கனடாவில் இந்துக் கோவில் உடைப்பு – குற்றவாளிகள் கமராவில் பதிவு..

Canada

கனடாவில் இந்துக் கோவில் ஒன்று அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயண் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த 23-ம் திகதி சிலர் அடித்து உடைத்து சென்றுள்ளனர்.

இந்தநிலையில் அங்குள்ள இரகசிய கேமிராவில் இருவர் பேஸ்போல் மட்டையை வைத்துக்கொண்டு கோவிலின் ஜன்னல்களை உடைத்துவிட்டு மட்டையை தூக்கி எறிந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இது இன ரீதியிலான வெறுப்புணர்விலேயே நடந்து இருக்கலாம் என்று அங்குள்ள இந்துக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சர்ரே பொலிசார் இன ரீதியிலான வெறுப்பு உணர்வாக தோன்றவில்லை, இது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலாக தெரிவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு குடியுரிமை அமைச்சர் ஜெசன் கென்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் பலி..!

கட்டுநாயக்க – கொவின்ன கங்கையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தரம் 8இல் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து உங்களால் சிரிக்காமல் இருக்க முடியுமா? (வீடியோ)

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு உங்களால் சிரிக்காமல் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.

வட மாகாணத்திற்கும் புதிதாக தாவரவியல் பூங்கா..!

முப்பது வருட யுத்தம் நிறைவு பெற்ற வட மாகாணத்தில் புதிதாக தாவரவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.எதிர் வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தாம் இந்த பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது போக்கு அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்காற்றுகிறது. எனவே உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களை மேலும் அதிகரிப்பதற்கு தாம் உத்தேசித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹங்செல்லை ,ஹம்பாந்தோட்டை ,மிரிஜ்ஜவிலை ஆகிய பகுதிகளிலும் தாவரவியல் பூங்காக்கள்  அமைக்கப்படும் என்றும் இந்த பூங்காக்களுக்குத் தேவையான மிருகங்களை ஜப்பான் கொரியா சீனா தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் ஜயரத்ன ஹேரத் நேற்று முந்தினம் பேராதனை தாவரவியல் பூங்காவைப் பார்வையிடச் சென்றார் இந்த நிகழ்வின் போதே அமைச்சர் மேற்படி தகவலை தெரிவித்தார்.

கோயிலுக்குச் செல்வது ஏன்?

Hindu Temple

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், யாராயிருந்தாலும் கோயிலுக்குப் போனால் பலனுண்டு என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு.

ஆகமவிதிப்படி கட்டிய கோயில்களில் “ஓம்” என்ற பிரணவ மந்திரம் காற்று மண்டலத்தில் அதிர்வுறும் விதத்தில் அமைந்திருக்கும். ஒவ்வொரு அணுவிலும் அந்த மந்திர ஒலி பெரிய அளவில் கலந்திருக்கும்.

கருவறையில் இருக்கும் விக்ரஹத்திற்கு ஆறுகால பூஜையும், அபிஷேகமும் நடத்தும்போது, காற்று மண்டலத்தில் எதிர்மின்னோட்டம் அதிகரிப்பதோடு, காற்றுமண்டலம் ஈரப்பதம் அடைகிறது. இந்த மின்னோட்டம் பிராணவாயுவுடன் கலக்கிறது. அதை சுவாசிக்கும் போது இதயத்துடிப்பு, சீராகி ஆரோக்கியம் மேம்படுகிறது.

இயற்கை வளம் மிக்க ஆறு, மலை, கடல், அருவி, வனம், சோலை ஆகிய பகுதிகளில் எதிர் மின்னோட்டம் அதிகமாக இருப்பதால் தான், அங்கு செல்லும்போது நமக்கு புத்துணர்வு உண்டாகிறது. அங்கு தரப்படும் பிரசாதம் மூலம், உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இதை அனுசரித்துதான் அவ்வைப்பாட்டி “ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று அழகாக சொல்லி வைத்தார் .

இலங்கையில் உரப் பற்றாக்குறை: கவலையில் விவசாயிகள்

இலங்கையில் உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றார்கள்.

உரத்தின் விலை அதிகரித்ததையடுத்து, அரசாங்கம் மானிய விலையில் விவசாய சேவை நிலையங்களின் ஊடாக உரத்தை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகின்றது.

ஆயினும், இவ்வாறு வழங்கப்படுகின்ற உரத்தின் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வவுனியா வடக்கு ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வைரமுத்து பூபாலசிங்கம் கூறுகின்றார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, ஒரு ஏக்கருக்கு 106 கிலோ யூரியாவும், 30 கிலோ எம்.ஏ.பியும், 35 கிலோ டி.எஸ்.பியும் மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டது.

இப்போது யூரியா 64 கிலோவாகவும், பொட்டாஷ் 16 கிலோவாகவும், ஃபாஸ்பேட் 16 கிலோவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக பூபாலசிங்கம் கூறுகின்றார். இது விவசாயத் தேவைக்குப் போதாது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதேநேரம், நெல் பயிரிடுவதற்கு மட்டுமே விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படுகின்றது.

வெங்காயம் போன்ற மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகளுக்கு உரம் மானிய விலையில் வழங்கப்படுவதில்லை என்று கூறும் பூபாலசிங்கம் வெளிச்சந்தையில் உரத்தை வாங்குவதற்கும் வழியில்லை எனவும் கூறுகிறார்.

வெளிச்சந்தையில் உரம் கிடைப்பதில்லை என்றும் அதன் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக பூபாலசிங்கம் குறிப்பிடுகின்றார்.

முன்னர் ஒன்றுக்குப் பதினைந்து என்ற விகிதத்தில் விளைந்த வெங்காயம், உரம் இல்லாத காரணத்தினால், ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து என்ற விகிதத்தில்தான் அறுவடை செய்ய முடிகின்றது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

நாட்டின் உரத் தேவைகள் இன்னும் இறக்குமதியிலேயே தங்கியிருக்கின்றன. இதனால் விவசாயத் தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக நேர்ந்திருக்கின்றது.

உள்நாட்டில் உரத் தயாரிப்பு தேவையான மூலப் பொருட்கள் இருக்கிறது என்றும், இலங்கையிலேயே உர உற்பத்தியை மேற்கொள்ள முடியுமாக இருந்தால், இந்தப் பிரச்சினைகக்கு ஓரளவுக்கு தீர்வு காணக் கூடியதாக இருக்கும் என்று கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளாதரத் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

(BBC)

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பூங்காவன திருவிழா..!

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் பூங்காவன திருவிழா சிறப்பாக இடம் பெற்றது. இயற்கை வளங்களை கொண்டு தாயரிக்கப்பட்ட அழகிய பூஞ் சோலையில் விநாயகர் எழுந்தருளிய விநாயகருக்கு திருஊஞ்சல் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து தவில் நாதஸ்வர கச்சேரியும், வயலின் கச்சேரியும் இடம் பெற்றது. சிறப்பு நிகழ்வாக வான வேடிக்கைகள் முழங்க வவுனியா நகரின் பிரபல ஆசிரியர்களின் ஒன்றினைவில் சித்தி விநாயகர் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் சர்வ தேச இந்து இளைஞர் பேரவையினால் சிறப்பு பட்டி மன்றம் இடம் பெற்றது.

பெரிய புராணத்தில் பெரிதும் விஞ்சி நிற்பது ஆண்டவன் சோதனையா, அடியார் சாதனையா என்ற தலைப்பில் புதுகுடியிருப்பு கலாசார உத்தியோகத்தரும் பண்டிதருமான வி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

ஆண்டவன் சோதனை என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியர் அ.லோகேஸ்வரனும் இந்து நாகரிக ஆசிரியர் சிவ.கஜனும் அடியார் சாதனை என்ற தலைப்பில் புவியியல் ஆசிரியர் எஸ்.எஸ். வாசனும் மூத்த கணித ஆசிரியர் ல .சதீஸ் அவர்களும் வாதாடினர். இறுதியில் ஆலயத்தின் நிர்வாக சபை தலைவர் இக் கலைஞர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிட தக்கதாகும்.

DSC01888

 

 

வடிவேலு படத்தின் தலைப்பு மாற்றம்..!

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சினிமாவை விட்டு விலகியிருந்த வடிவேலு, மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் நாயகனாக நடித்து வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நகைச்சுவை கலந்த மற்றொரு படத்தில், நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்திற்கு முதலில் கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்று நீண்ட தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

தற்போது படத்தின் தலைப்பு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்து. வடிவேலு, படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், இயக்குநர் யுவராஜ் தயாளன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு வசனங்களை ஆரூர்தாஸ் எழுதுகிறார்.

டி.இமானின் இசையமைப்பில், வாலி, புலமைப்பித்தன், நா முத்துகுமார் பாடல்களை எழுதுகிறார்கள்.

வவுனியா தெற்கு வலய மாணவர்களின் கள ஆய்வு செயற்பாடு நாளை ஆரம்பம்..!

chemistry

வவுனியா தெற்கு வலய கள கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு, தெற்கு வலய உயர் தர உயிரியல் பிரிவு மாணவர்களினால் பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்ட கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கள கற்கை நிலையத்தின் முகாமையாளர் ஏ. ஜெய்கீசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிரியல் பிரிவு மாணவர்களின் கள ஆய்வினை விருத்தி செய்யும் நோக்குடன் முதற் கட்டமாக வவுனியா தெற்கு வலயத்தின் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 35 மாணவிகளும் வவுனியா வடக்கு வலயத்தின் புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் 12 மாணவர்களும் இக் கள ஆய்வில் ஈடுபடவுள்ளனர்.

இவர்கள் நாளை வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள கடற்கரை சாகியத்தையும் அதனை அண்டிய பிரதேசத்தினையும் ஆய்விற்கு உட்படுத்தவுள்ளனர் என தெரிவித்தார்.

இதேவேளை, ஓமந்தை பிள்ளை நேய பாடசாலை செயற்பாடுகள் சிறந்த கற்றல் கற்பித்தல் சூழல் மற்றும்; அறிவூட்டல் செய்றபாடுகள் தொடர்பான கல்வி சுற்றுலா ஒன்றினை வவுனியா தெற்கு வலய கல்வி உத்தியோகத்தர்களும் பாடசாலை அதிபர்களும் மேற்கொள்ளவுள்ளனர்.

வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் தீருமதி செ. அன்ரன் சோமராஜா தலைமையில் எதிர்வரும் திங்கள் செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் திருகோணமலை, சம்மாந்துறை ஆகிய வலய பாடசாலைகளுக்கு செல்லும் இவர்கள் அப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் மற்றும் அறிவூட்டல் செயற்பாடுகளை பார்வையிடவுள்ளனர்.

இக்கல்வி சுற்றுலாவில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்வரும் சனிக்கழமை காலை 10.30 மணிக்கு முன்பாக வலயக் கல்வி அலுவலகத்தில் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

புத்தளம் அரசாங்கப் பணியாளர்கள் அமைதி ஊர்வலம்..!

இலங்கையில் புத்தளம் மாவட்டத்தில் அரச அதிகாரி ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அரசாங்க பணியாளர்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

உதவி அரசாங்க அதிபர் மாலிக் என்பவரும் அவரது வாகன ஓட்டுனரும் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தே இந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.

 பொதுமக்களுக்கு இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே தாம் இந்த அமைதி ஊர்வலத்தை ஏற்பாடு செய்ததாக கற்பிட்டி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரான முஹமட் ஜனாப் கூறினார்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பில் தான் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவரை பொலிஸார் கைது செய்திருப்பதாக தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி மாலிக் தெரிவித்தார்.

தனது உடல்நிலை தேறி வருவதாகவும், தனது ஓட்டுனரின் நிலைமையே மோசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

எவரும் தன்னை தாக்கியதற்கான காரணம் எதனையும் கூறவில்லை என்று கூறிய மாலிக் அவர்களிடம், யானைகள் பிரச்சினை தொடர்பில் மக்கள் ஆத்திரமடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா என்று கேட்டபோது, அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு பிரதேச செயலர் என்ற வகையில் தன்னால் அந்த விடயத்தில் செய்யக் கூடியவை மிகவும் குறைவே என்றும் அரசாங்க உயர்மட்டத்தில் ஒரு முடிவு எடுத்து செய்யப்பட வேண்டிய விடயங்களே அதிகம் இருப்பதாகவும் கூறினார்.

யானைகள் – மனிதன் முரண்பாடு என்பது இலங்கையில் அதிகரித்து வருகின்ற ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

putalam

வெள்ளத்தில் பலியானோரின் சடலங்கள் நூற்றுக்கணக்கில் எரிப்பு..!

வட இந்தியாவில் வெள்ளத்தில் பலியானவர்களை ஒட்டு மொத்தமாக எரிக்கும் பணிகள் நடக்கின்றன. வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் 800க்கும் அதிகமானோர் அங்கு இறந்துள்ளனர்.

மோசமான காலநிலையால் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து கோயில் நகரான கேதாரநாத்தில் குறைந்தபட்சம் 200 சடலங்களாவது ஒன்றாக எரிக்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருக்கும் நிவாரண முகாம்களில் தொற்று நோய்கள் ஏற்படும் ஆபத்துக் குறித்து தொண்டர் அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

வெள்ளம் ஆரம்பித்து 11 நாட்கள் ஆன பின்னரும், இமாலய மலையின் பல பாகங்களில் அகப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு லட்சம் பேர் வரையிலானோர் இதுவரை தமது இடங்களில் இருந்து வெளியெற்றப்பட்டிருக்கிறார்கள். மலைகளில் அகப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களையும், சுற்றுலாப்பயணிகளையும் மீட்பதற்காக இராணுவம் ஹெலிக்கொப்டரைப் பயன்படுத்துகிறது.

செவ்வாயன்று நடந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிக்கொப்டரின் விபத்தில் 20 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தராகாண்டில் இந்த வருடத்தில் மழைக் காலத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்ட கடுமையான மழை, கடந்த 80 வருடங்களில் பெய்த மிகவும் பெரிய மழையாகும்.

பெருக்கெடுத்த ஆறுகள், அந்த மாநிலத்தின் அனைத்துக் கிராமங்களையும் அடித்துச் சென்றுவிட்டன.

இலகுவில் சென்றடைய முடியாத பகுதிகளில் இருந்து பலியானவர்களின் எண்ணிக்கை கிடைக்கும் போது இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்க இராணுவத்திலிருந்து 80 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டம்..!

அமெரிக்க இராணுவத்தில் 2017க்குள் 80 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக செலவினங்களை குறைக்கும் வகையில், அமெரிக்க இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க இராணுவ தளபதி, ரேமான்ட் ஓடிர்னோ கூறியதாவது:

அமெரிக்காவில், நியூயார்க் உலக வர்த்தக கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஈராக் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், ஏராளமான இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜெர்மன் நாட்டின் ஏழு பகுதிகளில், 4,500 வீரர்கள் பணியில் உள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து, ஏராளமான வீரர்கள் அடுத்த ஆண்டு தாயகம் திரும்ப உள்ளனர்.

எனவே இராணுவ செலவை குறைக்கும் வகையில், வரும், 2017ம் ஆண்டுக்குள், 80 ஆயிரம் வீரர்களை குறைக்க உள்ளோம்.

இதன் மூலம் தற்போதுள்ள 5.7 லட்சம் வீரர்கள், 4.9 லட்சமாக குறைக்கப்படுவர். இவ்வாறு ரேமான்ட் கூறினார்.

பிரபாகரனோடு மன்னார் ஆயரை ஒப்பிட்டமைக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்..!

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும், புதிய பிரபாகரனாகவும் கத்தோழிக்க திருச்சபையின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை செயற்பட்டு வருகின்றார் என பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினை தொடர்ந்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உரிமை தொடர்பாகவும், தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் குரல் கொடுத்து வந்தார்.

தற்போது பொதுபல சேன என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தனர். தற்போது தமிழ் மக்கள் மீது அவர்களின் செயற்பாடு ஆரம்பித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்று முதல் இன்றுவரை தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றது. தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்குடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் செயற்பட்டு வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு ஒரு பக்க பலமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் செயற்பட்டு வருகின்றமையினை பொது பல சேன அமைப்பினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதன் எதிரொலியாக அரச தரப்பில இருந்து தொடர்ச்சியாக மன்னார் ஆயருக்கு எதிரான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதன் ஒரு அங்கமாக பொதுபல சேன என்ற பேரினவாத அமைப்பு கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயர் தமிழர் என்பதினால் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். மன்னார் ஆயருக்கு எதிராக குரல் கொடுக்க சிங்கள ஆயர்கள் முன்வர வேண்டும் என குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் எகோபித்த பிரதி நிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் ஆயர் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார். ஆன்மீக பணி செய்கின்றவர்கள் தன் மக்கள் சார்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் குரல் கொடுக்க கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

எனவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் அயருக்கு எதிராக பொது பல சேன அமைப்பு முன் வைத்துள்ள கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் நைஜீரியா, கென்யா பிரஜைகள் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நீர்கொழும்பு கடற்கரையில் வைத்து நைஜீரியா மற்றும் கென்யா நாட்டு பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தங்கியிருக்க இவர்களிடம் விசா இருக்கவில்லை என நீர்கொழும்பு சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

நீர்கொழும்பு சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாயாக மாறிய இளைஞர் – (வீடியோ இணைப்பு )

 

நாய்கள் மீதான அதிக பாசத்தால் பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் நாயாகவே மாறியுள்ளார்.

பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நாய்கள் என்றால் அதீத பிரியமாம். இதனால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நாயாகவே மாறியுள்ளார்.

இறந்த நாய் ஒன்றின் முகத்தை இவருக்கு பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ள நிலையில் அவரை “நாய் மனிதன்” என்றே அனைவரும் அழைக்கின்றனராம்.

d2 d1

43

கண்டியில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்த தாய்..!

5baby

கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 32 வயதுடைய கர்ப்பிணித் தாய் இன்று ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.

மடவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தாய்க்கு நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இவ் ஐந்து குழந்தைகளும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக கண்டி வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.