முன்பே சவக்குழி தோண்டி வைத்து கர்ப்பிணி மனைவியைக் கொன்று புதைத்த கணவன்!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில், தாவணகெரே மாவட்டத்தில், 6 மாத கர்ப்பிணி மனைவியைக் கொன்று, அவரது உடலை காட்டில் புதைத்ததாகக் கூறப்படும் நபரை பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.

தாவணகெரே அருகே சன்னகிரி அருகே உள்ள கங்கொண்டனஹள்ளியை சேர்ந்தவர் மோகன் குமார் (25). அவர் கடந்த ஆண்டு சந்திரகலா என்கிற ரஷ்மியை (21) திருமணம் செய்துகொண்டார்.

ஆரம்ப நாட்களில் இருந்தே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மோகன்குமார் சந்திரகலாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டார், தனது மனைவி யாரிடமும் பேசுவதையும் வெறுத்தார். மேலும் அவரை வரதட்சணை தரும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சந்திரகலா மற்றவர்களிடம் பேசும் போதெல்லாம், மோகன் அவரை விசாரித்து, அவருக்கு தவறான உறவுகள் இருப்பதாக குற்றம் சாட்டிவந்துள்ளார். சித்திரவதை தாங்க முடியாமல் சந்திரகலா தனது பெற்றோருக்கு திருட்டுத்தனமாக அடிக்கடி போன் செய்து பேசி வந்துள்ளார்.

பின்னர் தனது பெற்றோர் வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார், ஆனால் அவர்கள் அப்பெண்ணை திருப்பி அனுப்பியுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் மோகன்குமார், மனைவியுடனான தகராறில் கழுத்தை நெரித்து கொன்றார்.

பின்னர், சிக்கமகளூர் மாவட்டம் அஜ்ஜாம்புரா அருகே உள்ள ஹுனகட்டா வனப் பகுதிக்கு சடலத்தை எடுத்துச் சென்று புதைத்துள்ளார். அப்போது, கொலை செய்யப்பட்ட சந்திரகலா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

பின்னர் சந்திரகலா காணாமல் போனதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்த அவர், அவர் யாரோ ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறி அக்டோபர் 10-ஆம் திகதி பொலிஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சந்திரகலாவின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் சென்று, மருமகனால் தங்கள் மகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறினார். காணாமல்போன தினத்தன்று, மோகன் தனது காரை எடுத்துக்கொண்டு அதிகாலை 2 மணியளவில் வெளியில் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, ​​அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அதிகாரிகள் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் மோகன், ஒரு மாதத்திற்கு முன்பே தனது மனைவியை கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது. அவர் உடலை அப்புறப்படுத்துவது மற்றும் அனைத்து ஆதாரங்களையும் அழிப்பது குறித்தும் திட்டமிட்டுவந்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில், மனைவியை புதைக்க காட்டில் முன்கூட்டியே குழி தோண்டி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக்கட்ட மனைவி போட்ட திட்டம் : இறுதியில் நடந்த பரிதாபம்!!

மதுரையில்..

மதுரை திருப்பாலை ஜி.ஆர் நகரை சேர்ந்தவர்கல் செந்தில் குமார் – வைஷ்ணவி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்ஜினியராக செந்தில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் கடந்த மாதம் ஊருக்கு வந்திருந்தபோது தனது மகளை பள்ளியில் சென்று விட்டுவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது பொன்விழா நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில், செந்தில்குமாரின் வாகனத்தின் மீது மோதி கீழே சாய்த்து பட்டகத்தியால் அவரை வெட்டி விட்டு தப்பினர். படுகாயம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியின் செல்போன் எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவிக்கும், அவருடைய உறவினரான சிவகங்கையை சேர்ந்த வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

பின்னர் விசாரணையில் கணவர் செந்தில்குமார் கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்படுத்துவார் என கருதி நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கொடுத்து வெங்கடேசன் மூலமாக கூலிப்படையை ஏவி கொலை முயற்சி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, வைஷ்ணவிக்கு உடந்தையாக இருந்த வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் தகராறில் கூலிப்படையை ஏறி கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேஸ்புக்கில் வலை விரித்த தம்பதியினர்… வலையில் விழுந்த 68 வயது முதியவர் : பின்னர் நடந்த விபரீதம்!!

கேரளாவில்..

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சார்ந்த நிஷாத் மற்றும் மலப்புரம் மாவட்டத்தை சார்ந்த ராஷிதா தம்பதியினர், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் யூட்யூபில் வீடியோக்கள் போட்டு வருமானம் பார்க்கலாம் என முயற்சித்துள்ளனர்.

ஆனால் இவர்களுடைய வீடியோக்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால், பணம் சம்பாதிக்க யோசித்து இருவரும் பக்காவாக பிளான் போட்டு முகநூல் பக்கத்திலிருந்து வயதான வசதியான ஆட்களை தேட துவங்கி உள்ளனர்.

அந்த வகையில் சிக்கியவர் தான் மலப்புறம் கல்பாகம்சேரி பகுதியை சார்ந்த வசதி படைத்த 68 வயது முதியவர். இவருக்கு ஸ்கெட்ச் போட தொடங்கிய ராஷிதா, தன்னை ஒரு டிராவல் Vlogger எனக்கூறி முதியவருடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பின்பு கணவரின் உதவியுடன் முதியவருடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனை கணவரும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தொடர்ந்து தனது கணவருக்கு தொழில் தொடங்க வேண்டும் என அவ்வப்போது முதியவரிடம் பணம் வாங்கியுள்ளார்.

தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதியவர் ஒரு கட்டத்தில் பணத்தை தர மறுத்துள்ளார். இதனால் இருவரும் எடுத்து வைத்திருந்த வீடியோவை காட்டி மிரட்டி ஒரு வருடத்திற்குள் முதியவரிடம் இருந்து 23 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளனர்.

இந்த பணத்தை வைத்து தம்பதியினர் இருவரும் ஒரு கார் வாங்கி நாடு நாடாக சுற்றி திரிந்து அதனை வீடியோ எடுத்து malay mallus என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களது யூடியூப் வாசகர்கள் அதிகமானதால் முதியவரை தொடர்ச்சியாக மிரட்டி பணம் வசூலித்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளனர். இருவருக்கும் சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

இந்த வீடியோக்களை அவர்களது யூடியூப்பில் பதிவிட்டுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல பணம் குறைந்து வருவது குறித்து முதியவரின் உறவினர்கள், அவரிடம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து முதியவரும் நடந்த சம்பவத்தை அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆறு மாத கைக்குழந்தைகள் இருப்பதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், ராஷிதாவுக்கு மட்டும் முன் ஜாமீன் வழங்கி, நிஷாதை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

விபத்தில் சிக்கியது தன் மகள் என்று தெரியாமலே தாய் செய்த செயல் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

ஆல்பர்ட்டாவில்..

கார் விபத்தொன்றில் சிக்கிச் சிதைந்த இளம்பெண் ஒருவருக்கு சிகிச்சையளித்த கனேடிய பெண்ணுக்கு, பின்னர் தெரியவந்த பயங்கர உண்மையால் அதிர்ச்சியில் உறைந்துபோனார் அவர்.

ஆல்பர்ட்டாவில் இம்மாதம் (நவம்பர்) 15ஆம் திகதி, அதாவது கடந்த வாரம், கார் விபத்தொன்றில் சிக்கியவர்களுக்கு உதவ, மருத்துவ உதவிக்குழுவினரான Jayme Ericksonக்கு அழைப்பு வந்துள்ளது.

முதல் ஆளாக ஓடோடிச் சென்ற Jaymeம், நண்பரும் சக மருத்துவ உதவிக்குழுவினருமான Richard Reedம் இணைந்து, விபத்தில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துபோன இளம்பெண் ஒருவருக்கு 20 நிமிடங்களுக்கும் அதிகமாக சிகிச்சையளித்துள்ளார்கள்.

பின்னர் அந்த இளம்பெண் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சையளித்துவிட்டு Jayme வீடு திரும்ப, சிறிது நேரத்தில் பொலிசார் அவரைத் தேடிவந்துள்ளார்கள். அவர்கள் கூறிய செய்தியைக் கேட்ட Jayme, அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

ஆம், அவர் சற்று முன் சிகிச்சையளித்துவிட்டு வந்த இளம்பெண் வேறு யாரும் இல்லை, Jaymeஉடைய மகளான Montana Dobry (17) தான். பெற்ற தாய்க்கே அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்துபோயிருக்கிறது Montanaவுக்கு! பின்னர், காயங்கள் காரணமாக Montana உயிரிழந்துவிட்டார்.

தாயும் தந்தையும் கத்திக் கதறித் துடித்து அடங்கியபின், தங்கள் மகளுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதென முடிவு செய்துள்ளார்கள் Jaymeஉடைய குடும்பத்தினர்.

வாழ்வு துவங்கும் நேரத்தில் வாழ்விழந்தாலும், இறந்தும் தன் மகள் யார் உடலிலோ வாழ்கிறாளென்ற திருப்தி மட்டுமே மீதமிருக்கிறது Montanaவின் தாய்க்கு. இதற்கிடையில் Montanaவின் மரணம், Jaymeயுடன் பணியாற்றும் மருத்துவ உதவிக் குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டீ தூள் விற்று கோடிகளில் வருமானம் : ஒரு மருத்துவர் தொழிலதிபரான கதை!!

ரூபாலி..

டாக்டர் ரூபாலி அம்பேகாஒன்கார் (Rupali Ambegaonkar ) தனது எம் பி பி எஸ் பட்டப்படிப்பை மும்பையில் பூர்த்தி செய்தார், மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த டாக்டர் ரூபாலி தனது மகளின் உடல் நிலை காரணமாக மருத்துவ தொழிலில் இருந்து விலக நேரிட்டது.

இறுதியில் அவர் தேயிலை வியாபாரத்தை தேர்ந்தெடுத்தார் கடந்த 2010 ஆம் ஆண்டு ரூபாய் 100 சதுர அடி பரப்பை கொண்ட ஓர் அலுவலகத்தையும் 20000 சதுர அடி கொண்ட போர் தொழிற்சாலையையும் சுமார் 30 லட்சம் ரூபாய் முதலீட்டில் மும்பை முள்ளான் பகுதியில் ஆரம்பித்தார்.

ரூபாலி தனது நிறுவனத்திற்காக சீனாவில் இருந்து தேயிலை கொழுந்துகளை இறக்குமதி செய்து அவற்றை பதப்படுத்தி பல்வேறு வித்தியாசமான பிளேவர்களை சேர்த்து மும்பையில் அதனை பொதியிட்டு விற்பனை செய்தார்.

டீ கல்ச்சர் வேர்ல்ட் (Tea Culture of the World (TCW) என்ற பெயரில் குறித்த தேயிலை விற்பனை செய்யப்பட்டது. ஜப்பான், சீனா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து கைகளினால் பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகளை கொண்டு சுமார் 80 வகையான வித்தியாசமான ஃப்ளேவர்களைக் கொண்ட தேயிலை வகைகளை உற்பத்தி செய்கின்றார்.

இந்த தேயிலை ஆன்லைனிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் 37 கிளைகள் வழியாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. “இந்த நிறுவனம் தொலைபேசி அழைப்புகளை பதிலளிப்பதற்கு ஒரு யுவதியும் தேயிலையை டெலிவரி செய்வதற்கு ஒரு சாரத்தையும் என்ற அடிப்படையில் மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது தற்பொழுது இந்த நிறுவனத்தில் சுமார் 110 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்” என 45 வயதான ரூபாய் கூறுகின்றார்.

மும்பையின் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பப் பின்னணியை கொண்ட டாக்ட ரூபாலி இன்று வியாபார துறையில் கொடிகட்டி பறக்கும் ஓர் பெண்மணியாக பரிணமித்துள்ளார்.

தனது பாட்டனார் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர் என ரூபாலி பெருமிதத்துடன் கூறுகின்றார். மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னர் மருத்துவர் ஒருவரை மணம் மடித்த ரூபாலி கணவரின் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

எனினும் அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் அவர்களுடைய வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. “எனது மகளுக்கு இருதயத்தில் துளை ஏற்பட்டுள்ளது அவருக்கு அடிக்கடி சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது எனது மகள் டயலாக்ஸியா நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளார் அவரினால் சாதாரண பிள்ளைகளைப் போல் வேகமாக சரளமாக பேச முடியவில்லை இதனால் நான் எனது மருத்துவ தொழிலை கைவிட்டுவிட்டு வீட்டில் எனது மகளை பராமரித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தினேன்” என ரூபாலி கூறுகின்றார்.

அதன் பின்னர் தேயிலை வியாபாரத்தில் காட்டிய நாட்டத்தினால் பெரு வெற்றிகளை ரூபாலி பெற்றுக் கொண்டார். இந்த நிறுவனத்தின் சில ப்ளேவர்களைக் கொண்ட ஒரு கிலோ தேயிலை 60000 ரூபா, 50000 ரூபா என விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை முடிந்து விட்டது என தோல்வியில் துவண்டு போகும் பலருக்கு டொக்டர் ரூபாலி அல்லது பிரபல வர்த்தகர் ரூபாலியின் வாழ்க்கை ஒர் சிறந்த எடுத்துக்காட்டு என்றால் பிழையாகாது.

மொத்த குடும்பத்தையும் கொலை செய்த 25 வயது இளைஞன் சொன்ன அதிர்ச்சிக் காரணம்!!

டெல்லியில்..

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் (25). போதைக்கு அடிமையான இவர் மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு திரும்பிய கேசவ், தன் குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. கேசவ் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கேசவ், தனது தந்தை தினேஷ் (50), தாய் தர்சனா, தங்கை சைனி மற்றும் பாட்டி தேவானா தேவி (75) ஆகிய நான்கு பேரையும் குத்திக் கொலை செய்துள்ளார்.

அவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, கேசவ்வின் குடும்பத்தினர் அனைவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தப்பியோடிய கேசவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதையில் இருந்த கேசவ் மேலும் மது வாங்க பணம் கேட்டுள்ளார். குடும்பத்தினர் மறுக்கவே அவர்களை படுகொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் ஒருவர் தனது மொத்தம் குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காளான் சமைத்துச் சாப்பிட்ட தந்தை,மகன் உயிரிழப்பு.. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம், தட்சினகன்னடா மாவட்டத்திற்குட்பட்ட புதுவெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் குருவா மேரா. இவரது மகன் ஒடியப்பா. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, காட்டில் விளைந்திருந்த காளான்களை பறிந்து வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். பிறகு அந்த காளான்களை சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். பிறகு நேற்று வெளியே சென்றிருந்த குருவா மேராவின் மற்றொரு மகன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது தந்தை மற்றும் சகோதரன் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறகு அங்கு வந்து போலிஸார் விசாரணை செய்தனர். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பாத்திரத்தில் காளான் சமைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதோடு காட்டிற்குச் சென்று காளான் பறிந்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

இதனால் காளான் சமைத்து சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா அல்லது உணவில் யாராவது விஷம் கலந்துள்ளார்களா? என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தபிறகே உண்மை என்ன வென்று தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். காளான் சமைத்துச் சாப்பிட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FIFA உலகக்கோப்பையில் இமாலய வெற்றி பெற்ற ஸ்பெயின் – கோல் மழையால் காலியான கோஸ்டாரிகா!!

உலகக்கோப்பையில்..

கத்தார் உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்திய இமாலய வெற்றி பெற்றது. அல் துமமா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் கோஸ்டரிகா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேனி ஒல்மோ கோல் அடித்தார். இது உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணியின் 100வது கோல் ஆகும்.

இதன்மூலம் உலகக்கோப்பையில் 100 கோல்கள் அடித்த 6வது அணி என்ற இமாலய சாதனையை ஸ்பெயின் படைத்தது.

அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். மார்கோ அசென்சியோ (21வது நிமிடம்), பெர்ரன் டோரஸ் (31வது நிமிடம்) ஆகியோர் கோல்கள் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 3-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் ஸ்பெயினின் வேகத்தை கோஸ்டாரிகா அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் பெர்ரன் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

கேவி 74வது நிமிடத்திலும், கார்லோஸ் சோலெர் 90வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஸ்பெயின் அணியின் அல்வரோ மொரட்டா கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடிக்க, அந்த அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கோஸ்டாரிகா அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஸ்பெயின் 1045 முறை பந்தை பாஸ் செய்தது.

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஜப்பான் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி!

ஜப்பான்..

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரின் குழு E பிரிவில் உள்ள ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது.

நான்கு முறை உலகக் கோப்பையை கைப்பற்றி வலுவான அணியாக வலம் வரும் ஜெர்மனி அணி, இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. இருந்தும் 33வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த கோலை இல்கே குண்டோகன் பதிவு செய்தார்.

அந்த பெனால்டி வாய்ப்பில் ஜெர்மனி அணியின் கன்டோகன் ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை.

இதனால் முன்னிலையுடன் ஜெர்மனி முதல் பாதியை முடித்தது. இதனால் ஆட்டம் ஜெர்மனிக்கே சாதகமாக இருந்தது. ஆனால் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது.

75வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய ரிட்ஸு முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன்பின் 83வது நிமிடத்தில் டகுமா அசோனோ கோல் அடிக்க ஜப்பான் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆனது. எனினும், சமன் செய்யும் முயற்சியில் ஜெர்மனி வீரர்கள் விளையாடினர்.

இந்நிலையில் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜப்பான் அணி 2-1 என வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதன் பின்னர் ஜெர்மனி அணியினால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

2014ம் ஆண்டு சாம்பியன் அணியான ஜெர்மனியை ஆசிய அணிகளில் ஒன்றான ஜப்பான் அணி வீழ்த்தியுள்ளமை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஜப்பான் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

கோபத்தில் ரசிகரின் செல்போனை தட்டி விட்ட கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ரூ. 2 கோடி அபராதம்!!

ரொனால்டோ..

ரசிகரின் செல்போனை கோபத்தில் தட்டிவிட்டதற்காக கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு £50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ரியல் மாட்ரிட், யுவெண்டஸ் போன்ற அணிகளுக்காக விளையாடிய ரொனால்டோ கடந்த ஆண்டுதான் மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.

இந்நிலையில் மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளருக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி நடந்த கால்பந்து போட்டியில் ரொனால்டோ சார்ந்திருந்த அணி தோல்வியடைந்த நிலையில் கோபத்தில் இருந்த அவர் ஆட்டிசம் பாதிக்கப்பட்டிருந்த இளம் வயது ரசிகரின் செல்போனை கீழே தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இதையடுத்து ரொனால்டோவின் செயலுக்கு £50,000 (ரூ.2,18,87,123.84) அபராதம் விதிக்கப்படுவதோடு 2 கிளப் போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு FA விதி E3ஐ மீறியதற்காக அவரது நடத்தை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என் மனம் வலிக்கிறது…. உலக கோப்பை கால்பந்து தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கம்!!

மெஸ்ஸி..

என் மனம் வலிக்கிறது என்று உலக கோப்பை கால்பந்து தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கமாக பேசியுள்ளார். பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது.

இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

இந்நிலையில், பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த அர்ஜெண்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் நேற்று நேருக்கு நேர் மோதின. இந்த ஆட்டம் தொடங்கியதும், அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினார்கள்.

ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடயும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்து வந்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலித்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தார்கள்.

இதனால் இப்போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. இப்போட்டியின் முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், தோல்வி குறித்து அர்ஜென்டினா கேப்டனான மெஸ்ஸி பேசுகையில், சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் என் மனம் வலிக்கிறது.

சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். நாங்கள் அனைவரும் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாடினோம். இத்தோல்வியிலிருந்து நிச்சயம் மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சி செய்வோம் என்றார்.

படுத்த படுக்கையான தாய்… 2 வாரத்தில் திருமணம் நடைபெற இருந்தநிலையில் மகள் எடுத்த விபரீத முடிவு!!

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை அருகே, இதய அறுவைசிகிச்சைக்கு பின் படுத்த படுக்கையாய் அவதிப்பட்டு வந்த தாய் தற்கொலை செய்து கொண்டதால், மகளும் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி ஜோதிலட்சுமி, மகள்கள் வைஷ்ணவி, பவித்ரா மற்றும் பவானிசங்கர் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜோதிலட்சுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் படுத்த படுக்கையாய் ஆன ஜோதிலட்சுமியை அவரது மகள்கள் கவனித்து வந்துள்ளனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல படுக்கை புண்ணால் அவதிப்பட்டு வந்த ஜோதிலட்சுமி மிகுந்த கவலையில் இருந்து வந்துள்ளார். இந்த மனவேதனையில் அவர் எடுத்த விபரீத முடிவு குடும்பத்தின் நிலையை தலைகீழாக மாற்றியுள்ளது.

மூத்த மகளான வைஷ்ணவிக்கு ஆற்காடு வளவனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் 5ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த சிரிப்புக்கு பின்னால் இப்படி ஒரு துயரமா? டோல்கேட்டில் தின்பண்டம் விற்று வைரலான கல்லூரி மாணவி!!

டோல்கேட்டில்..

இணையத்தில் நாம் அதிக நேரம் உலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்களை குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக, சில விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் நம்மிடையே ஒருவித தாக்கத்தையே உருவாக்கி செல்லும்.

அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் மனம் உருக வைத்திருந்தது. டோல்கேட்டில் கல்லூரி மாணவி ஒருவர், அதிகாலையில் சிரித்த முகத்துடன் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

மிகவும் புன்னகைத்த படி, ஒரு பாசிடிவ் Vibe கிடைக்கும் அளவுக்கு அவர் விற்பனை செய்து வந்தது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி இருந்தது. ஆனால், அந்த சிரிப்பிற்கு பின்னால் உள்ள கஷ்டம் தான் தற்போது பலரையும் கலங்கடித்து வருகிறது.

விருத்தாச்சலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வந்த தம்பதி சண்முகம் – குப்பு. இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே ரயிலடி அருகேயுள்ள மோட்டார் அறை ஒன்றில் குடும்பமாக தங்கி வருகின்றனர்.

கூலித்தொழில் செய்யும் சண்முகம் மற்றும் குப்பு ஆகியோர், மோட்டார் அறைக்கு பின்புள்ள நிலத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சண்முகம் அப்பு தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் முதல் இரண்டு குழந்தைகளும் அப்புவின் தாய் வீட்டில் தங்கி பள்ளி படிப்பை முடித்த நிலையில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூத்த மகளின் நர்சிங் கனவை அவரது கணவர் நிறைவேற்றி வருவதாக தெரிகிறது. இவர்களின் இரண்டாவது மகள் தான் வசந்தி.

இவர் கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள மேட்டுக்குப்பத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால், தற்போது கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் போக்குவரத்து கட்டணத்திற்கும் பெரிய அளவில் பணம் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வருகிறார் வசந்தி. இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தின்பண்டங்களை விற்று, குடும்பத்தின் கஷ்டத்திற்கு பங்கேற்க தொடங்கியுள்ளார் வசந்தி.

இது பற்றி பேசும் வசந்தி, கல்லூரிக்கு தினந்தோறும் மூன்று பேருந்துகள் ஏறி செல்வதற்கு சுமார் 200 ரூபாய் வரை ஒரு நாளைக்கு ஆவதாக கூறி உள்ளார்.

டோல்கேட்டில் வேலை பார்த்துக் கொண்டு பெற்றோருக்கு உதவி செய்து வருவதாக கூறும் வசந்தி, பெற்றோர் வற்புறுத்தல் பேரில் டோல்கேட்டில் வேலை செய்யவில்லை என்றும், அவர்கள் கஷ்டத்தை பார்த்து தானாக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வசந்தி அதிகாலையில் சிரித்த முகத்துடன் வேலை செய்யும் வீடியோ பலரது மனதையும் கவர்ந்திருந்தாலும் அவர் பின்னால் உள்ள குடும்ப சூழ்நிலை ஏராளமானோரை மனம் நொறுங்க வைத்துள்ளது.

மனைவியை கொன்ற இலங்கை தமிழர் வழக்கில் வீடியோ சாட்சியம் : நெஞ்சு பதைபதைக்கும் காட்சி!!

கனடாவில்..

கனடாவில் 2019ல், பிரிந்த தனது மனைவியை வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரிடம் பொலிசார் விசாரணை நடத்திய வீடியோ காட்சி நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது காட்டுப்பட்டுள்ளது.

மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட சசிகரன் தனபாலசிங்கம் குடும்ப நண்பர் அப்போது அளித்த சாட்சியமும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பமானது. நேற்றைய விசாரணையின் போது காவல்துறையினர் தனபாலசிங்கத்திடம் நடத்திய விசாரணை தொடர்பான வீடியோ நீதிமன்றத்தில் காட்டப்பட்டது.

அதில் விசாரணை அதிகாரி கெரி பெர்ணாண்டஸிடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் தனபாலசிங்கம் பேசினார். அப்போது நீங்கள் என்னை ஒரு சம்பவத்தில் குற்றம் சாட்டுகிறீர்கள். நான் எதுவும் செய்யவில்லை.

ஒரு சிறு பறவையைக் கூட கொல்வது எனக்கு பிடிக்காது, எனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் கனடாவுக்கு புலம்பெயர்வதற்காக மட்டுமே என்னை தர்ஷிகா திருமணம் செய்ய நினைத்தார்.

ஏற்கனவே முன்னர் என்னை அவர் தாக்கிவிட்டு நான் அவரை அடித்ததாக பொய் புகார் அளித்தார் போன்ற விடயங்களையெல்லாம் பேசியிருந்தார். தனபாலசிங்கம் குடும்ப நண்பரான சோமகல சோமகாசனின் சாட்சியமும் அரச சட்டத்தரணி அன்ட்ரூ பில்லாவினால் வாசிக்கப்பட்டது.

ஆரம்ப விசாரணையில் சோமகாசன் சாட்சியம் அளித்தார், ஆனால் சிறிது காலத்திற்கு பின் அவர் உயிரிழந்துவிட்டார். சோமகாசன் அதில் கூறுகையில், தர்ஷிகா திருமண பந்தத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் தனபாலசிங்கத்தை சந்தித்து மத்தியஸ்தம் செய்ய தான் அழைக்கப்பட்டதாக கூறினார்.

அப்போது கோபப்பட்ட தனபாலசிங்கம், நான் அவளை அப்படியே விட விரும்பவில்லை என்று கூறினார். மேலும், நான் தர்ஷிகாவை கொல்லப் போகிறேன். அவள் எனக்காக இல்லை என்றால், யாருக்காகவும் இருக்கக்கூடாது என தெரிவித்தாக கூறியிருந்தார்.

செப்டம்பர் 11, 2019 அன்று மாலை 6:15 மணியளவில் நடந்த கத்திக் குத்துத் தாக்குதல் கண்காணிப்பு கெமராவில் பதிவானது, அந்த வீடியோவில் தர்ஷிகாவை கொன்றது தனபாலசிங்கம் தான் என்று நீதிமன்றம் மற்றும் அரசு தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதே சமயம் கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இருந்ததா என்பதை நீதிபதி தீர்மானிக்க வேண்டும் என கூறப்பட்டது.

வீடியோ காட்டப்பட்ட பின்னர், தனபாலசிங்கம் தவறு செய்தாரா மற்றும் அவர் குற்றவாளியா என்பது குறித்து தடயவியல் மனநல மருத்துவரின் மதிப்பீட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் டாம் பிட்மேன் நீதிபதியிடம் கூறினார். இந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு தொடர்ந்து நடக்கவுள்ளது.

கனடா ஆசையால் வியட்நாமில் உயிரிழந்த யாழ் இளைஞன்!!

சுந்தரலிங்கம் கிரிதரன்..

வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றபோது படகு பழுதடைந்ததால் இலங்கையர்கள் 303 வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர்,

தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த நபர் யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் கூறிவருகின்றனர்.

எனினும் அவர்களை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தாம் நாடு திரும்ப போவதில்லை எனவும் தெரிவித்து, இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டிருந்த நிலையில் குறித்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

இரண்டாம் இணைப்பு : குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்திற்கு துாதுவராலயம் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அதேசமயம் உயிரிழந்தவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர குடும்பத்தினர் , சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றதாகவும் கூறப்படுகின்றது.

காதலில் தோல்வியுற்றவர்களுக்கு மட்டும் 5 ரூபாய்க்கு ஸ்பெஷல் டீ : கல்லூரி மாணவன் அமைத்த டீ கடையின் சுவாரஸ்ய கதை!!

மத்தியப் பிரதேசத்தில்..

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், காதல் தோல்வியுற்றவர்களுக்கு மட்டும் ரூ.5க்கு ஸ்பெஷல் டீ கொடுத்து வரும் நிகழ்வின் பின்னணி குறித்து பார்க்கலாம். மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் பகுதியைச் சேர்ந்தவர் அந்தார் குர்ஜர் (Antar Gurjar).

இவர் அந்த பகுதி கல்லூரி ஒன்றில் பி.ஏ இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், அவரது உறவினர் பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் சந்தித்த இருவரும், பின்னர் தொலைபேசி வாயிலாக நண்பர்களாக பழகி பேசிக்கொண்டனர். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த பெண், இவரிடம் பிரேக் அப் செய்துகொள்வதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும்,

உனக்கு வருமானம் எதுவும் இல்லை என்றும் கூறி அவரை விட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அதோடு அவரிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அந்தர், தற்கொலை செய்துகொள்ள முற்பட்டுள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் அவரை மீட்டு அறிவுரை வழங்கினர்.

இதில் மனம் மாறிய அந்தர், தனது காதலி முன் கெத்தாக வாழ வேண்டும் என்று நினைத்து தற்போது அந்த பகுதி கில்ஜிபூர் பேருந்து நிலையம் அருகே டீ கடை அமைத்து நடத்தி வருகிறார்.

இந்த டீ கடைக்கு அவரது காதலியின் பெயரின் முதல் எழுத்தான ‘M’ என்பதை சேர்த்து ‘M Bewafa Chaiwala’ என்று பெயர் வைத்துள்ளார். ஏனென்றால் ஒரு முறை இவரது காதலி, ஏதேனும் கடை திறந்தால் அதற்கு தனது பெயரை வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அதன்படி தற்போது அவரது பெயரை இதில் சேர்த்துள்ளார்.

இந்த கடையின் ஸ்பெஷல் என்னவென்றால், சாதாரண நபர்களுக்கு ஒரு டீ-யின் விலை ரூ.10 என்றும், காதல் தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் இங்கு ரூ.5-க்கு டீ என்றும் விற்கப்படுகிறது.

இது தற்போது அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்று பேசுபொருளாக அமைந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.