உலகில் மிகப்பெரிய எரிமலை கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு!!

undersea-volcano-advancing-flow-sulfur-rks-zoom

உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமு மசிஃப் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த எரிமலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பரப்பளவில் இங்கிலாந்து தீவுகளை அல்லது நியூமெக்சிகோ மாகாணத்தை இது ஒத்துள்ளது. உருவாகிய சில மில்லியன் வருடங்களிலேயே செயலிழந்து போன இந்த எரிமலை 310,798 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக உள்ளது.

உலகில் உள்ள செயல்படும் எரிமலைகளிலேயே பெரியதாகக் கருதப்படுகின்ற ஹவாய் தீவில் இருக்கும் மௌனா லோவா 5,179 சதுர கி.மீ பரப்பளவுதான் கொண்டது. இதனுடைய அளவு தமு மசிஃபைக் கணக்கிடும்போது 2 சதவிகிதம்தான் இருக்கும்.

தமு மசிஃபின் அளவு மட்டுமின்றி, அமைப்பும் சிறப்பு பெறுகின்றது. இதன் முகட்டின் உயரம் கடல் மேற்பரப்பிலிருந்து 6,500 அடிக்குக் கீழும், அடிப்பரப்பு நீண்டு பரந்தும் காணப்படுகின்றது. இதனால் அப்போது எரிமலைகள் வெடித்துச் சிதறியதில் தோன்றிய லாவா உலகின் மற்ற எரிமலைகளைப் போல் உயரமாகப் படியாமல் நீண்ட தூரம் பரவியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.

இதுநாள் வரை, ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிமலையின் அமைப்பு குறித்து உறுதி செய்துகொள்ள முடியாமல் இருந்தார்கள். ஆனால், தற்போது உலகிலேயே பெரியதான ஒற்றை எரிமலை இது என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டன.

மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் தாய் ஓட்டம்!!

running

தமிழகத்தின் பள்ளிக்கரணை சத்தியா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வசந்தா (35). இருவரும் மேசன் வேலை பார்த்து வந்தனர். இவர்களது மகளுக்கும் திண்டிவனத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.

இதனால் அவர் வருங்கால மனைவியை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வந்தார். அப்போது வசந்தாவுடன் பார்த்தசாரதி சகஜமாக பேசி பழகினார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

வருங்கால மனைவியை பார்ப்பது போல் வசந்தாவுடன் உறவை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக திடீரென வசந்தா மாயமானார்.

இது குறித்து சேகர் பள்ளிக்கரணை பொலிசில் புகார் செய்தார். விசாரணையில் நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளை பார்த்தசாரதியுடன் வசந்தா ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது.

இது பற்றி அறிந்ததும் புதுப்பெண் அதிர்ச்சியில் உள்ளார். இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடிவெறியில் வீட்டை பூட்டிச் சென்றார் தாய் : பசியால் குழந்தைகள் பலி!!

alcohol

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் புறநகர் பகுதியை சேர்ந்த பெண் லீ யான் 22 வயதான இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். அத்துடன் 3 மாத கர்ப்பிணியும் கூட.

இவரது கணவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு 1 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 16 வயதிலேயே போதைக்கு அடிமையான லீ யான், குழந்தைகளை சரிவர கவனிப்பதில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

இதனால் வீட்டுக்குள் இருந்த குழந்தைகள் உணவு, தண்ணீர் இல்லாமல் சுருண்டு இறந்து விட்டனர். அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிரேத பரிசோதனையில் குழந்தைகள் பட்டினியால் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் லீ யானை கைது செய்தனர்.

சிரியா மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது : மன்மோகன் சிங்!!

manmohan

சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் ஜி20 மாநாடுகளின் கூட்டம் நடக்கிறது.

இதில் கலந்து கொண்டு பேசிய போதே, மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுத்தால் அங்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சிரியா விவகாரம் தொடர்பாக ஜி20 நாடுகளின் தலைவர்கள் இடையே ஒத்த கருத்து ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமாவில் 20 கோடி இழந்து விட்டேன் : பவர் ஸ்டார் சீனிவாசன்!!

power star

மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளிவந்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதாக கூறினார். பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த பேட்டி வருமாறு..

நான் யாரையும் ஏமாற்ற வில்லை. சில துரோகிகள் என்னை பழிவாங்கி விட்டனர். பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கேயும் ஓடிப்போகவில்லை. தங்கள் வேலையை முடித்துக் கொடுக்க சிலர் பணம் கொடுத்தனர். அதை இன்னொருத்தரிடம் கொடுத்தேன். அவர் ஏமாற்றி விட்டார். மோசடி வழக்கில் சிக்கிய போது என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கூட எதிரியாகி விட்டனர்.

சினிமாவில் நடிக்க வந்தேன். நிறைய பேர் என்னை ஏமாற்றினர். 20 கோடி வரை சினிமாவில் இழந்து விட்டேன். அந்த இயக்குனர்கள் யார் என்பதை சொல்ல விரும்பவில்லை. நான் சிறையில் இருந்த போது 8 கோடியில் கட்டிய ஆஸ்பத்திரியை சிலர் சூறையாடினர். பொருட்களையெல்லாம் அள்ளிச் சென்றனர். ஜெயிலுக்கு போனவனெல்லாம் குற்றவாளிகள் இல்லை.

வெளியில் இருப்பவனெல்லாம் நல்லவனும் இல்லை. ஜெயில் வாழ்க்கை கஷ்டமாக இருந்தது. என் இடத்தில் இன்னொருத்தர் இருந்து இருந்தால் தற்கொலை செய்து கொண்டு இருப்பார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். சினிமாவில் நிறைய பேரை தம்பி என்றுதான் அழைப்பேன். ஜெயிலில் இருந்த போது அவர்கள் யாரும் என்னை வந்து பார்க்கவில்லை.

நடிகர் பிரசாந்த் மட்டும் விசாரித்தார். ஒருத்தனுக்கு கஷ்டம் வந்தால் கூட இருக்கனும். அது தான் நட்பு என்னை வந்து பார்க்காதவர்கள் இதை உணர வேண்டும். இந்த மாதம் நான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாகிறது. இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார்.

தேர்தலில் குறிப்பிட்ட அணிக்கு ஆதரவா : நடிகர் விஜய் விளக்கம்!!

vijay

நடிகர் விஜயின் தலைவா படம் சர்ச்சைகளில் சிக்கி பிறகு ரிலீசானது. தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் தனது பெயர் இழுக்கப்பட்டுள்ளதாக விஜய் கூறினார். தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை நடக்கிறது. இதில் மூன்று அணிகள் மோதுகின்றன. இதில் ஒரு அணியை தான் ஆதரிப்பதாக வதந்திகள் பரவியுள்ளன என்றும் எந்த அணியையும் நான் ஆதரிக்க வில்லை என்றும் விஜய் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..

நான் ஐதராபாத்தில் நடக்கும் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குறிப்பிட்ட ஒரு அணியை நான் ஆதரிப்பதாக வதந்தி பரவியுள்ளது. பலர் என்னிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட வண்ணம் உள்ளனர். நான் எந்த அணியையும் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டு அணிகளிலும் என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் உள்ளனர். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நான் பொதுவானவன். இந்த தேர்தலில் வெற்றி பெறும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

7வது மாடியிலிருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த குழந்தை!!

y

கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் 7வது மாடியிலிருந்து தவறி விழுந்த 17 மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
Overlea Boulevard பகுதியின் Don Mills வீதியருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடி பால்கனியிலிருந்து 17 மாத ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்தது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் குழந்தை இக்கட்டான ஆனால் நல்ல நிலைமையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு சந்தேகப்படும்படியான காரணமெதுவும் தெரியவில்லை என்றும் ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை நாற்காலியில் ஏறி பல்கனி கிராதியின் மேலாக விழுந்திருக்கலாமா என்ற கோணத்தில் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடுமையான காயங்களுடன் சிறுவன் வைத்தியசாலையில் உள்ளான்.

3 அணிகள் மோதும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் : பொலிஸ் பாதுகாப்புடன் இன்று!!

ele

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 4 மணிவரை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 832 பேருக்கு மட்டுமே ஓட்டு போட தகுதி உள்ளது. ஓட்டுப்பதிவில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தலில் மூன்று அணிகள் மோதுகின்றன. தலைவர் பதவிக்கு கே.ஆர்., கலைப்புலி தாணு ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கே.ஆர்.அணியில் டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் துணை தலைவர் பதவிக்கும் டி.சிவா, ஞானவேல் ராஜா, செயலாளர் பதவிக்கும் ஆர்.ராதா கிருஷ்ணன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை தேவயாணி, ஏ.எல்.அழகப்பன், சோழ பொன்னுரங்கன், சமீலாநாசர், எடிட்டர் மோகன், கே.முருகன், கே.ராஜன், டி.டி.ராஜா, சவுந்தர பாண்டியன், விஜயகுமார், கே.பாலு, சித்ரா லட்சுமணன், எஸ்.எஸ்.துரை ராஜ், காஜாமைதீன், எச்.முரளி, பி.மதன், வேதா, பிரமிட் நடராஜன், ஜாகுவார் தங்கம், விஜயமுரளி, ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நிற்கின்றனர்.

கலைப்புலி தாணு அணியில் பவித்ரன், கதிரேசன், துணை தலைவர் பதவிக்கும் சங்கிலி முருகன், தேனப்பன் செயலாளர் பதவிக்கும், புஷ்பா கந்தசாமி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அமுதா துரைராஜ், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், ஆர்.மாதேஷ், கிரிதிலால் நாக்பால், ராதாரவி, மனோஜ்குமார், தங்கர்பச்சான், கபார், கருணாஸ், தாகா, கோவை தம்பி, வெங்கடரமணி, சந்திர பிரகாஷ் ஜெயின், ராகவா, சி.பாஸ்கர், தங்கராஜ், பழனிவேல், ரிஷிராஜ், பாலாஜி, என்.ஜி.முருகேஷ் ஆகியோர் மோதுகின்றனர்.

மூன்றாவது அணியில் செயலாளர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், துணை தலைவர் பதவிக்கு பட்டியல் கே.கே.சேகர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ்மணி, மன்னன், ஷக்தி சிதம்பரம், மங்கை அரிராஜன், எம்.திருமலை, திரு என்ற கே.திருஞானம், குண்டேச்சா, வி.செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

14 மாதங்களாக விக்கி கொண்டே இருக்கும் மனிதரின் சோக கதை (வீடியோ)!!

14 மாதங்களாக விடாத விக்கலால் அவஸ்தைப்பட்டு வருகிறார் டேனியல் என்ற நபர். அயர்லாந்தை சேர்ந்தவர் டேனியல் கிளவ்(வயது 37). இவர் கடந்த 2012ம் ஆண்டு மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.

அத்துடன் பீர் மற்றும் ஸ்பிரிட்டை ஆசை தீர குடித்து மகிழ்ந்துள்ளார்.
அப்போது திடீரென விக்கல் ஏற்பட்டது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேரம் ஆக ஆக 7 நொடிக்கு ஒருமுறை விக்கல் தொடர்ந்து வந்தது.

இதனால் பீதி அடைந்தவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார்.
இருப்பினும் குணமாகவில்லை தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருப்பதால் மூச்சுவிட முடியாமல் சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறாராம்.

எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டும் குணமாகாமல் அவஸ்தைப்படுகிறாராம். இவருக்கு வயிற்றையும், மார்பையும் பிரிக்கும் தசையிலும் பாதிப்பு உள்ளது, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

கடந்த 14 மாதமாக விக்கலில் தவித்து வருகிறார் டேனியலுக்கு, இதுவரையிலும் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை விக்கல் வந்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இன்னும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்பது தான் சோகமான விடயம்.

ரசிகர்களை விசில்போட வைத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்!!

siva

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் சிவகார்த்திகேயன் போஸ் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவருடன் ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்துமாதவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று சென்னையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இப்படம் வெளியான அனைத்து சென்டர்களிலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.

இப்படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். இந்த பாடல் இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஏற்கெனவே பிரபலமாகியிருந்தாலும் திரையரங்கில் பார்க்கும்போது அனைவரையும் எழுந்துநின்று ஆட்டம் போட வைத்திருக்கிறது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

சிவகார்த்திகேயனை தன்னுடைய தம்பியாக ஏற்றுக்கொண்ட தனுஷ் இப்படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க. இப்படம் 350 சென்டர்களில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

சிகரெட் மது போல இணையமும் ஒரு போதை : ஆய்வில் தகவல்!!

Hand holding a Social Media 3d Sphere

இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகரெட், மது போல இணையமும் ஒரு போதை என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நெட் சென்டருக்கு போய் இணையதளங்களை உபயோகித்தவர்கள் இன்றைக்கு உள்ளங்கைகளில் மொபைல் போன் மூலம் இணையத்தை உபயோகிக்கின்றனர். ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்குவதோடு, மெயில், சட்டிங் என பலவிதங்களில் இணையத்தை உபயோகிக்கின்றனர்.

இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரிடம் சமீபத்தில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.

ஒரு நாள் இணைய இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், பலருக்கும் பதைபதைப்பு ஏற்படுகிறது என்றும் அதனால் வாழ்க்கையே விரக்தியாகி விடுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இணையம் இல்லாவிட்டால் மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர்.

இணைய இணைப்பு இல்லை என்றால் ஒருவர் அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் ஆகியனவற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் உள்ள லீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் காத்ரியோனா மோரிசன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் மன அழுத்தத்துக்கும் இணையத்தில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

4 மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகிறது இரண்டாம் உலகம்!!

arya

மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகம். ஆர்யாஅனுஷ்கா நடித்துள்ள இப்படத்துக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் உண்டு. அந்த வகையில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வந்த இந்த படத்தை பி.வி.பி. சினிமாஸ் 60 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது. படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்களாம். ஆந்திரா மற்றும் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ஜோர்ஜியாவில் படமாக்கப்பட்ட படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இப்படத்தின் மூலம் ஹரிஸ் ஜெயராஜுடன், செல்வராகவன் முதன்முறையாக கைகோர்த்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தை விட இரண்டாம் உலகம் படத்தில் பத்து மடங்கு அளவிற்கு கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் நடந்து வருகிறதாம்.

இந்நிலையில் இரண்டாம் உலகம் திரைப்படம் தீபாவளியன்று வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி, ஜார்ஜியன், ரஷ்யன், உஸ்பெக், துர்கிஷ் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

ஏற்கெனவே தீபாவளி ரேஸில் அஜீத்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா படங்கள் உள்ளன. தற்போது அந்த போட்டியில் இரண்டாம் உலகம் திரைப்படமும் இணைந்துள்ளது.

இந்திய பெண் எழுத்தாளர் ஆப்கானில் சுட்டுக்கொலை : தலிபான்கள் அட்டூழியம்!!

taliman

இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா பனர்ஜி 1989ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தொழிலதிபர் ஜானாபாஸ் கானை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.

எழுத்தாளரானா சுஷ்மிதா 1995ம் ஆண்டு தப்பியோடும் தலிபான்கள் பற்றி புத்தகம் ஒன்றை எழுதினார். இந்தியாவில் நன்றாக விற்ற அந்த புத்தகம் பின்னர் 2003ம் ஆண்டு பாலிவுட் திரைப்படமாக வெளிவந்தது.

இதனால் சுஷ்மிதா மீது கோபம் கொண்ட தலிபான்கள் அவரை கொல்ல முயற்சித்தனர். இதனால் அவர் இந்தியாவிலேயே வாழ்ந்தார். சமீபத்தில் அவர் கணவருடன் சேர்ந்து வாழ ஆப்கானிஸ்தானின் கரானாவுக்கு சென்றார். சயீத் கமலா என்ற பெயரில் மருத்துவப்பணியாளராக அங்கு வேலை பார்த்துவந்தார்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு புகுந்த தலிபான்கள், கணவரையும் மற்றவர்களையும் கட்டிப்போட்டிவிட்டு சுஷ்மிதா பனர்ஜியை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். பின்னர் அருகிலிருந்த ஒரு மத பள்ளியில் அவரது உடலை திணித்து வைத்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட விரும்பும் இலங்கை!!

cricket

பாகிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர்.

அப்போது நடந்த மோதலில் 6 பொலிஸ்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேர் பலியாகினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இலங்கை அரசு கிரிக்கெட் அணியை அனுப்புவதை நிறுத்தியது.

இதேபோல் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச போட்டிகள் எதுவும் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. பாகிஸ்தானுக்கான சர்வதேச போட்டிகள் அனைத்தும் வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் விளையாட இலங்கை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மந்திரி ஆஷன் இக்பாலிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் இலங்கை அணி பாகிஸ்தானில் சென்று விளையாடும் என்றும் ராஜபக்ச கூறியுள்ளார்.

ராஜபக்ச கூறியதுபோல் நடந்தால் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் அணி இலங்கையாக இருக்கும்.

சிரியாவில் நிறைவேற்றப்பட்ட கொடூர தண்டணை (வீடியோ)!!

சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட இராணுவத்தினரை புரட்சிப்படையினர் தலையில் சுட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புரட்சிபடையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர்.

பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர் துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர்.

மலையாள திரையுலகை புறக்கணிக்கும் நயன்தாரா!!

nayan

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு அறிமுகமானாலும் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு நயன்தாரா ரொம்பவும் தயக்கம் காட்டியே வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் கூட மலையாள இயக்குனர் மதுபாய் இயக்கத்தில் பிரித்விராஜ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது.

ஆனால், இந்த வாய்ப்பை நயன்தாரா தட்டிக் கழித்துவிட்டார். ஆனால் மலையாள ரசிகர்களோ நயன்தாராவின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நயன்தாரா தமிழில் நடித்த ஆரம்பம், ராஜா ராணி ஆகிய படங்கள் முடிவடைந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. மேலும் இது கதிர்வேலன் காதல், அனாமிகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி இயக்கும் ஒரு படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.