கவுண்டமணி கதாநாயகனாகும் 49ஓ..!!

kowndamani

1990 களில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து நடித்த படங்கள் காமெடியில் களைகட்டின.

இந்நிலையில் உடல்நிலை காரணமாக கடந்த 8 வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

தற்போது சாந்தனு நடிக்கும் வாய்மை என்ற படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து கதாநாயகனாகவும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகான நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு 49ஓ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

49ஓ என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டிய படிவம். அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அதற்காக, இது அரசியல் படம் என்று கூறமுடியாது. இந்த படத்தில் கவுண்டமணி விவசாயியாக நடிக்கிறாராம்.

இதுதவிர இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படத்திலும் கவுண்டமணி நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவருகின்றது ஜெய்ஹிந்த் 2..!!

jaihind2ஜெய்ஹிந்த் ஹிட் அலைவரிசையைத் தக்கவைப்பதற்காக ஜெய்ஹிந்த்-2 படத்தை இயக்கி வருகிறார் அர்ஜுன். மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த சுர்வீன் சாவ்லா இதிலும் அர்ஜுனுடன் ஜோடி சேர்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அர்ஜுன் “படப்பிடிப்பை மைசூரில் துவங்கினோம். இரண்டு ஏக்கர் நிலத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் சிறைச்சாலை அரங்கை அமைத்து, அதில் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகளைப் படமாக்கினோம்.

பெற்றோர்கள் குழந்தைகளைத் தங்கள் சொத்தாக மட்டுமே நினைக்கிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களின் சொத்து மட்டுமல்ல, இந்த நாட்டின் பொக்கிஷம். அப்படிப்பட்டப் பொக்கிஷத்தை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் கதைக்கருவாக ஜெய்ஹிந்த்-2வில் கையாண்டிருக்கிறேன்.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. லண்டன் ,டெல்லி, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. கல்வி பற்றிய படம்தான் என்றாலும், கமர்ஷியல் கலந்து இதை உருவாக்கி வருகிறோம்” என்றார்.

சிறுநீர் கழித்த விவகாரம் : பனேசரின் தாயார் ஆவேசம்!!

Monty-Panesar

குடிபோதையில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்தது பெரிய விடயமே அல்ல. அதனை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகிறது என மொன்டி பனேசரின் தயார் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய வம்சாவளி வீரரான இவர், குடிவெறியில் கிளப் பாதுகாவலர்கள் மீது, சிறுநீர் கழித்து சிக்கலில் சிக்கியுள்ளார். இதனால் இவரது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து பனேசரின் தாயார் குர்ஷரன் கவுர் கூறுகையில்

“பனேசர் செய்தது ஒரு விடயமே அல்ல. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன. பெற்றோர் என்ற முறையில் இதற்காக வருத்தப்படுகிறோம், அவ்வளவு தான். மற்றபடி இது முடிந்து போன பிரச்னை. இதுகுறித்து வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

வவுனியா, முல்லைத்தீவில் பல பெண்களை ஏமாற்றிய நபர் கைது!!

arrest

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல பெண்களை ஏமாற்றி மேசடியில் ஈடுபட்ட நபர்ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.

முல்லைத்தீவு பகுதியில் வழக்கொன்றில் பலகாலமாக தேடப்பட்டு வந்த குறித்த நபரினை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் பல பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவர்களிடம் பெற்ற பணத்தினை செலுத்த மறுத்து வந்ததாகவும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் முறையிட்டுள்ளார்கள்.

இதனையடுத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் குறித்த நபரை எதிர்வரும் 21ஆம் நாள்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் குத்திக்கொலை (படங்கள்)..!!

MURDER

மேற்படிப்பை தொடர்வதற்காக வவுனியாவில் இருந்து லண்டன் சென்ற பெண் லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.  2010ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தனது மகள் கடந்த 6ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார். தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தந்தை மேலும் தெரிவித்தார்.

vavuniya1 vavuniya2 vavuniya3

சச்சின், பொண்டிங்கை விட லாரா தான் சிறந்த வீரர் : அப்ரிடி அதிரடி!!

afridi

சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ஆகியோரை விட பிரைன் லாரா ஒரு படி மேல்தான் என்று பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாகவே லாராவா சச்சினா சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற கேள்வியும் விவாதமும் தொடர்ந்தபடிதான் உள்ளன. சமீபத்தில் பொண்டிங் இந்த விவாதத்தை மேலும் சூடாக்கி விட்டுப் போனார். இந்த தொடர் விவாதத்தில் தற்போது பாகிஸ்தான் வீரர் அப்ரிடியும் தலையை விட்டுள்ளார்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் லாராதான் சிறந்தவர் என்பது எனது கருத்து. அவரைப் போன்ற வீரரை நான் பார்த்ததில்லை. சச்சின், ரிக்கி பொண்டிங் ஆகியோர் ஜாம்பவான்களாக இருந்தபோதிலும் அவர்களை விட ஒரு படி மேலான நிலையில்தான் இருக்கிறார் லாரா.

லாராவை வீழ்த்துவது என்பது மிகவும் கஷ்டமான விடயம். ஒவ்வொரு விதமான கிரிக்கெட்டிலும் நிபுணத்துவம் பெற்றவர் லாரா. பவுண்டரிகள் அடிப்பதில் அவரை மி்ஞ்ச முடியாது.

பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை மெக்கிராத் சிறப்பான பந்து வீச்சாளர் என்றும் அதேபோல முகமட் ஆசிப்பும் நல்ல பந்து வீச்சாளர் எனவும் கூறினார்.

இந்திய கிரிக்கெட் சபை 550 கோடி வரி நிலுவை!!

BCCI

ஐந்து ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ.,) 550 கோடி வரை வரி நிலுவை வைத்துள்ளது.

ஐந்து ஆண்டுகளில் பி.சி.சி.ஐ., வருமானம் வரி கட்டிய விவரத்தை சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதன் படி, 2006-07 முதல் 2010-11 வரையிலான கணக்கு விபரம் தெரியவந்துள்ளது.

இதில் 2006-07ல் வருமானம் 866.13 கோடி. வருமான வரியாக 222.93 கோடி செலுத்த வேண்டிய நிலையில் 26.77 கோடி மட்டும் கட்டியுள்ளனர். மீதமுள்ள 196.16 கோடி இன்னும் செலுத்தப்படவில்லை.

இப்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக மொத்தம் 550 கோடி வரை பி.சி.சி.ஐ., வரி செலுத்த வேண்டுமாம்.

400 கிலோ எடையுள்ள இளைஞரின் விசித்திர வைத்தியசாலை பயணம்!!(படங்கள்)

சுமார் 400 கிலோ­கிராம் எடை­யுள்ள இளைஞர் ஒரு­வரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தற்­காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்­டர்­பில்லர் வாக­னத்தில் ஏற்றிச் சென்ற சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது.

மைக்கல் லெபேர்கர் எனும் இந்த இளைஞர் ஜேர்­ம­னியின் ரீகல்ஸ்பேக் நகரில் வசிக்­கிறார். அண்­மையில் அவ­ருக்கு திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்­ட­போது அவ­ச­ர­மாக வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது.

ஆனால் 400 கிலோ எடையைக் கொண்­டி­ருந்த மைக்கல் லெபேர்­கரை தூக்கிச் செல்ல முடி­ய­வில்லை. அதை­ய­டுத்து அவ­சர சேவைப் பிரி­வி­ன­ருக்கு தகவல் கொடுக்­கப்­பட்­ட­வுடன் தீய­ணைப்புத் துறை­யி­னரும் மருத்­துவ ஊழி­யர்­களும் விரைந்து வந்­தனர்.

ஆனால் அவ்­வீட்டின் கத­வுக்­கூ­டாக மைக்­கலை தூக்­கிச்­செல்ல முடி­யவில்லை. அதனால் ஜன்­ன­லுடன் இணைந்த சுவ­ரொன்றை உடைக்க வேண்­டி­யி­ருந்­தது.

1

மண் அகழ்­வுக்குப் பயன்­ப­டுத்­தப்­படும் கெட்­டர்­பில்லர் இயந்­தி­ரத்தின் மூலம் வீட்­டி­லி­ருந்து பாது­காப்­பாக தூக்­கி­வ­ரப்­பட்டு மைக்கல் நான்கு நோயா­ளிகள் பயணம் செய்­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட அம்­புலன்ஸ் வாகனம் மூலம் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார்.

2

29 வய­தான மைக்கல் லெபரை வீட்டிலி­ருந்து வெளியே கொண்­டு­வ­ரு­வது முதல் அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வது வரை­யான பணிக்கு சுமார் 6 மணித்­தி­யா­லங்கள் தேவைப்­பட்­டன.

3

இந்­ந­ட­வ­டிக்­கையை மேற்­கொண்ட குழுவின் தலைவர் வோல்கர் கிளெய்ன் கருத்துத் தெரிவிக்கையில், தனது வாழ்க்கையில் இவ்வாறான ஒரு நிலைமையை முன்னர் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை எனக் கூறியுள்ளார்.

தலைவா படம் வெளியாகாத விரக்தியில் 20 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

hang

விஜய்யின் தலைவா படம் வெளியாகாததால் அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், காசிநஞ்சயகவுண்டன் புதூரை சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20).

இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். விஷ்ணு நேற்று நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்தை பார்க்க ஆவலாய் இருந்துள்ளார். ஆனால் தலைவா படம் வெளியாகவில்லை.

இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். நண்பர்களிடம் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுப்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் உறவினரிடம் விசாரித்ததில் தலைவா படம் ரிலீஸாகாததால் விஷ்ணு மகிவும் கவலையுடன் இருந்தார். இதுப்பற்றி எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

அதனால்தான் அவர் தற்கொலை செய்து‌ கொண்டார் என தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த துடியலூர் பொலிஸார் விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தலைவா படம் ரிலீஸாகாததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ‌கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் மடிக்கணனி அறிமுகம்..(வீடியோ, படங்கள்)

தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று மடிக்கணணி வரை சிறிதாக மாறியுள்ளது.

இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவருகின்றன.

அதற்கிணங்க தற்போது சூரிய சக்தியில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் 2 மணிநேரம் சூரிய ஒளியில் வைத்த பின்னர் சுமார் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய சக்தியை குறித்த மின்கலம் வழங்குகின்றது.

இந்நீண்ட பாவனையின் பொருட்டு இக்கணனிகளில் Ubuntu இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.

WeWi Telecommunications எனும் கனடிய நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இக்கணனிகளின் விலையானது 300 டொலர்கள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

solar labtop

solar labtop 2

 

கின்னஸ் சாதனைக்காக 100 கிலோவில் ஒரே இட்லி!!

idly

தமிழகத்தின் தண்டையார்பேட்டை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன் (42). சமையல்காரர்.
இவர் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுப்பது வழக்கம். இவருக்கு சமையல் செய்வதில் கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக எண்ணம் உள்ளது.

அதற்காக பலவித சமையல்களை செய்துள்ளார். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஏதாவது ஒரு சமையல் வகையை செய்வார். கடந்த ஆண்டு தலா 50 கிலோ என 2 இட்லி, 40 கிலோவில் ஒரு இட்லியை இனியவன் தயாரித்தார்.

இந்நிலையில் இந்தாண்டு 100 வித இட்லி தயாரிக்க உள்ளார். இதற்காக இனியவன், கொடுங்கையூரில் ஒரு திருமண மண்டபத்தில் வரும் 11ம் திகதி 100 வித இட்லியை தயாரித்து கண்காட்சி நடத்த உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

முன்னதாக நேற்று 100 கிலோ எடையுள்ள ஒரு இட்லியை இனியவன் தயாரித்தார். அதனை காண ஏராளமான பொதுமக்கள் கூடினர். அவர் தயாரித்து வைத்த இராட்சத இட்லியை பார்த்து அனைவரும் பிரமித்து நின்றனர்.

இரயிலில் பிறந்த குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்!!

baby

ஜேர்மனில் ஒடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலில் பயணம் செய்த போது திடீரென்று பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

அப்போது ரயிலில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்பதால் அதில் பயணம் செய்த இரண்டு பெண்கள் அப்பெண்ணுக்க பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த அப்பெண் தற்போது எலிசபெத் மருத்துவமனையில் தன் குழந்தையுடன் நலமாக உள்ளார்.

இது குறித்து தெற்கு பிராந்திய கிளை தலைவர் பிராங்க் ஹெலின்காபர் (Frank Klingenhöfer) கூறுகையில் அந்தக் குழந்தையானது தனது வாழ்க்கை பயணத்தை ரயிலில் தொடங்கியுள்ளது. இதனால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று இழிவுபடுத்திய மலையாளப் பெண்!!

james vasanthan

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று கூறிய மலையாளப் பெண்ணுக்கு தமிழ் சார்ந்த அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ராதா தேவிபிரசாத் என்பவர் நீலாங்கரை பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார்.

இதனடிப்படையில் நீலாங்கரை பொலிசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் ஊடகவியலாரை சந்தித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன் பொய் வழக்கு போட்டு காவல்துறை கைது செய்தது குறித்து தமிழக முதல்வர் முழு விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை வைத்தார்.

மேலும் 65 வயது மூதாட்டிக்கு தான் எவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும். தன் மீது நிலப் பிரச்சனை காரணமாக வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் என்றும், இதற்கு பின்னணியில் பெரிய மலையாளி அதிகார ஊடுருவல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காவல்துறை முன்னிலையில் தன்னை தமிழ் நாய் என்று ராதா தேவிபிரசாத் இழிவு படுத்தியதாகவும் இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை அப்புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தனுடன் அவரது மனைவியும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். காவல் துறையால் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்றும் அவர் கூறினார்.

இசை அமைப்பாளர் எஸ். ஏ.ராஜ்குமார் சின்னத்திரை கலைஞர்கள் உமா பத்மநாபன், விஜய் ஆதிராஜ் ஆகியோர் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதராவாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி கொடுத்தனர். நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், மே 17 இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி, தமிழர் பண்பாட்டு நடுவம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சி இயக்கங்களின் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று இழிவு படுத்திய பெண்மணிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இழிவு படுத்தி பேசியதற்கு அப்பெண் உடனடியாக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அந்த பெண்ணின் வீடு முற்றுகையிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஆறு மாத காலத்தில் 75 பேருக்கு மரண தண்டனை!!

court

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 75 பேருக்கு பல்வேறு நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1080 பேர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திருமணமான பெண்ணுடன் கள்ளத் தொடர்பு பேணியமை, காணிப் பிரச்சினை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம், மதுபோதை, போதைப் பொருள் பயன்பாடு போன்ற காரணிகளினால் ஏற்பட்ட முரண்பாடுகளில் கொலைகளை மேற்கொண்டவர்களும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வைத்திருத்தல் ஆகிய காரணிகளுக்காகவும் அதிகளவானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான மரண தண்டனைக் கைதிகள் வெலிக்கடை மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பரத் நடிக்கும் 555 படம் இன்று வெளியாகின்றது!!

555விஜய் நடிப்பில் உருவான தலைவா’படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மற்றும் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என அடுத்தடுத்து பிரச்சினை கிளம்பியுள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தலைவா நேற்று வெளியாவதாக இருந்ததால் இயக்குனர் சசி இயக்கத்தில் பரத், சந்தானம் மற்றும் மிருத்திகா நடிக்கும் “ஐந்து ஐந்து ஐந்து” படத்தை ஆக.15ம் திகதிக்கு தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் தலைவா வெளியாவதில் தாமதம் ஏற்பட்டத்தையடுத்து இப்படத்தை இன்று வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகி உள்ளன. மேலும், பரத் இப்படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டில் நடித்து உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது இளம் இந்திய அணி!!

28TH_CRICKET_TEAM__1346862f

இலங்கை அணிக்கெதிரான இளையோர் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இலங்கை வந்துள்ள  இந்திய இளம் (19 வயது) அணி மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் போட்டியில் பங்கேற்றது.

முதல் இரு போட்டிகள் முடிவில் இந்திய அணி 1-0 என்று முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய கடைசி போட்டி நேற்று தம்புளவில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் விஜய் ஜோல் களத்தடுப்பை தெரிவு செய்தார். இலங்கை அணியின் பானுகா 42 ஓட்டங்களும், பெரேரா 50 ஓட்டங்களும், ரித்மா 23 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை தாண்டவில்லை.

இலங்கை அணி 39.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது . இந்திய அணி சார்பில் சுழலில் அசத்திய 15 வயது வீரர் சர்ப்ராஸ் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி 32.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அறிமுக வீரர் கஜுரியா 34 ஓட்டங்களும், ஹெர்வத்கர் 25 ஓட்டங்களும், விஜய் ஜோல் 23 ஓட்டங்களும், சஞ்சு சம்சன் 31 ஓட்டங்களும், முகமது சைப் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதையடுத்து இளையோர் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது