வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதியில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ்குமார் – பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜூன் 27-ம் தேதி வியாழக்கிழமை சென்னையில் நடக்கிறது.
‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர், ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். கிரீடம், மதராச பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள், தாண்டவம், பரதேசி, தலைவா ஆகிய படங்களுக்கும் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். பாரதிராஜா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இவருக்கும், சினிமா பின்னணி பாடகி சைந்தவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்தது. ஜீ.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி திருமணம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது.
மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, அன்று மாலை 6-30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு குடும்பத்தினரும் கவனித்து வருகிறார்கள்.
– See more at: http://vannimedia.com/site/news_detail/16923#sthash.n5qr4k7t.dpuf
கண்ணா லட்டு தின்ன ஆசையா தந்த வெற்றிக்குப் பிறகு இனி ஹீரோவாகத்தான் நடிப்பார் என எதிர்பார்த்தால், சந்தானத்தை மறுபடியும் ஹீரோவின் நண்பனாகவே பார்க்க முடிகிறது.
அப்ப ஹீரோ ஆசை அவ்வளவு தானா? என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
ஓகஸ்ட் மாதம் துவங்கவிருக்கும் மரியாதை ராமண்ணா ரீமேக்கில் சந்தானம் தான் கதை நாயகன். இது காமெடிக்கு மட்டுமல்ல நடிப்பதற்கும் ஸ்கோப் உள்ள படம்.
படத்துக்கு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று தலைப்பிட்டு, ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனரை பிஸியாக்கிவிட்டுள்ளார்.
இயக்குனர் யார் தெரியுமா? ஸ்ரீநாத் நினைவிருக்கிறதா? சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு நண்பனாக சந்தானம், பிரேம்ஜியோடு ஒருவர் வருவாரே அவர் தான்.
மறைந்த இயக்குனர் ஜீவாவின் உதவி இயக்குனரான இவர், ஏற்கெனவே முத்திரை என்னும் படத்தை இயக்கியவர். லட்டு போலவே புல்லும் வெற்றியடையுமா? பார்ப்போம்.
அன்னை மடியில் : 10-10-1915 — ஆண்டவன் அடியில் : 24-06-2013
யாழ் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நல்லம்மா 24-06-2013 அன்று தனது 98வது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற இராசரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் மகளும், காலம்சென்ற நடராஜா அவர்களின் மனைவியும்,
மகேந்திரராஜா, சோதிமதி, சரோஜினிதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் காலம்சென்ற தவமலர் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 25-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நண்பகல் 12 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள பஸ் கட்டணம் குறித்து 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பஸ் சங்கம் உடன்பாடொன்றிற்கு வருவதற்கு கால அவகாசம் தேவை என கேட்டுக் கொண்டமைக்கு இனங்க பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் 27ஆம் திகதி அறிவிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பஸ் கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
6.2 வீதத்தினால் அதிகதிக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் 7 வீதத்தினால் அதிகரிக்குமாறு பஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை பஸ் கட்டண அதிகரிப்பு 10 வீதத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்..
சப்பாத்திக்கு..
கோதுமை மா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
மசாலாவிற்கு..
உருளைக்கிழங்கு – 2-3 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
கரட் – 1 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1-2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 கரண்டி
மிளகாய் தூள் – 1 கரண்டி
சீரகம் – 1/2 கரண்டி
கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு
செய்முறை..
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்க இறக்க வேண்டும்.
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சப்பாத்தி மாவை சப்பாத்திகளாக தேய்த்து நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும். இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சோஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் ரெடி!!!
இரவில் சப்பாத்தி செய்து எஞ்சியிருந்தால் வேண்டுமெனில் காலையில் அதனைக் கொண்டும் உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்யலாம்.
தமிழக முகாம்களிலிருந்து விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 60 பேர் கியூ பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கியூ பிரிவு போலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிதாக இருந்த மர்ம படகு ஒன்றை பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த படகு நாகை மாவட்டம் செருகூரை சேர்ந்த மாணிக்கவேல் மகன் செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும் அந்த படகில் 60 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் பின்னர் அவர்களை கடத்தி செல்லும் முயற்சியை கைவிட்டதும் தெரிய வந்தது.
இலங்கை அகதிகளை கடத்தி செல்ல முயன்றதாக மதுரை மாவட்டம் திருவாதவூர் முகாமில் இருக்கும் உமா ரமணன் என்கிற ரமணன், விழுப்புரம் மாவட்டம் கீழ புதுப்பட்டு முகாமை சேர்ந்த பாபு, மற்றும் நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி முகாதை சேர்ந்த தயா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தரகர்களாக செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும் படகு உரிமையாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். இவர்கள் நாகை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை புழல் சிறைக்கு கொண்டு செல்ல பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ந் திகதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரே விசைப்படகில் தப்பிச்செல்ல முயன்ற 120 பேர் கடற்படையினர் சிக்கியிருந்தனர்.
நியூஸிலாந்தில் இலங்கை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜூரி சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து ஒக்ஸ்போர்ட் பகுதி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமீர சந்திரசேன உயிரிழந்தமை குறித்து கைது செய்யப்பட்டுள்ள இரு இலங்கையர்கள் தொடர்பில் இச்சபை விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது
23 மற்றும் 33 வயதுடைய இலங்கையர்களே குறித்த மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட நாளன்று சந்திரசேன வீட்டில் கலவரம் இடம்பெற்றுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
28 வயதுடைய சமீர சந்திரசேன கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், தீ ஏற்படுவதற்கு முன்னர் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிய ஒக்ஸ்போர்ட் பகுதியில் சமீர சந்திரசேன, சாமி என்ற பெயரில் பிரபலமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நேரடியான அழுத்தமும் ஜப்பானின் மறைமுகமான அழுத்தமுமே இலங்கை அரசாங்கம் 13
ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை ஒத்திவைத்துள்ளமைக்கு காரணமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எம் மீது சுமத்திய இந்தியா இன்று அதனூடாக வட மாகாண சபை தேர்தலை நடத்தும் வியூகத்தில் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயமானது 13ஐ பாதுகாக்கும் இந்தியாவின் இறுதிக் கட்ட அழுத்தமாகும். அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமான உறவுகள் கொண்டிருப்பதை இந்தியாவும் ஜப்பானும் விரும்பவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் உந்துதலின் கீழ் மேற்கண்ட இரு நாடுகளும் 13 ஐ பாதுகாப்பதற்கான
கடும் அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளன. இலங்கைக்கு அதிகளவில் நிதியுதவிகளை ஜப்பான் வழங்குகின்றன.
இந்த உதவிகளையும் மேலும் அதிகரிக்கவும் ஐ.நா. வில்அமெரிக்கா எமது நாட்டுக்கு எதிராக முன்வைத்த பிரேரணையிலிருந்து இலங்கையை பாதுகாப்பதற்கும் ஜப்பான் உறுதியளித்துள்ளது.
அரசாங்கம் இன்று பாரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. இவ்வாறானதோர் நிலையில் ஜப்பானின் மறைமுகமான அழுத்தத்திற்கு அரசாங்கம் இணங்கி போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இந்தியா கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றது.
இங்கு பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடத்தப்படாமல் இருந்திருக்குமானால் வட மாகாண சபை தேர்தலை நடத்தும் நிலைமை உருவாகியிருக்காது. இந்த வியூகத்தையும் இந்தியாவே வகுத்தது. இம்மாநாட்டை இங்கு நடத்தும் பொறியில் இலங்கையை சிக்க வைத்து அதன் மூலம் வட மாகாண சபை தேர்தலை நடத்துவதில் வெற்றி கொண்டுள்ளது.
இம்மாநாடு இங்கு நடத்தப்படாமல் இருந்திருக்குமானால் வடமாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருந்திருக்கலாம்.ஆனால், இன்று அரசாங்கம் இத் தேர்தலை நடத்தும் கட்டாயத்தில் இருக்கின்றது.பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிக்கப்படாது வடக்கில் தேர்தலை நடத்துவது பெரும் ஆபத்தானதாக அமையும் என்றார்.
கொழும்பு மாநகர சபையின் 12 நகர பிரதேசங்கள் டெங்கு நோய் பரவும் கடும் ஆபத்துக்குரிய இடங்களாக இருப்பதாக நகர பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடை- வனாத்தமுள்ள- பொரளை- கொம்பனித்தெரு- மட்டக்குளி- முகத்துவாரம்- மகவத்தை- கிருலப்பனை- பாமன்கட- வெள்ளவத்தை- நாரஹேன்பிட்டி- கறுவாக்காடு ஆகிய பகுதிகளே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளன.
தினசரி புதிதாக 183 டெங்கு நோயா ளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
கொழும்பு நகரில் 1425 நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஏழுபேர் மரணித்துள்ளனர்.
பொரளை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் ஆஸ்பத்திரியில் நேற்று ஒரு குழந்தை டெங்கு நோயினால் மரணித்துள்ளது.
தேசிய நூதனசாலை- மகாவலி கேந்திர நிலையம்- ஜோன் டி சில்வா அரங்கு- அரச அச்சகம் உட்பட 14 அரச நிறுவனங் கள் டெங்கு குடம்பி பரப்பும் இடங்களாக காணப்பட்டமைக்காக அந்த நிறுவனங் களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்ட தாகவும் டொக்டர் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் 20500 அரச தனியார் நிறுவனங்களும்- வீடுகளும் சோதனைக் குட்படுத்தப்பட்டன.
இதில் 1170 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
550 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் டொக்டர் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
கொழும்புக்கு நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளதாக அச்சிறுவனின் தாயார் அச்சுவெலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக அச்சுவெலிப் பொலிஸார் இன்று திங்கள் கிழமை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேந்த கவிதாசன் ரிசாந்தன் 15 வயதுச் சிறுவன் ஒருவனைக் காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அந்தச் சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
இவரது நண்பர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாதுள்ளதாக தாயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
தனது மகன் கடந்த 19ஆம் திகதி நண்பர்களுடன் கொழும்பு செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என அந்தச் சிறுவனின் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இச் சிறுவனைத் தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் யாழ்.தலமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது
வடக்கு மற்றும் கிழக்கில் இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் தமது பெயர் விபரங்களை இன்று முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
வடக்கில் அல்லது கிழக்கில் இடம்பெயர்ந்த எந்தவொரு பிரஜைக்கும் இந்த சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இடம்பெயர்வின் முன்னர் பதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே வாக்களிக்க முடியும் என கடந்த நாட்களில் அறிவிக்கப்பட்டது.
வாக்காளர்கள் தற்போது வசிக்கும் கிராம சேவகரின் உறுதிப்படுத்தப்பட்ட பத்திரத்துடன் இடம்பெயர்வுக்கு முன்னர் வசித்து வந்த பிரதேசங்களில் தமக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
இதேவேளை வாக்காளர்கள் இரு பரதேசங்களில் பதிவுகளை மேற்கொள்வார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இந்த விசேட வாக்காளர் பதிவுக்காக விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பதிவு எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இக்காலத்தில் வாக்காளர்கள் தமது பதிவுகளை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பதுரலிய – கலவான வீதியில் மொரபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (23) இரவு 9 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பதுரலியவிலிருந்து அத்வெல்கொட நோக்கி பயணித்த பஸ் வண்டி மொரபிட்டிய சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி தானசாலை ஒன்றுடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றதுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 9 பேர் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் நால்வர் நாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் பஸ் சாரதி பதுரலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரித்தானியாவுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் முதல் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விசா பிணைக்கு உள்ளாகும் நாடுகளில் பங்களாதேஷ் மற்றும் கானாவும் உள்ளடங்குகின்றன. இதன்படி 6 மாத பயண விசாவில் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் 4,600 டொலர்களை பிணைத் தொகையாக அறவிட பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படும் பிணைத்தொகை விசா காலத்தையும் மீறி தங்குவோரிடம் அபராதமாக ஈட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு செயலாளர் தெரேசா மே பிரதமர் டேவிட் கெம்ருனின் கன்ஸர்வேடிவ் கட்சியின் அனுமதியைப் பெற காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்கு வருவோரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க பிரதமர் கெமரூன் எதிர்பார்த்துள்ளார்.
கடந்த ஆண்டில் பிரித்தானியாவுக்கு ஆறு மாத விசாவில் இந்தியாவில் இருந்து 296,000 பேரும் நைஜீரியாவிலிருந்து 101,000 பேரும் பாகிஸ்தானில் இருந்து 53000 பேரும் இலங்கை, பங்களாதேஷில் இருந்து தலா 14,000 பேரும் பிரிட்டனுக்கு சென்றுள்ளனர்.
ஹட்டன் நகரின் பௌத்த விஹாரைக்கு அருகில் உள்ள பாதையோரத்தில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவினால் ஹட்டன் நகரிலிருந்து நீதிமன்ற வளாகம், ஸ்ரீபாத சிங்கள ஆரம்ப பாடசாலை, பொன்னநகர், கல்விப் பணிமனை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பாதையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை சீர்செய்வதற்கு ஹட்டன் – டிக்கோயா நகரசபை இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் பத்தனை – திம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போஹாவத்தை மேற்பிரிவு தோட்டத்தில் 6ஆம் இலக்க தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்டுள்ள வெடிப்புக் காரணமாக இந்தக் குடியிருப்பினைச் சேர்ந்த 14 குடும்பங்கள் பாதுகாப்பான இடமொன்றுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
மலையகத்தில் பெய்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழக்கைப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது.
பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்குத் தயக்கம் காட்டுவதோடு தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதிலும் ஆர்வமின்றியுள்ளனர்.
மேலும் தொடர் மழையினால் தோட்டங்களில் தேயிலைக் கொழுந்தின் வளர்ச்சியும் குன்றியுள்ளதால் தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழையினால் விவசாய நிலங்கள், பயிர்ச்செய்கைகள் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகளும் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் காய்கறிகளின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் நுகர்வோர் பாதிப்படைந்துள்ளனர்.