நியூசிலாந்தில் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல்நாடாகவும் உலகில்14வது நாடாகவும் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை 31 ஒருபால் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துகொள்வதாக அரச உள்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
நாட்டின்1955 ஆண்டு திருமணச் சட்டத்துக்கு திருத்தம் கொண்டுவந்துள்ளதன் மூலம் கடந்த ஏப்ரலில் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டப்படி அங்கீகரித்தது.
இந்த சட்டத்துக்கு கிறிஸ்தவ செயற்பாட்டாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
ஆனால், ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த அநீதிக்கு இந்த சட்டம் முடிவுகட்டியுள்ளதாக திருமண சமத்துவத்துவதற்கான செயற்பாட்டாளர்கள் வாதிட்டனர்.
வேறுநாடுகளைச் சேர்ந்த ஒருபால் ஜோடிகளும் நியூசிலாந்தில் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 1,000 ஜோடிகள் நியூசிலாந்து செல்லவுள்ளனர்.
இந்தியில் ரீமேக்காகும் ரமணா படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் அசின்.
சஞ்சய் லீலா பன்சாலி முருகதாஸின் ரமணா படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்.
கப்பார் என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமார்.
கப்பாரில் கதாநாயகியாக தமன்னாவை நடிக்க வைக்க விரும்பினர். அந்த நேரத்தில் வெளியான ராமையா வஸ்தாவையாவும், டி டேயும் படத்தில் ஸ்ருதியின் திறமையைப் பார்த்தவர்கள் தமன்னாவுக்குப் பதில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தனர்.
ரமணாவில் சிம்ரன் நடித்த சின்ன வேடத்தில் அசின் நடிக்கிறார்.
அதேபோல் 2007 ல் வெளியான வெல்கம் படத்தின் சீக்வெலை வெல்கம் பேக் என்ற பெயரில் எடுக்கிறார்கள்.
சீக்வெல் வெல்கம் பேக்கில் அக்ஷய்க்குப் பதில் ஜான் ஆபிரஹாமை கமிட் செய்திருக்கிறார்கள்.
அவருக்கு ஜோடியாக நடிக்க அசினை கேட்டிருந்தனர். கப்பார் படத்தைப் போலவே ராமையா வஸ்தாவையா மற்றும் டி டே படங்களைப் பார்த்த வெல்கம் பேக்கின் தயாரிப்பாளர்கள் அசினுக்குப் பதில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நடிகர் மீது பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது. 15 வயது சிறுமியை இந்த நடிகர் நர்சரி ரைம்ஸ் பாடி மயக்கி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதை விடக் கொடுமை அந்த சிறுமியிடம், பாடசாலை சீருடை அணிந்து கொள்ளுமாறு கூறி அதற்குப் பிறகு நாச வேலையில் ஈடுபட்டுள்ளார் அந்த நடிகர்.
இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. இப்போது அந்த சிறுமிக்கு வயது 39 ஆகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் கூறுகையில்,
என்னை பலாத்காரம் செய்த நபர் பிரபலமான தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகர் ஆவார். எனக்கு 15 வயதாக இருக்கும்போது ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றார்.
பின்னர் எனக்கு மது கொடுத்தார். அதன் பிறகு என்னிடம் பாடசாலை சீருடையை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகு Ride A Cock Horse To Banbury Cross என்ற நர்சரிப் பாடலை பாடியபடி என்னை மயக்கி ஆழ்நிலை மயக்கத்திற்குக் கொண்டு சென்று பின்னர் பாலியல் உறவு வைத்துக் கொண்டார்.
இதுகுறித்து நான் உடனடியாக பொலிஸில் புகார் கொடுக்கவில்லை. ஆனால் சமீபத்தி்ல இந்த நடிகர் மீது வேறு ஒரு புகார் எழுந்ததைத் தொடர்ந்து எனக்குத் தைரியம் வந்து இப்போது இதை நான் கூற முன்வந்தேன்.
அப்போது நடந்ததில் எனக்கும் பாதி பங்குண்டு என்பதால் நான் புகார் தர உடனடியாக நினைக்கவில்லை. ஆனால் எனக்கு நேர்ந்தது கொடுமை என்று இப்போது நான் உணர்ந்துள்ளேன்.
அப்போது நான் மைனர் பெண். எனவே எனக்கு நேர்ந்த கொடுமைக்கு அந்த நடிகர்தான முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் அப்பெண்.
தற்போது இப்பெண் திருமணமாகி அரசு வேலையில் இருக்கிறார். 3 குழந்தைகளுக்குத் தாயாவார். சம்பந்தப்பட்ட நடிகர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை.
கருத்து கணிப்புகளுக்கு அமைய எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாணத்தில் 19 தொகுதிகளிலும், மத்திய மாகாணத்தில் 21 தொகுதிகளில் 20 தொகுதிகளிலும் வடக்கில் 14 தொகுதிகளில் 4 தொகுதிகளிலும் அரசாங்கம் வெற்றிபெறும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.
வடக்கில் உள்ள தேர்தல் தொகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 தொகுதிகளை கைப்பற்றும் ஏனைய 05 தொகுதிகளில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது.
தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் 14 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 54 தொகுதிகளில் 54 கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.
சுதந்திரமாகவும் அமைதியான முறையிலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
ஷேவாக், கம்பீர், யுவராஜ்சிங், சாஹிர்கான், ஹர்பஜன்சிங் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய இளம் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டி, ஜிம்பாப்வே தொடர் ஆகியவற்றில் இளம் வீரர்களை கொண்ட அணி முத்திரை பதித்தது.
2011–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த ஷேவாக், காம்பீர், சாஹிர்கான், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் போன்ற வீரர்கள் மோசமான ஆட்டம் காரணமாக படிப்படியாக அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டனர். அவர்கள் இடத்தில் தவான், ரோகித்சர்மா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர்குமார், அஸ்வின் சிறப்பான நிலையில் உள்ளனர்.
இந்த முன்னணி வீரர்கள் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது என்பது கேள்வி குறியானதே. அவர்கள் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் கம்பீர், யுவராஜ்சிங், சாஹிர்கான் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று இந்திய அணி முன்னாள் கெப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–
எந்த ஒரு வீரரையும் அணியில் இருந்து முழுமையாக வெளியேற்ற முடியாது. ஷேவாக், காம்பீர், யுவராஜ்சிங், சாஹிர்கான் போன்ற வீரர்கள் இல்லாத அணி 2011–ம் ஆண்டில் இல்லை. ஆனால் அவர்கள் தற்போது அணியில் இல்லை எனவே நாளைக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.
அவர்கள் அனைவருமே சிறந்த வீரர்கள் தான். உலக கோப்பையை வென்று கொடுத்தனர். அவர்கள் இந்திய அணியில் மீண்டும் இணையும் ஆர்வத்தில் உள்ளனர். இதற்காக அவர்கள் கடுமையாக போராட வேண்டும். அவர்களால் அணியில் மீண்டும் இடம் பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடும் உழைப்பு, உடல் தகுதி மூலமே அவர்கள் அணியில் இடம் பெற முடியும்.
ஷேவாக் மிகச்சிறந்த தொடக்க வீரர். சாஹிர்கான் 300 விக்கெட் வரை நெருங்கி உள்ளனர். யுவராஜ்சிங் உலக கோப்பையில் முத்திரை பதித்தவர். இவர்கள் நீண்ட காலம் அணியில் இல்லாமல் இருக்க முடியாது.
கம்பீர் இங்கிலாந்து கவுண்டியில் விளையாட எடுத்த முடிவு சரியானதே. எந்த ஒரு வீரரும் பாடம் கற்பதன் மூலமே அணிக்கு திரும்ப முடியும். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம், கஹாரியா மாவட்டத்தில் உள்ள கத்யானி ஸ்தன் என்ற ஊரில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. நேற்று விடுமுறை என்பதால் இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் இன்று காலை ஊர் திரும்புவதற்காக அங்குள்ள ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது 2வது பிளாட்பாரத்தில் பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது.
அதில் ஏறுவதற்காக முதல் பிளாட்பாரத்திலிருந்து குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த தண்டவாளத்தில், சாகர்சா பாட்னா ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரயில் மிக வேகமாக வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மோதியது. இதில் பலர் உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மரண ஓலமிட்டனர்.
ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பானது. இதற்கிடையே, எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் தண்டவாளத்தை கடப்பதை கவனிக்காமல் வேகமாக வந்த அந்த ரயிலின் சாரதி மீது கோபமடைந்த பயணிகள், அவரை இன்ஜின் பெட்டியிலிருந்து வெளியே பிடித்து இழுத்தனர்.
அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ரயில் நிலைய அதிகாரிகள் தலையிட்டு அவரை மீட்டனர். இருப்பினும் ஆத்திரம் தீராத பயணிகள் அவர்களை சிறைபிடித்தனர்.
இந்நிலையில், பயணிகள் பலியான தகவல் அறிந்த உள்ளூர் பொலிசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். வன்முறை கூட்டத்தை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் ஏ9 வீதியிலிருந்து திருநகா் நோக்கி செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளும் டிப்பா் ரக வாகனமும் மோதியமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எனத் தெரியவருகிறது. இவ்விருவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முழு ரேஸ் உடையில் தனது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 1000 பைக்கில் நேற்று சென்னையை ஜாலியாக வலம் வந்தார் நடிகர் அஜித் குமார்.
தான் விரும்பியதைச் செய்ய சினிமா இமேஜ், இரசிகர்கள் வளையம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர் அஜித்.
விரும்பினால் வெளிநாட்டில் ரேசுக்குப் போவார், அல்லது உள்ளூரில் ரேஸ் போவார், க்யூவில் நின்று வாக்களிப்பார், அச்சரப்பாக்கம் பக்கம் போய் குட்டி விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்களைப் பறக்க விட்டுக் கொண்டிருப்பார்.
´நடிப்பு என் தொழில், தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் அந்தத் தொழிலால் பாதிக்கக் கூடாது´ – இது அஜித் அடிக்கடி சொல்லும் விஷயம்.
சமீபத்தில்தான் புதிதாக பிஎம்டபிள்யூ1000 ஆர்ஆர் என்ற புதிய பைக்கை ஏக விலை கொடுத்து வாங்கினார் அஜித். தனது சொந்த உபயோகத்துக்கு அவர் வாங்கிய இந்த பைக்கை விஷ்ணுவர்தன் இயக்கும் ஆரம்பம் படத்திலும் பயன்படுத்தியுள்ளார்.
இந்த பைக்கில் நேற்று சென்னையை ஒரு வலம் வந்தார் அஜித். முழு ரேஸ் சூட்டில் அந்த பைக்கை தனது அச்சரப்பாக்கம் மினி ஹெலிபேட் வரை ஓட்டிச் சென்றார். உடன் அவரது நண்பரும் சென்றார்.
ரேஸ் சூட்டில் இருந்ததற்காக எங்கும் இறங்காமல் செல்லவில்லை அவர். வழியில் கும்பகோணம் டிகிரி காபி என்ற கடையில் நிறுத்தி காபி குடித்தார்.
அவரை திடீரென்று பார்த்ததில் இளைஞர்களும் பொதுமக்களும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர். தன்னைத் தேடி வந்து பேசிய அத்தனை பேரிடமும் ஜாலியாகப் பேசி விடைப் பெற்றுச் சென்றார் அஜீத்.
ஆரம்பத்துக்கு அட்டகாசமான டீசர் மாதிரி அமைந்தது அஜித்தின் இந்த அதிரடி பைக் ட்ரிப்.
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண தேர்தல் முறைகேடுகள் தொடர்பில், இதுவரை 137 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் இருந்தே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குருநாகல் மாவட்டத்தில் இருந்து 43 முறைப்பாடுகளும், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 24 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது.
இதேவேளை அரச சொத்துக்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் 28 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் குறித்து 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமக்கு தேர்தல் தொடர்பிலான 134 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 25ம் திகதி வரையில் புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
வகுப்புக்களையோ அல்லது கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஐந்தாம் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது.
மாதிரிப் பரீட்டைகள், கருத்தரங்குகள், வகுப்புக்கள், மீட்டல் வகுப்புக்கள் உள்ளிட்ட எந்தவொரு பரீட்சை வழிகாட்டல் நடவடிக்கைகளையும் நாளை முதல் பரீட்சை இடம்பெறும் நாள் வரையில் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை மீறிச் செயற்படுவோர் தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவா படம் குறித்து ஊடகங்களில் வந்த கட்டுக் கதைகளுக்கு பதிலடி தரும் விதமாக தலைவா படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதல்வருக்கு நன்றி என்று நடிகர் விஜய் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
இன்று வெளியாகியுள்ள அந்த அறிக்கையை விஜய் பிஆர்ஓ பிடி செல்வகுமார் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கை இவ்வாறு அமைந்துள்ளது,
“தலைவா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் திகதி தமிழகமெங்கும் வெளியாகிறது. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 9-ம் திகதி வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம், சில அச்சுறுத்தல்கள் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினமாக, நான், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், இரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மீடியாக்களில் வந்த பல கட்டுக் கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தலைவா திரைப்படம் சுமுகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
பல வேலைகளுக்கு நடுவிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு பொறுமை காத்த இரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தலைவா படத்தை குடும்பத்தோடு பார்த்து இரசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீட்டர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று மாலை வெடித்து சிதறியது. சுமார்5,000 மீட்டர் தூரத்திற்கு மேலே சாம்பலை பீய்ச்சி அடித்தது கண்கவர் ஆட்சியாக அமைந்தது.
இருந்தும் எரிமலை சாம்பல் அந்த நகரின் பெரும்பாலான பகுதியில் பறந்ததால் ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் லைட் போட்டு சென்றன.
இதிலிருந்து வெளியேறிய எரிமலைக்குழம்பானது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வழிந்தோடியது. இந்த ஆண்டில் சகுரஜிமா எரிமலை 500-வது முறையாக நேற்று வெடித்து சிதறியது என்று கூறப்படுகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என பாகிஸ்தான் அரசு இன்று தற்காலிக தடை விதித்தது.
தீவிரவாத தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த தண்டனையை தீர்ப்பு வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர்தான் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் உத்தரவிட்டதால், தண்டனை பெற்ற கைதிகள் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நவாஸ் ஷரீப், பாகிஸ்தானில் பெருகிவரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் விதமாக, மரண தண்டனையை நிறைவேற்ற நீதிபதிகள் வழங்கிய சலுகை காலத்தை கடந்த ஜூன் மாதம் ரத்து செய்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் தீவிரவாத செயல்களில் தற்போது ஈடுபடுபவர்களை பயமுறுத்தி, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அவர் கருதினார்.
நவாஸ் ஷரீப்பின் இந்த உத்தரவுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை பொருட்படுத்தாத நவாஸ் ஷரீப் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 2மரண தண்டனை கைதிகளை வரும் 21 அல்லது 22ம் திகதி தூக்கிலிட சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தற்போது வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் பாகிஸ்தான் திரும்பியதும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர் தண்டனைகளை நிறைவேற்றலாம்.
அதுவரை மரண தண்டனையை நிறைவேற்ற காலநிர்ணய மற்ற தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என்று பாகிஸ்தான் அரசு இன்று அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான மம்நூன் உசேன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த (செப்டம்பர்) மாதம் 8ம் திகதி தற்போதைய ஜனாதிபதி சர்தாரி பதவி விலகுகிறார். அதுவரை இந்த தற்காலிக தடை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.