கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்கும் ருக்மணி ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ருக்மணி.
இதன் பின்பு ஆனந்த தாண்டவம் படத்திலும் நடித்துவிட்டு பரதநாட்டிய பள்ளியில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் தற்போது கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்து கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ருக்மணி கூறுகையில், முதன்முறையாக அனிமேஷன் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.
இப்படத்தில் நான் டான்சராக நடிக்கிறேன், நடனம் தெரியும் என்பதால் இதுமாதிரியான வேடங்கள் வருகிறது.
இப்படத்திலும் நடன சீன் ஒன்று உள்ளது, இதில் கமெராக்கள் பொருத்தப்பட்ட உடையை அணிந்து நடித்தது வித்தியாசமானதாக இருந்தது.
ரஜினியுடன் ஒரு மணி நேரம் பணியாற்றிய அனுபவத்தில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு தகுதியானவர் என்பதை அறிந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரோஹன் மோகன் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், தன் சொந்த வாழ்க்கை பற்றி பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிறகு சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தம் டெஸ்ட் போட்டிகளில் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர்.
தெற்கு சீனாவில் உள்ள கடலோர பகுதிகளை உடோர் புயல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேரை காணவில்லை. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மாவோமிங் நகரை உடோர் புயல் தாக்கியபோது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்திய உத்திரபிரதேசத்தில் இறந்தவர்களின் உடல் எச்சங்களை சாப்பிட்டதாக இளைஞர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் பொலிசில் ஒப்படைத்தனர்.
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
சார்க் ஒப்பந்தத்தின்படி, இலங்கை அரசு ஆயுள் தண்டனை கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க தொடங்கி உள்ளது.

