள் வளர்ந்துள்ளது.
இந்த விஷயத்தை கணவர் காலீத்திடம் தெரிவித்தார். இதை கேள்விப்பட்டது முதல் காலீத் நகினாவை பார்க்க வரவில்லை. நகினாவிடம் பெற்ற வரதட்சணையை காலீத் குடும்பத்தினர் திரும்ப கொடுத்து விட்டனர்.
கிடைத்த பணத்தை வைத்து நகினா தற்போது காசியாபாத் பேருந்து நிலையத்தில் டயர் கடை நடத்தி வருகிறார். தனியார் மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நகினா தற்போது “உஸ்மான் அக்ரம்” என, பெயரை மாற்றிக்கொண்டார். இந்த பெயரில் அடையாள அட்டையையும் பெற்று விட்டார். தனக்கேற்ற பெண்ணை தற்போது தேடி வருகிறார்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமணம் நாளை சென்னையில் நடக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் நடிகர் பிரபு நடித்த பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
ஆரம்ப நாட்களிலிருந்தே தமிழ் உணர்வாளராகவும் தமிழருக்கு எதிரான நிகழ்வுகளுக்கு திடமாகக் குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்தார் சீமான். குறிப்பாக ஈழப் பிரச்சினையில் உறுதியாகக் குரல் கொடுத்தார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்த பிறகு, அவரது தம்பிகளுள் ஒருவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
இலங்கை தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் சீமான். இந்த நோக்கத்துக்காகவே நாம் தமிழர் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். பின்னர் வேலூர் பொதுக் கூட்டத்தில் அதை அரசியல் கட்சியாகவும் மாற்றினார். கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடியோடு மண்ணைக் கவ்வ சீமானின் அனல் பறந்த பிரச்சாரமும் முக்கிய காரணம்.
சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அரணையூர். அங்கு செந்தமிழன்-அன்னம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த சீமானுக்கு, 2 சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் காளிமுத்து-மனோகரி தம்பதியின் மகள் கயல்விழியை நாளை திருமணம் செய்து கொள்கிறார். மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள அரங்கத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
சீமான்-கயல்விழி திருமணம் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் இணைந்து செய்துள்ளனர். திருமண விழாவில் அரசியல் பிரமுகர்களும் திரை உலகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.
இந்திய ஜெய்ப்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமியை, குற்றவாளியின் 8 வயது மகனுக்கே திருமணம் செய்து வைக்குமாறு தீர்ப்பளித்த ஊர் பஞ்சாயத்தார் மற்றும் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூரில் இருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ளது கேஷவ்புரா பகுதி. அப்பகுதியில் வசித்து வரும் ஏற்கனவே மணமான 40 வயது ஆண் ஒருவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆனால், நடந்த சம்பவம் பற்றி போலீசில் தகவல் தெரிவிக்காத ஊரார், பஞ்சாயத்தைக் கூட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளியின் 8 வயது மகனுக்கு திருமணம் செய்துவைத்து விடும்படி தீர்ப்பளித்துள்ளனர்.
ஆனால், ஊர் பஞ்சாயத்தின் தீர்ப்பை அச்சிறுமியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனராம். இதனை தனக்கு சாதமாகப் பயன் படுத்திக் கொண்ட குற்றவாளி மீண்டும் ஒருமுறை அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பஞ்சாயத்தாரின் தீர்ப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றி தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சிறுமியின் பெற்றோரை மகாவீர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளிக்க உதவி செய்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதும் சிறுமியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சனல் ஒழுங்கு முறை அமைப்பு.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சனல்.
இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட விஜய் டிவி நிறுவனம் மீது நடிகை ரஞ்சிதா ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அத்தோடு, சம்பந்தப்பட்ட காட்சிகள் உண்மையானவை அல்ல மாஃபிங் செய்யப்பட்டவை எனவும் விளக்கம் அளித்திருந்தார்.
இது குறித்து டிவி தன்னாட்சி ஒழுங்கு முறை அமைப்பின் முன்பு ஆஜராகி ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சிலில் புகார் தெரிவித்திருந்தார் ரஞ்சிதா.
இந்தப் புகாரை விசாரித்த நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான கவுன்சில் ஸ்டார் விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு இண்டியானா நகரில் பல்பொருள் அங்காடிக்கு சென்ற 2 இந்தியர்கள் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கொலையான இருவரின் பெயர் ஜந்தர் பாட்சா (55 வயது), பவன் சிங் (22) என்பதாகும். அமெரிக்காவின் வடக்கு இன்டியானா நகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு இவர்கள் இருவரும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கச் சென்றனர்.
அப்போது, முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களிர் ஒருவன் இவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார். துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் கொலையானவர்களின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடிய போலீசார் ஒருவனை கைது செய்துள்ளனர்.
அவனது பெயர் கெவின்மூர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வடக்கு அமெரிக்க பாஞ்சாபி அசோசியேசன் கண்டனம் தெரிவித்துள்ளது. சீக்கியர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற் பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 41 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இவர்கள் 41 பேரும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை காங்கேசன்துறை நீதவான் நீதிமன்றினால் 34 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்த மீனவர்கள், தமது படகு மீண்டும் தமக்கு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை இந்தியாவுக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.