மானத்துக்காக பெற்ற மகளையே கொலை செய்த கொடூர தாய்.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!!

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி தாழையூத்து அருகே உள்ள பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார்.

சமீபத்தில் அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று நள்ளிரவு அக்கம்பக்கத்தினர் பேச்சியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அருணா மயங்கி கிடந்துள்ளார். அவரது அருகில் தாய் ஆறுமுக கனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனே அவர்கள் 2 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அருணா கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதும், ஆறுமுக கனி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து சீவலப்பேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர். அதில் அருணா கல்லூரியில் படித்தபோது இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த அருணாவுக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதற்கு அருணா சம்மதம் தெரிவிக்காததால் ஆறுமுககனி தனது மகளை கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

விடுதியில் தங்கியிருந்த தம்பதி… திறக்காத விடுதி கதவு.. கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

பழனியில்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் பல்லுருத்தியை சேர்ந்தவர் ரகு- உஷா தம்பதியினர். இவர்கள் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துளனர். தம்பதியினர் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில் நீண்ட நேரமாக கேரள தம்பதி தங்கியிருந்த அறையின் கதவு திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் பழனி அடிவாரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.சந்தேகத்தின் பேரில் போலீஸார் அறை கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது தம்பதி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அறையை சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் சிக்கியுள்ளது.

கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் கைப்பற்றிய கடிதத்தில் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனையை அதே ஊரை சேர்ந்த சிலர் பெரிதுபடுத்தவதாக கூறி அவர்கள் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மித்த பகுதியினை துப்புரவு செய்த மக்கள்!!

ஈச்சங்குளம்..

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ முகாமிற்கு அருகேயுள்ள காணியினை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் சிரமதானம் செய்கின்ற வேலைகள் நேற்று (23.11.2022) காலை ஆரம்பிக்கப்பட்டது.

காலை 10.30 மணியளவில் ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தினை அண்மித்த வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

வவுனியா நகரில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது!!.

3 பெண்கள் கைது..

வவுனியா நகர்ப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்களை வவுனியா பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நகர்ப்பகுதியில் நேற்று சோதனைகளை மேற்கொண்ட வவுனியா போதை ஒழிப்பு பொலிசார் விபசார தொழிலில் ஈடுபட முயற்சித்த ஓர் குற்றச்சாட்டில் 3 பெண்களை கைது செய்துள்ளனர்.

செட்டிகுளம், கிளிநொச்சி, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நூறு ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

வவுனியா SSP என நடித்து இரத்தினக்கல் மோசடி செய்த நடிகை : அம்பலமான பல தகவல்கள்!!

மோசடி செய்த நடிகை..

வவுனியா மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை அடையாளப்படுத்தி நீல நிற இரத்தினக்கல்லை மோசடி செய்தார் என கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் பிரபல தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா குமாரி பெரேராவின் முகவரான தொலைக்காட்சி நாடக நடிகர் என லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் வேடத்தில் பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துவரும் மினுவாங்கெட்ட வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி.எம். குணரத்ன பண்டார என்ற நபராவார்.

நடிகை மஞ்சுளா குமாரி பெரேரா, லக்கல தேவலதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சுரங்க அகழ்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த நடிகையின் பிரதிநிதியே சந்தேகத்தில் கைதான துணைத் தொலைக்காட்சி நடிகராவார். இவரே வவுனியாவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை பல மாதங்களாக பிரதேசவாசிகளிடம் கூறி வந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் காயம்!!

விபத்து..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24.11.2022) காலை பஸ் – டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (24) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்டோர் காயமடைந்த நிலையில் 6 பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4 பேர் வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

300 கிலோ எடை கொண்ட கோடீஸ்வர பெண்ணிற்கு நடைபெற்ற வித்தியாசமான திருமணம்!!

அமெரிக்காவில்..

தொலைக்காட்சி பிரபலமான டாமி ஸ்லேடன் (36) என்ற பெண்ணின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 4 கோடியாகும். டாமி மிகுந்த பருமனானவர், கிட்டத்தட்ட 300 கிலோ எடை கொண்டவர்.

இந்த நிலையில் தனக்கும் கலீப் வில்லிங்டன் என்பவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக டாமி அறிவித்துள்ளார். வில்லிங்டனும் உடல் எடை அதிகம் கொண்டவர் தான்.

அதன்படி இதுவரை உங்களுக்கு என்னை டாமி ஸ்லேடன் என்றே உங்களுக்கு தெரியும், ஆனால் இனி நான் திருமதி டாமி வில்லிங்டன் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் வில்லிங்டனும், டாமிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வில்லிங்டன் டாமி விரலில் மோதிரம் அணிவிக்கும் புகைப்படங்கள் வெளியானது. இருவரும் அப்போது முத்தம் கொடுத்து கொண்ட காட்சிகளும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மனைவியை மீட்டுத்தாருங்கள் : யாழில் முறைப்பாடு அளித்த கிளிநொச்சியை சேர்ந்த கணவர்!!

மனைவியை மீட்டுத்தாருங்கள்..

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியினை மீட்டுத்தருமாறு கோரி இளம் கணவர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அம்பாள் நகர் சாந்தபுரம் கிளிநொச்சி சேர்ந்த வடிவேல் லிங்கேஷ்வரன் என்ற இளம் குடும்பஸ்தர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.

திருமணம் செய்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக முகவர் மூலம் தனது மனைவி மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது மனைவி , தற்போது அங்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஒழுங்கான உணவு வழங்கப்படாமை போன்ற பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குடும்பத்துடன் தொலைபேசியில் உரையாடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக கணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

அதேவேளை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தமது குடும்பத்தை காப்பாற்ற ஓமானுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக அழைத்துசெல்லப்பட்ட இலங்கைப்பெண்கள் அங்கு பாலியல் தொழிலுக்காக விற்கப்படுவதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரட்ணவிற்கு ஒரு வருட போட்டித் தடை!!

சமிக்க கருணாரட்ண..

இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை, இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்ணவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைளை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் இடம்பெற்ற ரி20 உலக கிண்ணப்போட்டி தொடரின் போது வீரர்களிற்கான ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பலவற்றை மீறியமை தொடர்பில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாமிக்கவிற்கு எதிராக மூன்று பேர் கொண்ட குழு ஒழுக்காற்று விசாரணையை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய சாமிக்கவிற்கு ஒரு வருட தடையை விதித்துள்ளதுடன் 5000 அமெரிக்க டொலர் அபராதத்தையும் அறிவித்துள்ளது.

சாமிக கருணாரட்ண இழைத்த தவறுகளின் பாரதூர தன்மையை கருத்தில் கொண்டு விசாரணை குழு இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு குறிப்பிட்ட வீரர் எதிர்காலத்தில் மேலும் மீறல்களில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

விசாரணை குழு தெரிவித்த விடயங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கமைய, இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஒரு வருட தடையை விதித்துள்ளதுடன் குறிப்பிட்ட தடை ஒரு வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இடைநிறுத்தப்பட்ட தடைக்கு மேலாக 5000 அமெரிக்க டொலர் அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன் வெளியிட்ட அதிர்ச்சி உண்மைகள்!!

டெல்லியில்..

இந்தியாவை உலுக்கிய ஷ்ரதா வாக்கர் கொலை சம்பவத்தில், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பப்பட்ட காதலன், தன் மீதான கொலைக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், தனது காதலியை கொன்று, உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய வழக்கில், கொலைக் குற்றவாளியான அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), அவரது 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவர் சாகேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறப்பு விசாரணையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஃப்தாப் பூனாவாலாவின் பொலிஸ் காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அஃப்தாப் அமீன் பூனாவாலா தனது காதலி ஷ்ரதா வாக்கரை கொலை செய்ததை நீதிமன்றத்தில் இன்று ஒப்புக்கொண்டார். தற்போது தன்னைப் பற்றி கூறப்படுவது முற்றிலும் உண்மை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அஃப்தாப், காவல்துறைக்கு ஒத்துழைப்பதாகவும், காவல்துறையும் அவரை நன்றாக நடத்துவதக்கவும் கூறினார். அவர் அவர்களை தவறாக வழிநடத்தவில்லை அல்லது அவர்களிடம் பொய் சொல்லவில்லை என்று கூறினார். ஆனால் நீண்ட காலமாக இருப்பதால் பல விடயங்களை நினைவுபடுத்த முடியவில்லை என்று கூறினார்.

விசாரணையின் போது, ​​குருகிராமில் DLF Phase 3 அருகே உள்ள புதர்களில், ஷ்ரதாவின் உடலை வெட்டப் பயன்படுத்திய ரம்பம் மற்றும் பிளேட்டை வீசியதாக ஆப்தாப் கூறினார் என்று பொலிஸார் தெரிவித்தனர். டெல்லி பொலிஸ் குழு அந்த புதர்களை இரண்டு முறை சோதனை செய்து சில ஆதாரங்களை சேகரித்தனர்.

மேலும், மெஹ்ராலியில் உள்ள 100 அடி சாலையில் அவர் இறைச்சி வெட்டும் கத்தியை குப்பைத் தொட்டியில் இருந்து மீட்டுள்ளனர். இதுவரை கிடைத்த ஆதாரங்கள் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

ஷ்ரதாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போகிறதா என சரிபார்க்க, இதுவரை மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடை உட்பட 18 எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஓரிரு வாரங்களில் அறிக்கைகள் கிடைக்கும் என மத்திய தடயவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

சாட்சிகள் இல்லாததால், தடயவியல் அறிக்கைகள், தரவுகள் மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான விசாரணைகள் தான் இந்த வழக்கில் இருப்பதாக கூறப்படுகிறது.

80 சதவீத விசாரணை முடிந்துவிட்டதாக டெல்லி பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியங்கள் இன்னும் காணாமல் போனதால், அடுத்த சில நாட்கள் நடக்கவிருக்கும் விசாரணைகள் முக்கியமானதாக் யிருக்கும் என கூறப்படுகிறது.

30 ஆண்டுகள் உறைந்த கரு மூலம் பிறந்த இரட்டை குழந்தைகள்.. மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பின்னணி!!

அமெரிக்காவில்..

30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகள் மூலம் தம்பதியர் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த விஷயம், பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

பொதுவாக, IVF மூலம் வெற்றிகரமாக குழந்தை பெறும் பெற்றோர்கள், அதிகமாக இருக்கும் கரு முட்டைகளை தானமாக வழங்குவதோ அல்லது பாதுகாத்து வைப்பதோ வழக்கமான ஒரு விஷயம் என தகவல் தெரிவிக்கின்றது.

அப்படி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகளை எடுத்து அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தற்போது குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

அமெரிக்காவின் Oregan என்னும் பகுதியை சேர்ந்தவர் பிலிப் ரிட்ஜ்வே. இவரது மனைவி பெயர் ரேச்சல். இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில், தற்போது இவர்கள் கடந்த 1992 ஆம் ஆண்டு உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகளை கொண்டு பிலிப் – ரேச்சல் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்புள்ள கரு முட்டைகள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது மருத்துவ உலகில் பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு, 27 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருவில் இருந்து பிறந்த குழந்தையே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை இரட்டை குழந்தைகளுக்கு லிடியா மற்றும் டிமோத்தி என பெயர் சூட்டி உள்ள பிலிப் மற்றும் ரேச்சல் ஆகியோர், இவர்கள் தான் தங்களின் மூத்த குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசும் பிலிப், “லிடியா மற்றும் டிமோத்தி ஆகியோருக்கு கடவுள் உயிர் கொடுத்த போது எனக்கு 5 வயது. அன்றில் இருந்து அவர்கள் உயிர்களை பாதுகாத்து வந்துள்ளனர்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

என் மனைவியைக் கொன்றுவிட்டேன்… போனில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்!!

டெல்லியில்..

இந்திய தலைநகர் டெல்லியில் மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸாரை போனில் அழைத்த நபர் கைது செய்யப்பட்டார்.டெல்லியின் ஹர்ஷ் விஹாரில் உள்ள காவல் நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசிய யோகேஷ் குமார் என்ற 35 வயது நபர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாக கூறி பொலிஸாருக்கு அதிர்ச்சியை கொடுத்தார் இதையடுத்து, சம்பவ இடமான சுசீலா கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்த பொலிஸ் குழுவினர்,

அங்கு அவரது மனைவி அர்ச்சனா பேச்சுமூச்சின்றி தரையில் கிடந்ததை பொலிஸார் கண்டனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து, டெல்லி பொலிஸார் யோகேஷ் குமாரை கைது செய்துனர். முதல்கட்ட விசாரணையில், குடும்பம் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அர்ச்சனா பல்வேறு இடங்களில் இருந்து கணிசமான தொகையை கடன் வாங்கியுள்ளதாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் யோகேஷ் அர்ச்சனாவை கழுத்தை நெரித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா உங்கள் இலட்சியம் இதோ.. அரிய சந்தர்ப்பம் : இன்றே விண்ணப்பியுங்கள்!!

நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா உங்கள் இலட்சியம்…


நீங்களும் சட்டத்தரணியாகுவதற்குரிய அரிய சந்தர்ப்பத்தை IDM Nation Campus வவுனியா வளாகம் உங்களுக்கு வழங்குகிறது. A/L பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கான சட்டமாணி கற்கை நெறியானது ஆரம்பமாகவுள்ளது. இக் கற்கை நெறியினை A/L பரீட்சையில் சித்தி பெற்றவர்களும் சட்டமாணி பட்டப்படிப்பை தொடர முடியும்.

IDM Nation Campus நிறுவனம் 10 வருடங்களுக்கு மேலாக இக்கற்கை நெறியினை சிறப்பாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். சட்டமாணி கற்கை நெறியினை பூர்த்தி செய்வதன் மூலம் கீழ்வரும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம்.

சட்டமாணி கற்கை நெறியினை பூர்த்தி செய்வதன் மூலம் சட்ட ஆலோசகர் , முறைப்பாட்டு அலுவலர் , இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரி , சட்ட அமுலாக்க அதிகாரி , வழக்கறிஞர் . நீதிமன்றத்தில் வழக்காடுதல் , அரச அல்லது வங்கி போன்ற தனியார் நிறுவனங்களில் சட்ட உத்தியோகத்தர் , உறுதி எழுதுதல் , கம்பெனி செயலாளராக செயற்படல் , நீதிசேவைக்குள் உள்வாங்கப்படல் (நீதிபதி ) , கல்வி நிறுவனங்களில் விரிவுரைகள் நடாத்துதல் போன்ற தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம்.


வகுப்புகள் முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும், Online ஊடாகவும் நடைபெறும். இம் மாதம் November 28ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை நேரடியாகவும் Online ஊடாகவும் மேற்கொள்ளலாம்.

நுழைவுத் தகைமை Start with your A/L , தொடர்புகளுக்கு Legal Studies Department, IDM Nations Campus, North Regional Campus, Vavuniya. விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள 076 0970955 / 024 2222313 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்

இது ஓர் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்

காதல் தோல்வியால் நடந்த பரிதாபம் : சினிமா ஒளிப்பதிவாளர் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னை, மாங்காடு பகுதியில், காதல் தோல்வியில், சினிமா ஒளிப்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை, போரூர் , மதனந்தபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் விக்னேஷ்(22). இவர், சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், விக்னேஷ் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது, ஒரு அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் கிடைத்து, மாங்காடு போலீசார் விரைந்து வந்து, விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் விக்னேஷ் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், விக்னேஷ் அந்த பகுதியில் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால், அந்த பெண் திடீரென , விக்னேஷின் காதலை வெறுத்ததாக தெரிகிறது. காதல் தோல்வியால் மன விரக்தியில் இருந்து வந்த விக்னேஷ் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்காலிக பிரச்சினையை தாண்டி செல்லாமல் திடீரென தற்கொலை செய்துகொள்பவர்களால் அவர்களது குடும்பம் தீரா துயரத்தில் மடிந்து விடுகிறது.

அண்மையில், சென்னை வடபழனி பகுதியில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்கொலை குறித்து எத்தனையோ விழிப்புணர்வு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகவே இருக்கிறது.

காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

இந்தியாவில்..

இந்தியாவில், வேறு சாதியைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்தம் மகளை தந்தை கொலை செய்ய, தாய் அவரது உடலை சூட்கேசில் அப்புறப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 22 மகளை ஆணவக்கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே கடந்த வாரம் சூட்கேஸுக்குள் 22 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பொலிசார் சூட்கேஸை மீட்ட பிறகு, பெண்ணை அடையாளம் காண டெல்லியில் போஸ்டர்களை ஒட்டினார்கள். மேலும், தொலைபேசிகளை கண்காணித்தனர், சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தனர் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அடையாளம் காண முயற்சித்தனர்.

இறுதியில், ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாருக்கு அப்பெண்னின் உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவரது தாயும் சகோதரரும் புகைப்படங்கள் மூலம் அப்பெண்ணை அடையாளம் கண்டனர்.

அவரது பெயர் ஆயுஷி சவுத்ரி (22), டெல்லியில் BCA படிப்பு படித்து வந்துள்ளார்.பின்னர், தெற்கு டெல்லியில் உள்ள படர்பூரில் வசிக்கும் பெண்ணின் தந்தை நிதேஷ் யாதவ், உடலை அடையாளம் காணச் சென்றபோது, அவரை பொலிஸார் விசாரித்ததை அடுத்து அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், நிதேஷ் யாதவ், தன் மகள் தன்னிடம் சொல்லாமல் “சில நாட்களாக வெளியே சென்றுவிட்டாள்” என்ற ஆத்திரத்தில் சுட்டுக் கொன்றதாக தெரியவந்தது. மகள் வேறு சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாலும், அவர் அடிக்கடி இரவு வரை வெளியில் இருந்ததால் நிதேஷ் ஆத்திரமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் தகவல்களின்படி, ஆயுஷி தனது குடும்பத்தினரிடம் கூறாமல் வேறு சாதியைச் சேர்ந்த சத்ரபால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கள் வார்த்தைக்கு எதிராகவும், அவரது பிடிவாதமான மனப்பான்மையுடன் நடந்தகோட்டதற்காவதும் ஆயுஷியின் பெற்றோர் கோபமடைந்தனர்.உரிமம் பெற்ற துப்பாக்கியால் ஆயுஷியை சுட்டுக் கொன்ற பிறகு, நித்தேஷ் யாதவ் அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து மதுராவில் வீசினார். அதற்கு அவரது மனைவியும் துணை நின்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே ஒரு பெரிய சிவப்பு நிற சூட்கேஸில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் ஆயுஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

முகம் மற்றும் தலையில் ரத்தம் இருந்தது, உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சூட்கேஸை பார்த்த தொழிலாளர்கள், பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

வெளிநாட்டிலிருக்கும் கணவருடன் கைபேசியில் பேசிய பெண் திடீரென எடுத்த விபரீத முடிவு!!

விருதுநகரில்..

வெளிநாட்டிலிருக்கும் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய்த் தகராறால் மனமுடைந்த பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள கோட்டநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 25). இவருக்கும், குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதி இருவரும் குண்டலகுத்தூர் கிராமத்தில் கூட்டுக் குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்துவந்தனர்.

கட்டடத் தொழிலாளியான வழிவிட்ட அய்யனார், தற்போது வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் பானுமதி தனது கணவர் அய்யனாருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மனமுடைந்த பானுமதி வீட்டிலுள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீஸார், பானுமதியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், மருத்துவமனைக்கு வந்த பானுமதியின் பெற்றோர் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால் சாத்தூர் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பானுமதியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், `மகளின் இறப்பில் சந்தேகம் இருந்தால் அது குறித்து புகார் அளியுங்கள்.

மேலும் கூறாய்வு அறிக்கையின் முடிவின்படி தவறு செய்தவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பானுமதியின் உடலை வாங்கிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பானுமதியின் பெற்றோர் அப்பநாயக்கன்பட்டி போலீஸில், மருமகன் அய்யனார், அவரின் தம்பி தமிழ்ச்செல்வன், அவர்களின் பெற்றோர் சூரியவேல், முருகேஸ்வரி ஆகியோர்மீது புகார் அளித்தனர். அதன்பேரில் பானுமதியின் இறப்பு குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.