பாடசாலைகள் மீள ஆரம்பம் : கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!!

பாடசாலைகள்..

எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மாத்திரமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இவ்வாறு பாடசாலைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 07.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஏனைய பாடசாலைகள் கடந்த வாரத்தில் செயற்பட்டமை போன்று செயற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் அந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை இல்லாத நாட்களில் இணைய முறை மற்றும் வீட்டுச் செயல்பாடுகள் மூலம் தொடர்புடைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயம்!!

விபத்து..

வவுனியாவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளாதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா – பறனட்டகல் பகுதியில் இன்று (25.06) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் வாகன சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக வாகனம் தனது வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கபட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா – ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞன் பரிதாபமாக பலி!!

ரவிஷான் மதுரங்க..

வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக செல்லவிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞர் நேற்று காலை கொள்கலன் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியை சேர்ந்த ரவிஷான் மதுரங்க என்ற 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தளம் – அனுராதபுரம் ஏ12 வீதியில் பந்துலகம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் வரிசையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிள் கொள்கலன் பாரவூர்தியில் மோதி வீதியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (23) இரவு தம்புத்தேகமவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி வவுனியா செல்வதற்காக மோட்டார் சைக்கிளுக்கு தேவையான பெட்ரோல் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வரிசையில் காத்திருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட உயிரிழந்த இளைஞனின் தந்தை நிமல் பண்டார, “இந்த நாட்டில் வாழ்வது வீண். நமக்கு எதிர்காலம் இல்லை.. இந்த நாட்டில் வாழ்ந்தால் பட்டினியால் சாக வேண்டிய நிலைமை வரும் என கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற மகன் எங்களை விட்டு சென்றுவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்டமையைக்கண்டித்து இன்று (25.06.2022) மதியம் 12.30 தொடக்கம் 1.00மணி வரையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.

ஐனரஐ சுகாதார சேவைகள் சங்கத்தினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்கள், மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோரின் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உயிர்காக்கும் தொழிலுக்கே உயிராபத்தா?, எரிபொருளினால் தாக்கப்படும் சுகாதார ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குக, கிளிநொச்சி பிராந்திய பணிப்பாளர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்,

மருத்துவ சேவையை அவமதிக்காதே , அரச ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்து , மருத்துவ உலகே மகத்துவ உலகு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கணவன், மகனுக்குத் தெரியாமல் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 53 வயதுப் பெண் : சுவாரஸ்சிய நிகழ்வு!!

மகாராஷ்டிரா..

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்பனா. இவர் 37 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தந்தை இறந்ததால் குடும்பம் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இவரால் தனது பள்ளி படிப்பை தொடரமுடியவில்லை. அப்போது அவருக்கு 16 வயது.

இதையடுத்து கல்பனா திருமணம் செய்து கொண்டு, கணவன், மகன்கள் என குடும்ப வாழ்க்கைக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இருப்பினும் அவருக்குக் கல்வி மீதான தாகம் இருந்து கொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் ஒருவர் மூலம் கல்பனாவுக்குக் கல்வியை இடைநிற்றல் செய்தவர்களுக்காக அரசு நடத்தும் இரவு பள்ளி குறித்துத் தெரியவருகிறது. மேலும் முழுக்க முழுக்க இலவசம் என்பதால் பாதியில் விட்ட தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, 2021ம் ஆண்டு முதல் கணவன் மற்றும் மகனுக்குத் தெரியாமல் இரவு பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றுவந்துள்ளார். மேலும் நடைப்பயிற்சி சென்று வருவதாகக் கூறி தினமும் கணவரை ஏமாற்றிவிட்டு பாடம் கற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அயர்லாந்தில் இருக்கும் அவரது மகனுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரது மகன் இந்தியா வந்துள்ளார். அப்போதுதான் அவருக்குத் தனது தாய் இரவு பள்ளியில் சேர்ந்து படித்து வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து தாயின் விருப்ப படியே அவரை தேர்வு எழுதவும் அனுமதித்துள்ளார்.

இதையடுத்து 53 வயதில் கல்பனா 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி அதில் 79.60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் பள்ளி கனவு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தனது தாயின் அசாத்திய நம்பிக்கை கனவு குறித்து அவரது மகன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்து, பலருக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் என பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். தற்போது கல்பனா குடும்ப நெருக்கடியால் கல்வியை கைவிட்டவர்களுக்கு மத்தியில் ஒரு முன் உதாரணமாக உருவெடுத்துள்ளார்.

மயக்க ஊசிக்கு பதில் ஆசிட்டை செலுத்திய மருத்துவர் : பிரபல நடிகையின் கோர தோற்றத்துக்கு இதுதான் காரணமா?

நடிகை சுவாதி..

நடிகை சுவாதியின் முகம் கோர தோற்றத்துடன் காட்சியளிப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. பல் மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட் கேனல் அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இது ஒரு பொதுவான பக்க விளைவு என்றும் சில மணிநேரங்களில் வீக்கம் குறையும் என்றும் நடிகைக்கு அந்த நேரத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், 20 நாட்களுக்குப் பிறகும், ஸ்வாதி முகம் வீங்கியிருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் ஸ்வாதியை பரிசோதித்த மருத்துவர்கள் பல் வேரை அகற்றினால் சரியாகிவிடும் எனக்கூறி அதற்காக சிகிச்சை அளித்துள்ளனர்.

இருந்தும் வீக்கம் குறையாத காரணத்தால் இது குறித்து விளக்கம் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை என சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் கிளினிக்கிற்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மருத்துவ பரிசோதனையில் சுவாதிக்கு மயக்க ஊசிக்கு பதிலாக முகத்தில் உள்ள முகப் பருவை குணப்படுத்த பயன்படுத்தக் கூடிய சாலிசிலிக் ஆசிட்டை (Salicylic Acid) மருத்துவர் செலுத்தியுள்ளது தெரியவந்தது.

இது தோலில் ஊடுருவி சென்று முகப் பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும். அது போல் தோலில் அதிக எண்ணெய் உற்பத்தியை குறைக்கும். தோலில் உள்ள துளைகள் எப்போதும் திறந்திருக்க உதவும். இந்த நிலையில் அந்த மருத்துவர் மீது ஸ்வாதி புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலி!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உடுவிலை சேர்ந்த 24 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சில நாட்களின் முன் எரிபொருள் பெற முண்டியடித்த இளைஞர்களிடையே குழப்பம் ஏற்பட்டு, மோதலாகியது.

இதில் இளைஞன் ஒருவரின் முகத்தில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டது. சில பெண்கள் உள்ளிட்ட வேறு சிலரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். முகத்தில் சிறிய காயமடைந்த நிலையில் வீடு திரும்பிய இளைஞன், கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது சில நாட்கள் சிகிச்சை பெற்ற இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்!!

யாழில்..

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய சிவலோகேஸ்வரன் மதுரகன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார். மேலும் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!

அக்கரைப்பற்றில்..

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் முதலாம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய முகைதீன்பாவா அப்துல் காதர் சாபிக் அபான் என தெரியவந்துள்ளது. அவர் வீடு ஒன்றின் மேல் மாடியில் சுவருக்கான வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே,

மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார் என்று அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வெயிலுக்கு மத்தியில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குளிர்பானம் வழங்கிய R.S AUTO SOLUTION (PVT) LTD நிறுவனம்

வரிசையில் குளிர்பானம் வழங்கிய R.S AUTO SOLUTION (PVT) LTD

வவுனியா ஓமந்தையின் எரிபொருளுக்காக கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருந்தவர்களின் வெக்கையினை தனிக்கும் முகமாக R.S AUTO SOLUTION (PVT) LTD நிறுவனத்தினால் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டின் பல மாவட்டங்களில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இவற்றிக்காக இன்றும் மக்கள் பல மணிநேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

அந்த வகையில் ஓமந்தை ஜ.ஓ.சி நிறுவனத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு மோட்டார் சைக்கில்களில் கடுமையான வெப்பநிலைக்கு மத்தியில் வரிசையில் காத்திருந்தனர்.அவர்களின் வெக்கையினை தணிக்கும் நோக்கில் ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல R.S AUTO SOLUTION (PVT) LTD நிறுவனத்தினால் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது.

R.S AUTO SOLUTION (PVT) LTD நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரையிலான காலப்பகுதிகளில் தமது வருமானத்தில் சிறு தொகையினை மக்கள் நலன் சார் விடயங்களுக்காக செலவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களுக்கே முதல் கட்டமாக எரிபொருள் அட்டை விநியோகம்!!

வவுனியா மாவட்டத்தில் பெற்றோல் விநியோகத்தில் முதல் கட்டமாக அரச உத்தியோகத்தர்களுக்கே எரிபொருள் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதுடன், ஒன்லைன் பதிவுகள் முழுமையாக இடம்பெறும் என மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விநியோக நடைமுறை குறித்து நேற்று (23.06) கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதற்கான வழிவகைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் அட்டைகள் வழங்கப்பட்டு அதன் ஊடாக பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் பெறும் அனைத்து வாகனங்களும் ஒன்லைனில் பதிவு செய்யப்படுவதுடன் பெற்றோல் கிடைப்பனவு மற்றும் தேவைப்பாடு என்பவற்றுக்கு ஏற்ப எரிபொருள் விநியோக அளவுகளில் மட்டுப்பாடுகள் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அவர்களது முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் வழங்குவதற்கான புதிய நடைமுறை ஒன்று அமல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் சிறுபோக அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், டீசல் விநியோகம் தொடர்பில் அவசர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இரசேந்திரங்குளத்தின் கீழான பகுதிகளில் அறுவடை ஆரம்பித்துள்ளதால் அவர்களது அறுவடைக்கு தேவையான 3000 லீற்றர் டீசல் விநியோகம் நாளை (24.06) முதல் இடம்பெறும்.

வவுனியாவில் சிறுபோகத்தில் 12 ஆயிரத்து 238 ஏக்கர் நெல் செய்கை செய்யப்பட்டுள்ளது. வருகின்ற யூலை முதல் கிழமையில் இருந்து ஓகஸ்ட் கடைசிக் கிழமை வரை இந்த அறுவடை இடம்பெறும் என எதிர்பார்கின்றோம்.

இதற்காக கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கு மேலதிகமான டீசல் எரிபொருள் தேவைப்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிப்பர் முதலான கனரக வாகனங்களுக்கான டீசல் விநியோகத்தில் மட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொழில் ரீதியான செயற்பாட்டை முன்னெடுக்கும் கனரக வாகனங்களுக்கு டீசல் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கவுள்ளதுடன், ஏனைய மாவட்ட டிப்பர் போன்ற கனரக வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படவுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் சீராக இடம்பெறுவது குறித்து தொடர்ந்தும் பரிசீலித்து வருவதுடன், எரிபொருள் தேவை குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மாவட்ட செயலக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

காதலியை கொன்று புதைத்த காதலன் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கர்நாடகா..

பல ஆண்டுகள் காதலித்த தனது காதலியை கொ.ன்.று பு.தைத்துவிட்டு, அதன் அருகிலேயே தானும் தூ.க்கிட்டு தொ.ங்கிய காதலனால் கர்நாடகாவில் பெரும் ப.ரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மைசூர் மாவட்டத்தின் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் இருவருக்கும் இடையே அவ்வப்போது த.கராறுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுற்றூலா தளமான காவேரி நிசர்கதாமா பகுதியில் சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை 18ம் திகதி சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட த.கராறினால் சித்த ராஜூ தன் காதலி சுமித்ராவை கொ.லை செ.ய்து உ.டலை பு.தைத்துவிட்டு, அதன் அருகில் நின்ற மரத்தின் கிளையில் தானும் தூ.க்குப் போ.ட்டு த.ற்கொலை செ.ய்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு பிறகு அந்த பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் தூ.க்கில் தொ.ங்கி கொண்டு இருந்த சித்த ராஜூவின் ச.டலத்தை கண்டு, தலக்காடு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில்,காவல்துறை உ.டல்களை கைப்பற்றி தற்போது வி.சாரணையை தொடங்கியுள்ளனர்.

மணமகள் தேவை : வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய இளைஞர்!!

மணமகள் தேவை..

தமிழகத்தின் மதுரையில் இளைஞர் ஒருவர் மணமகள் தேவை என வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய நிகழ்வு நடந்துள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரை சேர்ந்த சுதர்சன்-சந்திரா தம்பதியின் மகன் ஜெகன்.

27 வயது பட்டதாரி இளைஞரான இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால், விரைவில் திருமணம் ஆக ஜெகன் நூதனமுறையை கையில் எடுத்துள்ளார்.

அதாவது மணமகள் தேவை என்று தனது புகைப்படத்துடன் விவரங்கள் அடங்கிய போஸ்டர்களை வீதி வீதியாக சுவர்களில் ஒட்டியுள்ளார். இவ்வாறாக அவர் மதுரை மாநகர், புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். பி.எஸ்.சி பட்டதாரியான தாம் மாதம் 40 ஆயிரம் சம்பாதிப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போன 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு : விசாரணையில் தெரிய வந்த உண்மை!!

மாதவன்..

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 17வது பள்ளி மாணவர் ஒருவரை, அவரது நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதும், அதன் காரணமாக பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதே போன்ற சம்பவம் ஒன்று தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் மாதவன்(16). கடந்த 18ஆம் திகதி நண்பர்களுடன் விளையாட சென்ற மாதவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதறிப்போன மாணவரின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பொலிசார் பல இடங்களில் மாணவரை தேடிய நிலையில், பாழடைந்த கிணற்றில் சடலமாக அவரை மீட்டனர்.

அதன் பின்னர் சந்தேகத்தின் பேரில் மாதவனின் நண்பர்களான 17 சிறுவர்கள் இருவரையும், அல்லா பிச்சை என்ற இளைஞர் ஒருவரை பொலிசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாதவனிடம் அவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி வர கூறியுள்ளனர். ஆனால் மாதவன் அவ்வாறு செய்யாததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து, பின்னர் கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் போதைப்பொருளுக்காக நண்பரையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து உயர்கிறது டொலரின் பெறுமதி!!

டொலரின் பெறுமதி..

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 367.39 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி, 356.67 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 389.89 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

உலக சாதனை படைத்த இரண்டரை வயது இலங்கைச் சிறுவன்!!

நுஹான் நுஸ்கி..

சர்வதேச சாதனை புத்தகத்தில் இரண்டரை வயது இலங்கைச் சிறுவன் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது சிறுவன் எனும் உலக அந்தஸ்தை தனதாக்கிகொண்டார்.

கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதான நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். நுஹான் நுஸ்கி 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனை புத்தகத்தில் (International Book of Records) தனது பெயரினை பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே இதையே சாதனையை நிகழ்த்தி ஆசிய சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதிவு செய்த இச் சிறுவன் அண்மையில் உலக சாதனைக்கு விண்ணப்பித்த நிலையில் இவரது திறமையை பரிசீலனை செய்து உலக சாதனை சிறுவனாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டது. அத்துடன் தற்போது நுஹான் நுஸ்கிக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பன வீடு வந்து சேர்ந்துள்ளன.

முஹம்மட் நுஸ்கி, பாத்திமா ரஸீனா ஆகிய தம்பதிகளின் செல்வப் புதல்வனான இச்சிறுவன் இரண்டு வயதில் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பதுடன் தனது ஊரில் இவ்வுலக சாதனை நிகழ்த்திய முதலாவது சிறுவனாகவும் உள்ளார்.

அதேவேளை சிறுவன் நுஹான் நுஸ்கி சென்ற வருடம் எ.எம்.ஆர் டோக் அமையத்தின் மூலம் சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.