மேல்,தென் மாகாண சபைகள் கலைப்பு!!

இலங்கையின் மேல் மற்றும் தென்மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளன. விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று...

15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச்சென்று பலாத்காரம் செய்த சகோதரர்கள்!!

உறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாபம் - அளுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று...

டுபாய் விமானத்தை சேதப்படுத்திய இரு மயில்கள்!!

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் “பிளைய்டுபாய்” என்ற டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்தியுள்ளன. இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கின்றது. பயணிகளுடன் புறப்பட்ட டுபாய் எயார்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தை ஆகக்குறைந்து இரண்டு மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம்...

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு நாளில் விடுதலை : ஜெயலலிதா!!

இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுவிக்கும். இவ்வாறு தமிழ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மீனவர்கள் பிரச்சினை...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர்கள் இருவர் காயம்!!

வவுனியாவில் மின்கம்பத்தில் பழுதுபார்த்துக்கொண்டிருந்த மின்சாரசபை ஊழியர்கள் இருவர் மின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இதன்போது காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய பிரதான மின்பொறியியலாளர் சி. பிரபாகரன் தெரிவித்தார். குறித்த ஊழியர்கள் இருவரும்...

லண்டனில் இலங்கை இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு!!(படங்கள்)

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும்...

விண்வெளி செல்லவுள்ள தமிழ் மாணவிக்கு வலி மேற்கு தவிசாளர் வாழ்த்து!!

விண்வெளிக்கு முதன்முறையாக செல்ல தமிழ் மாணவி ஒருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, தமிழ் இனத்திற்கு ஓர் தனித்துவமான கௌரவத்தை வழங்கியுள்ளது என வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி...

யாழ். புதிய இராணுவ கட்டளைத்தளபதி நேற்று பதவியேற்பு!!

யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். அத்துடன் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக்கொண்டார்....

மாணவனின் கண்ணை பதம்பார்த்த ஈட்டி : மனதை கலங்கவைக்கும் சம்பவம்!!(படங்கள்)

எம்பிலிப்பிட்டிய, பாணமுர மஹா வித்தியாலயத்தின் மாணவ தலைவனான கயான் மதுஷங்கவின் (17) கண்ணை ஈட்டி பதம் பார்த்துள்ளது. எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஈட்டி எறிதல்...

தேசத்துரோக செயலில் ஈடுபடும் யாழ். மன்னார் ஆயர்களை கைது செய்ய பொதுபலசேனா வலியுறுத்தல்!!

தேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார் மற்றும் யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என பொது­ப­ல­ சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்...

முதன் முறையாக விண்வெளி செல்லவுள்ள ஈழத்தமிழ் மாணவி!! (படங்கள்)

லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று...

புதியதோர் மனித இனம் உருவாகியுள்ளது : சி.வி. விக்கினேஸ்வரன்!!

இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, என்று தெரியாத நிலையில் காணாமல் போனோர் என்றதொரு புதிய மனித இனம் தோன்றியுள்ளது. இதற்கு இடம் கொடுக்காது இராணுவத்தால் கைது...

பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்கள் மாலைதீவு அனுப்படுகின்றனர் : பொலிஸார்!!

இலங்கையை சேர்ந்த யுவதிகளை பாலியல் தொழிலுக்காக மாலைதீவுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பன்னிப்பிட்டி ஆன்டி மற்றும் மடபாத்த சத்துராணி ஆகிய பெண்கள் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும்,...

கண்டியில் மாணவர்கள் பயன்படுத்தும் புதிய போதைப் பொருள் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் இதுவரை பாவனையில் இருந்து கண்டுபிடிக்கப்படாத புதிய வகை போதைப் பொருளை கண்டி பிராந்திய பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். கண்டியில் உள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பகுதி நேர...

அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் : காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது!!

தேசிய அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளுபிட்டி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பிரதான வீதியின் ஒருவழி மூடப்பட்டுள்ளதாக...

இலங்கையை நெருக்கடிக்குள் தள்ள ராதிகா சிற்சபேசன் முயற்சிக்கிறார்!!

சர்வதேசத்தில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்த ராதிகா...