வவுனியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு மட்டத்தினை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்..

உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு மட்டத்தினை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் வவுனியா பிரதேச செயலக கேட்பார் கூடத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச வாழ் மக்களின் உணவுப் பாதுகாப்பு, வறிய குடும்பங்களின் பிள்ளைகளிற்கான போசனைமட்டத்தினை உயர்த்துவதற்கான சாத்தியமான திட்டங்கள், அதற்கான நிதிக்கிடைப்பனவுகள்,

வறிய குடும்பங்களிற்கான நிலைத்திருக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடலில் ஆராய்ந்திருந்தனர்.

இக்கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மாங்குளத்தில் சற்றுமுன் கோர விபத்து : ஒருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்து..

மாங்குளம் பகுதியில் சற்று முன் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாங்குளம் பிரதான வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உந்துருளி சொகுசு வாகனம் ஒன்றுடன் மோதியதாலேயே விபத்து நிகழந்துள்ளது. இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணின் சடலத்துடன் வீடியோ : நபர் சொன்ன வார்த்தை : அதிர்ச்சி சம்பவம்!!

டெல்லியில்..

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், பெண் ஒருவரை கொலை செய்து, அதனை காணொளியாக பதிவு செய்த நபர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் ஒருவாரத்திற்கு முன்னரே நடந்துள்ளதாகவும், ஆனால் தொடர்புடைய நபரை பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட பெண் 25 வயதான ஷில்பா ஜாரியா எனவும், அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நபர் அபிஜித் படிதார் எனவும் தெரிய வந்துள்ளது.

ஜபல்பூரில் உள்ள மேக்லா ரிசார்ட்டில் உள்ள அறையில் இருந்து கொல்லப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டது. சமூக ஊடகத்தில் அபிஜித் வெளியிட்ட காணொளியில், யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்து விடாதே என கூறும் அபிஜித், பின்னர் போர்வை ஒன்றை விலக்கி, ரத்த வெள்ளத்தில் காணப்படும் பெண்ணின் சடலத்தை காட்டுகிறார்.

இன்னொரு காணொளியில், பாட்னா பகுதியை சேர்ந்த வணிகர் தாம் எனவும், ஜிதேந்திர குமார் என்பவருடன் இணைந்து தொழில் செய்து வருவதாகவும், தங்கள் இருவருடனும் ஷில்பா ஜாரியா ரகசிய உறவில் இருந்துள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜிதேந்திராவிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் கடனாக பெற்ற ஷில்பா, பின்னர் ஜபல்பூருக்கு தப்பியதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஜிதேந்திரா கூறியதை அடுத்தே ஷில்பாவை தேடிச் சென்று கொலை செய்துள்ளதாக அபிஜித் காணொளியில் கூறியுள்ளார்.

தற்போது ஜிதேந்திராவும் அவரது உதவியாளரான சுமித் என்பவரும் பிஹார் பொலிசாரால் கைதாகியுள்ளனர். இதுவரை அபிஜித் சிக்காத நிலையில், பொலிசார் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தனிப்படையை அனுப்பியுள்ளனர்.

ஷில்பாவின் சடலம் மீட்கப்பட்ட மேக்லா ரிசார்ட்டில் அபிஜித் மட்டுமே தங்கியிருந்துள்ளார். அடுத்த நாள், ஷில்பா அவரை சந்திக்க சென்ற நிலையில், மதியம் அவர்கள் உணவு வரவழைத்துள்ளதும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அபிஜித் மட்டும் அறையை பூட்டிவிட்டு வெளியேறுவதும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

நவம்பர் 8ம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் மேக்லா ரிசார்ட் ஊழியர்கள் குறித்த அறைக் கதவை உடைத்து பார்க்கையில், பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில், தம்முடன் வசித்து வந்த பெண்ணை கொலை செய்து, உடலை 30 துண்டுகளாக வெட்டி, 18 நாட்களில் மறைவு செய்த இளைஞரின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி அடங்கும் முன்னர், தற்போது இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இந்திய நடிகையின் மோசடிகள் அம்பலம்!!

ஜக்குலின் பெர்னாண்டஸ்..

இந்தியாவில் பிரபல நடிகையான ஜக்குலின் பெர்னாண்டஸும் இலங்கையில் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

200 கோடி இந்திய ரூபாயை கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஜாக்குலினிடம் விசாரித்தபோது, ​​வெலிகம பகுதியில் சுகேஷ் வீடு ஒன்றை கொள்வனவு செய்திருந்தாலும் தான் அங்கு சென்றதில்லை என்று கூறியுள்ளார். அதற்கான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டை தவிர்க்கும் வகையில் ஜாக்குலின், சுகேஷின் குற்ற வரலாறு குறித்து தனக்கு தெரியாது என பொய்யான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜெக்குலினின் சகோதரிக்கு 1.26 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், ஆஸ்திரேலியாவில் உள்ள சகோதரருக்கு 15 லட்சம் இந்திய ரூபாயும் 5.17 கோடி இந்திய ரூபாயும் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆதாரங்களை சேதப்படுத்தியதாகக் கருதப்படும் தனது தொலைபேசித் தகவல்களை ஜாக்குலின் நீக்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்ஜில் காய்கறிக்கு அருகே இருந்த தலை : வீட்டுக்கு வந்த புதுக் காதலி : கொலைகாரரனின் கொடூரம்!!

டெல்லியில்..

டெல்லியில் காதலியை 35 பீஸ்களாக காதலன் கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் சாரதா என்ற பெண்ணை அப்தாப் அமீன் என்ற இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த அப்தாப் அமீன் டேட்டிங் ஆப் வழியாக சாரதாவை பார்த்து இருக்கிறார்.

முதல் டேட்டிங்கிலேயே இவர்கள் காதலில் விழுந்து உள்ளனர். இரண்டு பேரும் மும்பையில் இருந்ததால் அடிக்கடி சந்தித்துக்கொண்டுள்ளனர். அதன்பின் இவர்கள் டெல்லிக்கு ஓடிப்போய் ஒன்றாக லிவ் இன் உறவில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் சாரதா அப்தாப் அமீனை திருமணம் செய்து கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அப்தாப் அமீன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து நடந்த சண்டையில் சாரதாவை கொலை செய்து இருக்கிறார் அப்தாப் அமீன்.

அதோடு 35 பாகங்களாக உடலை வெட்டி, பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி உள்ளார். இதற்காக போலீசில் அப்தாப் அமீன் கொடுத்த வாக்குமூலம்தான் தற்போது டெல்லியை உலுக்கி உள்ளது.

முக்கியமாக சாரதா கொலை செய்யப்பட்ட பின் சமூக வலைத்தளங்களில் சாரதாவை போலவே அவரின் போனை பயன்படுத்தி அமீன் மெசேஜ்களை செய்து இருக்கிறார். அதோடு சாரதாவின் கிரெடிட் கார்ட் பில்களை கூட கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் அப்தாப் அமீன் போலீஸ் விசாரணையில் வேறு சில அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். அதன்படி சாரதாவை கொலை செய்த மறுநாளே டேட்டிங் ஆப் ஒன்றை அப்தாப் இன்ஸ்டால் செய்துள்ளார்.

இந்த ஆப் மூலமாக ஏற்கனவே சில பெண்களிடம் அவர் பேசி வந்துள்ளார். அதில் அடிக்கடி பேசும் பெண் ஒருவரை வீட்டிற்கும் வர சொல்லி இருக்கிறார். அதாவது சாரதாவை கொலை செய்த மறுநாளே வேறு பெண்ணுடன் அவர் டேட்டிங் சென்றுள்ளார்.

வீட்டிற்க்கு அந்த பெண்ணை அழைத்து வந்து உணவு சமைத்து கொடுத்துள்ளார். அவர்கள் வீட்டிலேயே பேசி இருக்கின்றனர். ஆனால் அந்த புது டேட்டிங் காதலி அந்த பிரிட்ஜை திறந்து பார்க்கவில்லை. இல்லையென்றால் மே மாதமே அப்தாப் சிக்கி இருப்பார்.

அல்லது அந்த பெண்ணையும் அப்தாப் கொலை செய்து இருப்பார். அதோடு அந்த பிரிட்ஜில் அப்தாப் காய்கறிகளையும் வைத்து இருக்கிறார். உடல் பாகங்கள் உள்ளே இருந்த போதிலும் அதற்கு அருகிலேயே காய்கறிகளை வைத்து இருந்துள்ளார்.

அதை பற்றி அப்தாப் எந்த கவலையும் படவில்லை. தலைக்கு அருகிலேயே மோர் பாக்கெட், பால் பாக்கெட் போன்ற பொருட்களை வைத்து இருந்தார் . தலைக்கு அருகில் இருக்கும் அந்த பொருட்களை எடுத்து இவர் அசால்ட்டாக சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறார்.

அந்த அளவிற்கு கொடூரமான குணம் கொண்டவராக அப்தாப் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்தாப் பெண் பித்து கொண்டவராக இருந்தார். அவர் தினமும் புதுப்புது பெண்களை ரொமான்டிக் டேட் செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்து உள்ளது

பொம்மையை மணந்த இளம்பெண் : கணவன் துரோகம் செய்ததால் ஊசலாடும் திருமண வாழ்வு!!

மேலை நாடுகளில்..

மேலை நாடுகளில் மரத்தை திருமணம் செய்யும் பெண்கள், ஆவியைத் திருமணம் செய்யும் பெண்கள், ஏன், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள்கூட உண்டு.

அவ்வகையில், Meirivone Rocha Moraes (37) என்ற பெண், Marcelo என்ற பொம்மையைத் திருமணம் செய்துகொண்டார். மகள் தனிமையாக இருப்பதால் வருந்திய தாய் தன் மகள் தனியாக இருப்பதாக அவரது தாய் வருத்தப்பட்டதால், Marcelo என்ற பொம்மையைத் திருமணம் செய்துகொண்டார் Rocha.

பிறகு தம்பதியருக்கு ஒரு குழந்தையும் பிறந்ததாக தெரிவித்துள்ள Rocha, அந்த குழந்தைக்கு Marcelinho என்று பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் குழந்தை Marcelinhoவுக்கு உடல் நலமில்லாததால் மூன்று நாட்கள் Rocha மருத்துவமனையில் தங்க, அப்போது Marcelo தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார்.

மற்றவர்கள் Marcelo வேறு பெண்களுடன் ஹொட்டலில் அறை எடுத்துத் தங்குவதை தாங்கள் பார்த்ததாக Rochaவிடம் கூறியபோது, முதலில் அவர் அதை நம்பவில்லையாம்.

ஆனால், அவரது மொபைலை எடுத்துப்பார்க்கும்போதுதான் அது உண்மை என்பது தெரியவந்ததாம் அவருக்கு.

ஆகவே, தங்கள் திருமண உறவு நூலிழையில் ஊசலாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் Rocha.

ஆனாலும், தன் கணவனான Marcelo தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சியதால் அவருக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுத்திருப்பதாகவும், அவர் மீண்டும் துரோகம் செய்தால் அவரை மன்னிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் Rocha.

ஆனால், Rocha தன் கதையை டிக்டாக்கில் பகிர்ந்துகொள்ள, அது 1.6 மில்லியன் பார்வைகளையும், 120,000க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது!

கணனி மின்னேற்றி வெடித்து பரிதாபமாக பலியான மாணவன்!!

காலி..

காலி பலப்பிட்டிய படபொல கொபேய்துடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவன் கணனி மின்னேற்றி வெடித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திகெட்டிய பென்வல வீதி பகுதியை சேர்ந்த 14 வயதான டப்ளியூ.ஏ.செனத் இந்துவர என்ற இந்த பாடசாலை மாணவன் கணனி மின்னேற்றியை இயங்க செய்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மின்னேற்றி வெடித்த போது மாணவன் கணனியை மடியி வைத்துக்கொண்டிருந்தாகவும் அப்போது மின்னேற்றி மின் இணைப்பில் சொருகப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மின்னேற்றி வெடித்ததால் மாணவனை மின்சாரம் தாக்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்று நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

59 வயதில் விவாகரத்து மீண்டும் 69 வயதில் திருமணம் மூலம் மீண்டும் இணைந்த தம்பதி!!

இந்தியாவில்..

விவாகரத்து வேண்டி வழக்குத்தொடுத்த 59 வயது முதியவர், தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்துகொண்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விவாகரத்து வேண்டி வழக்குத்தொடுத்த 59 வயது முதியவர், தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்துகொண்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக கணவன் மனைவியாக வாழ்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பெரிய மனஸ்தாபம் காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்த விவாகரத்து பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. விவாகரத்து பெறுவதற்கு வயது வரம்பும் இல்லை.

இந்தியா முதல் உலகளவில் கணவன் மனைவி விவாகரத்து பெறுவதற்கு சட்டங்கள் உள்ளது. இருப்பினும் கணவன் மனைவி அவசரப்பட்டு விவாகரத்து பெற்று தனித்தனியே வாழக்கூடாது என்பதற்காக சிறிது காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விவாகரத்து கொடுப்பதற்கு நீதிமன்றம் காலதாமதம் எடுக்கும்.

மேலும் ‘லோக் அதாலத்’ என்ற முறை மூலமும் சமரசம் பேசி தம்பதியினரை மீண்டும் சேர்த்து வைக்கும் வேலைகளையும் நீதிமன்றம் செய்து வருகிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான வழக்குகளை இந்த முறை மூலம் சமரசம் பேசி முடித்து வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம், தும்குரு என்ற பகுதியை சேர்ந்த முதிய தம்பதியினர் தங்களுக்கு விவாகரத்து வண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை முதியவர் தனது 59 வயதில் தொடுத்தார்.

அந்த வழக்கு பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு தற்போது நடைபெற்ற லோக் அதாலத் முறையில் இந்த வழக்கும் பங்கேற்றது. அதில் இருவரிடமும் சமரசம் பேசப்பட்டது. பின்னர் இருவரும் தாங்கள் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தனர்.

மேலும் இவர்களது குடும்பத்தினரும் இதற்கு விடா முயற்சி செய்து வந்தனர். எனவே தாங்கள் மீண்டும் இணைவதில் இருவரும் மகிழ்ச்சி தெரிவித்து எந்த நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டனரோ, அதே நீதிமன்ற வளாகத்தில் இருவரும் மீண்டும் மாலை மாற்றி இனிப்பு பரிமாறி தங்கள் உறவை புதிப்பித்து கொண்டனர்.

இந்த தம்பதியோடு சேர்ந்து 5 தம்பதியினர் தங்கள் விவாகரத்து முடிவை திரும்ப பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவர் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலனின் வெ.றிச்செயல் : இலங்கையில் அ.திர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

காலி..

இ.ளம் யு.வதியொருவரை வா.கனத்தில் க.ட.த்.தி.ச் செ.ன்று பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்து, ஓ.டும் வா.கனத்தில் இ.ருந்து வெ.ளியே த.ள்ளிவிட்ட முன்.னாள் கா.தலனை பொ.லிசார் கை.து செ.ய்துள்ளனர்.

காலி, படபொல பொலிஸ் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை (11ஆம் திகதி) இரவு 7 மணியளவில் இந்த கொ.டூ.ர ச.ம்பவம் ந.டந்தது. இச்சம்பவத்தில் ப.ல.த்.த கா.ய.மடைந்த யு.வதி இ.ன்னும் சு.யநினைவின்றி மேலதிக சி.கிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அ.திதீவிர சி.கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆ.பத்தான நி.லையில் உ.ள்ள யு.வதியின் நி.லை மிகவும் க.வலைக்கிடமாக உள்ளதாக ம.ருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படபொல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் யு.வதி சில காலத்திற்கு முன்னர் ஆ.ண் ஒ.ருவருடன் கா.தல் தொ.டர்பை பேணிய நிலையில், அந்த ந.பரின் த.கா.த ந.டத்தைகளால், யு.வதி அ.வரை வி.ட்டு பி.ரிந்து செ.ன்றுள்ளார்.

இ.தனால் ஆ.த்.தி.ரமடைந்த இ.ளைஞன், யு.வதியை ப.ழிவாங்க இ.ந்த கு.ற்.றச்செயலில் ஈ.டுபட்டதாக கூ.றப்படுகின்றது. படபொல தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள ஆ.ள்நடமாட்டமற்ற பகுதியில் வை.த்து யு.வதியை வா.கனத்தில் இ.ழுத்து ஏ.ற்றிச் செ.ன்ற நி.லையில் த.கவலறிந்த யு.வதியின் ச.கோதரன் வா.கனத்தை வி.ர.ட்டிச் செ.ன்றுள்ளார்.

யு.வதியின் ச.கோதரன் வா.கனத்தை வி.ரட்டுவதையறிந்ததும், ஓ.டும் வா.கனத்திலிருந்து யு.வதியை த.ள்ளிவிழுத்தி வி.ட்டு கா.தலன் த.ப்பிச்செல்ல மு.யன்ற நி.லையில் கை.து செ.ய்யப்பட்டதாக தெ.ரிவிக்கப்படுகின்றது.

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட மாணவன் திடீர் மரணம்!!

ஜிந்துஜன்..

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். நேற்று இரவு (16.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இருந்துள்ளார்.

தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் படுத்திருந்துள்ளார். உணவு வாங்கிக் கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சல் காரணமாக குறித்த ஆசிரிய மாணவன் அவதிப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துனள்ளனர்.

இதில், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் விவசாய பாடப் பிரிவின் முதலாம் வருட ஆசிரிய மாணவனான மட்டக்களப்பு, காரைத்தீவினைச் சேர்ந்த ஜிந்துஜன் என்பவரே மரணமடைந்தவராவார்.

இதேவேளை, உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபீல் பண்ணாதீங்க, மாஸ் என்ட்ரி குடுப்பேன்… உயிரிழப்பதற்கு முன் மாணவி வைத்த வட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!!

வியாசர்பாடியில்..

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா. இவர் மாவட்ட மற்றும் மாநில அளவில் கால்பந்து போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். இளம் வீராங்கனையாக இருந்த பிரியாவுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது.

இதன் காரணமாக கால் அகற்றப்பட்டிருந்த நிலையில், இன்று காலை இளம்பெண் பிரியா உயிரிழந்துள்ளார். முன்னதாக, பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காலில் கட்டு போடும் போது அதனை அழுத்தமாக மருத்துவர்கள் கட்டியதால் மாணவி பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் பாதிப்புக்கு உள்ளானது.

இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால், மிகப் பெரிய அளவில் அவதிப்பட்ட மாணவி பிரியாவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கே உன்னிப்பாக பிரியாவை மருத்துவர்கள் கவனித்து வந்த நிலையில், சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதய பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதனிடையே, அவரது கால்களையும் மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். இந்த நிலையில், இன்று (15.11.2022) காலை 7:15 மணிக்கு சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.

பெரியார் நகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்பதும் தெரிய வந்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

மேலும், உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் சகோதரி ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

மருத்துவர்களின் கவனக் குறைவால் மாணவி பிரியா உயிரிழந்த விஷயம், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கால்பந்து விளையாட்டில் பெரிதாக சாதிக்க வேண்டும் என இருந்த மாணவியின் கனவுகள் அனைத்தும் புதைந்து போனதால் அனைவரும் நொந்து போயினர்.

தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவி பிரியா கடைசியாக பகிர்ந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தற்போது பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

மாணவி பிரியா பகிர்ந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், “அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு. நான் சீக்கிரமாவே ரெடி ஆயிட்டு கம்பேக் கொடுப்பேன். எதுக்கும் பீல் பண்ணாதீங்க.

என்னோட மாஸ் என்ட்ரி கொடுப்பேன். என்னோட கேம் என்ன விட்டு போகாது. நீங்க நான் ரிட்டன் வருவேன்னு நம்பிக்கையா இருக்கீங்க. லவ் யூ ப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் மருத்துவமனையில் இருக்கும் போது பிரியா வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனம் கலங்க வைத்து வருகிறது.

தன்னிடமிருந்து இந்த கேம் எப்போதும் விட்டு போகாது என கால்பந்து விளையாட்டை குறிப்பிட்டுள்ள பிரியா, நிச்சயம் திரும்பி வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்தது கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் போதை ஒழிப்பு விழிப்புணர்வும்!!

அல் இக்பால் மகாவித்தியாலயத்தில்..

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையும் இன்று (16.11) பாடசாலையில் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டப்பட்டதுடன், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட உளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத்தால பண்டார, உளுக்குளம் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி பிரியங்கா ஆகியோர் சின்னத்தை அணிவித்து வைத்தனர்.

அத்துடன், மாணவர்களுக்கான ஒழுக்கம், போதைப் பொருள் பாவனை, சிறுவர் வன்முறை மற்றும் துஸ்பிரயோகம் தொடர்பில் உளுக்குளம் பொலிசாரால் விழிப்புணர்வூட்டும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டதுடன், சின்னம் சூட்டும் நிகழ்வை முன்னிட்டு மர நடுகையும் இடம்பெற்றது.

நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஜெசீம், பாடசாலை ஆசிரியர்கள், பொலிசார், மாணவர் தலைவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

வவுனியாவில் சிரேஸ்ட சட்டத்தரணி மீது முகநூலில் அவதூறு ஏற்படுத்தியதாக பொலிசில் முறைப்பாடு!!

முகநூலில் அவதூறு..

முகநூலில் அவதூறை ஏற்படுத்தியதாக இருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் இன்று (16.11) தெரிவித்தார்.

காணி உறுதி மோசடி தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி உட்பட 6 பேர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த செய்தியை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த நபர்கள் இருவர் வவுனியாவைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், வவுனியா சட்டத்தரணிகள் சங்க செயலாளருமான அன்ரன் புனிதநாயகத்தின் பெயரையும்,

தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், சட்டத்தரணிகளுக்கும் அவதூறு ஏற்பட்டுள்ளதாகவும் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் மான நஸ்ட வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சி.று.மி மீ.து பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு : சி.த்தப்பாவிற்கு 10 ஆண்டுகள் க.டூழிய சி.றைத்தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்!!

நீதிபதி இளஞ்செழியன்..

16 வயதுக்கு குறைந்த சி.று.மி மீ.து பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு பு.ரிந்து சி.றுமிக்கு கு.ழந்தை பி.றப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் க.டூழிய சி.றைத் த.ண்டனையும் 4 இலட்சம் ரூபா ந.ட்டஈடு செலுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் நேற்று (15.11) அ.திரடி உ.த்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனை கட்டத் தவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் க.டூழிய சி.றைத் த.ண்டனையும், 20ஆயிரம் ரூபா த.ண்டப்பணமும் கட்டத் தவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் க.டூழிய சி.றைத் தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு மே மாதம் வவுனியா, கிழவன்குளம் என்னும் இடத்தில், தாயார் வெளிநாடு சென்றதன் காரணமாக தா.யாரின் த.ங்கையின் வீட்டில் இந்த 15 வ.யது சி.று.மி வாழ்ந்து வந்தவேளை த.ங்கையின் க.ணவரான சி.த்தப்பாவினால் கு.றித்த சி.று.மி பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு.க்.கு உ.ட்.ப.டுத்தப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் சி.றுமிக்கு ஆ.ண் கு.ழந்தை பி.றந்து, டிஎன்ஏ ப.ரிசோதனை செய்ததன் மூலம் அந்த கு.ழந்தைக்கு, சி.றுமியின் சித்தப்பா முறையான உறவினரே தந்தை என உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தால் இந்த த.ண்டனை உ.த்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. த.ண்டனையை கு.றைக்குமாறு கோரிய விண்ணப்பம் மன்றினால் நிராகரிக்கப்பட்டது.

15 வயதான சி.றுமியை தா.யாக்கியது பா.ரதூரமான கு.ற்றம் என தெரிவித்து இந்த விண்ணப்பம் நீதிமன்றினால் நி.ராகரிக்கப்பட்டுள்ளது.

விடாமல் துரத்திய ஆண் பிள்ளை மோகம்.. பெண் சிசுவை கொல்ல துடித்த கணவன்.. இறுதியில் கர்ப்பிணி பலியான சோகம்!!

ஆந்திராவில்..

ஆந்திராவில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 6 மாத பெண் சிசுவை கலைக்க முயன்ற போது சிசுவுடன் சேர்ந்து அந்தப் பெண்ணும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்களை அணுகாமல் வீட்டில் வைத்தே நாட்டு வைத்தியம் செய்ததில் அந்த கர்ப்பிணிப் பெண் துடிதுடித்து இறந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தை நிகழ்த்திய அவரது கணவரையும், மாமியாரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வும், படிப்பறிவும் இல்லாத காலத்தில் நடைபெற்று வந்த பெண் சிசுக் கொலைகள், நாகரீக வளர்ச்சியில் உச்சம் தொட்ட இந்த காலத்திலும் ஆங்காங்கே நடைபெற்று வருவது இன்னும் நம் சமூகம் மிகவும் பின்தங்கி இருப்பதைதான் காட்டுகிறது.

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சி, புதுப்புது சாதனைகளை படைத்து வரும் போதிலும், பெண் குழந்தைகளை பாரமாக நினைக்கும் அறிவு மக்கிப்போன மக்களை என்னவென்று சொல்வது? இதுபோல், பெண் சிசுவை அழிக்க நினைத்து வீட்டிலேயே வைத்தியம் பார்த்ததில் கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் நடந்திருக்கிறது.

இந்த பரிதாபம் சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம். பெண் குழந்தை மீது வெறுப்பு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையை சேர்ந்தவர் வேணு (35). இவருக்கும் சிவரஞ்சினி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை மீது அதிக மோகம் கொண்ட வேணுவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை. அதனால் தனது குழந்தை மீதே வெறுப்பு காட்டி வந்துள்ளார் வேணு. மேலும், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

இந்த சூழலில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கர்ப்பம் தரித்தார் சிவரஞ்சினி. இந்த முறை தனக்கு கட்டாயம் ஆண் குழந்தை தான் பிறக்கும் என தீர்க்கமாக நம்பினார் வேணு.

மேலும், வயிற்றில் இருக்கும் குழந்தையை ஆண் பெயர் வைத்து வேணுவும், அவரது குடும்பத்தினரும் கூப்பிடத் தொடங்கினர் இதனிடையே, ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும் போதும் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என மருத்துவர்களிடம் வேணு கேட்டு வந்தார்.

ஆனால், குழந்தையின் பாலினத்தை சொல்வது சட்டப்படி குற்றம்.. இதை நாங்கள் சொல்ல மாட்டோம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  ஆனால், வேணு தொடர்ந்து மருத்துவர்களிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டே இருந்தார். சரி., பாசத்தில்தான் கேட்கிறார் என நினைத்துக் கொண்டு கடந்த வாரம் அவர்களிடம் வயிற்றில் இருப்பது பெண் சிசு என மருத்துவர்கள் கூறினர்.

அவ்வளவுதான்.. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற வேணு, வீட்டுக்கு வந்ததும் சிசுவை அழித்தே தீர வேண்டும் என கத்தி கூச்சலிட்டார். இதற்கு வேணுவின் தாயாரும் ஆதரவாக பேசினார். சிவரஞ்சனி எவ்வளவு எடுத்து சொல்லியும், அதை கேட்பதற்கு வேணு குடும்பத்தினர் தயாராக இல்லை.

அதன்படி, நேற்று முன்தினம் சிசுவை வீட்டிலே வைத்தே கலைப்பதற்காக சில மூலிகைகளை அரைத்து சிவரஞ்சனிக்கு வேணுவும், அவரது தாயாரும் குடிக்க கொடுத்துள்ளனர். ஆனால், சிவரஞ்சனி குடிக்க மறுத்துள்ளார். இதையடுத்து, அவரது வாயில் வலுக்கட்டாயமாக அந்த மூலிகை சாற்றை அவர்கள் ஊற்றினர்.

இதில் சிறிது நேரத்திலேயே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிவரஞ்சனி கதறி துடித்துள்ளார். ஆனால், அதுபற்றி சிறிதும் கவலைப்படாமல் அவர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில், உடலில் விஷம் ஏறி சிவரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிவரஞ்சனி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வேணுவையும், அவரது தாயாரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சிசுவின் பாலினத்தை கூறிய மருத்துவர்களையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும்,மகளும் பரிதாபமாக பலி!!

விபத்தில்..

கம்பஹா – மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி பயணித்த காரொன்று மோதியதில் தந்தை மற்றும் மகள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் 54 வயதுடைய தந்தையும்,14 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர். இதன்போது விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முயன்ற காரின் சாரதி, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர் மகளை தந்தை வீட்டிற்கு அழைத்துச்சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.