சொந்த மண்ணில் இந்தியாவிடம் கிண்ணத்தை இழந்த இங்கிலாந்து : சம்பியனானது இந்தியா!!

india

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி, 7ஆவதும் இறுதியுமான சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனானது.

பேர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் கடைசி அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகளிகள் பலப்பரீட்சை நடத்தின.

மழை காரணமாக தாமதமாக ஆரம்பமாகிய இப்போட்டி 20-20 போட்டியாக நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து களத்தடுப்பினைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இநதியாவின் ஆரம்ப வீரர்களாக தவான் – ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி 19 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ரோஹித் சர்மா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து தவானுடன் இணைந்து கொண்டார் கோலி. இவர்கள் இருவரும் இணைந்து விரைவாக ஓட்டங்களைக் குவித்து 50 ஓட்டங்களை இந்தியா பெற்றபோது தவான் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் தினேஷ் கார்த்திக் 6 ஓட்டங்கள், ரெய்னா 1 ஓட்டம் மற்றும் தோணி 0 என அடுத்தடுத்த விரைவாக ஆட்டமிழக்க இந்தியா தடுமாறியது. பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்த கோலியும் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் இறுதி நேரத்தில் 7ஆவதாக களமிறங்கிய ஜடேஜா 25 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்று இந்திய அணியை ஒரு வலுவான இலக்கினை நோக்கி கொண்டு சென்றார்.

இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் போபரா 3 விக்கெட்டுக்களையும் அண்டர்சென், ட்ரெட்வெல் மற்றும் ப்ரோட் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

தொடர்ந்து 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது. 2 ஓட்டங்களுடன் அணித் தலைவர் குக் வெளியேறினார். பின்னர் ட்ரொட் 20 ஒட்டங்களுடனும், ரூட் 7 ஒட்டங்களுடனும், பெல் 13 ஒட்டங்களுடனும் சிறிய இடைவெளியில் வெளியேற இங்கிலாந்து ஆட்டம் கண்டது.

இந்நிலையில் ஜோடி சேர்ந்த மோர்கன் மற்றும் போபரா இங்கிலாந்து நம்பிக்கை ஊட்டினர். ஒரு கட்டத்தில் 2.3 ஓவர்களுக்கு 20 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கினை இங்கிலாந்து அடைந்த நிலையில் இசாந்த் சர்மா அடுத்தடுத்த பந்தில் மோர்கன் மற்றும் போபரா ஆகியோரை வெளியேற்ற போட்டி இந்தியா வசமாக மாற ஆரம்பித்தது.

இதனையடுத்து ஜடேஜாவின் 19ஆவது ஓவர் போட்டியை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றது. இதில் பட்லர் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் இநதியா 5 ஓட்டங்களினால் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் சம்பியனாகியது. இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் ஏமாற்றமடைந்தது. பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரின் 6ஆவதும் இறுதியுமான அத்தியாயத்தில் இந்தியா சம்பியனான போது ஐ.சி.சியின் அனைத்து தொடர்களையும் கைப்பற்றிய தலைவராக தோணி மாறினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா தெரிவானார். இந்த தொடரின் நாயகனாக அதீர திறமையை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தெரிவு செய்யப்பட்டார்.

 

 

புதிய சாதனை படைத்தது ஸ்பெயின் கால்பந்து அணி..!

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன.

‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் அணி, நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவான தஹிதியை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே மிரட்டிய ஸ்பெயின் அணி 10–0 என்ற கோல் கணக்கில் தஹிதி அணியை எளிதில் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.

ஸ்பெயின் அணியில் பெர்னாண்டோ டோரெஸ் 4 கோலும், டேவிட் வில்லா 3 கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி புதிய சாதனை படைத்தது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்திய (FIFA) சர்வதேச போட்டியில் 10 கோல் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்பு அங்கேரி அணி தென் கொரியாவுக்கு எதிராக 9–0 என்ற கோல் கணக்கிலும் (1954 உலக கோப்பை போட்டி), எல் சால்வடோர் அணிக்கு எதிராக 10–1 என்ற கோல் கணக்கிலும் (1982 உலக கோப்பை போட்டி), யூகோசுலாவியா, சாய்ரே அணிக்கு எதிராக 9–0 என்ற கோல் கணக்கிலும் (1974 உலக கோப்பை போட்டி) வென்றதே சாதனையாக இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் புதிய சாதனை உலக படைத்தது ஸ்பெயின் கால்பந்து அணி…

வன்னி தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு..!

வன்னி பிரதேசத்தில் தொண்டராசிரியர்களாக கடந்த பல வருடங்களாக பணியாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு வலயத்தில் 86 பேருக்கும், துணுக்காய் வலயத்தில் 78 பேருக்கும், மடு வலயத்தில் 43 பேருக்கும், வவுனியா வடக்கு வலயத்தில் 24 பேருக்குமாக 231 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கல்வி வலயங்ளை சேர்ந்த 283 தொண்டராசிரியர்களுக்கும்; கிளிநொச்சியில் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மு.சந்திரகுமார், வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, ஜனாதிபதியியன் இணைப்பாளர்களான ச.கனகரத்தினம், பிரேமரத்தின சுமதிபால, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வட மாகாண ஆளுனரின் இணைப்பாளர் முகைதீன், வட மாகாண கல்விப்பணிப்பாளர் வ.செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

vavuniya Vavuniya1

பறக்கும் மோட்டார் சைக்கிள் – இங்கிலாந்து விஞ்ஞானிகளின் புதிய முயற்சி..!

Flying Motoer bike

 

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 முன்னோக்கி விசைகள் பொருத்தப்பட்டுள்ளது.

அதில் 2 முன்புறமும் 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன.95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது. இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது.

இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது. அப்போது, இந்த மோட்டார் சைக்கிள் சில மீட்டர்கள் உயரம் பறந்து சாதனை படைத்தது.

எதிர்காலத்தில் இந்த மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதை விளையாட்டு சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் உள்ள பேட்டரிகளை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டும். பறக்கும் மோட்டார் சைக்கிள் மூலம் 25 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்ல முடியும். இது மணிக்கு 32 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.9000 கோடியாக சரிவு..!

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசிய கணக்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்க ளின் கருப்பு பணம் ரூ.14,000 கோடியில் இருந்து ரூ.9000 கோடியாக குறைந்தது. கருப்பு பணத்தின் சொர்க்கமாக சுவிஸ் நாட்டு வங்கிகள் உள்ளன. இங்கு வாடிக்கையாளர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதால், பல்வேறு நாட்டினரும் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளனர். பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டாலும் எந்த நாட்டில் இருந்து எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பதை அந்நாட்டு ரிசர்வ் வங்கியாக செயல்படும் சுவிஸ் நேஷனல் பாங்க் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

இதன்படி, கடந்த 2006ம் ஆண்டில் இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் ரூ.41,000 கோடியாக (6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்) இருந்தது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து சுவிஸ் அரசுக்கு கருப்பு பண முதலை கள் பற்றி தகவல் தருமாறு நெருக்கடி கொடுக்கப்பட் டது. இதையடுத்து, கருப்பு பணம் பதுக்கல் குறையத் தொடங்கியது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் கருப்பு பணம் வெறும் ரூ.14,000 கோடியாக குறைந்தது. இது இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், ஜுரிச்சில் சுவிஸ் நேஷனல் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு ரூ.9000 கோடியாக(1.42 பில்லியன் சுவிஸ் பிராங்க்) குறைந்துள்ளது.

இதில் 1.34 பில்லியன் பிராங் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் நேரடியாக செய்துள்ள முதலீடு. மீதி 77 மில்லியன் பிராங், மறைமுகமாக வேறு நிறுவன பெயரில் செய்யப்பட்ட முதலீடு. அதே போல், உலகம் முழுவதிலும் இருந்து செய்யப்பட்டுள்ள முதலீடும் 1.4 டிரில்லியன் பிராங்க் ஆக குறைந்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற ரி.எம் சௌந்தரராஜனின் நினைவு நிகழ்வு!

tms

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற ரி.எம்.சௌந்தரராஜன் நினைவு நிகழ்வு சுத்தானந்தஇந்து இளைஞர் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலாநிதி அகளங்கன் தலைமை தாங்கினார் பிரதம விருந்தினராக கலந்த நெடுங்கேணி பிரதேச செயலாளர் பரந்தாமன் உரையாற்றியதோடு இனிமையாக பாடலையும் பாடியிருந்தார்.

கலாபூசணம் ஈழத்து சௌந்தரராஜன் இ.சிவசோதி மற்றும் கந்தப்பு ஜெயந்தன், என பலர் பாடல்களை பாடியிருந்தனர்.

 

இலங்கை அணிக்கு இங்கிலாந்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – கருணாதிலக்க அமுனுகம..!

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பிரித்தானிய அரசாங்கத்துக்கு எச்சரித்திருந்தது.

இந்தநிலையில் அங்கு இலங்கை அணிக்கு எதிராக மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அனுமுகம இதனை தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக சுலோகங்கள் காட்டப்பட்ட அதேநேரம் ஆட்டம் முடிந்த பின்னர் இலங்கை அணியினர் பயணம் செய்த பஸ் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மறிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு பிரிவினர் பிரசன்னமான நிலையிலேயே இந்த அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இலங்கை அணிக்கு இங்கிலாந்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.

கனடாவின் CALGARY பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்..!

Calgary, Alta என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளம் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது.

சுமார் 75,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

Calgary, நகரில் ஓடும் இரண்டு ஆறுகளும் கடந்த 2005ல் ஏற்பட்ட வெள்ள அளவைவிட ஐந்து மடங்கு அதிகமான தண்ணீர் ஓடியதாக கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு தேவையான உணவு, சுகாதாரமான குடிநீர் முதலியவை உள்ளூர் நிர்வாகம் மூலம் தொடர்ந்து அளிக்கபப்ட்டு வருகிறது.

மின்சார நிலைமை சீர்செய்ய போர்க்கால அடிப்படையில் வேலைகள் நடந்து வருகிறது.

தற்போது வெள்ள நிலைமை சிறிது சீரானதால், ஒரு சில பகுதி மக்களை அவர்களுடைய வீடுகளுக்கு செல்ல அரசு அனுமதித்துள்ளது.

கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மற்றும் Mayor Naheed Nenshi,ஆகியோர் வெள்ள நிலைமையை ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

canada1

canada2

canada3

மட்டக்களப்பில் 35 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன உப்போடை லேக் வீதியில் இயற்கை அழகுடைய வாவியின் நடுவே அமைந்துள்ள சிறு தீவை அழகுபடுத்தி சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தரத்திலான “ஈஸ்ட் லகூன்” என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று 35 கோடி ரூபா செலவில் கட்டப்பட்டு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியின் பயனாக ஈஸ்ட் லகூன் என்ற இந்த ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அகமட், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரபல வர்த்தகரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவருமான செல்வராசாவின் முயற்சியினை பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு செல்வராசாவினால் நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

bati1

bati2

bati3

பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் சமந்தாவுக்கு பயமாம்..!

கொலிவுட்டில் பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களில் நடித்தவர் சமந்தா.
சமீபத்தில் பேட்டியளித்த சமந்தா, பவன் கல்யான் படப்பிடிப்பில் பங்கேற்க நள்ளிரவில் விமானத்தில் சுவிட்சர்லாந்து செல்கிறேன்.

ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.

அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் ஐதராபாத்தில் ‘ராமய்யா வஸ்தாவய்யா’ படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆருடன் பங்கேற்கிறேன்.

அதிக வேலை பளு காரணமாக அடிக்கடி பயணம் செய்வது எனக்கு பயத்தை தருகிறது.

பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதால் தான் இவ்வளவு பிரச்னைகள். அடுத்து விஜய்யுடன் தமிழ் படம் ஒன்றில் நடிக்கவுள்ளேன்.

இதன் பின்பு சிறிய பட்ஜெட் படங்களில் நடிப்பேன். இதன்மூலம் அதிக பணிச்சுமை, அலைச்சல் குறைவதோடு, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

காற்றின் வேகம் இன்னும் குறையவில்லை: மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

புத்தளத்தில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்கள் மற்றும் யாழ்ப்பாணம் தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற் தொழிலாளர்களை அவதானமாக செயற்படுமாறும் காலநிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாரதிராஜாவுடன் போட்டி போடும் தனுஷ்..!

தனுஷின் அம்பிகாபதி படத்துடன் போட்டி போட தயாராகி வருகிறது பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும்.

தனுஷ்- சோனம் கபூரின் நடிப்பில் உருவாகியுள்ள அம்பிகாபதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த படம் வருகிற 28ம் திகதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் புதுமுகம் லக்ஷ்மண் நாராயண், கார்த்திகா நடித்துள்ள பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும் படமும் 28ம் திகதி வெளியாக உள்ளது.

அம்பிகாபதியின் இந்திப்பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ் பதிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதேபோல பாரதிராஜாவின் அன்னக்கொடியும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது.

இந்த படத்திற்கும் தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும்..!

இன்று பௌர்ணமி தினத்தின் போது வழக்கத்தை விட மிக பெரிய நிலா வானத்தில் தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீள்வட்ட கோளத்தில் பூமியை நிலா சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில காலங்களில் பூமியில் இருந்து தொலைவிலும், சில காலங்களில் பூமிக்கு அருகிலும் நிலா வந்து செல்லும்.

அருகில் வரும் போது அதனால் பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றம் காரணமாக கடல், காற்று போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

இயற்கை சீற்றங்களுக்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணமாகின்றன. இதனால் பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வானில் அதிசயம் நிகழ உள்ளது. நீள்வட்ட கோளப்பாதையில் சுற்றும் நிலா, பூமிக்கு மிக அருகில் வருகிறது.

அதாவது 2,21,824 மைல் தொலைவில் நிலா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட நிலா சற்று பெரிய அளவில் தெரியும். அது வழக்கமான அளவை விட 30 சதவீதம் கூடுதலாக தெரியும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஓராண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு தோன்றும் என்கின்றனர்.

இதேவேளை, பூமியின் ஒரு சில பகுதிகளில் இந்த மிக பெரிய நிலா இன்று காலை 7 மணிக்கே தெரிந்ததை நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீதேவியுடன் நடனமாடும் பிரபுதேவா..!

இந்திய சர்வதேச திரைப்பட அகாடமி (இஃபா) விருது இந்த ஆண்டு மக்காவுவில் நடைபெற இருக்கிறது.
வருடந்தோறும் வெளிநாடுகளில் வழங்கப்படும் இஃபா விருது இந்த ஆண்டு மக்காவுவில் அடுத்த மாதம் 4ம் திகதி நடைபெற இருக்கிறது.

இந்தி நடிகைகள் பலர் நடனமாடும் இவ்விழாவில் நடிகை ஸ்ரீதேவியுடன் பிரபுதேவா நடனம் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி நடித்த படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெறும்.

இதற்கான ஒத்திகையில் ஸ்ரீதேவியும், பிரபுதேவாவும் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வெள்ளப் பெருக்கு அழிவுகளுக்கு ‘மனிதச் செயல்களே’ காரணம்..!

வட-இந்திய மாநிலங்களில் மழை வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் சுரங்க அகழ்வுகளும் பாரியளவிலான மின்சார-உற்பத்தி செயற்திட்டங்களுமே காரணம் என்று இந்திய ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ‘இயற்கையின் சீற்றம்’ என்று அரசாங்கம் தனக்கு வசதியாக வர்ணிப்பதாக நாளிதழ்கள் பலவும் விமர்சித்துள்ளன.

விளைவுகளை சிந்திக்காத, தூரநோக்கற்ற மனித நடவடிக்கைகள் தான் வெள்ள அழிவுக்கு காரணம் என்று ஹிந்து நாளிதழ் கூறுகிறது.

பாரியளவிலான நீர்மின்சாரத் திட்டங்களும் ஆறு குளங்கள் சட்டவிரோதமாக குடிமனைகளாக மாறுகின்றமையும் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக மலைகளையும் பாறைகளையும் வெடிவைத்து தகர்க்கின்றமையுமே மலைப் பிரதேச மாநிலங்களில் இந்த வெள்ள அழிவு ஏற்படக்காரணம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் பல அறுகள் வற்றிவிட்டதாகவும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு தரவுகளையும் முன்வைத்து ஊடகங்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளன.

உயிர்ப் பலி 200-ஐ தாண்டிவிட்டது
இதற்கிடையே, இந்த வெள்ளப்பெருக்காலும் நிலச்சரிவாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 200-ஐ தாண்டி விட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் பெருமளவான வீடுகளும் சாலைகளும் சேதமடைய, சுமார் ஐம்பதாயிரம் பேர் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கை அரசைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவர்கள் வாகனப் பேரணி..!

இலங்கை அரசைக் கண்டித்தும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கக் கோரியும் அனைத்து கல்லூரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளார்கள்.

தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

காந்தி சிலை முன் மருத்துவர் எழிலன் நாகநாதன் கொடியசைத்த பின் வாகனப் பேரணியை துவக்கிய கல்லூரி மாணவர்கள் இவர்களுடன் அந்தந்த ஊர்களில் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து கொள்கிறார்கள்.

vehicle-rally.jpg222