வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது குறித்து ஆய்வு : வவுனியாவில் ஐனாதிபதி!!

ஜனாதிபதி..

வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாம் தற்போது ஆராய்ந்து வருகின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வவுனியா நகர மண்டபத்தில் இன்று (19.11) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் பசும்பால் கைத்தொழில் இந்திய உதவியின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடவும் நீங்கள் இச்சந்தர்ப்பத்தில் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைக் கட்டுப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். இத்திட்டம் 2023 இறுதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பதை பின்னர் பரிசீலிப்போம்.

உலகளாவிய உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் ஏற்படலாம். அவ்வாறான சூழ்நிலையில், இலங்கையைப் பாதுகாக்க இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் முக்கியமானது என்றே கூற வேண்டும். ஆபிரிக்கா ஏற்கனவே உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.

நாம் பெரும்போகத்தில் வெற்றிக் கண்டுள்ளோம். ஏனைய பயிர்ச்செய்கையிலும் இதுபோன்ற விளைச்சல் கிடைத்தால், எளிதில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம். இதைத் தவிர, இன்னும் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று போஷாக்குக் குறைபாட்டைக் கட்டுப்படுத்தல், இரண்டாவது கிடைக்கும் விளைச்சலைப் பாதுகாத்தல் ஆகும்.

அறுவடையின் போது ஏற்படும் விரயத்தைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, அவற்றை சேமிப்பதற்கும் நுகர்வோருக்கு விநியோகிக்கும் பணிகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.

இதில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளன. கிடைக்கும் மேலதிக உணவைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

இதேபோன்று இம்மாவட்டங்களில் நிலவும் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் தெரிய வந்துள்ளன. அவற்றுக்கான தீர்வுகளை விரைவில் வழங்க எதிர்பார்க்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்க முடியும்.

ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிக டொலர்களை உழைக்கும் பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

அதற்கான வேலைத்திட்டத்தை நான் 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளேன். அதற்கமைய வடக்கில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல, வன்னிக்கும் இதில் பொறுப்பு உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

எங்களுக்கு ஒரு புதிய ஆற்றல்மிக்க பொருளாதாரம் தேவை. இதன் முக்கிய பகுதி வட மாகாணமாகும். அதன் மூலம் நிறைய அந்நியச் செலாவணியைப் பெறலாம்.

மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. புதிய பயிர்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். கறுவா போன்ற பயிர்களை வளர்க்க இங்கு வாய்ப்பு உள்ளது.

கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தலாம். இதுபோன்ற பல வேலைத்திட்டங்கள் உள்ளன. 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் இவ்வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த விடயத்தில் வன்னிக்கும் பாரிய பொறுப்பு உண்டு என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாம் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இவை அனைத்தும் நடைபெற உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

வவுனியா மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதேச செயலாளர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதுர்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன்,

குலசிங்கம் திலீபன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!!

போராட்டம்..

வவுனியாவிற்கு இன்று (19.11.2022) காலை வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாவட்ட செயலத்தில் அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல், வவுனியா நகரசபை மண்டபத்தில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி வருகைதந்த சமயத்தில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமையுடன் பல மணிநேரமாக இரு தரப்பினருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டிருந்தமையுடன் ஜனாதிபதி சென்றமையுடன் போராட்டம் நிறைவுற்றிருந்தது.

வவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம் : பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!!

ஜனாதிபதி விஜயம்..

வவுனியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19.11.2022) காலை வருகை தரவுள்ளமையினையடுத்து நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர் , விசேட அதிரடிப்படையினர் , இராணுவம், பொலிஸார் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் போராட்டங்களை தடுக்கும் முகமாக கலகம் தடுக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தற்காலிக பாவனைக்கு மாத்திரம் : விரைவில் மாற்று வசதிகளுடன் புதிய கட்டிடம்!!

பொருளாதார மத்திய நிலையம்..

வவுனியாவில் மொத்த மரக்கறி வியாபாராத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தொகுதி அமைக்கபடும் வரை தற்காலிகமாக வவுனியா பிராந்தியப் பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரத்தில் நீண்ட காலமாக மொத்த வியாபாரத்தை நடத்தி வரும் இடத்தில் மொத்த வியாபாரிகளின் பங்களிப்புடன் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய நவீன கடைத் தொகுதியொன்றை பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கான கலந்துரையாடலொன்று கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஏற்பாட்டில்,

நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர் மற்றும் உயரதிகாரிகளின் பங்கேற்போடு வவுனியா மொத்த வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் (16) நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது மொத்த வியாபாரிகளுக்கான புதிய கடைத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதால் இடைப்பட்ட காலத்திற்கு வவுனியா பிராந்தியப் பொருளாதார மத்திய நிலையத்தில் அவர்களின் மொத்த வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உடன்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையமாக 291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளையதினம் (19.11.2022) ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகும் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர்.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

இணையத்தில்..

இணையத்தில் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர் எனும் தலைப்பில் ஒருவருடைய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இணையத்தின் வளர்ச்சியினால் சமூக வலை தளங்கள் தற்போது கோலோச்சி வருகின்றன.

சமூக வலை தளங்களை பொறுத்தவரையில் விநோதமான செய்திகளுக்கும் வீடியோக்களுக்கும் எப்போதுமே பஞ்சம் இருப்பதில்லை. இதுபோன்ற விஷயங்கள் உடனடியாக சோசியல் மீடியாவில் வைரலாகி விடுவதும் உண்டு.

அந்தவகையில் தற்போது உலகின் மிக நீளமான மூக்குடைய நபர் என அழைக்கப்படும் ஒருவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் Historic Vids எனும் பக்கத்தில் தான் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருக்கிறது.

தாமஸ் வெடர்ஸ் என்பவரின் மெழுகுச்சிலை Ripley’s Believe It Or Not அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையின் புகைப்படம் தான் Historic Vids எனும் பக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி பகிரப்பட்டிருக்கிறது.

அப்பதிவில்,”தாமஸ் வாட்ஹவுஸ் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஆங்கில சர்க்கஸ் கலைஞர் ஆவார். 7.5 இன்ச் (19 செமீ) நீளம் கொண்ட உலகின் மிக நீளமான மூக்கைக் கொண்டவர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனை கின்னஸ் நிர்வாக அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. தாமஸ் பற்றி கின்னஸ் இணையதளத்திலும் குறிப்பு இருக்கிறது. அதில்,”1770 களில் இங்கிலாந்தில் வாழ்ந்த பயண ஃப்ரிக் சர்க்கஸ் (travelling freak circus) உறுப்பினரான தாமஸ் வெடர்ஸ், 19 செமீ (7.5 அங்குலம்) நீளமுள்ள மூக்கைக் கொண்டிருந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாமஸ் குறித்த Historic Vids-ன் இந்த பதிவு தற்போது படுவைரலாக பரவி வருகிறது. இதை 1.2 லட்சம் பேர் லைக் செய்திருக்கின்றனர்.

இருப்பினும் சமகாலத்தில் உலகின் மிக நீளமான மூக்கை கொண்டவர் (ஆன்) துருக்கி நாட்டை சேர்ந்த மெஹ்மெட் ஓசியூரெக் என்பவர் தான். இதனை கின்னஸ் நிர்வாகம் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தியிருந்தது. இவருடைய மூக்கின் நீளம் 3.46 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது.

19 வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர் : இப்படி ஓர் காதலா?

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை 70 வயது தாத்தா காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. Syed Basit Ali என்பவரின் யூடியூப் பக்கத்தில் சமீபத்தில் வெளியான வீடியோ டிரெண்டாகி வருகிறது.

இவர் பாகிஸ்தானில் வயது வித்தியாசமின்றி திருமணம் செய்து கொள்ளும் நபர்களை பேட்டி எடுத்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 70 வயது தாத்தாவின் காதல் கதை டிரெண்டாகியுள்ளது.

லாகூரில் தினமும் காலை வாக்கிங் செல்லும் போது லியாக்கத் அலி(வயது 70) என்பவர் சுமைலா அலியை(வயது 19) சந்தித்துள்ளார். லியாக்கத் அலிக்கு அந்த பெண்ணை பிடித்துப்போக, மறுநாள் அவளுக்கு பின்னால் சென்றபடியே பாட்டு ஒன்றை பாடியுள்ளார்.

இதில் மயங்கிப் போன சுமைலாவுக்கு, லியாக்கத் அலியை பிடித்துவிட்டது, அன்று தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. காதலுக்கு வயதில்லை என இருவரும் கூறினாலும், இத்திருமணத்திற்கு சுமைலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் தங்கள் காதல் அவர்களை வென்றுவிட்டதாகவும், பல போராட்டங்களுக்கு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவரையிலும் வெளியிடங்களில் சாப்பிட்டு வந்த லியாக்கத் அலி, தன் மனைவி சுமைலாவின் சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடுவதாக மகிழ்கிறார். எந்த வயதிலும் எந்த நேரத்திலும் காதல் வரலாம், மனதால் நான் இளமையானவன் என கூறுகிறார் லியாக்கத் அலி.

சட்டப்படி திருமண வயது வந்த எவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம், நாங்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்கிறோம், எங்களுக்குள் வயது எப்போதும் ஒரு தடையாக இருக்காது என்கிறார். இதையே ஆமோதிக்கும் சுமைலா, காதல் மட்டுமே தங்களை இணைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

51 வயது நபரை ஏமாற்றிய கிளிநொச்சி யுவதி : திருமண ஆசையால் பெரும் தொகையை இழந்த கப்பல் ஊழியர்!!

கிளிநொச்சி யுவதி..

கப்பலில் பணிபுரியும் 51 வயதுடைய திருமணமாகாத நபரிடம் இருந்து 85 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் 25 வயது அழகுக்கலைஞரான கிளிநொச்சி யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

யுவதிக்கு எதிரான 51 வயதுடைய கப்பல் பணியாளரின் முறைப்பாட்டின் அடிப்படையி யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில்,

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் யுவதி அறிமுகமான நிலையில் இருவரும் நண்பர்களாகி மிகவும் நெருக்கமானதாகவும் கப்பல் பணியாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி கொரிய கப்பலில் பணிக்கு சென்றிருந்த போதிலும் அன்று முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரையான 6 மாதங்களில் சுமார் 85 இலட்சம் ரூபா யுவதியின் தேவைக்காக அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

பின்னர் யுவதியை சந்திப்பதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி இலங்கை வந்ததாகவும், காதலியை சந்திப்பதற்காக பம்பலப்பிட்டியில் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லை என்பதை அறிந்து கப்பல் பணியாள திடுக்கிட்டுளார்.

அதன் பின்னர் , குறித்த யுவதி ஒரு மாதத்திற்கு முன்னர் கிளிநொச்சியிலுள்ள கிராமப் பகுதிக்கு சென்றது தெரியவந்ததை அடுத்து கிளிநொச்சியிலுள்ள காதலியின் வசிப்பிடத்தைத் தேடிச் சென்றுள்ளார்.

எனினும் யுவதியின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த போதிலும் அதுவும் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டுள்ளதால் தனது வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் கிளிநொச்சி காதலியை திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன், பணம் கொடுத்த நிலையில் , அவர் தற்போது தன்னை ஏமாற்றுவதாக கப்பல் பணியாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, சந்தேகநபரான கிளிநொச்சி காதலியின் கையடக்கத் தொலைபேசி ஆராய்ந்த பின்னர், அவர் வசிக்கும் முகவரி அடையாளம் காணப்பட்டது.

அதையடுத்து, கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில் யுவதி விசாரணைக்கு சமூகமளித்திருந்தார்.

விசாரணையின்போது, கப்பல் பணியாளரிடமிருந்து தான் பணத்தை பெற்றதை அவர் ஏற்றுக்கொண்டார். திருமணம் செய்யும் நம்பிக்கையில் இருந்ததாகவும், ஆனால் பழகிப் பார்த்த போது இருவருக்குமிடையில் பொருத்தம் ஏற்படாததால் கப்பல் பணியாளரை திருமணம் செய்யும் யோசனையை கைவிட்டதாகவும் கிளிநொச்சி யுவதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், யுவதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

பூமியை காப்பாற்ற செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கின்றேன்… உலகத்தையே அதிர வைக்கும் சிறுவன்!!

ரஷ்யாவில்..

ரஷ்யாவில் வசித்துவரும் சிறுவன் ஒருவன் தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியை காப்பாற்ற வந்திருப்பதாக சொல்லி வருவது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியைச் சேர்ந்தவர் போரிஸ் கிப்ரியானோவிச். சிறுவனான போரிஸ் சமீப காலங்களில் சொல்லிய தகவல்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

குறிப்பாக இவரது தாயும் இந்த விநோத கூற்றுகளை நம்புகிறார். அதுமட்டும் அல்லாமல் தனது மகனிடம் சில விசேஷ குணங்கள் இருப்பதாகவும் அவர் நம்புகிறார். தி சன் ஊடகத்தில் அவர் இதுபற்றி பேசுகையில்,”எனக்கு பிரசவம் நடந்தபோது வலியே ஏற்படவில்லை.

என்னுடைய மகனை என்னிடம் காட்டும்போது அவனது கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்தன. ஒரு டாக்டராக குழந்தைகள் எப்போதும் பொருட்களை உற்றுக்கவனிப்பது இல்லை என்பது எனக்கு தெரியும்.

ஆனால், எனது மகன் என்னை தனது பெரிய பழுப்பு கண்களால் பார்த்தான்” எனக் கூறியிருக்கிறார். மேலும், தனது மகன் ஒரு வயதிலேயே செய்தித் தாள்களை வாசிக்க துவங்கிவிட்டதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

அதுமட்டும் அல்லாமல் சிறுவயதிலேயே தனது மகன் வானவியல் பற்றியும் தெரிந்துகொண்டதாகவும் பல்வேறு கிரகங்களுக்கு பயணிப்பது பற்றியும் அவன் பேசுவதாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அணுசக்தி போரில் செவ்வாய் கிரகம் தாக்குதல் அடைந்ததால் அதன் மக்கள் நிலத்திற்கு அடியில் வசித்துவருவதாக சிறுவன் கூறியதாக சொல்லப்படுகிறது. மனித இனம் தன்னைத்தானே அழித்துவிடாமல் காப்பாற்ற பூமிக்கு அனுப்பப்பட்ட “இண்டிகோ சில்ட்ரன்” என்று அழைக்கப்படும் பலரில் தானும் ஒருவர் எனச் சொல்லியிருக்கிறான் சிறுவன்.

மேலும், லெமூரியன் காலம் துவங்கி பல்வேறு காலகட்டத்தில் தான் பூமிக்கு வந்து சென்றதாகவும் சிறுவன் சொல்லியது பலரையும் அதிர வைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

இதனை தொடர்ந்து தான் விண்கலம் ஒன்றையும் வடிவமைத்ததாக போரிஸ் கூறியதாக தெரிகிறது. உலோகம் மற்றும் காந்த அடுக்குகளை கொண்ட அந்த விண்கலத்தை கொண்டு, பிரபஞ்சத்தில் எங்குவேண்டுமானாலும் பயணிக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார் போரிஸ்.

இது இப்படி இருக்க, போரிஸ் தனது தாயுடன் காணாமல்போய்விட்டதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் கிராமம் ஒன்றில் அரசின் உதவியுடன் அவர் வாழ்ந்துவருவதாகவும் பின்னர் தகவல்கள் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தன்னை செல்லமாக வளர்த்தவரைக் காப்பாற்ற பாம்புடன் போராடிய நாய்க்கு நேர்ந்த பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவில், தன்னை செல்லமாக வளர்த்தவரைக் காப்பாற்றுவதற்காக நாய் ஒன்று பாம்பு ஒன்றுடன் போராடியது. அமித் ராய் என்பவர் நாய்கள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். அவர் வளர்ந்த நாய்களில் கப்பார் என்று அழைக்கப்படும் நாயும் ஒன்று.

இந்த கப்பார், அமித் மீது மிகுந்த பாசம் கொண்டதாம், அதே நேரத்தில், தன் அனுமதி இல்லாமல் அமித்தை யாரும் நெருங்கவும் விடாதாம் கப்பார். இப்படிப்பட்ட சூழலில், நேற்று, அமித் தன் நாயான கப்பாருடன் வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது, ஒரு பெரிய விஷப்பாம்பு அமித்தை நோக்கி வந்திருக்கிறது.

அதை அமித் கவனிக்காவிட்டாலும், கப்பார் அந்த பாம்பை கவனித்துவிட்டது. அந்த பாம்பு தன் உரிமையாளரை நோக்கி வருவதைக் கண்ட கப்பார், ஓடோடிச் சென்று அந்த பாம்புடன் சண்டையிட்டுள்ளது. நீண்ட நேர சண்டைக்குப் பின் இறுதியில் அந்தப் பாம்பை கடித்து இரண்டு துண்டுகளாக்கிவிட்டது கப்பார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கப்பாரின் உடலில் பாம்பின் விஷம் பரவ, கீழே விழுந்து தன் உயிரை விட்டுவிட்டது கப்பார். தனக்காக உயிரையே விட்ட கப்பாருக்காக, அமீத்தும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

காதல் கணவனுடன் வாழ்ந்த மகளை கடத்தி மொட்டையடித்த பெற்றோர் : பின்னர் நடந்த விபரீதம்

தெலுங்கானாவில்..

காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, கணவன் வீட்டில் இருந்து கடத்திச்சென்று அவரது தலையில் மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவ் . இவர் பக்கத்து ஊரை சேர்ந்த அட்சிதா என்ற பெண்ணை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர். மகள் தங்களுக்கு விருப்பமில்லாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அச்சிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரண்டு கார்களில் உறவினர்களுடன் காதல் தம்பதி வசித்த வீட்டிற்கு சென்ற அச்சிதாவின் பெற்றோர் அவர்களை கடுமையாக மிரட்டியதோடு தங்கள் மகள் அச்சிதாவை மட்டும் காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது.

வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அச்சிதாவுக்கு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து குடிக்க செய்து, அவரை அலங்கோலப்படுத்துவதாக நினைத்து தலைமுடியையும் மொட்டை அடித்துள்ளனர்.

பின்னர் அவமானப்படுத்தி கணவன் வீட்டிற்கு விரட்டி விட்டதாக அச்சிதா போலீசில் புகார் அளித்துள்ளார். அச்சிதா அளித்துள்ள புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இளம் பெண்ணை மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியதாக, அவருடைய பெற்றோர் மற்றும் தாய்மாமன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வவுனியாவில் சிறுவர்களுக்கான பிரம்மாண்டமான கல்விக் கண்காட்சி உட்பட பல விளையாட்டு நிகழ்வுகள் – அனுமதி இலவசம்!!

BCS INTERNATIONAL SCHOOL..

வவுனியா மாவட்டத்தில் முதற் தடவையாக BCS சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையானது பிரம்மாண்டமான முறையில் சிறுவர்களுக்கான கல்விக் கண்காட்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது

இவற்றில் ஒருமுகப்படுத்தப்பட்ட பல நிறுவனங்கள் அடங்கிய விற்பனை நிலையங்கள் மற்றும் கண்களை கவரக்கூடிய மாயவித்தைகள் , மெடி Ground Games மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளன

இவைகள் BCS INTERNATIONAL SCHOOL.
NO: 30, காளிகோவில் வீதி , குருமன்காடு , வவுனியா எனும் இடத்தில் நாளை 19ம் திகதி மற்றும் 20ஆம் திகதி ஆகிய இரு நாட்களும் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணி வரை நடைபெற உள்ளதுடன் நுழைவுக்கட்டணம் முற்றிலும் இலவசம் வழங்கப்படுகின்றது

விளையாட்டுக்களில் பங்குபெற்றுபவர்களின் வயதெல்லையாக 2வயது தொடக்கம் 11 வயது மட்டுமே ஆகும் என்பதுடன் வவுனியா வாழ் மக்கள் அனைவரும் தமது மழலை செல்வங்களுடன் வருகை தந்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மகிழ்ந்திட அன்புடன் அழைத்து நிற்கின்றனர் BCS INTERNATIONAL SCHOOL நிர்வாகத்தினர்

மேலதிக விபரங்களுக்கு 0760970951 மற்றும் 0760970953 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும்

இலங்கையில் மீண்டும் உயர்வை நோக்கி நகரும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 642,318 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சிறிது உயர்ந்து வருகின்றது.

மேலும், கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,650 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒருதலைக் காதலால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

கேரள மாநிலம் ஆம்பூரி போஸ்ட் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20) என்ற இளம்பெண். இவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ரெஸ்டாரண்டில் மூன்று மாதத்திற்கு முன் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடித்துவிட்டு அபுபேலஸ் ரெஸ்டாரன்ட் பின்புறம் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின் கோபத்தில் தான் வைத்திருந்த மதுபான பாட்டிலால் அந்த பெண்ணின் முகத்தில் அடித்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த அந்த பெண் சாலையில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.

பின்பு அந்த இளைஞர் மதுபான பாட்டிலை உடைத்து முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். மேலும், கைகளால் அந்தப் பெண்ணின் வயிறு மற்றும் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு ஓடி வர அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளம் பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

கைத்தொலைபேசியால் பரிதாபமாக உயிரைவிட்ட 8ம் வகுப்பு மாணவி!!

சென்னையில்..

சென்னையில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சிறுமியின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை வடபழனி பகுதியில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சிறுமியின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பாதை மாறுவதற்கு செல்போன்கள் முக்கிய காரணமாக உள்ளது. ஆன்லைன் படிப்பிற்காக அவர்களது கைகளில் பெற்றோர்களே செல்போனை கொடுக்க நிர்பந்தம் ஏற்பட்டு தற்போது அந்த செல்போனைகள் இல்லாமல் அவர்களுக்கு பொழுதே போகாத சூழல் ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறைக்கு கேம்ஸ்களும், இன்ஸ்டாகளும் அவர்களை அடிமையாகி வருகின்றன.

அமேசானில் இருந்து ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் இப்போது லான்ச் செய்யப்பட்டுள்ளது விற்பனை முடிவதற்குள் பெறுங்கள் இந்த நிலையில், சென்னை, வடபழனி கங்கை அம்மன் முதல் தெருவை சேர்ந்தவர் உபாமதி. இவரது மனைவி சரிதா. இவர்களின் 13 வயதான மகள் அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் கிடைத்து, வடபழனி போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சிறுமி செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் பெற்றோர், செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டனர். இதனால் மனமுடைந்த ஜனனி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.

நண்பரின் திருமணத்திற்கு சென்ற இரண்டு மணமகள்கள் : ஒரு நிமிடம் நெட்டிசன்களை உறைய வைத்த காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரு திருமணத்திற்கு நண்பர்க் சேலையுடன் வந்து மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணம் என்றாலே இந்தியர்களுக்கு பெரிய கொண்டாட்டம் ஆகும். இதில் வாழ்க்கையின் இருவிட்டரின் சொந்தங்களையும் இணைக்கும் முக்கிய நிகழ்வு. இதன்படி, இந்தியாவை சேர்ந்த மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இரண்டு ஆண் நண்பர்கள், மணப்பெண் போன்று சேலை அணிந்து மணப்பெண் நிற்க வேண்டிய இடத்தில் நின்று மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சியை அவரின் நண்பர்களின் ஒருவரான பாராகான்பிலிம்ஸ் (Paraagonfilms) என்ற பக்கத்தில் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மில்லியகணக்காக பார்வையாளர்களை தாண்டி செல்கிறது.

வவுனியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு மட்டத்தினை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்..

உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு மட்டத்தினை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் வவுனியா பிரதேச செயலக கேட்பார் கூடத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச வாழ் மக்களின் உணவுப் பாதுகாப்பு, வறிய குடும்பங்களின் பிள்ளைகளிற்கான போசனைமட்டத்தினை உயர்த்துவதற்கான சாத்தியமான திட்டங்கள், அதற்கான நிதிக்கிடைப்பனவுகள்,

வறிய குடும்பங்களிற்கான நிலைத்திருக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடலில் ஆராய்ந்திருந்தனர்.

இக்கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.