போட்டியில் பங்கேற்க பாலியல் இலஞ்சம் கோரினார்கள் : இலங்கை அழகி பகீர் குற்றச்சாட்டு!!

இலங்கை அழகி..

மியன்மாரியில் நடைபெற்ற Mrs Grand International 2022 போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் அந்த போட்டியின் ஏற்பாட்டாளரான மலித் ரணசிங்க தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவிருந்த ரசாங்கி ஷாமிகா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் தன்னுடன் கஞ்சா குடிக்க வருமாறு வற்புறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (21) கொழும்பில் தமக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரசாங்கி ஷாமிகா கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், அவரது கோரிக்கை தனக்குப் பிடிக்காததால், இந்தப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் தேவையான பணிகளை முன்னெடுக்கவும் மியான்மருக்குச் செல்லத் தேவையான பணத்தைத் தரவில்லை என்றும் ரசாங்கி ஷாமிகா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இறுதிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு தமக்கு கிடைக்கவில்லை எனவும் உலகின் இருபத்தைந்து நாடுகளுக்கு முன்னால் இலங்கையின் பெருமை மாத்திரம் குழிபறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டாம் திருமணம் செய்த இளம் பெண்ணுக்கு தாலிக் கயிறே எமனான சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

அம்பத்தூரில்..

அம்பத்தூரில் இளம் பெண்ணை தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொடூர கொலை செய்த இரண்டாவது கணவரை அம்பத்தூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


அம்பத்தூரில் இரு தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூர கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து உதவி ஆணையர் கனகராஜ் உத்தரவின் பெயரில், அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

அதில், இறந்தவர் பெயர் பவித்ரா(27) என்பதும், அவர் காதலித்து திருமணம் செய்த முதல் கணவரை பிரிந்து ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டு கொலை நடந்த இடமான அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகர் பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் உடலை கைப்பற்றிய போது இரண்டாவது கணவரான ராஜா தலைமறைவானது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் தனிப்படை போலீசார் தலைமறைவான ராஜாவை தேடும் பணியை முடுக்கி விட்டனர்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீசார் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ராஜா பதுங்கி இருந்த ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து ரயில் நிலையம் விரைந்து பதுங்கி இருந்து ராஜாவை நோட்டமிட்டனர்.

போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற ராஜாவை காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பவித்ராவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ‘எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும், நான் அவளை சரமாரியாக தாக்குவேன். கொலை நடந்த அன்று நான் மது அருந்துவதற்கு பணம் கேட்டபோது பவித்ரா மறுக்கவே அவள் அணிந்திருந்த தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கினேன்.

வலி தாங்காமல் அவள் தன்னை விடுமாறு கத்திக் கூச்சலிட்டு துடி துடித்தால். பின்னர் பவித்ரா இறந்ததை உறுதி செய்த பிறகு தப்பி ஓடி விட்டேன், இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு அம்பத்தூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண் : விசாரணைகள் ஆரம்பம்!!

கனடாவில்..

கனடாவில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான இலங்கை தமிழர் சசிகரன் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம், பிரிந்து வாழ்ந்து வந்த தர்ஷிகா ஜெகன்நாதனை கொலை செய்திருந்தார்.

சம்பவ தினத்தன்று ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்ற போது,

பெண் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு காயங்களுடன் கிடந்த நிலையில் பின்னர் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து உயிரிழந்த தர்ஷிகாவின் கணவர் சசிகரன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

சசிகரன் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு
இந்த நிலையில் ஒன்றாறியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய, சசிகரன் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

அதேவேளை சசிகரனுக்கும், தர்ஷிகாவுக்கும் இந்தியாவில் 2015 இல் நவம்பர் முதலாம் திகதி அவர்களது திருமணம் நடந்துள்ளது. அதன்பின்னர் 2017 இல் தர்ஷிகா தனது கணவருடன் சேர்ந்து வாழ கனடாவுக்கு வந்துள்ளார்.

அதன்பின்னர் சில வாரங்களில் கணவரை பிரிந்து தர்ஷிகா வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

24 வயதில் பிரபல நடிகையின் உயிரை காவு வாங்கிய மாரடைப்பு : எதனால் ஏற்பட்டது? எச்சரிக்கை செய்தி!!

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐன்டிரிலா சர்மா பெங்காலி மொழியில் பிரபல நடிகையாக உள்ளார். இவருக்கு சில முறை நெஞ்சு வலி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன் தின இரவு அவருக்கு நெஞ்சுவலி அதிகம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார், அவரின் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு என தெரியவந்துள்ளது.

ஐன்டிரிலாவின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஐன்டிரிலாவுக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கான பின்னணி காரணங்கள் வெளிவந்துள்ளன.

அவர் சில வாரங்களுக்கு முன்பாகத்தான் மூளை பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, மூளையின் இடப்பக்கத்தில் இரத்தக் கசிவு அதிகம் காணப்பட்டுள்ளது தெரியவந்தது. வாரக் கணக்கில் சிகிச்சை பெற்று வந்த ஐன்டிரிலா பின்னர், பாதிப்பிலிருந்து உடல் நலம் தேறியுள்ளார்.

இதேபோன்று ஐன்டிரிலாவுக்கு 2 முறை புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து அவர் முழுமையாக மீண்டு பின்னர் நடிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது.

தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை, அதிக மன அழுத்தம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவைகளால் தான் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சாலை விபத்தில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம்!!

ஹைதராபாத்தில்..

ஈ.டி.வி பாரத் தொலைக்காட்சியில் துணை ஆசிரியராக ஹைதராபாத்தில் பணியாற்றிவருபவர் நிவேதிதா சூரஜ் (வயது 26). இவர் நேற்று தனது நண்பர் சோனாலி சாவ்ரே என்பவருடன் அதிகாலை 5 மணியளவில் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது தனது அலுவலகப் பேருந்து ஏறும் இடத்திற்குச் செல்வதற்காக சாலையைக் கடந்தபோது வேகமாக வந்த கார் இவர்கள் இருவர் மீதும் மோதியுள்ளது. நிவேதிதா காற்றில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் சோனாலி சாவ்ரே படுகாயமடைந்துள்ளார்.

இந்த கொடூர விபத்து ஹைதராபாத்தின் பாக்யலதா பகுதியில் உள்ள ஹயாத் நகரில் நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் எங்கும் நில்லாமல் வேகமாக சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார் கார் ஓட்டுநர் தொடர்பாக சிசிடிசி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த சோனாலி சாவ்ரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிவேதிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 பெண்களை மணந்து தனித்தனியே குடும்பம் நடத்திய கல்யாண மன்னன் : 3 மனைவிகளும் எடுத்த அதிரடி முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்து தனித்தனியே குடும்பம் நடத்தி வந்த கல்யாண மன்னன் மனைவிகளிடம் வசமாக சிக்கிய நிலையில் கணவரை மன்னித்து விட்டுள்ளனர்.

கோவையை சேர்ந்தவர் போசனகுமார் (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளம்பெண்ணின் அழகில் மயங்கிய போசன்குமார் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் போசனகுமார் பொள்ளாச்சியை சேர்ந்த தனது நண்பரின் தங்கையை காதலித்து 3வதாக திருமணம் செய்தார். ஒருவருக்கு ஒருவர் தெரியாமலேயே அவர்களுடன் தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குடித்தனம் நடத்தி வந்தார்.

 

இந்நிலையில் தனது குடும்ப சொத்தை விற்றதில் கிடைத்த பங்கு ரூ.10 லட்சத்தை இரண்டாம் மனைவி போசனகுமாருக்கு கொடுத்துள்ளார். அதனை திருப்பி கேட்டபோது, போசனகுமார் அவரை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அவர் பொலிசில் புகார் செய்தார். விசாரணையின் போது போசனகுமார் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து தனித்தனியே குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர் 3 மனைவிகளும் காவல் நிலையத்திற்கு வந்தனர். இதில் இரண்டாவது மனைவி மட்டும் தனது பணத்தை கொடுத்தால் பிரிந்து செல்வதாக கூறினார். இதையடுத்து அவருக்கு ரூ. ஒரு லட்சம் பணம் கொடுக்கப்பட்டது.

ஓரிரு நாளில் மீதி பணம் கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டது. மூன்றாவது மனைவி பொலிசாரிடம், போசனகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தனக்கு தெரியாது என்றும், அவரது முதல் மனைவி, குழந்தைகளுக்காக பிரிந்து செல்வதாகவும் கூறிவிட்டு சென்றார்.

முதல் மனைவியும் தனது கணவர் பல பெண்களுடன் வாழ்வது தனக்கு தெரியாது என கூறினார். போசனகுமாரிடம் குடும்பம் நடத்திய 3 பெண்களும் அவர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கூறினர். இதனையடுத்து அவர்களிடம் பொலிசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

திருமணத்திற்கு இந்திய ராணுவத்தை அழைத்த தம்பதி : இணையத்தில் வைரலாகும் பதில் பதிவு!!

கேரளாவில்..

திருமணத்திற்கு அழைப்பு விடுத்த கேரள தம்பதிக்கு இந்திய ராணுவம் அதன் சமூக வலைதள பக்கத்தில் பதில் அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜோடி இந்திய இராணுவத்திற்கு திருமண அழைப்பிதழை அனுப்பியது.

அந்த அழைப்பிதழுடன், திருமண தம்பதிகளான ராகுல் மற்றும் கார்த்திகா, ராணுவ வீரர்களுக்கு ஒரு சிறப்பு குறிப்பையும் அனுப்பியுள்ளனர், அது இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அந்த குறிப்பில், இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும், நாட்டுக்காக தியாகம் செய்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளனர். “அன்புள்ள மாவீரர்களே, நாங்கள் நவம்பர் 10 -ஆம் திகதி திருமணம் செய்து கொள்கிறோம். எங்களது நாட்டின் மீதான அன்பு, உறுதிப்பாடு மற்றும் தேசபக்திக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

எங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். உங்களால், நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம். எங்கள் அன்புக்குரியவர்களுடன் எங்களுக்கு மகிழ்ச்சியான நாட்களைக் கொடுத்ததற்கு நன்றி.

உங்களால், நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கிறோம். நாங்கள் எங்கள் சிறப்பு நாளில் உங்களை அழைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் வருகையையும் ஆசீர்வாதத்தையும் விரும்புகிறோம்.

எங்களை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த அழைப்பை இந்திய ராணுவம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளத்தில் வெள்ளிக்கிழமை பகிர்ந்துகொண்டது.

மேலும், தம்பதியின் அன்பான அழைப்பிற்கு பதிலளித்து, “நல்வாழ்த்துக்கள். திருமண அழைப்பிற்காக இந்திய ராணுவம் ராகுல் மற்றும் கார்த்திகாவுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது மற்றும் தம்பதியருக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அழகான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துகிறது. #TogetherForever” என்று வாழ்த்தியுள்ளது.

இந்தப் பதிவு பகிரப்பட்டதிலிருந்து, 87,500-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது. கருத்துகள் பிரிவில் பலர் இதய ஈமோஜிகளை பதிவிட்டுள்ளனர்.

வவுனியாவில் போலி நாணயதாள் புழக்கத்தில்!!

போலி நாணயதாள்..

வவுனியாவில் போலி 5000 ரூபா தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை பகுதியில் உள்ள,

எரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களிடம் குறித்த நாணயத்தாள்கள்,

இனந்தெரியாதோரால் பொருட்களை பெறும்போது வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் இந்திய வம்சாவளிச் சிறுமி விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு : தந்தை கூறிய நெகிழவைக்கும் வார்த்தைகள்!!

கனடாவில்..

கனடாவில் விபத்தொன்றில் இந்திய வம்சாவளிச் சிறுமி ஒருத்தி கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள். விர்ஜினியாவில் வாழ்ந்துவரும் சுக்விந்தர் சிங் குடும்பம், 2020ஆம் ஆண்டு, கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் தங்கள் பெற்றோரைக் காண்பதற்காக வந்திருந்த நிலையில், அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

நிஹாலின் மரணம் மறக்க முடியாத பயங்கரமான நினைவுகளாக அந்தக் குடும்பத்தினர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இந்த வயதுக்குள்ளேயே, தூதரக அதிகாரியான தன் தந்தையுடன் இந்தியா உட்பட்ட பல நாடுகளை சுற்றி வந்த குட்டி தேவதையான தங்கள் மகளை இழந்த விடயம் அவர்களை எவ்வளவு பாதித்துள்ளது என்பதை லண்டன் நீதிமன்றத்தில் நேற்று கண்ணீர் வழிய பதிவு செய்தார்கள் நிஹால் குடும்பத்தினர்.

அப்போது, குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி, நிஹாலின் உயிரைப் பறித்த அலிஷியா தனது தரப்பு கருத்தைப் பதிவு செய்ய நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய அலிஷியா, நான் செய்த மிகப்பெரிய தவறின் தாக்கம் என்னை தினமும், ஒவ்வொரு கணமும் பாதிக்கிறது, நிஹாலால் எனது பிரார்த்தனைகளைக் கேட்கமுடியுமா? எனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.

 

தன் மகள் பலியாக காரணமாக இருந்த பெண்ணிடம் சிறுமியின் தந்தை கூறிய வார்த்தைகள் அலிஷியாவுக்கு பதிலளித்த நிஹாலின் தந்தையான சுக்விந்தர், நேரடியாக அவரைப் பார்த்து, அலிஷியா, உங்களை நான் முழுமையாக மன்னிக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.

நிஹாலும் அதைத்தான் விரும்பியிருப்பாள் என நான் நம்புகிறேன், அவள் எப்போதுமே யார் மீதும் கசப்போ கோபமோ வைத்ததில்லை என்றார். அலிஷியா தனது வாழ்நாள் முழுவதும் தனது தோளில் எவ்வளவு பெரிய சுமையை சுமக்கவேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று கூறிய சுக்விந்தர், தான் அவரிடம் ஒரே ஒரு விடயம் மட்டும் கேட்டுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

அது, நிஹாலின் வாழ்க்கையிலிருந்து எதையாவது நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். காரணம், இந்த வயதுக்குள் அவள் சென்ற இடமெல்லாம் ஆச்சரியத்துக்குரிய விடயங்களை அவள் செய்துவந்தாள் என்றார் அவர். அலிஷியா வழக்கு, இம்மாதம் (நவம்பர்) 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று அவரது தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிக்கப்படும்.

விடுதி அறையில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு : கதறும் பெற்றோர்!!

தர்மபுரியில்..

வெறும் புத்தக படிப்பையும், மதிப்பெண்களை பெறுகிற மிஷின்களாக மட்டுமே நாம் ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறோமோ என்கிற ஐயம் எழுகிறது. ஆசிரியர் திட்டினார், மதிப்பெண் குறைவு என்கிற காரணங்களை சர்வ சாதாரணமாக குழந்தைகள் தங்களது முன்னேற்றத்துக்கு எடுத்துக் கொண்ட காலம் போய், இப்போது உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்து வருவது தொடர் கதையாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழி குமார். இவரது மகன் நிர்மல் குமார். வயது 25. இவர் சேலம் அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பிசியோதெரபி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

தினமும் ஊருக்கு சென்று வர முடியாது என்பதால், கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து, படித்து வந்தார். நிர்மல்குமாரை, தினமும் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அவ்வாறு வழக்கம் போல் காலையில் நிர்மல்குமாருக்கு செல்போனுக்கு பெற்றோர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவரது நண்பர் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பெற்றோர் தங்களது மகன் செல்போன் எடுக்காமல் இருப்பது பற்றி தெரிவித்தனர். உடனே நிர்மல்குமார் தங்கி இருந்த அறைக்கு சென்று நண்பர்கள் பார்த்தனர்.

அப்போது அறை கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு நிர்மல்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதை கண்டு அதிர்ந்து போன நண்பர்கள் நிர்மல் குமாரின் பெற்றோருக்கும், ஆட்டையாம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார், நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், நிர்மல் குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது மகன் நன்கு படித்து நல்ல நிலைக்கு வருவான் என்ற பல கனவுகளோடு காத்திருந்த பெற்றோர், மகனை சடலமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.

கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணிக்கு நடந்த சோகம்!!

கடலூரில்..

கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி பகுதியில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் ரத்தப்போக்கு அதிகரித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கீழக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். கூலித் தொழில் செய்து வரும் இவருக்கும் அமுதா (28) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தை உள்ள நிலையில், அமுதா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.

அதில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது. மூன்றாவது பெண் குழந்தை என்பதால் கருவை கலைக்க திட்டமிட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து அமுதாவுக்கு கடந்த 17-ம் தேதி அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மெடிக்கலில் கருக்கலைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து அமுதா தன்னுடைய சொந்த ஊரான கீழகுறிச்சிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அமுதா சுயநினைவு இன்றி இருந்துள்ளார்.

இதனை அடுத்து குடும்பத்தினர் அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று இருக்கிறார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர், அமுதா வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறி உள்ளார்.

இது குறித்து வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

யாழ் சகோதரிகளிடம் ஏமாந்த புலம்பெயர் தமிழர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

யாழ் சகோதரிகள்..

நோர்வே நாட்டில் வசிக்கும் ஒருவரிடம் சுமார் 120 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த யாழ்.நாவாந்துறையை சேர்ந்த சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.

சந்தேகநபர்களான பெண்கள் இருவரும் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 2021 ஜனவரி முதல் ஜூன் வரை 23 வங்கிக் கணக்குகள் மூலம் 120 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்த தங்கள் தந்தை ஒரு பணக்கார தொழிலதிபர் என்றும் அவருக்கு ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தங்க நகைகள் உட்பட பண சொத்துக்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த நிதியை விடுவிப்பதற்கான சட்டச் சிக்கல்களைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்தநிலையில் இருவரும் தன்னை ஏமாற்றி வந்ததை நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் உணர்ந்துள்ளார்.

அவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் சகோதரிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் பல்வேறு அரச அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கிராம அலுவலகர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் உட்பட ஏராளமான போலி ஆவணங்களை வைத்திருந்தனர்.

வங்கி புத்தகங்கள் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகளும் அவர்களிடம் இருந்தன. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, சகோதரிகள் இருவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!!

மாணவி..

கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யட்டிநுவர வீதியிலுள்ள இராணுவ முகாமுக்குப் பின்னால் நேற்று குறித்த மாணவி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்பிட்டிய கல்தன்ன பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய குறித்த மாணவி நேற்று காலை வீட்டில் இருந்து தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக கூறி சென்றுள்ளார். சடலத்தை கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உயிரிழந்த பாடசாலை மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த காதலியின் உடலை திருமணம் செய்த காதலன் : இனி திருமணம் தனக்கு கிடையாது என சபதம்!!

மோரிகானில்..

காதலியின் இறந்த உடலுடன் மாலையை மாற்றி கொண்டு திருமணம் செய்த அசாம் இளைஞரின் செயல் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் மோரிகானில் வசிக்கும் பிதுபன் டமுலி மற்றும் கொசுவா கிராமத்தில் வசிக்கும் பிராத்தனா போரா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.

இருவீட்டார்களுக்கும் இவர்களுடைய காதலும் திருமண திட்டமும் தெரிந்ததே. இந்நிலையில் காதலி பிராத்தனா போரா சிறிது நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனால் மருத்துவ சிகிச்சைகள் போதிய ஆதரவு வழங்காத நிலையில் பிராத்தனா வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். காதலி உயிரிழந்து விட்டால் என்ற சோகம் தாங்காத காதலன் பிதுபன், இறுதி சடங்கு நடைபெறும் பிராத்தனாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தான் பிராத்தனாவை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துவிட்டு, பிராத்தனாவின் இறந்த உடலுக்கு அலங்கரிக்கும் சிவப்பு பூசியை கன்னங்கள் மற்றும் நெற்றியில் பூசி விட்டு, அவள் கழுத்தில் மாலையை அணிவித்துள்ளார்.

பின் அவள் உடல் முழுவதும் தொட்டு எடுத்து மற்றொரு மாலையை தனது கழுத்திலும் போட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் தனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் சபதம் செய்துள்ளார்.

பிராத்தனா மற்றும் பிதுபன் இருவரது திருமணம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிராத்தானவை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என பிதுபன் தெரிவித்ததும்,

அதிர்ச்சியடைந்த பிராத்தனாவின் குடும்பம் பேச்சற்ற நிலைக்கு சென்றுள்ளது. பிராத்தனாவின் சகோதரர் சுபோன் தெரிவித்த கருத்தில், தனது சகோதரியை ஒருவர் இந்த அளவிற்கு காதலிக்கிறார் என்று எங்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அவன் அழுது கொண்டே எல்லா சடங்குகளையும் செய்ததை நாங்கள் பார்த்தோம், என் சகோதரி உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவள் பிதுபனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள், அதைப்போல அவளுடைய இறுதி விருப்பத்தை பிதுபன் நிறைவேற்றினான், வேறு என்ன சொல்ல வேண்டும் என சகோதரர் சுபோன் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளே இனி தாங்க முடியாது… மொத்த குடும்பமும் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்..

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ஜிதேந்திரா ஸ்ரீவஸ்தவா (45). இவருக்கு மன்யா (16) மற்றும் மன்வி (14) என்ற இரு மகள்கள் இருந்தனர். ஜிதேந்திரா கடந்த 1999ல் நடந்த கார் விபத்தில் தனது ஒரு காலை இழந்தார்.

அவரின் மனைவி சிம்மி இரண்டாண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் உயிரிழந்தார். மனைவி இறப்பிற்கு பிறகு ஜிதேந்திரா வீட்டிலேயே டைலரிங் பணி செய்து வந்தார், கடந்த இரண்டாண்டுகளாக குடும்பத்தினர் மிகுந்த பண நெருக்கடியில் இருந்தனர்.

மகள்களின் பள்ளி கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் ஜிதேந்திரா இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மூன்று பேரும் வீட்டில் தனித்தனி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இரவு நேர செக்யூரிட்டி பணி முடிந்து வீடு திரும்பிய ஜிதேந்திராவின் தந்தை ஓம் பிரகாஷ் மகன், பேத்திகளின் சடலத்தை பார்த்து அதிர்ந்து போய் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து பொலிசார் சடலங்களை கைப்பற்றினர். இவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 5 பேர் கூட வரவில்லை, பின்னர் பொலிசாரே இறுதிச்சடங்குகளை ஏற்பாடு செய்து நடத்தினார்கள்.

மன்யா தனது டைரியில் எழுதியிருந்த வார்த்தைகள் உருக்கமாக இருந்தது. அதில், என் அம்மாவையும் எடுத்து கொண்டாய், என் தந்தை எங்களுக்காக போராடினார். என் வாழ்க்கை ஒரு சாபம், வலியும் வேதனையும் நிறைந்தது. என் குடும்பத்தை அழிக்க நினைப்பவர்கள் யார்?

ஆம் அந்த நபர்கள் யார் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் ஏன் எங்களை மகிழ்ச்சியாகப் பார்க்க விரும்பவில்லை, கடவுளே என்னால் இனி எழுத முடியாது, எனக்கு மூச்சு முட்டுகிறது என எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பிரபல இளம் நடிகை மரணம் : இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பின்பு நடந்த சோகம்!!

ஆண்ரிலா சர்மா…

இரண்டு முறை கேன்சரில் இருந்து மீண்டு வந்த பிரபல இளம் நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெங்காலி நடிகை ஆண்ரிலா சர்மா(24). இவருக்கு கடந்த வாரத்தில் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு ஹவராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நவம்பர் 1ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், உடல் ஒரு பாகம் பக்கவாதம் ஏற்பட்டு செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

வென்டிலேட்டர் உதவியால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவருக்கு, நேற்று இரவு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நடிகை ஆண்ரிலா சர்மா வெறும் 24 வயதில் இரண்டு முறை புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது இறுதியாக அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.