வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தையின்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையிலிருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26 வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா இன்று (20.11.2022) ஆலயத்தின் பங்குத் தந்தை தலைமையில் இடம்பெற்றது.
கடந்த வியாழக்கிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழாவின் தவநாள் வழிபாடுகள் இடம்பெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கிறிஸ்து அரசனின் திருச்சொரூபம் ஆலய பின்வாயில் வழியாக புகையிரத நிலைய வீதி வழியாக குருமன்காட்டு சந்தி மன்னார் வீதியூடாக பிரதான வாயிலாக ஆலயத்தை மீண்டும் வந்தடைந்து புனிதரின் இறுதி ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றது.
இப்பெருவிழா நிகழ்வுகளை அமலமரித் தியாகிகள் சபை அருட்பணியாளர் ரமேஷ் ஒழுங்கமைத்து மேற்கொண்டார். கூட்டுத் திருப்பலி அருட்பணி செல்வராஜ் அருட்பணி கமலநாதன் உதவிப்பங்குத் தந்தை ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். அருட்சகோதரிகள், ஆலய பங்குமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தெலுங்கு திரையுலகில் பிரபல துணை நடிகை சுனிதா போயா. இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பன்னி வாசு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தயாரிப்பாளர் அலுவலகம் முன் நி.ர்.வா.ண போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னி வாசு கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.
தன்னை ஏ.மாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் துணை நடிகை திடீரென நி.ர்.வா.ண போ.ராட்டத்தில் ஈ.டுபட்டார்.
அங்கு வந்த அவர் தி.டீரென தனது ஆடைகளை களைந்து நி.ர்.வா.ண போ.ராட்டத்தில் ஈ.டுபட்டதால் பெரும் ப.ரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறை ல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் பெண் போலீசார் அவரை உ.டைகளை உ.டுத்த வை.த்தனர்.
மேலும் தயாரிப்பாளர் பன்னி வாசு ஐதராபாத் வருகை தந்ததும் அவரிடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். தயாரிப்பாளர் பன்னி வாசுவிற்கு எதிராக சுனிதா போயா ஏற்கனவே பலமுறை போ.ராட்டம் நடத்தியுள்ளார்.
கடந்த மே மாதமும் இதே போல் அ.ரை நி.ர்.வா.ண போ.ராட்டத்தில் ஈடுபட்டு சுனிதா ப.ரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த பு.காரின் மீது இதுவரை பன்னி வாசு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தான் மீண்டும் போ.ராட்டம் நடத்தியதாக போயா தெரிவித்துள்ளார். அவரது தொ.ல்லை தாங்க முடியாமல் 4 முறை மருத்துவமனை சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
காட்டுப் பகுதியில் காணாமல் சென்ற நபரை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அவர் வளர்த்த செல்லப்பிராணி அவரை கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரித்தினை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள சுதுரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சேகரப்பா(55). இவர் தினமும் காட்டிற்கு சென்று விறகு எடுத்துவருவதை வழக்கமாக கொண்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த லையையும் செய்து வந்துள்ளார்.
காலை 6 மணிக்கு காட்டுக்கு செல்லும் இவர் 10 மணிக்கு வீடு திருப்பிவிட்டு, பின்பு ஹொட்டல் ஒன்றில் வேலையும் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று விறகு எடுக்க சென்ற நபர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் காட்டுக்குள் பல இடங்களில் தேடியும் சேகரப்பா கிடைக்காமல் இருந்ததால் உறவினர்கள் சோகத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் சேகரப்பா வளர்த்து வந்த செல்லப் பிராணியான டாமி,
காட்டுக்குள் ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டிருந்ததைக் கேட்ட உறவினர்கள், அங்கு சென்று பார்த்த போது சேகரப்பா மரத்தின் அடியில் மயங்கியபடி கிடந்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்து சிகிச்சை பெற்று பின்பு நலமுடன் வீடு திரும்பியுள்ளார். தனது மோப்ப சக்தியை வைத்து எஜமானின் உயிரைக் காப்பாற்றிய குறித்த நாயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
சேலம் பகுதியில் திருட்டு நடைபெற்ற நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் தற்போது பலரையும் மனம் உருக வைத்து வருகிறது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை பகுதியில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்போது அந்த பெண்ணிடம் இருந்து இளைஞர் ஒருவர் செல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. தனது செல்போன் திருட்டு போனதால் அடுத்த நொடியே கத்தி கூச்சல் போட்டுள்ளார் அந்த பெண்.
இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள், செல்போனை திருடி விட்டுச் சென்ற இளைஞரை ஓடி சென்று பிடித்தனர். தொடர்ந்து, அவரை போலீசாரிடம் ஒப்படைப்பதாக காவல் நிலையத்திலும் அங்கே இருந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, செல்போனை பறி கொடுத்த அந்த பெண், திருடனிடம் தனது குடும்ப சூழ்நிலையை சொல்லி கண்ணீர் விடவும் செய்தார். அப்போது பேசும் அந்த பெண், “பசிக்குதுன்னா கூட என்கிட்ட கேட்டு இருக்கலாம். தங்கச்சி எனக்கு பசிக்குது ஏதாவது வாங்கி குடுங்கன்னு கேட்டா கூட சத்தியமா வாங்கி கொடுத்திருப்பேன்.
நாங்க என்ன நிலைமையில் இருக்கோம்ன்னு உனக்கு தெரியுமா?. இன்னைக்கு நீ இந்த போன தூக்கிட்டு போயிருந்தன்னா சோற்றுக்கு பதிலா விஷத்தை தான் நாங்க குடிச்சிட்டு சாகணும்.
எங்க பொழப்பே இதுல தான். புருஷன் ஒரு டிரைவர். அவருக்கு Ola ஓட்டுறதுக்கு ஒரு போன் வேணும். சொல்லு எதுக்கு என் பொழப்ப இப்படி கெடுத்த. உன் பொண்டாட்டி, புள்ளைங்க இப்படி நிக்கும்ல. எங்க பாவத்தை கொட்டிக்காதீங்க.
நான் யாரையும் அடிக்கவும் மாட்டேன், திட்டவும் மாட்டேன். நான் இப்ப விழுந்துட்டேன் தெரியுமா. எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகி இருந்தா என் பிள்ளை தானே அனாதையா நின்னுருக்கும்” என கண்ணீருடன் அந்த பெண் உணர்ச்சிவசமாக பேசும் விஷயம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
நெட்பிளிக்சில் படம் பார்த்துக் கொண்டே , உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டு, பீர் குடித்துக் கொண்டு இடையிடையே தம் அடித்துக் கொண்டு 10 மணி நேரம் செலவு செய்து காதலியை 32 துண்டுகளாக வெட்டி இருக்கிறார்.
எதுவும் நடக்காதது போல் அவர் இயல்பாக இருப்பதால் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி மனநிலையை அறிய முடியும் என்று நினைக்கின்றனர் போலீசார்.
டெல்லியில் மெஹ்ரவுளி என்கிற பகுதியில் அப்தாப் அமீன் – ஷ்ரத்தா இருவரும் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அமீனை வற்புறுத்தி வந்திருக்கிறார்.
இதில் ஏற்பட்ட சண்டையில் ஷ்ரத்தாவை அமீன் கொலை செய்திருக்கிறார். இந்த கொலையை மறைப்பதற்காக ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்திருக்கிறார். 18 நாட்களாக தினமும் இரண்டு பீஸ்களாக பிரிஜ்ஜில் இருந்து எடுத்துச் சென்று அப்புறப்படுத்தி இருக்கிறார்.
போலீசார் விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது போலவே, தான் எதையும் செய்யாத போலவே நடந்து கொள்கிறார் அமீன். உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால்தான் அமீனின் உண்மையான மனநிலையை அறிய முடியும் என்கிறார்கள்.
ஷ்ரத்தாவை கொலை செய்த பின்னர், உடலை எப்படி வெட்ட வேண்டும் என்று கூகுளில் படித்து தெரிந்து கொண்டிருக்கிறார். அதன் பின்னரே உடலை 35 துண்டுகளாக வெட்டி இருக்கிறார். இதற்கு 10 மணி நேரம் செலவாகி இருக்கிறது.
பீர் குடித்துக் கொண்டு , உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு, நெட்பிளிக்சில் சினிமா பார்த்துக் கொண்டே இடையிடையே தம் அடித்துக் கொண்டு ஒவ்வொரு துண்டுகளாக வெட்டி இருக்கிறார்.
இதனால் 32 துண்டுகளாக வெட்டி முடிக்க பத்து மணி நேரம் ஆகி இருக்கிறது என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஒவ்வொரு உறுப்பையும் வெட்டிய பின்னர் ரத்தக் கசிவு இல்லாமல் தண்ணீரில் நன்றாக அலசி இருக்கிறார்.
கிச்சனில் மட்டும் ஒரே ஒரு இடத்தில் ரத்தக்கரை இருந்திருக்கிறது . அதை தடயவியல் அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளார்கள். மேலும் 32 துண்டுகளாக அறுக்க பயன்படுத்திய ரம்பம் ஒன்றும் இருந்துள்ளது.
அதையும் போலீசார் மீட்டுள்ளனர். அமீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் மேற்கொண்டு தெரியவரும் என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வவுனியா பழைய பேருந்து நிலைய கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத விபச்சார கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கு பொலிசார் தவறிவிட்டனர்.
அங்கு அமர்ந்து மது அருந்துதல் கலாச்சார சீரழிவுகளால் மக்கள் நடமாட முடியவில்லை. வர்த்தக நிலையங்களில் இளைஞர் யுவதிகள் பணியாற்ற முடியவில்லை இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய பேருந்து நிலையத்தின் மறைவான சில பகுதிகளில் பதுங்கியிருக்கும் சில பெண்கள் விடுமுறையில் வீடு செல்லும் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சிலரைக் குறிவைத்து கலாச்சார சீரிழிவுகளை ஏற்படுத்தும் விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதிகளுக்கு வரும் பெண்களுக்கு பல்வேறு அசெளகரியங்கள் ஏற்படுகின்றன. பல்வேறு தேவைகளான மொழிபெயர்ப்பு, புத்தகசாலைகளுக்கு செல்பவர்கள் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் இளைஞர், யுவதிகள் பலருக்கு பல்வேறு அசெளகரியங்கள் ஏற்படுத்துகிறது.
அப்பகுதியில் தரித்து நிற்கும் பெண்களை அகற்றி அங்கு அமர்ந்து மதுபானம் அருந்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பொலிசார் பக்கச்சார்பின்றி மேற்கொள்ள முன்வருமாறு மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகள் ஜெபஸ்லீ. இவருக்கும் மானாமதுரை அருகே உள்ள மேலபசலையை சேர்ந்த திரவியம் மகனான ஜெகதீஷ் என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
திருமணத்திற்கு பிறகு ஜெபஸ்லீ மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் மானாமதுரையில் உள்ள பர்மா காலனியில் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் முதுகுளத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் ஜெகதீஷ் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனிடையே சில ஒரு சில தினங்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சனை காரணமாக ஜெபஸ்லீ விபரீத முடிவு எடுத்து உயிரிழந்ததாகவும் ஜெகதீஷ் குடும்பத்தினர் தெரிவித்ததாக ஜெபஸ்லீ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவரது உடல் மானாமதுரை அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஜெபஸ்லீ உறவினர்கள் அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் கூறி மானாமதுரை அரசு மருத்துவமனையில் மறியலிலும் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் கடும் பரபரப்பும் ஏற்பட்ட நிலையில், ஜெபஸ்லீ கணவரான ஜெகதீஷ் மீதும் அவர்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜெபஸ்லீ உறவினர்களை போலீசாரும் வந்து சமரசம் செய்ய முயன்றனர்.
மேலும், ஜெபஸ்லீயின் தாயார் பேசும்போது அவரது விபரீத முடிவுக்கு அவர் மட்டுமே காரணம் என நம்பியதாகவும், பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தால் அவரது உடலில் காயம் இருப்பதை பார்த்ததாகவும், கைவளையல்கள் உடைந்து கிடந்ததாகவும், எனவே அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் அவரது தரப்பில் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
இந்தியாவில் லலித் படிதார் என்ற இளைஞர் ஓநாய் தோற்றத்தை ஏற்படுத்தும் ஹைபர்டிரிகோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் நாண்ட்லெட் என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயதான லலித் படிதார் என்ற இளைஞர் ஓநாய் தோற்றத்தை ஏற்படுத்தும் ஹைபர்டிரிகோசிஸ் (Hypertrichosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லலித் படிதாரின் முகம் முழுவதும் பரவி உள்ள முடிகள் புராண உயிரினமான ஓநாய் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த பாதிப்பானது பூமியின் இடைக்காலத்தில் இருந்து வெறும் 50 பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது, அதில் இந்தியாவின் லலித் படிதாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லலித் படிதார் இந்த நோய் பாதிப்பு குறித்து தெரிவித்த தகவலில், நான் மிகவும் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்தவன், எனது தந்தை ஒரு விவசாயி, சிறு குழந்தையில் இந்த பாதிப்பு குறித்து எந்தவொரு விழிப்பும் எனக்கு இல்லை, ஆனால் சிறிது வளர்ந்த பிறகு நான் மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவன் என்று உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் என்னை சகமாணவர்கள் குரங்கு, குரங்கு என்று கூவி கிண்டல் செய்வார்கள், குழந்தைகளோ நான் கடித்து விடுவேன் என்று பயந்து ஓடுவார்கள், சிலர் என்னை பயங்கர விலங்கு என்று நினைத்து கல்லால் அடித்து துரத்திய நாட்களும் உண்டு என தெரிவித்துள்ளார்.
நான் இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன், என் வாழ்க்கை நான் ஒருபோதும் விட்டு தர போவது இல்லை, நான் தொடர்ந்து முன்னேறுவேன் என தெரிவித்துள்ளார். ஹைபர்டிரிகோசிஸ் நோய் என்பது மனித உடல் பாகங்களில் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது ஆகும்.
இதனை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகின்றனர், முதல்வகை உடல் பாகம் முழுவதும் அதிகமான முடி வளர்வது, இரண்டாவது வகை சில குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து மற்ற பாகங்களில் அதிகமான முடி வளர்வது.
இந்த நோய் பெரும்பாலும் புராண உயிரினமான ஓநாயின் தோற்றத்தை ஏற்படுத்துவதால் இதனை ஓநாய் நோய் குறைபாடு (werewolf syndrome) என்றும் அழைக்கின்றனர்.
A 13 ans, Lalit Patidar est atteint du syndrome du "loup-garou" une maladie incurable caractérisée par un excès de poils sur le visage. pic.twitter.com/DywQtfspCn
பிரேசிலில் மாடல் அழகி தனது காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓட்டலில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ்.
இவர் தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன் பிரேசிலியாவில் உள்ள பார்க்வே ஓட்டலில் தங்கி இருந்தார்.
அழகி மார்செல்லா போதையில் இருந்த நிலையில் அதிகாலையில், அவர்களுக்குள் சண்டை ஏறபட்டு உள்ளது.
அப்போது லோம்பார்டியிடம் இருந்து கைத்துப்பாக்கியைப் பறித்த மார்செல்லா அவரை சுட்டு உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த காதலர் லோம்பார்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே மாடல் அழகி ஓட்டலின் வாயிலில் இருந்த டிரைவரை தாக்கிவிட்டு லோம்பார்டியின் காரில் தப்பி சென்று உள்ளார். இதுத்தொடர்பாக அந்நாட்டு போலிசார விசாரித்து வருகின்றனர்.
மாடல் அழகியும் லோம்பார்டியாவும் ஜனவரி 2023 இல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.
தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தை சேர்ந்தவர் வினோதினி (எ) அனிதா.. இவருக்கு 26 வயதாகிறது.. இவர் அந்தோணி ஜெகன் என்பவரை காதலித்து வந்தார்.. அந்தோணிக்கு 24 வயதாகிறது.
விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி… இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், 2 பேர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது..
எனவே, வினோதினிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.. கடந்த 2018 செப்டம்பர் 12ம் தேதி தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கதிரவனுடன் திருமணம் நடந்தது… தம்பதி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். ஆனால், வினோதினிக்கும் அந்தோணிக்குமான உறவு அப்போதும் தொடர்ந்தது.
கடந்த 2018 அக்டோபர் 12ம் தேதி, திருவான்மியூர் பீச்சுக்கு போக வேண்டும் என்று வினோதினி சொல்லவும், கதிரவன் அழைத்து வந்துள்ளார்.. அப்போது, பீச்சில், கண்ணாமூச்சி ஆடலாம் என்று அழைத்து, கதிரவனுக்கு கண்ணை கட்டிவிட்டுள்ளார்..
முன்னதாக, அங்கு ஏற்கனவே அந்தோணியை வரவழைத்திருந்தார் வினோதினி.. தயாராக வைத்திருந்த அரிவாளாலேயே கதிரவனை சரமாரியாக வெட்டி சாய்த்தார் அந்தோணி.
தன் கழுத்தில் இருந்து தாலியை கழட்டி தந்து, அந்தோணியிடம் தந்து, அவரை அங்கிருந்து தப்ப வைத்தார் வினோதினி.. “திருடன் திருடன்” என்று கத்தி கூச்சல் போட்டு நாடகம் ஆடினார்.. இறுதியில் போலீசார் வந்து அங்கிருந்த சிசிடிவியை பார்த்ததும்தான், இவர்களின் கள்ளக்காதல் அம்பலமானது..
இந்த கள்ளஜோடி சேர்ந்தே கைதானார்கள்.. சேர்ந்தே புழலுக்கும் போனார்கள்.. 4 வருடத்துக்குமுன்பு இந்த கொலை சம்பவம், மீடியாக்களில் முக்கிய இடத்தை பிடித்தது.. காரணம், புதுமணப்பெண் வினோதியின் வாக்குமூலம் அந்த அளவுக்கு அதிர்ச்சியை அப்போது தந்திருந்தது.
போலீசாரிடம் வினோதினி தன்னுடைய வாக்குமூலத்தில், “என்னைவிட 3 வயது குறைந்தவர் அந்தோணி.. எங்கள் காதல் வீட்டுக்கு தெரிந்துவிட்டது.. ஆனாலும், சில காரணங்களுக்காக இந்த காதலை என் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.. அவசர அவசரமாக எனக்கு கதிரவனுடன் கல்யாணம் செய்து வைத்துவிட்டனர்…
நான் விதவையானால், கண்டிப்பாக அந்தோணியுடன் சேர்த்து வைத்துவிடுவார்கள் என்று நம்பினேன்.. அதனால்தான், கதிரவனை கொலை செய்ய பிளான் செய்தேன்” என்றார் வினோதினி.
முதலில் வழிப்பறி கேஸ் என்றுதான் இந்த வழக்கை திருவான்மியூர் போலீஸார் பதிவு செய்திருந்தனர்.. அதற்கு பிறகு, சிசிடிவி ஆய்வில் உண்மை தெரியவந்ததையடுத்துதான், அதை கொலை கேஸாக மாற்றி உள்ளனர்..
ஆரம்பத்தில், வினோதினி காலேஜ் போகும்போதெல்லாம் அந்த பஸ்ஸில் அந்தோணியும் வருவாராம்.. சில சமயம், பஸ்ஸில் இடம் இல்லாமல் நிற்கும்போது, வினோதினி அவருக்காக இடம் பிடித்தும் வைப்பாராம்.. இந்த பழக்கம்தான், இவர்களுக்குள் காதலாக மலர்ந்துள்ளது.
காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து, கதிரவனை மாப்பிள்ளையாக்கி உள்ளனர்.. ஆனால், அனிதா, கதிரவனுடன் சேர்ந்து வாழாமலேயே இருந்துள்ளார். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று அனிதாவின் பெற்றோரும் கருதியுள்ளனர்…
கதிரவனும் பொறுமையாகவே இருந்துள்ளார். திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்குப்பிறகுதான், கதிரவனிடம் மெல்ல பேச்சு தந்தாராம் வினோதினி.. ஜாலியாக வெளியில் போலாமா? திருவான்மியூர் பீச்சுக்கு போலாமா? என்று அழைத்ததும், கதிரவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது..
திருவான்மியூர் பீச்சில் தம்பதி இருவருமே உட்கார்ந்து மனம் விட்டு தனிமையில் பேசியிருக்கிறார்கள்.. திருமணம் ஆனதில் இருந்து, கதிரவனிடம் முகம் கொடுத்துகூட பேசாமல் இருந்த வினோதினி, அன்றுதான், நிறைய நிறைய பேசினாராம்.. அதையெல்லாம் கேட்டு, இனிமேல்தான், தனக்கு இல்லற வாழ்க்கை இனிக்க போகிறது ஏன்று கதிரவன் மனதில் மனக்கோட்டை கட்டியுள்ளார்…
இவர்கள் மனம்விட்டு பேசி முடித்ததுமே, “கண்ணாமூச்சி விளையாடலாமா” என்று வினோதினி கேட்டுள்ளார்.. கதிரவனும் சந்தோஷமாக சம்மதித்துள்ளார்.. கர்சிப்பை எடுத்து கதிரவனுக்கு கட்டி விட்டுள்ளார் வினோதினி.. அதோடு சரி.. கதிரவனின் கண்கள் அப்போதே முழுமையாக இருட்டிவிட்டது.. அதற்கு பிறகு, அவரது இருண்ட உலகம் விடியவேயில்லை
ஆவடி அருகே பட்டாபிராமில் மகன் உயிரிழந்த சோகத்தில் தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (50). விவசாயி. இவரது மனைவி பூங்கொடி (44). இத்தம்பதியின் மகன் ஹரிஷ்(17), உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார்.
இவரின் முதலாண்டு நினைவு நாள் அடுத்த மாதம் வர உள்ளது. இதற்கிடையே மகன் உயிரிழந்ததால் மிகுந்த மன உளைச்சலில் தனசேகர்- பூங்கொடி தம்பதி இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தனசேகரின் தாயார் பூங்காவனம் நேற்று காலை தனசேகர் வசிக்கும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு தனசேகர், பூங்கொடி இருவரும் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்து கிடந்ததும், அருகில் பூச்சி கொல்லி மருந்து பாக்கெட், குளிர்பான பாட்டில் ஆகியவை கிடந்ததும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த பட்டாபிராம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, தனசேகர், பூங்கொடி உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மகன் உயிரிழந்த சோகத்தில் தனசேகர்- பூங்கொடி தம்பதி குளிர்பானத்தில் பூச்சி கொல்லி மருந்து கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் என்னும் பகுதியை சேர்ந்தவர் வினோதினி. இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கதிரவன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு பிறகு சென்னையில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புது ஜோடிகளான வினோதினி மற்றும் கதிரவன் ஆகியோர் திருவான்மியூர் பீச்சுக்கு சென்றுள்ளனர்.
அங்கே கணவரின் கண்களை துணி கொண்டு கட்டி கண்ணாமூச்சி விளையாடி உள்ளார் வினோதினி. இதனிடையே, தனது தாலியை பறித்துக் கொண்டு ஓடிய மர்ம நபர்கள், தனது கணவரை வெட்டி தப்பித்து சென்றதாகவும் வினோதினி அலறி உள்ளார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கதிரவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அங்கே சிகிச்சை பலனின்றி கதிரவன் உயிரிழந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருவான்மியூர் பீச் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது இந்த சம்பவத்தை அப்படியே தலைகீழாக திருப்பி போடும் அதிர்ச்சி தகவல் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதன் படி, ஒரு நபரிடம் வினோதினி தனது தாலியை கழற்றி கொடுப்பது தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை என்ன என்பதும் தெரிய வந்தது. அதன்படி, கதிரவனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக, விளாத்திகுளம் பகுதியை அடுத்த குருவார்பட்டி என்னும் இடத்தை சேர்ந்த அந்தோணி ஜெகன் என்பவரை வினோதினி காதலித்து வந்துள்ளார்.
இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், வினோதினி மற்றும் அந்தோணி ஆகியோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தெரிகிறது.
இதன் பின்னர் தான் கதிரவனை திருமணம் செய்துள்ளார் வினோதினி. ஆனாலும், அந்தோணி ஜெகனுடன் தொடர்பில் வினோதினி இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி தான் திருவான்மியூர் பீச்சுக்கு கணவருடன் வினோதினி சென்ற சமயத்தில் அங்கே அந்தோணி ஜெகனையும் அவர் வர வைத்துள்ளார்.
இதன் பின்னர், கண்ணாமூச்சி ஆடுவது போல நாடகமாடிய சமயத்தில் கதிரவனை அந்தோணி ஜெகன் கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வினோதினி மற்றும் அந்தோணி ஜெகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வினோதினி மற்றும் அந்தோணி ஜெகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
தாய் இறந்த மூன்று மாதத்திலேயே தந்தைக்கு தங்களது தாயின் அக்காவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்களின் செயல் கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் இறந்த மூன்று மாதத்திலேயே தந்தைக்கு தங்களது தாயின் அக்காவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்களின் செயல் கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி என்ற பகுதியிலுள்ள அரவிந்த் நகரில் வசித்து வருபவர் டி.கே.சவான். பாஜக மூத்த தலைவரான இவர், கடந்த 2018-ம் ஆண்டில் ஹூப்ளி நகரின் மேயராக இருந்துள்ளார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி சாரதா பாய் என்ற மனைவியும் 4 மகள்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.
மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் டி.கே.சவானின் மனைவி, சாரதா (வயது 63) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து மனைவி இறந்த துயரத்தில் இருந்து மீளாத தந்தைக்கு மறுமணம் செய்து வைக்க மகள்கள் எண்ணியுள்ளனர். இது குறித்து தந்தையிடம் கேட்ட போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
பின்னர் குடும்பத்தினர் சவானை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர். தொடர்ந்து தங்களது தந்தைக்கு வெளியில் இருந்து பெண் பார்ப்பதை விட, தங்களுக்கு தெரிந்தவரே இரண்டாம் தாயாக வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய மகள்கள், தங்களது தாயின் அக்கா (பெரியம்மா) அனுஸ்யாவை அணுகியுள்ளனர்.
இதுவரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் அவரை சம்மதிக்க வைத்தனர். மேலும் குடும்பத்தினர் அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்து தங்களது பெரியம்மாவை தந்தைக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்து திருமண ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தனர்.
அதன்படி கடந்த 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு கோலாகலமாக சவான் – அனுஸ்யா திருமணம் நடந்து முடிந்தது. இதில் இவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
தாய் இறந்த மூன்று மாதத்திலேயே தந்தைக்கு தங்களது பெரியம்மாவை இரண்டாம் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்களின் செயல் கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் இளம் பெண் ஒருவர் கர்ப்பம் தறித்த 11வது மாதத்தில் 11-ந் திகதியில் அவரது 11வது குழந்தையை பெற்று எடுத்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சது நார்ட்லிங் என்ற பெண்மணி தனது 21வது வயதில் முதல் முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஆனால் சது நார்ட்லிங்கின் கருப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரது முதல் கர்ப்பம் கலைந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவருக்கு இருந்த அதிகமான மன அழுத்தம் காரணமாக அவரது உடல் கருமுட்டையை வெளியேற்றும் திறனை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவருக்கு குழந்தைகளே பெற்றுக் கொள்ள முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையே பிறக்காது என மருத்துவர்களால் கூறப்பட்ட சது நார்ட்லிங், தற்போது தனது 11வது குழந்தையை அதிசயமான முறையில் பெற்றெடுத்துள்ளார்.
பெரும்பாலும் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் அதிகபட்ச காலம் 10 மாதங்கள் என்பது அனைவரும் அறிந்தது, சில சமயம் அது குறைவான மாதத்தில் நிகழ்வதும் உண்டு, ஆனால் சது நார்ட்லிங் கர்ப்பமாகி 11வது மாதத்தில் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஏற்கனவே 10 குழந்தைகளுக்கு தாயான சது நார்ட்லிங், கர்ப்பமான 11வது மாதத்தில் 11ம் திகதியில் 11வது குழந்தையை பெற்றெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சது நார்ட்லிங்-க்கு 11ல் என்ன ராசியோ தெரியவில்லை அவரது 11வது குழந்தை 11 என்ற இலக்கங்களில் பிறந்துள்ளது. சது நார்ட்லிங்-க்கு 2008ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று சித்திரவதைக்கு உட்பட்டுவரும் தனது மகள் உட்பட 90 பெண்களை மீட்டுத்தருமாறு ஓட்டமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயாரான முகமது இஸ்மாயில் சித்திக்நிசாவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய 2 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான முகமது அஸீம் பாத்திமா ஹமீதியாவே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.
இலங்கையில் இருந்து தனது மகளை டுபாயில் வீட்டு பணிக்காக அழைத்துச் செல்வதாக முகவரகம் பொய்க்கூறி, ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளதாகவும் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக மட்டக்களப்பு வேலைவாய்ப்பு பணியகம், 16 தரம் வேலைவாய்ப்பு பணியகம், மனித உரிமை ஆணைக்குழு, சிறுவர் நன்னடத்தை பிரிவு என தனது மகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் தனது மகள், அவருடன் அங்கு 90பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக காணொளியொன்றினை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை அந்த பகுதியைச் 9, 10 வயது இருபெண் குழந்தைளின் தாயாரான பர்திமா ஸபீரா என்பவரும் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதால், அவரையும் மீட்டு தருமாறு அவரது தாயாரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.