நாட்டில் இன்று இரவு நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, இன்று இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு : நாட்டில் இன்றைய தினம் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை காலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இன்றைய தினம் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை காலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அண்மைய சில நாட்களாக இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காலையில் திருமணம் செய்து கொண்ட மாலையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகரை சேர்ந்த லட்சுமி மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக இரவு திருமண சடங்குகள் மற்றும் பாட்டுக் கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் ஆகியவை திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றன.
அப்போது நடன நிகழ்ச்சியில் மணமகன் மல்லிகார்ஜுனா உடன் இணைந்து மணப்பெண் லட்சுமி மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினார். இதைத் தொடர்ந்து நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மாலையில் கழிவறைக்கு சென்ற மணப்பெண் லட்சுமி நீண்டநேரமாக வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து திறந்தனர். அப்போது லட்சுமி சுயநினைவின்றி கீழே விழுந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் லட்சுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், லட்சுமி தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறிய நிலையில், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததும், அதனால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வெசாக் பண்டிகை வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
மே மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணம் என்பவற்றை நினைவுபடுத்தி வெசாக் தினம் பௌத்தர்களால் முக்கிய ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதற்கமைவாக வவுனியாவிலும் நகரப் பகுதியில் அமைந்துள்ள போதிதட்சனராமய விகாரையை மையமாக கொண்டு வெசாக் கொண்டாட்ட்ங்கள் இடம்பெற்று வருகின்றது.
மாவட்ட செயலகம், பொலிஸ் நிலையம், அரச அலுவலகங்கள், நீதிமன்றம், சிறைச்சாலை என்பவற்றுக்கு முன்னால் வெசாக் கூடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா நகரிலும் பெளத்த கொடிகள் பறக்க விடப்பட்டு வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்டி வீதியில் அமைந்துள்ள போதிதட்சனராமய விகாரை மற்றும் அதன் முன்பாக வொசக் கூடுகள், புத்தரின் பரிநிர்வாண நிலைய வெளிப்படுத்தும் காட்சிகள் என்பன வைக்கப்பட்டுள்ளதுடன், வெசாக் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் காரணமாக தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் அதிகளாவிலான மக்கள் சென்று வெசாக் கூடுகளையும், வெசாக் காட்சிகளையும் பார்வையிட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.
இதனால் வவுனியா நகரில் இருந்து போதிதட்சனராமய விகாரை வரையிலான ஏ9 வீதிப் பகுதி சன நெரிசல் மிக்கதாக காணப்படுவதுடன், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா இளம் நடிகை சஹானா உயிரிழந்த விவகாரத்தில், தன் மகன் கொலை செய்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சஜ்ஜத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி, கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இளம் நடிகை சஹானா தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சஹானா தனது 21வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில், மறுநாளே தூக்கிட்டு இறந்து கிடந்தது அவரது மரணத்தில் சந்தேகத்தை கிளப்பியது.
அத்துடன் சஹானாவின் கணவர் சஜ்ஜாத் பணம் மற்றும் பிற விடயங்களில் துன்புறுத்தி சித்திரவதை செய்திருக்கிறார் என்றும், சஹானாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். சஜ்ஜாத் கத்தாரில் பணிபுரியும் போது சஹானா பல நகை விளம்பரங்களில் மொடலாக நடித்துள்ளார்.
அதன் பின்னர் அந்த தம்பதி இந்திய திரும்பியதும் சஜ்ஜாத்தின் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஆனால் சஜ்ஜாத், அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் தன்னை சித்திரவதை செய்ததாக சஹானா தனது குடும்பத்தினரிடம் புகார் செய்யத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு தான் தனது தாயாரின் ஆலோசனையின் பேரில் சஹானா தன் கணவருடன் கோழிக்கோட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளார். சஹானாவின் சகோதரர் பிலால், சஜ்ஜாத்தின் தாயாரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
அவளுடைய உடலில் காயங்கள் மற்றும் தழும்புகள் உள்ளன. எனவே அவரது மரணம் குறித்து எங்களுக்கு சந்தேகம் உள்ளது, இதில் அவரது தாயாருக்கு பங்கு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் சஜ்ஜாத்தின் தாயார் கூறுகையில், ‘ஜனவரி 25ஆம் திகதியன்று அவர்கள் வெளியேறியதில் இருந்து சஹானாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திருமணமான ஒரு வாரத்தில் சஹானா-சஜ்ஜாத்தின் உறவில் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன.
என் மகனை வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஓரிரு முறைதான் பார்த்தேன். எனது தொலைபேசி எண் பிளாக் செய்யப்பட்டிருந்ததால், அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. இங்குள்ள வாழ்க்கை அவளுடன் ஒத்துப்போகவில்லை, அவளால் அதை சரிசெய்ய முடியவில்லை.
மேலும், அவர்களை வேறு ஒரு இடத்திற்கு குடிபோக சொன்னதே நான் தான். ஒருமுறை அவர்கள் சண்டையிட்ட பிறகு நான் சஹானாவை கத்தியுடன் கண்டேன். அதனால் அவர்கள் எங்கள் இடத்தில் தங்க முடியாது,
நான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை என்று என் மகனிடம் கூறினேன். அவர்களிடம் இருந்த வருமானத்தில் தனித்தனியாக வாழச் சொன்னேன்’ என தெரிவித்துள்ளார்.
சஜ்ஜாத் தான் தங்கள் மகளை கொலை செய்திருப்பார் என்ற சஹானா குடும்பத்தினரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ‘சஜ்ஜாத் குற்றம் செய்திருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் அதில் எனக்கு பங்கு இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால், அவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை’ என தெரிவித்துள்ளார். அத்துடன், சஹானாவின் தாயார் வரதட்சணையின் ஒரு பகுதியாக, சஜ்ஜாத்தின் குடும்பத்திற்கு 25 சவரன் தங்கம் வழங்கப்பட்டதாக கூறியதை அவர் மறுத்தார்.
இதற்கிடையில், பொலிஸார் சஜ்ஜாத்தை அழைத்து வந்து, சஹானா இறந்த இரவில் நடந்த சம்பவங்களின் வரிசையை விவரிக்கச் சொன்னார்கள். பிறந்தநாளில் தாமதமாக வந்ததால் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சஜ்ஜாத் தெரிவித்தார்.
உலகளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது. அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 அமெரிக்க டொலர்களாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதேசயம், இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 244 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது.
அந்த வகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 35,45,63 ஆகிய வயதுகளையுடைய 3 ஆண் கைதிகள் இன்று (15.05.2022) காலை விடுதலை செய்யப்பட்டனா்.
வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் தலைமையில் கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய புதுமணப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு நேற்றைய தினம் திருமணம் நடந்தது.
அவர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெற்றோர்களால் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் திருமணம் நடந்த நாள் அன்றே அவருக்கு செமெஸ்டர் தேர்வும் இருந்துள்ளது.
படிப்பை தொடர வேண்டும் ஆவலில், தனது கணவர் மற்றும் பெற்றோரிடம் செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும் என்று ஐஸ்வர்யா கேட்டிருக்கிறார். அவர்களும் திருமணம் படிப்புக்கு தடையாக இருக்க கூடாது என கருதி அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதுமணப்பெண் ஐஸ்வர்யா மணக்கோலத்திலேயே கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினார். அவரின் இந்த செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
கேரளாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மொடல் நடிகை சஹானா வீட்டில் இருந்து பொலிஸார் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளது அவரது சாவில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
காசர்கோட்டில் தனது கணவருடன் நடிகை சஹானா வசித்து வந்த நிலையில், நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தங்கள் வீட்டுக்கு அவர் வருவதாக சஹானா கூறியதாகவும்,
அவர் தற்கொலை செய்திருப்பார் என்று நினைக்கவில்லை என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு தங்கள் வீட்டிற்கு வரவும், போனில் பேசவும் சஹானாவின் கணவர் அனுமதிக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சஹானாவின் வீட்டில் பொலிஸார் சோதனையிட்டபோது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சஹானாவின் உடலில் ஏதேனும் போதைப்பொருள் கலந்திருக்கிறதா என சோதனை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (15.05) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் தங்குவதற்கு மற்றும் நடமாடுவதற்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் இரவு 7 மணி வரை தனியார் சிகிச்சை நிலையங்கள் மற்றும் ஒசுசல உள்ளிட்ட மருந்து விநியோக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் கடந்த 10ம் திகதி ஆண் ஒருவரை கொலை செய்து புதைக்கபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தானாக முன்வந்து சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது யாழ். வெற்றிலைக்கேணியில் நேற்று முன்தினம் (12.05) இடம்பெற்றுள்ளது. கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட பின் 14நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றது என கைதானவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கைதானவர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தம்பி எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நாளுக்கு நாள் பல குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றது. இதில் மக்களை மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடிப்பது, கொடூரமான முறையில் கொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் சார்ந்த குற்றச்செயல்கள் பல அதிகரிக்கின்றன.
யாழில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடுடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
மேலும், இங்கிரிய, உறுகல பிரதேசத்தில் தனது தந்தையை மோட்டார் சைக்கிளில் பொருத்தப்படிருந்த இரும்பு கம்பியைக்கொண்டு தாக்கி மகள் கொலை செய்துள்ளார்.
இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2000 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களினால் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
அதற்கமைய இதுவரையில் 2000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, காப்புறுதி செய்யப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு பெருமளவிலான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளதால், காப்புறுதி நிறுவனங்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த வன்முறையை தொடர்ந்து 55 அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை ஏற்றிச் சென்ற சுமார் 40 பேரூந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கூறப்படும் மல்வான பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றுக்கு தீ வைத்து எரித்ததில் ஏற்பட்ட நஷ்டம் 200 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெனியாயவில் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஹோட்டல் வளாகம் எரிக்கப்பட்டதனால் இதே அளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பல முன்னாள் அமைச்சர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று, ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வினை தீர்மானித்து வருகின்றது.
அதற்கயைம, தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், இதன்படி இலங்கையின் நேற்றைய (13-05-2022) தங்க நிலவரம் வருமாறு,
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும்.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,300
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,400
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,330
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,650
பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பீ.பீ.சி சிங்கள சேவைக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை என்றாலும் பணத்தை அச்சிட நேரிடும். பணத்தை அச்சிடவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாது.
மிக உக்கிரமான பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். ஆங்கிலேயர்கள் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் கூட இவ்வாறான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என நான் நினைக்கின்றேன்.
இந்த ஆண்டே எமக்கு மிகவும் கடினமான ஆண்டு. அந்நிய செலாவணி இல்லை. அரசாங்கத்திற்கு வருமானம் கிடையாது. அந்நிய செலாவணியுடன் வர்த்தகங்கள் நடக்கவில்லை என்றால், வருமானம் குறையும்.
ரூபாய் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணியுடன் வர்த்தகம் செய்யவில்லை என்றால், வரியை செலுத்த முடியாது. வரி குறைக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
அந்நிய செலாவணி நெருக்கடியால், ரூபாய் கிடைக்கும் வருமானமும் கிடைப்பதில்லை. தற்போதைய நிலைமையில் சுமார் மூன்று பில்லியன் டொலர்கள் வரை தேவைப்படுகிறது. இதனை பெற்றுக்கொள்வதே எமக்கு இருக்கும் முதலாவது சவால். அதனை பெற்றுக்கொள்ளவே நான் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
நாட்டில் வரிசைகளை இல்லாமல் செய்ய வேண்டும். சாதாரண இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மூன்று வேளையும் சாப்பிட வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
நடுத்தர வகுப்பு மக்களை முன்னேற்ற வேண்டும். உழைக்கும் மக்களின் வீடுகளுக்கு சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களை கொள்வனவு வரிசையில் நிற்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
1977 ஆம் ஆண்டு நாங்கள் இப்படியான வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தினோம். மின்சாரம் இன்றி 2001 ஆம் ஆண்டு எமக்கு இருண்ட யுகமாக இருந்தது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. அவற்றையும் நான் முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை முன்நோக்கி இட்டுச் சென்றேன். 2015 ஆம் ஆண்டும் நாம் பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டது. பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்தோம்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.
நான் பிரதமராக பதவியேற்ற காலங்களில் மூன்று வேளையும் மக்களுக்கு சாப்பிடும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தேன். சிறப்பாக வாழ வழியை உருவாக்கினேன்.
தொழில் வாய்ப்புகளை உருவாக்கினேன். தற்போது இந்த சவாலை ஏற்று மக்களுக்கு சிறந்த வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுக்க நான் எதிர்பார்த்துள்ளேன்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் இவற்றை செய்ய முடியும். இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலும் 1939 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான்கு உறுப்பினர்களே இருந்தனர். எனினும் பிரதமராக பதவியேற்று போரையும் வென்றார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.