ஐரோப்பாவில் இளம் பெண் ஒருவர் கர்ப்பம் தறித்த 11வது மாதத்தில் 11-ந் திகதியில் அவரது 11வது குழந்தையை பெற்று எடுத்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சது நார்ட்லிங் என்ற பெண்மணி தனது 21வது வயதில் முதல் முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஆனால் சது நார்ட்லிங்கின் கருப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரது முதல் கர்ப்பம் கலைந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவருக்கு இருந்த அதிகமான மன அழுத்தம் காரணமாக அவரது உடல் கருமுட்டையை வெளியேற்றும் திறனை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவருக்கு குழந்தைகளே பெற்றுக் கொள்ள முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையே பிறக்காது என மருத்துவர்களால் கூறப்பட்ட சது நார்ட்லிங், தற்போது தனது 11வது குழந்தையை அதிசயமான முறையில் பெற்றெடுத்துள்ளார்.
பெரும்பாலும் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் அதிகபட்ச காலம் 10 மாதங்கள் என்பது அனைவரும் அறிந்தது, சில சமயம் அது குறைவான மாதத்தில் நிகழ்வதும் உண்டு, ஆனால் சது நார்ட்லிங் கர்ப்பமாகி 11வது மாதத்தில் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஏற்கனவே 10 குழந்தைகளுக்கு தாயான சது நார்ட்லிங், கர்ப்பமான 11வது மாதத்தில் 11ம் திகதியில் 11வது குழந்தையை பெற்றெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சது நார்ட்லிங்-க்கு 11ல் என்ன ராசியோ தெரியவில்லை அவரது 11வது குழந்தை 11 என்ற இலக்கங்களில் பிறந்துள்ளது. சது நார்ட்லிங்-க்கு 2008ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று சித்திரவதைக்கு உட்பட்டுவரும் தனது மகள் உட்பட 90 பெண்களை மீட்டுத்தருமாறு ஓட்டமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயாரான முகமது இஸ்மாயில் சித்திக்நிசாவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய 2 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான முகமது அஸீம் பாத்திமா ஹமீதியாவே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.
இலங்கையில் இருந்து தனது மகளை டுபாயில் வீட்டு பணிக்காக அழைத்துச் செல்வதாக முகவரகம் பொய்க்கூறி, ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளதாகவும் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக மட்டக்களப்பு வேலைவாய்ப்பு பணியகம், 16 தரம் வேலைவாய்ப்பு பணியகம், மனித உரிமை ஆணைக்குழு, சிறுவர் நன்னடத்தை பிரிவு என தனது மகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் தனது மகள், அவருடன் அங்கு 90பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக காணொளியொன்றினை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை அந்த பகுதியைச் 9, 10 வயது இருபெண் குழந்தைளின் தாயாரான பர்திமா ஸபீரா என்பவரும் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதால், அவரையும் மீட்டு தருமாறு அவரது தாயாரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பதினைந்து வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆராய்ந்தபோதே குறித்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதன்போது திருநெல்வேலி பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி, பிறந்து 12 நாட்களேயான சிசுவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த சிறுமி 18 வயதான இளைஞருடன் குடும்பம் நடத்துவதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாத்துவ பொதுப்பிட்டிய பணாபிட்டிய வீதியை சேர்ந்த யசிரு சம்பத் பெர்னாண்டோ மற்றும் வாத்துவ தெல்துவ அரியகம பிரதேசத்தை சேர்ந்த சங்தேஷ் சுலோச்சன பியரத்ன ஆகிய 18 வயதுடைய இரு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பண்டாரகம வீதியில் இளைஞர்கள் குழுவுடன் உல்லாசமாக மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்த போது, உயிரிழந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இரு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஏனைய இளைஞர்கள் விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரந்துடுவ பொலிஸார் வந்து வீதியில் படுகாயமடைந்து இருந்த இரு இளைஞர்களையும் மீட்டு மொரந்துடுவ கோனதுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை மரணமடைந்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா(வயது 17). ராணிமேரி கல்லூரியில் படித்து வருகிறார், கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் மூட்டுவலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியுள்ளதாக கூறி அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
அப்போது, மிக இறுக்கமாக சுருக்கு கட்டு போடப்பட்டதால், ரத்த ஓட்டம் தடைபட்டு, ரத்தநாளங்கள் பழுதானது. இதனையடுத்து பிரியா மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், மேலும் தொற்று பரவாமல் இருக்க பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிறுநீரகம், ஈரல் போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்படைய சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
பிரியாவின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, கவனக்குறைவாக செயல்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் கே.சோமசுந்தர், எலும்பியல் மருத்துவர் ஏ.பால் ராம் சங்கர் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவு நகலை வழங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்ற போது, இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. இவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
தந்தையை தந்திரமாக கொன்றது குறித்து தனது காதலனிடம் போனில் தெரிவித்த அம்மாவை ஆதாரத்துடன் அவரது சொந்த மகளே பொலிஸாரிடம் பிடித்து கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சனா ராம்தேகே என்பவரின் கணவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டார்.
கணவர் இரவில் தூங்கி கொண்டு இருக்கும் போது மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்று மனைவி ரஞ்சனா ராம்தேகே அனைத்து உறவினருக்கும் மூன்று மாதங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் தான் கணவனை தூக்கத்தில் தலையணையை கொண்டு மூச்சிறைக்க வைத்து கொலை செய்துள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது. தந்தை இறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தாயை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த மகள், தாயின் தொலைபேசியை தற்செயலாக பார்த்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது தாய் ரஞ்சனா ராம்தேகே அவரது கணவனை எவ்வாறு கொலை செய்தேன் என்று அவரது காதலன் முகேஷ் திரிவேதி-யிடம் விளக்கும் ஆடியோவை கேட்டு மகள் பதறிப்போய் உள்ளார்.
அதில் தனது கணவர் இரவு நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது தலையணையை நன்றாக வைத்து அழுத்தி கொன்றதாக காதலன் முகேஷ் திரிவேதி-க்கு விளக்கியுள்ளார்.
அத்துடன் காலை எழுந்தவுடன் அனைத்து உறவினருக்கும் கணவன் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தாகவும், யாருக்கும் எத்தகைய சந்தேகமும் வரவில்லை என்றும் பேசியுள்ளார்.
தாயின் ஆடியோவை கேட்டு மிரண்டு போன மகள் உடனடியாக ஆடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து மனைவி ரஞ்சனா ராம்தேகே மற்றும் காதலன் முகேஷ் திரிவேதி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரித்ததில் கணவனை கொலை செய்ததை ரஞ்சனா ராம்தேகே ஒப்புக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் வவுனியாவில் இன்று (19.11.2022) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், குறித்த அலுவலகத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.இளங்கோபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைளையும், மக்களது பிரச்சனைகளையும் விரைவாக தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளது.
இதன் போது, வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட பயனாளிகள் 32 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், போரால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு இழப்பீடுகளும், 10 விவசாயிகளுக்கு மானிய உரமும் ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தோனந்தா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்,
வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார் இன்று (19.11.2022) அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலுக்கு முன்பாக 12 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எமக்குத்தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம், அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் வந்து எமக்கு உதவி செய்து நேரடியாக வந்து இப்பிரச்சினையைத்தீர்த்து வைக்க வேண்டும்.
நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி இங்கிருந்து போராடி வருகின்றோம் என போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்.
பால்நிலை பாரபட்சம்மிக்க சழூக நியமங்களும் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களில் அவற்றின் தாக்கமும் எனும் கருவை மையமாகக் கொண்டு ”நிலைமாற்றத்திற்கான பயணம் நாடக விழா” எனும் கருப்பொருளின் கீழ் நாடகங்கள் இடம்பெறவுள்ளன.
சட்டம் மற்றும் சழூக நம்பிக்கை நிறுவனம் அனுசரனையில் இடம்பெறும் நாடகங்களின் ஆற்றுகை வவுனியா நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
செம்முகம் ஆற்றுகைக்குழுவின் மனச்சிறை, சாப்பாட்டு மேசை ஆகிய நாடங்கள் அரங்கில் இடம்பெறவுள்ளன. இவற்றிக்கான அனுமதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன் மாணவர்கள் , பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு நாடகங்களின் ஆற்றுகையினை கண்டுகளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் தலையகத்தில் விசேட உலங்குவானூர்தி மூலம் வருகை தந்தார்.
இன்று (19.11) காலை 9 மணிக்கு வருகை தந்த ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டம் இடம்பெற்றது. இதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாம் தற்போது ஆராய்ந்து வருகின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வவுனியா நகர மண்டபத்தில் இன்று (19.11) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் பசும்பால் கைத்தொழில் இந்திய உதவியின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடவும் நீங்கள் இச்சந்தர்ப்பத்தில் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைக் கட்டுப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். இத்திட்டம் 2023 இறுதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பதை பின்னர் பரிசீலிப்போம்.
உலகளாவிய உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் ஏற்படலாம். அவ்வாறான சூழ்நிலையில், இலங்கையைப் பாதுகாக்க இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் முக்கியமானது என்றே கூற வேண்டும். ஆபிரிக்கா ஏற்கனவே உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
நாம் பெரும்போகத்தில் வெற்றிக் கண்டுள்ளோம். ஏனைய பயிர்ச்செய்கையிலும் இதுபோன்ற விளைச்சல் கிடைத்தால், எளிதில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம். இதைத் தவிர, இன்னும் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று போஷாக்குக் குறைபாட்டைக் கட்டுப்படுத்தல், இரண்டாவது கிடைக்கும் விளைச்சலைப் பாதுகாத்தல் ஆகும்.
அறுவடையின் போது ஏற்படும் விரயத்தைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, அவற்றை சேமிப்பதற்கும் நுகர்வோருக்கு விநியோகிக்கும் பணிகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.
இதில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளன. கிடைக்கும் மேலதிக உணவைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
இதேபோன்று இம்மாவட்டங்களில் நிலவும் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் தெரிய வந்துள்ளன. அவற்றுக்கான தீர்வுகளை விரைவில் வழங்க எதிர்பார்க்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்க முடியும்.
ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிக டொலர்களை உழைக்கும் பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
அதற்கான வேலைத்திட்டத்தை நான் 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளேன். அதற்கமைய வடக்கில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல, வன்னிக்கும் இதில் பொறுப்பு உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
எங்களுக்கு ஒரு புதிய ஆற்றல்மிக்க பொருளாதாரம் தேவை. இதன் முக்கிய பகுதி வட மாகாணமாகும். அதன் மூலம் நிறைய அந்நியச் செலாவணியைப் பெறலாம்.
மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. புதிய பயிர்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். கறுவா போன்ற பயிர்களை வளர்க்க இங்கு வாய்ப்பு உள்ளது.
கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தலாம். இதுபோன்ற பல வேலைத்திட்டங்கள் உள்ளன. 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் இவ்வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த விடயத்தில் வன்னிக்கும் பாரிய பொறுப்பு உண்டு என்பதை நான் கூற விரும்புகின்றேன்.
வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாம் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இவை அனைத்தும் நடைபெற உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
வவுனியா மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதேச செயலாளர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதுர்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன்,
குலசிங்கம் திலீபன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வவுனியாவிற்கு இன்று (19.11.2022) காலை வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாவட்ட செயலத்தில் அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல், வவுனியா நகரசபை மண்டபத்தில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி வருகைதந்த சமயத்தில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமையுடன் பல மணிநேரமாக இரு தரப்பினருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டிருந்தமையுடன் ஜனாதிபதி சென்றமையுடன் போராட்டம் நிறைவுற்றிருந்தது.
வவுனியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19.11.2022) காலை வருகை தரவுள்ளமையினையடுத்து நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர் , விசேட அதிரடிப்படையினர் , இராணுவம், பொலிஸார் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் போராட்டங்களை தடுக்கும் முகமாக கலகம் தடுக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் மொத்த மரக்கறி வியாபாராத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தொகுதி அமைக்கபடும் வரை தற்காலிகமாக வவுனியா பிராந்தியப் பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா நகரத்தில் நீண்ட காலமாக மொத்த வியாபாரத்தை நடத்தி வரும் இடத்தில் மொத்த வியாபாரிகளின் பங்களிப்புடன் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய நவீன கடைத் தொகுதியொன்றை பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கான கலந்துரையாடலொன்று கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஏற்பாட்டில்,
நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர் மற்றும் உயரதிகாரிகளின் பங்கேற்போடு வவுனியா மொத்த வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் (16) நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மொத்த வியாபாரிகளுக்கான புதிய கடைத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதால் இடைப்பட்ட காலத்திற்கு வவுனியா பிராந்தியப் பொருளாதார மத்திய நிலையத்தில் அவர்களின் மொத்த வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உடன்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையமாக 291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளையதினம் (19.11.2022) ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர் எனும் தலைப்பில் ஒருவருடைய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இணையத்தின் வளர்ச்சியினால் சமூக வலை தளங்கள் தற்போது கோலோச்சி வருகின்றன.
சமூக வலை தளங்களை பொறுத்தவரையில் விநோதமான செய்திகளுக்கும் வீடியோக்களுக்கும் எப்போதுமே பஞ்சம் இருப்பதில்லை. இதுபோன்ற விஷயங்கள் உடனடியாக சோசியல் மீடியாவில் வைரலாகி விடுவதும் உண்டு.
அந்தவகையில் தற்போது உலகின் மிக நீளமான மூக்குடைய நபர் என அழைக்கப்படும் ஒருவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் Historic Vids எனும் பக்கத்தில் தான் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருக்கிறது.
தாமஸ் வெடர்ஸ் என்பவரின் மெழுகுச்சிலை Ripley’s Believe It Or Not அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையின் புகைப்படம் தான் Historic Vids எனும் பக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி பகிரப்பட்டிருக்கிறது.
அப்பதிவில்,”தாமஸ் வாட்ஹவுஸ் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஆங்கில சர்க்கஸ் கலைஞர் ஆவார். 7.5 இன்ச் (19 செமீ) நீளம் கொண்ட உலகின் மிக நீளமான மூக்கைக் கொண்டவர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதனை கின்னஸ் நிர்வாக அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. தாமஸ் பற்றி கின்னஸ் இணையதளத்திலும் குறிப்பு இருக்கிறது. அதில்,”1770 களில் இங்கிலாந்தில் வாழ்ந்த பயண ஃப்ரிக் சர்க்கஸ் (travelling freak circus) உறுப்பினரான தாமஸ் வெடர்ஸ், 19 செமீ (7.5 அங்குலம்) நீளமுள்ள மூக்கைக் கொண்டிருந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாமஸ் குறித்த Historic Vids-ன் இந்த பதிவு தற்போது படுவைரலாக பரவி வருகிறது. இதை 1.2 லட்சம் பேர் லைக் செய்திருக்கின்றனர்.
இருப்பினும் சமகாலத்தில் உலகின் மிக நீளமான மூக்கை கொண்டவர் (ஆன்) துருக்கி நாட்டை சேர்ந்த மெஹ்மெட் ஓசியூரெக் என்பவர் தான். இதனை கின்னஸ் நிர்வாகம் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தியிருந்தது. இவருடைய மூக்கின் நீளம் 3.46 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை 70 வயது தாத்தா காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. Syed Basit Ali என்பவரின் யூடியூப் பக்கத்தில் சமீபத்தில் வெளியான வீடியோ டிரெண்டாகி வருகிறது.
இவர் பாகிஸ்தானில் வயது வித்தியாசமின்றி திருமணம் செய்து கொள்ளும் நபர்களை பேட்டி எடுத்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 70 வயது தாத்தாவின் காதல் கதை டிரெண்டாகியுள்ளது.
லாகூரில் தினமும் காலை வாக்கிங் செல்லும் போது லியாக்கத் அலி(வயது 70) என்பவர் சுமைலா அலியை(வயது 19) சந்தித்துள்ளார். லியாக்கத் அலிக்கு அந்த பெண்ணை பிடித்துப்போக, மறுநாள் அவளுக்கு பின்னால் சென்றபடியே பாட்டு ஒன்றை பாடியுள்ளார்.
இதில் மயங்கிப் போன சுமைலாவுக்கு, லியாக்கத் அலியை பிடித்துவிட்டது, அன்று தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. காதலுக்கு வயதில்லை என இருவரும் கூறினாலும், இத்திருமணத்திற்கு சுமைலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் தங்கள் காதல் அவர்களை வென்றுவிட்டதாகவும், பல போராட்டங்களுக்கு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுவரையிலும் வெளியிடங்களில் சாப்பிட்டு வந்த லியாக்கத் அலி, தன் மனைவி சுமைலாவின் சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடுவதாக மகிழ்கிறார். எந்த வயதிலும் எந்த நேரத்திலும் காதல் வரலாம், மனதால் நான் இளமையானவன் என கூறுகிறார் லியாக்கத் அலி.
சட்டப்படி திருமண வயது வந்த எவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம், நாங்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்கிறோம், எங்களுக்குள் வயது எப்போதும் ஒரு தடையாக இருக்காது என்கிறார். இதையே ஆமோதிக்கும் சுமைலா, காதல் மட்டுமே தங்களை இணைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.