எல்லோருக்கும் தலையினுள் தான் மூளை உள்ளது. ஆனால் இந்த அதிசயக்குழந்தைக்கோ மூக்கின் மேலே மூளை .இதனால் மிகவும் பரிதாபகரமான தோற்றத்துடன் காணப்பட்ட இந்த குழந்தையை இக்குழந்தையின் பெற்றோர் பெருங்கவலையடைந்தனர்.
குழந்தையின் இக்குறைபாட்டை தாயின் கருவறையில் 5 மாத கருவாக இருக்கும் போதே அவதானிக்க முடிந்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்தப் பெற்றோர் குழந்தை பிறந்ததும் மருத்துவர்களின் உதவியை நாடினர் . பொஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு சத்திர சிகிச்சை மூலம் மூக்கில் இருந்த மூளையை , குழந்தையின் மண்டயோட்டிற்குள் உரிய இடத்தில் பொருத்தி விட்டனர்
மிகவும் நுணுக்கமாக நடந்த இந்த சிகிச்சையில் டாக்டர்கள் வெற்றியும் கண்டனர் .இந்தக் குழந்தையும் தற்சமயம் ஆரோக்கியமாக இருக்கிறதாம்..இதனால் இப்போது தான் இக்குழந்தையின் பெற்றோர் நிம்மதியாக மூச்சு விடுகின்றனராம்.
வட மாகாணத்தில், 1000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க வடமாகாண சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனமும் தொழிற் பயிற்சி அதிகார சபையும் இந்த பயிற்சிகளை வழங்கவுள்ளன.
நான்கு மாதங்கள் கொண்ட இந்த பயிற்சி நெறியில் வீட்டு மின் இணைப்பு, மேசன் பயிற்சி, தச்சுவேலை, குழாய்பொருத்துதல் போன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றுள்ளது.இப்பயிற்சி நெறிக்காக வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் இருந்தும் இளைஞர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் யாழ்.மாவட்டத்தில் இருந்து 225 பேர் இப்பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
மருதங்கேணி, காரைநகர், கைதடி ஆகிய இடங்களில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளதுடன் மருதங்கேணியில் 75 பேருக்கும், கரைநகரில் 50 பேருக்கும், கைதடியில் 100 பேருக்கும் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
இப்பயிற்சி நெறியினைப் பெறுபவர்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் 7000 ஆயிரம் ரூபாவும் வடமாகாண சபை 3000 ஆயிரம் ரூபாவும் வழங்க இணங்கியுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்.கிளைத் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி நெறி எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும்; இதில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்த இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் பலவீனமான வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக இலங்கையுடனான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் யஸ்வந்த் சிங் சுட்டிக் காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் அடையாளத்திற்கான அச்சுறுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹல்லால் நேருவின் எல்லை தொடர்பான கொள்கைகளினால் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் முறுகல் நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் கிடைக்கப் பெற்று 66 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்தியா எல்லை நிர்ணயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு தெஹிவளையில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில் நேற்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தலைவர் இரா. சம்பந்தன், பொதுசெயலாளர் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் எம்பி, சுமந்திரன் எம்பி, கே. சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் தலைவர் மனோ கணேசன், உதவி பொதுசெயலாளர் சண். குகவரதன், ஊடக செயலாளர் பாஸ்கரா சின்னத்தம்பி, நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது 13ம் திருத்தம், வட மாகாணசபை தேர்தல் ஆகியவை தொடர்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டன.
அதேபோல் சிங்கள முற்போக்கு மற்றும் ஜனநாயக கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
வவுனியா பசார் வீதி, பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நேற்று மாலை (25) வவுனியா கொரவப்பொத்தானை வீதியில் இருந்து பசார் வீதியை நோக்கி திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளை பின்னால் வந்த மோட்டர் சைக்கிள் மோதியதில் தாயும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோட்டர் சைக்கிளை செலுத்திவந்த கணவர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.
பின்னால் வந்து மோதிய மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்தவர் மது போதையில் வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது.
மது போதையில் வந்த இளைஞனை கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமேல் மாகாணத்தில் வில்பத்து சரணாலயத்தை ஒட்டிய புத்தளம் மாவட்டத்தில், குருநாகல் வீதியில் ஆனமடுவ, கல்லடி பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி உயிரிழந்த ஒருவரின் சடலத்தை வீதியில் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமது பிரதேசத்தில் யானைகள் பொதுமக்களின் குடிமனைப் பிரதேசங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்துவருவதாகவும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் அரசாங்கத் தரப்பில் அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.
இதன்போது நிலைமையை கேட்டறியச்சென்ற பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபர் மொஹமட் மாலிக்கையும் அவரது வாகன ஓட்டுநரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
யானை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரக்தியடைந்திருந்த காரணத்தினால், அங்கு சென்ற அரசாங்க அதிகாரியான தன்மீது தாக்குதல் நடத்தியதாக உதவி அரசாங்க அதிபர் மலிக் கூறினார்.
அரசாங்கம் கடந்த காலங்களில் பல இடங்களில் யானைகளைத் தடுக்க மின்சார வேலிகளை அமைத்திருந்தாலும் மின்சார வேலிகள் இல்லாத இடங்களினூடாக குடிமனைகளுக்குள் புகுந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய சம்பவத்திற்கு பின்னர், மற்ற இடங்களிலும் மின்சார வேலி அமைக்கும் பணிகளை வனவிலங்குத் துறை அதிகாரிகள் விரைவுபடுத்துவார்கள் என்று தன்னிடம் கூறியிருப்பதாகவும் புத்தளம் உதவி அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.
இந்தப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் யானை தாக்கி 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதே பிரதேசத்தில் கருவெலகஸ்வெவ என்ற இடத்தில் ஒன்றரை மாதங்களுக்கு முன்னரும் ஒருவர் யானை அடித்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கே உள்ளது என, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
டாக்டர் மொய்தீன்பிச்சை இந்தியாவில் பிரதமர் ஆகும் தகுதி ஜெயலலிதா, நரேந்திர மோடி, ராகுல்காந்தி இவர்களில் யாருக்கு அதிகம் என்று கருத்து கணிப்பு நடத்தினார். கருத்து கணிப்பு முடிவுகளை இன்று சென்னையில் வெளியிட்டார். அவர் கூறியதாவது,
சவுதிஅரேபியா, கட்டார், அரபுநாடுகள், ஏமன், பக்ரைன், அவுஸ்திரேலியா, குவைத், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் ஈ.மெயில் மற்றும் தொலைபேசி மூலம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 75 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்குதான் பிரதமர் ஆகும் தகுதி அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, 2-வது இடத்தை நரேந்திர மோடியும், 3-வது இடத்தை ராகுல் காந்தியும் பெற்று உள்ளனர்.
2013 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி தொடக்கம் 31 ம் திகதிவரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 25 ம் திகதி இடம்பெறும் எனவும், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளுக்காக 293,117 பரிட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும், புலமைப் பரிசில் பரிட்சைக்காக 328 ,614 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த பரீட்சைகளில் இடம்பெற்ற முறைகேடுகளை தவிர்த்து இம்முறை பரீட்சையை தக்க முறையில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசிற்கு சொந்தமான பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற மூவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால், லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, ஒருதொகை பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
டி 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பாவிக்கப்படும் ரவைகள், 120 மில்லி மீற்றர் துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல பொருட்கள் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கோச்சைடையான் படத்தில் இராட்சத சுறாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சண்டை போடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையான். 3 டியில் வெளியாகும் இந்தப் படத்தின் காட்சிகள் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் இரகசியம் காக்கிறார்கள்.
அதே போல, படத்தின் ஸ்டில்கள், ட்ரைலர்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை. படத்தின் வெளியீட்டு திகதி குறித்தும் தெளிவாக எந்த அறிவிப்பும் இல்லை.
இந்த நிலையில் படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி ஒரு பிரமாண்ட சுறா மீனுடன் மோதுவது போன்ற காட்சியை ஹாலிவுட் தரத்துக்கு நிகராக உருவாக்கியிருக்கிறார்களாம்.
ஆனால் இதில் பெரும்பகுதி கிராபிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்சி இரசிகர்களை மிரளவைக்கும் என கோச்சடையான் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கோச்சடையானில் ரஜினி இரண்டு வேடங்களில் தோன்றுகிறார். அப்பா கதாபாத்திரத்தின் பெயர் கோச்சடையான். மகன் பெயர் ராணா. ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
13வது திருத்தச் சட்ட மூலம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாது உள்ளவாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்ட மூலத்தை ஒரு சூதாட்டமாக அரசாங்கம் நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
ஜூன் மாதம் 12ஆம் திகதி கட்சி தலைவர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே வடக்கு தேர்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவிற்கு சமூகமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த கடிதத்தின் மூலமாக 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் அந்த கடிதத்திற்கு இதுவரையில் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என திஸ்ஸ கூறினார்.
இதேவேளை ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போயுள்ள சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அறிக்கையிடப்படவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படம் பொன் மாலை பொழுது. காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.சி.துரை டைரக்ஷன். அவர் கூறியதாவது: இப்படத்தில் தந்தை மகளுக்கு இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சி படமாக்கப்பட்டது. தந்தையாக அருள்தாஸ், மகளாக காயத்ரி நடித்தனர்.
வாக்குவாதம் முற்றிய காட்சியில் காயத்ரியை அறைவதுபோல் அமைந்தகாட்சியில் உண்மையிலேயே காயத்ரியை கன்னத்தில் அறைந்துவிட்டார் அருள்தாஸ். எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் காயத்ரி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரிடம் அருள்தாஸ் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகே அவர் சமாதானம் அடைந்தார். இப்படத்தை அமிர்த கௌரி தயாரிக்கிறார்.
திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன். குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதிலேயே என் முழு நேரத்தையும் செலவிடுவேன், திருமணமாகப் போகும் எல்லா நடிகைகளும் இயக்குநர் உதவி இல்லாமல் சொந்தமாகச் சொல்லும் டயலாக் இது.
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அப்படித்தான் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள், 2 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் கோடம்பாக்கத்துக்கு படையெடுப்பார்கள். ஸ்ரீதேவி முதல் சினேகா வரை யாரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.
ஆனால், ரீஎண்ரியில் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ அக்கா, அண்ணி வேடங்கள் தான். சிலருக்கு அம்மா வேடத்துக்கான வாய்ப்புகள் கூட கதவைத் தட்டும். அதைப் பார்த்து பயந்த நடிகைகள், பின்னங்கால் பிடரியில்பட வீட்டுக்கே ஓடிவிடுவார்கள்.
இதுவரைக்கும் இருக்கிற நல்ல பெயரை வைத்து காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைப்பார்கள். நாம் கேட்டால் மட்டும், நல்ல கேரக்டருக்காக வெயிட் பண்றேன் என்பார்கள். தமிழ்நாடே தூக்கிவைத்துக் கொண்டாடிய சிம்ரனுக்கு நடந்த கதை ஊர்உலகம் அறிந்த ரகசியம்.
இதனால்தான் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தார் ஜோ. சூர்யாவுக்காக ஒரே ஒரு விளம்பரப் படத்தில் மட்டும் அவருடன் ஜோடியாக நடித்தார்.
தற்போது திருமணமான பிறகும் சினேகாவுக்கு வாய்ப்புகள் குவிவதைப் பார்த்து, ஜோதிகாவுக்கும் நடிப்பு ஆசை துளிர்விட்டிருக்கிறதாம். இன்றைக்கு டி.வி., பத்திரிகைகள் எதைப் பார்த்தாலும் எல்லா விளம்பரங்களிலும் பிரசன்னா – சினேகா ஜோடியாக இருப்பதைப் பார்த்து, நாமும் இப்படி நடித்திருக்கலாமே என்று சூர்யாவிடம் கேட்டதாகச் சொல்கிறார்கள்.
அதுக்கென்ன? இனிமேல் நடித்தால் போச்சு என சூர்யாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். தவிர, சினிமாவிலும் நடிக்கும் ஆசை இருப்பதை ஜோ தயக்கத்துடன் வெளிப்படுத்த, யோசித்த சூர்யா, நல்ல கேரக்டர்கள் என்றால் பார்க்கலாம் என சொல்லியிருக்கிறாராம்.
ஹரிதாஸ்-சினேகா, இங்கிலீஷ் விங்கிலீஷ்-ரீதேவி போல நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம் கிடைத்தால் சூர்யா – ஜோ இருவருக்கும் சம்மதமாம். குழந்தைகள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால் விரைவில் ஜோதிகாவை திரையில் பார்க்கலாம் என்கிறார்கள்.
சிறுமி ஒருவரை பாடசாலையில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துக்கப்பட்டுள்ளதாக புத்தளம், பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பல்லம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயதுடைவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி 17 வயதுடைய சிறுவன் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
கடந்த 22ஆம் திகதி தனியார் வகுப்பிற்குச் செல்வதாக வீட்டாரிடம் கூறிவிட்டு சென்ற சிறுமி, தொலைபேசியில் தனது காதலனை பாடசாலைக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் தனது காதலனை சந்தித்ததாகவும் அதன்போது காதலன் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரான சிறுவன் ஊரிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் சிறுவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சொர்க்கலோகத்தை “அமராவதி’ என்று அழைப்பர். இந்திரனும், இந்திராணியும் இந்த உலகை ஆட்சி செய்கின்றனர். சந்திரன், வாயு, வருணன், அக்னி போன்ற தேவர்களும் இங்கிருக்கின்றனர். யாகம் செய்தவர்கள், தீர்த்தயாத்திரை செல்பவர்கள், தானம், விரதம் மேற்கொள்பவர்கள் பிறவி முடிந்தபின் சொர்க்கத்தில் வாழ அனுமதிக்கப்படுவர்.
கற்பகவிருட்சம், ஐராவதம் யானை, உச்சிரவஸ் குதிரை, சயந்தம் என்னும் மண்டபம், நந்தவனம் என்னும் தோட்டம், காமதேனு, அமிர்தம், சிந்தாமணி என்பவை சொர்க்கத்தில் இருப்பதாகச் சொல்வர். மேனகா,ரம்பா, ஊர்வசி, திலோத்தமா என்னும் அப்சரஸ் பெண்களும் இங்கு வாழ்கின்றனர். நூறு அஸ்வமேத யாகம் நடத்தினால் ஒருவர் இந்திர பதவியை அடைந்து விடலாம் என்கின்றன புராணங்கள்.
ஐ.சி.சி. சம்பியன் கிண்ண 11 பேர் கொண்ட 2013 ஆம் ஆண்டுக்கான கனவு உலக அணியில் இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி சம்பியன் கிண்ண கனவு உலக அணிக்கு டோனி அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ் அணியில் இந்திய அணி சார்பாக டோனி, தவான், கோலி, ஜடேஜா மற்றும் புவனேஷ் குமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி சார்பாக ஜொனதன் ட்ரொட், ஜேம்ஸ் அண்டர்சன். பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பா உல்கஹ். நியூஸிலாந்து அணி சார்பாக மிச்செல் மெக்ளங்கன் மற்றும் தென்னாபிரிக்க அணி சார்பாக ரியன் மெக்ளரென் ஆகியோர் இம் முறை தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பன்னிரண்டாவது வீரராக இங்கிலாந்து அணியின் ரூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.